June 14, 2021

இவான் துரகனேவின் காதலி - த்ஸ்தாயெவெஸ்கி 200

  


ருஷ்ய இலக்கிய படைப்பாளிகளில்  மத்தளம் போல இரண்டு பக்கமும் அடி வாங்கியவர் இவான் துரகனேவ்.  இடதுசாரிகள் அவரை வலதுசாரி என்றும் வலதுசாரிகள் அவரை இடதுசாரி என்றும் கடுமையாக விமர்சித்தனர்

 ஆஸ்யா , முதல் காதல்  வசந்தகால வெள்ளம் போன்ற குறுநாவ்ல்களு,ம்   தந்தையும் தனயனும் போன்ற ஒப்பற்ற நாவலையும் எழுதி ருஷ்ய இலக்கியத்தில் தனக்கென தனி இடம் பிடித்தவர் துரகனேவ்  . குறிப்பாக அவரது மூமு சிறுகதை உலகப் பிரசித்தம். ஸ்பானிஷ் நாவலான  செர்வான்ஈடிஸ் எழுதிய டான்க்விக்ஸாடை  ருஷ்யாவில் மொழிபெயர்த்   ததும் அவருடைய இலக்கிய  சாதனைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது .  உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர்  ஹென்றி ஜேம்ஸ்   தன் இலக்கிய ஆசானாக டால்ஸ்டாயையோ தஸ்தாவெஸ்கியையோ குறிப்பிடவில்லை மாறாக   இவான் துரகனேவைத்தான் கொண்டாடுகிறார்.  இத்தனைக்கும் இருவரும் சமகால எழுத்தாளர்கள். என்ற போதும் துரகனேவ் இறந்த போது அவருக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில்  ,. துர்கனேவ் எழுதிய   மூமூ  சிறுகதை ருஷ்ய இலக்கிய உலகில்  படைப்பின் உச்சம் என வியக்கிறார் .

துரகனேவ்  இறந்த போது  அவரது மூளையை கணக்கிட்ட மருத்துவர்கள் அதன் எடையை பார்த்து ஆச்சர்யப்ட்டனர்  வழக்கமாக மனித  மூளையின்  சராசரி எடை 1336 கிராம்தான் . ஆனால் துரக்கனேவின் மூளை 2012 கிராம் இருந்ததாக வியக்கின்றனர்.

இப்படியான  எடைகூடுதல் மூளை காரணமாகாவோ என்னவோ அவர் தனிப்ப்ட்ட வாழ்க்கையில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அதிகமாக  இருந்துள்ளது. உலகிற்கே அன்பையும் அஹிம்சையையும்  போதித்த டால்ஸ்டாய்க்கே கோப,ம் உண்டக்கிய பெருமை  துர்க்கனேவுக்கு  உண்டு . ஒரு முறை  டால்ஸ்டாயின் படைப்பை மோசமாக விமர்சிக்கப்போக  உடனே  கோபத்தின் உச்சிக்கே சென்ற டால்ஸ்டாய் துரக்னேவை டூயல் எனும் ஒத்தைக்கு ஒத்தை  வீரம் காட்டும் பார்ம்பர்ய  போட்டிக்கு சவால் விட்டு  விட்டார் . பிற்பாடு நண்பர்கள் செய்த சமாதானத்தின் விளைவாக இந்த டூயல் ரத்து செய்யப்ப்ட்டாலும் இதன் பின் பதினெட்டு வருடகாலம்  இருவரும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தார்கள்    

டால்ஸ்டாய்க்கே கோபம்  இப்படி உண்டாக்கினாரென்றால் தஸ்தாயெவெஸ்கியை  மட்டும் விட்டாவைத்திருப்பார்.  அவரது படைப்புகளை ருஷ்ய  இலக்கியத்தின் மூக்கில் ஒட்டியிருக்கும் தேவையற்ற பரு என  துரகனேவ்  விமர்சித்தார்.

இத்தனைக்கும் தஸ்தாயெவெஸ்கி ஐந்து வருட சைபீரிய சிறைவிட்டு வெளியே வந்தவுடன் வாசித்த முதல்  புத்தகம் துரகனேவுடைய  ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்கெட்ச்சஸ் எனும் சிறுகதை தொகுப்புதான் .இதுதான் துரகனேவின் முதல் புத்தகமும் கூட ,அதை படித்துவிட்டு துரகனேவ் மீது மிகுந்த மரியாதை  கொண்டிருந்தார் .டால்ஸ்டாக்கும் துரகனேவின் மிகச்சிறந்த இலக்கியப்பங்களிப்பாக இந்த முதல் தொகுப்பைத்தான் கொண்டாடுகிறார். இந்த் ஸ்போர்ட்ஸ் மேன் ஸ்கெடசஸ் சிறுகதையைத்தான் பிற்பாடு புகழ்பெற்ற ருஷய் இயக்குனர் ஐஸன்ஸ்டைன் BEZIN MEDOW 1939 என்ற திரைப்படமாக எடுத்தார்.

அப்படி அந்த முதல் தொகுப்பை  வியந்த தஸ்தாயெவெஸ்கியோடு  காலப்போக்கில்  இவாந்துரகனேவ் கடுமையான் இலக்கிய விமரசனங்களை வைக்க இருவருக்கும் முட்டல் அதிகம் வரத்துவங்கியது . . ருஷ்ய தேசியத்தின் மீது அளவற்ற மதிப்பு கொண்டிருந்த தஸ்தயெவெஸ்கிக்கு பிற்பாடு துரகனேவ் எழுத்துக்கள் போலித்த்ன்மையாக தெரியத்துவங்கின  ஒருமுறை துர்கனேவின் ஸ்மோக நாவலுக்கான் விமரசனத்தின் போது  தஸ்தாயவெஸ்கி  நான் உனக்கு ஒரு டெலஸ்கோப் வாங்கித்தருகிரேன் ருஷ்யாவின்  வேதனையை பார்த்து எழுத உனக்கு  வசதியாக  இருக்கும் என கிண்டலாக எழுதினாராம் .

 தஸ்தாயேவெஸ்கி  அப்படிக் கூறக் காரணம் துர்கனேவ் அப்போது பிரான்சில் ஒரு காதலியின் வீட்டில்  ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டே ருஷ்ய குடியானமக்களின் வாழ்க்கையை ஸ்மோக் நாவலில் எழுதியிருந்தார்..   இதை இடித்துரைக்கும் விதமாகத்தான்   தஸ்தாயேவெஸ்கி அப்படிக்கூறினார்

பவ்லின் வெர்தத்


துர்கனேவ் பிரான்சில் தங்கியிருக்க காரணமான  அந்த காதலி  மிகப்பெரிய செல்வச் சீமாட்டி.  பெயர் பவ்லின் வெர்தத்.  பேரழகி மிகச்சிறந்த ஓபரா பாடகி மற்றும் இசை தயாரிப்பளர் .. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்   இவருடைய புகழுக்கு காரணம்  அழகா திறமையா என பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு பேசப்பட்டவர் . .ஆனாலும் தன்னை விட 20 வயது மூத்த லூயிஸ் வெர்தாத்  என்ற பணக்காரனை திருமணம செய்துகொண்டார். அவரும் ஒரு பொறுப்புள்ள நிர்வாகியாக அவளுடைய குடும்பம் குழந்தை மற்றும் தொழில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தொடர்ந்து அவளுடைய கச்சேரிகளை ஒழுங்கு செய்து அவள் புகழுக்கு வெளிச்சம் கூட்டும் பணியை ஒரு கடமையாக செய்துவந்தார்

பவ்லின்  குரல் வளம் பற்றி சொல்லும் போது  C3 முதல் F6  வரை என மேற்கத்திய இசை அளவு சொல்கிறார்கள் ,  குரல் வளத்துக்கு நம்மூரில் கட்டை  கணக்கு போல மேற்கத்திய இசையில்  ஒரு அளவு கோல் அது . . , இந்த அபார குரல்வளம்  ப்ளஸ்  பேரெழில் தோற்றம் இந்த  இரண்டும் பவ்லின் வெர்தாத்துக்கு  உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது.  லண்டன் ஸ்பெயின்  ஜெர்மணி என ஐரோப்ப முழுக்க சுற்றுப் பயணம் செய்தார். எங்கு போனாலும்  அந்த தேசத்து  இசை மேதைகள் செல்வச் சீமான்கள்  அனைவருமெ அவருடன் நெருங்கிய  நடபு வைத்துக் கொள்ள  தவம் கிடந்தனர்  . ஆனால் இவர்களுகெல்லாம் கிடைக்காத பேறு ருஷ்ய பயணத்தின் போது துர்கனேவுக்கு கிட்டியது .

 முதல் முறையாக  துர்கனேவ் மாஸ்கோவில் பவ்லின் வெர்தாத்தின் இசை  நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த முதல் நீகழ்விலேயே அவளது தீவிர ரசிகனாக மாறினார். பின் அவர் தங்கியிருந்த விடுதிக்குச்சென்று   நேரிடையாக  சந்தித்து பேசப்போக இருவருக்குள்ளும் எப்படியோ காதல் பற்றிக்கொண்டது . இப்படி ஒரு அழகி பணக்காரி திறமையானவள் எப்படி  ஒரு எழுத்தாளனிடம் அதுவும் எப்போதும் கடுகடுவென்ற முகத்துடன் இருப்பவனுக்கு   காதலியாக மாறினாள்  என்பது அக்காலத்தில் மாஸ்கோ அரச குடும்பங்கள் பலரையும் இம்சித்த வரலாற்று புதிர்?

