October 6, 2026

பாப்லோ நெருடா வாழ்வும் கவிதைகளும்

காதல் இயற்கை புரட்சி மற்றும் வெங்காயம்


                                              -அஜயன் பாலா

பாப்லோ நெரூடா (Pablo Neruda, 1904–1973) சிலியின் மகத்தான கவிஞர். 20ஆம் நூற்றாண்டின் உலகக் கவிதையில் காதல், இயற்கை, அரசியல், மனிதத் துயரம் ஆகிய அனைத்தையும் ஒரே கவித்துவ உலகமாக மாற்றியவர்.

அவரது இயற்பெயர் நெப்தாலி ரிக்கார்டோ ரெயெஸ் பாசோஆல்தோ (Neftalí Ricardo Reyes Basoalto). 1904 ஜூலை 12 அன்று சிலியின் பர்ரால் (Parral) நகரில் பிறந்தார். சிறுவயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். பின்னர் தனது எழுத்துக்காக Pablo Neruda என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

. 1924-ல் வெளியான Twenty Love Poems and a Song of Despair  அவரது கவிதைத் தொகூப்பு அவரைத் தன்  22-ஆம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற கவிஞராக்கியது. குறிப்பாக காதல், உடல், நினைவு, பிரிவு ஆகியவற்றை இயற்கையின் காட்சிகளோடு இணைக்கும் அவரது மொழி தனித்துவமானது அவரது இரண்டாம் கவிதைத் தொகுப்பு ‘‘Twenty Love Poems and a Song of Despair’‘ பெரிய வெற்றியை பெற்றது. 20-ம் நூற்றாண்டில் 2 கோடியே அதிகமாக விற்ற கவிதைத் தொகுப்பு. ஆனால் அவருக்கு கிடைத்த சம்பளம் மிகக் குறைவு. சிலி நாட்டில் சாண்டியாகோ பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த அவர் பசியால் அவதிப்பட்டார். தன் ஒல்லியான உடலை மறைக்க ஒரு பெரிய கோட்  ம|ற்றும்  பெரிய தொப்பி அணிந்து கொண்டார்..

வெளிநாட்டுத் தூதரக்ப் பணி

லத்தீன் அமெரிக்காவில் எழுத்தாளர்களுக்கு அதிகாரிகள் மரியாதை கொடுத்தனர். பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு உயர்குடிக் கிளாஸ்மேட் நெரூடாவை வெளிவிவகார மந்திரியைச் சந்திக்கச் செய்தார். அவர் நெரூடாவின் கவிதைகளைப் படித்திருந்தார். உடனே வெளிநாட்டு பணி ஒன்றை வழங்கினார். பல நகரப் பெயர்களைச் சொன்னார். நெரூடாவுக்கு ஒன்றுமே தெரியாது; “ரங்கூன்” என்ற பெயரே மட்டும் கேட்டார். அதையே அவர் தேர்ந்தெடுத்தார்—அந்த இடம் எங்கே இருக்கிறது என்பதே தெரியாமல்.

 

1927-ல் அவர் பர்மா (இன்றைய மியான்மர்) நோக்கி புறப்பட்டார். முழுவதும் புதிதான, அந்நியமான உலகம். பின்னர் இரண்டு வருடங்கள் ரங்கூனிலும், பின்னர் இலங்கை (செய்லோன்) மற்றும் ஜாவா (இந்தோனேசியா) தூதரகப் பணியிலும் இருந்தார்.

927 நவம்பர். ரங்கூனில் சிலி தூதரக அதிகாரியாக இருந்த இளம் நெரூடா, தனது நண்பர் Álvaro Hinojosa-வுடன் வங்காள விரிகுடாவைக் கடந்து மதராஸ் வந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்துமூன்று.

