September 11, 2024

தமிழ் ஆவணப் படங்களின் போக்கு

ajayanbala@gmail.com . இன்று அனைத்து மொழிகளிலும் ஆவணப்படம் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆவணப்படங்களுக்கு கலை சினிமாக்களுக்கு இணையான இடத்தில் வைத்து போற்றப்படுகின்றன. மேலும் இன்று. ஒடிடி (OTT எனும் ஒற்றை சட்டகம் வழியாக கலாச்சார பரிமாற்றங்கள் துரிதமாக நடைபெறுகின்றன. ஹாட்ஸ்டாரில் ரஷ்யாவில் ஏற்பட்ட செர்னோபில் (CERNOBYL) அணு உலை விபத்து குறித்த ஆவணப்படம் நம்மை நடுங்க வைக்கிறது. . அது போல நெட்பிலிக்ஸில் ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ் (HOUSE OF SECRETS) அமோசானில் ஐயாம் நாட் யுவர் நீக்ரோ (IAM NOT YOUR NEGRO) போன்ற டாக்குமண்டரி எனும் ஆவணப்படங்கள் கதை படங்களைக்காட்டிலும் விறுவிறுப்பாகவும் அதே சமயம் உண்மைகளை போட்டு உடைத்தும் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன. இப்படி உலகம் முழுக்க ஆவணபடங்களுக்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில் நம் தமிழகத்தில் ஆவணப்படங்களின் போக்கு என்னவாக இருக்கிறது எனும்போது இத்துறையில் நாம் இன்னும் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. ஒருபக்கம் வருத்தம் என்றாலும் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த நிலைதான் ஆனந்த் பட்வர்த்தன் போன்ற ஒருசிலர் மட்டுமே இத்துறையில் ஓரளவு ஊடகங்களால் கொண்டாடபடுகின்றவர்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் மக்களிடையே இருக்கும் வணிக சினிமா மோகம் ஒரு முக்கிய காரணம் ஆவணப்படங்கள் என்றாலே வேப்பங்காய் போல ஒரு புறக்கணிப்பு மக்கள் மன நிலையில் இருக்கிறது பொதுவாக தமிழ் நாட்டில் ஆவணப்படம் என்றாலே பொதுப் புத்தியில் அது திரையரங்குகளில் வணிக சினிமாவுக்கு முன் திரையிடப்படும் அரசாங்கத்தின் செய்திப் படங்கள் என்பதகாவே ஒரு அபிராயம் நம் சூழலில் இருந்து வந்தது .2000க்குப்பின் டிஜிட்டல் கேமராக்கலின் வருகை மற்றும் ஊடக வளர்ச்சிக்கு பின்பு தான் மக்களிடையே ஆவணப்படம் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு வரத்துவங்கியது. ..இச்சூழலில் ஆவணப்படங்கள் இருப்பதில் அதில் போக்கு என தனியாக எதுவும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்குவதே இங்கு பெரிய சாதனையாக கருதப்படுகிரது . இச்சுழலில் தமிழகத்தில் குறிபிட்ட சிலரே இத்துறையில் போதிய அங்கீகாரமோ அல்லது வணிக சந்தையோ இல்லாமல் தொடர்ந்து இத்துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றனர் அவ்வகையில் தமிழ்ஆவணப்படங்களின் வரலாற்றில் சில முக்கியதடம் பதித்த அந்த இயக்குனர்களையும் அவர்களது படங்களையும் சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம் அ. கருப்பன் எனும். ஏ.கே செட்டியார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்த ஏ.கே செட்டியாரின் முழுப்பெயர் கருப்பன் செட்டியார் சினிமாமீது கொண்ட ஆர்வத்தில் நியூயார்க் சென்று படித்துவிட்டு திரும்பிய போது காந்தி இந்தியாவின் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்தார். அவரது வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கும் எண்ணம் தோன்ற உடனே களமிறங்கினார் அவரது வாழ்க்கையை நூல்கள் மூலம் முழுமையாக உள்வாங்கிக்கொண்ட அவர் அதன்பின் காந்தி குறித்த ஊடகப் பதிவுகள் எத்தனை நாடுகளில் உள்ளதோ அத்தனையும் சேகரிக்க முடிவுசெய்து களமிறங்கினார். போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்திலேயே பத்தாயிரம் மைல்கள் மூன்று ஆண்டுகள் பயணம் செய்து பல நாடுகளில் சேகரித்து வைக்கப்படிருந்த காந்தி பற்றிய பிலிம் சுருள்களை உரியவர்களிடம் அனுமதி பெற்று சேகரித்து அதன் மூலம் ஐம்பதாயிரம் அடி நீளத்துக்கு ஆவணப்படத்தை உருவாக்கினார். ஹாலிவுட்டில் சிறந்த படத்தொகுப்பாளர் மூலமாக அதை பன்னிரண்டாயிரம் அடியாக சுருக்கி பின் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து விவரணம் எழுதி ஆங்கில எழுத்துக்களாக படத்தில் சேர்த்துக்கொண்டார் இவ்ஆவணப்படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் 1948ல் அந்த ஆவணப்படத்தை வெளியிட்டார் . ஆனால் இந்த பெருமைமிக்க காரியத்துக்குபின் தமிழில் ஆவணப்படங்களே பெரிதாக எடுக்கப்படவில்லை குட்டி ஜப்பானின் குழந்தைகள் பல வருடங்கள் இடைவெளிக்குப்பின் 1989ல் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணி செய்யும் குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து குட்டி ஜப்பானின் குழந்தைகள் வெளியாகி பரவலான கவனம் பெற்றது. பல விருதுகளையும் வென்றது என்றாலும் இதை இயக்கியவர் சலம் பொன்னுரக்கர் கேரளாவைச் சேர்ந்தவர் பின் இந்த படம் உருவாக்கிய தாக்கம் ஆவணப்படம் குறித்த உணர்வை தமிழ் சூழலில் சிறு சலனத்தை உண்டாக்கிவிட்டது என்றாலும் உடனடியாக எதுவும் நடந்துவிடவில்லை . தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக சில தனியார் நிறுவனங்கள் எடுத்த சில படங்கள் தவிர வேறெந்த முயற்சியும் இல்லை . காரணம் அன்றுசினிமா எடுப்பது என்பது பெரும் முதலீடு சார்ந்த விடயம் அப்படியே எடுத்தாலும் அதற்கு வர்த்தக சூழலும் இல்லை. இயக்குனர் எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய நாக் அவுட் குறும்படம் தேசுய விருது பெற்றதை ஒட்டி மாற்று சினிமா குறித்த விழிப்புணர்வு தமிழ் ச் சூழலில் உருவாகத்துவங்கியது . இயக்குனர் சொர்ண வேல் ஈஸ்வரன் 1996ல் சொர்ண வேல் ஈஸ்வரன் தங்கம் என்ற பெயரில் எடுத்த ஆவணப்படம் ஒன்று பரவலான கவனத்தை உண்டாக்கியது . அவரே ஐ என் ஏ : இந்திய தேசிய ராணுவம் (1997) என்ற பெயரில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் குறித்த ஆவணபடத்தையும் எடுத்தார் . தொடர்ந்து வில்லு (1997) கருகத்திருவுளமோ (1999) ,தொடர்ந்து Migrations of Islam (2013 ) nagappattinam (2016) கட்டு மரம் போன்ற படங்களை எடுத்து வருகிறார் இயக்குனர் அம்ஷன் குமார் பாரதியைபற்றிய துல்லியமான ஆய்வுகளுடன் அம்ஷன் குமார் எடுத்த சுப்ரமணிய பாரதி எனும் ஆவணப்படம் தான் தொடர்ந்து தமிழில் எடுக்கப்பட்ட பலவாழ்க்கை வரலாற்று படங்களுக்கு முன்னோடி, குறிப்பாக பாரதி , பெரியார் காமராஜர் ஆகியோர்குறித்த வணிக சினிமாக்கள் உருவாக்கம் பெற அம்ஷன் குமாரின் பாரதி படமே முன்னோடியாக அமைந்தது அம்ஷன்குமார் தொடர்ந்து அசோகமித்திரன் சி.வி.ராமன், உ.வெ. சாமிநாத ஐயர், ஆகிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார். . சதுப்பு நிலக்காடுகள் பற்றி இவர் எடுத்த சுற்றுச்சூழல் குறித்த படமும் கவனிக்கத் தகுந்தது . இதுவரை 25 க்கும் அதிகமான ஆவணப் படங்களை எடுத்து தமிழ் ஆவணப் பட உலகுக்கு பெருமை சேர்த்துள்ளார் 2015ல் இவர் எடுத்த யாழ்பாணம் தட்சினாமூர்த்தி பற்றிய படம் மூலம் முதன்முதலாக தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குனர் என்ற பெருமையும் இவருக்குண்டு ஆர்.ஆர்.சீனிவாசன் ஒரு ஆவணப்பட இயக்குனரை தமிழக போலீஸ் வலை வீசி தேடிய சம்பவமும், தமிழ் ஆவணப்பட உலகில் நிகழ்ந்துள்ளது . 1997ல் ஆர் ஆர் சீனிவாசன் எடுத்த நதியின் மரணம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் கூட சொல்லலாம்.. அன்று அனைத்து நாளேடுகளிலும் ஆர் ஆர். சீனிவாசன் புகைப்படமும் குறிப்பிட்ட ஆவணப்படத்தின் பெயரும் பரபரப்பாக பத்திரிக்கைகளில் அச்சாகின. ஒரு வகையில் பார்த்தால் சாதாராண பாமர மக்கள் கூட தினத்தந்தியில் வந்த இந்த செய்தி மூலம் ஆவணப்படம் என்ற ஒன்று இருப்பதை அரிந்துகொண்டனர் . கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஊர்வலம் சென்ற போது காவல் துரை அவர்களை ஆற்றில் ஓட ஓட விரட்டி அடித்ததை அப்படியே நேரடியாக பதிவு செய்யபட்ட காட்சிகளுடன் இத்திரைப்படம் உருவாக்கப் பட்டது. சென்னையில் பொது அரங்கம் ஒன்றில் இப்படம் திரையிடப்பட்டதால் தமிழகஅரசு இதற்கு தடையானை பிறப்பித்தது . பின் இப்படத்தை இயக்கிய சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததும் இனி ஆவணப்படங்களும் சென்சார் செய்த பின்பே பொது இடங்கலில் திரையிடப்படவேண்டும் எனும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் இப்படம் உருவாக்கிய மிகபெரிய சாதனை ஆர்,ஆர் .