இவர்களின் இந்த காதல் கதை பற்றி ஆரயச்சி செய்து அன் அபீசியல் மேரேஜ்   (UNNDFFICIAL MARRIAGE ) என்ற நாவலை  ஜோயி டேவிடோ என்பர் எழுதியிருக்கிறார் . அது அமோசான் கிண்டிலில் இப்பவும்  கிடைக்கிறது

ருஷ்யப் பயணம் முடிந்து ஓபரா அழகி ஊருக்கு திரும்ப துர்கனேவ் சிறிது காலத்தில்  பிரான்சுக்கு காதலியைத் தேடிச்சென்றார் . பிரான்சில் பேடன் பேடன் எனப்படும் அந்த இடத்திலிருந்த அரண்மனையில் அவள் கணவன் குழந்தையோடு வசித்து வந்தாள் . திருமணமே செய்து கொள்ளாத துர்கனேவ் தன் வாழ்க்கையின் ஏழு வருடங்களை  அந்த அழகியின் அருகிலேயே வசிப்பத்ற்கும் அவரது  குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கும் செலவிட்டு வந்தார் . இத்தனைக்கும் அன்று துரகனேவ் ருஷ்யாவில் நாடறிந்த  எழுத்தாளர் ஆனாலும்  தான் இப்படி ஒரு  பாய்பெஸ்டியாக பிரெஞ்சு பேரெழகிக்கு  வாழ்க்கைப் பட்டதைப்ப ற்றி   அவருக்கு வாழ்நாள் முழுக்க எந்த குற்றணர்ச்ச்சியும் இல்லை . உண்மையான காதலனாக வாழ்ந்த திருப்தியே அவருக்கு இருந்துள்ளது

மிதமான  தட்பவெட்ம, இயறகை எழில் சூழ்ந்த நிலப்பரப்பு , மற்றும் ரூலெட்  சூதாட்டம் ஆகியவை காரணமாக  டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி  ஆண்டன் செகாவ் ஆகியோர் வேறுவேறு காலகட்டங்களில் பேடன் பேடன் சுற்றுப்பயணம் செல்வது வாடிக்கை

டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி இருவருமே ரூலெட்  எனும் சூதாட்டப்பிரியர்.  டால்ஸ்டாய் பெரும் பணக்காரர் ஆனாலும் விடாப்பிடியாகக இழந்த பணத்தை திறமையாக ஆடி மீட்டுவிடுவார்

ஆனால் தஸ்தாயெவெஸ்கிக்கொ பையில் கைப் பணமும் குறைவு .அதே சமாயம் கையிலிருக்கும் சொற்ப பணத்தையும்  அடிக்கடி கோட்டை விடவும் செய்வார்

சூதாடி நாவல் எழுதிய கையோடு  புதிதாய் மணம் செய்த காதல் மனைவி அன்னா ஸ்ரினிகவுடன்  பேடன் பேடன் வந்தவர் பல்வேறு கேளிக்கை விடுதிகளில் உழன்று  சூதாட்டத்தில் மொத்தமாக  இழந்து விட்டார். மனைவியின் கம்மல் கோட்டுப்பொத்தான் எதையும் விட்டு வைக்கவில்லை . அனைத்தையும் அடகு வைத்து அதையும் இழந்துவிட்டார் . ஒரு கட்டத்தில்   மிக மோசமான நிலமைக்கு தள்ளப்பட்ட நிலையில் அவருக்கு அப்போது நினைவில் வந்த பெயர் .இவான்  துர்கனேவ் . நண்பரும் சக எழுத்தாளனுமான  துரகனேவ் அதே நகரில்  காதலியின் அரண்மனை வீட்டில்  வசித்து வருகிறாரே ஒருமுறை போய் பணம் கேட்கலாமே என அன்னாவுடன் சென்றிருக்கிறார்.

ஏற்கனவே  பணமில்லை என்பதால் இருவரது தோற்றமும் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை  இப்படி ஒரு மோசமான  நிலையில் துரகனேவ் வீட்டு வாசலில் பணம் கேட்டுசென்ற போது அவரது இந்த வறுமை கோலம் காரணமாகவே அரண்மனைக்குள் அனுமதிக்கப்படாம;ல் வெளியே நிற்க வைக்கப்பட்டது மட்டுமலலமல் கடைசி வரை வெளியே வரமால் துரகனேவ் தஸ்தயெவெஸ்கியை அவமானபப்டுத்தியதாக தனது summer in baden baden   நூலில் leyonid Cypkin   எனும் ருஷ்ய எழுத்தாளர் எழுதியிருபதாக அந்நூலைபற்றிய இணைய தகவல்கள் குறிப்பிடுகின்ற்ன

 பிறகு தஸ்தாயெவெஸ்கி ருஷ்யா திரு,ம்பியதும் இனி சூதாடுவதில்லை என மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்து சாகும்  வரை அந்த சத்தியத்தை மீற வில்லை என்று அன்னா தன் கணவரைப்பற்றிய நினைவுக்குறிப்புகளில் குறிப்பிடுகிறார்

இதே சமயம் துரகனேவ்  பவ்லின் வெர்தாத் ஆகியோரது ஏழு வருட தேனிலவு  வாழ்க்கையும் 1870 -71 ஆம் ஆண்டு  பிரான்ஸ் பிரஷ்யா போரை முன்னிட்டு முடிவுக்கு வந்தது. அவரும் பிரான்சை விட்டு வெளியேறி லண்டன் சுவிட்சர்லாந்து போன்ற  ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு  மீண்டும் தாய் மண்ணுக்கு திரும்பினார்

இறுதியாக இந்த இரு எழுத்தாளர்களின் பகையும்  ருஷ்யாவில் 1880ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த புஷகின் சிலை திறப்பு விழாவில் தஸ்தாயெவெஸ்கி ஆற்றிய மகத்தான உரைக்கு பின் முடிவுக்கு வந்தது . அந்த அரங்கில் முழு உரையையும் கேட்ட இவான் துரகனேவ் தஸ்தாயெவெஸ்கியை கட்டிபிடித்து ருஷ்யாவுக்கு கிடைத்த மகாத்தான எழுத்தாளனய்யா நீர் என கண்ணீர் மல்க சொன்னதுடன் அவர்கள் பகை முடிவுக்கு வந்தது. 

-அஜயன் பாலா

15/06/2021

 

பேரன்பின் சுடர் – சே குவேரா

 

         (சேகுவேராவின் 93வது பிறந்த நாளுக்காக விகடன் .காம் பிரசுரமான கட்டுரை 0


இன்று சேகுவேராவின் 93 வது பிறந்த தினம்

வெறும் 39 வருடங்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ்நது   சரித்திரத்தின் பொன்னேடுகளில் தன்னை  பதித்துக்கொண்ட ஒரு சமாந்திரனின் மரணம் இன்றும் பேசப்பட்டு வரூகிறது

ஆப்ரிக்காவின் பொலிவியா காட்டில்   வாலேகிராண்டே பகுதியில்   53 வருடங்களுக்கு  முன சேகுவெராவின் உடலுக்குள் பாய்ந்த எம் 1 கார்பைன் ரக துப்பாககியின் ஒன்பது குண்டுகளில்  முதல்  ஐந்து கால்களிலும் இரண்டு கைகளிலும் ஒன்று தோளிலும் பாய்ந்தது.  ஆனால்  கடைசியாக மார்பில் பாய்ந்த குண்டுதான் அவரது  உயிரை பறித்தது

அந்த கடைசி குண்டுக்கு தெரியாது .தான் ஒரு ஒரு உடலை விதையாக  மாற்றப்போகிறோம் என்பது

அந்த நிமிடத்திற்கு முன் வரை  க்யூபாவுக்கு மட்டுமே நன்கு அறிந்த  சேகுவேராவின் முகம் இன்று உலகின் கடைக்கோடி மனிதர்கள் வரை அதிகம் பேரால் நேசிக்கப் படும் முகமாக மாற்றியதில் அந்த  கடைசி  குண்டுக்கு பெரும்பங்கு உண்டு

அக்டோபர் 7 ,1967ம் நாள் இச்சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குப்பின் க்யூபாவில் சேகுவேராவின் மரணத்தை அறிவித்த அதிபர் பிடல் காஸ்ட்ரோ அவரது உரையில் நம் குழ்ந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய மந்திரம் நானும் ஒரு செகுவேராவாக ஆவேன்   என்பதுதான் .. அதன் படியே அந்த வார்த்தையை பள்ளிகளீல் தேசிய்கிதம் போல பாடலாகவும் ஒலிக்கசெய்தார் . அன்றைய உரையில் பிடல் இன்னொன்றும் சொன்னார்  அவர்  நமக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே முழுமையான மனிதன எப்படி இருப்பான் என அடையாள்மாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார் . வருங்காலத்தில் அவர்  விடுதலை உணர்வின்  அடையாளமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுவார் என்று அன்றே கூறினார்  அன்று அவர் கூறிய தீர்க்க தரிசனம் இன்று 53 ஆண்டுகளில்  நிரூபணம் ஆகியிருப்பது  வரலாறு

இடைப்பட்ட காலத்தில் அப்படி என்ன நடந்தது ?  அந்த ஆச்சர்யமிக்க கதையின் சுருக்க வரலாறு இதோ

.சே இறந்த அடுத்த சில நாட்களில்   அவரது "படுகொலை குறித்தும் அதில் அமெரிக்க உளவு நிறுவனம் சி ஐ ஏ வின் சதி   பற்றியும் புகைப்படங்கள் ,  கட்டுரைகள்,   கவிதைகள்   உலகம் முழுக்க பத்ரிக்கைகளில்  அச்சாகின .

அறிஞர்களும் தலைவர்களும் சே குவேராவின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தத்துவங்கினர் .விடுதலையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும்  சேகுவேரா ஒரு உத்வேகம்" என நெல்சன் மண்டேலா புகழ்ந்தார்  பிரெஞ்சு தத்துவ அறிஞரான ஜீன் பால் சார்த்தர் சேகுவேரா ஒரு அறிவுஜீவி மட்டுமல்ல,  நாம் வாழும் காலத்தின்  மிக  முழுமையான மனிதர்" என்று  புகழ்ந்தது சேகுவேராவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் .

தொடர்ந்து  உலக்ப்புகழ்பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா ,அலென் கின்ஸ்பெர்க்,. மற்றும்  ஜூலியோ கொத்தஸார்  ப்ரான்ஸ்வா ஃபனான்  க்ரஹாம் க்ரீன், சூஸன் சாண்டக் போன்ற உலக எழுத்தாளர்கள் சே வின் மரணத்தை சரித்திர நிகழ்வாக கருதி கட்டுரைகள் எழுதினர்  . இது உலகம் முழுக்க உள்ள அறிவுஜீவிகளிப் வழியாக சே வை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்க சே வின் புகழ் பரவத்துவங்கியது

 இதையொட்டி சிரித்த  சே குவேராவின் புகைப்படங்கள் லண்டன் பாரீஸ்  சிக்கககோ என முக்கிய நகரத்தின் விதிகளில் முதன்முதலாக தோன்றத்துவங்கின  அந்த புகைபடங்கள் முன் அசையும்  மெழுவர்த்திகளில் சேகுவேராவின் கண்களில் யேசுவின் உயிர்த்தெழுதலை கண்ட மக்கள் கண்ணீர் உகுத்த்னர்

சில மாதங்களுக்குப் பிறகு ப பெர்லின், பிரான்ஸ்  மற்றும்  சிகாகோவில் கலவரம் வெடித்த போது அவர்கள் உடம்பில்  சே குவேரவின் உருவம் பதித்த  டீ ஷர்ட்டுகள் முதன்முறையாகத்  தோன்றத் துவங்கின  தொடர்ந்து புரட்சி  போரடடம் என எங்கு நடந்தாலும் அங்கு  போராளிகள் சேகுவேராவின் உருவ பதாகைகள் உயர்த்தி பிடிக்கத் துவங்கினர்  இதன் உச்சமாக , அமெரிக்க கல்லூரி வளாகங்களில்   போராட்டங்கள் வெடித்த பொது , இளைஞர்களும், பெண்களும் சே குவேரா  டி-ஷர்ட்களை அணிந்துகொண்டு, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்  .இது அமெரிக்காவே மிரண்டு  போன காலப்பகடை . தன்னால் கொல்லப்பபட்ட ஒரு முகம் தன் மக்களால்  தன் முன் நாயகனாக உயர்த்திப்பிடிப்பதை  அமெரிக்காவால் ஜீரணிக்கவே முடியவில்லை .

