March 25, 2009










விகடனில் வெளிவரவிருக்கும் நாயகன் வரிசை அடுத்த தொகுப்பான வான்கா வுக்கு எழுதிய முன்னுரை.





வாழ்வின் முக்கியமான தருணங்கள் எது என என்னிடம் யாரெனும் கேட்டால் அது சில புத்த்கங்களை நான் வாசித்த த்ருணங்கள்தான் என்பேன்.அந்த த்ருணங்களை மட்டும் நான் சந்தித்திருக்காவிட்டால் இன்று வரையிலான என் வாழ்க்கை அத்ன் அர்த்தத்தையும் சாரத்தையும் பெருமளவு இழந்திருக்கும் என்று நம்புகிறேன்.ஒரு நண்பனை போல என் தோள் மேல் கைபோட்டு மெல்ல ஆன்மாவின் ஆழத்துள் என்னை அழைத்து சென்று வார்த்தைகளின் துணையோடு என்னை மேலும் பண்படுத்தி மேலும் ஆழமிக்கவனாய் மாற்¢றிதந்திருக்கின்றன.அத்தகைய தருணங்களில் மனம் தன் அழுக்கைகளையெல்லாம் கண்ணீ¦ரின் வழியாக என்னுள்ளிருந்து வெளியேற்றும்.இப்படியாக என்னை இத்ர மனிதர்களிடமிருந்து வேறுபட்டவனாக மாற்றிய மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக நான் கருதும் புத்தகம், வான்காவின் வாழ்க்கைவரலாற்றை ஒட்டி இர்விங் ஸ்டோன் எழுதிய "லஸ்ட் பார் லைஃப"¢.
95ல் நான் திரைப்ப்ட உதவி இயக்குன்ராக முதல் படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் எனக்கு நண்பர் பாலகிருஷ்ணனின் அறிமுகம் நண்பர் செம்பூர் ஜெயராஜின் மூலமாக கிடைத்தது. பிற்பாடு கிங் மேக்கர் காமராஜ் எனும் படத்தை தானே ¢தயாரித்து இயக்கியவர் பாலகிருஷ்ணன். அச்சமயத்தில் அவரும் எங்களை போல திரைத்துறையில் பிடிமானம் அற்றவராக இருந்தார்.மாலை நேரங்களில் அவரது அலுவலகத்தில் செம்பூர் ஜெயராஜ் ,ஞான சம்பந்தன், மற்றும் ¢ இடையில் மரணம் அழைத்துக்கொண்ட நண்பர் ராஜன் அர்விந்தன ஆகியோருடன் அங்கே கூடி இலக்கியம் சினிமா குறித்து சண்டைகளுடன் கூடிய விவாதம் நடத்துவோம். ஒரு மாலையில் நான் அங்கு சென்றிருந்த வேளையில் நண்பர் பாலகிருஷ்ணனின் மேசை மேல் ஒரு புத்த்கம். Ôலஸ்ட் பார் லைஃப் . வான்காவை பற்றி இதற்குமுன்பே நான் கேள்விபட்டிருந்தால் அவர்மேல் இயல்பான ஒரு ஈர்ப்பு முன்பே என்னுள் உறங்கிக்கொண்டிருந்தது. நண்பர் பாலகிருஷ்ணன் அப் புத்தகத்தைபற்றியும் ,அதிலிருக்கும் மனிதனின் வாழ்வுபற்றியும் சொல்லி வியந்தவிதம் அன்று இரவே கையோடு அதனை கொண்டு செல்ல வைத்து விட்டது.மூன்று நாளில் இடைவிடாமல் அந்த் அறு நூறுபக்க புத்த்கத்தை நான் படித்து முடித்தபோது நான் சற்று மாறியிருந்ததை உணரமுடிந்தது.வாழ்க்கைக்கு உண்மையாக இப்படியும் ஒருவன் இருக்க முடியும் என எனக்கு முதல் நம்பிக்கை¢யை உருவாக்கி தந்த புத்தகம் அது .இதன் பிறகு தன் நான் தொடர்ந்து வாழ்க்கை வர்லாறுகளாக தேடிபிடித்து வாசிக்க துவங்கினேன் சென்னை தி.நகர் போக் ரோட்டில் ஏலூரு வாடகை புத்த்க கடையில் நான் எடுத்த புத்த்கங்களுக்கான வாட்கையை கட்டுவதற்காக பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன்.அப்போது நான் படித்த புத்தகங்கள்தான் இன்று ¢ விகடனில் வாழ்க்கை வரலாறுகளை எழுத வாய்ப்பு கிடைத்தபோது நான் அறியாமலே என் எழுத்தை வடிவமைத்து தருகின்றன. அக்கால்த்தில் இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கியின் சுய சரிதமான் ரோமன், மற்றும் சார்லிசாப்ளினின் சுயவரலாறு போன்றவை என்னை முழ்வதுமாக் புரட்டி எடுத்த புத்தகங்கள்.ஒரு உன்னதமான் நாவலைக்காட்டிலும் இந்த புத்தகங்கள் பன்மடங்கு என்னை புடம் போட்டு வளர்த்திருக்கின்றன. உணர்ச்சி ததும்பும் சில இடங்களில் அலையாக என்னை மீறி வெளிப்படும் கண்ணீரின் மூலமாக எவரும் அடைய முடியாத வாழ்க்கையின் நிரந்தரமான உண்மைகளை நான் கடந்துவந்திருப்பதை இப்போது உணர்கிறேன்...இப்படியாக வான்காவின் வாழ்க்கைவராலாறு நான் படித்த முதல் ஆங்கிலபுத்தகம் என்ற பெருமையை கடந்து என் வாழ்வையே தீர்மானித்த புத்தகமாகவும் இருந்திருக்கிறது. அத்ன் பிறகு பல முறை லஸ்ட் பார் லைப் எனும் அந்த அப்புத்த்கத்தை மொழிபெயர்க்க முயற்சிசெய்த போது என் வாழ்க்கை சூழல் அத்ற்கு ஒத்துழைப்பு தர்வில்லை. இறுதியாக நாயகன் தொடர் மூலமாக பலகோடிமக்களுக்கு அந்த மகொன்னத்மான் இத்யத்தின் வாழ்வை சொல்லும் வாய்ப்பு கிடைத்த்தை எண்ணி ம்கிழ்ச்சியுறுகிறேன்.நான் அந்தப் மூலபுத்த்கத்தின் உயரத்தை அடைய முடியாவிட்டாலும் அந்த மலையின் ஒரத்தில் சிறு செடி செய்யும் காரியத்துக்கு நிகராகவாவ்து இந்த சிறிய புத்த்கத்தில் செய்திருக்கிறேன் என உணர்கிறேன் இந்த இடத்தில் இப்புத்த்கத்தை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்திய பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்,என்னை மொழி பெயர்க்க சொல்லி ஏழு வருடங்களுக்கு முன் இப்புத்த்கத்தை வாங்கி பரிசளித்த நண்பன் ராஜகோபாலுக்கும் என் மன.மார்ந்த நன்றி. தொடர் வெளிவந்த போது என்னை பாராட்டி வாழ்த்து தெரிவித்த ஓவியர்¢ மணியன் செல்வன் ,அவர்களுக்கும் முன்னுரை எழுதிதரும் ஓவியர் மருதுவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

