April 29, 2026
பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி
பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி
தமிழ் ஒரு அழகான இளம் பெண்ணாக பூமியில் தோன்றி, அவர் முன் வரிசையாக தமிழ் கவிஞர்களை எல்லாம் நிறுத்தி, அதில் ஒருவரைத் தனது காதலனாகத் தேர்வு செய்யச் சொன்னால், அவர் நிச்சயம் தாவிச் சென்று கட்டியணைப்பாள் என்றால், அது பாரதிதாசனாகத்தான் இருக்கும்.
வள்ளுவன், கம்பன், இளங்கோ, பாரதி கூட இதில் தோற்றுப்போவார்கள். இவர்களிடம் அறம், பொருள், இன்பம் எல்லாம் இருந்தது. ஆனால் இவர்களைக் காட்டிலும் ஒரு மிளகு கூடுதலாக, அதன் அழகை, தேனூறும் சொற்சுவையை, பிற மொழிக் கலப்பில்லாத அதன் தனித்தன்மையை, தன் பாடல்களில் எளிமையாக பாமரருக்கும் கொண்டு சென்றவர் பாரதிதாசன்.
அவரிடம் பூடகம் இல்லை; புனைவு இல்லை; உருவகம், திருவகம் போன்ற மிகை அலங்காரம் எதுவும் இல்லை. இன்றைய நவீனக் கவிதை வந்து சேர்ந்திருக்கும் இடமும் இப்படியாகத்தான் இருக்கிறது.
ஆனாலும், அவரது கவிதைகளில் தமிழ் தெளிந்த நீரோடையாக அள்ளித் தெளித்து, வாசிப்போர் நெஞ்சில் அருட்சுவை கூட்டியது என்றால் மிகையில்லை.
அனைவரும் அறிந்த பின்னாளில் திரைப்பாடல்களாக உருவான “சங்கே முழங்கு”, “சித்திரச் சோலைகளே” போன்ற பாடல்களை கேட்டாலே போதும்; களிப்பும் உவகையும் இதயத்தில், எண்ணத்தில் பொங்கி பிரவகிப்பதை உணர முடியும்.
இதே சமயம், “பாரதிதாசன்” என்றாலே சில நவீனக் கவிஞர்களின் முகம் பாகற்காய் கடித்தாற்போல் ஆகிவிடுவதையும் நாம் அடிக்கடி பார்க்க முடியும்.
ஒருபக்கம் பாரதிதாசனை மரபிலக்கியவாதிகளும், திராவிட மற்றும் முற்போக்கு இலக்கிய முகாம்களும் கொண்டாடினாலும், நவீன இலக்கியக் கவிதை வரிசையில் பாரதிக்குப் பிறகு அப்படியே பிச்சமூர்த்தி, பிரமிள் என ஜம்ப் கட்டில் தாவிச்செல்லும் “கசடதபற” காலத்து இலக்கிய அளவுகோல்கள் இன்று காலாவதியாகிவிட்டன.
ஆனால் கறார் விமர்சகர் க.நா.சு பாரதிதாசனை கொண்டாடியவர் என்பது பலரும் அறியாதது.
மேலும், அவர் பலருக்கும் பரிந்துரைத்த “இருண்ட வீடு” எனும் கவிதை, இன்றைய நேரடிக் கவிதைகளுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் எழுதப்பட்ட நெடுங்கவிதை. ஒரு கேமராவைக் கொண்டு காட்சிப்படுத்துவதைப்போல, ஒரு வீட்டின் நிகழ்வுகளை இக் கவிதையில் அவர் அடுக்கிச் செல்லும் லாவகம் அபாரம்.
இன்றைய பின்-நவீனத்துவ உலகில், பாரதியாரை விடவும் பாரதிதாசனே அதி முக்கியத்துவம் கொண்ட கவிஞராகக் காணப்படுகிறார்.
