April 9, 2009

காலம் வியக்கும் கலை:சிட்டிசன் கேன்



சிட்டிசன் கேன்.


வாழ்க்கையின் வியத்தகு விஷ்யமே இயற்கையின் ரகசியம்தான்.கடைசிவரை எந்தமனிதனும் ¢இயற்கையின் ரகசியத்தை முழுமையாக அ அறிந்து கொள்ள முடியாமலே இறந்தும் போகின்றான்.மனிதனின் இந்த தோல்விதான் இயற்கைக்கு நிகரான் அமசங்களை கொண்ட கலையயை உருவாக்குவதில் அவனை தீவிரமாக ஆழ்த்துகிறது.இப்படியான் அவனது படைப்பு மனநிலைக்கு இத்ர கலைகளைக்காட்டிலும் திரைப்படத்துறை அதிக சாத்தியப்படுகளையும் வெளியையும் கொண்டிருப்பதால் இறுதியாக எல்லா கலைஞர்களும் தேர்ந்தெடுக்கும் துறை சினிமாவாக இருக்கிறது.ஆனால் அத்தகைய சினிமாவின் வரலாற்றில் பார்வையாளனனின் அனுபவத்தை கடந்து முழுகலைவீச்சுடன் அதன் பல்வேறுவித்மான கலை செயல்பாட்டுகளுக்கு சாத்தியமளித்து உருவான திரைப்படங்களுள் மிகச்சிறந்த படம் என்று ஒன்றை குறிப்பிடுவோமானால் அப்படம் 1941ல் இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில் வெளியான சிட்டிசன் கேன் ¢¢
இன்றும் உலகின்¢ தலைசிறந்தபடம் எது என்று விமர்சகர்களிடம் கேட்டால் பத்துக்கு எட்டு பேர் குறிப்பிடும் திரைப்ப்டம் 'சிட்டிசன் கேன'¢ ஆக இருக்கிறது.திரைப்பட கல்லூரி மாணவர்கள்,விமர்சகர்கள்,அறிஞர்கள் ஆகியோரை இன்றுவரை அதிக மயக்கத்திலாழ்த்தும் சொல் 'சிட்டிசன் கேன'¢.அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூ¢ட் சமீபத்தில் வெளி¢யிட்ட தலைசிறந்த நூறுபடங்களின் பட்டியலில் முதலாவது படமாக தேர்ந்தெடுத்திருப்பதும் சிட்டிசன் கேனைத்தான்.1941ல் வெளியான படம் கிட்டதட்ட 70 வருடங்களை கடந்த பிறகும் இன்றும் அத்ற்கு பிறகு வந்த அனைத்து படங்களையும்¢ பின்னுக்குதள்ளி காலத்தின் பரிசுகளாக கிடைத்திருக்கும் தொழில் நுடபங்களையும் உதாசீனப்படுத்தியிருக்கிறதென்றால் அப்படி என்ன சிறப்பு அந்த படத்தில் இருக்க .முடியும்.
சாதாரண கதை
கதை என்னமோ சாதாரணமானதுதான் அமெரிக்காவில் கொடிகட்டிபறந்த பத்திரிக்கையுலக ஜம்பவான் சார்லஸ் ஃபோஸ்டர் கேன் என்பவர் இறக்கும் தருவாயில் 'ரோஸ்பட'¢ ஒற்றை சொல்லை பிரிந்த உதடுகளின் வழியே உதிர்க்கிறார். அந்த சொல்லில் ஏதோ ஒரு ரகசியம்இருப்பதாக உணரும ஒரு ¢பத்திரிக்கையாளன் ¢ அதனைதேடி பலரிடம் அலைகிறான்.அவர்கள் மூலமாக ¢சார்லஸ் போஸ்டர் கேனின் வாழ்க்கை பல ப்ளேஷ்பாக்குகளின் மூலம் காண்பிக்கபடுகிறது. இறுதிவரை ரோஸ்பட் என்ற அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அந்த நிருபரால் முழுவதுமாக அறிந்துகொள்ளப்படமுடியாத நிலையில கேமரா கேனின் வீட்டுக்குள் பழைய பொருட்கள் எரிக்கப்படும் இடத்தை நோக்கி கேமரா நுழைகிறது ¢அங்கே எரியும் மரப்பொருட்களின் நடுவில் சுவாலைகளுக்கு நடுவே ஒரு மரப்பொருளின் மேல் நாம் காணும் எழுத்துக்கள் ரோஸ்பட.¢. படம் அத்தோடு ஒரு புதிரை நம் மனதில் உண்டாக்கிவிட்டு நிறைவு பெறுகிறது.வெறும்னே சில வரிகளுக்குள் இந்தபடத்தின் கதையை இப்படி எழுதிவிட முடிந்தாலும்¢ இப்படத்தின் திரைக்கதையை குறித்தும் திரைப்பட உருவாக்கமும் குறித்தும் எழுதப்போனால் அது ஆயிரம் பக்கங்களையும் தாண்டி எழுத வேண்டியதிருக்கும்.