March 20, 2009

உலக சினிமா வரலாறு....மறுமலர்ச்சி யுகம்


ழான் ரெனுவாரும் ஐரோப்பிய கவித்துவ எதார்த்தமும்'
தேசங்களின் எல்லைகளை வேண்டுமானால் மனிதன் வகுத்திருக்கலாம்.ஆனால்¢ மொழியும்,கலாச்சாராமும் தன்னியல்பாக தோன்றுபவை. நிலத்தின் தன்மைகளுக்கேற்ப மாறும் அம்மண்ணின் இயல்புதான் அங்கு வாழும் மனிதர்களின் நடை உடை பாவனைகளை,மற்றும் அவர்களுக்கான கலை இலக்கியங்களை தீர்மானிக்கின்றன.உலக சினிமாவை உற்று கவனிக்கும் ஒருவரால,¢ ஒவ்வொரு நிலப்பரப்பும் தங்களது பிரத்யோக குணக்கூறுகளை அவற்றின் திரைப்ப்டங்களில் தன்னியல்பாக பொதித்து வைத்திருப்பதை கண்டறிய முடியும்.
இதனடிப்ப்டையில் ஐரோப்பிய நிலபப்ரப்புக்கென்றே உரித்தான அந்த பனி படர்ந்த நிலத்திற்கான மவுனமும் கூர்ந்த அவதானிப்பும் அவ்ர்களது திரைப்படங்களின் தனித்தன்மையை தீர்மானிப்பதாக இருக்கின்றன..இதிலும் கூட பல நுண்ணிய வேறுபாடுகளை அந்தந்த மொழி பேசும் மக்களின் குணங்களுக்கேற்ப பிரிக்க முடியும். என்றாலும் ஐரோப்பியர்களின் பொதுவான குணமான அக மனநிலை பயணத்தையே அவர்களது திரைப்பட மொழியும் நமக்கு பிரதிபலிக்கின்றன என்பதுதான் உண்மை.இப்படியான ஐரோப்பிய படங்களில் காணப்படும் அந்தவகையான பொதுவான திரைமொழியின் மவுனத்தையும்,உளவியல் எதார்த்தத்தையும் ,கவித்துவத்தையும் ஒரு முழுமையான படைப்பின் மூலம் சாத்தியப்படுத்தி,¢ பின்வரப்போகும ¢ஐரோப்பாவின பேரெழுச்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த பெருமை மிக்க இயக்குனர் ழான் ரெனுவார் (1894---=1979).
ரெனுவாருக்கு முன்பாகாவே ஐரோப்பிய திரைப்படங்களில் குறிப்பாக பிரெஞ்சு திரைப்படங்களில் சில முன்னோடிகள் இருந்தனர். இவர்களுள் மவுன திரைப்பட மேதைகளான ழான் விகோ மற்றும் ரெனே கிளார் ஆகிய இருவரும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.¢ 1934ல் கிளார் இங்¢கிலாந்துக்கு மூட்டையை கட்டிக்கொண்டு நிரந்தரமாக குடிபெயர்ந்து விட,தொடர்ந்தார ¢போல் விகோவும் தன் உயிர்பயணத்துககு ¢ முற்று புள்ளி வைத்துக்கொண்டதோடு பிரெஞ்சுசினிமா முற்றிலுமாக நிலை குலைந்து போனது. 1940 வரையிலான் பிரெஞ்சு சினிமாவின் நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில ஓரளவு ¢குறிபிடத்தகுந்த படங்களை தந்த ஒரே இயக்குனர்ஜேக்கஸ் பெய்டர். .அமெரிக்காவிலிருந்து தனிப்பட்ட பிரச்னை காரணமாக பிரான்சிற்கு வந்து குடியேறிய பெய்டரின் திரைப்படங்களில் காணப்பட்ட இலக்கியநயம்¢ ஐரோப்பிய சினிமாவின் தனித்தன்மையை ஓரளவுக்கு கோடிட்டு காண்பித்தது. அத்ற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவரகள் இருவர். அதில் ஒருவர் அவருடைய திரைக்கதையாசிரியாரான ஜேக்கஸ் ரிவட்.இன்னொருவர் கலை இயக்குனரான சார்லஸ் லெஸர். ¢.இதில் ஜேக்கஸ ரிவெட் பிரெஞ்சு மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான புகழ்பெற்ற சர்ரியலிஸ கவிஞ்ர்.அவரது இயல்பான கவித்துவ செழுமை திரைக்கதையில் உண்டாக்கிய சில மாய்மாலம் காரணாமாகத்தான் பிரெஞ்சு சினிமா மீண்டும் உயிர்பெற துவங்கியது.¢தொடர்ந்து பெய்டரின் உதவி இயக்குனரான மார்சல் கார்னே இயக்குனரான போது,¢ ரிவெட் அவருக்கும் ஆஸ்தான திரைக்கதை யாசிரியராக இருந்து பணியாற்றி பிரான்சில் கவித்துவம் மிளிரும் படைப்புகளுக்கான சூழலையும் முன்னூட்டத்தையும் ஏற்படுத்தி தந்தார். 1942ல் இருவரது கைவண்ணத்தாலும் உருவான "'தி டெவில்ஸ் என்வாய்"' அவர்களது பயணத்தின் குறிபிடத்தகுந்த படைப்பாகும். இதில் ஹிட்லரை தீமையின் குறியீடாக பயன்படுத்தியிருந்த்விதம் அவர்களது மேதமைக்கு சான்றாக விளங்கியது.இவர்களதுபடைப்பில் வெளியான் இன்னொரு படமான ''சில்ரன்ஸ் ஆப் பேரடைஸ்'' இருவரது வாழ்நாளின் மிகச்சிறந்த படைப்பாக உருவாக்கம் பெற்¢றது.