இதுகுறித்து . இராணுவ வரலாற்றாசிரியர் எரிக் டர்ஷ்மீட்டின் பார்வையில்  சேகுவேரா இறக்கவில்லை அமெரிக்காவிலேயே அவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என எழுதினார். .

இப்படியாகத்தான் செகுவேராவின் புகழ் இன்று உலகம் முழுக்க பல கோடி மக்களிடம் படிப்படியாக  பரவத்துவங்கியது . தொடர்ந்து அவரைப் பற்றிய புத்தகங்கள், இசைத்தட்டுக்கள் ,  திரைப்படங்கள் ஆகியவை எடுக்கப்ப்ட்டு ஒவ்வொரு தலைமுறையிலும்  சேவின் புகழ் பன் மடங்கு பெருகிக்கொண்டே வருகிறது.  

.இப்படியான அவர்து உலகப்புகழுக்குக்  காரணம் அவர்  அமெரிக்க ஏகாதிபத்தியத்தை   ஒற்றை மனிதனாக் எதிர்த்த துணிச்சலோ அல்லது புதிய உலகம்  பற்றி கனவு கண்ட  மனித நேயமோ மட்டுமலல் . அவர் ஒரு சிறந்த நிர்வாகி, சிறந்த மருத்துவர், சிறந்த நண்பன், மற்றும் சிறந்த கணவன் என எல்லா நிலைகளிலும் உயர்ந்து விளங்கினார்


மட்டுமல்லாமல் அவர் ஒரு சிறந்த தந்தையும் கூட என்பதற்கு அவர் குழ்ந்தைகளுக்கு எழுதிய கடிதம் அவர் இறந்த தகவல் அறிந்த பின் அவரது மனைவி தன் குழந்தைகள் நால்வரையும் அழைத்து கண்ணீருடன்  சே ஏற்கனவே எழுதிக்கொடுத்துவிட்டுப்போன கடிதத்தை பிரித்து படித்துக்காண்பித்தார் . அதில் அவர்

அனபுச் செல்வங்களே ,இந்த கடிதம் நீங்கள் படிக்கும் நேரத்தில் நான் உங்களையும்  இந்த உலகையும் விட்டு  முழுமையாக பிரிந்திருப்பேன்  .போராளிகளின்  இறப்புக்காக யாரும் கண்ணீர் விடகூடாது உங்கள் தந்தை கொண்ட கொள்கைக்கு உண்மையாக  வாழ்ந்தார் என பெருமை கொள்ளுங்கள் .தொழிநுட்பக் கல்வியை தேர்வு செய்து படியுங்கள் அவை உங்கள் எதிர்காலத்தை செம்மைபடுத்தும் .. புரட்சி பாதையை நீங்கள் தேர்வு செய்யவேண்டும் உங்கள் கண்முன் ஒரு அநீதி நடக்கும் போது அதை முழு மனதுடன் எதிர்க்கவேண்டும்  என எழுதியிருந்தார் .

சே வின் நீடித்த புகழுக்கு இப்படியாக பல்வேறு உப காரணஙக்ளை அடுக்கிக்கொண்டே போகலாம் . அவர் வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியை எடுத்து படித்தால் கூட அதில் நம் முன்னேற்றத்தின் சிறு படிகட்டுகள் ஒளிந்து கிடப்பதை உணர முடியும் .

ஆகவே இந்த 93வது பிறந்த நாளிலும் நம்மோடு வாழும் சே குவேராவுக்கு

ஒரு நெஞ்சம் நிறைந்த லால் சலாம்

-அஜயன் பாலா

June 8, 2021

மலைவீட்டின் பாதை - சிறுகதை



நகரும் பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே, வேகமாகப் பின் சரியும் மரங்களைப் பார்த்தான் ஸ்டீபன். அது இருண்ட கானகமாக நெடுகி வளர்ந்திருந்தது. உயரமான மரங்கள் அவனுக்குள் மருட்சியை ஏற்படுத்தின. முக்கி முனகி உறுமும் இன்ஜின் சப்த்ததின் பின்னணியில் இந்தக் காட்சியை வேடிக்கை பார்ப்பது விநோதமாக இருந்தது.

சாலையோரம் வேகத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். பள்ளிச் சிறுவர்கள் மழைக்குத்தலையில் உரச்சாக்கினைக் கவிழ் ந்திருந்தனர். முகம் முழுக்க பவுடர் அப்பி, நெற்றியில் விபூதி இட்டிருந்தனர். குழந்தைகள் கையசைத்தபோது இவனும் பதிலுக்குக் கையசைக்க விரும்பினான். ஆனால், முடியவில்லை. மனசு மிகவும் பாரமாகிக் கனத்து இருந்தது. மரணம்
 தன்னோடு சக பயணியாக அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தான்.

இதுவரை அவன் குமுளிக்கு வந்ததில்லை. குமுளியில் அவன் தேடிச்செல்லும் சேது, கல்லூரியில் ஜுனியராகப் படித்தவன். ஹாஸ் டலில் ஒரே அறையில் தங்கியிருநதவன். அது கல்லூரித் தலைவனாக ஸ்டீபன் நெஞ்ச நிமிர்த்தி நடந்த காலங்கள். வாழ்க்கை அப்போது ஒரு முரட்டுத்தனத்தையும், துணிச்சலையும் பரிசாகத் தந்திருந்தது. தலைமைப் பண்பும் அலட்சியமும் சக நண்பர்கள் மத்தியில் அவனு க்கென ஒரு விநோதமான வசீகரத்தை உண்டு பண்ணியிருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான், உண்மையில்தான் எந்த வேலைக்கும் பொருத்தமற்றவன் என்பதை உணர்ந்து கொண்டான் .

வாழ்க்கைக்கும் கல்லூரிக்குமான இடைவெளியை அவன் மிக வும் தாமதமாக உணர்ந்தான். வேலை அற்றவனின் பகல் பொழுது கள் நீண்டு இருந்தன. அங்கே கை குலுக்கல்கள் இல்லை. உப சரணைகள் இல்லை. சிகரெட் புகை தனக்கு மேல் உயர்ந்து செல்வதை  விரக்தியுடன் வேடிக்கை பார்ப்பதில்  பெரும் பாண்மை யான நேரங்களைக் கழித்தான். அவனது குடும்பம் இரண்டு ஆசிரியப் பெருந்தகைகளைக் கொண்டது.

உடன் படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வேலையிலும் சொந்த தொழிலிலும் தீவிரமாகப் பயணம் பெற்றுவிட, அவனுக்கு அவனது அப்பா சிபாரிசு செய்த வேலைகள் அனைத்திலும் ஏதாவது ஒரு குறை சொல்லி நிராகரித்தான். அதற்கான காரணம் ஏதும் அவனிடம் இல்லை. ஊர் ஊராகப் பயணிக்கும் விற்பனை பிரதிநிதி வேலைதான் தனக்கு உருப்படியானது என நம்பினான். அதற்காக இவனும் பலமுறை செங்கல்பட்டில் இருந்து சென்னைக்குப் படையெடுத்து தான் மிச்சம். அது போன்ற வேலை கிடைப்பதாகத் தெரியவில்லை. சரளமான ஆங்கிலம் இவனது நாக்குக்குப் பழக்கப் படாதது அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.

                நிராகப்பிலும், தனிமையிலும், கழி விரக்கத்திலுமாகக் கழிந்த பொழுதில், தான் ஒளிந்துகொள்ள, தன்னை முற்றாகப் புதைத்துக் கொள்ள அப்போது அவனுக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. நூலகங்களுக்குச் சென்று, வெகு நேரம் வெறுமையைப் புரட்டிக் கொண்டு இருந்தான். இந்தக் காலகட்டத்தில்தான் நண்பன் ஒருவன் மூலமாக, “புதுயுகம்”  எனும் இலக்கியச் சிற்றிதழ் கிடைத்தது. அதில் வெளியான (பாதசாரி என்பவர் எழுதியிருந்த) “காசி” எனும் கதையின் நாயகன் இவனை வசீகரிந்திருந்தான். இவனும் தன்னை ஒரு காசியாக உருவகம் செய்து கொண்டான். ஸ்டீபனிடமிருந்த முரட்டுத் தனம் விலகி, மிகவும் மசமசவென, அதே சமயம் நுண்மையானதாக மாறிக்கொண்டு இருந்தான். நவீன  இலக்கியவாதிகளின் பெயர்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தின.

     இவனது இந்த மனநிலைக்கு நேர் எதிராக, வீடு, உறவுகள் மத்தியில் இவனது நடத்தை ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களின் உலகம் முழுக்க முழுக்க இவனுக்கு எதிரானது மட்டுமல்ல, தலைகீழானது. இதன் காரணமாக, இவனுக்கு வீட்டில் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வன்மம் சுழன்றது. அனைவரையும் வெறுத்தான். தன்னையும் தன் நுட்பமான உலகையும் அவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என இவன் திடமாக நம்பினான். இன்றில்லா விட்டாலும் பினினொரு நாளில் மகத்தான காரியங்களைத் தன்னால் ஆற்ற முடியும் என அவன் திடமாக நம்பினான். அதற்காக அவன் வீட்டில் பெரும் அவமானங்களைப் பரிசாகப் பெற நேர்ந்தது. குறிப்பாக, உணவுப் பொழுதின்போது வெளிவரும் வார்த்தைகள் அவனைப் பெரிதும் சமன்குலைத்தன. இந்தச் சமயங்களில் சிகரெட் அவனுக்கு உற்ற நண்பனாக ஆறுதல் அளித்தது.

 புகைப்பதற்கு பல சமயங்களில் மிகுந்த பிரயாசை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதிலும் வீட்டின் அருகே இருந்த தேநீர்க் கடையைக் கடந்து போகும் தருணத்தில், அவன் முதுகில் பாரமாகப் படியும் ஒரு குற்ற உணர்ச்சி... அதனை அவன் எப்படி விளக்க முடியும்! எப்போதேனும் அரிதாகச் சொற்ப பணம் கிடைத்து, பாக்கியின் பாதியைக் கொடுக்க முடிகிறபோது அவனுக்குள் ஊற்று போல் பெருகும் உணர்ச்சி இருக்கிறதே, “பாருங்க.. நான் எத்தனை நல்லவனாக இருக்கிறேன். நீங்கள் என்னைக் கணித்திருந்தது போல நான் உங்களை ஏமாற்றுபவன் இல்லை, நேர்மையானவன், நீதிமான்!” என்பது போல ஒரு பரிசுத்தமான உணர்வு உடல்முழுக்க வியாபிக்கும் அளவுக்கு அவமானகரமான சூழலில் பிடிக்கப்பட்டு இருந்தான். 