சீனிவாசன் தொடர்ந்து என் பெயர் பாலாறு போன்ற சுற்றுசூழல் குறித்த முக்கிய ஆவணப்படங்களும், எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை பற்றிய பவா என்றொரு கதை சொல்லி மற்றும் புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய ஆவணப்படங்களும் இயக்கி இத்துறையில் தொடர்ந்து இயங்கி வருபவர் இயக்குனர் ஆர்.வி ரமணி . இந்த வரிசையில் இத்துறைக்காக தன்வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இயக்குனர் ஆர்.வி ரமணி . முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இத்துறையில் இயங்கிவரும் ரமணி இவரது படங்கள் இந்திய அளவில் பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறப்பு செய்திருப்பவர். இவர் இயக்கத்தில் மறைந்து வரும் அரிய கலையான தோல்பாவைக் கூத்து ( 2003 )கலைஞர்கள் பற்றிய 150 நிமிட ஆவணப்படம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு அரிய முயற்சி. தமிழ் நாடு முழுக்க பல்வேறுபட்ட கலைஞர்களை நேரடியாக கள ஆய்வு செய்த இப்படம் தமிழ் ஆவணப்பட உலகின் இன்னுமொரு மைல் கல் எனலாம் பிற்பாடு 1999ல் ஓவியர் ஆதிமூலம் பற்றி லைன்ஸ் ஆப் காந்தி, மற்றும் 2005ல் எழுத்தாளர் சுந்தரராமசாமி பற்றிய நீ யார், போன்ற படங்கள் இவர் இயக்கத்தில் வெளியான குறிப்பிடத்தக்க படங்கள் ரமணியின் படங்கள் தனிமனிதமும் அக விசாரணையும் கவித்துவமும் கூடி வேறு திசையில் பயணித்து புதிய அனுபவங்களுக்குள் இழுத்துச் செல்பவை . இந்த பாணியின் உச்சமாக 2019 ல் இவர் இயக்கிய ஓ தட்ஸ் பானு எனும் ஆவணப்படம் அந்த ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஆவணப்படத்துக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடதக்கது. இயக்குனர் ஆர்.பி.அமுதன் ஒரு ஆவணப்பட இயக்குனரின் உச்ச பட்ச பொறுப்புகளை தமிழ் சூழலில் உணர்த்திய கலைஞன் ராமலிங்கம் புஷ்பலிங்கம் அமுதன் எனும் ஆர்.பி அமுதன்... மதுரையைச் சேர்ந்தவர். மதுரையில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் லீலாவதி மற்றும் தீவிரவாதிகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் 1999ல் தன் பயணத்தைத்துவக்கிய அமுதன், மதுரையில் ஒரு குறிப்பிட்ட தெருவில் மலக்கழிவுகளை சுத்தம் செய்யும் மாரியம்மாள் எனும் தலித் துப்புரவு தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கையைச் சோலும் பீ (2003 )எனும் இவரது ஆவணப்படம் தமிழில் மனித உரிமைகள் சார்ந்து மிகபெரிய விழிப்புணர்வை உண்டாக்கியது . தமிழ்நட்டில் நிலவும் சாதிய ஒடுக்குதல்கலின் அவலத்தை இப்படத்தில் வெட்ட வெளிச்சமாக்கினார் . தொடர்ந்து இத்துறைகாக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்துவரும் அமுதனின் இயக்கத்தில் உருவான செருப்பு தைக்கும் தொழிலை செய்துவருபவர்கள் பற்றிய செருப்பு (2006) (மற்றும் அணு உலைக்கு எதிரான ரேடியேஷன் ஸ்டோரீஸ் (2008) ஆகியவையும்பரவலான கவனத்தை பெற்றவை . தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கலை இயக்கியுள்ள இவரது படங்கள் இந்திய முழுக்க பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன மட்டுமல்லாமல் மறுபக்கம் என்ற பெயரில் தொடந்து மதுரையிலும் சென்னையிலும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஒரு ஆவணப்படத்துகென திரைப்பட விழாவை நடத்தி வருகிறார். இயக்குனர். லீனா மணிமேகலை அடிப்படையில் எழுத்தாளரும் கவிஞருமான லீனா மணிமேகலை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆவணபட இயக்கத்தில் ஈடுபட்டு வருபவர் சமூகத்தில் பெண் ஒடுக்குதல் குறித்த பார்வையை முன்வைக்கும் படங்களை அதிகம் இயக்கிய லீனா 2002ல் மாத்தம்மா தமிழின் முதல் இன வரைவியல் சார்ந்த ஆவணப்படம் எனலாம் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான மூன்று மூன்று அடித்தட்டு உழைக்கும் பெண்கள் பற்றிய ஆவணப்படம் தேவதைகள் தமிழில் விளிம்புநிலை பெண்களின் வாழ்வையும் அவர்கள் மனத்திடத்தையும் சமூக நெருக்கடிகளையும் தோலுரித்துக் காட்டியது பெண்னாடி ,பலி பீடம் பறை white van stories போன்ற குறிப்பிடத் தகுந்த படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது முழு நீள கதைப்படங்களை இயக்கி வருகிறார் அவ்வகையில் இவர் இயக்கிய மாடத்தி உலக முழுக்க பல திரைப்பட விழாக்களில்,பங்கேற்று விருதுகளை பெற்று வருகிறது இயக்குனர். ரவி சுப்ரமணியன் கவிஞர் எழுத்தாளர் பாடகர் என பன்முகங்கொண்ட கலைஞரான ரவி சுப்பிரமணியம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி தயாரிப்பாக நூற்றுக்கும்மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த இவரது ஆவணப்படம் அம்ஷன் குமாரின் பாரதிக்கு பிறகு அதிகம் பாரட்டைபெற்ற குறிப்பிடத்தக்க ஆவணப்படமாக கருதப்படுகிறது. தொடர்ந்து இத்துறையில் இயங்கி வரும் இவர் இந்திராபார்த்தசாரதி ,மா,.அரங்கநாதன் திருலோக சீதாராம் போன்ற அரிய இலக்கிய ஆளுமைகள் குறித்தும் இயக்குனர் பாலச்சந்தர் குறித்தும் தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்து வருகிறார் இயக்குனர். சோமிதரன் இலங்கைத் தமிழரான சோமிதரன் 2004 முதல் சென்னையில் இயங்கி வரும் ஆவணப்பட இயக்குனர் . 2005ல் போபால் பேரழிவு குறித்து தன்முதல் ஆவணப் படத்தை இயக்கி அறிமுகமானார். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய எரியும் நினைவுகள் (2008 ) மிகச் சிறந்த போர் எதிர்ப்பு ஆவணமாகவும் தமிழர் பண்பாட்டு பதிவாகவும் கருதப்படுகிறது . தொடந்து இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை குறித்த முல்லைத்தீவுசாகா எனும் படமும் போரினால் தமிழர்கள் படும் துன்பங்களையும் அவலங்களையும் பதிவு செய்த குறிபிடதக்க ஆவணமாக கருதப்படுகிறது , தற்போது சென்னையில் முழுநீளகதை படங்களில் பணிபுரிந்து வருகிறார். இயக்குனர் .திவ்ய பாரதி மதுரையைச் சேர்ந்த வழக்கரைஞர் திவ்ய பாரதி 2017ல் வெளியான இவரது கக்கூஸ் ஆவணப்படம் மூலம் முழுமையான ஆவணப்பட இயக்குனராக தன்னை வரித்துக்கொண்டவர். கக்கூஸ் ஆவணப்படம் வெளியான மறுநாளே போலீசாரல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் . மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துவதாக பலத்த எதிர்ப்புகள் வர போலிசார் இவர்மீதுவழக்கு பதிவு செய்து தேடத்துவங்கினர் அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீனவர் பிரச்சனை குறித்து எடுத்த ஒருத்தரும் வரலே என்ற படத்தின்மீதும் பட வெளிவருவற்கு முன்பே போலீசார் தேடும் அளவுக்கு இவரது ஆவணபட செயல்பாடுகள் காத்திரமானவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழு நீள படம் எடுக்கும் முயற்சியில் இருந்து வருகிறார் மேற்சொன்ன அனைவரும் தொடர்ந்து இத்துறைக்காக தங்கள் வாழ்வை முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ அர்ப்பனித்து செயல்படுபவர் . இவர்களின் செயல்பாடுகளால் மட்டுமே தொடர்ந்து தமிழ் ஆவணபடத்துறை இன்று தமிழில் ஓரளவு தடம் பதித்து வளர்ந்துள்ளது இவர்களைத்தவிர தங்களது அரிய முயற்சிகளின் மூலம் சிலர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப்படங்கள் இத்துறைக்கு தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் கொடுத்துள்ளன அவர்களுள் பால கைலாசம் இயக்கிய வாஸ்து மரபு, கோம்பை அன்வர் இயக்கிய யாதும் ஊரே .கீதா இளங்கோவனின் மாதவிடாய் , அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கீழ்வெண்மனி பற்றிய ராமய்யாவின் குடிசை, செந்தமிழன் இயக்கிய பேசாமொழி ,கோவி லெனின் இயக்கத்தில் அண்ணா ,ப்ரேமா ரேவதியின் உங்களில் ஒருத்தி, பாலமுருகன் இயக்கிய நொய்யல், இரா.முருகவேள் மற்றும் ஒடியன் லட்சுமணன் இயக்கிய நாளி, தவமுதல்வன் இயக்கத்தில் உருவான பச்சை ரத்தம் போன்றவை தம்மளவில் சிறப்பான் ஆக்கமும் வெளியான போது சூழலில் பலரது கவனத்தை ஈர்த்து தமிழ் ஆவணப்பட உலகுக்கு பெருமையும் மதிப்பும் கூட்டிய ஆவணப் படங்கள் வணிக சினிமாக்களுக்கு கிடைக்கும் கவனத்தில் ஒரு துளியளவு கவனத்தை ஊடகங்களும் அரசாங்கமும் கொடுத்தால் இத்துறயில் இன்னும் கூடுதலாக பலர் இயங்கி சமூகத்துக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடும் பாலு மகேந்திரா நூலகம் சார்பாக இத்துறைக்கு ஒரு இணைய தளம் உருவாக்கி தமிழ் ஆவணப்படங்கள் குறித்தஆவணகப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு இதன்மூலம் வழி வகை செய்யவிருக்கிறது என்பதை இக்கட்டுரை மூலம் தெரிவித்துக்கொள்வதில் உவகைகொள்கிறேன் -அஜயன்பாலா பாலுமகேந்திரா நூலகம்