இப்படியாக ஐரோப்பிய சினிமாவில் அங்¢கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது வீசிவந்த கவித்துவ காற்று ரெனுவாரின் வரவுக்கு பிறகு ஒரு மகத்தான அலையின் துவக்கமாகவே வீசத்துவங்கியது.அய்ரோப்பிய மறுமலர்ச்சி கால ஓவியர்களில் காகின்,செஸான்,வான்கா போன்றவர்களோடு பட்டியிடதகுந்த மிகச்சிறந்த ஓவியரான அக்ஸ்டெ ரெனுவாரின்மகனாக பிறந்தவர் ழான்ரெனுவார்(1894=1970). காலத்தின் மிகச்சிறந்த ஓவியருடைய மகனாக பிறந்த காரணத்த்னாலோ என்னவோ ழான் ரெனுவாரின் உள்ளத்தில் இயல்பாகவே உடைப்பு கொண்ட கலையின் ஊற்று அதுவரையில் திரையில் காணாத ¢ கவித்துவமான எதார்த்தமான உலகை திரையில் சிருஷ்டிக்க விழைந்தது.மவுனப்படகாலங்களில் தன் இயக்குனர் பயணத்தை துவக்கிய ரெனுவார் 1931ல் தன் முதல் சப்த சினிமாவான பர்ஜிங் தி பேபி படத்தைவெளியிட்ட போது அத்ன் பெருவெற்றி காரணாமாக தனது இருப்பை பதிய வைத்துக்கொண்டார்.தொடர்ந்து அவர் இயக்கிய போடோ சேவ்டு ப்ரம் டிரவுணிங்(1932) , மாடம் பவாரி (1934) டோனி (1935) போன்ற படங்கள் படுதோல்வியை தழுவ அடுத்து என்ன மாதிரியாக படம் பண்ணுவது என தெரியாமல் குழம்பிப்போய் நின்றார்.இச்சமயத்தில்தான் காலத்தின் கவிஞனும் பிரெஞ்சு சினிமாவின் ¢ அடையாளம் உயிர்தெழ காரணமானவனுமான கவி ஜேக்கஸ் ரிவெட்டுடன் ரெனுவார் முதன் முதலாக கைகோர்க்க துவங்க புதிய அலையின் துவக்க புள்ளி ஆரம்பமானது. 'தி க்ரைம் மொனேசர்' ஏஞ்சல் 1935ல் வெளியான இப்படம் முதாலாளி பாதியில் விட்டு ஓடிப்போன ஓரு தொழிற்சாலையை தொழிலாளர்களே கூட்டு முயற்சியில் காப்பாற்றி அத்னை வெற்றிபெறசெய்யும் கம்யூனிச சித்தாந்த அடிப்படையிலான கதையை கொண்டிருந்தது.இதிரைப்ப்டத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரது கூட்டணியிலும் உருவாக்கம் பெற்ற அடுத்த படைப்பான லைப் இஸ் அவர்ஸ் 1936 படமும் பெருத்த வரவேற்பையும் மிகுந்த கவனத்தையும் ஈர்த்தது.ஆனால் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே இப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டு திரையரங்க்களி¢லிருந்து படச்சுருள்கள் பறி முதல் செய்யப்பட்டன.காரணம் இப்படத்திலும் காத்திரமாக ஒலித்த கம்யூனிச ஆத்ரவு குரல்.இக்காலகட்டத்தில் ஐரோப்பா முழுக்க எதிரொலித்த பாசிச அலை கம்யூனிசத்தை அதன் அனைத்துவழிகளில்லும் தீவிரமாக அடக்கி ஒடுக்க முயற்சித்தது.அதிலும் ரெனுவாரின் படங்களில் இக்குரல் உரத்து காண்ப்பட்டதால் அவரது திரைப்படத்தை முழுமையாக ஒடுக்குவதில் தீவிரமுனைப்புடன் செயல்பட்டது.இத்னால் தன் கவனத்தை சிலகாலம் நாவல்களை படமாக்குவதில் திருப்பிக்கொண்ட ரெனுவார் 1937ல் தன் வாழ்வின் முதல் உலகதிரைப்படத்தை வெளியிட்டு திரைப்படவிழாக்களில் புதிய ஈர்ப்பையும் கவனத்தையும் கண்டடைந்தார்.லா கிராண்டே இல்லூஸன் எனும் போரை பின்புலனாக கொண்ட இப்படம் ஜெர்மனியில் முழுமையாக தடைசெய்யப்பட்டாலும் வெனிஸ் திரைப்ப்ட விழாவில் சிறந்த கலை ஆளுமைக்கான பரிசை வென்றதோடு நியுயார்க் கிரிடிக்ஸ் அவார்டையும் அந்த வருடத்தில் தட்டிச்சென்றது.இது மட்டுமல்லாமல் பிற்பாடு ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தில் உலக சினிமா வரலாற்றில் அதுவரை வெளியான படங்களில் விறந்த பத்து படங்களில் ஒன்றாகவும் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. லாகிராண்டே வில் ராணுவதிகாரியாக நடித்த ''எரிக் வான் ஸ்ட் ரோ கிம்''¢ சிறந்த நடிப்பிற்கான ¢ இலக்கணங்களை இப்படத்தில் உருவாக்கியிருப்பதாக பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதின.படத்தின் ஒளிப்பதிவில் முதன் முதலாக டீப் போகஸ் லென்ஸ்களை பயன் படுத்தி காட்சிகளில்பாட்வையாலனிடமிருந்து இன்னும் ஆழாமான கவனக்கூர்மையை பெற்று அவனது கனவு நிலையை விஸ்தீரணப்படுத்தினார்.ஒரு அண்மைகாட்சி எனப்படும் க்ளோசப்,இடைநிலை எனப்படும் மிட்,சேய்மை எனப்படும் லாங் ஆகிய மூன்று ஷாட்களின் மூலமாக பார்வையாளனின் மனநிலைக்குள் உருவாக்க்கூடிய அனுபவங்களைவைந்த டீப் போகஸ் லென்ஸ்கள் ஒரேஷாட்டில் ஏற்படுத்ட்ய்க்கூடிய தனமை நிரம்பியது என்பதுதான் இதன் சிறப்பு.ஒரு ஷாட்டில் அல்லது காட்சியில் போர் கிரவுண்ட் எனப்படும், முன் தளம், மற்றும் பே கிரவுண்ட் எனப்படும் பின் தளம் ஆகியவற்றின் விவரணங்கள் மிக துல்லியமாக இந்த லென்சில் பதிவாக்ககிடைப்பதன் மூலம் பார்வையாளனை கதையின் களனுக்கே முழுமையாக கொண்டு போகக்கூடிய தருணத்தை இந்த லென்ஸுகள் உருவாக்கிதருகின்றன.