மாலை நேரங்களில் நீரற்ற ஏரி மைதானத்தின் புல்வெளியில் அமர்வான். சுற்றி இருந்தவர்களெல்லாம் விலகிச் சென்ற பின் மெள்ள இருள் தன் மேல் கவியும் சந்தர்ப்பத்தில், புல் தரையில் படுத்தபடி மேலே உள்ள நட்சத்திரங்களையும் பால் வழி மணடலங்களையும் குறித்து தன்னைப் போல எத்தனை இடங்களில் நட்சத்திரங்களைப் பற்றி யோசிப்பார்கள் எனவும், மற்றும் தான் கேள்விப்பட்ட ஊர்களின் பெயர்களையும் வாசித்த நாவல்களில் நிலப் பகுதிகளையும கற்பனையில் கொண்டுவந்து அங்கே தானும் சஞ்சாரம் செய்வதாகவும் கற்பனை செய்து பார்ப்பான். இது போன்ற சமயங்களில் சிகரெட் ஒரு காதலியைப் போல மிகவும் இணக்கமாக இருப்பதை உணர்ந்தான்.

ஒரு நாள், மிகுந்த நெருக்கடியின் காரணமாக சமையலறையில் கடுகு டப்பாவில் அவன் கை வைக்கப்போக அது பெரும் பிரச்சனையாகி வெடிக்கத் துவங்கியது. இதன் உச்சகட்டமாக டைரியில் இவன் எழுதிவைத்திருந்த கவிதைகளை, தங்கை எடுத்து வந்து அப்பாவிடம் காண்பித்தாள். அவன் அம்மாவோ, மகன் மிகக் கீழ்த்தரமான நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகக் கூச்சல் இட்டாள். மகன் ஏதோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அதன் பொருட்டே இப்படி எழுதிக் கொண்டு இருப்பதாகவும் அந்த இடைநிலை ஆசிரியத் தம்பதியர் கருதினர். உண்மையில், தான் இல்லாதபோது தனது டைரியும் தனது கவிதைகளும் பிறரால் வாசிக்க நேர்ந்ததையே ஸ்டீபனால் தாங்க முடியவில்லை.

 தங்கைக்கு ஒரு அறைவிட்டான். தந்தை தடுக்க வர, அவரைப் பிடித்துத் தள்ளினான். அம்மா ஓடி வந்து இவன் முதுகில் அடிக்க, அடுத்த சில நொடிகளில் மூவரும் சரமாரியாக ஸ்டீபனை ஒரு பைத்தியக்காரனைப் போல அடிக்கத் துவங்கினர். இந்த நெருக்கடியான சூழலில் கூட ஜே.கிருஷணமூர்த்தி இந்த சூழலை என்னவாக எதிர் கொள்வார். ஆதவன் இதனை எப்படி விவரிப்பார் என்றெல்லாம் அவன் மனம் கேள்விகளை எழுப்பியது. அவனது முதுகில் ரயில் தடதடத்து ஓடியது. அவன் தலைகுப்புற ஒரு ஆற்றில் விழுந்தான்.
அவமானத்துடன் அன்று இரவு முழுக்க எங்கெங்கோ அலைந்து திரிந்தான். இதனை ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் கூட அந்த இரவில் உதித்தது. உள்ளூர பயத்துடன் மறுநாள் விடியற் காலை வீட்டினுள் நுழைந்து, தனது துணிமணிகளை ஒரு லெதர்பேக்கில் திணித்துக் கொண்டு வெளியேறினான். மதுரை வந்து நண்பனைச் சந்தித்து, பகல் முழுக்க மீனாட்சி கோயில் மற்றும் மலையாளப் படம் எனச் சுற்றித் திரிந்து, இரவில் நண்பனுடன் பீர் குடித்துவிட்டு, பின் அவனது ஏற்றுமதி நிறுவனத்திலேயே தங்கினான். காலையில் வாட்ச்மேனிடம், நண்பனிடம் சொல்லிவிடுமாறு கூறிவிட்டு மதுரை பேருந்து நிறுத்தத்துக்கு மழையினூடே நடந்து வந்து, எங்கே போவது எனத் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருந்த போதுதான், குமுளியில் இருந்த சேதுவின் ஞாபகம் வந்தது.  
பேருந்து குமுளியை அடைந்திருந்தது.

ஸ்டீபன் லெதர் பேக்கை எடுத்துக் கொண்டு கடைசி ஆளாகப் பேருந்திலிருந்து இறங்கினான். சாலையோரம் பேருந்து சற்றுச் சாய்வாகச் சரிந்திருந்தது. இரண்டு புறமும் அடர்த்தியான செறிவான மரங்கள் நிறைந்த வனம் அது. குமுளி பேருந்து ஒரு செக்போஸ்ட்டுக்கு இந்தப்புறம் நிறுத்தப்பட்டு இருந்தது. தமிழக எல்லை முடிந்த கேரள எல்லை இங்கிருந்து துவங்குகிறது என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தான்.

சற்று முன் மழை பெய்திருந்ததால், அந்தச் சிறிய கடைத்தெரு முழுக்க பகல் பொழுதிலும் ஒருவித மூட்டத்தோடு காட்சியளித்தது. ஒருபுறம் அடர்ந்த கானகத்துடன் கூடிய மலைச்சரிவும், இன்னொருபுறம் வரிசையாக ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள் கொண்ட கடைகளுமாக தார்ச் சாலை நீண்டிருந்தது. சிறிய சிறிய தள்ளுவண்டிகளில் கண்ணாடிப் பெட்டிகளுடன் தேநீர்க் கடைகள் வழி நெடுகக் காணப்பட்டன. தலைப்பாகையும் வாயில் பீடியுமாக, மலையாளிகளுக்கே உரித்தான கலர் கலரான கைலியை மடித்துவிட்டபடி நடமாடிக் கொண்டு இருந்தனர். பழ வியாபாரிகள், கூலிகள், மீன் வாங்கக் கையில் கூடையுடன் முண்டு அணிந்தபடி அலையும் நடுத்தர வயதுப் பெண்கள் என சில பிரத்யேக மலையாள அடையாளங்களுடன் அந்தப் பகுதி ஸ்டீபனை வசீகரித்தது. தமிழ்ப் பையனும் மலையாளப் பெண்ணும் கைகோத்து நிற்பதுபோல பல இடங்களில் கடைகளின் முகப்புப் பலகைகளில் இரண்டு மொழியிலும் எழுதப்பட்டு இருந்தன. சேதுவின் முகவரியைக் காண்பித்து வழி கேட்டபடியே, நீண்டு சென்ற தார்ச் சாலையில் நடந்து சென்றான். வரிசையான கடைகள் கடந்த வலப் பக்கமாகத் திரும்பி நடந்தான். தேயிலைத் தோட்டங்கள் பசேலென விரிந்து கிடந்தன. கறுத்த பாம்பின் தோலாய் நீண்டிருந்த சாலையின் ஓரங்களில் மரங்கள் உயர்ந்து மேகங்களோடு அசைந்தன. குளிச்சியான காற்று உடலைத் தழுவ, மூச்சை இழுத்து வெளியே விட்டவாறு மலைப்பாதையில் நடந்து சென்றான். காலையில் மதுரையிலிருந்து அவன் புறப்படும்போது இருந்த மனோநிலையிலிருந்து இந்தப் புதிய சூழல் அவனை முற்றாகப் பிடுங்கி எறிந்திருந்த்து.

கடந்த இரண்டு நாட்களாக தான் எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறான சம்பவங்கள் குறித்தும், இப்போது தான் புதிதாகச் செல்லவிருக்கும் சேதுவின் வீடு குறித்தும் மனதுக்குள் கேள்விகளை உருவாக்கியபடி நடந்து கொண்டு இருந்தபோது, சேதுவின் வீடு நெருங்கி வந்தது..லைச் சரிவின் ஒருபக்கமாக மண் படிக்கட்டுகள் வழியே ஏறி, சற்று உயரமான தளத்தில் கட்டப்பட்ட அந்த ஓட்டு வீட்டு முன் நின்றான்.இதுதான் சேதுவின் வீடா?


படலைத் திறந்து சேதுவின் வீட்டுக்குள் நுழைந்தான் ஸ்டீபன். எதிரே சற்றுக் கீழே, தார்ச்சாலையில் ஒரு பேருந்து கடந்து சென்றது. அப்பால் சரிவாக பச்சையாக விரிந்துகிடந்த தேயிலைத் தோட்டம், மலை முடிச்சுகள், நீல வானம், நகரும் மேகங்கள் என அந்த இடமே முற்றிலம் வேறொரு உலகத்துக்குள் தான் வந்திருப்பது போன்ற பிரமையை அவனுக்குள் உண்டுபண்ணியது.

ஒலிப்பானை அழுத்தியதும் கிணற்றடியிலிருந்து பின்வாசல் வழியாக ஒரு சிறு பெண்ணின் முகம் வெளிப்பட்டது. கைகளில் சோப்பு நுரையோடு, ஒரு கையால தலைமுடியை ஒதுக்கியபடி எட்டிப்பார்த்தாள். ஹாலில் இருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அது சேதுவின் அம்மாவாக இருக்க வேண்டும், வெளியே வந்தாள். ஸ்டீபன் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறியதும், சட்டென ஏதோ தவறு செய்துவிட்டவளைப் போன்ற பதற்றத்துடன் கதவைத் திறந்தவளின் முகத்தில் அத்தனை பூரிப்பு. கண்களின் ஒளி ஸ்டீபனுக்கு உடன் சட்டெனக் குளிர்ந்துவிட்டது. இதுவரை அப்படி ஒரு கரிசனத்தை எந்த முகத்திலும் கண்டதில்லை.

பின் கட்டிலிருந்து வெளிப்பட்டவள், தன் கைகளின் ஈரத்தைப் பாவாடையில் துடைத்தபடி, ஸ்டீபனை வரவேற்கும் விதமாக உடலைக் குறுக்கி, நாணத்துடன் தலைகுனிந்தாள். மகளின் பெயரை சிந்து என அறிமுகப்படுத்தினாள் சேதுவின் அம்மா.  +2 முடித்துவிட்டு பி.காம், கரஸில் படித்து வருவதாகக் கூறினாள். சட்டென அப்பெண் மீண்டும் பின்கட்டுப் பக்கம் விரைந்து சென்றாள்.

ஒருவகையான அமைதி அந்த வீட்டில் குடி கொண்டு இருந்த்து. அது தன் வீட்டைப் போல இறுக்கமாக இல்லை. ரசிப்புத்தன்மை மிகுந்த சிறு பெண் அந்த வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. துணியில் சிறு எம்ப்ராய்டரி செய்யப்ட்ட வாயில் தோரணங்கள், பழைய, பெரிய ரேடியோவின் மேல் வைக்கப்பட்டு இருந்த பூ ஜாடி, மற்றும் அதன் மேல் மணியால் கோக்கப்ட்ட பொம்மைகள் என எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் தனக்குள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுவதை உணர்ந்தான்.