அதனால்தான், நூற்றாண்டு கடந்தும் இன்றும் அவரது பாடல் ஏ.ஆர். ரகுமான் இசையில் “அவளும் நானும்” ஆக நம்மை ஈர்க்கிறது. வெறுமனே மொழிச்சுவையைத் தாண்டி, உலகளாவிய பிரச்சினைகளைப் பேசும் கவிதைகளாகவும் இன்றும் நமக்கு கிளர்ச்சியூட்டுகிறது.
“புதியதோர் உலகம் செய்வோம்,
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”
எனும் வரிகள், இன்றைய உலக அரசியல் வன்முறைகளுக்கும் பொருந்துகின்றன.
“வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?”
எனும் வரியில் பொதுஉடைமை கருத்துகளையும்,
“கொலை வாளினை எட்டா
மிகு கொடியோர் செயல் அறவே”
எனும் வரிகளில் சமூக அநீதிக்கெதிரான உரத்த குரலையும் பதிவு செய்கிறார்.
அதே சமயம், அவரது “குடும்ப விளக்கு” போன்ற பாடல்கள் இன்றைய பெண்ணியக் கருத்துக்களுக்கு எதிராக இருந்தாலும், “கைம்மைப் பழி” எனும் கவிதையில், பாரதி கூட பேசாத பெண்களின் காமத்துக்கு மதிப்பும் மரியாதையும் கூட்டுவதாகப் பேசியிருக்கிறார்.
இப்படியாக இக்காலத்தின் தவிர்க்க முடியாத கவிஞராகவும், காலத்தின் தேவைக்கேற்ற முன்னுணர்வுடன் பாடியவராகவும் பாரதிதாசன், பாரதியைக் காட்டிலும் இக்காலத்தில் அதி முக்கியத்துவம் பெறுகிறார்.
பாரதியின் தமிழில் ஒட்டிக்கிடந்த வடமொழியை, பாம்பு தோலை உரிப்பது போல உரித்து, கவிதைத் துறையில் அழகுணர்ச்சிமிக்க வரிகளால் தமிழுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர் பாரதிதாசன் என்பதை யாரும் மறுக்க முடியாது.
1934-ம் ஆண்டிலேயே பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அக்காலத்தில் வெளிவந்தவை பெரும்பாலும் பக்தித் திரைப்படங்கள். ஆனால் பாரதிதாசனோ திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதும், சினிமாவில் எப்படியாவது நுழைந்து மக்கள் மனதில் இடம்பிடித்து அதன் பின் தன் கொள்கைகளை பரப்ப வேண்டும் என போராடினார்.
“பால்மணி” என்ற படத்தில் 1935-ம் ஆண்டு பாடல்கள் எழுதினார். தொடர்ந்து “ராமானுஜம்” எனும் பக்திப் படத்திற்கும் எழுதினார்.
இந்தப் போராட்டக் காலத்தில்தான் அவர் எழுதிய “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” என்ற முதல் நாடகம், சென்னை விக்டோரியா மஹாலில் அரங்கேறியது.
இந்திய விடுதலைக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு அன்றைய அரசு இந்த நாடகத்தைத் தடைசெய்தது. தடையை மீறி நாடகம் நடந்தது. அதனால் நடித்த கலைஞர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மூன்று மாதம் மூன்று வார சிறைவாசத்திற்குப் பிறகு, விடுதலையாகி வெளியே வந்த அவர்களை முதலில் செய்யாற்றில் வரவேற்றவர் பெரியார். அங்கிருந்து ஊர்வலமாக வந்த கலைஞர்களை காஞ்சிபுரத்தில் வரவேற்றவர் அண்ணா.
அவர் எழுதிய மொத்த நாடகங்கள் நாற்பத்தெட்டு. அவற்றில் “பிசிராந்தையார்” சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாடகமாக குறிப்பிடத்தக்கது.
1944-ஆம் ஆண்டு அவரே “இன்ப இரவு” என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார்.
