August 7, 2010

நதியை தேடி நடந்த கடல் : வெர்ஜீனியா உல்ப்



நதிவழிச்சாலை :1
அஜயன்பாலா


சென்றவாரம் பார்சன் காம்பள்க்ஸில் வழக்கமாக சினிமா டிவிடிக்களை வாங்கும் கடையில் ஒவ்வொருபடமாக விரல் தேடிக்கொண்டிருந்த போது ஒருபடம் கண்ணில்பட்டு பரவசத்தை உண்டாக்கியது .படத்தின் பெயர் Who i s afraid of virjinia woolf 1966ல் ஹாலிவுட்டில் வெளியான படம் .

வெர்ஜீனியா உல்பை எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது. புகழ்பெற்ற ஆங்கில பெண் எழுத்தாளினி. எண்ணற்ற சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் மற்றும் கடிதங்களாக எழுதிக்குவித்தவர். ஆங்கில நவீன இலக்கியத்தை கட்டமைத்த டி.எஸ் எலியட். மற்றும் ஜேம்ஸ் ஜாய்சுக்கு சற்றும் சளைத்தவரில்லை என்கிறது விமர்சன வட்டாரம். ஆனால் என்ன வென்றால் எல்லா உயர்ந்த எழுத்தாள்ர்களையும் தாக்கும் ஏதாவது நோய் வர்ஜீனியாவுக்கு பை- போலர் டிஸ் ஆர்டர எனும் மன நோய் உருவில் வாய்த்தது. நன்றாகவே வாட்டி வதைத்தது. இந்த நோயில் இருப்பவர்களுக்கு தான் ஒருமனநோயாளி என்பது தெரியும் ஆனால் ஒன்றும் செய்யமுடியாது.தன்னிடம் வருபவர்களிடமும் இப்படியே அவர் புலம்பிதள்ளியிருக்கிறார். ஆனால் அவரது படைப்பு எழுச்சிக்கும் அதுவேஅடிப்படையாக இருந்தது. துயரமான வாழ்க்கைக்குள் சவாலாக நீச்சலடித்தார். அதனாலேயே மிஸஸ் டாலவே , ஆர்லோண்டோ ,போன்ற நாவல்களை அவரால் படைக்க முடிந்தது. ஒரு யூத்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.திருமண்ம் ஆகும் போது கண்வன் கையில் நயாபைசா கூட இல்லை என நன்கு தெரிந்தே திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் இறுதிவரை அவருக்குமனைவியாக வாழ்வத்ன் மூலம் தான் மிகுந்த ம்கிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவே அவர் பதிவு செய்துள்ளார். இரண்டாம் உலக்போரின் போது லண்டனில் நாஜிக்கள் போட்ட குண்டு அவரது வீட்டை தரை மட்டமாக்கியது. இது அவரை தீவிர மனநோய்க்குள் விழ வைத்தது. நோய். கடுமையாக தக்கதுவங்கியிருந்தகாலத்தில் ஒருநாள் 1941ல் தனது கோட் பாக்கெட் முழுக்க கற்களை நிரப்பிக்கொண்டு வீட்டிற்கு அருகாமையில் இருந்த ஓஸ் ஆற்றை நோக்கி மெதுவே நடந்துசென்றார். மரணத்தை நோக்கிய நிதான நடை அது. அவர் தற்கொலை செய்வதற்கு நதியை தேர்ந்தெடுத்தால் அந்த ஓஸ் நதி இலக்கிய வரலாற்றில் த்ன்னை பதியவைத்துக்கொண்டது. அவரது தற்கொலை அக்காலத்தில் ஆங்கில இலக்கிய உலகை பெரும் அதிர்ச்சியில் தள்ளியது .

மிகவும் சோகம் ததும்பிய அவரது இந்த வாழ்க்கையை எதிர்பார்த்துதான் நான் அன்று வாங்கிய டிவிடியை போட்டேன்.. குறிப்பாக அவர் ஆற்றை நோக்கி ம்ரணத்தை முன்னிட்டு நடந்து செல்லும் அந்த இறுதிக்காட்சி.. இயக்குனர் அதை எப்படி கையாண்டிருப்பார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் படம் ஓட த்துவங்கியதும் அதிர்ச்சி..மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எலிசபத் டெய்லரும் ,ரிச்சர்பர்ட்டனும் நடித்தபடம் அது .



