January 30, 2009

இரு காதல் கவிதைகள்

1
போனேன் கண்டு கலங்கி
அழகான பெண் ஒன்றை ஒர் நள்ளிரவில்
இன்னமும் தீராது நடுநடுங்கி மனசு
மண் புயலில் சுற்றி சுழலும் காலம்
கண்களில் மண் அப்பி
இறைவன் கொண்டு செல்வான் என வியந்து
கை தூக்கி நிற்கிறேன்
அவ்ள் கடந்து சென்றபோது
அதிர்ந்த ஸ்லீப்பர் கட்டைகளின் இடி முழக்கத்தில்
நொறுங்கி தூளாகும் என் எலும்புகளின் ஓசையுடன்
அசையா புகைப்படமாய்
கம்ப்யூட்டரில் ஒட்டியிருக்கிறது
உன் திரு.மதி.முகம்.
2
நேற்று நான் பாத் ரூமில் கதவை
தட்டியபோது
ஒரு குளிர் காற்றாய் உன் வளைக்கரம்
கன்விலே முகிழும்போது மட்டும்
ஏன் கொண்டை போட்டு வரவேண்டும்
என் கண்மணி
நேற்று நீ குளித்த் ஆற்றில்
செத்து விழுந்தனவே என் மன
பார ம்தாங்கா தந்தகி ளைகள்.
இன்னமும் மனசை மயக்குக்கிறது
நீ விட்டுச்சென்ற கல்லின்ஈர மஞ்சள்.

2 comments:

இது என் சங்கப்பலகை said...

நாணல் தலை சாய்க்கும் அந்த நதிக்கரையோர சிறு கல்லில் ஈர மஞ்சள் துடைத்துக் கழுவப்பட்டிருந்தாலும் நாசியை துளைக்கிறது அதன் ஈர நெடி.

Unknown said...

nice poem

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...