அதன் மூலம் நாடகமும், சினிமாவும், கவிதையும் ஒன்றாக இணைந்த ஒரு பெரிய பண்பாட்டு இயக்கத்தை அவர் உருவாக்கினார்.
1942-ம் ஆண்டு சி. என்.அண்ணா துரை ‘திராவிட நாடு’ பத்திரிகையைத் தொடங்கியபோது,
“தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
என்ற கவிதை வரிகளை அதன் முகப்பு வரியாகப் போட்டார்.
தமிழ் சினிமாவில் திராவிட இயக்க எழுச்சி அலையின் போது, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோருக்குப் பின் எழுத்தாளராக தன்னையும் “பொன்முடி” படம் மூலம் கைகோர்த்துக் கொண்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
அஜயன் பாலா
ajayanbala@gmail.com
நூற்றாண்டு கானும் மகத்தான திரைக்கலைஞன் – குருதத்
-அஜயன் பாலா
குருதத் எனும் மக்த்தான திரைக்கலைஞனின் பெருமைமிக்க நூற்றாண்டு இது
கடந்த வருடம் குருத்தத்தின் சம கால திரைக்கலைஞரும் பாலிவுட்டின் முதல் ஷோ மேன் என அழைக்கப்பட்டவருமான ராஜ் கபூர் அவர்களுக்கு நூற்றாணடு . இதை மிகப் பெரிய சம்பவமாக பாலிவுட் கொண்டாடியது . ஆனால் அவரினும் சிறந்த படைப்புகள் என்று மடும் அல்லாமல் இன்றும் மகத்தான காவியமாக் கருதப்படும் பியாசா காகேஸ் கெ பூல் , ஷாபி அவுர் குலாம் போன்ற படங்களைத் தந்த குருதத்தின் நூற்றாண்டை கொண்டாட யாரும் இல்லை
இது ரு கசப்பான் வாழ்க்கையின் விதி
இருவருமே காதலை தங்கள் திரைப்படங்களில் அபாரமாக கொண்டாடினர்
ஆனால் ராஜ் கபூர் சினிமாவை கவர்ச்சியான கொண்டட்டமாக மாற்றினார்
ஆனால் குருத்த அதை கலையாக நேசித்தார்
கபூரின் காதல்கள் நாடகத்த்மை மிகுந்த்வை சோகத்ட்துக்கும் துயரத்துக்கும் திரயில் விலைப் பட்டியல் உணடு என்பதை உணர்ந்து கண்ணீரை காசாக்கியவர்
ஆனால் குருதத்தின் படங்கள் கண்ணீரை வரவழைக்காது ஆனால் அது இத்யத்தை ஊடுருவிசெல்லும் . நம்மை தூங்க விடாமால் நிமதியிழக்கச்செய்துவ்டும் . மனித வாழ்வைல் த்யரங்களை காட்டி நம்மையும் பண்பட்டவனாக மாற்றும்
56 வருடங்களுக்கு முன் 1964ல் அக்டோபர் 10ம் நாள் இந்திய ஊடகங்களில் பரபரப்பான அந்த செய்தி வந்தடைந்து அனைவரது இதயத்தையும் தீயால் கருகச்செய்தது. . குருதத் எனும் மகத்தான கலைஞன் மும்பையில் தன் வாடகை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் அது.ர்.
39 வயதேயான குருதத்தின் மனைவி கீதாதத் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் . அந்த நாளில் அவரைப்பிரிந்து கீதா துயரத்தில் இருந்தனர் .
இன்று உலகமே குருத்த படங்களை கொண்டாடுகிறது . பியாசா தான் இன்றும் இந்தியாவின் சிறந்த தரமான வணிகப்படமாக கருதப்படுகிறது உன்னதமான .காதல் திரைப்படம் என்றாலே பியாஸாதான் . வெண்ணீற இரவுகள் , ரோமியோ ஜுலியட் போல இலக்கிய காதல் கதைகள் உண்டாக்கிய தாக்கத்துக்கும் சாப்ளினின் சிட்டி லைட்ஸ் திரைப்படமாக உருவாக்கிய தாக்கத்துக்கும் சற்றும் குறைவில்லாதது பியாஸா .