பொறுப்புணர்வுமிக்க அருமையான விழிப்புணர்வு கவிதைகள்

நீதியரசர் பாரி அவர்கள் எழுதிய சட்டமும் கவி பாடும் முன்னுரை -அஜயன்பாலா பாஸ்கரன் உலகமே இன்று மாறிவிட்டது . ஆதி காலத்தில் மனிதன் பெண்களுக்காகவும் உணவுக்காவும் வெட்டி மடிந்தான் . பிறகு பொன்னுக்காக வில் வேல் ஆயுதங்கள் கொண்டு மோதினான் . பிறகு மண்ணுக்காக கப்பல் படை விமானப்படை என உருவாக்கி சண்டை போட்டவன் எரிபொருளுக்காக ஏவுகணைகள் கொண்டு தாக்கிக்கொண்டான். இதோ இன்று அதுவும் மாறிவிட்டது . ஸ்கட் இல்லை உயிரியல் ஆயுதங்கள் இல்லை ஆனாலும் போர் நடக்கிறது. அதை செய்வது நாடுகள் அல்ல . பெரு நிறுவனங்கள் . இன்று உலக அரசியலைத் தீர்மானிக்கும் வல்லாதிக்கம் கொண்டவர்கள் அமெரிக்காவோ சீனாவோ ரஷ்யாவோ அல்ல . அவர்களையும் அடக்கி ஆளும் மகாசகதி கொண்ட கண்ணுக்கு தெரியாத இந்த பெரு முதள்ளிகள் தான். எதற்குத் தெரியுமா டேட்டா வுக்காக ஆமாம் இன்று வணிகம் தான் மிகப்பெரிய போர். யாரிடம் அதிக டேட்டா ( தனி நபர் தகவல்) இருக்கிறதோ அவர்கள் தான் ராஜா . இந்த டேட்டா யாரும் அல்ல நாம் தான் .நம் தொலைபேசி நம் இணையதள முகவரிகள் தான். இவர்களின் போட்டியில் ஒவ்வொரு நொடியும் நாம் சுரண்டப்படுகிறோம் . இதில் என்ன கூத்து என்றால் நாம் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலே ஒவ்வொருநாளும் நம் வியர்வையும் உழைப்பும் அவர்களால் சுரண்டப்படுகிறது உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு ஏசி அறையில் அமர்ந்திருக்கும் அவர்களின் பாக்கட்டுக்கு செல்கிறது . உதாரணத்துக்கு ஒரு தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள் அதில் வாகன நிறுத்தம் முதற்கொண்டு அனுமதி சீட்டு தொடங்கி பாப்கார்ன் கொக்கோகோலா வரை அனைத்திலும் நாம் சுரண்டலுக்கு ஆட்படுகிறோம் .. எதுக்கு சார் பார்க்கிங் காசு இவ்ளோ வாங்கறீங்க ? என ஆரம்பத்தில் கோவப்படும் நாம் கூட இப்போது அதற்கு பழகிக்கொண்டு அவர்களின அடிமையாகி அவர்களின் சூப்பர் பணக்கார போட்டிக்கு உதவி செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் எல்லா விஷயத்திலும் இந்த சுரண்டல்கள் நடக்கிறது. .ஏதவாது பிரச்னை என்றால் நேரிடையாக தொடர்புகோள்ள முடியாது. மீறினால் டோல் ப்ரீ எண்னுக்கு டயல் செய்ய வேண்டும் ஆங்கிலத்தில் பேச எண் ஒன்றை அழுத்தவும் தமிழுக்கு மூன்றை அழுத்தவும் என குழப்பி ச்சீ போங்கடா என வெறுத்துப்போய் நாமும் எதிர்ப்புக்குரல் எழுப்ப வழி தெரியாமல் சோர்ந்து போகிறோம் இப்படியான அயோக்கித்த்னங்களூக்கு நாம் அடிமையாகிவிட்ட சூழலில் நம்மை நோக்கி நீளும் ஒரே கை நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றங்கள்.. நமக்கான உரிமைகளை மீட்டுத்தரும் இந்த நீதி மன்றத்தில் நீதிபதியாக இருப்பவர்கள் பணியானது இருளில் தடுமாறும் ஒருவனுக்கு விடியலின் வெளிச்சம் போன்றது. அத்தகைய நீதிபதியான பெருமதிப்புக்குரிய திரு. பாரி அவர்கள் இப்படி கவிதை வடிவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் செயலை பாராட்ட வார்த்தைகளில்லை வெறும் அறிவுரைகள் போல் இல்லாமல் வாசிப்பவர்கள் மனதில் ஆழ பதியும்படியும் அதேசமயம் கவிதைக்குண்டன சொல் நயம் ஒலி நயம் ஆகியவற்றுடன் நறுக் நறுக்கென படைத்திருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு உதாரணத்துக்கு உயிலே உன்னை எழுதியவர் இறந்தால் தான் உனக்கு உயிர் எனும் போதும் . அது போல தான் எழுதிய உயிலை அவன் இறப்பதற்கு முன் தான் சாகடிக்க முடியும் என உயில் பற்றி எழுதும் போதெல்லாம் அவரது அங்கதச்சுவையும் அழகுத்தமிழோடு சேர்ந்து கொள்கிறது. இது போல நமக்கு அன்றாட வாழ்வில் பயன் தரக்கூடிய நெருப்புக்குச்சிகளாக இந் நூல் முழுக்க பல கவிதைக்ள் இருப்பது சிறப்பு முல்லைக்கு தேர் கொடுத்தான் அன்று ஒரு பாரி .. தன் கவிதையால் நுகர்வோருக்கு வெளிச்சம் தருகிறார் இன்றும் ஒரு பாரி என பாரட்டும் அளவுக்கு இந்தக் கவிதைகள் உள்ளன உங்கள் பணி போற்றத்தக்கது. ஊருக்கு உழைத்திடல் யோகம் என்றான் பாரதி அந்த யோகம் செய்யும் திரு.பாரி அவர்களின் இந்த சிறு நூல் எல்லா சிறப்புகளையும் எய்த வாழ்த்துகிறேன் -அஜயன் பாலா பாஸ்கரன் சென்னை- 93

சகலகலாவல்லி டி.பி.. ராஜலட்சுமி (1911 - 1964)