தொடர்ந்து 1939ல் வெளியான் ரூல்ஸ் ஆப்தி கேம்ஸ் அக்காலத்தைய பிரெஞ்சு சமூகத்தின் அவலங்களையும்,வாழ்வையும் தோலுரித்து காட்டுவதாக இருந்தது.ஒளிப்பதிவு படத்தொகுப்பு ஆகிய தொழில்நுடபங்களில் இப்ப்டம் ரெனுவாரின் மொழி குறித்த ஆழ்ந்த புலமையையும் மேதமையையும் வெளிப்படுத்தியது, படத்திலிடம்பெறும் முயல் வேட்டை காட்சியில் மேற்சொன்ன தொழில் நுட்பங்கள் இரண்டின் மூலம் ரெனுவார் உருக்கிகாண்பிக்கும் மேதமை அனுபத்தால் மட்டுமே பகிர்ந்துக்கொள்ளக்கூடிய உயர்ந்த கலாரசனையை உள்ளடக்கியது.மேலும் காட்சி எந்த திட்டமிடலும் இல்லாமல் இயற்கயாக நிகழும் ஒரு சம்பவத்தை அப்படியே தன்னியல்பாக படம்பிடிக்கிறார்போல் நமக்குள் ஒரு மாயகட்டு மானத்தை உருவாக்கும் பொருட்டு ஷாட்டுகளை அவர் கட்டமைத்திருந்த விதம் இன்றும் இப்படத்தை பார்ப்பவர்களை பிரமிக்கசெய்யும்.ரூல்ஸ் ஆப் தி கேம் வெளியான போது படு தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களிலேயே வெடித்த இரண்டாம் உலக்போர் காரணமாக இத்திரைப்படம் ஐரோப்பா முழுக்க தடை செய்யப்பட்டிருந்தது.மட்டுமல்லாமல் இப்படத்தின் பிரதிகள் தேடிகண்டுபிடிக்கப்பட்டு முழுமையாக் அழித்தொழிக்கப்பட்டன. பிற்பாடு 1950ல் இப்படத்தின் மீதிருந்த ஆர்வம் காரண்மாக கடும்பிராயசையுடன் இரண்டு பிரெஞ்சு இளைஞர்கள் மீண்டும் இப்படபிரதியை தேடிகண்டடைந்து உலகிர்கு மீண்டும் திரையிடப்பட்டபோது விமர்சகர்கள் ஒருசேர எழுந்து நீண்ட கரவொலி எழுப்பி அது வரைலிலான அனைத்து படங்களில்லும் சிறந்த படமாக தேர்வு செய்தனர்.இடைக்காலத்தில் அமெரிக்காவுக்கு சென்று அங்கு சில படங்களை இயக்கிய ரெனுவார் 1949ல் இந்தியாவிற்கு வந்து கல்கத்தாவில் தங்கி ரிவர் அனும் படத்தை இயக்கினார்.அவரது படப்பிடிப்பின் போது கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு வங்காளி இளைஞ்னுக்கு மனதில் பலபாதிப்புகள்.ஒரு நாள் நாமும் இது போல ஸ்டார்ட் கட் என சொல்லும் பணியை செய்ய வேண்டும் என கனவு கண்டான் அடுத்த ஐந்தாவது வருடத்திலேயே பதேர் பாஞ்சாலி எனும் படத்தின் மூலம் அவனது கனவு பலித்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு உலக அரங்கில் முதல் கவுரவமும் கிடைத்தது
ரிவர் வெளியான பிறகு 1970ல் இறப்பு வரை ரெனுவார் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கியவண்ணம் இருந்தார்.அவர் இறந்த அமெரிக்காவின் உயர்ந்த இயக்குனர்களுள் ஒருவராக கருதப்பட்ட ஆர்சன் வெல்ஸ் உலகின் த்லைசிறந்த இயக்குனர் நம்மை விட்டு பிரிந்தார் என அறிவித்தார். ஆனால் ரெனுவார் ஒருபோதும் தன்னை இயக்குனராக கருதிகொண்டததில்லை நான் ஒரு கதை சொல்லி அவ்வளவே என்பதுதான் அவர் தன்னை பற்றியும் தனது படைப்புகளைபற்றியும் தன்க்கு தானே எழுதிக்கொண்ட தீர்ப்பு.