அசாதாரணமான திரைக்கதை
¢ ஒரு த்டுப்புவேலியில்' யாரும் இங்கே அத்துமீறக்கூடாது 'என்ற உத்த்ரவு. அதனை கேம்ராவின்மூலம் மீறியபடி படத்தின் முதல் ஷாட் துவங்கி ஒருபங்களாவினுள் நுழைகிறது அங்கே முன்பே குறிப்பிட்ட படி நாயகன் கேன் மரணத்தருவாயில் படுத்திருக்கும் காட்சி. ரோஸ்பட் என்று நாயகனின் உதடு முணுமுணுப்பது க்ளோசப்பில்.தொடர்ந்து கிட்டத்ட்ட 20து நிமிடத்திற்கு விறுவிறுப்பான பல ஷாட்டுகளின்தொகுப்புடன் ஒரு செய்திப்ப்டம் ..அதில் சிறுவயதில் தந்தையை பிரிந்து தாயுடன் வறுமைக்கு ஆளாகும் சார்லஸ்கேன் தன் மேல் காலம் திணித்த தடைகளையும் இன்னல்களையும் எப்படி அடித்து நொறுக்கி பத்திரிக்கை உல்க ராட்சசனாகவும் கோடீஸ்வரனாகவும் வளர்ந்தான் என்பதை அது விவரிக்கிறது.படத்தை பார்க்கும் தயரிப்பாளர் படத்தில் ஏதோ ஒரு முக்கிய குறை இருப்பதாகவும் சார்லஸ் கேன் குறித்து மேலும் பல தகவல்களை திரட்டும்படியும் கூற நிருபர் ஒருவன் அப்பணியில் ஈடுபடத்துவங்குகிறான்.முத்லாவதாக அவ்ன் சந்திப்பது சார்லஸ் கேனினுடைய இரண்டாவது மனைவி சூசனை.முழுவதும்குடிகாரியாக மாறிப்போன சூசன் முதலில் அவனை விரட்டியடிக்கிறாள்.அதன்பிறகு இரண்டவதாக சார்லஸின் கார்டியன் ஒருவரை அந்நிருபர் சந்திக்க அவர்மூலம் சிறுவயதில் சார்லஸ் த்ன் தாயிடகிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து செல்லப்படும்காட்சி காண்பிக்கபடுகிறது. அத்னை தொடர்ந்து கேன் அதிர்ஷ்டத்தின்மூலம் பணக்காரனாகியதையும்,தொடர்ந்து பத்திரிக்கையுலகில் நுழைந்து போட்டி பத்திரிக்கையின் நிருபர்களை தந்திரமாக தன் வசம் இழுத்து அழிக்க முடியாத அசுரனாக தொழிலில் பெருவளர்ச்சியடைந்ததையும் முதல் திருமணத்தை செய்ததையும் அவரது பத்திரிக்கை பணியாளர்¢ செய்தியாளனிடம் சொலவதன் மூலாமாக் நாம் அறிந்துகொள்கிறோம்
அதன் பின் இரண்டவது மனைவியான சூசனை ஒரு மழைநாளில் சாலையோரம் சந்திக்கிறார் மிஸ்டர் கேன்.அன்று இரவே இருவரும் காதல்வசப்பட்டு ரகசிய திருமணம் செய்துகொள்ள கேனின் அழிவுப்படலம் ஆரம்பமாகிறது.அவரது மிதமிஞ்சிய அதிகார வெறி நியுயார்க நகர கவர்னர் தேர்தலுக்கு அவரை போட்டியிடவைத்து த்லைகுப்புற விழவைக்கிறது.ஆனாலும் அவரால் த்ன்னுடைய ஆணவத்திலிருந்து முழுவதுமாக தன்னை இறகிக்கொள்ள முடியவில்லை. தகுதியான் குரல்வளமில்லாத தன் புது மனைவியை பாடகியாக்க தானே ஒரு ஓபரா அரங்கினை கட்டி பாட ¢வைக்கிறார்.மறுநாள் த்னது பத்திரிக்கையில் அத்னை பாராட்டி எழுதாத ஊழியனை வேலையைவிட்டே விரட்டுகிறார்.அதேசமயம் இதரபத்திரிக்கைகளின் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி சூசன் பெரும் குடிகாரியாகிறாள்.இந்த தொடர் தோல்விகளால் சுருங்கி போகும் தம்பதியர் இருவரும் ஒரு பிரம்மாண்ட மாளிகைகட்டி அதில் யாருமற்ற தனிமையில் வசித்துவருகின்றனர்.ஒரு கட்டத்தில தான் மிகவும் நேசித்த மனைவியும் பிரிந்துபோய்விட தனிமையில் பரிதாபமாக வாழும் கேன் கடைசியில் அனாதரவாக ரோஸ்பட் எனும் ஒற்றை சொல்லை உதிர்த்துவிட்டு இறந்து போகிறார்.
