September 7, 2026

எர்னஸ்ட் ஹெமிங்க்வே — ஆறு சொற்களில் ஒரு உலகம்’

 ‘‘’ 

அஜயன் பாலா

அமெரிக்க எழுத்தாளர் ‘‘எர்னஸ்ட் ஹெமிங்க்வே (Ernest Hemingway)’’ உலக இலக்கியத்தில் சிறந்த  எழுத்தாளர்களில்  ஒருவராக மதிக்கப்படுகிறார். அவரது  எழுத்துக்கள் கச்சிதமானவை  அவருடைய இலக்கியபெருமைகளுக்கு காரணம் அவர்து  கற்பனைத்தி|றனுக்கோ  அல்லது பாத்திர படைப்பாக்கங்களுக்கோ அல்லது உரையாடல்களுக்கோ இல்லை

மாறாக அவரது இலக்கிய பெருமை மொழியை அவர் கச்சிதமாக கையாளும் வித்த்தி|ற்காக இன்|றும் போ|ற்றப்படுகின்றன. ஒரு தச்சன் இழைப்பது போல தன் படைப்புகளை அவர் வடிவ ரிதியாக செதுக்கியபின்பே அச்சுக்கு அனுப்புவார் . குறைவான் சொற்||ளால் மட்டுமே ஆழ்மான் உணர்ச்சியைதிட முடியும் என்பதில் அழுத்த்மான நம்பிக்கை கொ|ண்டவர் .அவர் சொன்னது போலவே அவரது அளவில் பெரிய நாவல்களான போரே நீ போயாருக்காக மணி ஒலிக்கிறது, கிளீமாஞ்சாரோ   போன்ற  நாவல்களுக்கு கிடைக்காத நோபல் பரிசு அவரது மிகச்சிறிய 100 பக்கங்களுக்கும் கு|றைவான்   கடலும் கிழ்வனும்  நாவலுக்குத்தான் கிட்டியது

 அவர் கு|றைவான் சொற்களில் எழுதிய சிறுக்தை அவருக்கு  நோபல் பரிசைவிடவும் அதிக புகழை பெற்றுத் தந்த்து . அந்த சிறுகதை இதுதான்

> “For sale: baby shoes, never worn.” 

யாரும் இது கதையின் தலைப்போ அல்லது  கதையின்  முதல் வரியோ என நினைக்க வேண்டாம் . கதையே  இதுதான் /. இவ்வளவுதான்  வெறும்   ‘‘ஆறு சொற்கள்அவ்வளவுதான்  மொத்த கதையும்

 “For sale: baby shoes, never worn.” 

விற்கப்படுகிறது: குழந்தை காலணிகள், ஒருபோதும் அணியப்படாதவை.)’ 

இந்த ஆறு சொற்கள்உலகம் முழுவதும் ‘‘“shortest story ever written”‘‘ எனப் புகழ்பெற்றது.  

1930களில் ஒரு  விருந்தில் கலந்து கொண்ட ஹெமிங்க்வே  தன் நண்பர்களுக்கு ஒரு பந்தயம் வைக்கிறார். வெறும் குறைவான  சொற்களில் ஒரே வரியில் கதை எழுதப் படவேண்டும் என சொல்ல அனைவரும் ஆளொக்கொரு மூளைக்கு துண்டு காகிதங்களுடன் பறந்தனர்

இப்படி ஒரு பந்தயம் வைக்க  அவருக்கு  காரணம்  மிக குறைந்த வார்த்தையை பயன்படுத்தி கதை எழுதுவதில் அவருக்கு இருந்த திவிரமான ஈடுபாடு. அவருக்கு இந்த ஆர்வத்தை உண்டாக்கியவர் ஜெரார்டு ஸ்டெயின் . இவர்தான்  உலகப் புகழ்பெற்றரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ்என்ற வரிகளை எழுதிய பிரான்ஸ் தேசத்து பெண் கவிஞர்

பிரான்சில் ஹெமிங்வே 1922 இல்  ஜெரார்டு ஸ்டெயினை சந்திக்கும் போது அவருக்கு வயது 23  ஸ்டெயினுக்கு வயது 48 அவர்தான்  விவரணைகளை குறைத்து நேரடியாக கதையை குறைந்த சொற்களில் எழுதும் புது உத்தியை அவருக்கு போதித்தார்  அதுதான்  புகழ்பெற்ற “Iceberg Theory” அதாவது, ‘‘பதினைந்து சதவீதம் மட்டும் சொல்லவும், மீதியை வாசகர் உணர வேண்டும்.’’ இதுதான் அந்த தியரியின் உட் கிடக்கை. கொள்கை கோட்பாடு.

இந்த ஆறு சொற்களும் அந்தக் கொள்கையின் மிகச் சிறந்த சான்று

 இதைத் தொடர்ந்து அவருக்குள் குறைவான் சொற்களை பயன்படுத்துவதில் ஒரு ஆர்வம் உண்டனது  இந்த் ஆர்வத்தின் விளைவுதான்  ஹெமிங்வெ தன் இலக்கிய நண்பர்களுக்கு அந்த சவாலை விடுத்தார் . ஆனால் அவர்கள் யாராலும் ஒரு வரியில்  முழுமையான கதயை எழுத முடியவில்லை. பிறகு அவரே  தான் எழுதிவிட்டதாகக் கூறி அனைவரிடமும் இந்தகதையை வாசித்தார்.   அனைவரும் மௌனமாகிப் போனார்கள். ஐஸ் பெர்க் அவர்களை அபரிதமாக தாக்கியிருந்தது . அந்த ஆறு சொற்களுக்குள் ஒரு வாழ்க்கை, ஒரு துயரம், ஒரு மரணம், ஒரு கனவுஅனைத்தும் நுழைந்திருந்தது

 “For sale: baby shoes, never worn.” 

- “For sale” — விற்பனை செய்யும் கட்டாயம், ஒரு இழப்பு

- “Baby shoes” — புதிய உயிரின் சின்னம்

- “Never worn” — அந்த உயிர் பிறக்காதது அல்லது வாழாதது

இவ்வாறு ஒரு சொல் கூட ‘‘மனித உணர்வின் பெரும் வலியை’’ தாங்கிக் கொள்கிறது

ஹெமிங்க்வே, ஒரு வரியிலேயே, ‘‘மனித வாழ்வின் நொடியை நித்தியமாக்கினார்.’’  அந்தச் சொற்கள் ஒரு தாய் அழுகையையும், ஒரு தந்தையின் நிம்மதியற்றத்தையும், ஒரு உலகத்தின் மௌனத்தையும் ஒலிக்கச் செய்கின்றன

அது வெறும் ஆறு சொற்கள் அல்ல — 

‘‘ஒரு வாழ்வின் முழு கதை.’’ 

இன்று, “six-word story” என்ற வகை இலக்கியத்தில் ஒரு புதிய பரிமாணமாக வளர்ந்துள்ளது

பல எழுத்தாளர்கள், வாசகர்கள் தங்கள் சொந்த ஆறு சொற்களால் கதைகளை உருவாக்குகிறார்கள்ஆனால் ஹெமிங்க்வேயின் கதையைப் போல ஆழமான உணர்வை தருவது அரிது

 

 

 

 

எர்னஸ்ட் ஹெமிங்க்வே — ஆறு சொற்களில் ஒரு உலகம்’

  ‘‘ ’  அஜயன் பாலா அமெரிக்க எழுத்தாளர் ‘‘ எர்னஸ்ட் ஹெமிங்க்வே (Ernest Hemingway)’’ உலக இலக்கியத்தில் சிறந்த  எழுத்தாளர்களில்   ...