தென்னிந்தியாவின் முதல் நாயகி மற்றும் முதல் பெண் இயக்குனர் திருவையாறு பஞ்சோபகேச சாஸ்திரி ராஜலட்சுமி என்பதுதான், டி.பி.ராஜலட்சுமியின் முழுப்பெயர்.. தென்னிந்தியாவின் முதல் திரைப்பட கதாநாயாகி மற்றும் கனவுக்கன்னி என்னும் பெயர் கொண்ட இவர்தான் தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குனர் , முதல் பெண் பாடலாசிரியர் மற்றும் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பல பெருமைகளுக்கும் சொந்தக்காரர் அன்று நடிகைகள் யாரும் நடிக்க முன்வரவில்லை. அவர்களுக்கு அது அச்சமூட்டுவதாக இருந்தது. இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திராவில், அத ன் இயக்குனர் தாதா சாகேப் பால்கேவுடன் படத்தில் நடிக்க ஹரிச்சந்திரன் மனைவி பாத்திரத்திற்கு அலையோ அலை என அலைந்து பார்த்தார். யாரும் கிடைக்கவில்லை . இறுதியில், ஒரு உணவு விடுதியில் சர்வராகப் பணிபுரிந்து வந்த 16 வயதுப் பையனின் முகம் ஓரளவு பொருந்தி வரவே அவரையே நாயகியாக மாற்றி, மேக்கப் போட்டு, ஒப்பேத்தி நடிக்க வைத்தார். வடஇந்தியாவிலேயே இப்படி என்றால் நம்மூருக்குச் சொல்லவும் வேண்டுமா? அன்று சினிமா நாடகம் என்றாலே நம் பேண்கள் பலரும் அச்சப்பட்டு ஒதுங்கி நிற்க இரண்டு காரணங்கள் . ஒன்று . சினிமாவில் நடித்தால் ஆயுசு குறையும் என்ற பயம். இன்னொன்று அன்றையை சூழலில் சமூகத்தில் நிலவி வந்த பெண்னடிமைத்தனம் .. இத்தகைய சூழலில் இந்த தடைகளை உடைத்து நாயகியாக நான் நடிக்கிறேன் என துணிந்து வந்ததோடு அல்லாமல் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே ஒரு ப்டத்தை தயாரித்து தானே அதை இயக்கவும் அதில் வரும் பாடல்களை தானே எழுதவும் செய்தார் என்றால் அது வரலாற்றுச் சாத்னை தானே. அதிலும் இன்றும் கூட பெண்கள் திரைப்படத் துறையில் இயக்குனர் ஆவது மிகச்சவாலான காரியம் . உலக அளவில் கூட சதவித அடிப்படையில் மிக மிகக் குறைவு . காரணம் இயக்கம் என்பது அதிக உடல் உழைப்பு கோரும் பணி என்பதால் மட்டும் அல்ல அது நிர்வாகச் சிக்கல்கள் கொண்ட மன நெருக்கடி மிகுந்த பணி. அதனாலேயே இப்பொழுதும் பெண்கள் இத்துறைக்குள் அடியெடுத்து வைக்கத் தயங்குவர் இச் சூழலில் சினிமா தொடங்கிய காலத்திலேயே இதையும் சாதித்துக்காட்டியவர் என்பதுதான் டி. பி. ராஜலட்சுமி என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் அழுத்தமான தடம் பதிக்க முக்கிய காரணம் . திருவையாறு பஞ்சோபகேச ராஜலஷ்மி . இதுதன் சுருக்கமாக டி.பி.ராஜலட்சுமி என்ற பெயராக நிலைத்து நின்றது . தஞ்சை திருவையாறில், 1911 ஆம் ஆண்டு பிறந்த ராஜலட்சுமியின் தந்தையார் கணக்கு ப்பிள்ளையாக பணியாற்றி வந்தவர். அம்மா பெயர் மீனாட்சி அம்மாள்,. ஐந்தாம் வயதிலேயே ராஜலட்சுமியிடம் யாராவது பாட்டுப் பாடினால் அதை அப்படியே பாடும் திறமை இருந்தது. ஏழாம் வயதில், அவருக்கு முத்துமணி என்பவருடன் நிகழ்ந்த பால்ய திருமணம் ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது.. திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில், வாழாவெட்டி என்ற பட்டமும் அவரைச் சூழ்ந்தது. அப்பா, அம்மாவோடு பிறந்தகம் வந்து சேர்ந்தார். அடுத்த வருடமே தந்தையும் மரணம். இப்படி, சட்டென எதிர்பாராமல் திரும்பிய வாழ்வால் தடுமாறிப்போன ராஜலட்சுமி, அம்மா மீனாட்சியோடு திருச்சி மலைக்கோட்டைக்கு குடி பெயர்ந்தார். திருச்சியில், அப்போது சி.எஸ்.சாமண்னா என்பவர், சொந்தமாக ஒரு நாடகக் குழு வைத்திருந்தார். இயற்கையில் இசையில் ஆர்வம் மிகுந்த ராஜலட்சுமி, சி.எஸ்.சாமண்னா வீட்டிற்கு அம்மாவுடன் சென்று நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு வாய்ப்பு கேட்டுச் சென்றார். அதிகம் பையன்கள் பயிலும் இடத்தில், பெண் குழந்தைகளை வைத்துச் சமாளிப்பது சரிவராது என உணர்ந்த சாமண்ணா, இங்கு வாய்ப்பில்லை, அதனால் புறப்படுமாறு கூறி மறுதலித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மாடியிலிருந்து ஒருவர் அப்போது இறங்கி வந்துகொண்டிருந்தார். சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள், சிலர் அதை நேரம் என்பார்கள், சிலரோ கடவுளின் கருணை என்பார்கள், சிலரோ திறமைகள் சந்திக்கும் தருணம் என்பார்கள், அப்படி ஒன்றான தருணம்தான் ராஜலட்சுமியின் வாழ்க்கையில் அந்தக் கணம். படியில் இறங்கிவந்தவர் வேறு யாருமில்லை. தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள்தான். தமிழ் நாடக உலகின் பிதாவான சங்கரதாஸ் சுவாமிகள், ராஜலட்சுமியின் பாடும் திறனைப் பார்த்து வியந்து, ” இந்தப் பெண் பிற்காலத்தில் பெரிய நிலைக்கு வருவார். ஆர்வத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோணுகிறது. அதனால் இந்தப் பெண்ணை குழுவில் சேர்த்துக்கொள் ” என சுவாமிகள், சி.எஸ்.சாமண்ணாவிடம் பரிந்துரைக்க சாமண்ணாவும் உடனே ராஜலட்சுமியை மறுபேச்சில்லாமல் சேர்த்துக்கொண்டார். முதல் நாடகம் பவளக்கொடி. பாத்திரம் புலேந்திரன். சம்பளம் மாதம் 50 ரூபாய். தொடர்ந்து செல்லப்பா கம்பெனி, கே.பி.மொய்தீன் நாடகக் குழு, தசாவதாரம் கண்ணையா நாடகக் குழு எனப் பல குழுக்களில் பயணித்தார். கண்ணையா குழுவில் எஸ்.ஜி.கிட்டப்பா ராமர் வேஷம்போட அவருக்கு ஜோடியாக சீதையாக நடித்தார். தொடர்ந்து பல ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் புகழ் நாட்டியிருந்த எம்.கே.டி.தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி நாடகத்தில் ஜோடியாக நடிக்க புகழ் பரவியது. இவரது நடிப்பாற்றல் திறமை ஸ்திரீபார்ட் மட்டுமல்லாமல், ராஜபார்ட்டிலும் பல நாடகங்களில் நடிக்கவைத்தது. ஆண்களை, பெண் வேடம் போடவைத்து நடிக்கவைத்த காலத்தில், பல ஆண்கள் இருக்கும்போதே அவர்களைத் தவிர்த்துவிட்டு ஆண் வேடம் இவருக்குத் தரப்பட்டதென்றால், அவரது திறமையை அளந்து கொள்ளுங்கள். மட்டுமல்லாமல், சில நாடகங்களில் ஆண், பெண் இரு வேடத்திலும் தோன்றி பிரமிக்கவைத்தார். அப்போது மௌனப் படங்கள் வெளிவரத் துவங்கின, நாடகத்தைப் போலவே சினிமாவிலும் புகழ்பெற முடியும் என நம்பினார். அதற்கேற்றார்போல, சிவகங்கை நாராயணன் அவர்களின் ஜென்ரல் பிலிம் கார்ப்பரேஷன் கம்பெனியில் நடிக்க வாய்ப்பு வந்தது. 1929இல் கோவலன், அவர் நடித்த முதல் ஊமைப்படம். தொடர்ந்து, அசோஷியேட் பிலிம் கம்பெனியின் உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களில் நடித்தார். 1931ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பேசும் படமான ’ஆலம் ஆரா’ படத்தை அர்தேஷ் இராணி இயக்கினார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிராந்திய மொழிகளிலும் படம் எடுக்க விரும்பிய இராணி, தமிழின் முதல் பேசும்படத்தை எடுக்கத் திட்டமிட்டார். காளிதாஸ் எனும் அந்தப் படத்தில் நடிக்க, நாயகியாக டி.பி.ராஜலட்சுமியைத் தேர்வுசெய்தார். படத்தின் நாயகன் தெலுங்கில் பேச, இன்னும் சிலர் இந்தியில் பேச, இவர் மட்டும் தமிழ் பேசி நடித்தார். அவ்வகையில், திரையுலகில் தமிழ் பேசிய முதல் கலைஞர் என்ற பெருமையும் டி.பி. ராஜலஷ்மிக்கு உண்டு. காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. `காளிதாஸ்’ படத்தில், `காந்தியின் கைராட்டினமே’ என்ற நாட்டுப்பற்று பாடலைப் பாடி, ஆடி நடித்தார் ராஜலட்சுமி. படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை எனினும், நாட்டுப்பற்று பாடலை ரசித்தனர் மக்கள். தமிழகத்தின் முதல் பெண் நட்சத்திரமாக உருவெடுத்தார் ராஜலட்சுமி. அதன்பின், 1932இல் அவர் நடித்த ராமாயணம் படத்தில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். அப்படியாக, முதல் இரட்டை வேட நடிகை என்ற பெருமையும் இவருக்குண்டு. இக்காலகட்டத்திலேயே இவருக்கு ” சினிமா இராணி ” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. வரிசையாக சம்பூர்ண அரிச்சந்திரா, சாவித்திரி சத்தியவான், கோவலன், வள்ளி திருமணம், திரௌபதி வஸ்திராபரணம், பக்த குசேலா, குலேபகாவலி என நிறைய படங்களில் நடித்தார். 1933ஆம் ஆண்டு, வள்ளிதிருமணம் என்ற பெயரில் சாமிக்கண்னு வின்சென்ட் தயாரித்த படத்தில், சி.எம்.துரைசாமி நாயகனாக நடிக்க, வள்ளியாக நடித்தவர் டி.பி.ராஜலட்சுமி. அப்படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரம் என்பவருடன் காதல் வயப்பட்ட ராஜலட்சுமி, பட வேலைகள் முழுவதுமாய் முடிந்தவுடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். வள்ளி திருமணம் ரிலீசாகி பெரிய வெற்றிபெற்றது. பின், அதே ஆண்டில் சத்தியாவன் சாவித்திரி என்ற சொந்தப் படத்தை தயாரித்து, நடித்து வெளியிட, அதுவும் மூன்று வாரங்கள் ஓடி வெற்றிப்படமாக பெயர்பெற்றது. படங்களில் நடித்துக்கொண்டே, 1931ஆம் ஆண்டு ‘கமலவல்லி’ என்ற சமூக நாவல் ஒன்றையும் எழுதினார் ராஜலட்சுமி. அந்த நாவலுக்கு, சமூகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் ராஜலட்சுமி அஞ்சவில்லை. மகளுக்கு அதன் நினைவாக கமலா என்றே பெயர்வைத்தார். 1936ஆம் ஆண்டு, ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய ராஜலட்சுமி, தான் எழுதிய கமலவல்லியை தன் முதல் படமாக மகளின் பெயரிலேயே ‘மிஸ் கமலா’ எனத் தலைப்பு வைத்து, அதில் தானே நாயகியாக நடித்து இயக்கவும் தயாரிக்கவும் செய்து, தமிழ் சினிமாவின் முதல் தலைமுறையிலேயே அசாத்திய சாதனையைச் செய்தார். தொடர்ந்து, மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி.பி.ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி.பி.ராஜசேகரன் கவனித்து வந்தார். எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய `சீமந்தினி’ படத்தில் நடித்தார். அவரே தன் சுயசரிதையில், `ராஜலட்சுமி ஓர் அருமையான நடிகை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டங்கன். 1938இல் கிருஷ்ண லீலை கதையை ‘நந்தகுமார்’ எனும் படமாக எடுத்தார், மராத்திய இயக்குநர் கேஷவ் ராவ் தைபார். அப்படத்தின் மராத்திய மொழி வடிவத்தில், மராத்திய நடிகை துர்கா கோட்டே கச்சை அணிந்து நடிக்கும் காட்சியில் எந்தச் சலனமும் இல்லாமல் நடித்துமுடித்தார்,. தமிழ்மொழிக் காட்சிகளில் நடிக்கவேண்டிய ராஜலட்சுமி, அரைகுறையான கச்சை அணிந்து நடிக்க மறுத்து, வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார். இறுதியில், 1930களில் ஃபேஷனாக இருந்த உடலை முழுக்க மூடிய பூனா ‘ஜம்பர்’ பிளவுஸ் அணிந்து நடிக்க ஒப்புக்கொண்டார் ராஜலட்சுமி. சென்னை கீழ்ப்பாக்கத்தில், சொகுசு பங்களாவில் வசித்த ராஜலட்சுமி குடும்பம் சிறிது சிறிதாக நொடித்துப்போகத் தொடங்கியது. இதன்பிறகு ராஜா சாண்டோ இயக்கிய `வசந்த சேனா’ என்ற படத்தைத் தயாரித்தார். `விமலா' என்ற இன்னொரு நாவலையும் எழுதினார். 1950இல், `இதயத் தாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அத்துடன் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்றுபோயின. ஒருகட்டத்தில், சொத்துகள் கைவிட்டுச் செல்வதை அறியாத ராஜலட்சுமியை பக்கவாத நோயும் தாக்கியது. கிட்டத்தட்ட, ஒரு தெருவையே சொந்தமாக வைத்திருந்த குடும்பம், படிப்படியாக அனைத்தையும் விற்று வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தது. 1961இல், இவருக்குக் கிடைத்த கலைமாமணி விருதின் தங்கத்தை உருக்கி, பேரனுக்கு முதல் பிறந்த நாள் பரிசாக மோதிரம் போடும் நிலை வரை அவரது வாழ்க்கை இறக்கம் கண்டது. ஒரு காலத்தில், அவரை சினிமா ராணி எனக் கொண்டாடிய திரையுலகம், அவர் தோல் சுருங்கி, வீட்டில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை. ஆனாலும் ஒரு பெண்ணாக இருந்து அவர் செய்த சாதனைகளை இன்று வரை தமிழ் சினிமா மட்டுமல்ல; இந்திய சினிமாவிலேயே யாரும் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. 1964இல், அந்த சினிமா ராணி, தன் பெருமைக்குரிய வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

சொற்கள் தானே எழுதிக்கொண்ட உள் வெளிச் சித்திரங்கள் - சீனு ராமசாமி வழி - அஜயன் பாலா பாஸ்கரன்

