January 27, 2010

தி வே ஹோம் : உணர்வுகளின் சிம்பொனி




உலக சினிமா

(இந்த இதழ் அவள் விகடனில் பிரசுரமாகியுள்ள இக்கட்டுரை முதியோர் சிறப்பிதழுக்காக பிரத்யோகமாக எழுதப்பட்டது.)

தனிமை.வாழ்க்கை மனிதனுக்கு இரண்டு பரிசுகளை கொடையாக த்ருகிறது
அதனை போல இன்பம் நிறைந்த பாடும் இல்லை துன்பம் நிறைந்த பாடும் இல்லை.இளமையில் காதல்வசப்படும்போது உலகமே நம்மை உற்று கவனித்தலும் நமக்குள் நாம் தனிமையில்தான் வாழ்கிறோம். எவரும் நுழையமுடியாத் பொன் வண்ணம் பூசப்பட்ட வேலிகளுடானன
மலர்கள் நிறைந்ததொரு கனவுத்தோட்டம் அது. யாரும் இல்லாத அந்த தோட்டத்தில் பட்டாம்பூச்சிகள் நம்மை சுற்றி பறக்கும்.ஆனால் அதே சமயம் முதுமையில் அதே தனிமையில் நம்முள் இருப்பது என்ன ?

வெறும் பழைய ஞாபகங்களாக எஞ்சிநிற்கும் சாயம் போன நினைவுகளின் மிச்சம் தான். அதனையும் எத்தனை நாள் தான் புரட்டிக்கொண்டிருப்பது
ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாமலாகி உடல் மண்ணை விரும்ப துவங்கி தானாக குனிய துவங்குகிறபோதுதான் வாழ்க்கை என்பது வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல அது உண்மையில் பெரும் சுமை என்பது புரியவரும்...

உண்மையில் சூழலில் இருப்பவர்களின் அன்பும் ஆதரவும் அப்போதுதான் முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படும் .

ஆனால் அப்படிப்பட்ட தருணங்களில்தான் ஒரு குழந்தையோ இளைஞனோஅல்லது நடுத்தரவயது கோபக்காரனோ சிடுசிடுக்கும் மருமகளோ வயோதிக மனதை அதிகமாக புறக்கணித்து மிகுந்த மனவேத்னைக்கு ஆளாகுகின்றனர்

.
விரும்பிய உணவு விரும்பிய வாழிடம்,விரும்பிய தொலைக்கட்சி சேனல் எதுவும் அப்போது அவர்கள் தீர்மானத்திலில்லை.

இதெல்லாம் நகரத்து முதியவர்களுக்குத்தான் ஆனால் ஒரு கிராமத்தில் வாழும் முதியவர்களுக்கு இந்த ப்ரச்னை கொஞ்சம் குறைவுதான் . சரியான சமயத்தில் அனுபவம் தரும் படிப்பினையை ஊன்று கோலாக பயன்படுத்துகின்ற்னர்.

எனக்கு தெரிந்த எத்த்னையோ கிராமத்து முதியவர்கள் தள்ளாத வயதிலும் இயற்கை சூழலின் காரணமாகவோ என்னவோ சிறிதளவேணும் நகரத்து முதியவர்களின் ப்ரச்னைகளிலிருந்து தப்பித்து தன்னந்தனியாக மனௌறுதியுடன் வாழ்கின்றனர்


அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான் ..தி வே ஹோம் படத்தின் நாயகி

பெரும்பாலான படங்களில் நாயகிக்கு வயது 15லிருந்து 25க்குள் இருக்கும்

ஆனால் இப்படத்தின் நாயகியான் கிம்- யூல்-பூனுக்கு வயது 77

நாயகன் சாங் வூவுக்கு வயசு என்ன தெரியுமா 8

சுருக்கமாக சொல்வதனால் வாழ்க்கையின் துவக்கத்தில் இருக்கும் இளம் தளிரான பேரனுக்கும் வாழ்க்கையின் இறுதிவாசலில் எந்நேரமும் விழ காத்திருக்கும் ஒரு பட்டுபோன மரம் போன்ற அவனது பாட்டிக்குமான உறவுதான் கதை

பேரனோ கோக் ,பிஸா, கெண்டகி சிக்கன், என வாழும் நகரத்து வார்ப்பு.

