May 23, 2021

- எழுத்தாளர்கள் ஈகோ சண்டை –தஸ்தாயேவெஸ்கியும் டால்ஸ்டாயும்

 





நம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என   அவ்வப்போது புலம்புவதுண்டு . , உலகம் முழுக்கவே அப்படித்தான் . குறிப்பாக புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளார்களான டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி ஆண்டன் செகாவ் ,துர்கனேவ் . மாக்சிம் கார்க்கி இவர்கள் அனைவருக்குமே படைப்பு ரீதியான முரண்களும் உட்பகையும்  ஈகோவும்  அதிகம் இருந்திருக்கின்றன 

குறிப்பாக   இவர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் தஸ்தாயெவெஸ்கியை உதாசீனப்படுத்தியும் அவரை ஏற்காமல் விமர்சனம் செய்தும் நிராகரித்தும் வந்திருக்கின்றனர்.  வாழும் போதும் இறந்தபின்பும் ருஷ்யாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட எழுத்தாளர் என்ற பெருமை  தஸ்தாயெவெஸ்கிக்கு  மட்டுமே உண்டு   இவற்றையெல்லாம கடந்துதான் அவர் 200ம் ஆண்டில் உலகமே கொண்டாடும் மகத்தான படைப்பாளியாக  தொடர்ந்து பேசப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகிறார்.

  மேற்சொன்ன ருஷ்ய எழுத்தாளர்கள்  தஸ்தாயெவெஸ்கியை விமர்சிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை கண்டெடுத்தனர். மாக்சிம் கார்க்கி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களுக்காவது அவர் எழுத்துக்கள்  மீது குற்றம் சொல்ல ததுவார்த்த  காரணம் இருந்தது. ஆனால் ஆண்டன் செகாவ்,  துர்கனேவ்  நபக்கோவ் போன்றோர் . விமரசனம் என்ர பெயரில் வெளிப்படுத்தியது  எல்லாம் வசைகள் அவமானங்கள் உதாசீனங்கள் .

 இவர்களில் கடுமை குறைவாக விமரசனமாக இல்லாமல் அபிப்ராயமாக கருத்துக்கள் சொன்னவர் டால்ஸ்டாய் மட்டுமே . அதேசமயம் சமகாலத்தில் புகழ்பெற்ற இன்னொரு சக எழுத்தாளன் என தெரிந்தும் டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கியை பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை 

இன்று வரை உலகின் மகத்தான இரண்டு நாவலாசிரியர்களாக கருதப்படும் டால்ஸ்டாயும் தஸ்தாயேவெஸ்கியும்  சம காலத்தில் புகழ்பெற்று விளங்கின  ருஷ்யாவின் இரண்டு நடசத்திரங்களாக இருந்தும்  பேசிக்கொள்ளவே இல்லை ,

 குறிப்பாக  புத்துயிர்ப்பு அன்னா கரீனா போரும் அமைதியும்  போன்ற காவியங்களை படைத்து நம்மூர் காந்திக்கே அன்பையும் அஹிமசையையும் போதித்த டால்ஸ் டாய்  த்ஸ்தாவெஸ்கியிடம் மட்டும்  பிடிவாதத்துடன் இருந்தார்  என்பதும் தான் ஆச்சர்யம்., இத்தனைக்கும் அவரது சமகாலத்தவ்ர்களான துரகனேவ் ஆண்டன் செகாவ் மற்றும் மாக்ஸிம் கார்க்கி ஆகியோருக்கு திறந்த  அந்த யாஸ்னயா போல்னாவா எனும் அரண்மனையின் கதவுகள் தஸ்தாயேவெஸ்கிக்கு மட்டும் திறக்கவேயில்லை . ( துரகனேவும் பிரான்சில் பேடன் பேடன் நகரில் வசிக்கும் போது ஒருமுறை தஸ்தாயேவெஸ்கி சூதாடி தோற்று கையில் நயாபைசா இல்லாமல் அவர் வீட்டு அரண்மனை வாசலில் நின்றபோது உள்ளே விடமால் அப்படியே திருப்பி அனுப்பிய கதையும் உணடு )

இப்படியாக அக்காலத்தின் ருஷய் இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர்களான இருவரும் கடைசி வரை பேசிக்கொள்ளாமலேயே  இறந்து போனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று  நிலவியல் இடைவெளி.

 இருவரும் வேறு வேறு நகரத்தின் பிரதிநிதிகள்.  டால்ஸ் டாய் மாஸ்கோ நகரம் என்றால் தஸ்தாயெவெஸ்கி  பீட்ட்ர்ஸ்பர்க் நகரம். இரண்டுமே பாரம்பர்யமான ருஷ்ய நகரங்கள் என்றாலும் மாஸ்கோ  பிரபுக்களும் அதிகார வர்க்கத்தினரும் அதிகம் வசிக்கும் நகரம் . மாஸ்கோவிலிருந்து 200கிமீ தொலைவிலிருக்கும் அவரது  யாஸ்னயா போனா எனப்படும் அரண்மனையை சுற்றி  மொத்தம் 12 கிமீ நிலப்பரப்பு எஸ்டேட்  அவருக்கு சொந்தமாக இருந்தது .

