16. நா. முத்துக்குமார் எனும் பெரு நண்பன் 
வாசன் கற்றுக்கொடுத்த பாடம்
கவிஞர்கள் பாடலாசிரியர்கள் என்றாலே போட்டி பொறாமை நிறைந்தவர்கள் ஒருவரை இன்னொருவருக்கு ஆகாது ஒருவரது கவிதையை இன்னொருவர் ஏற்க மாட்டார்கள் என்றெல்லாம் பொது உலகில் பேச்சு வழக்கு உண்டு. நானும் அண்ணன் அறிவுமதி அவர்களை பார்ப்பதற்கு முன்பு வரை அப்படித்தான் நினைத்தேன் அண்ணன் அறிவுமதியின் பாசறையில் வளர்ந்த முத்துக்குமாரும் அப்படித்தான் தன்னை விட யாராவது சிறப்பாக எழுதினால் அவர்களை கொண்டாடத தயங்கவே மாட்டான் .
அன்று மேன்ஷன் அறையில் கூட்டம் அதிகம் . இரவு செகண்ட் ஷோ படம் பார்த்துவிட்டு வந்த நான் அப்படியே வெளியே பால்கனி சுவற்றோரம் ஒரு ஆள் மட்டும் நடக்கும் இடைவெளியில் பெட்ஷீட்டை விரித்து படுத்தேன் . மறுநாள் விடிந்தது கூட தெரியமல் தூங்கிகொண்டிருந்தேன் . யாரோ உசுப்பி தூக்கத்தை கலைத்தார்கள் . விழித்தால் முத்துக்குமார்தான்
பாலா எழுந்திருங்க இவ்ளோ நேரம் துங்கினா அப்புறம் எப்படி மணிரத்னத்தை வீட்டுக்கு அனுப்பறது . வழக்கமான கிண்டலுடன் எழுப்பினான் எழுந்து உட்கார்ந்ததும் அவனும் என்னுடன் தரையில் அமர்ந்துகொண்டான் . வழக்கமாக கொண்டு வரும் பையிலினுள் கைவிட்டான் . கை ஒரு புத்தகத்துடன் வெளியில் வந்தது . என் கையில் திணித்தான் கவிதை புத்தகம் மணப்பத்தாயம் என தலைப்பிட்டிருந்தது .
 பாலா  யுக பாரதி ன்னு ஒருத்தன்  முத தொகுப்பு அட்டகாசமா எழுதியிருக்கான் 
 இப்படி தூக்கத்தை கெடுத்துவிட்டானே என  கண்களை கசக்கிக்கொண்டு புரட்டத்துவங்கினேன். அபிவை சரவணன்  எழுதியிருந்த  முன்னுரை வாசிக்கத்தூண்டியது . எழுத்தாளர் ராஜூ முருகனின் அண்ணன் 
கண்ணி,ல் பட்ட முதல் கவிதையே நச்’
 மூத்திரவாடை நிரம்பி வழியும்
பேருந்து நிலையத்தில் 
முழம் போட்டு 
விற்றுக்கொண்டிருக்கிறாள் பூக்காரி 
யுகபாரதியை எனக்கு முன்பே தெரியும் . என் பத்ரிக்கையுலக ஆசான் வித்யாஷங்கர் எனும் தளபதி துரை யின் சிஷ்யன் . ஒருமுறை ராஜ ரிஷி அலுவலகத்தில் யுக பாரதி அவருடன் பணிபுரியும் போது இருவரையும் திநகரில் சாலையில் சந்தித்தேன். அப்போது யுக பாரதியை எனக்கு அறிமுகப்படுத்தி டேய் அஜய் இவன் பேரு யுக பாரதி குறிச்சு வச்சுக்க சினிமாவுல சீக்கிரம் இவன் பெரிய ஆளா வரப்போறான் என்றார் .
