June 5, 2026

பிரான்ஸ் காஃப்கா மற்றும் மேக்ஸ் ப்ரோட் - உலகம் போற்றும் இலக்கிய நட்பு - .உலக இலக்கியச் சா|ளரம்

div class="separator" style="clear: both;">
தமிழிலக்கியத்தில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு ஒரு இலக்கிய சாட்சி . என்றால் உலக இலக்கியத்தில் . பிரான்ஸ் காஃப்கா மற்றும் மேக்ஸ் ப்ரோட் –இருவருக்குமான நட்பு என்பது உலகிற்கே எடுத்துக்கட்டான ஒன்று . ஒரு சிறந்த நட்பு என்ன செய்யும் என்ன செய்ய வேண்டும் என்பதை இக்கட்டுரையின் இறுதியில் அறிந்து கொள்ள முடியும் ஐரோப்பிய இலக்கிய வரலாற்றில், Franz Kafka என்ற பெயர் தனிமையும் துயரமும் நிறைந்த ஒரு உலகத்தை நினைவூட்டுகிறது. மனித மனத்தின் இருண்மைகளை அவரைப் போல படைப்புகளாக எழுதியவர் எவரும் இல்லை. இலக்கியம் என்பது மனித மனத்தை உற்சாகமாகவும் அழகியல் நுண்ணுணர்வு மிக்கதாகவும் மாற்ற வேண்டும் என்ற கருத்தாக்கம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிதறடிக்கப்பட்டது. ஐரோப்பாவில் வல்லாதிக்க பேரரசுகளின் உருவாக்கமும், அதனால் ஏற்பட்ட World War I-மும் எளிய மனிதர்களின் வாழ்வை சிதைத்தன. அமைதியான எதார்த்த வாழ்க்கை குரூரமான ஒன்றாக மாறியது. வன்முறை, நோய், பயம், அச்சம் ஆகியவை மனிதர்களை சூழ்ந்தன. ஆனால் அக்கால இலக்கியப் படைப்புகள் இதற்கு தலைகீழாக, அழகியல் ரசனைகளையும் அன்பு, கருணை போன்றவற்றையே உலகம் எனக் காட்டும் போலித்தனமான நாடகியங்களால் நிரம்பியிருந்தன. இந்தச் சூழலில், மனிதர்களை பீடித்த நெருக்கடியும் இருண்ட உலகையும் வெளிப்படுத்தும் புதிய எழுத்து நடை ஐரோப்பாவில் உருவாகத் தொடங்கியது. சிதைந்த வாழ்க்கையின் இருண்மையை வெளிக்கொணர்வதே உண்மையான படைப்பு என்ற அடிப்படையில் புதிய இலக்கிய வடிவம் உருவானது. பின்னர் அது Existentialism என அழைக்கப்பட்டது. கவிதை, சிறுகதை, நாவல் என விரிவடைந்து உலகம் முழுவதும் பரவியது. இந்த இலக்கிய மரபின் ஆகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக கொண்டாடப்படுபவர் காஃப்கா. ஃப்கா 1883 ஜூலை 3 ஆம் தேதி Prague நகரில் பிறந்தார். அப்போது அந்த நகரம் ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. அவர் ஒரு நடுத்தர வர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். வீட்டில் ஜெர்மன் மொழி பேசப்பட்டது. ஆனால் சுற்றிலும் செக் மொழி மற்றும் யூத கலாச்சாரம் கலந்து இருந்ததால், சிறு வயதிலிருந்தே “நான் யாருக்கு சொந்தமானவன்?” என்ற அந்நிய உணர்வு அவருள் உருவாகியது. காஃப்காவின் தந்தை Hermann Kafka ஒரு வியாபாரி. மிகக் கடுமையான, அதிகார மனப்பான்மை கொண்ட மனிதர்.ஏழ்மையிலிருந்து உழைத்து முன்னேறியதால், வாழ்க்கையை வெற்றியும் கட்டுப்பாடும் மூலமாக மட்டுமே பார்த்தார். அவருக்கு காஃப்காவின் மென்மையான குணம் பிடிக்காது.காஃப்கா தனது தந்தையைப் பற்றி பின்னர் “Letter to His Father” என்ற நீண்ட கடிதம் எழுதினார். அதில்: தந்தையின் கோபம் அவமதிப்பு மன அழுத்தம் தன்னம்பிக்கையின்மை இவைகள் எப்படி தன்னை உடைத்தன என்பதை அவர் விவரிக்கிறார். காஃப்காவின் பல கதைகளில் வரும்: பயமூட்டும் அதிகாரம் மனிதனை நசுக்கும் அமைப்பு எப்போதும் குற்றவாளி போல உணரும் மனநிலை இவை எல்லாம் அவரது தந்தையுடன் இருந்த உறவின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகின்றன. காஃப்காவுக்கு மொத்தம் ஐந்து உடன்பிறப்புகள் இருந்தனர்.