- ஆங்கிலக்கவி வில்லியம் ப்ளேக் கவிதை பற்றி இப்படிச் சொல்கிறார் ”அது உள்ளங்கையில் எல்லைகளற்ற வெளியையும் ஒரு கணத்தில் முடிவற்ற காலத்தையும் பெயர் தெரியாத மலர் ஒன்றின் வழி பரந்த ஆகாயத்தையும் பூமியையும் உணர்த்துவதாக இருக்கவேண்டும் என்கிறார் ” உண்மைதான் மூவாயிரம் ஆண்டுகளில் இந்த தமிழ் நிலத்தில் பல சக்ரவர்த்திகள் பல சமராஜ்யங்கள் பல கோடி மனிதர்கள் கடந்து இன்னமும் நம்மோடு உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருப்பது கவிதைகள் மட்டுமே எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே …. தீதும் நன்றும் .. யாயும் யாயும் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மேற் சொன்ன சொற் சேர்க்கைகள் மிக எளிமையானவையே ஆனால் இவையே காலங்களை ஊடுருவும் மகத்தான ஆற்றலை தம்முள் கொண்டு சமூகத்தை வழி நடத்தியபடி இன்னும் பல தலைமுறைகளை கடக்க வல்லதாக் இருக்கின்றன இப்படிபட்ட பேராற்றல் மிக்க நெடிய தொடர்ச்சி கொண்ட தமிழ் என்னும் பெரு நதியின் படித்துறையில் இக்கவிதைத்தொகுப்புடன் நண்பரும் இயக்குனருமான சினு ராமாசாமியும் கால் நனைத்து iஇத் தொகுப்பின் மூலம் உடலில் ஈரம் பரப்பிக்கொண்டார் என்பது, ஒரு ஆச்சரயமான நிகழ்வு. மொத்தம் ---- கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கவிதைகளை நிலக்காட்சிக் கவிதைகள் , அகக்காட்சிக் கவிதைகள் என இரண்டாகப் பிரிக்க முடியும் நிலக்காட்சிக் கவிதைகளில் , காட்சி செதில்கள் ,வாழ்வின் துய்ப்புகள், .குணச்சித்தரிப்புகள் எனவும் அகக்காட்சி கவிதைகளில் . காம விகற்பங்கள் ,,மெய்மையின் தீண்டல்கள் எனவுமாக கலவையாக இக்கவிதைத் தொகுப்பு தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது என்ற போதும் . ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும் போது ஒரு மயிலிறகு நம் முகத்தை வருடிச்செல்வதை உணர முடிகிறது தொகுப்பின் இரண்டாவது கவிதையான “அவர்கள்” கவிதையை வாசிக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட கணத்தில் சத்தமெழுப்பாத .. சிறு சலனம் கூட காட்டாத மனிதர்கள் பற்றி வியந்து பின் அவர்கள் பார்வையற்றோர் என காண்பிக்கும் அக்கவிதையின் காட்சிப் படிமம் நம்மை திடுக்கிட வைக்கிறது அது போல “அருள்” கவிதையில் அகாலத்தில் மரணமடைந்த மகனின் வெற்று உடலுக்கு அவன் அப்பாவும் அம்மாவும் தலைவழியே கண்ணீருடன் கலந்து தண்ணீர் ஊற்றும்போது கல்லூரி நாட்களின் போது காதல் தோல்வியில் செத்துப்போன பக்கத்து வீட்டு நண்பனின் மரணம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை பெரும்பாலான கவிதைகளில் தான் வாழ்ந்த மதுரையை ஒட்டிய புறநகரின் நிலக்காட்சிகளும் வெம்மை போர்த்திய மனிதர்களும் அவர்களது வாழ்வியலும் உறைந்துகிடைக்கின்றன தலைப்புகவிதையான மாசி வீதியின் கல் சந்துகள் வாசிக்கும் போது சந்தை கடக்கும் சிறுவனாக நாமே மாறிப்போவது விந்தைதான் . அதில் எதிர்கொள்ளும் மனிதர்களின் வியர்வை வாசம் அவர்கள் நிழல்;களுடன் நம்மை நம் மனதில் கடப்பது விந்தை . “அடிகுழாயில்” எனத்துவங்கும் “வெயில் தாய்” எனத்தலைபிட்ட கவிதையில் கவிஞர் பொன்னாங்கன்னி கீரைக்கட்டுகளை விற்கும் வயதான பெண் அந்த கீரைக்கட்டுகளை அடிக்குழாயில் அடித்த தண்ணீர் மூலம் கீரைக்கட்டுகளில் தண்ணீர் தெளிப்பதை காண்பிக்கிறார். அப்போது அந்த வயதான தாய்க்கு பருவத்தில் தன் தந்தை தன் தலைக்கு நீரூற்றிய காட்சி நொடிப்பொழுதில் வந்து போகிறது . இதை திரை மொழியில் “இண்டர்கட் ஷாட்” என்பார்கள் . அந்த ஒரு கணம் இக்கவிதைக்குள் பல கதைகளை நம் முன் காட்டிவிட்டுச் செல்கிறது. தொடர்ந்து இக்கவிதையின் கடைசி வரியில் செருப்பு அணியாத் பாதங்களுடன் நடந்துசெல்லும் பொன்னாங்கன்னி கீரை விற்கும் அந்த தாய் கீரையை கூவி விற்பனை செய்துகொண்டு செல்வதாக காட்டும் சித்திரம் ,ஓர் காவியச்சித்திரம் என்றால் மிகையில்லை நற்றிணையில் “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,” எனத்துவங்கும் சங்கப் பாடல் ஒன்றில் புன்னை மரத்தை ஒரு தலைவி தன் தங்கை என விவரித்து தலைவனுக்கு சொல்லும் ஒரு கவிதையைபோல இதில் வயதான பெண் தன் பருவமெய்தி தன் தந்தை தன் தலையில் ஊற்றிய காலத்தை நினைத்துப் பார்க்கிறார் ஒரு கவிதை வாசகனுக்குள் எவ்விதமான அகப்பயணத்தை தூண்டவேண்டும் என்பதற்கு இக்கவிதை ஒரு சிறந்த சான்று இது போல இத்தொகுப்பு முழுக்க பல கவிதைகள் எளிய மக்களின் பாடுகளை வார்தைகளை வலிகளை நோயை விவரித்து ஆங்காங்கே அதிர்வலைகளை உண்டாக்குக்கிறது. இப்படியெல்லாம் யோசிக்கும் ஒருவன் நான் பார்த்து பழகிய நண்பன் சீனு ராமசாமிக்குள் எங்கே இருந்தான் என யோசிக்க வைக்கும் அளவுக்கு பல இடங்களில் சமூகத்தின் மீதான கோபம் கூரான வார்த்தைகளுடன் கவிதையாக தெறிக்கிறது . இது போன்ற பாடு பொருள் பிரதானமாகவும் உருவகம், உத்தி ஆகியவை இரண்டாம் நிலையிலும் கொண்அ பிலேயின் பொயட்ரி வகை சார்ந்த கவிதைகள் இத் தொகுப்பில் அதிகம் இருந்தாலும் உருவகம் உல்லுறை இறைச்சி படிமம் ஆகியகூறுகளைக் கொண்ட அடர்த்தியான கவிதைகளும் கவிஞரின் கவிச் செழுமைக்கு சான்றாக இருக்கின்றன.. அவற்றுள் கடபாரையை உருவகமாக் பயன்படுத்தி அவர் எழுதியிருக்கும் கூலி ஆள் எனும் கவிதை கன்க்கச்சிதம் . கேலிச்சுத்திரம் போல உருவாக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கவிஞர் கண்டராதித்தனின் கால் மேல் கால் போட்டு கடந்து போனான் என முடியும் சிறந்த கவிதை ஒன்றின் வரியை ஞாபகப்படுத்தி நம்முள் நகைப்பை உருவாக்க்வதில் கவிஞர் முழு வெற்றி பெற்றுவிடுகிறார் அதே போல சீனுராமசாமியை சிறந்த கவிஞன் என உரக்க சொல்லி அழைக்கும் கவிதைகளில் ஒன்று புகைப்படம் .இதில் நாம் எடுக்கும் எந்த புகைப்படம் நம் அஞ்சலிக்கு தேர்வாகும் எனற கேள்வி சட்டென ஒரு மின்னலை உருவாக்கி விட்டு நம்மை அந்தகாரத்தில் ஆழ்த்திவிடுகிறது . இப்படி எடுத்துச்சொல்லி ஆச்சரயப்டும் படி பல கவிதைகள் மிக சிறப்பாக வடிவம் கொண்டிருக்கின்றன தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையாக வெயில் தாய் , புகைப்படம் கூலி ஆள் போன்ற கவிதைகள் என் தேர்வில் இருந்தாலும்” உண்மை” எனும் தலைப்பில் சீனு ராமசாமி எழுதியிருக்கும் ஒரு கவிதையை என்னால் அத்தனை சுலபத்தில் கடக்க முடியவில்லை பட்டினத்தார் பாணியில் உற்றவர் கை விடுதல் அல்ல எனத்துவங்கி வரிசையாக கை விடுதல் அல்ல வற்றை பட்டியலிட்டுக்கொண்டே வருபவர் இறுதி வரியில் ஏழையின் உடலை அவன் உறுப்புகள் கைவிடுதல் மகா துயரம். என முடிக்கும் போது மிகபெரிய வலி நம் இதயத்தை கவ்விக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை அகிராகுரோசாவின் “ரெட் பியர்ட்” படத்தில் நோயுற்ற உடல்கள் வாதையில் புலம்பும் அந்த மரண ஓலங்கள் சட்டென கண் முன் தோன்றுகின்ரன இந்த மொத்த தொகுப்புமே இந்த ஒரு கவிதைக்குத்தானோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு இக்கவிதையின் வழி நம்மை மனித அவலத்தை உணர்த்தி பெரும் தியானத்துள் அழைத்துச்செல்கிறார் மொழியின் பயணத்தில் இந்தக் கவிதைகள் என்ன இடம் கொள்ளும் என என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் வாசிப்பவன் மனதில் இத்தொகுப்பு பெரும் வெளிச்சத்தையும் உயர்வையும் மேன்மையையும் கற்றுத்தந்து ஒரு அங்குலமேனும் அவனை உயர்த்தி நவீன உலகத்துக்கு அவசியம் தேவைப்படும் புதிய மனிதனாக மாற்றும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை இத்தொகுப்பு இல்க்கிய வாதிகளை விடவும் கவிஞர்களை விடவும் இன்னபிற சமூகத்தை இயக்கும் முக்கிய கர்த்தாக்களை விடவும் , நம் காலத்தின் புதிய தலைமுறையினரின் கைகளில் தவழவேண்டும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் இக் கவிதைகளை வாசிக்க வேண்டும் சக மனிதன் மீதும் சக உயிரின் மீதும் அன்பையும், நேசத்தையும் இக்கவிதைகள் விதைக்கட்டும் அதுவே நம் காலத்தின் தேவையும் கூட 23-02-2024 ஞாயிறு காலை 10. மணி சாலிக்கிராமம் சென்னை

May 12, 2023

புதை படிவங்கள் வ

புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்கிறது பல நூற்ராண்டு உயிரினத்தின் கணக்ள் அமிலkகுப்பியின் வழி என்னை உற்றுப் பார்க்கின்றன அதன் சிறு வால் அசைய திரும்பி பார்க்க திடுக் யாருமற்ர வராந்தா எங்கோ தெருக்குழந்தைகள் விளையாடும் சப்தம் பேரமைதி நானும் இல்லை என்னை ஒரு கண்ணாடிக்குள் உணர்கிறேன் என் முன் யாரோ ஒருவர் வேடிகை பார்த்தபடி நகர்கிறார் - அஜயன் பாலா

