Showing posts with label உலகசினிமா. Show all posts
Showing posts with label உலகசினிமா. Show all posts
April 29, 2026
ஆசிரியர்கள் ஏன் உலக சினிமாவை பார்க்க வேண்டும்?
-அஜயன் பாலா எழுத்தாளர் & இயக்குனர்
உலக சினிமா என்றால் என்ன ?
உலகில் மற்ற நாடுகளில் எடுக்கும் சினிமாக்கள் எல்லாம் உலக சினிமாக்களா?
அப்படி இல்லை ..
அப்படியானால் எது உலக சினிமா ?
இதோ இங்கே உங்களுக்காக சிறிய விளக்கம்
சினிமா என்றாலே நம் நாட்டில் பொழுது போக்கு அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது . ஆனால் சினிமா என்ற கலை உருவானதன் நோக்கம் அதுவல்ல இசை, நடனம், ஓவியம், நாடகம் போன்றதும் இவையனைத்தும் சேர்ந்ததுமான கலைவடிவம் தான் சினிமா . எப்படி மேற் சொன்ன கலைகளுக்கெல்லாம் அதை தீர்மானிக்க கூடிய விதிகள் உள்ளனவோ அது போல சினிமா எனும் கலைக்கும் விதிகள் உண்டு.
அப்படிப்பட்ட அந்த கலைக்கான அடிப்டைகளை ஆதாராமாக் கொண்டு உருவாக்கப்ட்டதும் அதேசமயம் இது நாள் வரையிலான மனித குலத்தின் நன்மை தீமைகளை பேசுவதாகவும் எதிர் கால மனித சமூகத்தை உன்னத நிலைக்கு அழைத்துச்செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்படும் படங்களே உலக சினிமாக்கள் அது எந்த நாடு எந்தமொழியில் எடுக்கப்ட்டிருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் பார்க்கும் விதமாக உருவாக்கம் கொண்டிருந்தால் உலகசினிமா வாக கருதப்படும்
அப்படி எடுக்கப்படும் ஒரு திரைப்படம் நூறு நல்ல நூல்களை படிப்பதற்கு சமம் என லெனின் கூறுகிறார் . அப்படிப்பட்ட சினிமாக்களை ஒருவர் பார்க்கும் போது அவரது ஞானம் விரிவடையும் எண்ணத்தில் புதிய சிந்தனைகள் தலைப்படும் . அதன் வழி அவர்கள் வாழ்க்கையும் வெளிச்சமுறும் . அதுவே ஒரு ஆசிரியர் இந்த சினிமாக்களை பார்க்கும் போது அவர்களோடு எதிர்கால சமூகமே வெளிச்சம் பெறுகிறது எப்படி சிறு மதகு ஊரையே செழிப்பாக்குகிறதோ அது போல ஆசிரியர்கள் வழியே ஒரு நாடே வெளிச்சம் பெறும்
அவ் வகையில் திரைப் பட மேதை சார்லி சாப்ளின் இயக்கிய தி கிட், சிட்டி லைட்ஸ் , சர்க்கஸ் போன்ற படங்கள் நூறு வருடங்களை கடந்தும் இன்றும் உலகம் முழுக்க கோடிக்கணக்காண குழந்தைகளுக்கு யாரும் கொடுக்க முடியாத மகிழ்ச்சியையும் நல்ல சிந்தனைகளையும் ஊட்டி வருகிறது
1917 இல் எடுக்கப்பட்ட உலக சினிமாவான பைசைக்கிள் தீவ்ஸ் என்ற இத்தாலிய திரைப்படம் ஆயிரம் இலக்கிய நூல்கள் கூட உருவாக்க முடியாத நல்லுணர்ச்சியை மனித மனங்களில் எழுப்பி இன்னமும் பல சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் பணியை செய்து வருகிறது
இன்று ஆசிரியர்களின் மிகப் பெரிய சவாலே கட்டுப்படுத்த முடியாத குழந்தைகள் தான் . குழந்தைகளின் அக உலகம் செயல்படும் விதம் பற்றிய இதற்கு மிக முக்கிய காரணம் . அதே சமயம் ஈரானிய சினிமாக்கள் காட்டும் குழந்தைகளின் அக உலகம் நமக்கு வியப்பூட்டுகிறது. சில்ரன் ஆப் ஹெவன் என்ற ஒரு ஈரானிய திரைப்படம் வந்த பின் தான் உலகமே குழந்தைகளின் அக உலகம் இயங்கும் விதத்தைக் கண்டு கூடுதல் அக்கறையுடன் அவர்களை கவனிக்கத்துவங்கியது இப்படியான உலக சினிமாக்களை காணும் ஒரு ஆசிரியர் நிச்சயம் மாணவர்களின் மனதில் ஒரு நாயகனாக வலம் வருவார் .