கொதிக்கக் கொதிக்க சுடுநீரை குளியறையில் ஊற்றிக் கொண்டபோது “ஓ” எனக் கூற கதற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகம் இந்த உடம்புக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாகப் பன்றியைவிடக் கேவலமாக உழன்றவன், இந்த குளியல் மூலம் அரசனாக மாறிவிட்டதாக்க் கருதினான்.

குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவனுக்கு, சேதுவின் அம்மா இட்லிகளைப் பரிமாறினாள். படுப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறை மிகவும் குறுகலாகவும் அடக்கமாகவும் இருந்தது. ஒரு மெத்தை தரையோடு விரிக்கப் பட்டு இருந்தது. ஆழ்ந்த உறக்கம். கனவில் என்னென்னவோ வந்தது. இடையிடையே வெளியே வராந்தாவில் கொலுசுச் சத்தம் கடந்தது. பகல் நேரத்துத் தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் வசனம் கேட்டது. கனவில் யார் யாரோ அவனது அப்பாவை துக்கம் விசாரித்தார்கள். பேருந்தின் அடுத்த இருக்கையிலிருந்து ஒரு பெண்மணி ஸ்டீபனிடம், மடியில் “படுத்துக் கொள்ளட்டுமா?” என்றாள். தலை நிறையப் பூவுடன் மடியில் சரிந்தாள்.

சட்டென விழிப்பு தட்டிய போது, ஸ்டீபனின் தலைமாட்டில் ரகசியமாக இரண்டு பெண் குரல்கள், சேதுவின் தங்கையான சிந்துவினுடையதும் அவளுடைய தோழியினுடையதும் என்பதை அறிந்து கொண்டான். இவனை எழுப்பிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு அவர்களின் பேச்சினூடே தெரிந்தது. புத்தக அலமாரியில் ஏதோ ஒரு நோட்டைத் தேடிக் கொண்டு இருந்தனர். சிந்துவின் பாவாடை விளிம்பு இவனது முழங்கையில் உரசுவதை உணர்ந்தான். உண்மையில் அவனுக்கு அதனால்தான் விழிப்பு தட்டியது.

நோட்டை எடுத்துக் கொண்ட சிந்து தன் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் கூறிக் கொண்டு இருந்தாள் சென்னையிலிருந்து ( அவள் அதனை மதராஸ் என்றாள்) வந்திருப்பதாகவும், அங்கே மிகப்பெரிய ஆள் என்றும் கதை விட்டாள். தோழி, “இந்த ஆளை நான் ஒரு உதை விடட்டுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்க சிந்து அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். தன் பிறந்த நாளுக்கு ஸ்டீபன் ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசளித்ததாகவும், அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாகவும் சிந்து சொன்னாள்.

ஸ்டீபனுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. அப்போது தான் அவனுக்கு அது ஞாபகமும் வந்தது. சேது தன்னுடன் அறியல் தங்கியிருந்த சமயத்தில், அவன் ஒருமுறை ஊருக்குப் புறப்பட, வழியனுப்பச் சென்றபோது நடந்தது அது. ஒரு எதேச்சையான நிகழ்வு. சேது அதனை தன் வீட்டில் நண்பன் பரிசளித்ததாகச் சொல்லிப் பெருமையுடன் நீட்டியிருக்க வேண்டும். ஒருவேளை, அன்று அது அவளுடைய பிறந்த நாளாகவும் இருந்திருக்க்கூடும். பெண்ணின் மனது எத்தனை நுட்பமாகச் செயலாற்றுகிறது என ஸ்டீபன் ஆச்சர்யப்பட்டான்.

கண் விழித்த போது மூன்றரை ஆகியிருந்தது. முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்தபோது சேதுவின் அம்மா, சாப்பிடச் சொன்னார்கள். வயிறு சரியில்லை எனச் சொல்லி மறுத்தவன், லுங்கியும் சட்டையும் அணிந்தபடி வெளியே வந்தான். மாலை நேரமாக இருந்த்தால் தொலைவில் தெரிந்த தேயிலை தோட்டங்களில் பனி மூட்டம் இறங்கியிருந்தது. ஈரமான மண் படிக்கட்டுகளில் இறங்கி, தார்ச் சாலைக்கு வந்தான். மனம் போன போக்கில் நடக்கலானான்.

சட்டென சிந்துவின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. எத்தனை கனிவான பெண்! ஒரு வேளை நான் விழித்திருப்பேன் எனத் தெரிந்தே, பரிசுப் பொருளுக்காக நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அதனைத் தன் தோழியிடத்தில் கூறியிருக்கலாம். முற்றிலுமாகச் சிதறுண்டு கிடந்த அவனது இருப்பு, அந்தச் சிறு பெண்ணின் கொலுசுச் சத்தத்தினால்  மீண்டும் தனக்குள் ஒன்று சேர்வதை உணர்ந்தான்.

ஸ்டீபன் வீடு திரும்பியபோது, முற்றத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. சேது இவனைப் பார்த்த்தும் அளவற்ற மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டான். ஒரு லெட்டர் போட்டிருந்தால் விடுமுறை எடுத்திருப்பேனே என்று வருத்தப்பட்டான். சில நிமிடத்தில் இருவரும் பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த சிறிய கடைக்குச் சென்றபோது இருட்டியிருந்தது. பகலில் பார்த்ததை விட இப்போது சந்தடி அதிகரித்திருந்தது. சாலைகளில் தள்ளுவண்டிகள் முளைத்திருந்தன. வண்டிகளின் மேலிருந்த கண்ணாடிப் பெட்டிகளின் வழியாக மஞ்சள் வெளிச்சம்.

     ஏற்கனவெ அங்கெ நாலைந்து நண்பர்கள் இருந்தனர். அனைவரும் வேட்டி – சட்டை அணிந்திருந்தனர். நண்பர்களிடம்  சேது இவனைப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் நண்பனொருவன் காதல் கைகூடியது குறித்தும், சினிமா நடிகர்கள் பற்றியும் பேசிக் கொண்டனர். ஒருவரிடமும் தீவிரத் தன்மை இல்லாதது இவனுக்கு வருத்தமாக இருந்தது. இவன் பெரும்பாலும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். சேது அவர்களுடன் பேசுவதில் மிகவும் ஆர்வம் காட்டினான். அடிக்கொரு முறை இவனிடம் போரடிக்கிறதா எனக் கேட்டுக் கொண்டான்.

     ஒன்பது மணிக்கு மேல் அருகில் இருந்த சந்தில் பீர் குடித்தனர். மீன் வறுவலை இன்னொரு நண்பன் ஒரு இலையில் வைத்துக் கொண்டு வந்தான். இவனுக்கு வீடு திரும்புவது சங்கடமாக இருந்தது. சேதுவின் அம்மா கண்டுபிடித்துவிடுவாரோ.. உள்ளூர ஒரு பயம். அதுபற்றி வீட்டில் கவலையில்லை எனக் கூறினான் சேது. ஆச்சர்யமாக இருந்தது.

அவன் சொன்னது போலவே வீட்டில் இவர்கள் சென்றபோது அனைவரும் உறங்கியிருந்தார்கள். சேதுவின் தந்தைதான் கதவைத் திறந்தார். அவர் இவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே போய் படுத்துக் கொள்ள, இருவரும் தங்களாகவெ சாப்பாடு எடுத்துக் போட்டுச் சாப்பிட்டு, படுக்கையை ஹாலில் விரித்துப் படுத்துக் கொண்டனர். சேது உடனே உறங்கிவிட்டிருந்தான். மேலே ஃபேன் காற்று சுழன்றது.

     சற்று நிமிடத்தில் சடசடவென மழை பெய்யும் சத்தம். ஸ்டீபன் கண்களை மூடிக் கொண்டான். மறுநாள் காலை இங்கிருந்து புறப்பட்டு எங்கே  போவது என யோசித்தான். வீட்டுக்கு உடனே திரும்பி செல்ல முடியாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்த்து. மழை கனத்துப் பெய்யத் துவங்கியது.

     மறுநாள் காலை, சேதுவின் வீடு சுறுசுறுப்பாக இருந்தது. அனைவரும் இவன் எழுவதற்கு முன் குளித்துவிட்டு எங்கோ புறப்பட்டனர். இவன் ஊருக்குப் புறப்படும் தகவலைச் சொன்னதும், சேது மறுத்தான். அனைவரும் அருகில் ஒரு கோயிலுக்கு உறவினர் திருமணத்துக்குச் செல்வதாகவும் கண்டிப்பாக உடன் வந்தே தீர வேண்டும், திங்கள்கிழமை காலை புறப்படும் பயத்திலிருந்து தப்பிக்க முடிந்த சந்தோஷத்தை சேதுவுக்கு அது உள்ளுர உருவாக்கித் தந்தது.
அனைவரும் புறப்பட்டு வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பேருந்து நிறத்தத்துக்கு வந்தனர். சிந்து மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். தலை குளித்து, நேர் வகிடெடுத்து காதோர முடிகளை எடுத்துப் பின்னால் முடிச்சிட்டிருந்தாள். பாவாடை, சட்டைதான் என்றாலும், அவளுடைய தோற்றம் பளிச்சென்று இருந்தது. அருகில் நிறுத்தத்துக்கு வந்து நின்ற சுடிதார் பெண்ணைப் பார்த்ததும் இவள் சந்தோஷத்துடன் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். பள்ளித் தோழியாக இருக்காலாம். பேருந்தில் ஏறியதும் சிந்துதான் முதல் ஆளாக ஏறி ஸ்டீபனுக்கு முன் ஸீட்டில் இடம் பிடித்து தந்தாள். பின் ஸீட்டில்  தன் தோழியுடன் அவள் அமர்ந்து கொண்டாள். பயணத்தின் போது ஒரு நறுமண வாசனை, அது சிந்துவிடமிருந்தா அல்லது தோழியிடமிருந்தா. தெரியவில்லை. முகத்தில் காற்று சடசடத்து, உடல் முழுக்க ஊடுருவியது. தன் தலைக்கு மேல் வாழ்க்கை சில புக்களை விழச் செய்து தன்னைச் சாந்தப்படுத்தி இருப்பதாக எண்ணிக்கொண்டான்.