April 19, 2023

.மா.அரங்கநாதன் படைப்புகள் : விமரசனம் -அஜயன்பாலா

மொத்தம் 90 சிறுகதைகள் இரண்டு நாவல்கள் 47 கட்டுரைகள் என ம. அரங்கநாதன் அவர்களின் படைப்புலகம் முழுவதும் ஒரே புத்தகமாய் வாசித்து முடிக்கையில் அது இருண்ட மலைக்குகையின் ரயில் பயணம் போல மிகவும் புதிர்த்தன்மையும் வினோத அனுபவத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைக் காட்டிலும் சிறுகதைகளில் அவர் சற்று பலம் கூடியவராகவும் கலையம்சம் கூடிவரப்பெற்றவராகவும் காணப்படுகிறார். ஒருவேளை சிறுகதைகள் மட்டுமே மொத்தமாக தனித்தொகுப்பாக கொண்டுவந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.என்றபோதும் ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளனின் தார தம்மியம் எத்தகையது என மதிப்பிட பிற்பாடு ஆய்வாளர்களுக்கு வசதியான வகையில் இப்படி ஒரு தொகுப்பு நூலை கொண்டு வந்த நற்றிணை பதிப்பகத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடிக்கும்போது என்னையே நான் உற்றுப் பார்ப்பதை போல உணர்கிறேன். என் மனக்கிணற்றில் யாரோ எட்டிப் பார்ப்பது போல, காரணம் சில சமயங்களில் அவரை என் தந்தையாக உணர்ந்திருக்கிறேன். சென்னைக்கு வந்த புதிதில் கிட்டதட்ட மூன்று நான்கு ஆண்டுகள் தினசரி ம.அரங்கநாதனை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அந்த ஞாபகங்களை பகிராமல் புத்தகம் குறித்து மட்டுமே விமர்சனம் எழுத என்னால் முடியவில்லை. இத்தனைக்கும் இதற்கு முன்பே அவர் இறந்தவுடன் அவருக்காக நான் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் எனக்கும் அவருக்குமான உறவு குறித்து எழுதியிருந்தாலும் இந்த கட்டுரையிலும் அந்த உணர்வு என்னை மீறி எழுத வைக்கிறது. . மாம்பலம் ரயில் நிலையம் அருகில் சாந்தி காம்ப்ளக்ஸ். இப்போது அது ஜெயச்சந்திரன் துணிக்கடையாக மாறியிருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூன்றாவது மாடியில்தான் முன்றில் புத்தக கடை இருந்தது. அக்காலங்களில் தினமும் என் பத்திரிக்கை வேலை முடிந்து மாலை அவர் முன்றில் புத்தகக் கடைக்கு வருவதும் உரையாடுவதும் வழக்கம். அவர் வீடும் என் அறையும் அப்போது பழவந்தாங்கலில் அடுத்தடுத்த தெருவிலிருந்த காரணத்தால் இரவு எட்டு எட்டரைக்குமேல் கடையடைத்து விட்டு மாம்பலம் ரயில் நிலையம் வந்து பழவந்தாங்கல் வரை ஒன்றாக ரயிலில் பயணிப்போம்.அப்போது அவர் தொடர்ந்து சிகரட் பிடிப்பார். சார்மினார் சிகரட். வயது வித்தியாசம் பாராமல் எனக்கும் ஒரு சிகரட்டை நீட்டுவார். நான் பல சமயங்களில் மறுத்துவிடுவேன். கடையில் விட்ட உரையாடல் ரயில் பயணத்திலும் தொடரும். உலக இலக்கியம், சினிமா, இலக்கிய அரசியல்கள் என அனைத்தும் பேசுவார். அவரது ஆங்கில இலக்கிய பரிச்சயம் மற்றும் பழைய ஹாலிவுட் சினிமாக்கள் குறித்த துல்லியமான அறிவு எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. மார்லன் பிராண்டோ, கிரேட்டா கார்போ, பிரெட் ஆஸ்டர், ஜிஞ்சர் ரோஜர்ஸ் என பலரையும் அறிமுகப்படுத்தி அவர்களின் படங்களைப் பற்றி தான் பார்த்த அனுபவங்களையும் சொல்லுவார். எரோல் பிளின், ஜேம்ஸ் டீன் ஆகியோர் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். இந்த மொத்த தொகுப்பின் பல கதைகள் அந்த காலத்தில் அவர் எழுதியவை பஃறுளியாற்று மாந்தர்கள் நாவலும் கூட அக்காலத்தில் எழுதப்பட்டதே. நாவல் வெளியாகும் முன்பே எனக்கு ஒரு பிரதி தந்து அதை படித்து அபிப்ராயம் சொல்லுமாறு கொடுத்தார். நான் அப்போதுதான் கல்லூரி படிப்பு முடிந்து சென்னை வாழ்க்கைக்குள் நுழைந்த காலம். ஆனாலும் அவர் என்னையும் என் எழுத்தின் மீதான ஆர்வத்தையும் மதித்து அவர் ஒவ்வொரு கதை எழுதிய பின்னும் கையெழுத்து பிரதியிலும் அச்சு பிரதியிலுமாக கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேட்பார். எனக்கு அவருடைய கதைகளில் அப்போது சில விமர்சனங்கள் இருந்தன. முதலாவதாக அவருடைய கதைகளில் முத்துக்கறுப்பன் என்ற ஒரே பாத்திரமே திரும்ப திரும்ப வருவது எனக்கு பிடிக்கவில்லை. அதை அவரிடம் நேரிடையாகவே சொன்னேன். இதர கதைகளின் நம்பகத்தன்மை, வாசக ஈர்ப்பு போய் முத்துக்கறுப்பன் எப்போது வருவான் என்ற எதிர்பார்ப்பும் அந்த பாத்திரத்தின் மீதான ஈர்ப்புமாக மட்டுமே கதை முடிந்து போய்விடுகிறது என்றும் கதையின் உள்ளடக்கத்தை அது பெரிதும் பாதிக்கிறது என்றும் சொல்வேன். அந்த வயதில் அவர் எனக்கு முழு சுதந்திரத்தையும் தந்தார் . ஆனால் மொத்தமாக படிக்கும் போது என் அக்கால அபிப்ராயம் தவறு என்றே எண்ணத்தோன்றுகிறது. இப்போது மொத்த கதைகளையும் வாசித்தபின் முத்துக்கறுப்பன் என்கிற பாத்திரம் நம் மனதில் ஒரு நிழலுருவமாக அழுத்தமாக பதிவதை உணர முடிகிறது. கதைகளில் எங்கும் முத்துக்கறுப்பன் தோற்றம் குறித்து விவரணைகளில்லை. ஒரு கதையில் திருமணம் செய்யப்போகும் இளைஞனாகவும் இன்னொரு கதையில் கிழவனாகவும் மற்ற கதையில் நடுத்தர வயதுடையவராகவும் வருகிறாரே தவிர்த்து எங்கேயும் விவரணைகளில்லை. மாறாக ஒரு குணச்சித்திரம் நமக்குள் அருவமாக பதிகிறது. கதைக்குள் அந்த அருவத்தின் நிழல் உண்டாக்கும் சலனங்கள்தான் அவருடைய ஒட்டுமொத்த கதைகளின் புதிர்த்தன்மைக்கு ஆதாரம். தமிழ் நவீன இலக்கிய சூழலில் மிகவும் தனித்தன்மை மிகுந்த கதையுலகம் ம.அரங்கநாதனுடையது. அவருடைய கதைகள் எளிமையானவை. மொழி இலகுவானது. வாசகனோடு நேரடியாக உரையாடக்கூடிய தன்மை கொண்ட கதைகள் . என்றபோதும் அவருடைய கதைகள் எளிதில் வசப்படாத அருவத்தன்மையும் கொண்டவை. வழக்கமான வடிவ பரிசோதனைக்கதைகள் மட்டுமே இத்தகைய அரூப உள்ளடக்கத்தை கைக்கொண்டிருக்கும். ஆனால் ம.அரங்கநாதன் கதைகள் தெளிவான எளிமையான 60,70 களின் பாணியில் கதையை சொல்லி அருவமான அல்லது நம்மை மிகவும் யோசனையில் ஆழ்த்தக்கூடிய முடிவைக் கொண்டிருப்பவை. பெரும்பாலும் அவர் எந்த கதையையும் நேரடியாக சொல்பவரில்லை, கதையை குறிப்பால் உணர்த்துகிறார். எது கதை என்பதை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு தெளிவற்ற நிலைக்குள் தள்ளப்படுவீர்கள் அதுதான் அவர் பயன்படுத்தும் உத்தி. தன்னுடைய சிறுகதைகளில் வாசகன் கதையை இதுதான் என கண்டுவிடக்கூடாது என்பதில் முழு கவனத்துடன் அவர் ஈடுபடுவதுதான் அவருடைய தனித்தன்மை. பொதுவாகவே சிறுகதைகளின் வடிவம் என்பது அதன் இறுதிவரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இறுதியில் சொல்லி சொல்லாமல் நிறுத்துவது எழுத்தில் ஒரு சாகசம். சில பண்பட்ட எழுத்தாளர்களுக்கே அது சாத்தியப்படும். ஒரு வெற்றிடத்தை முடிவில் விட்டுச்செல்லும் கதைகள் நம் மனதில் ஆழத்தேங்கி விடுகின்றன. கதை அதுகாறும் எதைச்சொல்ல வருகிறதோ அதை இறுதியில் ஒன்றுமில்லமால் செய்வது அல்லது அதை கடந்து வேறொன்றைச்சொல்லி நம்மை யோசிக்க வைப்பது அல்லது அதை குறிப்பால் உணர்த்தி வாசகனுக்குள் புதிர்த்தன்மையை உருவாக்குவது அல்லது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சிக்குள் வாசகனை ஆழ்த்துவது போன்ற முடிவுகளை தமிழின் பெரும்பாலான நல்ல கதைகள் கைக்கொண்டு வருகின்றன. இதை சரியாக செய்பவை மட்டுமே சிறந்த கதைகள். முடிவை திறமையாக கையாள்வதில் ஓ ஹென்றி, காப்கா, சதாத ஹசன் மாண்டோ மூவருமே அதி மேதைகள். இதனாலயே சிறுகதை உலகின் முடிசூடா மன்னர்கள் என்ற பெயரையும் வரித்துக்கொண்டவர்கள். ஓ ஹென்றியின் கிப்ட் ஆப் மேகி, லாஸ்ட் லீஃப் மற்றும் க்ரீன் ரூம் போன்ற கதைகளும் காப்கா வின் பாதர் உள்ளிட்ட கதைகளும் மாண்டோவின் ஒட்டு மொத்த கதைகளையுமே சொல்ல முடியும் மூன்றும் வெவ்வேறு பாணியிலானவை. தமிழில் இவர்களைப் போல முடிவில் செறிவான தொழில் நுட்பத்தை கைக்கொள்ளும் சிறுகதை எழுத்தாளர் என்றால் அசோகமித்ரனை சொல்லமுடியும். வெறும் கதையாக இல்லாமல் செய் நேர்த்தியாக செதுக்கி வாசகனை ஓரிடத்தில் நிற்கச்செய்து விட்டு காணாமல் போகக்கூடிய எழுத்து அவருடைய பாணி. அசோகமித்ரனுக்குப் பிறகு அந்த லாவகம் முழுமையாக கைகூடப்பட்ட எழுத்து ம.