(சேகுவேராவின் 93வது பிறந்த நாளுக்காக விகடன் .காம் பிரசுரமான கட்டுரை 0
இன்று சேகுவேராவின் 93 வது பிறந்த தினம்
வெறும் 39 வருடங்கள்
மட்டுமே இந்த பூமியில் வாழ்நது சரித்திரத்தின்
பொன்னேடுகளில் தன்னை பதித்துக்கொண்ட ஒரு சமாந்திரனின்
மரணம் இன்றும் பேசப்பட்டு வரூகிறது
ஆப்ரிக்காவின்
பொலிவியா காட்டில் வாலேகிராண்டே பகுதியில் 53 வருடங்களுக்கு முன சேகுவெராவின் உடலுக்குள் பாய்ந்த எம் 1 கார்பைன்
ரக துப்பாககியின் ஒன்பது குண்டுகளில் முதல் ஐந்து கால்களிலும் இரண்டு கைகளிலும் ஒன்று தோளிலும்
பாய்ந்தது. ஆனால் கடைசியாக மார்பில் பாய்ந்த குண்டுதான் அவரது உயிரை பறித்தது
அந்த கடைசி குண்டுக்கு
தெரியாது .தான் ஒரு ஒரு உடலை விதையாக மாற்றப்போகிறோம்
என்பது
அந்த நிமிடத்திற்கு
முன் வரை க்யூபாவுக்கு மட்டுமே நன்கு அறிந்த
சேகுவேராவின் முகம் இன்று உலகின் கடைக்கோடி
மனிதர்கள் வரை அதிகம் பேரால் நேசிக்கப் படும் முகமாக மாற்றியதில் அந்த கடைசி குண்டுக்கு
பெரும்பங்கு உண்டு
அக்டோபர் 7
,1967ம் நாள் இச்சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குப்பின் க்யூபாவில் சேகுவேராவின் மரணத்தை
அறிவித்த அதிபர் பிடல் காஸ்ட்ரோ அவரது உரையில் நம் குழ்ந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க
வேண்டிய மந்திரம் நானும் ஒரு செகுவேராவாக ஆவேன் என்பதுதான்
.. அதன் படியே அந்த வார்த்தையை பள்ளிகளீல் தேசிய்கிதம் போல பாடலாகவும் ஒலிக்கசெய்தார்
. அன்றைய உரையில் பிடல் இன்னொன்றும் சொன்னார் அவர் நமக்கு
மட்டுமல்ல இந்த உலகத்துக்கே முழுமையான மனிதன எப்படி இருப்பான் என அடையாள்மாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார்
. வருங்காலத்தில் அவர் விடுதலை உணர்வின் அடையாளமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுவார் என்று
அன்றே கூறினார் அன்று அவர் கூறிய தீர்க்க தரிசனம்
இன்று 53 ஆண்டுகளில் நிரூபணம் ஆகியிருப்பது
வரலாறு
இடைப்பட்ட காலத்தில்
அப்படி என்ன நடந்தது ? அந்த ஆச்சர்யமிக்க கதையின்
சுருக்க வரலாறு இதோ
.சே இறந்த அடுத்த
சில நாட்களில் அவரது
"படுகொலை குறித்தும் அதில் அமெரிக்க
உளவு நிறுவனம் சி ஐ ஏ வின் சதி பற்றியும்
புகைப்படங்கள் , கட்டுரைகள், கவிதைகள்
உலகம்
முழுக்க பத்ரிக்கைகளில் அச்சாகின .
அறிஞர்களும் தலைவர்களும்
சே குவேராவின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தத்துவங்கினர் .விடுதலையை நேசிக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும் சேகுவேரா
ஒரு உத்வேகம்"
என நெல்சன் மண்டேலா புகழ்ந்தார் பிரெஞ்சு தத்துவ அறிஞரான ஜீன் பால் சார்த்தர் சேகுவேரா
ஒரு அறிவுஜீவி மட்டுமல்ல, நாம் வாழும் காலத்தின் மிக
முழுமையான
மனிதர்" என்று
புகழ்ந்தது சேகுவேராவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் .