மேற்சொன்ன சம்பவங்கள் அவரது ஊழியர்கள் மற்றும் இரண்டாவது மனைவி செய்தியாளனிடம் சொல்வதன் மூலமாக நமக்கு காட்சிகளாக விவரிக்கபடுகிறது. என்றாலும் ரோஸ்பட் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை கடைசிவரை அந்த செய்தியாளனால் பெறமுடியவில்லை..இறுதியி.ல் நெருப்புகூட்டில்வைத்து எரிக்கப்படும் மரப்பொருள் ஒன்றில் ரோஸ் பட் என எழுதப்பட்டிருக்கிறது.அப்பொருள் அவன் சிறுவயதில் அவனதுதாயாரால் பரிசளிக்கப்பட்ட ஒரு விளயாட்டு பொருள்..ஒட்டு மொத்தமாக ஒருவன் த்ன் வாழ்க்கையில் எத்னை மகிழ்ச்சியான தாக கருதுகிறானோ அதுமட்டுமேதான் கடைசிவரை நினைவில் எஞ்சி நிற்கிறது அவ்வகையில் பார்க்கும் போது சார்லஸ் கேனின் வாழ்க்கையில் எஞ்சியிருந்தது எல்லாம் அந்த சிறுவயது நாட்கள் மட்டுமே என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதாக விமர்சகர்கள் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள்.உண்மையில அந்த கடைசி காட்சி மூலம் என்ன சொல்லவருகிறார் என்பதை ¢பார்வையாளனது அனுமானத்துக்கே விட்டுவிடுகிறார்.இப்படத்தை குறைந்தது இரண்டாவது முறையாக பார்க்கிறபோதுதான் நான் மேற்சொன்ன முழுகதையுமே ஒரு பார்வையாளனுக்கு புரியவ்ரும்.
சர்ச்சை
அதே போல ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் நாம் வியப்புறும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வ்டிவம் பெற்றிருந்தது இப்படத்தின் சிறப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம்.இந்த திரைக்கதை வடிவம் தான் பிற்பாடு வந்த அகிரகுரோசாவின் ரோஷாமான் உட்ப்ட பல படங்களுக்கு முன்னோடியாக இருந்தது. இத்த்னை சிறப்பு வாய்ந்த இப்படத்தின் திரைக்கதை யார் எழுதியது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்றுவரை இருந்துவருகின்றன.ஹாலிவுட்டின் பிரபல த்யாரிப்பாளர் கம் இயக்குனரான ஜோசப் மாணிக்வெச் சின் சகோதர் ஹெர்மன் மாணிக்வெச்தான் படத்தின் முழுதிரைக்கதை யையும் எழுதியது என்றும் இயக்குனரான ஆர்சன் வெல்ல்ஸ் அதில் துளிகூட பங்களிக்கவில்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு த்ரப்பில் படம் முழுகக முழுக்க ஆர்சன் வெல்ஸின் வாழ்க்கை சம்பவங்களை அப்படியே பிரதிபலிக்கிறது.இப்படத்தில்வரும் கதாநாயகனை போலத்தான் சிறுவயதில் இவரும் தன்அம்மாவை இழந்து பரிதவித்தார்.பதினைந்தாவது வயதில் அதே போல் அப்பாவையும் இழந்தார்.கதாபாத்திரம் குணாதிசயம் ஆகியவற்றில் கேன் ஆர்சன் வெல்ஸையே பிரதிபலிக்கிறார் ஆகவே இப்படத்தின் திரைக்கதை அவருக்கே மூழ்வதும் உரித்தானது. வெறுமனே ரெண்டு வசனம் எழுதிக்கேடக மாணிக்வெச்சிடம் போக வந்ததால் ஏற்பட்ட ¢வினை இது,என இன்னொருதரப்பும் கூறுகிறது.இது குறித்து ஹாலிவுட்டில் 1996ல் ஒரு டாக்குமெண்டரிபடமே வந்திருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