அது போல சீன திரைப்படமான நாட் ஒன் லெஸ் , மற்றும் ஈரானிய படங்களான , கலர் ஆப் பேரடைஸ் , வேர் ஈஸ் மை பிரன்ட்ஸ் ஹோம் , மற்றும் பிரெஞ்சு திரைப் படமான ரெட் பலூன் , 400 ப்ளோஸ், இத்தாலிய திரைப் படமான லைம். ஈஸ் பியூட்டிபுல் இந்தியாவில் சத்யஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி போன்ற திரைப் படங்கள் குழந்தைகளின் அக உலகம் சார்ந்த சில ஆகச்சிறந்த உலக் சினிமாக்கள்
இந்த படங்களை ஆசிரியர்களும் குழந்தைகளும் சேர்ந்து பார்க்க சிறந்த திரைப்படங்களாகும் .
வெறுமனே குழந்தைகளின் உலகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வரலாறு அவற்றின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் மானுடவியல் போன்ற பல அம்சங்களை உலக சினிமாக்கள்: நமக்கு கற்றுத்தருகின்றன
இரண்டாம் உலகப்போர் உலகில் உண்டாக்கிய அழிவை இலக்கியங்களை விட உலக சினிமாக்களே அதிகம் பதிவு செய்துள்ளன . டேவிட் லீன் இயக்கிய லாரன்ஸ் ஆப் அரேபியா, பிரிட்ஞ் ஆன் தி ர்வர் க்வாய் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல் பெட்க் இயக்கிய ஷின்லர்ஸ் லிஸ்ட் சேவிங் பிரைவேட் ரயான் மற்றும் ருஷய் படமான் தி கிரேன்ஸ் ஆர் ப்ளையின் மற்றும் கம் அண்ட் சீ போன்ற படங்கள் போரினால் உண்டான அவலத்தோடு இரண்டாம் உலகபோர் நடந்த காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச்சென்று விடுகின்றன
இப்படி வரலாறு மட்டுமல்லாமல் ஒரு நாட்டின் பண்பாடு கலாச்சாரம் அவர்கள் உணவு உடை போன்றவற்றையும் உலகசினிமாக்கள் நமக்கு கற்றுத்தருகின்றன
உதாரணத்துக்கு சீனா பற்றியோ ஜப்பன்பற்றியோ வகுப்பில் பாடம் எடுக்கும் போது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கூடுதலான தகவல்களுடன் அவர்களுக்கு புரியும் வகையில் பாட எடுக்க முடியும்
ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனர் அகிராகுரசேவாவின் திரைப்படங்கள் அழுத்தமான மனதின் உணர்வை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தாலும் இன்னொரு புறம் அவை ஜப்பானின் கலாச்சராத்தையும் பண்பாட்டையும் உலகம் முழுக்க கொண்டு சென்றன.
அது போல ஆஸ்கார் விருது வென்ற லாஸ்ட் எம்பரர் எனும் திரைப்படம் சீன நாட்டின் நூறு வருட வரலாற்றை மூன்று மணி நேரத்தில் நமக்கு சொல்லிவிடுகிறது
அது போல அமெரிக்க இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய காந்தி திரைப்படம் மகாத்மா காந்தி அவர்களது வாழ்க்கையோடு சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மூன்று மணி நேரத்தில் நமக்கு உணர்த்திவிடுகிறது
என்னதான் பாடம் நடத்தி மனப்பாடம் செய்தலெல்லாம் மறந்து போகும் இத்தகைய வரலாறுகள் ஒரு மாணவன் காலம் முழுக்க அழியாமல் மனதில் பதிந்து அவனை நல்வழிப்படுத்த உதவும்
சமீபத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் , இண்டர் ஸ்டெல்லர் மற்றும் ஜூராசிக் பார்க் அவதார் போன்ற படங்கள் அறிவியல் உலகம் இதுவரை கண்டிராத பல புதிய விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னது
12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ் மற்றும் கலர் பர்பிள் போன்ற திரைப் படங்கள் நிற வேற்றுமைக்கு எதிரான மிகச்சிறந்த ஆக்கங்கள் .