முதல் முறையாக் பியாஸா படத்தை பார்த்துவிட்டு மனம் என் கை நழுவிபோவதை அறிந்து பாதியிலேயே படத்தை நிறுத்திவிட்டேன் . என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை
இப்படிப்பட்ட படம் இயக்கிய இந்தியாவின் மகத்தான படைப்பாளியான் குருதத் வாழும் போது எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை .அன்று பியாசா படுதோல்விப்படம். .
துவக்கத்தில் குருதத் வாழ்க்கையும் தொடர் வெற்றிகளால் பிரகாசித்தது பாஸி, ஜால் , சிஐடி ,ஆர் பார் என வரிசையாக வெற்றிப்படங்களாக கொடுத்தார் . ஆனால் அந்த அவரது இயக்கம் பல வன்ணப்படங்களின் வருகையால் ஆட்டம் கண்டது. அழுத்தமான கதைகளுக்கும் எதார்த்த சித்தரிப்புகளுக்கும் வரவேற்பு குறைந்து பொழுது போக்கு அம்சங்கள் அதிகமுள்ள படங்கள் வரவேற்பு பெற்றன. அவரது சம காலாத்தவரும் சக போட்டியாளருமான ராஜ் கபூர் இதை அறிந்து தன் படங்களில் நாயகிக்கு ஆடைகளை குறைத்து இந்திய மனங்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்தார் . அவர் படங்களில் நாயகி அழும் போது கூட கவர்ச்சியாக உடை உடுத்தி அதிகமாக உடல் பாகங்களை வெளிப்படுத்தி அழுவார் . நம் ஊர் குடும்ப பாங்கான பாத்திரத்துக்கு புகழ்பெற்ற பத்மினியையே அவர் சித்தரித்த விதம் கண்டு பல தமிழ் ரசிகர்கள் இதயம் பிளவுண்டது ‘
ஆனால் ராஜ் கபூரின் இந்த சூட்சுமத்தை குருதத் செய்யத்துணீயவில்லை . அழுத்தமான காதல் கதைகளும் நேர்த்தியான தொழில் நுட்பமும் என்ற அவரது சினிமா ரசனை வியபார ரீதியாக தோல்வி கண்டது. பியாஸா வை தொடர்ந்து காகஸ் கீ பூல் ஷாகித் பீபி அவுர் குலாம் போன்ற படங்கள் சுமாரான வெற்றி பெற்ராலும் பியாஸாவால் உண்டான கடனை அடைக்கும் அளவுக்கு அவரால் பணம் ஈட்ட முடியவில்லை
இதன் நடுவே தான் அவர் வாழ்க்கையில் புயல் ஒன்று நுழைந்தது
அந்தப் புயல் வஹீதா ரஹ்மான் . நம் தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் பிறந்தவர். ஹேமம்மாலினிக்கு முன்பு இந்தியில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய முதல் நாயகி . எம் ஜி ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் அறிமுகமாகி பின் அப்படியே மும்பைக்கு சென்றார். . அப்போது சிஐடி படத்தை துவக்கியிருந்தார் குருதத் .அப் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு குருத்தை சந்திக்க சென்றார் . அந்த பட வாய்ப்பு வஹீதாவை நடசத்திரமக்கியது
வஹீதா அப்படி ஒன்றும் அழகில்லை .ஆனாலும் அவரிடம் ஒரு அபரிதமான் கவர்ச்சியும் அழகும் பொங்கி வழிந்தது . காமிராவுக்கும் வஹீதாவுக்கும் கெமிஸ்ட்ரி அற்புதமாக அமைந்தது . தொடர்ந்து குருதத்துடன் சேர்ந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன குருதத்தின் இதயம் வஹிதா வசம் முழுமையாக சிறைபட்டது . கணவனின் காதல் போக்கு அறிந்த கீதாவும் வேறு வழியில்லாமல் குடும்பத்தை காப்பற்ற மீண்டும் திரையுலகில் பாட முடிவு செய்தார்
ஆர் டி பர்மன் அப்போது ஒரு புதிய பாடகியை லதா மங்கேஷருக்கு ஒரு மாற்றாக உருவாக்க நினைத்து கீதாவை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்
ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த கீதாவின் குரல் அன்று பர்மன் எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியவில்லை .ஆனாலும் ஆர் டி பர்மன விடாமல் முயற்சித்தார் .