என்னதான் படத்தின் திரைக்கதையில் ஆர்சன் வெல்ஸ் மேல் இத்த்னை சந்தேகம் பலருக்கும் எழுந்தாலும் ஒரு விஷயம் அவர்களது அத்தனை பேருடைய வாயயையும் அடைத்து விடும் .அது படத்தில் பயனபடுத்தப்படிருக்கும் தொழில்நுடபம். கதையயை மிகவும் நேசித்த ஒரு இயக்குனருக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் சாத்தியபடும் என்ற காரணத்தால் இந்த சர்ச்சையில் பெரும்பாலோனோரின் ஓட்டு இயக்குனர் ஆர்சன் வெல்ஸுக்கு சாதகமாகவே விழுகிறது.அந்த அளவிற்கு இப்படத்தின் திரைக்கதையை போலவே தொழில்நுட்ப கூறுகளும் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் ப்யனபடுத்தபட்டிருக்கின்றன.
தொழில் நுட்பம்¢
திரைப்படத்தை முழுமையாக கற்கும் மாணவன் ஒருவன் இப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மாதத்துக்கு ஆராய்ச்சி பண் ணினால் போதும் நிச்சயம் அவன் திரைப்ப்டத்துறையில் ¢மேதையாகிவிடமுடியும்¢ அந்த அளவிற்கு விவரித்து எழுதுவதற்கு படத்தின் ஒவ்வொருஷாட்டிலும் பல அமசங்கள் கொட்டிகிடக்கின்றன.இப்படத்தின் மிககுறிப்பிடத்தக்க அம்சம் ஒளிப்பதிவுக்காக பயன்படுத்தப்படிருக்கும் டீப் ஃபோகஸ் லென்ஸ்கள். படத்தளத்தில் கேம்ரா குவிமையம் கொள்ளும் பாத்திரம் அல்லது பொருள் ஆகியவ்ற்றின் முன்னும் பின்னுமாக உள்ள சகலமும் துல்லியமாக பதிவாக்கம் பெற்று தந்த விதத்தில் இந்த டீப் ஃபோகஸ் லென்ஸுகளின் பங்களிப்பு அளப்பரியது.மட்டுமல்லாமல்படத்தின்கேமரா கோணங்கள் மற்றும் நகர்வு ஆகியவை தஞ்சை பெரிய கோயில் போன்ற மகத்தான் கலைபடைப்புகளின் போது ஒருகலைஞன் படும் மெத்தனங்களுக்கு நிகரான கடப்பாடும்,உழைப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தவை.அதிலும் குறிப்பாக கேன் தானும் மனைவியும் தனித்துவாழும் பங்களா உள்ளறைகாட்சிகளில் ஒளி கட்டமைவும் , காமராநகர்வும் கோணங்களும் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடுகின்றன. இப்படத்தின் அதி முக்கியமான இன்னொரு கதாநாயகன் எனும் அளவிற்கு ஒளிப்பதிவாளர் க்ரேக் டொனால்டின் பங்கு வியக்கும் வண்ணத்தில் அமைந்திருந்தது.படத்தின் இறுதிக்காட்சியில் கேன் பங்களாவில் அவர் சேர்த்துவைத்த சொத்துக்கள் அனைத்தும் வெற்று பொம்மைகளாக நின்று கொண்டிருக்க பத்திரிக்கையாளர்கள் வெளியேறுகிற காட்சியின் போது மெல்ல அவர்களிடமிருந்து விலகி பின் நகர்ந்து வரும் காமரா அப்படியே கூரை உச்சிக்கு சென்று அங்கிருந்து பார்ப்பது போன்ற பரந்த காட்சி ஆகச்சிறந்த இலக்கியபடைப்புகளுக்கு ஈடானது.