இது போன்ற படங்களை பார்க்கும் ஆசிரியர்கள் அவர்கள் மாணவர்களுக்கும் இத்தனை சிறு வயதிலேயே கொண்டு செல்லும் போது அவை வருங்காலத்தின் பல நல்ல விதைகளை இந்த சமூகத்துக்கு உருவாக்கி அவர்கள் எதிர்காலம் சிறக்க செய்யும் என்பதில் ஐயமில்லை
March 5, 2017
அரசியல் மேடையாகிப்போன 89வது ஆஸ்கார் விருது விழா

இது தமிழ் படங்களில் வழக்கமாக நடக்கும் விஷயம்.. அதுவரை வில்லனுக்கு அடியாளாக சேவகம் செய்தவன் இறுதிக்காட்சியில் திடீரென நாயகன் பக்கம் சேர்ந்து பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுப்பான்.. கெட்டவன் நல்லவனாக மாறி அதுவரை வில்லன் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டு மனசாட்சியை திறந்து நாயகன் பக்கம் அவன் பேசும்போது அரங்கில் கைதட்டல் உணர்ச்சிப் பெருக்கில் அதிரும்
இம்முறை லாஸ்ஏஞ்சல்ஸ் டால்பி அரங்கில் 89 வது ஆஸ்கார் விருது நிகழ்வை நேரடியாகவும் நேரலையாகவும் பார்த்த பலகோடி இதயங்களும் அத்தகைய உணர்வு நெகிழ்ச்சியில் தான் கைதட்டினர்
ஆஸ்கார் என்றாலே அது அமெரிக்க அரசின் கலாச்சரா ஊதுகுழல் எனுமளவிற்கு கடந்த காலத்தில் தன் எஜமான விசுவாசத்தை வருடா வருடம் காட்டி வந்துள்ளது.அமெரிக்க ராணுவத்தை துதிபாடி எடுத்தாலே அந்த வருடம் ஆஸ்கார் நிச்சயம் என்பது எழுதப் படாத விதி. அமெரிக்கன் ஸ்னைப்பர் (American snipper)ஆர்கோ(Argo) ஜீரோ டார்க் தெர்டி (zero dark thirty) என இப்படி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம் .
அது போல விருது நிகழ்ச்சியில் அத்தி பூத்தார் போல யாராவது அமெரிக்க ஜனாதிபதியை விமர்சித்தால் போதும் அடுத்த நொடியே மைக்கில் ஆஜராகி அது அவர்களின் தனிப்பட்ட சொந்த கருத்து அதற்கும் ஆஸ்கார் கமிட்டிக்கும் சம்பந்தமே இல்லை என பதட்டத்துடன் அறிவித்துவிடுவார்கள். 1975ல் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்ற பெர்ட் ஷிண்டர் வியட்நாமுக்கு எதிரான அமெரிக்காவின் வல்லாதிக்க போருக்கு கண்டனம் செய்து அரங்கை விட்டு வெளியேறியவுடன் அறிவிப்பாளராக இருந்த ப்ராங்க் சினட்ரா மைக் முன் பதறியடித்து ஓடிவந்து ஆஸ்கார் விருது கமிட்டிக்கும் இதற்கும் துளியும் தொடர்பில்லை என துண்டறிக்கை வாசித்தார்.
இப்படி காலம் காலமாக அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டு வந்த ஆஸ்கார் கமிட்டி இந்த வருட விழாவில் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக ஜல்லிக்கட்டாக துள்ளித் திமிறி அனைவரையும் ஆச்சரயப்படுத்தியது. விருது வாங்குபவர்கள் பலரும் தங்களது உரையில் ட்ரம்புக்கு எதிராக தங்கள் கருத்துரிமையை அரங்கில் நிலைநாட்ட அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரங்கில் பலத்த கரவொலி.