]
குருதத் காதலி வஹீதா ரஹ்மான் மனைவி கீதாதத் ஆகியோருடன்
இதனிடையே இதை அறிந்த லதா மங்கேஷ்கர் தன் தங்கை ஆஷாபோன்ஸ்லேவை அனுப்பி ஆர் டி பர்மனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வைத்தார்
இந்த வெறுப்புகளால் கீதா கணவனை விட்டு முழுமையாக பிரிந்தார்
ஒருபக்கம் தனக்காக தன் திறமையையே தியகம் செய்து குடும்பத்துக்காக அர்ப்பணித்த காதல் மனைவி கீதா மற்றும் குழந்தைகள் இன்னொருபக்கம் சினிமா எனும் கலை வஹீதாவின் மாயச்சிரிப்பு \
பாழும் கலைஞனுக்கு அதீத இதயத்தையும் உச்சமான ரசனையையும் கொடுக்கும் இயற்கை இன்னொருபக்கம் அவன் அதை அனுபவிக்காதபடி நடைமுறை வாழ்வின் அனைத்து விதிகளையும் அவனுக்கும் சமமாக கொடுத்து கால்களை பூட்டி விடுகிறது .
ஒருபக்கம் மனம் காதலால் இழுக்க இன்னொருபககம் குடும்ப நியமம் அவன் கால்களை இழுக்க அவன் எந்த பக்கமும் போக முடியாமல் இரண்டுக்குமிடையே குருதத் சிக்கித்தவித்தார் இதிலிருந்து தப்பிக்க அவருக்கு உதவியது மதுபோத்தல்கள் . தினமும் அதீத குடியும் சிகரட்டும் தூக்க மாத்திரையும் அவரை அலைக்கழித்தன
இப்படியான சூழலில்தான் அவர் தயாரித்த படங்கள் தொடர் தோல்வி அடைந்து நிலைமை முன்னிலும் மோசமனாது சொத்துக்கள் பறிமுதல் ஆனது . வீடுகள் இழந்து வாடகை வீட்டுக்கு வந்தனர்.
இன்னொருபககம் வஹிதா தொடர் வெற்றியால் புகழ் உச்சிக்கு சென்றார் . அவராலும் குருதத்தின் காதலை ஏற்க முடியவில்லை . காரணம் கீதாவும் அவர்களது குழந்தைகளும் அவருக்கும் நெருக்கம் . தன்னால் இன்னொரு பெண்னின் வாழ்க்கை பாழாவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
இதனால் குருத்தை தவிர்த்தார் இப்போது குருத்துக்கு யாரும் இல்லை
மனைவியும் குழந்தைகளை பார்க்க அனுப்ப மறுத்துவிட்டார்
ஒரே ஒருவர் அவருக்கு ஆறுதலாக இருந்தவர்
அப்ரார் ஆல்வி . அவரது எல்லா படங்களுக்கும் அவர் தான் கதையாசிரியர்
அவர் மட்டும் அவ்வபோது அவர் குடியிருப்புக்கு வந்து போவார் . அன்று குருதத் அவரிடம் ராஜ் கபூர் கால்ஷீட்தந்துள்ளதாகவும் மீண்டும் படம் தயாரித்து கடனை அடைக்கப்போவதாக மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் . பட வேலைகள் மும்முரமாக துவங்கின ஆனால் என்ன காரணத்தாலோ ராஜ் கபூர் பட்ப்பிடிப்புக்கு வரவில்லை அன்று மாலை அப்ரார் ஆல்வி அவர் குடியிருப்புக்கு சென்ற போது இன்னொரு காரணமும் அப்ரார் ஆல்விக்கு தெரிய வந்தது . தான் குழந்தைகளை பார்க்க விரும்பியபோது மனைவி அனுப்ப மறுத்துவிட்டதை சொல்லி குருதத் மீண்டும் அதிகமாக குடிக்கத்துவங்கியிருக்கிறார்
மறு நாள் கீதா குழந்தைகளுடன் குருத்தை இறந்த நிலையில் தான் பார்க்க முடிந்தது. கடைசி வரை அவர் வாய் கீதா கீதா என்றே சொல்லிக்கொண்டிருந்தாக சாகும் தருவாயில் அருகிலிருந்தவர்கள் பதிவு செய்துள்ளனர் .
