ருஷ்ய இலக்கிய படைப்பாளிகளில் மத்தளம் போல இரண்டு பக்கமும் அடி வாங்கியவர் இவான் துரகனேவ். இடதுசாரிகள் அவரை வலதுசாரி என்றும் வலதுசாரிகள் அவரை இடதுசாரி என்றும் கடுமையாக விமர்சித்தனர்
ஆஸ்யா , முதல் காதல் வசந்தகால வெள்ளம் போன்ற குறுநாவ்ல்களு,ம் தந்தையும்
தனயனும் போன்ற ஒப்பற்ற நாவலையும் எழுதி ருஷ்ய இலக்கியத்தில் தனக்கென தனி இடம் பிடித்தவர்
துரகனேவ் . குறிப்பாக அவரது மூமு சிறுகதை உலகப்
பிரசித்தம். ஸ்பானிஷ் நாவலான செர்வான்ஈடிஸ்
எழுதிய டான்க்விக்ஸாடை ருஷ்யாவில் மொழிபெயர்த் ததும் அவருடைய இலக்கிய சாதனைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது . உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி ஜேம்ஸ் தன் இலக்கிய ஆசானாக டால்ஸ்டாயையோ தஸ்தாவெஸ்கியையோ
குறிப்பிடவில்லை மாறாக இவான் துரகனேவைத்தான்
கொண்டாடுகிறார். இத்தனைக்கும் இருவரும் சமகால
எழுத்தாளர்கள். என்ற போதும் துரகனேவ் இறந்த போது அவருக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில் ,. துர்கனேவ் எழுதிய மூமூ சிறுகதை
ருஷ்ய இலக்கிய உலகில் படைப்பின் உச்சம் என
வியக்கிறார் .
துரகனேவ் இறந்த போது அவரது மூளையை கணக்கிட்ட மருத்துவர்கள் அதன் எடையை
பார்த்து ஆச்சர்யப்ட்டனர் வழக்கமாக மனித மூளையின்
சராசரி எடை 1336 கிராம்தான் . ஆனால் துரக்கனேவின் மூளை 2012 கிராம் இருந்ததாக
வியக்கின்றனர்.
இப்படியான எடைகூடுதல் மூளை காரணமாகாவோ என்னவோ அவர் தனிப்ப்ட்ட
வாழ்க்கையில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அதிகமாக இருந்துள்ளது. உலகிற்கே அன்பையும் அஹிம்சையையும்
போதித்த டால்ஸ்டாய்க்கே கோப,ம் உண்டக்கிய பெருமை
துர்க்கனேவுக்கு உண்டு . ஒரு முறை டால்ஸ்டாயின் படைப்பை மோசமாக விமர்சிக்கப்போக உடனே கோபத்தின்
உச்சிக்கே சென்ற டால்ஸ்டாய் துரக்னேவை டூயல் எனும் ஒத்தைக்கு ஒத்தை வீரம் காட்டும் பார்ம்பர்ய போட்டிக்கு சவால் விட்டு விட்டார் . பிற்பாடு நண்பர்கள் செய்த சமாதானத்தின்
விளைவாக இந்த டூயல் ரத்து செய்யப்ப்ட்டாலும் இதன் பின் பதினெட்டு வருடகாலம் இருவரும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தார்கள்
டால்ஸ்டாய்க்கே
கோபம் இப்படி உண்டாக்கினாரென்றால் தஸ்தாயெவெஸ்கியை
மட்டும் விட்டாவைத்திருப்பார். அவரது படைப்புகளை ருஷ்ய இலக்கியத்தின் மூக்கில் ஒட்டியிருக்கும் தேவையற்ற
பரு என துரகனேவ் விமர்சித்தார்.