தொடர்ந்து உலக்ப்புகழ்பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா ,அலென்
கின்ஸ்பெர்க்,. மற்றும் ஜூலியோ கொத்தஸார் ப்ரான்ஸ்வா ஃபனான் க்ரஹாம் க்ரீன், சூஸன் சாண்டக் போன்ற உலக எழுத்தாளர்கள்
சே வின் மரணத்தை சரித்திர நிகழ்வாக கருதி கட்டுரைகள் எழுதினர் . இது உலகம் முழுக்க உள்ள அறிவுஜீவிகளிப் வழியாக
சே வை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்க சே வின் புகழ் பரவத்துவங்கியது
இதையொட்டி சிரித்த சே குவேராவின் புகைப்படங்கள் லண்டன் பாரீஸ் சிக்கககோ என முக்கிய நகரத்தின் விதிகளில் முதன்முதலாக
தோன்றத்துவங்கின அந்த புகைபடங்கள் முன் அசையும் மெழுவர்த்திகளில் சேகுவேராவின் கண்களில் யேசுவின்
உயிர்த்தெழுதலை கண்ட மக்கள் கண்ணீர் உகுத்த்னர்
சில மாதங்களுக்குப் பிறகு ப பெர்லின், பிரான்ஸ்
மற்றும்
சிகாகோவில்
கலவரம் வெடித்த போது அவர்கள் உடம்பில் சே குவேரவின் உருவம் பதித்த டீ ஷர்ட்டுகள் முதன்முறையாகத் தோன்றத் துவங்கின தொடர்ந்து புரட்சி போரடடம் என எங்கு நடந்தாலும் அங்கு போராளிகள் சேகுவேராவின் உருவ பதாகைகள் உயர்த்தி பிடிக்கத்
துவங்கினர் இதன் உச்சமாக , அமெரிக்க கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் வெடித்த பொது , இளைஞர்களும், பெண்களும் சே குவேரா டி-ஷர்ட்களை அணிந்துகொண்டு,
ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர் .இது அமெரிக்காவே மிரண்டு போன காலப்பகடை . தன்னால் கொல்லப்பபட்ட ஒரு முகம்
தன் மக்களால் தன் முன் நாயகனாக உயர்த்திப்பிடிப்பதை
அமெரிக்காவால் ஜீரணிக்கவே முடியவில்லை .
இதுகுறித்து .
இராணுவ வரலாற்றாசிரியர் எரிக் டர்ஷ்மீட்டின் பார்வையில்
சேகுவேரா இறக்கவில்லை அமெரிக்காவிலேயே அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்
என எழுதினார். .
இப்படியாகத்தான்
செகுவேராவின் புகழ் இன்று உலகம் முழுக்க பல கோடி மக்களிடம் படிப்படியாக பரவத்துவங்கியது . தொடர்ந்து அவரைப் பற்றிய புத்தகங்கள்,
இசைத்தட்டுக்கள் , திரைப்படங்கள் ஆகியவை எடுக்கப்ப்ட்டு
ஒவ்வொரு தலைமுறையிலும் சேவின் புகழ் பன் மடங்கு
பெருகிக்கொண்டே வருகிறது.
.இப்படியான அவர்து உலகப்புகழுக்குக் காரணம் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒற்றை மனிதனாக் எதிர்த்த துணிச்சலோ அல்லது புதிய உலகம் பற்றி கனவு கண்ட மனித நேயமோ மட்டுமலல் . அவர் ஒரு சிறந்த நிர்வாகி, சிறந்த மருத்துவர், சிறந்த நண்பன், மற்றும் சிறந்த கணவன் என எல்லா நிலைகளிலும் உயர்ந்து விளங்கினார்
மட்டுமல்லாமல்
அவர் ஒரு சிறந்த தந்தையும் கூட என்பதற்கு அவர் குழ்ந்தைகளுக்கு எழுதிய கடிதம் அவர்
இறந்த தகவல் அறிந்த பின் அவரது மனைவி தன் குழந்தைகள் நால்வரையும் அழைத்து கண்ணீருடன்
சே ஏற்கனவே எழுதிக்கொடுத்துவிட்டுப்போன கடிதத்தை
பிரித்து படித்துக்காண்பித்தார் . அதில் அவர்
அனபுச் செல்வங்களே
,இந்த கடிதம் நீங்கள் படிக்கும் நேரத்தில் நான் உங்களையும் இந்த உலகையும் விட்டு முழுமையாக பிரிந்திருப்பேன் .போராளிகளின் இறப்புக்காக யாரும் கண்ணீர் விடகூடாது உங்கள் தந்தை
கொண்ட கொள்கைக்கு உண்மையாக வாழ்ந்தார் என பெருமை
கொள்ளுங்கள் .தொழிநுட்பக் கல்வியை தேர்வு செய்து படியுங்கள் அவை உங்கள் எதிர்காலத்தை
செம்மைபடுத்தும் .. புரட்சி பாதையை நீங்கள் தேர்வு செய்யவேண்டும் உங்கள் கண்முன் ஒரு
அநீதி நடக்கும் போது அதை முழு மனதுடன் எதிர்க்கவேண்டும் என எழுதியிருந்தார் .
சே வின் நீடித்த
புகழுக்கு இப்படியாக பல்வேறு உப காரணஙக்ளை அடுக்கிக்கொண்டே போகலாம் . அவர் வாழ்வின்
ஏதாவது ஒரு பகுதியை எடுத்து படித்தால் கூட அதில் நம் முன்னேற்றத்தின் சிறு படிகட்டுகள்
ஒளிந்து கிடப்பதை உணர முடியும் .
ஆகவே இந்த 93வது
பிறந்த நாளிலும் நம்மோடு வாழும் சே குவேராவுக்கு
ஒரு நெஞ்சம் நிறைந்த
லால் சலாம்
-அஜயன் பாலா
No comments:
Post a Comment