அத்தனை எளிமையான திருமணத்தை அவன் பார்த்தில்லை. மலையை ஒட்டிய ஒரு சமதளத்தில் மூன்று சிறிய கட்டடங்களாக கோயில பிரிந்து கிடந்தது. மூலஸ்தானத்துக்கு எதிரே ஒரு சிறிய மரத்தாலான கொடிக்கம்பம். கோயில் புறத்தில் தாழம்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த்து தவிர, கல்யாணம் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. மொத்தமாக 30 பேர்தான் இருப்பார்கள். நேற்று பார்த்த சேதுவின் நண்பர்கள் சிலரும் அங்கு வந்திருந்தனர். அதில் ஒருவன் சிந்துவை அடிக்கடி வம்புகிழுத்தான். சிந்துவும் பதிலுக்கு அவனைக் கிண்டலடித்தாள். பின் அனைவருக்கும் அவளே எலுமிச்சம் சாறு நிரப்பபட்ட எவர்சில்வர் டம்ளர்களைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

உணவு சற்று மோசமாகத்தான் இருந்தது. ஆனால், அதை அனைவரும் ருசித்துச் சாப்பிட்டது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியே வெற்றிலைப் பாக்கு வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சிகரெட்டுகளும் இருந்தன. நண்பர்களுடன் மறைவிடம் சென்று, கோயில் சுவரில் அமர்ந்தபடி சிகரெட் பிடித்தான். சட்டென அங்கே ஓடி வந்து சிந்து, ஸ்டீபனின் விரலிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கித் தூர எறிந்தாள். அருகிலிருந்த நண்பன் ஒருவனிடம் மலையாளத்தில் கோபித்துக் கொண்டாள். சேதுவின் நண்பர்களைக் காண்பித்து, இவர்களுடன் சேர வேண்டாம் என விளையாட்டாக்க் கூறுவதைப் போல போலியான கோபத்துடன் கூறி ஓடி மறைந்தாள். நண்பர்கள் மற்றொரு சிகரெட்டை இவனிடம் நீட்டிய போது, ஸ்டீபன் ஏனோ அதனை மறுத்தான். அந்தத் திருமணம் பல விஷயங்களில் ஸ்டீபனுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. 

இரவு வீடு திரும்பிய பின்பு, சேது தன் எதிர்கால வாழ்க்கை குறித்தும், தான் திருமணம் செய்யப்போகும் உறவுக்காரப் பெண் குறித்தும் எதை எதையோ கூறிக் கொண்டு இருந்தான். இவனால் அவற்றை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அன்று இரவு முழுக்க இவனுக்கு உறக்கம் வரவில்லை. மறுநாள்  காலை புறப்பட்டாக வேண்டும். ஏதோ ஒருவித பயம் அவன் மனதைக் கவ்வியது.

மறுநாள் காலை, சேது வழக்கம் போல புறப்படும் அவசரத்தில் அவன் அம்மா இல்லாத நேரமாகப் பார்த்து, ஸ்டீபனிடம் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தான். ஸ்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அது அவனுக்கு அவசியமாக இருந்தது. ஆனால், சேது ஏன் நம்மை இன்னும் இரண்டு நாட்கள் தங்கச் சொல்லவில்லை. ஒருவேளை அது குறித்து அவனுக்குப் பெரிய அபிப்பிராயம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். மேலும் தான் எந்த சூழலில் புறப்பட்டு வந்துள்ளோம் என்றும் அவனுக்குத் தெரியாதே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.

காலையில் தேநீர் அருந்தும்போது தான் சேதுவின் அப்பா இவனிடம் பேசினார். அதிகமில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள். எந்த ஊர், என்ன வேலை என்பது மாதிரி. இவன் பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், மதுரைக்கு ஒரு வேலை நிமித்தம் வந்ததாகவும், அப்படியெ நண்பனைப் பார்த்துப் போக வந்ததாகவும், அப்படியே நண்பனைப் பார்த்துப் போக வந்த்தாகவும் பொய் சொல்லியிருந்தான். சேதுவிடம் கூட உண்மையை வெளிப்படுத்த விரும்ப வில்லை. ஆனால் எப்படியோ அதை சேது ஊகித்திருந்தான். தன் முகம், காட்டிக் கொடுத்திருக்கக்கூடும் என்று நினைத்தான் ஸ்டீபன்.
புறப்படும்போது, எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டுக்கு வரும்படியும் பணியிடத்தில் நிறைய வேலை இருப்பதால் உடனடியாக தான் போயாக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சொன்னான் சேது. அடுத்த முறை வரும்போது மூணாறு செல்லலாம் என்றவன், ஸ்டீபனை பேருந்தில் ஏற்ற வர முடியாமை குறித்து வருத்தப்பட்டான்.
ஸ்டீபன் குளித்து முடித்து, பத்து மணிவாக்கில் புறப்படத் தயாரானான். டிபன் சாப்பிடும்போதுதான், அது உறுத்தியது. சிந்துவைப் பார்வைகளால் தேடினான். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து ஒலித்த கொலுசுச் சத்தம் இல்லாமல் வீடு ஒருவிதமான மௌனத்துடன் இருந்த்து. அம்மாவிடம் கேட்கலாமா என நினைத்து, அப்படியே தள்ளிப் போட்டான். அவளிடம் சொல்லாமல் போவது என்னவோ போலருந்த்து ஸ்டீபனுக்கு. அவள் கிணற்றடியில் இருக்கிறாள் என்பதை மட்டும் அறிந்து  கொண்டான். ஒருவித பாரம் மனதை அழுத்தியது. இந்த இரண்டு நாட்க்கிளல் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான்  சிந்துவிடம் பேசியிருப்பான். என்றாலும், அந்தச் சிறு பெண்ணிடம் சொல்லாமல் போவதை ஒரு பெரிய இழப்பாக தனக்குள் அழுத்துவதை ஸ்டீபன் உணர முடிந்த்து. கால்கள் கனத்தன. மீண்டும் ஒரு முறை பின்கட்டு நோக்கிப் பார்த்தான். வெறிச்சோடிக்கிடந்த்து. அம்மாவிடம் சொல்லிக் கண்டு புறப்பட்டான்.

உண்மையில் அவனுக்கு அழ வேண்டும் போலிருந்த்து. வாழ்நாளில் அதுவரை அவன் மோசமாக நடந்து கொண்ட அத்தனை தருணங்களும் அந்தக் கணத்தில் அவன் மணக்கண்ணில் நிழலாடின வலதர் பேக்குடன் சாலையில் நடந்தான். தொலைவில் மலைகளின் நடுவே பேருந்து நிலையம் தெரிந்தது. அவனுக்கு ஏனோ உள்ளூர ஒரு பயத்தை அது உருவாக்கியது. இனி என்ன செய்வது, எங்கெ செல்வது என எந்தத் திட்டமும் இல்லாமல் நடந்தான்.

     சிந்து ஏன் வெளியே வரவில்லை? ஒருவேளை வேண்டுமென்றே, செயற்கையாக ஒரு மௌனத்தை ஏற்படுத்த அப்படிச் செய்திருப்பாளா? அப்படியானால் அதன் மூலம் அவள் பெறப்போவது என்ன ? தன் கொலுசுச் சத்தத்துக்கு இத்தனை வலிமை இருக்கிறது என்பதை அவள் எப்படி முன்கூட்டி அறிந்தாள்?

அப்போதுதான் சட்டென ஸ்டீபனுக்குப் பொறி தட்டியது. புறப்படும்போது மேஜையின் மேல் துருப்பிடித்த கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்த்து. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸாக இருக்க வேண்டும். எதற்காக அவள் அதை மேஜை மேல் வைக்க வேண்டும்? அது ஒருவிதமான நன்றி உணர்ச்சியாக்க் கூட இருக்கலாம்.

இரண்டு நாட்களாக, தனக்கு உயிரூட்டம் தந்த ஒளியானது அணைந்துவிட்டதைப் போன்ற வெறுமையை உணர்ந்தான். எதைக்கொண்டு இதனை ஈடேற்றுவது?  எப்போதேனும் வரும் மின்மனிப்புச்சி போன்ற உறவுகள் கூட, தன் மனதில் ஏன் இத்தனை வலுவாக இடம்பிடித்து விடுகின்றன? கேள்விகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. எத்தனையோ பிரயத்தனப்பட்டும் தன்னைச் சுற்றிச் சுழலும் கழிவிரக்கத்தை அவனால் விரட்ட முடியவில்லை. கண்களில் நீர் கட்டியது.

அருகே கால்வாயில் மழை காரணமாக நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருந்த்தைப் பார்த்து அருகில் சென்றான்.  நொடிப் பொழுதுதான் தோளிலிருந்த லெதர் பேக்கைக் கழற்றி ஓடும் நீரில் வீசி எறிந்தான். அதுவரை தன்னை அழுத்திக் கொண்டு இருந்த பாரம் விலகி மனசு லேசாவதை  உணர்ந்தான். தொலைவில் , நீரில் அவனது லெதர் பேக் மிதந்து ஓடிக் கொண்டு இருந்தது!

- நன்றி ஆனந்த விகடன் 2007
.. இரண்டு வார கதையாக வெளியானது 

June 3, 2021

கொரோனாவுக்கு முந்திய கொள்ளை நோய்கள்- அஜயன்பாலா

 




வரலாற்றில் கொள்ளை நோய்களால்  உலகம் பலமுறை பெரும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது, குறிப்பாக ப்ளேக் காலரா போன்றவைகள் சீசனுக்கு சீசன் உலகத்தோடு சேத்து செத்து விளையாடும் கோடூர வியாதிகள் .அதிலும் ப்ளேக் பற்றி சொல்லவே வேணாம் . செத்த எலிகள் மூலம் உருவாகும் இந்த கொடூர நோய்  கிமு ஆறாம் நூற்றாண்டில் எகிப்தில் தாக்கத்துவங்கி குறிப்பிட்ட இடைவெளியில் பலமுறை உலகம் முழுக்க பெரும்  தாக்குதலை உண்டாக்கி பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது

குறிப்பாக 17 ,18ம் நூற்ராண்டில் இந்த கொள்ளை நோய் உருவாக்கிய அழிவின் பெரும்  பாய்ச்சலுக்கு  பல இலட்சம் மக்கள் ஐரோப்பா முழுக்க பலியாகியிருக்கின்றனர். 19ம் நூற்ராண்டின் துவக்கத்தில்  இந்தியாவிலும் நுழைந்த  பிளேக் குஜாராத்தில் நுழைந்து இமயமலை துவங்கி ராஜஸ்தான் வழியாக வட இந்தியாவில் பல்லாயிரக்கணக்கில் கொன்று வெறித்தனம் காட்டி  . 19ம் நூற்றாண்டின் இறுதியில் மும்பை கல்கத்தா என பரவி அப்படியே சில்க் ரூட் பிடித்து  ஹாங்காங் சீனா தாய்லாந்து என பரவி  பத்து லட்சத்துக்கும் அதிகமான  உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.

ஆனால் இந்த பிளேக் நோய் வரலாற்றில் பலமுறை உண்டாக்கிய பேரழிவைக் காட்டிலும்  ஒரே வருடத்தில்  பத்துமடங்கு அதிகமாக ஊழிக்கூத்தாடியதுதான் ஸ்பானிஷ் ப்ளூ எனும் கொடிய நோய் .