இத்தனைக்கும் தஸ்தாயெவெஸ்கி
ஐந்து வருட சைபீரிய சிறைவிட்டு வெளியே வந்தவுடன் வாசித்த முதல் புத்தகம் துரகனேவுடைய ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்கெட்ச்சஸ் எனும் சிறுகதை தொகுப்புதான்
.இதுதான் துரகனேவின் முதல் புத்தகமும் கூட ,அதை படித்துவிட்டு துரகனேவ் மீது மிகுந்த
மரியாதை கொண்டிருந்தார் .டால்ஸ்டாக்கும் துரகனேவின்
மிகச்சிறந்த இலக்கியப்பங்களிப்பாக இந்த முதல் தொகுப்பைத்தான் கொண்டாடுகிறார். இந்த்
ஸ்போர்ட்ஸ் மேன் ஸ்கெடசஸ் சிறுகதையைத்தான் பிற்பாடு புகழ்பெற்ற ருஷய் இயக்குனர் ஐஸன்ஸ்டைன்
BEZIN MEDOW 1939 என்ற திரைப்படமாக எடுத்தார்.
அப்படி அந்த முதல்
தொகுப்பை வியந்த தஸ்தாயெவெஸ்கியோடு காலப்போக்கில்
இவாந்துரகனேவ் கடுமையான் இலக்கிய விமரசனங்களை வைக்க இருவருக்கும் முட்டல் அதிகம்
வரத்துவங்கியது . . ருஷ்ய தேசியத்தின் மீது அளவற்ற மதிப்பு கொண்டிருந்த தஸ்தயெவெஸ்கிக்கு
பிற்பாடு துரகனேவ் எழுத்துக்கள் போலித்த்ன்மையாக தெரியத்துவங்கின ஒருமுறை துர்கனேவின் ஸ்மோக நாவலுக்கான் விமரசனத்தின்
போது தஸ்தாயவெஸ்கி நான் உனக்கு ஒரு டெலஸ்கோப் வாங்கித்தருகிரேன் ருஷ்யாவின் வேதனையை பார்த்து எழுத உனக்கு வசதியாக இருக்கும் என கிண்டலாக எழுதினாராம் .
தஸ்தாயேவெஸ்கி அப்படிக் கூறக் காரணம் துர்கனேவ் அப்போது பிரான்சில்
ஒரு காதலியின் வீட்டில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டே
ருஷ்ய குடியானமக்களின் வாழ்க்கையை ஸ்மோக் நாவலில் எழுதியிருந்தார்.. இதை இடித்துரைக்கும்
விதமாகத்தான் தஸ்தாயேவெஸ்கி அப்படிக்கூறினார்
பவ்லின் வெர்தத்
துர்கனேவ் பிரான்சில் தங்கியிருக்க காரணமான அந்த காதலி மிகப்பெரிய செல்வச் சீமாட்டி. பெயர் பவ்லின் வெர்தத். பேரழகி மிகச்சிறந்த ஓபரா பாடகி மற்றும் இசை தயாரிப்பளர் .. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இவருடைய புகழுக்கு காரணம் அழகா திறமையா என பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு பேசப்பட்டவர் . .ஆனாலும் தன்னை விட 20 வயது மூத்த லூயிஸ் வெர்தாத் என்ற பணக்காரனை திருமணம செய்துகொண்டார். அவரும் ஒரு பொறுப்புள்ள நிர்வாகியாக அவளுடைய குடும்பம் குழந்தை மற்றும் தொழில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தொடர்ந்து அவளுடைய கச்சேரிகளை ஒழுங்கு செய்து அவள் புகழுக்கு வெளிச்சம் கூட்டும் பணியை ஒரு கடமையாக செய்துவந்தார்
பவ்லின் குரல் வளம் பற்றி சொல்லும் போது C3 முதல் F6
வரை என மேற்கத்திய இசை அளவு சொல்கிறார்கள் , குரல் வளத்துக்கு நம்மூரில் கட்டை கணக்கு போல மேற்கத்திய இசையில் ஒரு அளவு கோல் அது . . , இந்த அபார குரல்வளம் ப்ளஸ் பேரெழில்
தோற்றம் இந்த இரண்டும் பவ்லின் வெர்தாத்துக்கு உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது. லண்டன் ஸ்பெயின் ஜெர்மணி என ஐரோப்ப முழுக்க சுற்றுப் பயணம் செய்தார்.
எங்கு போனாலும் அந்த தேசத்து இசை மேதைகள் செல்வச் சீமான்கள் அனைவருமெ அவருடன் நெருங்கிய நடபு வைத்துக் கொள்ள தவம் கிடந்தனர் . ஆனால் இவர்களுகெல்லாம் கிடைக்காத பேறு ருஷ்ய பயணத்தின்
போது துர்கனேவுக்கு கிட்டியது .