ஆனால் பாட்டியோ தலைகீழ் கூன்விழுந்த கிழவி. எங்கோ ஒரு மலைக்கிராமத்தில் ஒரு சிறு மண் குடிசையில் தன்னந்தனியாக வசித்து வருபவள்.வாய்பேச முடியாத ஊமை. காதுமட்டும் லெசாக கேட்கும் அவ்வளவுதான்

ப்டம் ஒரு நகரபேருந்தில் துவங்குக்கிறது நம் நாயகனான எட்டுவயது சிறுவன் சாங் வூ தன் அம்மாவுடன் பாட்டியின் கீராமம் நோக்கி புறப்பட்டு வருகிறான். சியோலில் தொழில் நடத்தி நஷ்டமாகிப்போன அவனது அம்மா உடனடியாக ஒரு வேலை தேட வேண்டிய நெருக்கடிகாரணமாக மகனை தன் அம்மாவுடன் கிராமத்தில் தங்க வைக்க அழைத்து வருகிறாள்


நகரத்து பேருந்தில் குறும்பும் துடுக்குத்தனமும் உற்சாகமுமாக இருக்கும் சாங் வூவின் முகம் அடுத்து ஒரு மலைகிராமத்து பேருந்தில் பயணிக்கும் போது அப்படியே மாறுகிறது. அவனுக்கு அந்த அழுக்கான பேருந்தும் இரைச்சலாக பேசும் கிராமத்து மனிதர்களும் பிடிக்கவில்லை. எரிச்சலடைகிறான் கையிலிருக்கும் வீடியோகேமின் முலமாக அதிகமாக சப்தம் எழுப்பி அவர்களது இரைச்சலுக்கு எதிர்வினை காட்டுகிறான்

அது ஒரு கொட்டாம்ப்பட்டி குக்கிராம் எந்தவசதியுமில்லை. துவக்கத்தில் அந்த கிராம வாழ்க்கைக்கு ஒத்து போக முடியாமல் சுணங்கும் சாங் வூ வேறு வழியே இல்லாத காரணத்தால் சகித்துக்கொள்கிறான்

மேலும் அந்த நரைத்த தலையுடன் கூடிய கூன் விழுந்த கிழவியுடன் அவனுக்கு பேசவேவிரும்பவில்லை.ஆனால் பாட்டிக்கோ பேரன் மீது அளவற்ற ப்ரியம். அவ்ள் அவனை குழிப்படுத்த என்னென்னவோ செய்தும் சாங்வூவுக்கு அந்த நாட்டுபுற கிழவியிடம் பேச பழக அவனுக்கு விருப்பமில்லை... நாள் முழ்க்க வீடியோகேம்ஸ் விளையாடுவதும் கோக் குடிப்பதுமாக பொழுதைகழிக்கிறான். இப்படியாக இருவரும் சிறுகுடிசைக்குள் வேருவேறு துருவங்களாக வாழும் போது ஒருநாள் இருவரையும் இணைக்க வந்தது ஒரு கரப்பான் பூச்சி . சாங்வூ கரப்பான் பூச்சியை பார்ததும் அலறுகிறான். எழுந்து பாட்டியிடம் அதனை அடித்து கொல்லுமாறு சுவற்றில் ஒடுங்கியபடி கத்துகிறான்.பார்வை சரியில்லாத நிலையிலும் பாட்டி கரப்பானை பிடிக்கிறாள் .அதனை கையோடு கொல்லும்படி நகரத்து சிறுவன் சாங்வூ கத்த கிராமத்து பாட்டியோ அத்னை கொல்லாமல் ஜன்னலை திறந்து வெளியே வீசுகிறாள்...

ஒருநாள் வீடியோகேம்சில் பேட்டரி தீர்ந்து போக தன் செவிட்டுபாட்டியிடம் தனக்கு பேட்டரி வாங்கிதா என கத்துகிறான் .ஆனால் பாட்டியோ தன்னிடம் போதிய பணம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சைகை செய்கிறாள். இத்னால் வெறுத்து போகும் சாங் வூ பாட்டி கழுவிகொண்டுவந்து வைக்கும் பீங்கான் பாத்திரத்தை காலால் எட்டி உதைத்து உடைக்கிறான் .அவள்து செருப்புகளை எடுத்து ஒளித்துவைக்கிறான்.பாட்டியை திட்டி சுவற்றில் கார்டூன்கள் வரைகிறான் . தூங்கிகொண்டிருக்கும் போது அவள் அணிந்து கொண்டிருக்கும் கொண்டை ஊசியை திருடி எடுத்துக்கொண்டு அத்னை விற்று பேட்டரி வாங்க கடையை தேடி விசாரித்து செல்கிறன்.ஆனால் கடைக்கார பாட்டிக்கு தெரிந்தவர் ஆதலால அவன் தலையில் ஒரு குட்டுவைத்து திருப்பி அனுப்புகிறார்.