March 3, 2009

'மயில்வாகனன் மற்றும் கதைகள்' அஜயன் பாலா

ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை.நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன் பாலாவின் 'மயில்வாகனன் மற்றும் கதைகள்' .இத்தொகுதியின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதையின் தலைப்பும் வித்யாசமாசமானவை. பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதியில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே முக்கியமானவை, வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமாகிவிட்டவை.'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்', விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு', டினோசர்-94 ஒரு வரலாற்றுக்கதை, 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்', 'கடவுளர் சபை - இது ஒரு இரவைப் பற்றிய கதை', 'முருகேசன்', 'ஜீன்ஸ் அணிந்த பறவைகள்', 'மயில்வாகனன் மற்றும் கதைகள்', 'கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி',ஆகிய கதைகளை நான் வெகுவாக ரசித்தேன். மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும், எனக்குத் தெரிந்தவரையில் இரா.முருகன் கதையின் பாதையில் நம்மை கட்டிப்போட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுவிடுவார். மிலன் குந்தேரா எது புனைவு எது நிஜம் என்றே பகுக்க முடியாத அளவிற்கு வித்தை காட்டி நம்மை மாயாலோகத்திற்கே அழைத்துச் சென்றுவிடுவார். பா.வெங்கடேசன் நாம் கனவில் கூட எதிர்ப்பார்த்திராத உலகினுள் நம்மை அதி சுதந்திரத்துடன் நடமாட வைத்து ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்வார். கோணங்கி நாம் மதிப்பீடாக கொண்ட எல்லாவற்றையும் போட்டுத்தள்ளிவிட்டு கனவுக்குள் வந்து கொண்டிருக்கும் கனவுக்குள் தோன்றி மறையும் காட்சிகளை அந்தகாரத்தை விலக்கி வார்த்தைகளினூடே மின்னல் தெறிக்க வைத்துவிடுவார்.அஜயன் பாலா சிருஷ்டி செய்திருக்கும் இவ்வுலகின் கதைபாத்திரங்கள் கண்ணாடியில் பார்த்தால் தெள்ளந்தெளிவாய் தெரிவார்கள். நம்மிடம் உள்ள குணங்கள், குறைகள், சுய எள்ளல், பச்சாதாபம், ஆற்றாமை, உணர்ச்சிகளின் அதீதங்கள் எல்லாம் பாலாவின் பேனாவினூடே கதைகளாக வழிந்தோடுகிறது. எல்லாக் கதைகளிலும் எல்லாரும் இருக்கிறோம், அவர் நம் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் உலகினுள் விசித்திரமான சம்பவங்கள், கற்பனைக்கெட்டாத சம்பாஷனைகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது. நிறைந்த வாசிப்பானுபாவத்தை அள்ளக் குறையாமல் கொடுத்தன இக்கதைகள்.'மருதம்' வெளியீடான இத்தொகுப்பில் குறை என்று சொல்ல ஒரு விதயம் மட்டுமே உள்ளது. அது அச்சுப்பிழை. ஆங்காங்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு வாசிப்பை எரிச்சலாகும் விதத்தில் 'ர' வை 'ற'வாகவும் இன்னும் சில மன்னிக்க முடியாத வார்த்தை பிழைகளும் தொகுப்பினுள் இருக்கிறது. மறுபதிப்பு செய்யும்போதாவது பிழை நீக்கம் செய்யப்படவேண்டும். கதாசரியர் சில விதயங்களை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் புகுத்தியுள்ளார், அவை மஞ்சள் நிறத்தின் மீது அவருக்கு அதீத ப்ரேமை போலும், மஞ்சள் வானம், மஞ்சள் கைக்குட்டை, மஞ்சள் வெயில் என்று மங்கலகரமாக மஞ்சளைத் தெளித்துள்ளார். அதோடு கதை நாயகர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனே காணப்படுகிறார்கள். சிலருக்கு மனப் பிறழ்வோ என்று ஐயப்படும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. ஆனாலும் இவை பெரிய குறைகளன்று, கதையின் வரிகள் மிகுந்த கவித்துவத்துடனும், மொழி நம்மை மகிழ்ச்சியிலும் கதாசிரியரின் அகவுணர்வும் துல்லியமான உணர்வெழுச்சிகளும் வாசிப்பவனை முடிவில்லா அகதரிசனத்திற்குள் ஆட்படுத்துக்கின்றன. இக்கதைகள் இங்குதான் வெற்றி பெறுகின்றன.'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்'' என்னும் கதையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் " 'என் உள்ளொளிக்கும் கயமைக்கும் இடையேயான தொலைவை அளவீடு செய்யும் பார்வை. அதுநாள் வரை விழுமியங்களின் மேல் நின்று கொண்டிருந்த என் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது." 'முருகேசன்' எனும் தலைப்பிட்ட கதையின் எல்லா வரிகளும் அற்புதமானவை, 'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' உண்மைதான் இவ்வரிகளை என்னால் மறக்க இயலாது

February 17, 2009

தன்னை மறுக்கும் கோடுகளுடன் மருது, அஜயன்பாலா

