சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளி அனைவரையும். நெகிழ்ச்சியூட்டியது. .வெள்ளை வேட்டியும் வெற்றுடம்புமாக சைவ அடியார் கோலம் தரித்து ஒருவர் கிடாரில் இளையராஜாவின் இசையில் வந்த திரையிசை பாடலான இளைமை எனும் பூங்காற்றே பாட;லை வாசிக்க உடன் அதே கோலத்தில் அவர் அருகே நிற்கும் பலரும் கண்ணில் நீர்வழிய அந்த பாடலைப் பாடுகின்றனர் . காமிரா இப்போது லேசாகத் திரும்ப அங்கு மரப்பெட்டியில் வைத்திருக்கும் ஒரு சடலத்திற்கு இறுதிச் சடங்கு நிகழ்கிறது கலாச்சார அதிர்ச்சியூட்டும் அந்த காட்சியின் வினோதம் பல்வேறு மனப் படிமங்களை கிளறிவிட்டது.
.சமீபத்தில் கூட ஒரு பெண்கள்
கல்லூரியில் இளையராஜா தென்றல் வந்து தீண்டும் போது பாடலை பாடப்போக ஒட்டு மொத்த பெண்களுமே
கண்ணில் நீர் வழிய உணர்ச்சி அலைகளை எழுப்பியதை பார்க்க முடிந்தது . அவர்கள் அனைவரும்
கருவில் உதிக்கும் முன்பே உருவாக்கப்பட்ட பாடல் அது என்பதுதான் விசேஷம் .
இதனையொட்டி நமக்கென காலம் காலமாக ஒரு இசை மரபு ஒன்று இருந்து வந்தது மன்னராட்சியில் மக்கள் கூடி வாழத்துவங்கியதும் அந்த இசை பண்படுத்தப்பட்டு பல்வேறு கூறுகளுடன் அவை பண்களாக பிரிக்கப்பட்டு தாளக்கட்டுக்கள் வரிசைபடுத்தப்பட்டன . இவையே பிற்காலத்தில் தமிழிசையென அடையாளாம் பெற்றன . இப்படியாக தமிழிசை கண்ட வளர்ச்சியின் அடையாளங்களை சங்க இலக்கியம் தொட்டு பல்வேறு சான்றுகளும் தரவுகளும் நம் இலக்கியங்களில் இருப்பதை காணமுடியும்.
யோசித்துப்பாருங்கள் சென்ற நூற்ராண்டில் இசையென்றாலே கர்நாடக இசைதான் . அக்காலங்களில் கர்நாடக இசை நாடக உலகிலும் சினிமா தோன்றிய பின்னும் நம்மை முழுவதுமாக ஆக்ரமித்திருந்ததை யாராவது மறுக்க முடியுமா? . பாகவதர்கள் சூப்பர் ஸ்டார்களாகவே கொண்டாடப் படுமளவுக்கு கர்நாடக
இசை நம்மை ஆக்ரமித்திருந்தது. சாதாரண பாமரர்கள் கூட கர்நாடக இசைதான் நம் இசை என நம்பி
மாட்டு வண்டி கட்டிபோய் கச்சேரி கேட்டு வந்தனர். இசை புரிந்தவர் சிலர் என்றல புரியாத பலரும் தலையாட்டி
பாவனை செய்து வந்த கொடுமையும் நடந்தது. இத்தோடு
சினிமாவில் இசை ஆதிக்கம் அதிகமாகி அவை மெல்லிசையான காலத்திலும் அவை ஏற்கனவே ஆதிக்கத்தில்
இருந்த கர்நாடக இந்துஸ்தானி இசை அடிப்படையிலேயே இசைக்கப்பட்டன
இடைபட்ட காலத்தில் திராவிட இயகக்த்தின் எழுச்சியும் மறைமலையடிகள் போன்ற தமிழ் உணர்வாளர்களும் இணைந்து நடத்திய மொழிபோரடடங்கலின் விளைவாக மொழியில் பிற மொழி ஆதிக்கம் தகர்க்கப்பட்டாலும் இசையுணர்வுகு மட்டும் விடியல் கிடைக்கவில்லை
இப்படியாக நம் இசை அடையாளம் பண்பாடு ஆகியவை நம் ஞாபகத்திலிருந்து முழுமையாக ஒழிக்கப்பட்டு அன்னிய இசை கேட்டு வளர்ந்த காரணத்தால் நம் வாழ்வும் வளர்ச்சியும் சோர்ந்து சுறுசுறுப்பில்;லாமல் இருந்தது . தமிழர்கள் வாழ்வு கிட்டத்தட்ட ஒரு கலச்சார இருட்டில் திக்கு தெரியமால் திக்கிக்கொண்டிருந்த போது தொலைதூர வெளிச்சப் புள்ளியாய் 1975ல் அந்த இசைகேட்டது