ஒருநாள் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கும் சாங்வூவுக்கு கெண்டகி சிக்கன் சாப்பிடும் ஆசை வருகிறது. பாட்டியிடம் தனக்கு கெண்டகி சிக்கன் வாங்கித்தா என கேட்கிறான். ஆனால் அவ்ளுக்கு அது என்னன்வென்று தெரியவில்லை

அவன் சொன்னதை புரிந்துகொண்டு பாட்டி த்லையில் கைவைத்து அசைத்து சேவலை போல பாவனை செய்து அதுவா எனக்கேட்க சாங் வூ உற்சாக மிகுதியால் ஆமாம் என கூவுகிறான் .

பாட்டியும் உடனே பை எடுத்துக்கொண்டு கூன் விழுந்த உடலுடன் மலைபாதயில் தடுமாறி வெளியே செல்கிறாள்

சிறுவன் சாங்வூவுக்கு பரம குஷி.. எப்படியும் பாட்டி கெண்டகி சிக்கன் வாங்கிவருவாளென

ஆனால் பாட்டியோ ஒரு உயிருள்ள கோழியை பேரனுக்காக மழையில் நனைந்தப்டி ஆசையுடன் வாங்கி அவன் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சமைத்து அவனை எழுப்புகிறாள்

கெண்டகி சிக்கனை எதிர்பார்த்திருந்த சாங்வூவுக்கு இது பெரும் அதிர்ச்சி

பாட்டிய்யை திட்டி சாப்பிடமறுக்கிறான். பாடி நெஞ்சில்கைவைத்துமுன்றுமுறை சுற்ருகிறாள் .அப்படிசெய்தால் என்னை மன்னித்துவிடு என்பது அர்த்தம் .ஆனாலும் மனம் ஆறாத சாங்வூ பிறகு அப்படியேதூங்கிவிடுகிறான். பின் இரவு எழுந்து வேறுவழியில்லமல் ரகசியமாய் பாட்டிசமைத்த சிக்கனை சாப்பிடுகிறான். ஆனாலும் அவனுக்கு பாட்டி மீதான கோபம் தீரவில்லை.
.

இதனிடையே சாங்வூ அவ்ன் வயதில் கிரமத்து சிறுமியை சந்திகிறான் .முதல் சந்திப்பே முற்றும் கோணல் அவள் விளையாடிக்கொண்டிருந்த வீட்டை இவன் கால் வைத்து தெரியாமல் கலைத்துவிட்டதன் காரணமாக அவள் அவனோடு கோபிக்கிறாள். அவ்ளோடு பழகும் இன்னொரு கிராமத்து சிறுவனை வெறுக்கிறான்.அந்த சிறுவன் ஒருநாள் பள்ளத்தில் நடந்துவரும்போது மாடுஅவனை துரத்துவதாக பொய்ய்யாக கூச்சலிட அவன் ஓடி போய்தடுமாறி கீழே விழுந்து இவன் கைக்கொட்டி சிரிக்கிறான்.அந்த கிராமத்துசிறுவன் ஆற்றாமையுடன் எழுந்து நடந்துசெல்கிறான்.