சென்னை எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் பார்வதி ஆர்ட் காலரியில் மருதுவின் ஓவியக்கண்காட்சியின் இரண்டாம் நாள் பகல்பொழுதில் அவரோடு நான் கைகுலுக்கிய நேரம் அறையினுள் சூரியன் பளிச்சென பிராகாசித்துக் கொண்டிருந்தான்.ஜனவரியின் முதல் வார ஞாயிறு துவங்கி தொடர்ந்து பத்து நாட்களாக நடக்கவிருப்பதாக அழைப்பிதழ் சொல்லியிருந்தது.தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அவர் அழைத்திருந்தும் துவக்க நாள் விழாவுக்கு செல்ல முடியாத நெருக்கடியும்,அதன் காரணமாக எழுந்த குற்றவுணர்ச்சியும் அந்த இரண்டாவது நாள் பகல் பொழுதில் என்னை அவசரமாக அங்கு விரட்டியிருந்தது. முதல் நாள் மாலை நடந்திருந்த எளிய துவக்க விழாவிற்கு ஓவியர்கள் சந்தானராஜ்,அல்போன்ஸராய் ஆகியோருடன் மருதுவின் நெருங்கிய நண்பரான இயக்குனர் மிஷ்கினும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் நாங்கள் நின்று கொண்டிருந்த அறையின் சுவர் முழுக்க .ப்யூட்டி அண்ட் பீஸ்ட். என்ற தலைப்பில் அவரது சமீபத்திய ஓவியங்கள் வரிசையாக சட்டமடப்பிட்டு மாட்டப்பட்டிருந்தன. வெவ்வேறுவிதமான உருவச்சித்திரிப்பில் பெண்களின் பலவித பாவங்களை உணர்த்தும் தோற்றங்கள் வரிசையாக தொங்கிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு தோற்றத்துக்கும் பின்னால் நிழலாக அல்லது பெண் சித்திரங்களை காட்டிலும் உருவத்தில் சற்று கூடுதலாக மனித மன இருண்மைகளை அடையாளப்படுத்தும் விதத்தில் பல வகைப்பட்ட பிராணிகளின் தோற்றத்தை சித்திரமாக தீட்டியிருந்தார்.எருது,பசு,மான்,நரி,சிங்கம்,புலி, குதிரை, ஒட்டகம்,யாளி,என வெவ்வேறான அந்த நிழலுருவங்கள் பெண்களின் ஆழ்மனங்களை உணர்த்துவதாக இருந்தன.அவை அனைத்துமே முதல் பார்வைக்கு ஒன்றே போலிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மனவெளிக்கு நம்மை அழைத்து செல்வதாக இருந்தன.பிமபங்களை ஊடறுத்து செல்லும் காலம் மற்றும் வெளியின் தொடர்நிகழ்வின் பதிவாக அவரது எல்லா ஓவியங்களையும் ஒரு சேர மதிப்பிடமுடியும்.இந்த காட்சியில் வைக்கப்படிருந்த ஓவியங்களிலும் ஏறக்குறைய அதே போன்றதொரு தன்மையை என்னால் உணர முடிந்தது கோடுகளால் ஆன உலகம் மருதுவினுடையது.மிதமான வெளிச்சம் நிறைந்திருந்த அந்த பகல் பொழுதில் அவரோடு ஓவியங்களை குறித்து பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தின் போது அவரது உடல் பாவத்திற்கும் அவரது கோட்டொவியங்களுக்கும் இடையிலான ஒரு சமன்பாட்டை கண்டுபிடித்தேன்.இந்த வசதி கோடுகளுக்கு மட்டுமே இருப்பது போல தோன்றியது.பொதுவாக தூரிகைகளும் வண்ணங்களும் பெரும்பாலும் வெளித்தெரியாத குறிப்பிட்ட ஓவியனது ஆழ்ந்த மன உலகை பிரதிபலிப்பது போல் கோடுகள் குறிப்பிட்ட ஓவியனது உடல் மொழியை வெளிப்படுத்துவதாகவே எனது அனுமானம்.மருதுவின் உடல்பாவங்கள் நொடிக்கொரு சித்திரத்தை தனது உடலிலிருந்து வெளியேற்றிக்கொண்டிருப்பவை. தன் உடல் நிற்கும் வெளியில் தன் உருவத்துக்கு நிலையான ஒருகோட்டை எவரும் உருவாக்கிவிட முடியதபடி கணம்தோறும் அசைந்து கொண்டேயிருக்கும் அவரது உடல் எனக்குள் பல ஆச்சர்யங்களை உண்டாக்கின.பிம்பங்களின் இந்த நிலையற்ற தன்மையை பதியவைப்பதுதான் அவரது ஓவியங்களின் சாரம்சமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.மருதுவோடு நேரில் பழகியவர்களுக்கு இங்கு நான் சொல்ல வரும் தகவல் சுலபமாக புரிந்திருக்கும். பெருக்கல் குறி போட்டார்போல் குறுக்காக போடப்பட்ட கால்களுடன் நின்றவாக்கில் அசைந்து கொண்டே இருக்கும் அவரது இரு கைகள் அடுத்த நொடி ஒருக்களித்த இடுப்பிற்கும் இன்னொரு சமயம் மேலுயர்ந்து கோர்த்த நிலையிலும் இன்னும் சிலசமயங்களில் முதுகுக்கு பின்னால் நெட்டி முறித்த நிலையிலுமாக தொடர்ந்து வெவ்வேறாக, ஒரு தொடர் வரைகலைசித்திரத்தின்பிம்பங்களை போல அவை உருமாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த அவரது இயல்பான சுபாவமே அவரது ஓவியங்களை குறித்து மிகப்பெரிய விளக்கவுரையை எனக்குள் உருவக்குவது போலிருக்கவே தொடர்ந்து நான் ஓவியங்களை குறித்து அவருடன் பேசியபடியே கூடுதலான கவனத்துடன் அவரிடமிருந்து உதிரும் சித்திரங்களையும் கண்டு ரசித்தபடி இருந்தேன்.அப்போது அவர் ஐரோப்பிய மறுமலர்ச்சி கால ஓவியர்களான செஸான்,காகின், துளுஸ் லோத்ரெக்,வான்கா ஆகியோரை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.எனது புற கவனம் அதில் குவிந்திருந்தாலும்,அவ்வப்போது இடை வெட்டாக எனது அககவனம் முதல் முறையாக அவரை சந்தித்த நிகழ்வு குறித்து காலங்களின் பின்னால் என்னை துரத்தி ஓடச்செய்து கொண்டிருந்தது. சென்னைக்கு வந்து இலக்கியச்சூழலில் கொஞ்சம்கொஞ்சமாக என்னை மூழ்கடித்துக்கொண்ட ஆரம்பகலங்களில் மருது எனும் ஒலிச்சொல் மிகவும் வசீகரமானதொன்றாகவே இருந்தது.இப்போதும் நகருக்குள் புத்தகங்களை பிராதான உடமையாக கருதியபடி புதிதாக இந்நகருக்குள் நுழையும் ஒரு இளைஞனுக்கு அச்சொல் அவனது மனப்பரப்பில் உண்டாக்கும் பிரதிமைகள் அவ்ன் நம்பும் ஒரு உலகத்திற்கு வலு சேர்க்ககூடிய¨வ்யாக இருந்துவருவதுதான் அவரது சிறப்பு.