குருதத் படத்தின் புகழ் பெற்ற பாடலொன்று கீதாதத் பாடியிருப்பார் .
ககஸ் கீ பூல் படத்தில் வரும் Waqt Ne Kiya Kya Haseen Sitam -
எனும் அப்பாடல் இருவருக்காகவும் எழுதப்பட்டது போலவே இருக்கும் அதன் வரிகள்
வசீகரமான அநீதியை வாழ்க்கை நம்மீது சுமத்திவிட்டது
என்னில் நான் இல்லை
உன்னிலும் நீ இல்லை
] ஒரு பாதையில் இருவரும் சந்தித்தோம்
இணைபிரியாத ஜோடிகளாய் வாழ்வை துவக்கினோம்
சில அடிகள் கடக்கும் முன்பே
ஏனோ அந்த பாதை பாதியில் அறுந்துவிட்டது
பாதியில் முடிந்துவிட்டது
பிறகு கணவனை மறக்க கீதாவும் குடியில் வீழ்ந்து 1972ல் வாழ்வை முடித்துக்கொண்டார்
ஆசிரியர்கள் ஏன் உலக சினிமாவை பார்க்க வேண்டும்?
-அஜயன் பாலா எழுத்தாளர் & இயக்குனர்
உலக சினிமா என்றால் என்ன ?
உலகில் மற்ற நாடுகளில் எடுக்கும் சினிமாக்கள் எல்லாம் உலக சினிமாக்களா?
அப்படி இல்லை ..
அப்படியானால் எது உலக சினிமா ?
இதோ இங்கே உங்களுக்காக சிறிய விளக்கம்
சினிமா என்றாலே நம் நாட்டில் பொழுது போக்கு அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது . ஆனால் சினிமா என்ற கலை உருவானதன் நோக்கம் அதுவல்ல இசை, நடனம், ஓவியம், நாடகம் போன்றதும் இவையனைத்தும் சேர்ந்ததுமான கலைவடிவம் தான் சினிமா . எப்படி மேற் சொன்ன கலைகளுக்கெல்லாம் அதை தீர்மானிக்க கூடிய விதிகள் உள்ளனவோ அது போல சினிமா எனும் கலைக்கும் விதிகள் உண்டு.