துரை அவ்வளவு சீக்கிரம் இப்படி யாரையும் பாராட்ட மாட்டார் என்பதால் அப்போதே அந்த பெயர் என் நினைவில் அழுத்தமாய் பதிந்துவிட்டது . இப்போது முத்துக்குமார் கொண்டு வந்த கவிதைகளுக்கு சொந்தக்காரன் அந்த யுக பாரதிதான் இது என்பதை சட்டென உணர்ந்தேன்
 அன்று எனக்கு யுகபாரதியை விட முத்துக்குமாரின் விகல்பமற்ற சுபாவமும் சக கவிஞனை  பாராட்டும்  உயர்ந்த குணமும் வியக்க வைத்தது.  அன்று
மட்டும் இல்லை . பழகிய  காலம் தொட்டு தன்
சமகாலத்தில் யாரெல்லாம்  நன்றாக
எழுதுகிறார்களோ அவர்களை தேடிச்சென்று பாரட்டுவதும்
நண்பர்களுக்கு அறிமுப்படுத்துவதும்  அவன்
குணம். 
அறிமுகக்கவிஞர்கள் என்றில்லாமல் மூத்த கவிஞர்களையும் அவன் அடிக்கடி வியப்பான்
அன்று உச்சத்திலிருந்த வைரமுத்துவின் பாடல்களை அடிக்கடி பேசிக்கொண்டேயிருப்பான். அப்போது ஏ ஆர் ரகுமான் இசையில் என் சுவாசக்கற்றே வெளியாகியிருந்தது அதில் வரும் சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வந்தேனோ பாடலில் வரும் சக்கரவாகமோ மழை அருந்துமாம் நான் சக்கரவாக பறவை ஆவேனோ ‘ மண்ணின் தாரைகள் ஈர விழுதுகள் அந்த விழுதை பிடித்து மேலே செல்வேனோ என்னும் வரியை ஒருநாள் முழுக்க வியந்து பேசிக்கொண்டிருந்தான் .
அதிலும் குறிப்பாக மழையை ஈர விழுதுகள் என்ற உவமையும் அதை பிடித்து மேலே ஏறும் பேண்டசியும் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது . இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் முத்துக்குமாரின் மன அமைப்பு எப்படி இயங்கியது என்பதை புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. அவன் தன் வேலை உண்டு தன் வாய்ப்பு உணடு என்றிருந்தால் அவனால் இந்த உயரங்களை தடைகள் பல கடந்து தடதடவென உயர்ந்திருக்க முடியாது , அவனது பரந்த மனம் அனைவரது திற்மைகளையும் உற்று கவனிக்கும் திறன் அதை உள்வாங்கி தன்னோடு உரசிப் பார்ர்த்து குறைகளை நிறைகளாக்கிக் கொள்ளும் பக்குவம் இவை எல்லாம் தான் அவனை உயர்த்தியது
அதே போல அவன் பாடல் எழுதத்துவங்கிய துவக்க காலத்தில் கொஞ்சம் தட்டையான குத்துப்பாடல்கள் அதிக,ம் . இதை பாஸ்ட் புட் பாட்ல்கள் என அழைப்பர் . காரணம் பெரும்பாலும் தொட்டபெட்டா ரோட்டுல முட்ட பரோட்டா டைப்பில் உணவுபொருள்களை சொல்லி பாடல் வரிகள் அதிகம் . இக்காலத்தில் தான் பாஸ்ட் புட் வண்டிகள் சென்னை நகரை அதிகம் ஆக்ரமித்தன. அதுவரை ரெஸ்டாரணடுகளில் மட்டுமே கிடைத்த ப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் அயிட்டங்கள் இரவு வண்டிக்கடைகள் மூலம் தமிழர்கலின் இரவு உணவாக மாறிக்கொண்டிருந்த நேரம் . இது சினிமாவிலும் அக்காலத்தில் பிரதிபலித்தது
இவ்வகை பாடல்களை  அன்று அக்காலங்களை அன்று அதிகமாக  எழுதி சரசரவென வேகமாக வளர்ந்துகொண்டிருந்தார் வாசன். தேவா இசையில் ஆஹா
படத்தில் வரும் முதல் முறை பார்த்தேன் 
என்பது போன்ற பாடல்களையும் அவர் எழுதினாலும் அவர் அதிகம் எழுதி வேகமாய்
பிரபலமடைந்தது  இவ்வகை பாடல்களைத்தான் ,.