மற்ற நோய்களுக்காவது நோய் தாக்கி கொஞ்ச நாள்  சிகிச்சைக்கு அவகாசமிருக்கும்  ஆனால் ஸ்பானிஷ் ப்ளூ  தாக்கினால் 24 மணி நேரம் தான்  இம்மிடியட் பாஸ் போர்ட் .

1918ம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளூ எனும்  கொடும் கொள்ளை நோய் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்  உண்டாக்கிய பேரழிவு வரலாற்றில் இன்று வரை பெரும்  துயர நிகழ்வாக கருதப்படுகிறது

இதன் மருத்துவ பெயர் 1918 H1N1 . உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஐந்து கோடி மக்களை ஒரு நோய் பலி வாங்கியிருக்கிறது என்றால் அதுவும் ஆறு மாத கால இடைவெளியில் என்றால் இந்த நோயின் கொடூரத்தையும் ஊழித்தாண்டவத்தையும் நினைத்துப் பாருங்கள்  

இதைவிட வேடிக்கை என்னவென்றால் நோய் உருவாக காரணமான முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின்  ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் . இது ஏதோ உலக்ப்போருக்கும் நோய்க்கும் ஈகோ சண்டை போல இருப்பது துயர வியத்தம்

சரி இந்நோய் எப்படி உருவானது ?

வழக்கமாக ஒவ்வொரு போரின் பிறகும் பெரும் கொள்ளை நோய் ஐரோப்பாவை தாக்குவது வரலாற்று வாடிக்கை . காரணம்  போரில் செத்துப்போகும் காயம்பட்ட உடலை சரியாக  அடக்கம் செய்யாமல் ஆங்காங்கே விழுந்துகிடக்கும் போது அதில் உண்டாகும்  நுண்ணுயிரிகள் காரணமாக பெரும் நோய்த்தொற்று உருவாகும் .

முதலாம் உலகப்போர் முடிந்து ஐரோப்பாவிலிருந்து தாயகம் திரும்பிய அமெரிக்கர்கள் சிலர்   முகாம்களில் மர்மமாக இறந்து கிடந்ததை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தபோது சட்டென கண்டுபிடிக்க முடியவில்லை   துப்பாககி முனையின் சொருகப்பட்ட கத்தியின் வழியாக என்றும்  அல்லது எலியின்  மூலமாக  இந்த நோய் துவங்கியிருக்கும்  எனவும் பிற்பாடு இரு வேறு ஆய்வுகளை நோயின் துவக்கப்புள்ளியாக வெளியிட்டனர்.

1918 மார்ச் மாதம் வெறும் இரண்டு ராணுவ வீரர்களின் இறப்பில் துவங்கி பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக  பரவி அடுத்த மாதம் 46 அடுத்து 1000ம் என அதிகரித்து அக்டோபர் மாதம் மிகப்பெரிய அளவில் பரவி அமெரிக்காவில் மட்டும் ஆறு லட்சம் பேரை மொத்தமாக பலிவாங்கி பிரம்மாண்டமாக உருவெடுத்தது

ஸ்பெயின் பிரான்சு ஜெர்மனி என ஐரோப்பிய நாடுகளுக்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு நாடு திரும்பிய கப்பலில் யாரோ இரு புண்ணியவான்களுக்கு தொற்றிய இந்த ப்ளூ அனைவருக்கும் பரவி அப்படியே அவர்கள் மூலமாக பரவி ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பங்கிறகு  லட்சக்கணக்கில் காவு வாங்கியது வரலாறு   ஒட்டுமொத்தமாக பார்த்தால் அன்றைய உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இந்நோயால் பாதிக்கப்பட்டனர்.  பாதிக்கப் பட்டவர்களில் மூன்றிலிருந்து ஆறு சதவீத்தினர்  நோய்க்கு பலியாகினர்

     . இச்சமயத்தில் இந்த நோய் பற்றின தகவலை வெளிவிடாமல் அரசாங்கம் அச்சு ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டாலும்  முதல்முறையாக ஸ்பானிஷ் பத்ரிக்கை ஒன்றுதான் இந்நோய் பற்றியும் பேரழிவுகள் பற்றியும் வெளிக்கொணர அதன்  காரணமாக இதற்கு பெயரும் ஸ்பானிஷ் ப்ளூ என்றே சூட்டப்பட்டு வரலாற்ரில் நிலைத்துவிட்டது

இன்று உலகமே அமெரிக்க கலாச்சராம் எனச் சொல்லி வரும் பாப் கலாச்சாராம் தோன்றியதே இந்த ஸ்பானிஷ் ப்ளூ  பேரிழப்புக்குப் பின்தான். . காரணம் இந்த நோய் அமெரிக்காவில் பல குடும்பங்களை அனாதையாக்கியது .இது வயதனாவர்களை விட  35 வயதுமுதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக  வேட்டையாடிக்கொன்றது . பல குடும்பங்களில் வயதானவர்களும் குழ்ந்தைகளும் மட்டூமே எஞ்சினர் ..அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே மாதத்தில் அனாதைகளாயினர் .  ஒரு குடும்பத்தில் குறைந்தது மூன்று பேர் கண்முன் அடுத்தடுத்து பிணமாகிக்கொண்டிருந்தனர்..மொத்தமாக ஆறு மாதங்களில் 6 லட்சத்து 75ஆயிரம் பேர் அமெரிக்காவில் மட்டும் இந்த கொள்ளை நோய்க்கு பலியாகியிருக்கின்றனர்

இதுதான் அம்மக்களிடையே  வாழ்க்கையின் மீது தீராத கசப்பை  உருவாக்கியது .அன்பு பாசம் நீதி நியாயம் எல்லாவற்றையும் வெறுக்க வைத்தது.  இந்த நோயின் விளைவால் உண்டான மனச்சிதைவுதான்  அடுத்த  தலைமுறையை அர்த்தமற்று  கூச்சலிடும் ராக் இசை  நோக்கி ஐம்பதுகளில் உந்தித்தள்ளியது . பணத்தை சேர்த்துவைப்பது அர்த்தமில்லை  வாழும் வரை வாழ்க்கை எனும் புதிய வாழ்க்கையை புது கலாச்சாரத்தை நோக்கி இழுத்துச்சென்றது . புதுப் புது மாஃபியாக்கள் உருவாகினர் .1000ம் துப்பககி ஏந்திய குண்டர்களுடன் அமெரிக்காவையே கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அல்கொப்போன் எனும் பெரும் மாபியா இக்காலத்தில்தான் உருவானான்.

இப்படிப்பட்ட கொடூர ஸ்பானிஷ் ப்ளூ காலத்தில் இல்லாமல் நாம் சாதாரண கொரானா காலத்தில் வாழ்வதை எண்ணி கொஞ்சம்  ரிலாக்சாக  இருக்கலாமே பிரண்ட்ஸ்  

 

 

June 2, 2021

இளையராஜா- எங்கள் பண்பாட்டு த்தலைவன் -அஜயன் பாலா

 சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளி அனைவரையும். நெகிழ்ச்சியூட்டியது.  .வெள்ளை வேட்டியும் வெற்றுடம்புமாக   சைவ அடியார் கோலம் தரித்து ஒருவர் கிடாரில் இளையராஜாவின் இசையில் வந்த திரையிசை பாடலான   இளைமை எனும் பூங்காற்றே பாட;லை வாசிக்க உடன் அதே கோலத்தில் அவர் அருகே நிற்கும் பலரும் கண்ணில் நீர்வழிய அந்த பாடலைப்  பாடுகின்றனர் . காமிரா இப்போது லேசாகத் திரும்ப அங்கு மரப்பெட்டியில் வைத்திருக்கும் ஒரு சடலத்திற்கு  இறுதிச் சடங்கு நிகழ்கிறது  கலாச்சார அதிர்ச்சியூட்டும் அந்த காட்சியின் வினோதம் பல்வேறு மனப் படிமங்களை  கிளறிவிட்டது.

 .மலேசியாவில் இறந்த அந்த இளைஞன் அதி  தீவிர இளையராஜா ரசிகன் .தன்  மரணத்தின்  இறுதிச் சடங்கின் போது இளையராஜா பாடல்கள் தான்  இசைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை தான் அந்த நண்பர்கள்  நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் .

    இது தான் இளையராஜா .  இப்படி ஒரு வினொதம் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலாவது நிகழுமா ஏன் உலகத்தின் வேறெந்த மொழியிலாவது வெகு ஜன சினிமா பாடலை  இறுதி சடங்கில் இசைப்பார்களா என்றால் இல்லை என்று தான் பதில்.

    ஒரு மொசார்டுக்கு ஆஸ்திரிய மகக்ள் கொடுக்கும் மரியாதைக்கும் பீத்தோவானுக்கு பெல்ஜியம் மக்கள் கொடுக்கும் மரியாதைக்கும் நிகரானது இது.   அவர்களாவது செவ்வியல் இசையின் பிதாமகன்கள் ஆனால் இளையராஜாவோ சினிமா எனும் வணிக இசையைச் சேர்ந்தவர்.   இப்படியிருக்க ஏன் இப்படி தமிழர்கள் மத்தியில், இளையராஜா மேல்  அப்படி ஒரு வெறி ?

   .சமீபத்தில் கூட ஒரு பெண்கள் கல்லூரியில் இளையராஜா தென்றல் வந்து தீண்டும் போது பாடலை பாடப்போக ஒட்டு மொத்த பெண்களுமே கண்ணில் நீர் வழிய உணர்ச்சி அலைகளை எழுப்பியதை பார்க்க முடிந்தது . அவர்கள் அனைவரும் கருவில் உதிக்கும் முன்பே உருவாக்கப்பட்ட பாடல் அது என்பதுதான் விசேஷம் .

    இப்படியாக ஒரு வெகுஜன  இசைக்கலைஞருக்கு ஒட்டு மொத்த சமூகமும் உணர்ச்சி களை பிரதிபலிப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

    காரணம் .. இந்த வழிபாடு அவர்களின் ஆதி ஞாபகம் .-தமிழர்களின் உடல் செய்யும் நன்றிக்கடன் . 

    எதற்காக இந்த உடல்கள் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்?