ஜியோர்க் காஃப்கா , ஹெய்ன்ரிச் காஃப்கா இந்த இரு தம்பிகளும் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். இந்த மரணங்கள் குடும்பத்தில் ஒரு துக்க நிழலை ஏற்படுத்தின. அவருக்கு மூன்று சகோதரிகள் Gabriele Kafka (எல்லி) Valerie Kafka (வல்லி) Ottilie Kafka (ஒட்லா) இவர்களில் ஒட்லாவுடன் காஃப்காவுக்கு மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. அவர் காஃப்காவை உண்மையாகப் புரிந்துகொண்ட ஒரே குடும்ப உறுப்பினர் என சொல்லப்படுகிறது. அவரது தாய் Julie Kafka கல்வியறிவு கொண்ட அமைதியான பெண். காஃப்காவுக்கு அன்பாக இருந்தாலும், பெரும்பாலும் தந்தையின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்தார். அவர் வீட்டிலும் கடையிலும் வேலை பார்த்ததால், காஃப்காவுடன் ஆழமான நெருக்கம் உருவாகவில்லை. இதனால் காஃப்கா சிறு வயதிலிருந்தே தனிமையாக உணர்ந்தார். இதன் விளைவாகத்தான் iஅவரது கதைகள் அனைத்தும் தனிமனித இருப்புக்கு எதிராக செயல்படும் அதிகார அமைப்புகளையும், மனிதன் சிக்கிக்கொள்ளும் கண்ணுக்கு தெரியாத கட்டமைப்புகளையும் பற்றியவையாக இருந்தன. நம்மை தெரியாமல் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தின் நுண்மையான வலைப்பின்னலை அவர் போல உருவகப்படுத்தி எழுதியவர் அரிது. பள்ளிக் காலத்திலேயே காஃப்காவுக்கு வாசிப்பில் தீவிர ஆர்வம் உருவானது. ஜெர்மன் இலக்கியம், தத்துவம், நாடகம் போன்றவற்றை ஆர்வமாக படித்தார். நண்பர்கள் இருந்தாலும், அவர் பெரும்பாலும் தனியாகவே இருப்பதை விரும்பினார். கூட்டங்களில் கலந்துகொண்டாலும், அதிகம் பேசாமல் கவனித்துக்கொண்டிருப்பார். இளம் வயதில் அவரை மிகவும் பாதித்த விஷயம் “அந்நிய உணர்வு”. அவர் வாழ்ந்த பிராக் நகரில்: செக் மக்கள் ஜெர்மன் மொழி பேசுவோர் யூதர்கள் என பல அடையாளங்கள் கலந்திருந்தன. இதனால் “நான் யாருடைய உலகில் இருக்கிறேன்?” என்ற குழப்பம் அவருள் உருவானது. இந்த உணர்வே பின்னர் அவரது படைப்புகளின் மையமாக மாறியது. இளம் வயதிலேயே காஃப்கா எழுதத் தொடங்கினார். ஆனால் அவர் தன் எழுத்துகளில் எப்போதும் திருப்தியடைவதில்லை. பலவற்றை கிழித்தெறிவார். தன் படைப்புகளை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. ஆனால் அன்றைய இலக்கிய உலகம் எதார்த்தமான கதை சொல்லிகளையே கொண்டாடிக் கொண்டிருந்தது. தன் படைப்புகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்ற அச்சம் காஃப்காவுக்கு இருந்தது.அக்காலத்தில் காபி ஹவுஸ்கள் இலக்கிய உலகின் கூடாரங்களாக இருந்தன. France மற்றும் Germany நாடுகளில் இருந்த பல காபி ஹவுஸ்கள் இன்று கலாச்சார வரலாற்றின் அடையாளங்களாக திகழ்கின்றன. காபி ஹவுஸ்கள் என்பது வெறும் காபி குடிக்கும் இடமல்ல — எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், கலைஞர்கள், அரசியல் விவாதக்காரர்கள் கூடும் இடமாக இருந்தது. காஃப்காவும் அந்தச் சூழலை விரும்பியவர். அவர் மிகவும் அமைதியான, உள்ளார்ந்த