அப்படிப்பட்ட அந்த கலைக்கான அடிப்டைகளை ஆதாராமாக் கொண்டு உருவாக்கப்ட்டதும் அதேசமயம் இது நாள் வரையிலான மனித குலத்தின் நன்மை தீமைகளை பேசுவதாகவும் எதிர் கால மனித சமூகத்தை உன்னத நிலைக்கு அழைத்துச்செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்படும் படங்களே உலக சினிமாக்கள் அது எந்த நாடு எந்தமொழியில் எடுக்கப்ட்டிருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் பார்க்கும் விதமாக உருவாக்கம் கொண்டிருந்தால் உலகசினிமா வாக கருதப்படும்
அப்படி எடுக்கப்படும் ஒரு திரைப்படம் நூறு நல்ல நூல்களை படிப்பதற்கு சமம் என லெனின் கூறுகிறார் . அப்படிப்பட்ட சினிமாக்களை ஒருவர் பார்க்கும் போது அவரது ஞானம் விரிவடையும் எண்ணத்தில் புதிய சிந்தனைகள் தலைப்படும் . அதன் வழி அவர்கள் வாழ்க்கையும் வெளிச்சமுறும் . அதுவே ஒரு ஆசிரியர் இந்த சினிமாக்களை பார்க்கும் போது அவர்களோடு எதிர்கால சமூகமே வெளிச்சம் பெறுகிறது எப்படி சிறு மதகு ஊரையே செழிப்பாக்குகிறதோ அது போல ஆசிரியர்கள் வழியே ஒரு நாடே வெளிச்சம் பெறும்
அவ் வகையில் திரைப் பட மேதை சார்லி சாப்ளின் இயக்கிய தி கிட், சிட்டி லைட்ஸ் , சர்க்கஸ் போன்ற படங்கள் நூறு வருடங்களை கடந்தும் இன்றும் உலகம் முழுக்க கோடிக்கணக்காண குழந்தைகளுக்கு யாரும் கொடுக்க முடியாத மகிழ்ச்சியையும் நல்ல சிந்தனைகளையும் ஊட்டி வருகிறது
1917 இல் எடுக்கப்பட்ட உலக சினிமாவான பைசைக்கிள் தீவ்ஸ் என்ற இத்தாலிய திரைப்படம் ஆயிரம் இலக்கிய நூல்கள் கூட உருவாக்க முடியாத நல்லுணர்ச்சியை மனித மனங்களில் எழுப்பி இன்னமும் பல சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் பணியை செய்து வருகிறது
இன்று ஆசிரியர்களின் மிகப் பெரிய சவாலே கட்டுப்படுத்த முடியாத குழந்தைகள் தான் . குழந்தைகளின் அக உலகம் செயல்படும் விதம் பற்றிய இதற்கு மிக முக்கிய காரணம் . அதே சமயம் ஈரானிய சினிமாக்கள் காட்டும் குழந்தைகளின் அக உலகம் நமக்கு வியப்பூட்டுகிறது. சில்ரன் ஆப் ஹெவன் என்ற ஒரு ஈரானிய திரைப்படம் வந்த பின் தான் உலகமே குழந்தைகளின் அக உலகம் இயங்கும் விதத்தைக் கண்டு கூடுதல் அக்கறையுடன் அவர்களை கவனிக்கத்துவங்கியது இப்படியான உலக சினிமாக்களை காணும் ஒரு ஆசிரியர் நிச்சயம் மாணவர்களின் மனதில் ஒரு நாயகனாக வலம் வருவார் .
அது போல சீன திரைப்படமான நாட் ஒன் லெஸ் , மற்றும் ஈரானிய படங்களான , கலர் ஆப் பேரடைஸ் , வேர் ஈஸ் மை பிரன்ட்ஸ் ஹோம் , மற்றும் பிரெஞ்சு திரைப் படமான ரெட் பலூன் , 400 ப்ளோஸ், இத்தாலிய திரைப் படமான லைம். ஈஸ் பியூட்டிபுல் இந்தியாவில் சத்யஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி போன்ற திரைப் படங்கள் குழந்தைகளின் அக உலகம் சார்ந்த சில ஆகச்சிறந்த உலக் சினிமாக்கள்
இந்த படங்களை ஆசிரியர்களும் குழந்தைகளும் சேர்ந்து பார்க்க சிறந்த திரைப்படங்களாகும் .
