February 23, 2008

சிறுவனின் சங்கீதம்






















நான் இரவில் நீந்தி பகலை தொடுபவன்
கப்பல்கள் என்னை முட்ட வரும் போது
அலட்சியப்படுத்தி நீந்துவேன்

கைகள் சோரும்போது ஒரு மீனை
துணைக்கழைப்பேன்.

இரவுகள் எனக்கானவை
அங்கே யாரும் வர அனுமதிக்க மாட்டேன்

பூனை ஒன்றின் துணையோடு
எல்லா வீதிகளையும் கண்காணிப்பேன்

ரப்பர் பாப்பாக்கள் கிளி பொம்மைகள்
குழந்தைகள் வீடுகளின்
எல்லா வாசல்களிலும் வைப்பேன்

பன்றிகளின் வசிப்பிடம் சென்று
அவற்றின் தூக்கத்தைக் கலைப்பேன்

எஜமானர்களுக்குத் துரோகமிழைக்கும்படி
நாய்களுக்கு சமிக்ஞை செய்வேன்

குருட்டுப் பிச்சைக்காரர்கள் வசிப்பிடம் சென்று
சண்டை தீர்த்து சமாதானம் செய்வேன்

குள்ளர்களின் வசிப்பிடம் சென்று
குட்டிகரணம் கற்பேன்

சினிமா போஸ்டர்களில்
நடிகைகளின் ஜட்டி தெரிகிறதா
என குனிந்து பார்ப்பேன்

நடிகர்களுக்கு ஓங்கி குத்து விடுவேன்.

குடித்து விட்டு கட்டிப் புரளும்
கவிஞர்களுக்கு சிகரட் வாங்கித் தருவேன்

வெறுமையுடன் அவர்கள் சோர்ந்து போகும்போது
இன்று நல்ல கவிதை எழுது
என உற்சாகப்படுத்துவேன்
இரவில் போலீஸ் வேனை பார்த்தால்
தபால் பெட்டியின் நிழலில் மறைந்து கொள்வேன்

மனிதர்கள் பிசாசுகளாக திரியும்
காலைப் பொழுது எனக்குப் பயங்கரமானது
பறவைகள் எனக்கு எச்சரிக்கை விடுக்கும்போது
அறைக்குத் திரும்பி
கனவை போர்த்தி உறங்குவேன்.

6 comments:

அம்பர் முருகன் said...

என் இனிய நண்ப,

உங்கள் படைப்புகள் ஆழமான சிந்தனைகளை உருவாக்குவதாகவே உள்ளது.

என். அனந்த பத்மநாபன் அவர்களோடு சில முறை சந்தித்து இருக்கிறேன்.
அவர் மரணம் எய்து விட்டார் என்பதை அறிந்து இருப்பிர்கள்.

விரைவில் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

முருகன்
மும்பை

Ayyanar Viswanath said...

நல்ல கவிதை அஜயன்

எழுத்துக்கள் சித்திரங்களாக விரிகின்றன

ajayanbala said...

sir kavidai nalla eruku

ajayanbala said...

sir kavidai nalla eruku

ajayanbala said...

areyatha paruvatthu ceruvan saiyum velaiyattukkalil nejam tarenthathu

ajayanbala said...

areyatha seruvanin velaiyattukkal kurumpadamaga theyrentana sir

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...