மனிதர் என்பதால் பெரும் கூட்டங்களில் கலந்துகொள்வதைவிட அமைதியாக அமர்ந்து கவனிப்பதையே விரும்பியதாக அவரது நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் அடிக்கடி சென்ற இடங்களில் ஒன்று, Café Louvre என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற கஃபே. அங்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் பெரும்பாலும் அமைதியாக அமர்ந்து கேட்பவராகவே இருந்தார். அவரது நெருங்கிய பெண் நண்பர்கள் இருவர் — Felice Bauer மற்றும் Milena Jesenská. இருவருமே வேறு வேறு காலங்களில் அவருடன் நெருக்கமாக பழகினர். இருவரின் மீதும் அவர் தீவிரமான காதல் கொண்டிருந்தார். ஆனால் திருமணம் என்ற உறவுக்குள் சிக்கிக்கொள்வதை அவர் விரும்பவில்லை. திருமணம் அவரது எழுத்தை அழித்துவிடுமோ என்ற அச்சம் அவரை தொடர்ந்து துரத்தியது. ஒருபுறம் அவர் தீவிரமாக காதலித்தார்; மறுபுறம் அந்த உறவிலிருந்து விலகி ஓடிக்கொண்டிருந்தார். Felice உடன் இரண்டு முறை நிச்சயதார்த்தம் நடந்தும் இரண்டும் முறிந்தன. Kafka அவருக்கு கடைசி வரை ஒரு மர்மமான மனிதராகவே இருந்தார்.Felice-க்கு பிறகு Kafka-வின் வாழ்க்கையில் வந்தவர் Milena Jesenská. அவர் ஒரு செக் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். Kafka-வின் படைப்புகளை செக் மொழிக்கு மொழிபெயர்த்தவர். அந்த இலக்கிய உறவு விரைவில் ஆழமான உணர்ச்சி உறவாக மாறியது.Milena-விடம் Kafka மிகவும் திறந்த மனதுடன் எழுதினார். அவரது பயம், உடல்நிலை, தனிமை, காதல் பற்றிய குழப்பங்கள் — அனைத்தையும் அவர் Milena-வுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களுடைய கடிதங்கள் பின்னர் Letters to Milena என்ற பெயரில் வெளியானது. உலக இலக்கியத்தின் மிக ஆழமான காதல் கடிதங்களில் இதுவும் ஒன்று என கருதப்படுகிறது. Milena Kafka-வை வெறும் எழுத்தாளராக மட்டும் பார்க்கவில்லை; அவரது உடைந்த மனதையும் புரிந்துகொள்ள முயன்றார். ஆனால் இந்த உறவுக்கும் ஒரு எல்லை இருந்தது. Milena ஏற்கனவே திருமணமானவர். மேலும் Kafka-வின் உடல்நிலையும் மோசமாகிக் கொண்டிருந்தது. அவர்களுடைய காதல் தீவிரமான உணர்ச்சி அனுபவமாக இருந்தது; ஆனால் வாழ்வாக மாறவில்லை. Kafka காதலை விரும்பினார். ஆனால் காதல் கொடுக்கும் பொறுப்பு, உடல் நெருக்கம், குடும்ப வாழ்க்கை ஆகியவை அவரை பதறச் செய்தன. Felice அவருக்கு “வாழ்க்கை”யை நினைவூட்டினார். Milena அவருக்கு “ஆன்மா”வை நினைவூட்டினார். இருவரையும் முழுமையாக அடைய முடியாமல் போனது போலவே, Kafka தனது வாழ்க்கையையும் முழுமையாக அடைய முடியாமல் போனார். இதன் விளைவாக அவரிடமிருந்து ஆகச்சிறந்த படைப்புகள் உருவாகத் தொடங்கின. அவர் எழுதிய The Castle, The Trial போன்ற நாவல்கள் மட்டுமல்லாமல் பல நுண்கதைகளையும் சிறுகதைகளையும் எழுதினார். அவற்றில் The Judgment மற்றும் The Metamorphosis போன்றவை இன்று உலக இலக்கியத்தின் சிகரங்கள் எனக் கருதப்படுகின்றன. ஆனால் Kafka தனது வாழ்நாளில் இவை புத்தகமாக வெளியாகுவதையே விரும்பவில்லை.அவரது நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான Max Brod தான் Kafka-வை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். 