அதே சமயம் சூழலுக்கு புதியதாக வரும் ஒருவனால் சுலபமாக நெருங்கக்கூடியவரகவே அவர் இப்போதும் இருந்துவருகிறார்..மருதுவுடன் ஒரு டீ சாப்பிடுவது என்பது தமிழ் சமூகத்தின் ஆதாரமான ஒரு கோட்ட்டுடன் அமர்ந்து நாம் பேசுவது போல.இந்த பெருமை ஆதிமூலத்துக்குதான் முழுமுதல் சொத்து என்றாலும் மருதுவுடன் சில கணங்களை செலவழிக்கும் ஒரு இளைஞன் வெறுமனே ஓவியத்தை பற்றி மட்டுமல்லாது இலக்கியம் ,சினிமா,வரைகலை ஊடகம் என பல்வேறு துறைகளை குறித்த பல தகவல்களை சேகரித்துக்கொள்ள முடியும். வினோதம் வெளிக்காட்டாத இந்த சென்னை நகருக்குள் முதன் முதலாக நான் அடியெடுத்து வைத்த ஆரம்ப சில,பல நாட்களின்போது வீதிகளில் நான் நடந்து சென்றதாகவே உணரவில்லை.கிட்டதட்ட பறந்துகொண்டிருந்தேன்.எழுத்தாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களோடு பேசக்கிடைத்த வாய்ப்புகள் எனது மாலை நேரங்களை மேலும்வசீகரமாக்கிக்கொண்டிருந்தன.தி.நகர் ரங்கநாதன் தெருவிலிருந்த ஒரு வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் அப்போது முன்றில் சிற்றிதழின் அலுவலகம் இயங்கிவந்ததும் ஒரு முக்கிய காரணம்.பிரமிள்,நகுலன்,கோணங்கி,எஸ்.ராமகிருஷ்ணன்,கோபிகிருஷ்ணன்,சாரு நிவேதிதா,லதாராமகிருஷ்ணன்,யூமா வாசுகி,ஆகியோரை போல மருதுவையும் முதன்முதலாக அங்குதான் சந்தித்தேன்.அதன் பிறகு நான் பணிசெய்து கொண்டிருந்த அரசியல் புலனாய்வு பத்திரிக்கையின் தொடர் நிமித்தமாக ஓவியங்களை வாங்கசென்ற போது ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டது.அதுவரை நேரடிதன்மை கொண்ட பெண்களை மட்டுமே பிரதானமாக கொண்ட சித்திரங்களாக பார்த்து பழகிய தமிழ் வெகுஜன வாசக பரப்பிற்கு தனது சிதிலமான சித்திரங்களின் மூலம் புதியதொரு திசையை மருது உருவாக்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது.ஆதி மூலத்தை முன்னோடியாக கொண்டு பல ஓவியர்கள் அன்று தீவிர பத்திரிக்கைகளில் இத்தகைய பாணியை முன்பே உருவாக்கிக்கொண்டிருந்தாலும் புத்தகங்களின் மேலட்டைகளிலும்,வணிக இதழ்களிலுமாக மருது வேகுஜன தளத்தில் நன்கு ஊடுருவிக்கொண்டிருந்தார்.அதன் பிறகு கூட்டங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவரை அடிக்கடி சந்தித்தபோது சுயப்ரக்ஞை இல்லாமல் பழகும் அவரது சுபாவம் என்னை ஈர்தது. சில வருடங்களுக்கு பிறகு ஒரு முழு நகர மனிதனாக காலம் என்னை மாற்றியிருந்த ஒருநாளில் அவரது குடியிருப்பு வளாகத்துக்கு ஒரு நாள் செல்ல நேரிட்டது.அப்போது தினமணியில் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை உலகசினிமாவின் வரலாற்றை எழுதுவதற்கான தயாரிப்பு வேலைகளில் துரிதமாக ஈடுபட்டிருந்தேன்.98ன் இறுதிக்காலம் அது.இப்பொதிருப்பது போன்ற வலை வசதிகள் எதுவும் அப்போது முழுவதுமாக முகிழ்ந்திராத காலம் அது. அந்த தொடரில் அறிமுகப்படுத்தவிருந்த ஜாம்பவான்களின் புகைப்படங்கள் எதுவும் பிரசுரிக்க தகுதியான நிலையில் இல்லை. வெறுமனே புகைப்படமாக வெளிவிடுவதைக்காட்டிலும் அவர்களை மருதுவின் கோடுகளில் ஓவியமாக வரைந்து பிரசுரித்தால் தொடருக்கு கூடுதல் கவனத்தை தரும்.இதனை அப்போது அங்கு உதவி ஆசிரியராக இருந்த தமிழ்மகனிடம் கூற அவரும் ஒத்துக்கொண்டார்.ஆனால் அத்ற்காக நிர்வாகம் ஒத்துக்கொண்ட தொகை மிக மிக சொற்பமானது.மருது இதற்கு சம்மதிப்பாரா என்ற ஐயத்துடன் அவரது வீட்டிற்கு சென்றபோது உண்மையில் எனக்கு ஆச்சர்யத்தை அவர் தரப்போகிறர் என நான் எதிர் பார்க்கவில்லை.எப்போதும் தளராத அதே உற்சாகத்துடன் கதவை திறந்து எதிர்கொண்ட மருதுவிடம் வந்திருக்கும் தகவலை சொன்னதும் உள்ளே சென்று தடி தடி யான புத்த்கங்களை என் முன் எடுத்து வந்த மருது நன் வெகு நாட்களாக பல நுலகங்களில் தேடி கிடைக்காத இயக்குனர்களின் புகைப்படங்களை கொண்டுவந்து காண்பித்ததோடு அல்லாமல் என் தொடருக்கு தேவையான பல தகவல்களை சட சட வென சொல்லியவண்ணமிருந்தார்.உண்மையில் இன்று தமிழின் திரை துறை சார்ந்த எவரையும்விட உலக சினிமா குறித்த அவரது தேடலும்,அறிவும் அன்று என்னை பிரமிக்க வைத்தது.இதை நன் குறிப்பிடுவதன் காரணம்சமூகத்தின் மேல் தளத்தில் இத்தகைய கோடுகள் உயிர்ப்புடன் உலா வர வெறுமனே அவரது திறமை மட்டுமே காரணமல்ல அதனையும் கடந்த அவரது ஈடுபாடும் ,எழுத்து பிரதியின் மீதான ஆர்வமும்தான். பிறகு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிக்கான இடத்தேர்வு நிமித்தம் இரண்டொரு நாட்கள் அவரோடு ராமேஸ்வரத்தில் கடற்கரை ஒட்டிய விடுதி ஒன்றில் தங்க நேரிட்டது.அவர் கலை இயக்குனராகவும்,நான் இணை இயக்குனரகவும் அந்த படத்தில் இணைந்திருந்தோம்.