நேற்று பிலிம் சேம்பரில் சேம்பரில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒருபகுதியான் தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் எழுத்தில் எனக்கு மூத்தோனாகவிளங்கும் ஜெயகாந்தன் அவர்கள் குறித்த் கருத்தரங்கத்திற்கு சென்றிருந்தேன். நல்ல எழுத்து உடலை எப்படியெல்லம் எரித்து அனுபவமாக மாற்றுகிறது என்பது குறித்து பலரும் பேசிக்கொண்டிருந்தனர். கூட்டம் முடிந்ததும் வெளியே விகடன் பதிப்பகத்தில் பணிபுரியும் நண்பர் இலகுபரதி வந்து தோளைத்தொட்டு கைகுலுக்கினார். இந்த புத்தக சந்தையில் உங்கள் புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின. நான் இருந்த சிலமணிநேரங்களுக்குள் பலரும் நாயகன் வரிசை புத்த்கங்களை மொத்தமாக கேட்டு வாங்கி எடுத்துசென்ற்னர் என்றார். இதனை சந்தையின்போதே ஸ்டாலில் இருந்த நண்பர்கள் என்னிடத்தில் சொல்லியிருந்தனர் என்றாலும் இப்போது எழுத்து குறித்து தீவிரமான மனசிந்தனையில் ஈடுபட்டிருந்த அந்த நேரத்தில் அவர் சொன்னது எனக்குள் ஒரு மன அவசத்தை உண்டுபண்ணியது. .
நாயகன் தொடராக வெளிவரும்போதே அதன் மிகப்பெரிய வெற்றியை செல்லுமிடங்களில்லெல்லாம் நான் உணர்ந்தவன். சென்ற வாரம் கூட ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வந்த அயலகதமிழர் மனோகரன் அவர்கள் என் முகவரியைத்தேடி என் வீட்டிற்கு வந்து நாயகன் தொடர் எழுதியமைக்காக என் அம்மாவிடம் கைகூப்பி தொழுதார். இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போதே கூட சற்றுமுன் ஹைதராபாத்திலிருந்து கோவிந்தராஜ் எனும் வாசகர் பொங்கல் வாழ்த்துசொல்வதற்காக தன் மூன்று மகள்களையும் அழைத்து ஒருவர் பின் ஒருவராக எனக்கு வாழ்த்துகூற வைத்தார். ஒவ்வொருவாரமும் விகடன் வந்தவுடன் மூன்று மகள்களையும் உட்காரவைத்து நாயகன் கட்டுரைய்யை அவர் அப்படியே படித்துகாட்டுவது வழக்கமாம் . இதையெல்லம் நான் உங்களிடம் பகிர்வதற்குகாரணம் உண்மையில் இந்த பாரட்டுகளுக்கு நான் மட்டுமே தகுதியானவன்தானா ?
என்ற கேள்விதான்.
நாயகன் தொடர் எழுதுவதற்குமுன் என்னை பொறுத்தவரை வாழ்க்கையின் லட்சியமாக இரண்டுவிஷயங்கள் இருந்தன. அதில் ஒன்று தமிழில் சிறந்த இயக்குனராகிவிடுவது அதேசமயம் நல்ல தீவிரமான காலத்தால் அழிக்க முடியாத சிறுகதை மற்றும் நாவல்களை படைப்பது. இவை இரண்டுமட்டுமே என்னுள் ஆழமாக இருந்து என்னுடைய செயல்பாடுகளை தீர்மானித்து வந்தன. மட்டுமல்லாமல் என்னுள் ஒரு பெரும் படைப்பு தகிப்பை உண்டாக்கிக்கொண்டிருந்தது.
மற்றபடி வணிக பத்திரிக்கைகள் பக்கம் எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தமான ஒரு வெற்றியை அதற்குமுன் நினைத்துகூட பார்தததுகிடையாது. அதுவும் சமூகம் அரசியல் போன்றவற்றில் அப்போது என்னுடைய ஈடுபாடு ஜீரோ எனக்கூட மதிப்பிடலாம். சமூகம் சார்ந்த என்னுடைய அக்கறை கூட குறும்பட விழாநடத்துவது என்ற அளவில் மட்டுமே இருந்துவந்தது. சுருக்கமாக சொல்வதானால் சமூகம்குறித்த அக்கறை குறைந்த ஒரு பிராணியாகவே இருந்துவந்தேன். சாதி மதம் அரசியல் உண்டே தவிர அதன்பொருட்டு சமூகத்தில் இயங்கவேண்டும் மக்களிடம் அதனை கொண்டுசெல்லவேண்டும் என்ற துளி ப்ரக்ஞை கூட என்னிடம் இல்லை. நாயகன் தொடரை எழுதுவத்ற்குமுன் பெரியார் அம்பேத்கர் சேகுவெரா மார்க்ஸ் போன்றவர்கள் குறித்த என்னுடைய அறிவுகூட மிக சாதரண நிலையில்தன் இருந்தது என்பதுதான் நிஜம்.