ஒளிப்பதிவை போலவே படத்தில் படத்தொகுப்பு மற்றும அரங்க நிர்மானம்¢ஆகிய இரண்டும் இப்படத்திற்கு இரண்டு தேர்ந்த கவசங்கள்.¢ படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் செய்தி படத்தில் காண்ப்படும் உயிர்துடிப்பு மிக்க எடிட்டிங் மற்றும் ஒன்று நீங்கிய கையோடுமற்றொன்று வரும் வைப, போன்ற பல உத்தி கள் இன்றைக்கு உருவாக்கப்படும் நவீன படங்களுக்கும் சவால்விடும் கலைநயமும் தொழில்நேர்த்தியும் கொண்டிருப்ப்வை.படத்தின் மூழு திரைக்கதையுமே நினைவலைகளின்மூலமாக தொகுப்பாக சொல்லப்படுகிற காரணத்தினால் இயல்பாகவே படத்தொகுப்பின் மேதமையை ¢படம் முழுவதும் வெளிப்பட்டுத்தபட்டுள்ளது.¢தனி பங்களாவில் நிகழும் சம்பவங்களில் ஒரு காட்சியில்¢ கேன் தன் மனைவியை கணவரும் சந்தர்ப்பத்தில் விஸ்தீரமான் ஹால் ஒன்று காண்பிக்கப்படுகிறது .அத்ன் மறுகோடியில் தரையில் அமர்ந்திருக்கும் மனைவியை நோக்கி கேன் இறங்கி வருவார்.அரங்கில் அப்போது பலத்ரப்பட்ட சிலைகள் காண்ப்படும் அவற்றில் தற்போது நம் இந்திய அரசின் சின்னமாக இருக்கும் கவிழ்ந்த தாமரை மீதமர்¢ந்திருக்கும் மூன்று சிங்கங்கள் கொண்ட அந்த சின்னம் ஒரு பிரமாண்ட சிலையாக நின்று கொண்டிருக்கும். இந்த சிலையை இந்திய அரசாங்கத்தின் சின்னமாக அங்கீகாரம் செய்த இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்படட்தே 1946ல் தான். அத்ற்கு முன்பே 1941ல் இச்சிலை வடிவம் இப்படத்தில் பிரம்மாண்டமாக பயன்படுத்தப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.பணத்தை கடந்து வெற்று கலைபொருள்களை உலகமெங்குமிருந்தும் சேகரித்துவைக்க்க துடிக்கும் ஒரு பண முத்லையின் தடித்த்னத்தை காண்பிக்க இயக்குனர் எவ்வளவு தூரம் மெனக்கெட்டிருக்கிறார் என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.
விருது வெகுமதி
இத்த்னை சிறப்பு பெற்ற இத்திரைப்படம் அன்று வெளியான காலத்தில் சுமாரன் வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது.ஆஸ்கார் விருதுக்கு பல துறைகளில் பரிந்துரைக்கப்படிருந்தும் திரைக்கதைகான ஒரே ஒரு விருது மட்டுமே இப்படத்திற்கு வழங்கப்பட்டது.அத்ன் பிறகு ஏறக்குறைய எவராலும் பொருட்படுத்தப்படாமல் இருந்துவந்த சூழலில் 20 வருடங்கள் கழித்து பிரான்சிலிருந்து ஒரு அதிசயம் நிகழ்ந்தது.நியூ வேவ் என அங்கு எழுந்த புதிய அலையின் கர்த்தாவான விமர்சகர் ஆந்த்ரே பஸின், மற்றும் இயக்குனர்கள் ட் ரூபோட்,கொடார்ட்,போன்ற்வர்கள் கதையாசிரியர் திரைகதையாசிரியர் ஆகியோரை கடந்து ஒரு படம் முழுக்க முழுக்க இயக்குனருக்கு மட்டுமே படைப்புரிமை பெற்றது என்ற கொள்கையை முதன்முறையாக வலியுறுத்தினர்.அத்ன்படி அவர்கள் இந்தபடத்தை பார்த்து விட்டு இதுதான் அசல் கலை சினிமா என தலையில்தூக்கிவைத்து கொண்டாட அப்போது துவங்கியது சிட்டிசன் கேனின் இரண்டாவது இன்னிங்க்ஸ்.
ஆர்ஸன் வெல்ஸ்