பதவியேற்ற எட்டாம் நாளிலேயே ட்ரம்ப் குறிப்பிட்ட ஏழு வளைகுடா நாடுகளுக்கு குடியெற்ற தடைச்சட்டம் விதித்தையொட்டி அமெரிக்கா முழுக்க எழுந்து வரும் எதிர்ப்பலையின் எதிரொலிதான் அந்த கரவொலி என்பது உலகமே அறிந்த ஒன்று.
அவர் இந்த தடையை அறிவிப்பதற்கு முன்பே ஆஸ்கார் அறிவித்த இந்த வருடத்திற்கான விருதுத் தேர்வு பட்டியலில் சிறந்த வெளிநாட்டு பட பிரிவில் ஈரானின் சேல்ஸ் மேன் படமும் அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால் ட்ரம்பின் இந்த வளைகுடா நாடுகளுக்கான தடைச்சட்ட அறிவிப்பு வெளியான உடன் தனது நாட்டை அவமதிக்கும் அமரிக்காவின் இந்த அங்கீகாரம் தனக்கு தேவையில்லை விழாவை நிராகரிக்கிறேன் என உடனடியாக படத்தின் இயக்குனர் அஸ்கார் பர்காடி அறிவித்தார். இதனால் விழாவில் சிறந்த வெளிநாட்டுப் படமாக சேல்ஸ் மேன் தேர்வு செய்யப்பட மாட்டாது என அனைவரும் எதிர்பார்த்து கிடந்த நிலையில் சேல்ஸ் மேன் சிறந்த படமாக அறிவிக்கப் பட்டது அனைவரையுமே ஆச்ச்ரயப்படுத்தியது.
அது போல விழாவில் அறிவிக்கப்பட்ட சிறந்த துணைநடிகருக்கான முதல் விருதே மூன் லைட் படத்தில் நடித்த மகேர்ஷலா அலி ஒரு இஸ்லாமியருக்கு என்பதும் இதில் கவனிக்கதக்கது.
இந்த எதிர்ப்பு அலையின் மூலவித்து இதற்கு முன் நிகழ்ந்த பாப்டா விருது விழாவிலேயே துவங்கிவிட்டிருந்தது. அவ்விழாவில் விருது பெற மேடையேறிய புகழ்பெற்ற நடிகை மெரீல்ஸ்ட்ரீப் ட்ரம்ப்பின் மீதும் அவரது குடியேற்ற தடை ச்சட்டத்தின் மீதும் நேரடியாக தாக்கி பேசி கலைஞர்களின் கருத்துரிமையை நிலைநாட்டினார். அவர் பேசியைதையொட்டி ட்ரம்பும் பதிலுக்கு மெரீல் ஸ்ட்ரீப் தகுதிக்கு மீறி புகழ்பெற்றுவிட்ட நடிகை அதனால் அவர் பேசியதை நான் பொருட்படுத்தவில்லை என ட்விட்செய்ய ஒட்டுமொத்த ஹாலிவுட்டும் ட்ரம்பின் இந்த ட்விட்டை எதிர்க்க துவங்கியது.
காரணம் மெரில் ச்ரீப்பின் தகுதி அப்படி. க்ராம்ர் வெர்சஸ் க்ராமர் படத்தில் அவர் நடிப்பை கண்டு வியாக்காதவன் சினிமா ரசிகனாகவே இருக்க முடியாது .சிறந்த நடிகைக்காக மூன்று முறை ஆஸ்கார் விருதை பெற்ற மெரீல்ஸ்ட்ரீப் இதுவரை அதிக முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கபட்டவர்கள் பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுவருகிறார் என்பதுதான் ஹைலைட். மொத்தம் 19 முறை . உலகின் எந்த நடிகருக்கும் நடிகைக்கும் இல்லாத இந்த சிறப்புமிக்க நடிகையை பார்த்து ட்ரம்ப் அவர் தகுதிக்கு மீறி புகழப்பட்ட்டவர் என பழித்துக்கூறியதுதான் பலரையும் உசுப்பிவிட்டது.