இடையில் மார்லன் பிராண்டோ எனும் நடிகரின் வாழ்க்கை குறித்த புத்தகம் கூட அப்போதிருந்த பண நெருக்கடியை தீர்ப்பதற்காகத்தான் எழுதியிருந்தேன்
ஆனால் அதில் பிராண்டோவின் சமூகம் குறித்த ஈடுபாடு அரசியல் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு ஓரளவு என்னை பாதித்தன என்றாலும்
என் எழுத்து கற்பனைகளை பிரசவிப்பதில்மட்டுமே மேலும் அக்கறை செலுத்திவந்தது. இதனிடையேதான் நாயகன் எழுதும் வாய்ப்புவந்தது
நாயகன் எழுததுவங்கியபின் தான் என்னுள் மாற்றங்கள் நிகழ்ந்தன.
ஒவ்வொருநாயகனையும் எழுதுவதற்காக நான் மேற்கொண்ட பயணத்தின் போது ஒவ்வொருவருமே என்னை புரட்டி எடுத்த்னர். அப்போது நான் அடைந்த துக்கம் கேள்வி ஆய்வு பரவசம் ஆகியவை என்னை தாக்கிய அதேவேகத்தில் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதன் காரணமாகத்தான் அந்த தொடர் இத்த்னை வெற்றிபெற காரணமாக கருதுகிறேன்
குறிப்பாக பெரியாரின் உண்மையின்மீதான் காதல் அம்பேத்காருக்கு சமூக நீதியின் மீதிருந்த தன்னலமற்ற அர்ப்பணிப்பு .அதிகாரத்திற்கெதிராக த்ன்னையே புதைத்துக்கொண்ட சேவின்மாண்பு , ஒட்டு மொத்த மனைத குத்திற்குமாக யோசனையை ஆழாமாக்கி தன் சுகதுக்கங்களையெல்லாம் இழந்த மார்க்ஸின் பேரன்பு போன்றவை
இந்த சமூகம் உணர தவறியவையாக உணர்ந்தேன்
இந்த வேதனைதான் என்னை வெறிகொள்ள வைத்து ஒவ்வொருவாரமும் என்னை பேயாட்டம் கொண்டு எழுதவைத்தது.
நாயகன் தொடருக்குபிறகு என் புற உலக மாற்றத்தை விட அக உலகில் எனக்கேற்பட்ட மாற்றத்தை மிக முக்கியமானதாக கருதுகிறேன்
அதற்கு முன்பிருந்த அஜயன்பாலாவைவிட கூடுதல் பொறுப்புள்ள மனிதனாக என்னை மாற்றியிருக்கினற்ன.
வெறுமனே கற்பனையில் அரசனாகவும் எதார்த்த்தின்மீதும் சமூகத்தின் மீதும் கவலையற்றவனாகவும் இருந்த என்னை என்னுலகத்தை முழுவதுமாக மாற்றிய ஒரு நெம்புகோல உண்டென்றால் அது நாயகன் தொடர்தான். அத்ற்குகாரணமாக இருந்தவர் விகடன் பொறுப்பாசிரியர் திரு ரா. கண்ணன்..
அதற்குமுன் எளிமையாக எழுததெரிந்தும் அதுகுறித்து வாளாவிருந்த என்னை பல்வேறு விஷ்யங்களை ஒன்றாக தொகுத்தும் பகுத்துபார்க்கும் என்னுடைய ஆய்வறிவை உறங்கி கிடந்த நெருப்பாம் சமூகத்தின் மீதான் பற்றை ஊதிபெருக்கி என்னுள் என்னை நான் புயலென ஊடுருவ வழிவகை செய்தவர்.
இதற்குமுன் நான் எழுதியிருந்த பை சக்கிள்தீவ்ஸ் மற்றும் மார்லன் பிராண்டோ பற்றிய எனது புத்தகங்கள்தான் அவர் என்னை தெர்ந்தெடுக்க காரணமாக இருந்திருக்கிறது என்பதை பிற்பாடு அறிந்தேன். ஒரு தீவிர வாசிப்பாளர் சமூக அக்கறைமிகுந்தவர் பொறுப்பான இடத்தில் அமர்ந்திருப்பதன் காரணமாக சமுகம் எத்த்கைய பலனை அடைகிறது என்பதற்குஇது ஒரு முக்கிய உதாரணம். இத்னை மற்றவர்களுக்கு உணர்த்துவதும் என்னுடைய கடமையாக உணர்கிறேன்.