வெறுமனே குழந்தைகளின் உலகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வரலாறு அவற்றின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் மானுடவியல் போன்ற பல அம்சங்களை உலக சினிமாக்கள்: நமக்கு கற்றுத்தருகின்றன
இரண்டாம் உலகப்போர் உலகில் உண்டாக்கிய அழிவை இலக்கியங்களை விட உலக சினிமாக்களே அதிகம் பதிவு செய்துள்ளன . டேவிட் லீன் இயக்கிய லாரன்ஸ் ஆப் அரேபியா, பிரிட்ஞ் ஆன் தி ர்வர் க்வாய் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல் பெட்க் இயக்கிய ஷின்லர்ஸ் லிஸ்ட் சேவிங் பிரைவேட் ரயான் மற்றும் ருஷய் படமான் தி கிரேன்ஸ் ஆர் ப்ளையின் மற்றும் கம் அண்ட் சீ போன்ற படங்கள் போரினால் உண்டான அவலத்தோடு இரண்டாம் உலகபோர் நடந்த காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச்சென்று விடுகின்றன
இப்படி வரலாறு மட்டுமல்லாமல் ஒரு நாட்டின் பண்பாடு கலாச்சாரம் அவர்கள் உணவு உடை போன்றவற்றையும் உலகசினிமாக்கள் நமக்கு கற்றுத்தருகின்றன
உதாரணத்துக்கு சீனா பற்றியோ ஜப்பன்பற்றியோ வகுப்பில் பாடம் எடுக்கும் போது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கூடுதலான தகவல்களுடன் அவர்களுக்கு புரியும் வகையில் பாட எடுக்க முடியும்
ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனர் அகிராகுரசேவாவின் திரைப்படங்கள் அழுத்தமான மனதின் உணர்வை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தாலும் இன்னொரு புறம் அவை ஜப்பானின் கலாச்சராத்தையும் பண்பாட்டையும் உலகம் முழுக்க கொண்டு சென்றன.
அது போல ஆஸ்கார் விருது வென்ற லாஸ்ட் எம்பரர் எனும் திரைப்படம் சீன நாட்டின் நூறு வருட வரலாற்றை மூன்று மணி நேரத்தில் நமக்கு சொல்லிவிடுகிறது
அது போல அமெரிக்க இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய காந்தி திரைப்படம் மகாத்மா காந்தி அவர்களது வாழ்க்கையோடு சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மூன்று மணி நேரத்தில் நமக்கு உணர்த்திவிடுகிறது
என்னதான் பாடம் நடத்தி மனப்பாடம் செய்தலெல்லாம் மறந்து போகும் இத்தகைய வரலாறுகள் ஒரு மாணவன் காலம் முழுக்க அழியாமல் மனதில் பதிந்து அவனை நல்வழிப்படுத்த உதவும்
சமீபத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் , இண்டர் ஸ்டெல்லர் மற்றும் ஜூராசிக் பார்க் அவதார் போன்ற படங்கள் அறிவியல் உலகம் இதுவரை கண்டிராத பல புதிய விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னது
12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ் மற்றும் கலர் பர்பிள் போன்ற திரைப் படங்கள் நிற வேற்றுமைக்கு எதிரான மிகச்சிறந்த ஆக்கங்கள் .
இது போன்ற படங்களை பார்க்கும் ஆசிரியர்கள் அவர்கள் மாணவர்களுக்கும் இத்தனை சிறு வயதிலேயே கொண்டு செல்லும் போது அவை வருங்காலத்தின் பல நல்ல விதைகளை இந்த சமூகத்துக்கு உருவாக்கி அவர்கள் எதிர்காலம் சிறக்க செய்யும் என்பதில் ஐயமில்லை
Subscribe to:
Posts (Atom)
பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி
பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி தமிழ் ஒரு அழகான இளம் பெண்ணாக பூமியில் தோன்றி, அவர் முன் வரிசையாக தமிழ் கவிஞர்களை எல்லாம் நிறுத்தி...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...
-
இவை எல்லாம் நடக்கும் என திட்டங்களில்லை இதுதான் பாதை என்ற எண்ணமும் இல்லை இதற்குமுன் வாழ்க்கையும் இப்படி இல்லை ஆனாலும் என் உடல் இரண்டாக கிழிக்...