மறு நாள் பாட்டி தன் தோட்டத்தில் விளைந்த தர்பூசணி பழங்களை எடுத்துக்கொண்டு சாங்வூடன் சந்தைக்கு பேருந்தில் செல்கிறாள்.பழம் விற்ற பணத்தில் சாங்வூவுக்கு நூடுல்ஸும் ஒரு ஜோடி ஷூக்களும் வாங்கிதருகிறாள்
பேருந்தில் ஏறும் போது அங்கு அந்த சிறுமியையும் அவன் தோழன் ஒருவனையும் சந்திக்கிறான். அவர்கள் முன் பாட்டி ஜன்னல்வழியாக கொடுக்கும் அழுக்கு மூட்டையை வாங்க மறுத்து விடுகிறான் .பேருந்தும் புறப்பட்டுவிடுகிறது வீட்டிற்குவந்தவன் வெகுநேரமாகியும் பாட்டிவராததால் பேருந்து நிலையத்தில் அமர்ந்தபடி அவளுக்காக காத்திருக்கிறன் .கடைசி பேருந்தும் வந்து போகிறது பாட்டி வரவில்லை மனம் கலங்குக்கிறான் ,
பேரனுக்கு எல்லா காசையும் செலவு செய்துவிட்டமையால் பேருந்துக்கு காசில்லாமல் பாட்டி நடந்தேவருகிறாள் .தொலைவில்பாட்டியை சந்தித்ததும் ஓடிசென்று முன்பு வாங்க மறுத்த மூட்டையை வாங்கிக்கொள்கிறான்.அவ்ன் முன்னே நடக்க பாட்டிஒமெதுவாக பின்னேவருகிறாள்

ஒருநாள் அந்த தோழியாகவே வந்து அவனை தன் வீட்டிற்கு விளையாட அழைக்க . சாங்வூவுக்கு தூக்கமே வரவில்லை. மறுநாளேவிளையாட்டு பொருட்களை எடுத்துவைத்தவன் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கிறான்.
முடிவெட்டினால் நன்றாயிருக்கும் என பாட்டியிடம் சொல்ல பின் அவளே அவனுக்கு முடிவெட்டுகிறாள்.ஆனால் அவள் முடியை ஒட்ட கத்தரித்துவிட கண்ணாடியை பார்த்த சாங்வூவுக்கு அதிர்ச்சி. பாட்டியை கடுமையாக திட்டிவிடுகிறான் .பாட்டி வழ்க்கம் போல நெஞ்சில்கைவைத்து சுற்ற
கோபித்துக்கொண்டு பேசாமல் படுத்துவிடுகிறான்.பாட்டி அவனிடம் ஒரு பொதியை வண்ணகாகிதத்தில் சுற்றி பாக்கெட்டில்வைக்கிறாள்

மறுநாள் தலைமேல் ஒருதுண்டை கட்டி சமாளித்த்படி தோழியின் வீட்டுக்கு விளையாடசெல்கிறான். மகிழ்ச்சியுடன் அவன் வீடு திரும்பும் வழ்யில் எதிர்பாராவிதமாக மாடு ஒன்று சாங்வூவை துரத்த பயந்து ஓடிகீழேவிழுகிறன் முன்பு அவனால் கேலிசெய்யப்பட்ட கிராமத்து சிறுவனே இப்போது மாட்டைவிரட்டி சாங்வூவை காப்பாற்றுகிறான். இந்நிகழ்ச்சி சாங்வூவுக்கு தன் குற்ற வுணர்ச்சியை அதிகப்படுத்துகிறது. கீழே விழுந்த சாங்வூ எழுந்திருக்கும் போதுதான் பாக்கெட்டிலிருந்து பாட்டி கொடுத்த பொதி ஒன்று விழுகிறது.அதில் அவனது வீடியோகெம்ஸ் கருவியும் பட்டரிக்காக சில ரூபாய் நோட்டுக்களும் அவ்ள் முடிந்து வைத்திருப்பதை பார்க்கிறான். இத்தனை நல்ல பாட்டியை நம் வேத்னைபடுத்திவிட்டோமே என்ற குற்ற வுணர்ச்சி அவனுள் பொங்கி பெருகுகிறது. இதேநேரத்தில் பட்டி அவனை தேடிவர கண்ணீரவனை மீறி பொங்கிவருகிறது.ஆனால் பாட்டியோஅவன் அடிபட்ட காரணமாக அழுகிறான் என நினைத்து ஆறுதல்படுத்துகிறாள்