விருதுகமிட்டி இதற்காகவே மெரீல் ஸ்ட்ரீப்பை அழைத்து இந்த வருட விழாவில் முதல் வரிசையில் அமரவைத்து கவுரப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் அரங்கத்தையே எழுந்து நின்று ஒரு நிமிடம் கைதட்ட வைத்து கவுரப்படுத்தியது .
விழாவின் ஹைலைட்டே நிகழ்ச்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் ரேடியோ ஜாக்கியும் நகைச்சுவை நடிகருமான ஜிம்மி அசராமல் நாசூக்காக சந்தர்பம் கிடைத்த போதெல்லாம் ட்ரம்பை நாகரீகமாக போட்டுததள்ளினார்.
தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு உடனடியாக ரிட்விட் கொடுக்கும் ட்ரம்ப் நிகழ்ச்சி துவங்கி இவ்வளவு நேரமாகியும் இதுவரை ஒரு ட்வீட்டும் போடவில்லையே அவர் இப்ப என்ன செய்கிறார். நிகழ்ச்சியை பார்க்கிறாரா இல்லையா என மேடையிலே கலாய்த்த ஜிம்மி கிம்மல் அங்கேயே செல்போனில் ட்ரம்புக்கு என்ன செய்யறீங்க ட்ரம்ப் என ட்வீட்செய்து அதை ஸ்க்ரீனில் அனைவருக்கும் லைவ்வாக காண்பித்தது ஹைலைட்.. ஒருவகையில் கிம்மல் செய்தது கொஞ்சம் கூடுதலாக தெரிந்தாலும் இதுதான் இன்றைய இணைய உலகம் தனி மனிதனுக்கு வழங்கியிருக்கும் உச்சபட்ச சுதந்திரம் என்பதையும் மறுப்பதற்கில்லை. விழாவில் ரெட் கார்பட்டிலேயே அனைவரையும் அசத்தியவர் நம்மூர் ப்ரியங்கா சோப்ரா தான். வெள்ளியாக ஜிலுஜிலுத்த அவரது வித்தியாசமான கவுன் அனைவரையும் எட்டி பார்க்கும்படி ஈர்த்தது.
சிறந்த நாயகனுக்கான விருதை மான்செஸ்டர் பை தி சீ படத்தில் நடித்தமைக்காக பெற்ற கேசீ அப்ளக் கின் குட்டி குடுமி விழாவில் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சி அறிவிப்பாளர் ஜிம்மி கிம்மல் அந்த கவர்ச்சியான குடுமி பற்றி மெடையில் விவரிக்க பின்னால் அமர்ந்திருந்த மேட் டாமன் அதை கையால் அசைத்து காண்பித்தது கூடுதல் அழகு.
சிறந்த படத்தை வென்ற மூன்லைட் கறுப்பின மக்களின் வாழ்க்கையின் அவலத்தை சொல்லும் படம் சிறுவன்,
மாணவன், இளைஞன் என அன்புக்காக ஏங்கும் நாயகனது மூன்று பருவ வாழ்க்கையை சித்தரிக்கிறது. சிறந்த படத்தோடு சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ( மகேஷாலா அலி) என மேலும் இரண்டு விருதுகளை க்குவித்த இப்படம் ஒரு பாலுறவை மையமாக கொண்டு எழுதப்பட்டிருப்பதும் அரசியல் ரீதியாக கவனிக்கப்படவேண்டியது.
இதே போல கறுப்பின மக்களின் வாழ்வை சொன்ன பென்சஸ் படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வயோலா டேவிஸ் பெற்றார்.
ஒரே சமயத்தில் சிறந்த துணை நடிகர் நடிகை இரண்டு விருதுகளும் கறுப்பின கலைஞர்கள் பெறுவதும் இதுவே முதல் முறை .
இந்த வருட விழாவின் சூப்பர் படம் லா லேண்ட் . சிறந்த இயக்கம் சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை ,சிறந்த பாடல் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என மொத்தம் ஆறு விருதுகளை பெற்று அசத்தியது.