    அது தான்  இளையாராஜா இசை வழி செய்த மகத்தான புரட்சி .க்லாச்சாரபண்பாட்டு விடுதலை

    உலகம் முழுக்க   இசை என்றால் மனித வாழ்க்கையில் கொண்டாட்டமும் கேளிக்கையும். தான் ஆனால் வேட்டை சமூகத்தில்  தொல்குடி மரபு தொட்டு  இசையே தங்களை ஆற்றுப்படுத்தும் மருந்தாக  காலம் காலமாக பயனபடுத்தி வருகின்றனர் ..நமது தமிழ்ப் பண்பாடு பெரும்பாலும் வேட்டை சமூகத்தின் வாழ்வியலை ஒட்டி கட்டமைகப்பட்டது .( இதனால் தான் பெருந்தெய்வங்கள் மதம் என்ற  பெயரில் ஆட்சி அதிகாரத்தால் நம் மீது திணிக்கப்பட்டும்  இனனமும் நமது குல தெய்வ வழிபாடு மூலம் மூனீஸ்வரனும்  கருப்பனும் பேச்சியும்  சுடலை மாடனும் மாரியும் இன்னும் எல்லையம்மன்களும் அண்ணன் மாரும் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர்)

     இதனையொட்டி  நமக்கென காலம் காலமாக ஒரு இசை மரபு ஒன்று இருந்து வந்தது மன்னராட்சியில் மக்கள் கூடி வாழத்துவங்கியதும் அந்த இசை பண்படுத்தப்பட்டு பல்வேறு கூறுகளுடன் அவை பண்களாக பிரிக்கப்பட்டு தாளக்கட்டுக்கள் வரிசைபடுத்தப்பட்டன . இவையே பிற்காலத்தில் தமிழிசையென அடையாளாம் பெற்றன . இப்படியாக தமிழிசை கண்ட வளர்ச்சியின் அடையாளங்களை சங்க இலக்கியம் தொட்டு பல்வேறு சான்றுகளும் தரவுகளும் நம் இலக்கியங்களில்  இருப்பதை காணமுடியும்.

  . ஆனால் காலப்போக்கில் கடந்த சில நூற்றாண்டுகளாக  நாயக்கர் காலத்துக்குப் பின் ஆட்சியாளர்களின் மாற்றத்துக்கேற்ப அறிவார்ந்த சமூகமும் மாறி புதிய வகை இசைகள் நம்மில் ஆட்சி செய்ய திணிக்கப்ட்டன.  நாயக்கர் காலத்தில் கர்நாடாக இசை வளர்க்கப்பட்டு பிற்பாடு பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் அதுவே தொடர்ந்து பிராமண சமூகத்தாரால் முன்னிறுத்தப்பட்டு நமக்கான ஆதி இசை மறுக்கப்படு ஒரு வகை கலாச்சார அழிப்புக்கு ஆளானோம் . நம் வாழ்வியலுக்கும் அந்த இசைக்கும் ஒட்டும் தொடபில்லை இப்படியாக நம் வாழ்வின்  . இசை நம்மிடம் பறிக்கப்ப்ட்டதால் தமிழ்ர்களிடையே கூட்டுணர்வும் பறிக்ப்பட்டது. இசை வழியாக நமக்குள் நடந்த உணர்ச்சி பரிமாற்றங்கள் தடைபட்டன.  அதேசமயம் கிராமங்களில் சில  பண்பாட்டு அடையாலங்களலும் வழிபாடுகளாலும் மட்டும் அவை காக்கப்பட்டு வந்தன.

 

   யோசித்துப்பாருங்கள்  சென்ற நூற்ராண்டில் இசையென்றாலே கர்நாடக இசைதான் . அக்காலங்களில்  கர்நாடக இசை நாடக உலகிலும் சினிமா தோன்றிய பின்னும் நம்மை முழுவதுமாக  ஆக்ரமித்திருந்ததை யாராவது மறுக்க முடியுமா? . பாகவதர்கள்  சூப்பர் ஸ்டார்களாகவே கொண்டாடப் படுமளவுக்கு கர்நாடக இசை நம்மை ஆக்ரமித்திருந்தது. சாதாரண பாமரர்கள் கூட கர்நாடக இசைதான் நம் இசை என நம்பி மாட்டு வண்டி கட்டிபோய் கச்சேரி கேட்டு வந்தனர். இசை  புரிந்தவர் சிலர் என்றல புரியாத பலரும் தலையாட்டி பாவனை செய்து வந்த கொடுமையும்  நடந்தது. இத்தோடு சினிமாவில் இசை ஆதிக்கம் அதிகமாகி அவை மெல்லிசையான காலத்திலும் அவை ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த கர்நாடக இந்துஸ்தானி இசை அடிப்படையிலேயே இசைக்கப்பட்டன

இடைபட்ட காலத்தில் திராவிட இயகக்த்தின் எழுச்சியும் மறைமலையடிகள்  போன்ற தமிழ் உணர்வாளர்களும் இணைந்து நடத்திய மொழிபோரடடங்கலின் விளைவாக மொழியில்  பிற மொழி ஆதிக்கம் தகர்க்கப்பட்டாலும்  இசையுணர்வுகு மட்டும் விடியல் கிடைக்கவில்லை 

    இப்படியாக நம் இசை அடையாளம் பண்பாடு ஆகியவை நம் ஞாபகத்திலிருந்து முழுமையாக ஒழிக்கப்பட்டு அன்னிய இசை கேட்டு வளர்ந்த காரணத்தால் நம்  வாழ்வும் வளர்ச்சியும் சோர்ந்து சுறுசுறுப்பில்;லாமல் இருந்தது . தமிழர்கள் வாழ்வு கிட்டத்தட்ட ஒரு கலச்சார இருட்டில் திக்கு தெரியமால் திக்கிக்கொண்டிருந்த போது தொலைதூர வெளிச்சப் புள்ளியாய்  1975ல்  அந்த இசைகேட்டது

   . ஜான்கியின் குரலில் ஒரு தெம்மாங்கு போல ஒரு ஏக்கம் நிறைந்த குரல் காடுகழனி கம்மாய் ஏரி குளம் எல்லா இடங்களிலும் எதிரொலித்த்து  அன்னக்கிளி  உன்னைத்தேடுதே  பாடலின் துவக்க்த்தில் வரும் அந்த ஏக்கம் நிறைந்த அந்த குரல்.  அந்த குரலின் தெம்மாங்கு ஓசையில் தமிழர்கள் நாடி நரம்புகளில் உயிர்த்துடிப்பை உணர்ந்தனர் . அவரது இசையில் ராகத்தில் தாளக்கருவிகளின் இசையால்   தஙக்ள் மூளையின் அடி ஆழத்தில் ஒட்டிக்கிடந்த திசுக்கள கண்விழிப்பதை உணர்ந்தனர்

    அந்த படத்தின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டி எங்கு வெற்றிபெற்றன . முதன்முறையாக் தமிழ் கிராமத்து மக்கள் ஒரு சினிமா இசை தன் வாழ்வில் பிரதிபலிப்பதை  உணர்ந்தனர்.

   வேட்டை சமுகத்தின் பரந்து பட்ட  நில வெளி அந்த இசையில் காட்சியால் விரியத் துவங்கியது .தொடர்ந்து கவிக்குயில் பதினாறு  வய்தினிலே கிழக்கே போகும் ரயில்  என தமிழர்களின் நிலப்பரப்யு இசை வேட்டை சமூகத்தின் வினோத ஒலிகளை ஆடுகள் தாவும்போது கெட்கும் கழுத்து மணி சப்தங்களை வான்ம்பார்த்த பூமியில் விவசாயி முதல் மழை தரிசிக்கும் சந்தோஷத்தை , என அவர்களது வாழ்வை  அந்த இசை  பிரதிபலிக்கத்துவங்கியது  அதுவரை பூட்டிக்கிடந்த அவன் உனர்வுகளுக்கு  புது ரத்த,ம் பாய்ச்சப்பட்டது போல உணர்ந்தான்

    காட்சிகளின் பின்


னணி இசையில் அவர் கொண்டு வந்த சப்தங்களில் அவர் நிகழ்த்திக் காட்டியது ஒரு புரட்சி .அங்கு அவர் தொட்டது வாழ்வியல் பிரதிபலிப்பு.  .அதுவரை சினிமாவில் தவிர்க்கப்பட்ட பறை இசையை ஒலிக்கச்செய்து பின்னணி இசையில் புதிய பரிமாணம் காட்டியவர்  ஒவ்வொரு படமாக சில காட்சிகளின் பின்னணி இசைகுறித்து எழுதப்போனல் அது ஆயிரம்பக்கம் நூலாக எழுதிச் செல்லலாம்..   குறிப்பாக ரொசாப்பூ ரவிக்கைக்காரி மற்றும் முள்ளும் மலரும் போன்ற படங்களின் பாடல்களில் அவர் இசைத்த பழங்குடி இசை இதுவரை தமிழ் உலகம் கேட்டறியாதது

    இபடிப்பட்ட இசையால் அவரை பலரும் தகரடப்பா இசை என விமர்சித்த போது  கர்நடாக சங்கீதத்திலும் மேற்கத்திய சாஸ்திரிய இசையிலும் வேறு எவருமே தொட முடியாத இசை உச்சங்களை தொட்டு  தான் இசை வழி ஆளப்பிறந்தவன் என்பதை நிரூபித்துக்காட்டினார். இதனால் அவரை எதிர்த்தவர்களும் அவரது ரசிகர்களாக மாறினர் என்பது வரலாறு

    இன்று தமிழ்  தேசியம் எது என பலரும் பல வித கருத்துக்கள்  சொல்கின்றனர்.  எங்கெல்லாம் இளையராஜா இசை ஒலிக்கப்படுகிறதோ அது எல்லாம் தமிழர் நிலம் அவர்கள் எல்லோருமே தமிழர்கள் அவர்கள் ரத்த நாளங்களில்  தமிழ் மண் எங்கோ ஒட்டிகிடக்காமல் அவர்களல இளையராஜாவின் இசையை ரசிக்க முடியாது

    இப்படியாக் நம் வாழ்வோடும் வெளியோடும் வீசும் காற்றோடும்  இளையராஜாவின் இசை ஒன்றிக்கிடப்பதல தான்  இரவுகளில் அவர் இசை அதிகம் கேட்கப்படுகிறது நாற்பது வருட காலத்தில் எத்தனையோ படல் வந்த பின்னும்  தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலே எனும் பாட்டை கேட்ட மாத்திரத்தில் கண்ணீரை உகுக்க முடிகிறது

    உலகமெங்கும் வாழும் பல கோடி தமிழர்கள்  அன்னிய நிலப்பகுதியின் நெடுஞ்சாலைகளில் கார் ஓட்டும் போது அவர்களை மீறிய  பரவசம் கண்களில் முகத்தில் மின்னுகிறதென்றால் அவர்களின் காரில் இளையராஜா  அவர்களது உடலோடு உரையாடிக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்

    நம் மண்ணில் பெரியார் உருவாக்கிய விடுதலை ஒன்று என்றால் அதற்கு நிகரான கலச்சார விடுதலை  பெற்றுத்தந்து வாழ்வுரிமை மீட்டவர் இளையராஜா அவர்கள்

 இன்று   அவருக்கு பிறந்த நாள் என்பதும் அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதும் நமக்கு எப்பேர்பட்ட  பேறு என்பதை இந்த நாள் ம்ழுக்க ஒவ்வொரு கணத்திலும் உணர்வதே நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன் .

  நன்றி :www.thenewslite.com

 

பாப்லோ நெருடா வாழ்வும் கவிதைகளும்

காதல் இயற்கை புரட்சி மற்றும் வெங்காயம்                                               - அஜயன் பாலா பாப்லோ நெரூடா ( Pablo Neruda, 1904–1...