இப்போது பாட்டி அவனிடம் ஒருகடிதத்தை காண்பிக்கிறாள் அவனை அழைத்துசெல்ல அவன் அம்மா வரப்போவதாக அனுப்பிய கடிதம் .
மறுநாள் காலை அவன்புறப்படவேண்டும் .அன்று இரவு
பாட்டியிடம் சாங்வூ இனி உடல் நிலைசரியில்லாவிட்டால் த்னக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கும் படிகூறி அதற்காக ஐயாம் சிக், ஐ மிஸ் யூ எனும் இரண்டுவார்த்தைகளை எழுதக்கற்றுதருகிறான் .உனக்குத்தான் போன் பேசமுடியாதே அத்னால்தான் எழுதகற்கும்படி சொல்கிறேன் எனும் சாங்வூ அவள் சிரமப்படுவதை பார்த்து பாட்டி நீஎதையும் எழுதாவிட்டால் கூட பரவாயில்லை வெறும் ஒரு வெள்ளை தாளை எனக்கு அனுப்பிவைத்தால்கூட போதும் உனக்கு உடம்பு சரியில்லை என்பதை தெரிந்து ஓடோடி வந்துவிடுவேன் எனக்கூறிவிட்டு அந்த எழ்ழுவயது சிறுவன் 78வயதுபாட்டியியை பிரியப்போகும் வேத்னை தாளாமல் அழத்துவங்க உடன் பாட்டியின் உடலும் சத்தமில்லாமல் குலுங்குகிறது. அன்று இரவே பாட்டியை திட்டி சுவற்றில் வரைந்த கார்டூன்களை அவனே அழிக்கிறான்.


.மறுநாள் அவன் அம்மாவருகிறாள் பேருந்து நிறுதத்தில் சாங்வூ அமைதியாக
பையுடன் அவன் அம்மாவுடன் இருக்கிறான். உடன் கூன்வளைந்த பாட்டியும்
பேருந்து வருகிறது .அம்மா ஏறுகிறாள் தொடர்ந்து ஏறும்சாங்வூ பின் இறங்வந்து பாட்டிக்கு தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொம்மைதாங்கிய
அட்டையை பரிசாகதருகிறான் பின் அவன் ஏறிக்கொள்ள பேருந்து புறப்படுகிறது. பெருந்தின் பின்பக்க கண்னாடிவழியாக பாட்டியை பார்க்கும் சாங்வூ அழுதுகொண்டே தன் நெஞ்சில்கைவைத்து சுற்றுகிறான்
பாட்டி திரும்பவும் அந்த அடர்ந்த காட்டுபகுதிக்குள் தனியாக கைத்தடியுடன் நடந்து செல்கிறாள்.

இத்திரைப்படம் உலகின் அனைத்து பாட்டிமார்களுக்கும் சமர்ப்பணம் எனும் டைட்டில்கார்டுடன் முடிகிறது


2002ல் வெளியான இந்த தென்கொரிய நாட்டு படத்தை இயக்கியவர் லீ ஜியாங் ஹ்யாங் . இவர் ஒரு பெண் இயக்குனர் என்பதுதான் இங்கு குறிப்பிடத்த்க்கது.



இயக்குனரின் புகைப்படத்திற்கு
Lee Jeong-hyang என பதிவிடவும் கூகுல் தேடலில்

15 comments:

Raju said...

ச்சும்மா அடிச்சு ஆடுறீங்க அஜயன் ஸார். எழுத்தின் நெடுக விரியும் விவரணைகள் அருமை.வாய்ப்பு கிடைத்தால் படம் பார்க்க வேண்டும்.

மயூ மனோ (Mayoo Mano) said...

சிறு வயதில் என்னை விட்டுப் பிரிந்து பொருள் தேடி சென்ற தந்தையைப் பார்க்க வருவதற்காக ஒரு தெய்வத்தாயை விட்டு விட்டு வந்து, அவளைப் பார்க்க வருவேன் என்ற சத்தியமும் காற்றில் போக, என்னிடம் சொல்லாமலே எனைப் பிரிந்த என் ஆச்சி கண் முன் நின்றாள். கடைசியில் பணித்தது என் கண்,அழுதது மனம்.

Ravikumar Tirupur said...

சார் இந்த படத்தைப்பற்றி நிறைய விமர்சனம் படித்துவிட்டேன் ஆனாலும் உங்க விமர்சனம் மிகவும் ஈர்த்துவிட்டது! இந்த படத்தில் ஒரு காட்சியில் அந்த சிறுவன் வேகவைத்த கோழியை அடம் பிடித்து சாப்பிடும் காட்சியில் இயக்குநர் அந்த ஷாட்,யை நிழலில் காண்பிப்பார் அதற்கு ஏனென்றால் அந்த சிறுவன் தான் சாப்பிடுவதை யாருக்கும் தெரியாமல் சாப்பிடுகிறான் என்றாம். அருமையான படம்!
தொடர்ந்து இதுபோன்ற படங்களை அறிமுகப்படுத்துங்கள் சார்.

ajayan bala baskaran said...