முதல் முறையாக துர்கனேவ் மாஸ்கோவில் பவ்லின் வெர்தாத்தின் இசை நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த முதல் நீகழ்விலேயே
அவளது தீவிர ரசிகனாக மாறினார். பின் அவர் தங்கியிருந்த விடுதிக்குச்சென்று நேரிடையாக
சந்தித்து பேசப்போக இருவருக்குள்ளும் எப்படியோ
காதல் பற்றிக்கொண்டது . இப்படி ஒரு அழகி பணக்காரி திறமையானவள் எப்படி ஒரு எழுத்தாளனிடம் அதுவும் எப்போதும் கடுகடுவென்ற
முகத்துடன் இருப்பவனுக்கு காதலியாக மாறினாள்
என்பது அக்காலத்தில் மாஸ்கோ அரச குடும்பங்கள்
பலரையும் இம்சித்த வரலாற்று புதிர்?
இவர்களின் இந்த
காதல் கதை பற்றி ஆரயச்சி செய்து அன் அபீசியல் மேரேஜ் (UNNDFFICIAL MARRIAGE ) என்ற நாவலை ஜோயி டேவிடோ என்பர் எழுதியிருக்கிறார் . அது அமோசான்
கிண்டிலில் இப்பவும் கிடைக்கிறது
ருஷ்யப் பயணம்
முடிந்து ஓபரா அழகி ஊருக்கு திரும்ப துர்கனேவ் சிறிது காலத்தில் பிரான்சுக்கு காதலியைத் தேடிச்சென்றார் . பிரான்சில்
பேடன் பேடன் எனப்படும் அந்த இடத்திலிருந்த அரண்மனையில் அவள் கணவன் குழந்தையோடு வசித்து
வந்தாள் . திருமணமே செய்து கொள்ளாத துர்கனேவ் தன் வாழ்க்கையின் ஏழு வருடங்களை அந்த அழகியின் அருகிலேயே வசிப்பத்ற்கும் அவரது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கும் செலவிட்டு வந்தார்
. இத்தனைக்கும் அன்று துரகனேவ் ருஷ்யாவில் நாடறிந்த எழுத்தாளர் ஆனாலும் தான் இப்படி ஒரு பாய்பெஸ்டியாக பிரெஞ்சு பேரெழகிக்கு வாழ்க்கைப் பட்டதைப்ப ற்றி அவருக்கு
வாழ்நாள் முழுக்க எந்த குற்றணர்ச்ச்சியும் இல்லை . உண்மையான காதலனாக வாழ்ந்த திருப்தியே
அவருக்கு இருந்துள்ளது
மிதமான தட்பவெட்ம, இயறகை எழில் சூழ்ந்த நிலப்பரப்பு , மற்றும்
ரூலெட் சூதாட்டம் ஆகியவை காரணமாக டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி ஆண்டன் செகாவ் ஆகியோர் வேறுவேறு காலகட்டங்களில்
பேடன் பேடன் சுற்றுப்பயணம் செல்வது வாடிக்கை
டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி
இருவருமே ரூலெட் எனும் சூதாட்டப்பிரியர். டால்ஸ்டாய் பெரும் பணக்காரர் ஆனாலும் விடாப்பிடியாகக
இழந்த பணத்தை திறமையாக ஆடி மீட்டுவிடுவார்
ஆனால் தஸ்தாயெவெஸ்கிக்கொ
பையில் கைப் பணமும் குறைவு .அதே சமாயம் கையிலிருக்கும் சொற்ப பணத்தையும் அடிக்கடி கோட்டை விடவும் செய்வார்
சூதாடி நாவல் எழுதிய
கையோடு புதிதாய் மணம் செய்த காதல் மனைவி அன்னா
ஸ்ரினிகவுடன் பேடன் பேடன் வந்தவர் பல்வேறு
கேளிக்கை விடுதிகளில் உழன்று சூதாட்டத்தில்
மொத்தமாக இழந்து விட்டார். மனைவியின் கம்மல்
கோட்டுப்பொத்தான் எதையும் விட்டு வைக்கவில்லை . அனைத்தையும் அடகு வைத்து அதையும் இழந்துவிட்டார்
. ஒரு கட்டத்தில் மிக மோசமான நிலமைக்கு தள்ளப்பட்ட நிலையில் அவருக்கு
அப்போது நினைவில் வந்த பெயர் .இவான் துர்கனேவ்
. நண்பரும் சக எழுத்தாளனுமான துரகனேவ் அதே
நகரில் காதலியின் அரண்மனை வீட்டில் வசித்து வருகிறாரே ஒருமுறை போய் பணம் கேட்கலாமே என
அன்னாவுடன் சென்றிருக்கிறார்.