அரங்கநாதனுடையது. தமிழ் சிறுகதையில் புதுமைப்பித்தன், கு.பா.ரா, மௌனி ஆகியோருக்குப் பின் ஆதவன், வண்ணநிலவன் வண்ணதாசன், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன் ஆகியோரிடம் சிறந்த நுணுக்கமான விவரணைகள், உள்ளுணர்வுகள், காட்சி பதிவுகள் அழுத்தமான பாத்திரங்கள், தனித்த வாழ்வனுபவங்கள் ஆகியவை சிறப்பாக கொண்டிருந்தாலும் சிறுகதையின் இறுதியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி மீண்டும் கதையை முதலிலிருந்து வாசிக்க தூண்டும் வடிவம் ம.அரங்கநாதனுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருடைய புகழ்பெற்ற கதையான சித்தியை எடுத்துக்கொள்வோம். எதேச்சையாக ஒரு மைதானத்தில் ஓட்ட பயிற்சிக்கு வருகிறான் ஒரு இளைஞன். அங்கு காவலர் மூலமாக பெரியவர் ஒருவர் அறிமுகமாகிறார். அவர் முன்னாள் விளையாட்டு வீரர். நாடே அறிந்தவர் விளையாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.தேசத்தின்மேல் மிகுந்த பற்று வேறு. அவருக்கு இவனை கண்டதும் பிடித்துப்போகிறது. அவர் அவனுக்கு பல உத்திகள் பல பயிற்சிகள் கற்றுக்கொடுத்து மிகப்பெரிய வீரனாக உருவாக்குகிறார். அவனும் பல போட்டிகளில் கலந்து வெற்றிவாகை சூடுகிறான். நாடே அவனை திரும்பி பார்க்கிறது. கடைசியில் ஒலிம்பிக் போட்டியில் அவன் பெயர் அறிவிக்கபோவதற்கு முந்தின நாள் பத்திரிக்கையாளர்கள் அவனை சுற்றி பேட்டி எடுக்கின்றனர். அவர்கள் அவன் இந்த இடத்தை அடைய அவன் பட்ட சிரமங்களைப் பற்றி சுவாரசியமான பதில்கள் அல்லது நம்பிக்கையூட்டும் அனுபவங்கள் வரும் என எதிர்பார்க்க, அவனோ எனக்கு எதுவும் தெரியாது ஓடத்தெரியும் ஓடினேன்… ஓடிக்கொண்டிருந்தேன் என்ற தினியிலேயே பதில் சொல்கிறான். இறுதியாக ஒலிம்பிக்கில் நம் தேசத்தின் எதிர்காலம் எப்படி என்பதுபோல் கேட்க பதிலுக்கு அவனோ எனக்கு தெரியாது என்னால் சொல்ல முடியாது எனக்கு ஓடமட்டுமே தெரியும் என்பது போல சொல்ல அதுவரை உற்சாகத்துடன் அருகில் நின்ற பெரியவர் கோபத்துடன் கதவை அடைத்துவிட்டு காரில் ஏறி செல்கிறார். அதோடு கதையும் முடிகிறது. யோசித்து பாருங்கள்... இந்த கதையில் யார் நாயகன். அந்த இளைஞனா பெரியவரா... கதை இளைஞனுடையதாக இருந்தாலும் கதையை முடிப்பது பெரியவரின் செயலே… இந்த கதை மூலம் அவர் சொல்ல வருவது என்ன ? இது வாசகனுக்கு விடும் சவால். வெறுமனே இந்த கதையை பரிசோதனை முயற்சி என சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. கதையின் இறுதியில் அந்த முதியவர் பாத்திரம் எதனால் அப்படி கோபப்பட வேண்டும் என்பதை யோசிக்கும் வழியில் உங்களுக்கான கதையின் இறுதி முடிச்சு உள் முகமாக சுருட்டப்பட்டு மறைந்து கிடக்கிறது. காப்காவின் ஜட்ஜ்மண்ட் கதையின் இறுதிபோல ரஷ்யாவில் வசிக்கும் நண்பனுக்கு தன் காதல் திருமண நிச்சயத்தை கடிதம் மூலமாக தெரிவிக்க போகும் முன் அப்பாவோடு உரையாடுகிறான். அப்பா அவனுக்கு தகவல் சொல்லக்கூடாது என்கிறார். இறுதியில் அவன் ஒரு பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான் இறுதியில் அவன் தற்கொலை போலத்தான் சித்தி கதையில் முதியவர் கோபத்துடன் காரில் ஏறிச்செல்வதும் கதை அங்கு முடியவில்லை. ஆனால் இரண்டிலும் இறுதி சம்பவம் உண்டாக்கும் அதிர்ச்சி கதையை மீண்டும் வாசிக்க கோருகிறது. காப்கா கதையில் அப்பாவும் மகனும் எந்த இடத்தில் முரண்படுகிறார்கள் என வார்த்தையில் தேடினால் கிடைக்காது. அது போலத்தான் சித்தி கதையிலும் இளைஞனுக்கும் முதியவருக்குமான முரணுக்கு என்ன காரணம் என யோசிக்க வைக்கிறார். சித்தி கதையில் இரண்டு பார்வை கோணங்கள் ஒளிந்திருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால், அந்த இளைஞன் தன் காரியத்தை கடமையை சரியாக செய்தாலே பலன் அதுவாக கிட்டும் என நினைப்பவன். அவனிடம் முஸ்தீபுகள் இல்லை, பெரிய இலட்சியங்கள் இல்லை… பார்ஸ்ட் கம்ப் பட நாயகனை போல ஓடிக்கொண்டேயிருக்கிறான், வெற்றி அவன் பின்னால் இயல்பாக வருகிறது. வாழ்வின் முழு பக்கத்தையும் அறிந்த ஒருவனுக்கு மட்டுமே இத்தகைய ஞானம் சாத்தியம். கடைசியில் அவன் பேட்டியில் பேசும்போது பெரியவர் இத்தனைக்கும் காரணமான தன்னை அவன் குறிப்பிடவில்லையே என கோபித்துக்கொண்டு போவதாக எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் அவன் சுயநலம் கொண்டவனாக, பெரியவரால் தனக்கு உயர்வில்லை தன் உழைப்பு மட்டுமே தன் வெற்றிக்கு காரணம் என சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இது எல்லாமே நம்முடைய தேர்வு… வழக்கமாக வரும் முத்துக்கறுப்பன் இல்லாமல் இக்கதை எழுதியதும் இந்த இரட்டை தன்மைக்கு காரணம். ஒருவேளை முத்துகறுப்பன் பேர் யாருக்கு வருகிறதோ அவன் பக்கம் நியாயமாக இருக்கும். காரணம் அவர் பெரும்பாலான படைப்பாளிகளைப் போல தன்னிலையை உயர்வாக எண்ணி எழுதக்கூடியவர். பெரும்பாலும் உறவுச்சிக்கல்களை அல்லது தனிமனித ஆன்ம அனுபவங்களை சார்ந்திருக்கும் இவரது கதைகளில் கோஷங்களோ பிரச்சாரங்களோ சமூக அவலங்களோ காணப்படுவதில்லை. சொல்லப்போனால் கதைகளில் பெரிய சிக்கல்களையும் அவர் சொல்வதில் பல கதைகள் துண்டு துண்டான சம்பவங்கள் அதை நாம்தான் கோர்த்து புரிந்துகொள்ளவேண்டும். வெறுமனே அதை அப்படியே கடந்து செல்ல முடியாது. இரண்டாவது முறை கதையை மீண்டும் படிக்க வேண்டும் உதாரணத்துக்கு காடன் மலை எனும் கதை .. அதில் வரும் முத்துகறுப்பன் போளுர் வரை வந்து காணாமல் போகிறான். மலை திருவண்ணாமலை தான் என்பதை யூகித்து அறியமுடியும் அல்லது பரவத மலையாகவும் இருக்கலாம். திருவண்ணாமலை என ஏன் நான் சொல்கிறேன் என்றால் ம.அரங்கநாதன் அடிக்கடி ரமணர் பற்றி சொல்வார். திண்டிவனம் வரை வந்து அவர் திடீரென காணாமல் போய்விட்டார் என புதிர்த்தன்மையோடு கதைகளில் சொல்வது போல விவரிப்பார் ... காணாமல் போவது, தோன்றுவது, தோன்றி மறைவது போன்றவை அவர் கதைகளில் பல இடங்களில் காணக்கிடப்பவை.தென்னகம் என்றாலே அனைவரும் தெற்கு திசை தென் திசை என்றுதானே நாம் நினைத்திருப்போம் ஆனால் அவர் ஒரு கதையில் தென் என்றால் தென்படுதல் தோன்றி மறைதல்,அவன் தோன்றி மறைந்த இடம், காட்சியளித்த இடம் அதனால் தென்னகம் என புது விளக்கம் தருகிறார். இந்த மொத்த தொகுப்பில் என்னை மேற்சொன்ன இரு கதைகள் தவிர்த்து சிறிய புஷ்பத்தின் நாணம், வீடுபேறு பனை, (இதிலும் முத்துகறுப்பன் இல்லை)அஞ்சலி, போன்ற கதைகள் வடிவரீதியாகவும் உள்ளடக்கரீதியகாவும் என்னை பெரிதும் ஈர்த்தன. குறிப்பாக அஞ்சலி எனும் கதையில் இரண்டு கட்டுரைகள் மட்டுமே. அவை ஒரு விமர்சன எழுத்தாளன் இறப்பதற்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டுரைகள். இரண்டிற்குமான வித்தியாசம்தான் கதை. நல்ல வேளை நான் எழுதிய இரண்டு கட்டுரைகளும் அவர் இறப்பிற்கு பின்தான்… முன்பாக எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பேன் .. என்ன செய்ய முத்துகறுப்பன் என்னை எழுத அனுமதிக்கவில்லை. நன்றி.. ந்ற்றிணை காலண்டிதழ் 2018