படத்தின் இயக்குனரான ஆர்சன் வெல்ஸுக்கு சிட்டிஸன் கேன் ஒரு ¢ முதல்படம் என்று சொன்னால் யாரால் நம்ப முடியும்? மட்டுமல்லாமல் அவரே அப்படத்தில் நாயகன் சார்லஸ் கேன் ¢ ஆகவும் நடித்து ஆகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவர்மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அத்த்னை பேரும் புதுமுகங்கள் என்பதுதான் இப்படத்தின் முக்கியசேதி. 1915ல் பிறந்த ஆர்சன்வெல்ஸ் சிறுவயது முதலே கலையின்மேல் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார் என்பதைவிட வெறிபிடித்தலைபவராக இருந்தார் என்பதுதான் முற்று முழுக்க சரி..தன் பதினைந்தாவது வயதிலிருந்தே மேடை நடகங்களில் நடிக்கதுவங்கிய ஆர்சன் வெல்ஸ் படிப்படியாக வளர்ந்து அப்போது பிரபலமாகி வந்த வானொலிநிகழ்ச்சிகளில் தயாரிப்பாளராக இருந்து புகழ்பெற்றார்.அந்த புகழ் அவரை ஆர்.கெ.ஒ ஸ்டுடியோவில் இயக்குனராக அழைக்கும் அளவிற்கு வேலை செய்தது. தன் 26ம் வயதில் சிட்டிசன் கேன் எனும் அசாத்தியமான படத்தை இயக்கி நடித்து வாழ்வில் அழியா புகழை பெற்றார். இப்படத்தில் வரும் மையகதாபாத்திரத்தின் நல்ல பகுதிகளுக்கு இவருடைய வாழ்க்கை ஒரு காரணமென்றாலும் கதாபாத்திரத்தின் மோசமான குணங்களை படத்தின் த்யாரிப்பாளரான ஹாரவெஸ்டையே அதிகம் ஒத்திருப்பதாக அனைவரும் கூறினர்.இரண்டாவது படமான 'மாக்னிபிஷியண்ட் ஆம்பர்சன் '¢அவரது திறமைக்கு கட்டியம்கூறினாலும் ஆர்சனுக்கு அடுதடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.அத்ன்பிறகு ஐரோப்ப ஜப்பான் என அலைந்த வெல்ஸ் சிலபடங்களை இயக்கி நடித்திருந்தாலும் அதில் எந்த படமும் சிட்டிசன் கேன் அடிந்த கலையின் உச்சத்தில் ஒரு துளிய்யை கூட எட்ட முடியவில்லை. அக்டோபர் 11 1985ல் அமெரிக்க நாளிதழ்களில் நடிகர் யூல் பிரின்னர் ¢இறந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியான போது உடன் அருகில் மற்¢றொரு இறப்பு செய்தியும் வெளியானது தன் எழுபதாவது வயதில் சிட்டிசன் கேன் இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் மரணமடைந்தார் என்பதுதான் அந்த செய்தி.

3 comments:

Venkatesh Kumaravel said...

மிகச்சிறந்த கட்டுரை. சிட்டிசன் கேன் [1941], பல்ப் ஃபிக்ஷன்[1992], ஃபைட் க்ளப்[1999], ஏன் இண்டூ தி வைல்டு [2007] போன்ற கோமேதகங்கள் குப்பையில் தான் கிடக்கும், அவை கோபுரம் அடையும் வரை. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணே!

Chithran Raghunath said...

உடனே பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தை உங்கள் பதிவு தூண்டிவிட்டது.

ajayan bala baskaran said...

நன்றி வெங்கி,சித்ரன்.தொடர்ந்து எனது ப்ளாக்கில் உங்களது கருத்துக்களை பதிவு செய்து என்னை மேலும் ஆழப்படுத்தும்படி கெட்டுக்கொள்கிறேன்

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...