அப்போது அவர் சென்னைக்கு  ஒருவேளை  அப்போதுநடந்த  இந்திய தேசிய  காங்கிரஸ் மாநாட்டின்  சிறப்பு அழைப்பாள்ராக கலந்துகொண்டிருக்ல்லாம் . (அடுத்த் ஆண்டு 1928 கல்கத்தாவில் நடைபெற்ற  காங்கிரஸ்  மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டிருக்கிறார் )

மதராஸ் அவருக்கு ஒரு நகரமாக மட்டும் தெரியவில்லை. அது முற்றிலும் புதிய உணர்வுகளின் உலகமாக இருந்தது. Marina-வின் நீண்ட கடற்கரை, வெப்பமான சூரியன், ரிக்ஷா, இந்தியப் பெண்களின் வண்ணமயமான ஆடைகள், தெருக்களில் தெரியும் வறுமை—எல்லாமே அவரது கவனத்திற்குள் வந்தன.

அவர் ஆசியாவில் இருந்தபோது மனநிலையில் என்ன இருந்தது என்பதைச் சொல்லும் முக்கிய ஆதாரம்—அர்ஜென்டினா விமர்சகர் ஹெக்டர் ஈண்டிக்கு எழுதிய கடிதங்கள். இளம் வயதில் தொலைதூர தேசத்தில் இருந்தது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடிதங்களில் அவர் தனது உள்ளக் குழப்பங்களை வெளிப்படுத்தினார்..அவரை வெகுவாகப் புண்படுத்தியது—அங்குள்ள குறுகிய மனப்பான்மையுள்ள குடியேற்ற அதிகாரிகள். “உள்ளூர் மக்கள் இருக்கும் இடங்களுக்கு போகாதீர்கள்” என்று எச்சரித்தார்கள். நெரூடா அப்படியான இனவெறியை வெறுத்து தனிமையைத் தேர்ந்தெடுத்தார்.

அதிக வேலை இல்லாததால் ஸ்பானிஷ், பிரெஞ்சு கவிதைகளையும், ப்ரூஸ்ட் நாவல்களையும் நிறையப் படித்தார். தொடர்ந்து கவிதைகளும் எழுதினார். ‘‘Residence on Earth’‘ என வந்த கவிதைகள் அவரது முன்னைய காதல் கவிதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை; தனிமை, குழப்பம் நிறைந்த கனவுபோன்ற உவமைகள்.

ரங்கூனில் அவர் ஜோஸி ப்ளிஸ் என்ற பர்மியப் பெண்ணுடன் வாழ்ந்தார். அவள் மிகுந்த பாசமும் பயங்கரமான பொறாமையும் கொண்டவள். சில நேரங்களில் கத்தியுடன் அவரைச் சுற்றி நடந்து, கொல்வேனா இல்லையா என சிந்தித்ததை நெரூடா நினைவுகளில் எழுதியுள்ளார். இவ்வளவு ஆபத்தான நிலையில் இருக்கும் நேரத்தில், அவருக்கு திடீரென செய்லோன் மாற்று ஆணை வந்தது. நெரூடா இரவில் ஓடி தப்பினார். அவரை விட்டு செல்லும் துயரத்தில் “The Widower’s Tango” என்ற புகழ்பெற்ற கவிதையை எழுதினார்.

 

இலங்கையின் வெல்லவட்டை பகுதியில் கடற்கரைக்கு அருகே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, ‘ப்ராம்பி’ என்ற உதவியாளரை வைத்தார்; நாய், “கிரியா” என்ற முயல்–தேள் (mongoose) ஆகியவை குடும்பமாக இருந்தன. அங்குள்ள மீனவர்கள், கடற்கரை, கிராமப்புற நடைப்பயணங்கள் அனைத்தும் அவருக்கு புதுவித அதிசய உலகமாக இருந்தது.

ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகளின் அகந்தை இங்கும் அவரை எரிச்சலடையச் செய்தது. ஒரு நாள் நாட்டுப்புற இசை கேட்டுக் கவரப்பட்டு தாமதமாக விருந்துக்கு சென்றபோது, “உள்ளூர்க்காரர்கள் இசை பாடுவார்களா?” என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

இலங்கையில் அவர் லயனல் வென்ட், ஜார்ஜ் கீட் உள்ளிட்ட செழித்து வந்த யூரேஷிய கலைஞர்கள் குழுவுடன் நெருக்கமாக இணைந்தார். அவர்களது நவீன கலை–இலக்கிய உலகம் நெரூடாவை வளர்த்தது. ப்ரூஸ்ட், ஜாய்ஸ், எலியட், லாரன்ஸ் போன்ற ஐரோப்பிய நவீன எழுத்தாளர்களை முதன்முறையாக வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.