விரைவாக பாடல் எழுதுவதில் முத்துக்குமாருக்கு முன்னோடி அவர்தான் . நான் பணிபுரிந்த லவ் டுடே வில் இரண்டு பாடல்களை எழுதியவர் என்பதால் எனக்கும் அவர் நல்ல பழக்கம் . எப்போதும் நண்பர்கள் புடை சூழ இருப்பார் . அவரது திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது . நானும் முத்துக்குமாரும் வாசனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். அன்று முழுக்க வாசன் பற்றித்தான் பேச்சு . அவர் எப்படி எழுதுவார் எப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார் என வியந்து பேசிக்கொண்டிருந்தான் .
 அதற்கு முன் வரை தேனிசைத்தென்றல்  தேவா படங்களுக்கு வாசன் தான்   அதிகம்  எழுதிக்கொண்டிருந்தார் வாசன் . அது தேவா வின் உச்சகாலகட்டம்  காதல் கோட்டை  நேருக்கு நேர்  என  தொடர் வெற்றியில் இருந்த நேரம் .  ஒரே நாளுக்கு அஞ்சாறு  பட கம்போசிங்    ட்ரெண்டிங்கில் டாப்பில் இருந்தார் . 
வாசனின் திடீர்  மறைவு  தேவாவுக்கு ஒரு கை  உடைந்தார் போல ஆனது .   அதே போல வரிகளில் புதுமையும் வார்த்தையில் எளிமையுமாகவும்  வேகமாய்  எழுத ஒரு ஆள் தேவைப்பட்டார் .    அப்போது வீர நடை  வெளி வந்து விட்டதால் இயல்பாக  தாயம் முத்துக்குமார் பக்கம் விழுந்தது .
வாய்ப்புகள் பலருக்கும் வரும் ஆனால் அதை பயன்படுத்திகொள்ள  எப்படி உழைக்கிறோம் என்பதுதான் வெற்றிப்படிகளை  வீட்டுக்கு அழைத்து வரும் விஷயம்  .
உண்மையில் முத்துக்குமார் பணி கவித்துவமான  வரிகள் தான் ஆனால் அவன் வாசன் பாடல்களை பற்றி முன்பே செய்து வைத்த ஆராய்ச்சி அங்கு கைகொடுத்தது வாசன் பாடல்களில் ஒரு வரிசைப்படுத்துதல் இருக்கும் . கேட்லாக்கிங் என சொல்வார்கள் . பிடிச்சிருக்கு என்றால் எதெல்லாம் பிடிசிருக்கு என்பது ஒரு பட்டியல் உயரம் என்றால் எதெல்லாம் உயரம்   இந்த சூட்சுமத்தை அவன் வாசனிடமிருந்து கற்றுக்கொண்டான் .
இயக்குனரின் முகத்தில் சிரிப்பு வருகிறதா என பார்த்தபடி தேவா ட்யூன் போடுவார் என வேடிக்கையாக கூறுவார்கள் . அது போல முத்துக்குமாரும் தேவாவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறதா என பார்த்து  எழுத துவங்கினான் .
அன்று அவன் அப்படி செய்யாமல் இல்லை எனக்கு என்ன வருகிறதோ அதை மட்டுமே எழுதுவேன் என அடம்பிடித்து இருந்தால் தொடர்ந்து பாடல்கள் அவன் எழுதியிருக்கவும் முடியாது  பிற்பாடு யுவன் என்ற இசை இளவரசனுடன் கைகோர்த்து காலத்தின் ஆகச்சிறந்த பாடல்களை அவன் எழுதியிருக்க முடியுமா என்பதும் சந்தேகமே  .