ஏற்கனவே பணமில்லை என்பதால் இருவரது தோற்றமும் எப்படி இருந்திருக்கும்
என்பதை சொல்ல வேண்டியதில்லை இப்படி ஒரு மோசமான
நிலையில் துரகனேவ் வீட்டு வாசலில் பணம் கேட்டுசென்ற
போது அவரது இந்த வறுமை கோலம் காரணமாகவே அரண்மனைக்குள் அனுமதிக்கப்படாம;ல் வெளியே நிற்க
வைக்கப்பட்டது மட்டுமலலமல் கடைசி வரை வெளியே வரமால் துரகனேவ் தஸ்தயெவெஸ்கியை அவமானபப்டுத்தியதாக
தனது summer in baden baden நூலில்
leyonid Cypkin எனும் ருஷ்ய எழுத்தாளர் எழுதியிருபதாக
அந்நூலைபற்றிய இணைய தகவல்கள் குறிப்பிடுகின்ற்ன
பிறகு தஸ்தாயெவெஸ்கி ருஷ்யா திரு,ம்பியதும் இனி சூதாடுவதில்லை
என மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்து சாகும்
வரை அந்த சத்தியத்தை மீற வில்லை என்று அன்னா தன் கணவரைப்பற்றிய நினைவுக்குறிப்புகளில்
குறிப்பிடுகிறார்
இதே சமயம் துரகனேவ்
பவ்லின் வெர்தாத் ஆகியோரது ஏழு வருட தேனிலவு
வாழ்க்கையும் 1870 -71 ஆம் ஆண்டு பிரான்ஸ் பிரஷ்யா போரை முன்னிட்டு முடிவுக்கு வந்தது.
அவரும் பிரான்சை விட்டு வெளியேறி லண்டன் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு மீண்டும் தாய் மண்ணுக்கு திரும்பினார்
இறுதியாக இந்த இரு எழுத்தாளர்களின் பகையும் ருஷ்யாவில் 1880ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த புஷகின் சிலை திறப்பு விழாவில் தஸ்தாயெவெஸ்கி ஆற்றிய மகத்தான உரைக்கு பின் முடிவுக்கு வந்தது . அந்த அரங்கில் முழு உரையையும் கேட்ட இவான் துரகனேவ் தஸ்தாயெவெஸ்கியை கட்டிபிடித்து ருஷ்யாவுக்கு கிடைத்த மகாத்தான எழுத்தாளனய்யா நீர் என கண்ணீர் மல்க சொன்னதுடன் அவர்கள் பகை முடிவுக்கு வந்தது.
-அஜயன் பாலா
15/06/2021
4 comments:
இவர்களின் வாழ்க்கை கதையே ரஷ்ய புதினம் போல் உள்ளது.
நன்றி
மிக அற்புதமான கட்டுரை.
நீங்கள் குறிப்பிட்டதுப்போல் துர்கேனிவின் ஆஸ்யா, முதல் காதல், வசந்த கால வெள்ளம் மூன்றுமே மிகச் சிறந்த படைப்புகள்.
ஆஸ்யாவின் நாயகியைப் பார்க்கும்போது எனக்கு மணிரத்தினம் அவர்களின் கதாநாயகிகள் நினைவுக்கு வந்து போவது தற்செயல் அல்ல என்று நினைக்கிறேன்.
எத்தனை முறை படித்தாலும் வசந்தகாலவெள்ளத்தை கண்களில் கண்ணீர் வராமல் முடிக்க முடியவில்ல.
அது எனக்கு மட்டும்தானா எனத் தெரியவில்லை.
இனிமையான நினைவுகளை மீண்டும் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியமைக்கு மிக்க நன்றி சார்.
Wow! Realy good bala.
Post a Comment