லா லாலேண்டின் கதையில் அப்படி ஒன்றும் விசேஷம் எதுவும் இல்லை இயக்குனர் விக்ரமனின் பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னைகொடுத்தேன் கதைகளின் உல்டாதான் .டத்தின் டைட்டிலும் இயக்குனர் விக்ரமன் பிராண்ட் பின்னணி இசையான லா லாலா வே வைத்திருப்பது ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை .
தன் திறமையை மறைத்து நாயகன் தன் காதலியின் திறமையை வெளிகொணர்ந்து அவளை சினிமாநட்சத்திரமாக்குகிறான் .சில வருடங்களுக்குபின் அவள் இன்னொரு கோடீஸ்வர காதல் கணவனோடு கைகோர்த்தபடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் இவன் கூலிக்கு இசையமைக்கும்போது அவளை பார்க்கிறான் . அவள் கண்டுகொள்லாமல் கடக்கிறாள் . இதுதான் கதை . நாயகி ரியான் கோஸ்டல்கிங்கின் போதையூட்டும் கண்கள் ஆஸ்காருக்கும் மேல்.சிறந்த நடிகைக்காக இன்னொரு ஆஸ்காரும் தந்திருக்கலாம்
ம்யூசிக்கல் பட பாணியில் பாடல்களுடன் முதல் பாதியும் இரண்டாம் பாதியில் அழுத்தமான காட்சிகளுமாக நகரும் படத்தின் திரைக்கதை அப்படி ஒன்றும் பெரிய விசேஷம் இல்லை . இதற்கு முன் 14 நாமினேஷன் பெற்ற டைட்டானிக் படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் லா லா வெறும் லோ லோ தான் .
இப்படியிருக்க சிறந்த படத்துக்கும் லா லா லேண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதனை அறிவிக்க வந்த நடிகரும் இயக்குனருமான வாரன்பெட்டி கூற அரங்கமே ஆச்சர்யப்பட்டது . லால லாலேண்ட் குழுவினரும் தங்கள் மேல் கொட்டும் இந்த திடீர் அதிர்ஷ்ட மழையை நம்ப முடியாமல் வியப்புடன் மேடைக்கு வந்துவிட சினிமாக்ளைமாக்ஸ் போல இல்லை இல்லை தவறாக வாசித்துவிட்டேன் சிறந்த படம் மூன்லைட் தான் என வயதான வார்ன்பெட்டி திருத்திகூற லா லா லேண்ட் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து நிற்க திடீர் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிபோய் மூன்லைட் குழுவினர் மெடையேறி சிறந்த படத்துக்கான பரிசை பெற்றனர்.
இவ்வளவுபெரிய நிகழ்ச்சியில் இப்படியான தவறுகள் குழப்பங்கள் நடக்க வாய்ப்பே இல்லை .
நம்மூர் தொலைகாட்சி நிகழ்ச்சிகல் டி ஆர்பிக்காக நடத்தும் திட்டமிட்ட திரைக்கதைகள் ஆஸ்கார் விழாவிலும் நடக்கும் . இவை நிகழ்ச்சியின் சுவார்சியத்துக்காக திட்டமிட்டு நடத்தப்படும் குழ்ப்பங்கள் என பலரும் கூறுகின்றனர். இதையே இந்திய இயக்குனரும் முன்னாள் ஆச்கார் விருதாளாருமான இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமலன் போன்றவர்கள் டிவிட்டரில் பதிவு செய்திருக்கின்ற்னர்.
அஜயன் பாலா
Subscribe to:
Posts (Atom)
பாப்லோ நெருடா வாழ்வும் கவிதைகளும்
காதல் இயற்கை புரட்சி மற்றும் வெங்காயம் - அஜயன் பாலா பாப்லோ நெரூடா ( Pablo Neruda, 1904–1...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
உலக சினிமா (இந்த இதழ் அவள் விகடனில் பிரசுரமாகியுள்ள இக்கட்டுரை முதியோர் சிறப்பிதழுக்காக பிரத்யோகமாக எழுதப்பட்டது.) தனிமை.வாழ்க்கை ம...
-
நேற்று பிலிம் சேம்பரில் சேம்பரில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒருபகுதியான் தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் எழுத்தில் எனக்கு மூத்தோ...