இப்படி அவன் துவக்க காலங்களில் தன்னோடு எழுதிய பல கவிஞர்களையும் ஈகோ இல்லாமல் நெருங்கினான்
.  பிற்பாடு கபிலனின் தில் படத்தில் எழுதிய உன் சமயலைறையில்  உப்பா  சர்க்கரையா  வரும்போதும் அப்படித்தான் பாரட்டிக்கொண்டிருந்தான் 
என்றாலும் முத்துக்குமார் அதிகம் பேசியது கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாட்டை எழுதிய முத்து விஜயன் தான் . அடிக்கடி அந்த வரியை குறிப்பிடுவான் 
அதே அவன் சம காலத்தில் ஆவனுக்கு மிக நெருக்கமாக  இருந்த இன்னொரு பாடலாசிரியர்  விவேகா .
ஒரு நாள் பாலா கார்த்திகை தீபம் போவலாம் கிளம்பி நேரா பூக்கடை பஸ் ஸ்டாண்ட்ல திருவண்ண்ணாமலை  போற பஸ் பக்கமா  வந்துடுங்க  மூணு நாள் தங்கறதுக்கு டிரஸ் எடுத்துகிட்டு வந்துடுங்க என்றான்  கூடவே நம்ம கூட இன்னும்   ரெண்டு பேர் வராங்க  என்றான் .  யார் அந்த ரெண்டு பேர்  யோசித்தபடி அவசரமாக லக்கேஜை சுருட்டிக்கொண்டு  புறப்பட்டேன் . 
அப்போது என்னுடன் இருந்த உதவி இயக்குனர் முகேஷ் என்னை  டூவீலரில் கொண்டுவந்து பூக்கடை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டார். நானும் திருவண்னாமலை செல்லும் பேருந்துகள் நிற்கும் மிடத்தில் காத்திருந்தேன் .  சொன்ன நேரம் கடந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அன்று செல்போன் இல்லாத  காலம்  செம கடுப்பில் திரு,ம்பி போகலாமா என  புறப்பட்டபோது   முத்துக்குமார்  இரண்டு
பேருடன் வந்தான் . 
அதில் ஒரு சிவப்பு பையனை அறி,முகப்படுத்தி பாலா இவந்தான் விவேகா    நீ வருவாய் என படத்துல பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா எழுதினவன்  கம்பராமயணம் பத்த்தில்லாம் பிச்சி உதறுறான்  .  வாத்தியார் புள்ளை மக்கு இல்லைன்னு  என்ன மாதிரி நிரூபிக்க பொறந்தவன்  .  முத்துக்குமார் அறிமுகப்படுத்திய  அந்த நபர்தான் விவேகா 
கூடவே  அவனோடு அடுத்து வந்த இன்னொரு நண்பனை பாலா இவர் சீமான் அண்ணன் அசிஸ்டண்ட் என  அறிமுகப்படுத்த நானும்  அந்த நண்பரும் சிரித்துக்கொண்டோம்.  என்ன பாலா உங்களுக்கு முன்னாடியே  தெரியுமா எனகேட்க ‘நான் எனக்கும்  அந்த நண்பருக்கும்   நடந்த முதல் சந்திப்பை விளக்கினேன் 
அப்போது நான் லவ்டுடே படத்தில் பணி செய்து கொண்டிருந்த  நேரம் படத்தில் நியூஸ்  வாசிக்கும் ஒரு காட்சிக்கு ஒரு நல்ல செய்தி வாசிப்பாளரை தேடிக்கொண்டிருந்த  போது   ராஜ் டிவியில் செய்தி  வாசிக்கும்  ஒரு   பெண்  சரியாக இருக்கும்  என  உதவி இயக்குனர்கள் நாங்கள் தேர்வு  செய்தோம். 