அங்கு பணிகளேதுமற்ற ஒரு பகல் பொழுதில் அவரது அறையில் அமர்ந்தபடி இருவரும் எதிர்கால திரைப்படதுறை குறித்த விவாதத்தில் களம் புகுந்தோம். கணிணி வரை கலை தான் இனி எதிர்கால திரைப்படமாக முழு மாற்றமடையும் என அவர் கூற நான் அவரோடு கடுமையாக முரண்பட்டு எதிர் நின்றேன்.சினிமா எனும் கலை செயல்பாட்டு தளத்தில் முற்று முழுக்க திட்டமிடுதலுக்கும்,எதேச்சையான தன்னியல்பான நிகழ்வுகளுக்குமன முரண்படாக அந்த உரையாடல் பாதியிலேயே நின்றது.அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இப்போதுதான் அவரோடு கலை குறித்த தீவிரமான உரையாடலுக்கு சாத்தியப்படிருந்தது.இம்முறை எனக்கும் அவருக்கு மான உரையாடல் திரும்ப திரும்ப கோடுகளின் வராலாற்றையே வட்டமிட்டு கொண்டிருந்தது. மருதுவின் கோடுகள் என்பது அவருடையதல்ல மேற்கத்திய ஓவிய மரபின் திணிப்பிலிருந்து விடுபட எத்தனித்த தமிழ் கூட்டு மனநிலை தானக தன்னை தேடி வரிந்து கொண்ட கோடு அது.கோடு அது.அந்த கோட்டின் துவக்க புள்ளி திருச்சி மண்ணிலிருந்து தோன்றிய ஆதி மூலம் எனும் தீவிர தேடல் கொண்ட கலைமனத்திடமிருந்தே துவங்கியது என்பது அவரும் மறுக்க முடியாத உண்மை.ஆதி தனக்கான கலை மரபை தனது புராதன ஞாபகங்களிலிருந்து தோற்றுவிக்க விழைந்த போது தமிழ் கல்வெட்டுகளிலிருந்தும்,ஓலை சுவடி எழுத்து வகைமைகளிலிருந்தும் இன்னும் பெரிய எழுத்து கதை எழுத்துக்கள்,மற்றும் அய்யானார்,மாரியம்மன்,சுடலை மாடன் போன்ற மண்சர்ந்த தெயவ உருவங்களிலிருந்தும் தீவிரமாக தேடி அவர் அதனை முதலி கண்டடைந்தார்..தமிழ் ஓவிய மரபானது,தனபால்,அல்போன்சா,சந்தான்ராஜ் போன்ற மேதைகளின் வழியாக உருவாக்கம்பெற்றிருந்தாலும் நமக்கேநமக்கான கோடுகளை உருவாக்கி, மண் சார்ந்த அடையாளங்களை ஓவிய பொருளாக மற்றிய பெருமை முற்று முழுக்க ஆதியிடமிருந்தே துவக்கம் பெறுகிறது.இதனை வெளிக்கொணர்ந்ததில் அப்போது ப்ரக்ஞை சிற்றிதழின் பங்கு அபாரமானது.அவர் உருவக்கிய அந்த வழித்தடத்தில் பலர் பயணித்திருந்தாலும் அதனை அடுத்தகட்டத்திற்கு வெகு ஜன ஊடகங்களின் வாயிலாக சதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்திய மிக முக்கியமான பணி மருதுவினுடையது.மதுரை மண் சார்ந்த தன் வாழ்வில் பால்யத்தில் தான் கண்ட காட்சிகளை,பிரதிமைகளை அவர் வெகு ஜன ஊடகத்தில் கோடுகளின் மூலமாக சித்திரமாக வரித்தபோது தமிழ் வாசக பரப்பில் அது பெரும் வரவேற்பை பெற்றது.அதே சமயம் ஆதி உருவாக்கிய மரபை தன் தொன்மங்களை நோக்கி கொண்டு சென்றவர் சந்துரு.இதனை சுருக்கமாக சொல்வதானால் ஆதியிடமிருந்து சந்துரு அகத்தேபயணிக்க மருது தனது கோட்டை புறத்தே கொண்டு வந்தார். இரண்டுமே இரண்டு விதங்களில் தமிழ் ஓவிய சூழலில் மிக முக்கியமான நிகழ்வு.தனது தேடலின் அடியொற்றி நடந்தது சந்ரு¢ன் நிகழ்வு.ஆனால் மருதுவுக்கு அப்படியல்ல வெகுஜனங்களை அடைந்த அவரது பாதை மிகுந்த மெனக்கடல்களையும் காத்திருப்பையும் உள்ளடக்கியது. இன்று தமிழ் சூழலில் அறிவு சார்ந்த விஷயங்களுக்கு அடையாளமாக சில கோடுகளும்,சில எழுத்து வடிவங்களும் காணப்படுகின்றன.என்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஒரு புத்தகம் தன்னை நவீன இலக்கியமக அறிவித்துக்கொள்ள வேண்டுமென்றால் அதன் அட்டையில் இத்தகைய கோடுகளுடன் எழுத்து வடிவம்,அல்லது சித்திரம் இருந்தால் மட்டுமெ போதுமானதாக கருதுகிற அளவிற்கு அடையாளம் கண்டிருந்தது. அதுவே நாளடைவில் வெகு ஜன பத்திரிக்கைகளின் வழியாக வளர்க்கப்பட்டு பொதுத்தளத்தில் தமிழ் அடையாளமாக கருதப்படுகிற அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது. ''1985ல் பொங்கல் இதழுக்காக உருவாக்கப்பட்ட இலக்கிய இணைப்பிதழில்தான் முதன் முதலாக ஆதியிடமிருந்தும்,என்னிடமிருந்தும் ஓவியங்களை வாங்கி ஆனந்த விகடன் இதழ் பிரசுரித்திருந்தது.அதுதான் வெகு ஜன ஊடகத்தில் நவீன ஓவியத்தின் முதல் அறிமுகம்.இந்த முயற்சிக்கு அப்போது அங்கு பணியாற்றி¢க்கொண்டிருந்த வேல்சாமி எனும் பத்திரிக்கையாளரின் தீவிர ஆர்வம் ஒரு முக்கிய காரணம்.அதனை தொடர்ந்து அப்போது குங்க்குமம் இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த பாவை சந்திரன் நவீன ஓவியங்களை வாங்கி பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டினார். இந்த இரு பத்திரிக்கையாளரும் தான் இன்று இந்த கோட்டோவியங்களுக்கான வளர்ச்சிகான பாதைக்கு அடித்தளம் அமைத்து தந்தவர்கள்'' எனக்கூறும் மருது பத்திரிக்கை ஓவியங்களுக்காக இன்று வரை எந்தசமரத்தையும் தனக்குள் அனுமதிக்காதவர் ..அதே சமயம் தனது கோடுகள் எந்த மாதிரியான எழுத்துக்கு துணை நிற்கின்றன என்பதிலும் மருது மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வந்திருக்கின்றார்.இதனால் தான் அவை தன் மகத்துவத்தை இப்போதும் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன தன்னை மறுக்கும் கோடுகளுடன் மருது, அஜயன்பாலா

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...