May 30, 2011

கா.அப்பாத்துரையார்;,. செம்மொழி சிற்பிகள்-3

தமிழரின் தொன்மம் குறித்த பல ஆராய்ச்சி நூல்களை எழுதியவர் உடன் பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியவர் .குறிப்பக கார்ல் மர்க்ஸ் அவர்களின் மூலதனத்தை தமிழில் முதன் முதலாக மொழிபெயர்த்தவர் காசியாபிள்ளை அப்பாத்துரை அவர்கள்.

கா.அப்பாத்துரையார்
பிறப்பு ;1907

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி காசியாபிள்ளைக்கு ஒரு வைராக்கியம் த்னனால் இயலாத ஒன்றை தன் மகன் மூலம் நிகழ்த்திக்காட்ட விரும்பினார். சுமார் நாற்பது மொழிகளை தன் மகன் அறிந்து இந்த வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ ஆசைப்பட்டார்.அதன் படி தன் மகனான அப்பத்துரையை சிறுவயதுமுதலே தமிழோடு சேர்த்து இதர மொழிகளையும் கற்க நெறிப்படுத்தினார்.இதன் காரணமாக அப்பாத்துரையார் தமிழ் உட்பட மலையாளம், வடமொழி, ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் எழுதவும் பேசவும் படிக்கவும் அறிந்து உடன் பதினெட்டு மொழிகளில் நன்கு பயிற்சியும் பெற்றார்,மட்டுமல்லாமல் தான் படித்தவற்றில் சிறந்த விஷய்ங்களை தமிழுக்கும் மடைமாற்றம் செய்து ”பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்” எனும் பாரதி கூற்றை செயலில் காட்டும் வகையில் நடந்துகொண்டார். ஆனாலும் தந்தையின் கனவாக இருந்த 40 மொழிகளை அடையமுடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவருள் இருந்தது

கம்யூனிஸ்டுகளின் பைபிளாக கருதப்படும் கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ்கேப்பிடல் நூலை முதன் முதலாக தமிழுக்கு மொழிபெயர்த்தவர். மலையாளத்திலிருந்து இந்து லேகா,ஜெர்மனியிலிருந்து துன்பக்கேணி போன்றவை இவரால் தமிழுக்குகொண்டுவரப்பட்ட இதர நல்ல நூல்கள்.

200க்கும் மேற்பட்ட நூல்களை படைத்த அப்பாத்துரையார் பல ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார். அவ்ற்றூள் குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு எனும் இவரது ஆராய்ச்சி நூல் தமிழ்ர் தொன்மம் குறித்த பல ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. இவரது தென்னாட்டு போர்க்களங்கள் மற்றும் திருக்குறள் மணி விளக்க உரை ஆகிய நூல்கள் பலராலும் பாரட்டபெற்றவை.

ஆங்கிலநாளேடான லிபரேட்டர், நீதிக்கட்சியின் திராவிடன் பெரியார் அவர்களின் விடுதலை மற்ரும் இலக்கியத்திற்கான பொன்னி ஆகிய இதழ்களில் ஆசிரிய பணிகளில் பணிபுரிந்தவர்.

இந்தி ஆசிரியராக பணிபுரிந்தபோதும் பெரியாரின் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன் மனைவி அலமேலுவுடன் கலந்து கொண்டு சிறை சென்றவர்.

சென்னை பல்கலைக்கழகம் ஆங்கில தமிழ் அகராதி நூலை தமிழில் ஏ.சி செட்டியார் அவர்களை ஆசிரியராக கொண்டு பதிப்பிக்க முனைந்தபோது ஆறுஆண்டுகள் அப்பணியில் உதவி ஆசிரியராக இருந்துசெயல்பட்டவர்.

அறிஞர் அண்ணா யேல் பல்கலைக்கழகம் அளித்த டாக்டர் பட்டத்தை வாங்க சென்றபோது அவரது உரைக்கு பதினாறுபக்க குறிப்புகளை எழுதிதந்தவர்.

பன்மொழிபுலவர், திராவிட இயக்கத்தின் ஞானாசிரியர்
போன்றவை தமிழ் இவரது த்லைக்கு சூட்டிய மணிமகுடங்கள்

மறைவு 1989

1 comment:

Anonymous said...

pharmacy ekhard http://sundrugstore.net/products/plavix.htm bicalutamide pharmacy

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...