படத்தின் கதைக்கும் வெர்ஜீனியா உல்ஃபுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது ஒருகுடும்ப கதை போல வெறுமனே அதிர்ச்சிக்காக அவரது பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தனைக்கும்
உல்ப் கணவனுடன் நிறைவான மணவாழ்க்கை வாழ்ந்துமுடித்தவர். ஆனால் படமோ மண்வாழ்க்கையின் தோல்வியை பற்றிய படம் . படத்தில் நடித்த ஜோடிக்கு வேண்டுமானால் இக்கதை பொருந்தும். டைவர்ஸுக்கு பேர்போன ஜோடி . சேர்ந்து பிரிந்து மீண்டும் சேர்ந்து பிரிந்து என இரண்டுமுறை டைவரஸ் ஆன ஒரே ஜோடிகள். வேறு எந்த காரணத்திற்காக இப்படத்திற்கு வெர்ஜீனியா உல்பின் பெயரை பயன்படுத்தினார்களோ தெரியவில்லை பத்தாக வாங்கிய அவசரம் காரணமாக பின் குறிப்புகளை திருப்பி பார்க்காமல் போன தவறுக்காக நொந்துகொண்டேன் .

உல்ப் பற்றி நான் தேட காரணமாக இருந்தது அவர் எழுதவரும் பெண்களுக்காக சொன்ன புகழ்பெற்ற வாசகம் .. இதுதான்

எழுத்துறைக்கு வரும் பெண்கள் அதற்கு முன் தனக்கென தனி அறையும் கொஞ்சம் பொருளும் சேர்த்துக்கொண்டு இதில் நுழைவது அவர்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தரும்”


. – நன்றி
’சூரியக்கதிர்” இதழ்

6 comments:

Gopalakrishnan said...

சமயங்களில் இந்த ஆலோசனை ஆண்களுக்கும் பொருந்தும், சூழ்நிலையை பொறுத்து! நன்றாக இருந்தது!

வீரமணி said...

2002லிருந்து2005 வரை நேரிடையாக நீங்கள் எங்களுக்கு சொல்லிகொடுத்த உலக சினிமாவை, இபொழுது உங்கள் வலைப்பக்கங்களில் படித்து தெரிந்து கொள்கிறேன், தொடர்ந்து எங்களுக்கு நிறைய கற்று தாருங்கள் அண்ணா,

அன்புடன்
தம்பி வீரமணி

ajayan bala baskaran said...

நன்றி கோபால் , நீங்கள் சொன்ன வரியைத்தான் நான் கடைசிவரியாக சேர்த்திருந்தேன் ,ஆனால் அது அவர்கள் சொன்ன வரிகளின் அழுத்தத்தை பாதிக்கும் என்ற காரணத்தால் பிறகு எடுத்துவிட்டேன் ...ஒத்த சிந்த்னை

ajayan bala baskaran said...

நன்றி வீரமணி .,அது போல உன்னிடமிருந்து நானும் அன்பையும் உழைப்பையும் ஆர்வத்தையும்ம் கற்றுக்கொண்டிருக்கிறேன் ..அந்த நாட்களை நானும் மறவேன்

/ˈjib(ə)riSH/ said...

அன்புக்குரிய அஜய்,

வெர்ஜீனியா உல்ஃபின் பெயரைப் பார்த்துதான், நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனால் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குழந்தைகள் இல்லாத தம்பதிகளின் வெறுமை, அவர்களுக்கிடையேயான Ego பிரச்சனைகள் போன்றவை சிறப்பாகக் காட்டப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

ajayan bala baskaran said...

நன்றி மோகன் ..
நான் படத்தில் வெர்ஜீனியாவுல்பை எதிர்பார்த்து காத்திருந்ததால் அல்லது அவரது வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகளை எதிர்பார்த்துகாத்திருந்த்தால் ஏற்பட்ட ஏமாற்றத்தை பதிவு செய்யவே குறிப்பிட்டேன் .மற்றபடி ஐந்து ஆஸ்கார் வாங்கிய படத்துக்கு என்ன குறைச்சல்
பில்லா படம் கூட வசூல் களை கட்டியது ஆனால் அந்த பெயர் காரணம் பற்றி இந்த த்லைமுறையினர் யாருக்காவது தெரியுமா?

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...