மேலும் இத்னை எழுத என்னிடம் பணிக்கும் போதே சேகுவேரா சார்லிசாப்ளின் கார்ல்மார்கஸ் நெல்சன் மண்டேலா பெரியார் என அந்த வரிசையை தீர்மானித்தது மட்டுமல்லாமல் அதற்கான நாயகன் எனும் தலைப்பை தீர்மானித்தவரும் அவர்தான்.
இதையெல்லம் நான் வெளிப்படுத்துவது அவசியமற்றது என்றாலும் பலரும் என்னை புகழ்ந்துதள்ளூகிற போது அத்ற்கு சிறிதளவேனும் பங்கிருக்கும் கண்ணனை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.
மேலும் பெரியார் மூலமாக நான் கற்றுக்கொண்ட உண்மையின் மீதான் பற்றை அவாவை வெளிப்படுத்த இதை பயன்படுத்திக்கொள்வதிலும் எனக்கு அள்ப்பரிய மகிழ்ச்சி .
அஜயன்பாலா
15 -01-2010
சென்னை
14 comments:
மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துகள் அஜயன்.
thirai ulagai kaikolla vazhthukkal.
thangalai poondra samooga akkarai ullavargalin pangalippu namm thirai ulagin kasadugal neenga udhaviyai iruukum.
vazhthukkal.
முக்கியமான எழுத்தாளரின் ஆக்கங்கள் வெளிவர ரா கண்ணன் பங்கு குறிப்பிடதக்கதாக என்னுடைய பத்திரிக்கையாள நண்பர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
உங்கள் விகடன் தொடர் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நண்பர்கள் சிலாகிக்கக்கேட்டிருக்கிறேன்.
ajayan..சீக்கிரம் உங்கள் படத்தை எதிர்பார்க்கிறேன்.:))
கேபிள் சங்கர்
நன்றி சூர்யா ...உங்கள் பணியும் சிறக்க என்வாழ்த்து .
செல்வா அதுஒரு போராட்டம்தான் .உங்கள் வார்த்தை திடசித்தம் தருகின்றன.
திரு மண்குதிரை அவர்களுக்கு ..முக்கியமான படைப்புகள் மட்டுமல்ல.. ரா, கண்ணன் காலமாற்றத்தை செறிவாக உள்வாங்கி கலை இலக்கிய துறைகளுக்கும் நிறய்ய பங்களிப்பை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு செய்திருக்கிறார்.
தொடர்ந்து என்னை ஊக்குவ்வித்துவருவதற்காக கண்ணனுக்கு மட்டுமல்லாமல் உங்களை போன்ற நண்பர்கலுக்கும் என் நன்றிகள்
கேபிள்: நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்
தவிர்க்க முடியாத கால தாமதமாகிவிட்டது.
இந்த படைப்புகள் வெளியான பின்னணி மற்றும் உங்களின் மன ஓட்டம் ஆகியவற்றின் பகிர்வுக்கு
மிக்க நன்றி.
உண்மையை வெகு எதார்த்தமாக
சொல்லி இருக்கிறீர்கள்.
எழுத்தாளர்கள், படைப்பாளிகள்
அதிக அளவில் கௌரவிக்கப் பட வேண்டும். அவர்கள் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஆதாரமாக
விளங்குபவர்கள்.
அந்த வகையில் நீங்கள் அங்கீகரிக்கப் படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்
எஸ். எஸ் ஜெயமோகன்
நன்றி வேல் வியப்புக்குள்ளாக்குகிறீர்கள் .மிக்க மகிழ்ச்சியும் அன்பும்
மிக்க நன்றி ஜெய மோகன் நம்மை போல படைப்பாலீகலூக்கு அங்க்கீகாரம்தானே வாழ்வு ...தொடரின் போது ஒருவாரம் போன்வரவிட்டால் கூட நாம் சரியாக எழுதவில்லையோ எனும் பதட்டம் வந்துவிடுகிறது
இது உங்களின் அளப்பறிய உழைப்புக்கு கிடைத்த வெற்றியே! இன்னும் கடக்க வேண்டிய பாதைகளுக்கான உற்சாகமான வாழ்த்துக்கள் சார்
Post a Comment