இலங்கையில்  வன்முறையுடன் கூடிய ஒரு சம்பவத்தையும் தனது நினைவுகளில் விவரித்தார்—அதில் ஒரு ஏழைத தமிழ்ப் பெண்ணை பாலியல் வற்புறுத்திய சம்பவத்தைத் தானே ஒப்புக்கொள்கிறார். இதுவே பின்னாளில் அவரது பெயருக்கு பெரிய களங்கம் ஆகியது.

கொழும்பில் அவர் நிலையான வாழ்க்கையை வாழ்ந்தபோது, திடீரென ரங்கூன் பெண் ஜோஸி ப்ளிஸ் மீண்டும் வந்தார். அவள் வீட்டு முன்பு கூடாரம் போட்டு, பிரச்சனை செய்து, கத்தி எடுத்தார். இறுதியில் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் உதவியால் அவளைத் தாய்நாடு திரும்பச் சமாதானப்படுத்தினார். கப்பலில் ஏற்றும்போது அவள் காலில் விழுந்து அழுத காட்சியை நெரூடா மறக்க முடியவில்லை என்று எழுதினார்.

1930க்குப்பின் அவர் ஸ்பெயினில் துத்ரக அதிகாரியாக் குடியேறிய போதுதன் அவர் வாழ்க்கையின்  மிகப் பெரிய  திருப்பம் உ|ண்டானது .

அதுவரை காதல் இய்|ற்கை ம|ற்றும் தனி மனித அனுபவங்களை மட்டுமே வெளிப்படுத்திவந்த அவரது  கவிதை வெளி போர் அரசியல் வறுமை  துரோகம் கோபம் என சமூக ப்ரசனைக|ளை உள்|ளரக்கியதாக்  இங்குதன் மாறத்துவங்கியது

அப்படி அவர் மாறக் கார்|ணம்  ஒரு கவிஞனின் மரணம்

அந்தகவிஞர் பிரெர்ரிக் கார்சியா லோர்கா

உலகப் புகழ்பெற்|ற ஸ்பனையக் கவிஞரான லோர்க்காவை சந்தித்த கிஅணத்திலிருந்து அவர்து  கவைதை உலகில் அரசியலும் பிரவேசிக்கத்துவங்கியது

1936 ஜூலையில்  ஸ்பானிஷ் உள் நாட்டுப் போர் தொடங்கியது. லோர்கா குடியரசு ஆதரவு அறிவுஜீவியாகவும், இடதுசாரி கலாச்சார வட்டாரத்துடன் நெருக்கமானவராகவும் பார்க்கப்பட்டார்.1936 ஆகஸ்ட் 16 அன்று Granada-வில் தேசியவாதப் படைகளுடன் தொடர்புடைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 18 அல்லது 19, 1936 இரவில், லோர்கா சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சிக்கு||ள்|ளாக்கியது   . அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.  (அதனால் அவரது மரணத்தின் சரியான இடம் மற்றும் சில விவரங்கள் இன்றும் வரலாற்று விவாதத்திற்குரியவை.)

லோர்கா இறந்த செய்தி நெரூடாவை   பேரிடியாகத் தாக்கியது. அதன் பிறகு அவரது அரசியல் நிலைப்பாடு மேலும் தீவிரமானது. அவர் Republic-க்கு ஆதரவாக செயல்பட்டதால், சிலி அரசு அவரது consular பதவியை நீக்கியது. பின்னர் அவர் ஸ்பெயினை விட்டு வெளியேறினார்.

லோர்காவின் மரணம் நெரூடாவின் கவிதைக்கு ஒரு தீர்மானமான திருப்புமுனையாக அமைந்தது.

நான் பூக்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போது, என் நண்பன் கொல்லப்பட்டிருக்கிறான். இனி நான் பூக்களை மட்டும் எப்படி எழுத முடியும்?