April 5, 2023

ஜம்ப் கட்டில் ஒரு செல்லுலாய்ட் புரட்சி - ழான் லூக் கொதார்த் -அஜயன்பாலா

அஞ்சலி : உலக சினிமா இயக்குனர் ழான் லூக் கொதார்த்
நேற்று உலக சினிமாவே அதிர்ந்தது . தம் படைப்புகாளால உலகையே அதிரவைத்த பிரெஞ்சு சினிமா மேதையும்.. ஜம்ப் கட் எனும் படத்தொகுப்பு உத்தியை பயன் படுத்தி காட்சி மொழியில் கலகத்தை உண்டு பண்ணியவருமான ழான் லுக் கொத்தார்ததின் மறைவு செய்தி கொடுத்த தாக்கம் தான் அது.. பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்துக்குமிடையில் ஜெனிவா ஏரியின் மீதிருக்கும் ரோலி நகரில் தன் 91ம் வயதில் அமைதியாக இந்த உலக வாழ்வை தானே முறித்துக்கொண்டார் . ஆமாம் அவர் மரணம் அவரே எடுத்துக்கொண்ட முடிவு உடனே பலரும் இது தற்கொலையா என யோசிக்க்லாம் .. இல்லை அவர் அப்படிப்பட்ட , கோழையும் அல்ல இறக்கும் கடைசி நொடிவரை எந்த நோயும், அவரை நெருங்கவில்லை. . ஆனால் இயற்கை கடைசியில் அவரே மரணத்தை தேர்வு செய்து கொள்ளும் உரிமையை கொடுத்து ஆச்சரயப் படுத்தியுள்ளது. . . இந்த வாழ்க்கை போதும் என 91 வயதில் முடிவெடுத்த பின் அவர் சுவிஸ் அரசாங்கத்திடம் சொல்லி மருத்துவர் மூலம் தன் மரணத்தை தானே தீர்மானித்துக் க்கொண்டார் இப்படியான் அமைதியான் மரணக்களுக்கு . சுவிஸ் அரசாங்கம் தன் சட்ட தட்டங்களில் வழி வகை செய்திருப்பது ஆச்காரய்மான் ஒன்று . . உண்மையில் அவர் மரணம் கூட அவர் படங்கள் போல ஒரு அதீத புனைவுதான். உலகில் எத்த்னையோ மேதைகள் வாழ்ந்து மறைந்தாலும் இயற்கை வேறு யாருக்கும் கொடுகாத பரிசு இது . கொதார்த் ? சினிமாவில் அப்படி என்ன சாதனைகள் செய்தார் என சொல்ல வேண்டுமானால் அவரை மானசீக குருவாக வரித்துக்கொண்ட சில சிஷ்யர்களைச் சொன்னால் ; அவர் பெருமையை நிங்களே பரிந்து கொள்ளலாம் இன்று உலக சினிமாவின் உன்னத இயக்குனர்களாக போற்றப்படும் குவாண்டின் டோராண்டினோ, மார்டின் ஸ்கார்சிஸ், அலேக்ஜாண்டிரோ இனாரிட்டு மற்றும் நம்ம ஊர் அனுராக் காஷ்யப் ஆகியோர தன் அவரை மானசீக குருவாக வரித்துக்கொண்ட ஏகலைவன்கள் . . சுருக்கமாக சொலலப் போனால் கொதார்த் உலக இயக்குனர்களின் டான் என சொல்ல்லாம் காட்சி மொழிக்குள் கவிதையும் அரசியலும் ஒன்றிணைத்து சினிமாவை சமுக உற்பத்தியாக மாற்றிய மிகப்பெரிய வித்தகர் தான் கொதார்த் .... அறுபது வருடங்களுக்கு முன் இவர் தன் சினிமாக்களில் ஆரம்பித்த குறியீடு .. நான் லீனியர் போன்ற அம்சங்ள் தான் இன்று நம் கோலிவுட் வரை வந்து சேந்துள்ளன . அவர் சினிமாக்களில் கொண்டு வந்த உத்திகள் பார்வையாளனி அதிர வைத்த அதீகாமயம் அவனை ஆர்வத்துடன் பார்க்கவும் சிந்திக்கவும் வைத்தன. படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே சட்டென தி என்த என்ற கார்ட் அடிக்கடி வந்து போய் அதிர்ச்சியஊட்டும். அது மட்டும் அல்லாமல் காடென கொதர்த்தி சினிமாவில் தோன்றி அடுத்த் காட்சி எப்படி எடுக்கலாம் என யோசிப்பது வரும். அல்லது எடிட்டிந்ஹ டேபிளில் எடிட்டருற்றன் அவர் சண்டை ப போடும் காட்சி வரும். படம் பார்ப்பவனை விழுப்பு நிலையில் வைத்திருக்க அவர் இந்த உத்திகளை பயன் படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார் கொதார்த்த என்பர் தனி நபர் அல்ல . அவர்கள் ஒரு இயக்கும் அந்த இயக்கத்தின் பெயர் நியுவேவ் . அந்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் அவரைத்த்விர நான்கு பேர். அவர்கள். பிரான்சுவா த்ரூபோ, . எரிக் ரோமர் கிளாத் ஷப்ரோல் ழாக் ரெவெட் ஆகியோர் அனைவருமே அரை குறை படிப்புடன் குட்டிச சு வரில் அமர்ந்து சைட் அடிக்கும் பருவத்தினர் . அவர்கள் வயதில் அன்று பலரும் பிரான்சில் அப்படித்தான் வாழ்க்கையை கழித்து வந்தனர் . ஆனால் எழுத்தாளராகும் இயக்குனராகும் கனவுகளுடன் இவர்களோ கலைப் பைத்தியங்களாக திரைப்பட சங்கங்கள் உலக சினிமாக்கள் . இலக்கியங்கள் என திரிந்தனர் . விளைவு ..... நியூ வேவ் எனும் சினிமா புரட்சி . கொதார்த் இந்த நண்பர்களுடன் உலக சினிமாவில் செய்த புரட்சி தான் இன்றும் அவர் புகழுக்கு கார்ணம் அப்படி அவர்கள் செய்த புரட்சிஉயின் கதையை சுருக்கமக பர்ப்பொம் ஓவியங்களின் வரலாறு படித்த்ரக்ளுக்கு டாடயிஸ்டுகள் என்ற கலகக் கும்பல் பற்றித தெரியும் . இந்த டாடயிஸ்ட் கும்பல் பிரான்சில் நடக்கும் ஓவிய காட்சிகளுக்கு நுழைந்து காட்சிக்கு வைக்கப்பட்ட ஒவியங்க்களை அடித்து உடைத்து கலர் பெயிண்டுகள் ஊற்றி கலவரம் செய்தார்கள் .. காரணம் அந்த ஓவியங்கள் சரியில்லை அதில் கலை இல்லை . அவைகளில் அரசியல் இல்லை என விமரசனம் செய்தனர் . அதன்பிறகுதான் ஐரொப்பாவில் நவீன ஒவ்யங்கள் கவனம் பெறத்துவங்கின . அது போல சினிமாவில் கலகம் செய்து அந்த கலையில் களையெடுக்க இந்த ஐவரும் விரும்பினர். . அதன் மூலம் உலக சினிமாவின் போக்கைத திசை திருப்ப முடிவெடுத்த்னர். . . ஆந்த்ரே பச்ன் என்பவர் குருவாக இருந்து இவர்களை ஊக்கப்படுத்தினார் . தான் நடத்திய கையேது சினிமா எனும் பத்ரிக்கையில் இவர்களை விமரக்கன் கட்டுரைகள் எழுத வைத்தார் அவர்கள் அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களையும் அவரகளது கலை படங்களையும், குப்பை என விமர்சித்து எழுதினர். சினிமா என்பது அதுவரை ஒரு நாவலை வரிசை மாறாமல அப்படியே படம் பிடித்து கதை சொல்லும் ஊடகமாக பயன்படுத்தப் பட்டு வந்தது . இது பார்வையாளனை அவன் உணர்ச்சிகளை ஏமாற்றும் பொலி வித்தை .இது . தியேட்டரில் இருட்டறையில் நல்ல சினிமா என்ற பெயரில் பார்வையாலனுக்கு நடத்தப்படும் மூளைச் சலவை ..மாறாக சினிமா என்பது காட்சி அனுபவம் .அதன் வழியாக பார்வையாளனை சிந்திக்க வைப்பதுதான் உண்மையான் கலை என கூறினர். செட்டுகள் ஆடமபர அலங்காரங்கள் எதுவும் சினிமாவுக்கு தேவையில்லை நடிகர்களின் முகங்களை வடவும் சினிமாவுக்கு காமிரா கோணங்களும் படத்தொகுப்புமெ முக்கியம் .. வெறுமனே ஒரு இளம்பெண்ணையும் துப்பாக்கியையுமே வைத்துக்கொண்டு நல்ல சினிமா அனுப்வத்தை தங்களால் உருவாக்க முடியும் என சவால் விடுத்தனர். இவர்களின் விமர்சனத்தால் கடுப்பாகிப் போன அனறைய இயக்குனர்கள் உனகெல்லாம் பேசத்தான் தெரியும் முடிந்தல படம் எடுத்துக் காண்பி ..அபோது தெரியும் உன் யோக்கியதை என இவர்களை நோக்கி சவால் விட்ட்னர். கொதார்த்தும் அவர்களது புதிய அலை நண்பர்களும் இந்த சவாலை ஏற்றனர். கையோடு அவர்கள் தங்களுக்கன திரைக்கதையும் எழுதினர். ஆனாலும் அவ்ர்ளுக்கு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டுமே அதுதன் பிரச்னை . ஆளுக்கொருபக்கம் பணத்தை திரட்டவும் தயாரிப்பாளரை தேடியும் அலைந்தனர் . கொதார்த் ஒரு அணைக்கட்டில் வேலைக்குப் போனார் . த்ரூபோ தன் பணக்கார காதலியை மணம் முடித்து மாமனாரை தயாரிப்பாளர் ஆக்க திட்டம் வகுத்தார். இப்படித்தான் த்ரூபோவின் முதல் படம் 400 உதைகள் இந்த இயக்க்த்தின் முதல் படமாக 1959ல் கான் திரைப்ப்ட விழாவில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்து பழமை வாதிகள் வாயடைத்துப் போயிருக்க அடுத்த வருடமே இரண்டவது படமாக கொதார்த்தின் பிரெத்லெஸ் 1060ல் வெளியானபோது புதிய அலை உருவாகி விட்ட்து என அனைவரும் வியந்து பாரட்டினர் . மிகப்பெரிய தக்கத்தை உண்டு பண்ணிய அந்த சினிம ஆதுரை யிலான் 66 வருட சினிமா வரலாற்றை புரட்டி போட்டது. .கொதார்த்த சொன்னது போலவே அவரது படம் சொல் புதிது சுவையும் புதியதாக இருந்த்து . வழக்கமான் மரபான் காட்சி கோணக்களை அவர் உடைத்தார் . இஷ்டப்போக்கில் காமிராவை தோளில் போட்டுக்கொண்டு பாத்திரங்களின் உடல் மொழி களை அவர் பின் தொடர்ந்து காட்சிப் படுத்தினார் . அதை கவித்துவமாக எடிட்செய்து கூடுத்ல மெருகேற்றினார் . அப்படி அவர் உருவக்கீய படத்தொகுப்பு முறையை அனைவரும் ஜம்ப் கட் என வியந்து போற்றினர. ஒரு ஊரில் ஒரு ராஜா என வரிசையாக கதை சொல்லும் சினிமாமரபை அவர் உடைத்தார் . காடக் மொழிகளில் ஒரு கலகத்தை உண்டு பண்ணி வரிசைகளை மாற்றினார் . நடுவிலிருந்து கதையை துவக்கி கதையின் துவக்கத்தையும் முடிவையும் பார்வையாலனே தீர்மானிக்க விட்டுக்கொடுத்தார். இந்த புதுமையான் முறையால் சினிமாவிலிருந்து கதை பின்னுக்கு போய் காட்சி அனுபவம் காட்சி மொழி தொழில் நுட்பம் ஆகியவை முன்னுக்கு கொண்டுவரப்பட்டது அவர் துவக்கி வைத்த இந்த வான் லீனியர் சனிமா தான இன்று உலகம் முழுக்க வணிக சினிமாவாக வும் கொண்டாடபடுகிறது அன்று தொடங்கிய அவர்து சினிமா பயணம் ஐமபதுக்கும மேற்பட்ட கலை படைபுகளாக கடந்த அறுபது ஆண்டுகளில் உற்பத்தி செய்து வந்தந. . த்றுபூ உட்பட அவரது நண்பர்கள் அனைவரும் துவக்கத்தில் காட்டிய பரிசஈத்னை முயற்சிகளிலிருந்து விலகி பின் கமர்ஷியல் படங்கள் எடுக்க பூய்வட்ட்னர். ஆனால் கொதார்த் மட்டும் துவத்தில் காட்டிய புதுமை காட்சி மொசியை கடைசி போதம் வரையிலும் சமரசம் இல்லமால் இயக்கி வந்தார் . அவர் உருவக்கிய ஒவ்வொரு பதாமும் சினிமா ரச்கர்களால் கொண்டாட்ப்பட்டன . அவர்றின் அரச்யல் தன்மை, காட்சி மொழ்யில் அவர் உருவாக்கிய தொழில் நுட்ப புதுமை ஆகியவை இப்போதும் சினிமா கற்கும் மாணவர்களுக்கு பாடங்களாக இருக்கின்றன தீவிர இட்து சாரி ஆதர்வாளரான அவர் . இந்த கருத்தாக்கத்த்லிருந்து கடைசி வரை பின் வாங்கவில்லை . வாழ்நாள் முழுக்க ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிரக படங்களை இயக்கி வந்த கொதார்த்துக்கு அமெரிக்காவின் ஆஸ்கார் விருது கமிட்டி சிறப்பு வாழ்நாள் சாத்னையாளர் விருது 2010ல் கொடுக்க முன் வனத போது அவர்களின் அழைப்பை அவர் நிராகரித்தார். . அப்படிப் பட்ட சமரசமற்ற படைப்பாளியாக படைப்புக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லமால் வாழ்ந்த காரணத்தால் தான் இன்று அவர் மரணம் கூட உலகம் வியக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது வாழ்க்கையும் சினிமாவும் வேறு வேறல்ல என அடிக்கடி சொல்லும் அவர் சிலசமயங்களில் ஒரு சினிமாவுக்குள் தன் வாழ்க்கை சிக்கிக்கொண்டதாக கூறுவார் . அப்படித்தன் அவரது மர்ணம் எனும் க்ளைமாக்ஸ் காட்சியும் அசரே எழுதிய காட்சியாக அவர் பாணியில் வியப்புட்டும் படி அமைந்துவிட்ட்து .சினிமா எனும் மாயப்புதிருக்குள் அவர் மரைந்தே போனார் என்றும் இதை சொல்ல்லாம் - அஜயன்பாலா

தமிழ் ஆவணப் படங்களின் போக்கு

ajayanbala@gmail.com . இன்று அனைத்து மொழிகளிலும் ஆவணப்படம் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆவணப்படங்கள...