. ஜான்கியின் குரலில் ஒரு தெம்மாங்கு போல ஒரு ஏக்கம் நிறைந்த குரல் காடுகழனி கம்மாய் ஏரி குளம் எல்லா இடங்களிலும் எதிரொலித்த்து அன்னக்கிளி உன்னைத்தேடுதே பாடலின் துவக்க்த்தில் வரும் அந்த ஏக்கம் நிறைந்த அந்த குரல். அந்த குரலின் தெம்மாங்கு ஓசையில் தமிழர்கள் நாடி நரம்புகளில் உயிர்த்துடிப்பை உணர்ந்தனர் . அவரது இசையில் ராகத்தில் தாளக்கருவிகளின் இசையால் தஙக்ள் மூளையின் அடி ஆழத்தில் ஒட்டிக்கிடந்த திசுக்கள கண்விழிப்பதை உணர்ந்தனர்
வேட்டை சமுகத்தின் பரந்து பட்ட நில வெளி அந்த இசையில் காட்சியால் விரியத் துவங்கியது
.தொடர்ந்து கவிக்குயில் பதினாறு வய்தினிலே
கிழக்கே போகும் ரயில் என தமிழர்களின் நிலப்பரப்யு
இசை வேட்டை சமூகத்தின் வினோத ஒலிகளை ஆடுகள் தாவும்போது கெட்கும் கழுத்து மணி சப்தங்களை
வான்ம்பார்த்த பூமியில் விவசாயி முதல் மழை தரிசிக்கும் சந்தோஷத்தை , என அவர்களது வாழ்வை அந்த இசை பிரதிபலிக்கத்துவங்கியது அதுவரை பூட்டிக்கிடந்த அவன் உனர்வுகளுக்கு புது ரத்த,ம் பாய்ச்சப்பட்டது போல உணர்ந்தான்
காட்சிகளின் பின்
னணி இசையில் அவர் கொண்டு வந்த சப்தங்களில் அவர் நிகழ்த்திக் காட்டியது ஒரு புரட்சி .அங்கு அவர் தொட்டது வாழ்வியல் பிரதிபலிப்பு. .அதுவரை சினிமாவில் தவிர்க்கப்பட்ட பறை இசையை ஒலிக்கச்செய்து பின்னணி இசையில் புதிய பரிமாணம் காட்டியவர் ஒவ்வொரு படமாக சில காட்சிகளின் பின்னணி இசைகுறித்து எழுதப்போனல் அது ஆயிரம்பக்கம் நூலாக எழுதிச் செல்லலாம்.. குறிப்பாக ரொசாப்பூ ரவிக்கைக்காரி மற்றும் முள்ளும் மலரும் போன்ற படங்களின் பாடல்களில் அவர் இசைத்த பழங்குடி இசை இதுவரை தமிழ் உலகம் கேட்டறியாதது
இபடிப்பட்ட இசையால் அவரை பலரும் தகரடப்பா இசை என விமர்சித்த போது கர்நடாக சங்கீதத்திலும் மேற்கத்திய சாஸ்திரிய இசையிலும் வேறு எவருமே தொட முடியாத இசை உச்சங்களை தொட்டு தான் இசை வழி ஆளப்பிறந்தவன் என்பதை நிரூபித்துக்காட்டினார். இதனால் அவரை எதிர்த்தவர்களும் அவரது ரசிகர்களாக மாறினர் என்பது வரலாறு
இன்று தமிழ் தேசியம் எது என பலரும் பல வித கருத்துக்கள் சொல்கின்றனர். எங்கெல்லாம் இளையராஜா இசை ஒலிக்கப்படுகிறதோ அது எல்லாம் தமிழர் நிலம் அவர்கள் எல்லோருமே தமிழர்கள் அவர்கள் ரத்த நாளங்களில் தமிழ் மண் எங்கோ ஒட்டிகிடக்காமல் அவர்களல இளையராஜாவின் இசையை ரசிக்க முடியாது
நன்றி :www.thenewslite.com
3 comments:
Excellent machi
அருமை
அருமையான கட்டுரை. பண்ணைபுறத்து இசை, நம் பண்பாட்டு இசை. ராஜா என்றும் ராஜா தான்.
Post a Comment