லோர்காவின் கொலைக்குப் பிறகு, 1936 செப்டம்பர் 24 அன்று, நெரூடா இறந்த போராளிகளின் தாய்மார்களைப் பற்றி ஒரு கவிதையை வெளியிட்டார். “Explico algunas cosas” — “I Explain a Few Things”கவிதையின் தொடக்கத்தில் வாசகர் நெரூடாவிடம் கேட்பது போல:

“உங்கள் பழைய பூக்கள் எங்கே?
உங்கள் மழை எங்கே?
உங்கள் பழைய கவிதை உலகம் எங்கே?”

என்று கேட்கிறது.

அதற்குப் பதிலாக நெரூடா:“நான் உங்களுக்கு என்ன நடந்தது என்று சொல்கிறேன்.”என்று போரின் நடுவுக்குள் அழைத்துச் செல்கிறார்.மாட்ரிட்டில் அவர் வாழ்ந்த வீடு — பூக்கள், குழந்தைகள், நண்பர்கள், கவிஞர்கள் நிறைந்த வீடு. பின்னர்:குண்டுவீச்சு.தீ.ரத்தம்.மரணம்.

அதாவது, கவிதையின் அழகான உலகத்தை போர் வந்து நொறுக்குகிறது. அந்தக் கவிதை நெரூடாவின் தனிப்பட்ட கவிதை உலகம் ஏன் அரசியல் கவிதையாக மாறியது என்பதற்கே ஒரு விளக்கம்.

ஸ்பெயின் அனுபவத்திற்குப் பிறகு நெரூடாவின் அரசியல் ஈடுபாடு இன்னும் ஆழமானது.அவர் சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தார்; செனட்டராகவும் இருந்தார்.அதற்குப் பிறகு நெரூடா இன்னொரு எதிர்பாராத மாற்றத்தைச் செய்தார்.அவர் பெரிய அரசியல், வரலாற்று விஷயங்களை மட்டும் எழுதவில்லை.ஒரு வெங்காயத்தைப் பற்றியும் கவிதை எழுதினார்.

ஒரு தக்காளியைப் பற்றியும்.உப்பைப் பற்றியும்.சாக்ஸைப் பற்றியும்.இவை Odas elementales — Elemental Odes தொகுப்புகளின் உலகம்.இங்கே நெரூடாவின் கவிதை:

“பெரிய வரலாற்றிலிருந்துசிறிய பொருட்களின் அற்புதத்திற்குத் திரும்புகிறது.”

ஒரு சாதாரண பொருளை எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் மனித வாழ்க்கையின் அழகைக் காட்டுகிறார். இது அவரது கவிதையின் இன்னொரு அற்புதமான மறுபிறப்பு. நெரூடாவின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், தனிப்பட்ட காதல் கவிதையையும் சமூகக் கவிதையையும் ஒன்றுக்கொன்று எதிரானதாக அவர் பார்க்கவில்லை.

அவரிடம் காதலியின் உடல் ஒரு நிலப்பரப்பாகிறது. கடல் ஒரு நினைவாகிறது. திராட்சை ஒரு வரலாறாகிறது. ரொட்டி ஒரு மனித உரிமையாகிறது.தொழிலாளியின் கை ஒரு கவிதையின் பொருளாகிறது.இதனால் அவரது கவிதை “நான்” என்பதிலிருந்து “நாம்” என்ற பரந்த மனித அனுபவத்துக்குச் செல்கிறது.  . அவரது மிகப்பெரிய படைப்புகளில் ஒன்று Canto General (1950). .இது ஒரு தனி மனிதனின் கவிதை அல்ல. லத்தீன் அமெரிக்காவின் வரலாறு, நிலம், பழங்குடி மக்கள், காலனித்துவம், சுரண்டல், புரட்சி ஆகியவற்றை மிகப்பெரிய காவியத் தோற்றத்தில் பதிவு செய்யும் படைப்பு.

மச்சு பிச்சுவைப் பற்றிய அவரது கவிதைகள் குறிப்பாக புகழ்பெற்றவை. பழமையான கற்களையும் இறந்த நாகரிகத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் கவிஞன், இறந்த மனிதர்களின் குரலை மீண்டும் கேட்க முயல்கிறான்.