1924 ஆம் ஆண்டு காசநோயால் Kafka மரணமடைந்தார். மரணத்திற்கு முன் அவர் Brod-க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்:> “என் மரணத்திற்குப் பிறகு, என் அனைத்து கையெழுத்துப் பிரதிகளையும் எரித்துவிடு.”ஆனால் Brod அந்த வேண்டுகோளை புறக்கணித்தார். Kafka-வின் படைப்புகளில் ஒரு பேராற்றலை அவர் உணர்ந்தார்.மேக்ஸ் ப்ரோட் மட்டும் இதைச் செய்யாமல் இருந்திருந்தால், இன்று மனித மனத்தின் மகத்தான ஆவணங்கள் இலக்கிய உலகுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.Kafka மற்றும் Brod இருவரும் Prague நகரில் உள்ள ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தபோது சந்தித்தார்கள். 1902 ஆம் ஆண்டு ஒரு இலக்கிய சொற்பொழிவில் Brod முதன்முதலாக Kafka-வை சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே Kafka-வின் அறிவையும் சிந்தனையின் ஆழத்தையும் அவர் கவனித்தார். Kafka மிகவும் அமைதியானவர்; கூட்டங்களில் அதிகம் பேசமாட்டார். Brod மிகவும் வெளிப்படையான, உற்சாகமான மனிதர்.இருவரும் குணாதிசயத்தில் நேர்மாறானவர்கள்:இந்த வேறுபாடே அவர்களின் நட்பை வலுப்படுத்தியது. Kafka-வின் அபாரமான ஆற்றலை Brod ஆழமாக உணர்ந்தார். அதனால் தான் Kafka சொன்னபடி அவரது படைப்புகளை எரித்துவிடாமல், அனைத்து கையெழுத்துப் பிரதிகளையும் பாதுகாத்து தொகுத்து வெளியிட்டார்.அப்போது அவரது நண்பர்களில் பலர்: > “இந்த நூல்கள் விற்பனையாகாது. நட்டமடைவாய்.” என்று எச்சரித்தனர். ஆனால் Brod: நான் உணர்ந்த மேதமையை உலகமும் ஒருநாள் உணரும்.”என்ற நம்பிக்கையுடன் வெளியிட்டார். அதன்பிறகு வெளியான:* The Trial,* The Castle,* Amerika ஆகிய நூல்கள் உலக இலக்கியத்தின் திசையை மாற்றின. இந்தப் புத்தகங்கள் வெளிவந்தபோது இலக்கிய உலகம் அதிர்ந்தது. Kafka-வின் பாணி — உலகின் அபத்தத்தை சித்தரிக்கும் குரல், மனக்குழப்பத்திலிருந்து எழும் நுட்பமான நையாண்டி, கனவுபோன்ற சூழல் — அனைத்தும் வாசகர்களாலும் விமர்சகர்களாலும் வரவேற்கப்பட்டது.Albert Camus, Jean-Paul Sartre உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் Kafka-வின் படைப்புகளில் அபத்தத்தின் தத்துவத்தை கண்டனர். “Kafka இல்லாமல் நவீன மனிதனைப் பற்றிய இலக்கியம் உருவாக முடியாது” என்று பலர் கூறினர். அப்படி பார்க்கையில், மேக்ஸ் ப்ரோட் தனது நண்பனின் இறுதி விருப்பத்தை மீறியிருந்தாலும், மனிதகுலம் முழுவதையும் செழிக்கச் செய்தார். Kafka சொன்னது போல:> “எழுத்து என்பது உறங்கிக்கொண்டிருக்கும் நகரில் தீயை பற்றவைப்பது.”அப்படி தீயை பற்ற வைத்தது மேக்ஸ் ப்ரோட் தான்.இன்று Kafka உயிருடன் இல்லை. ஆனால் அவரது எழுத்துக்கள் இன்னும்— ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளே ஒளிந்திருக்கும் அச்சம், நம்பிக்கை, மற்றும் புரியாத உலகத்தின் வலி பற்றி. உயிரோடு - அஜயன் பாலா < உங்கள் நூலகம் ஜூன் 2026

பிரான்ஸ் காஃப்கா மற்றும் மேக்ஸ் ப்ரோட் - உலகம் போற்றும் இலக்கிய நட்பு - .உலக இலக்கியச் சா|ளரம்

div class="separator" style="clear: both;"> தமிழிலக்கியத்தில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு ஒரு இல...