நன்றி ராஜு ,
உங்களைப்பர்றிய விவரம் தெரிய ஆவல் ..பேஸ் புக் அல்லது ஆர்குட்டில் இருக்கிறீர்களா

ajayan bala baskaran said...

நன்றி நதியானவள் அவர்களே
படம் பார்த்தபோது எனக்குள்ளும் அழுகை பனிக்கட்டியாக திரண்டு கண்ணிலேயே தேங்கி நின்றது

ajayan bala baskaran said...

நன்றி ரவி நல்ல பார்வை ரசனை

ajayan bala baskaran said...

நன்றி ரவி நல்ல பார்வை ரசனை

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உங்கள் ப்ளாக் பார்த்ததில் சந்தோசம். நான் பல ஆண்டுகளாக விகடன் வாசகி. தற்போதைய விகடனின் வித்தியாச கோணத்தின் ஒரு கதிர் நீங்கள். இப்படிப்பட்ட சிலரால் உலகை பறவைப் பார்வையில் இருந்து, பரவிய பார்வையாக பார்க்க முடிகிறது. வாழ்த்துக்கள். நேரம் கிடைத்தால் என் ப்ளாக் பக்கம் வருகை தாருங்கள்.

rvelkannan said...

Im Present Ajayan, ஆனால் நான் முன்பே போட்ட பின்னூட்டம் காணவில்லை.
படம் பார்த்த போது ஏற்பட்ட மனநிலையை உங்களின் பதிவை படித்த பிறகும் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி அஜயன், அவ்வப்போது இப்படியான படங்களை அறிமுகம் படுத்துங்கள்.

Raju said...

\\நன்றி ராஜு ,
உங்களைப்பர்றிய விவரம் தெரிய ஆவல் ..பேஸ் புக் அல்லது ஆர்குட்டில் இருக்கிறீர்களா\\

ஆர்க்குட்,ஃபேஸ்புக் போன்றவற்றில் அவ்வளவு சிரத்தையாக செயல்படுவதில்லை ஸார்.
என் மெயில் ஐடி: tucklasssu@gmail.com

SS JAYAMOHAN said...

உணர்வுப் பூர்வமான ஒரு கதையை
உணர்ந்து சொல்லி உள்ளீர்கள்.

படிக்கும் போது நெஞ்சம் நனைகிறது.

நான் சிறுவனாக இருந்த போது
எனது பாட்டி, வெற்றிலைப் பாக்கு
வாயோடு எனக்கு முத்தம் கொடுத்த
நினைவு வருகிறது.

அன்புடன்
எஸ். எஸ். ஜெயமோகன்

SS JAYAMOHAN said...

உணர்வுப் பூர்வமான ஒரு கதையை
உணர்ந்து சொல்லி உள்ளீர்கள்.

படிக்கும் போது நெஞ்சம் நனைகிறது.

நான் சிறுவனாக இருந்த போது
எனது பாட்டி, வெற்றிலைப் பாக்கு
வாயோடு எனக்கு முத்தம் கொடுத்த
நினைவு வருகிறது.

அன்புடன்
எஸ். எஸ். ஜெயமோகன்

ajayan bala baskaran said...

நாய்குட்டி மனசுக்காராரே கொஞ்சநாளாக வெளியூர் பயணம் காரணமாக ப்ளக்கையும் உங்கள் பின்னூடத்தையும் கவனிக்க தவறிவிட்டேன் .

நான் ஆர்குட் பேஸ்புக் இரண்டிலும் இருக்கிறேன் வெறும் ajayanbala
என போட்டல் போதும் ஓடிவந்துவிடுவேன் இப்பொதைக்கு உலகில் அந்த பேரில் நான் ஒருத்தனே!

ajayan bala baskaran said...

வேல் கண்ணண் ,மிக்க நன்றி முந்தைய இடுகையில் எழுத்துப்பிழை அதிகம் காரணமாக மீண்டும் புதியதாக இடுகையிட்டேன் .அதில் உங்களின் பின்னூட்டமும் காணாமல்போய்விட்டது அதுதான் காரணம். வருந்துகிறேன்.

ajayan bala baskaran said...

நன்றி ஜெயமோகன்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...