நெரூடாவின் அற்புதமான தன்மை — மிகச் சாதாரணமான பொருட்களையும் பிரபஞ்ச அளவுக்கு உயர்த்துவது. வெங்காயம், தக்காளி, ரொட்டி, உப்பு, சாக்ஸ், கடல், பூனை, மது...இவையெல்லாம் அவரது கவிதையில் உயிர்பெறுகின்றன.அவரது Odes to Common Things தொகுப்பில் அன்றாடப் பொருட்களுக்கே கவிதை எழுதுகிறார்.அதனால் அவரது கவிதை நமக்குச் சொல்வது:கவிதைக்கு அசாதாரணமான பொருள் தேவையில்லை;
அசாதாரணமான பார்வைதான் நெரூடா ஒரு சிறிய உணர்வை கூட மிகப்பெரிய காட்சியாக மாற்றக்கூடியவர்.  அவரது கவிதைகளில் ஓசை மிக முக்கியம். சில நேரங்களில் குறுகிய வரிகள். சில நேரங்களில் நீண்ட, மூச்சு விடாமல் செல்லும் வரிகள்.மீண்டும் மீண்டும் வரும் சொற்கள்.ஒலியின் ஏற்றத் தாழ்வுகள்.இதனால் அவரது கவிதையை வாசிப்பதைவிட கேட்பது போல உணர முடிகிறது.
பி|ற்பாடு  வயது அதிகரித்தாலும் நெரூடாவின் கவிதை காய்ந்து போகவில்லை.காதல், நினைவு, உடல், கடல், வீடு, மரணம் ஆகியவை மீண்டும் மீண்டும் வந்தன.ஆனால் இப்போது அந்தக் காதல் ஒரு இளைஞனின் காதல் அல்ல. அது: வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் மனிதனின் காதல். அவருடைய கவிதையில் தனிப்பட்ட நினைவுகளும் உலக வரலாறும் ஒன்றாக கலக்கத் தொடங்கின.1969-ல் சிலி கம்யூனிஸ்ட் கட்சி நெரூடாவை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தது.ஆனால் அவர் தனது நண்பரான Salvador Allende-க்கு ஆதரவாக விலகினார்.Allende வெற்றி பெற்று 1970-ல் ஆட்சிக்கு வந்தார்.

நெரூடா பின்னர் பிரான்சுக்கான சிலி தூதராக நியமிக்கப்பட்டார். 1971-ல் Pablo Neruda-வுக்கு இலக்கியத்திற்கான Nobel Prize வழங்கப்பட்டது. அப்போது அவர் வெறும் காதல் கவிஞராக இல்லை.

அவர்:

காதலின் கவிஞர்
போரின் சாட்சி
லத்தீன் அமெரிக்காவின் குரல்
அரசியல் கவிஞர்
சாதாரண பொருட்களின் கவிஞர்
மனித நினைவின் கவிஞர்

என்ற பல முகங்களைக் கொண்டிருந்தார்.அவருடைய நோபல் பரிசு மேற்கோள் அவரது கவிதை ஒரு கண்டத்தின் “destiny and dreams”-ஐ உயிர்ப்பிப்பதாகக் குறிப்பிட்டது. 1973 —அவரது நண்பரும் சிலியின் ஜனாதிபதியுமான Salvador Allende, செப்டம்பர் 11 இராணுவப் புரட்சியில் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். நெரூடா அப்போது தீவிரமாக நோயுற்றிருந்தார்.அவரது வீடுகள் இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட்டதாக Fundación Neruda பதிவு செய்கிறது.

செப்டம்பர் 23, 1973 — Santiago-வில் நெரூடா இறந்தார்.

அவரது மரணம் Allende-வின் வீழ்ச்சிக்கு வெறும் 12 நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்தது.

 

பாப்லோ நெருடா வாழ்வும் கவிதைகளும்

காதல் இயற்கை புரட்சி மற்றும் வெங்காயம்                                               - அஜயன் பாலா பாப்லோ நெரூடா ( Pablo Neruda, 1904–1...