. உடனே  இயக்குனர் பாலசேகர் என்னை ராஜ் டிவியில் சென்று எப்படியவது அந்த பெண்ணை பேசி  நடிக்க அழைத்து வரும்படி கட்டளையிட்டார் . நானும் ஈசியான வேளை தானே என  ராஜ் டிவிக்கு போக ஆனால் அங்கோ யாரும் அந்த பெண்ணைப்  பற்றிய தகவல்களைத் தர மறுத்துவிட்டனர் .  எனக்கு அப்போதுதான் தொலைகாட்சி உள் அரசியல்கள் தெரிய வ்ந்தது 
ஆனால் வெறும்கையுடன் போனாலோ  இயக்குனர் என்னங்க சின்ன விசயம் இதகூட மூடிக்க தெரியலையே என கடிந்துகொள்வார் . எப்படியவாது அந்த பெண் முகவரி வாங்கிக்கொண்டு செல்வது என்ற  முடிவுடன்  ராஜ் டிவி வாசலிலேயே உட்கார்ந்து விட்டேன் ஒரு மணி நேரம் ஆனது .நான் இப்படி தவம் போல அமர்ந்துகொண்டிருப்பதை பார்த்த ஒரு இளைஞன்  உள்ளேயிருந்து வெளியே அவசரமாக வந்தவன் என்னை ரகசியமாக  தன் பின்னால் வரும்படி அழைக்க நானும் அவன்  பின்னால் சென்றேன்.
 கொஞ்ச தூரம் சென்ற பின் அவசரமாக்  என் அருகே வந்தவர்  அந்த பொண்னு  கஷ்டப்பட்ற குடும்பத்தை சேர்ந்த  பொண்னு. கொஞ்சம் ஸ்ட்ரெட்யிட் பார்வர்ட்  அதனாலேயே  இங்க  வேலை செய்ய்றவங்களுக்கு பிடிக்காது . யாரும் உங்களுக்கு  சொல்ல மாட்டாங்க . இந்தாஙக் அந்த பொண்னு அட்ரஸ் . ஸ்ரீ பெரும்பதூர்ல இரூக்கு எப்படியவது  வாய்ப்பு குடுங்க என அட்ரஸ் குடுக்க  அட இப்படியும் நல்ல மனுசர்கள் இருக்கிறார்கLஏ என  வியந்து அதை வைத்துக்கொண்டு போய்  இயக்குனரிடம் கொடுத்து நல்ல பெயர்   வாங்கினேன் . 
.அந்த  பெண் துவக்கத்தில் நடிக்க சம்மதித்து பின் வீட்டில் சம்மதிக்கவில்லை என சொல்லி மறுத்துவிட்டார்  அப்படி அன்று எனக்கு உதவிய அந்த நண்பர்தான் முத்துக்குமார் எனக்கு  பேருந்து  நிலையத்தில்  விவேகாவுடன் அறிமுகப்படுத்தியது .   அன்று அவர் பெயர் வெறும் சீனுவாசன்  பிற்பாடு  பத்து வருடங்களுப்பின்  தென் மேற்கு பருவக்காற்று எனும் படத்தின்  மூலம் இயக்குனர் சீனு ராமசாமியாக அறியப்பட்டர் 
இப்படியாக அன்று  நான்  நா முத்துக்குமார்  விவேகா சீனு ராமசாமி நால்வரும்  கார்த்திகை தீபம் தரிசிக்க திருவண்ணாமலை பேருந்தில் ஏறினோம் 
மறக்கவே முடியாத  மூன்று நாட்களுடன் திருவண்ணாமலையில் எங்களுக்காக காத்திருந்தார் பவா செல்லத்துரை 
( தொடரும்) 

 
 
No comments:
Post a Comment