  தஸ்தாயேவெஸ்கியோ   ராணுவ வீரர்களுக்கு  மருத்துவம் செய்யும் தம்பதிகளுக்கு மகனாக்பிறந்தவர் . பரம்பரையாக மத ஊழியம் செய்துப் பிழைத்த குடும்பம் .அவர் பிறந்ததும் என்னமோ மாஸ்கோ நகரில் என்றாலும் பத்து வயதிலேயே பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அவரது த்ந்தையால் அனுப்பி வைக்கப்பட்டு பின் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத்துவங்கியவர்  குடியனாவர்கள் ஏழைகள் அதிகமாக வசிக்கும்  பீட்டர்ஸ்பர்க் . நகரின் வீதிகளைபற்றி த்ஸ்தாயேவெஸ்கி அவரது நாவல்களில் தொடர்ந்து எழுதி வந்திருப்பதை காணலாம்  இந்த இரண்டு நகரங்களுக்கும்  கிட்டத்தட்ட 700 கிமீ இடைவெளி என்பது வேறு இருவரும்  சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் இப்படி  இருவரும் இருவிதமான முரண்பட்ட தன்மை கொண்ட  நகரங்களின் பினபுலமே அவர்களது சுபாவமாககவும் இருந்திருக்கிறது . இந்த நகரங்களின் சுபாவம் இருவரது கதைகளிலும் வெளிப்படுவதை காணமுடியும் .

 டால்ஸ்டாயின் நாயகர்கள் பெரும்பாலும் பெரும் பிரபுக்கள் அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர்கள் . தஸ்தயெவெஸ்கியின் நாயகர்கள் சாதாரண மனிதர்கள் சிறிய வசதி படைத்த்வர்கள்  மேலும் பெரும்பலான கதை மாந்தர்கள் குடியனாவ்ர்கள் விபச்சாரிகள் குற்றமன நிலையில் பீடிக்கப்பட்டவர்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஊடாடுபவர்கள்

 இருவருக்குமிடையில் ஏழு வருடங்கள் மட்டுமே வித்தியாசம் . தஸ்தாயெவெஸ்கி 1821 லும் டால்ஸ்டாய் 1828லும் பிறந்தவர்கள் இருவருமே முதல் கதைகளை தன் 24ம் வயதில் எழுத துவங்குகின்றனர்.

தஸ்தாயேவெஸ்கியின்  குற்றமும் தண்டனையும்  டால்ஸ்டாயின் போரும் அமைதியும்   இரண்டும்  ஒரே காலத்தில்  1866 & 67 ஒரு வருட இடைவெளியில்  வெளியாகின .. 

இந்த இரண்டு நாவல்களுமே இன்று வரை உலக இலக்கியத்தின்  இரண்டு சிகரங்களாக கொண்டாடப்படுகின்றன என்பது கவனிக்கவேண்டிய விஷய்ம் போரும் அமைதியும் எனும் அவரது வார் அண்ட் பீஸ் நாவல் வெளி வந்தவுடன் அதை தஸ்தாயெவெஸ்கி படித்துவிட்டு டால்ஸ்டாயை பார்க்க ஆவலுடன் இருந்தார் , அதற்கு 9ரு வாய்ப்பும் வந்தது 

புஷகின் மறைவை யொட்டி அவருக்கு ஒரு  சிலை திறப்பு விழா   மாஸ்கோவில் நடத்ததிட்டமிட்டபோது  தஸ்தாயெவெஸ்கி அழைக்கப்பட்டார் .

 இம்முறை விழாவுக்கு ஒரு நாள் முன்பு எப்படியும் டால்ஸ்டாயை சந்திப்பது என முடிவெடுத்து அவரது இல்லத்துக்கு செல்ல அனுமதிகேட்டபோது டால்ஸ்டாய் மறுத்துவிட்டார் . தான் இப்போது தனிமையில் இருக்க விரும்புவதாக  ஏற்பாடு செய்த நண்பர்கள்  மூலமாக பதில் தஸ்தாவெஸ்கி க்கு பதில் சொல்லி அனுப்பினார் .

அந்த புஷகின்  நினைவஞ்சலி கூட்டத்தில் தஸ்தாயெவெஸ்கி  ஆற்றிய உரை தான் இன்று வரை இலக்கிய உலகின் தலைசிறந்த அஞ்சலி உரையாக கருதப்படுகிறது . இன்னும் சொல்லப்போனால் த்ஸ்தாயெவெஸ்கி யார் என ருஷ்யாவுக்கு அடையா:ளம் காட்டிய உரை என்றும் சொல்லலாம் . ருஷய் தேசிய வாத்ம் பற்றி அவர் ஆழ்த்திய உரை பிற்பாடு வந்த அரசியல் எழுச்சிகளுகெல்லாம் விதை என குறிப்பிடும் அளவுக்கு ருஷ்ய மொழியையும் இலக்கியங்களையும் புதிய திசைக்கு அந்த உரையில் நெறிப்படுத்தியிருந்தார் என பலரும் கருதுகின்ற்னர்.

பிறகு 1878 ல்  ருஷ்யாவின்புகழ்பெற்ற தத்துவ ஆசிரியாரான   விளாதிமீர் சோல்யோதேவின் உரை நிகழ்ந்தபோது இருவரும்  அந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருந்த போதிலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்லாமலெயே பிரிந்திருக்கின்றனர்

 அதன் பிறகும் பலர் டால்ஸ்டாயிடம் தஸ்தாவெஸ்கியின் எழுத்து பற்றிகேட்ட போது அது தன்னை பெரிதாக கவரவில்லை . என்றும் பலரும் பாராட்டும் கரமசோவ் பிரதர்ஸ்என்னால் படிக்கவே முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார் .மேலும்  த்ஸ்தாயெவெஸ்கிக்கு  கதாபத்திரங்களை வடிவமைப்பதில் போதாமை உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்

 இதனிடையே தஸ்தாவெஸ்கி 1881ல் இறந்த சேதி அறிந்த உடன் டால்ஸ்டாய் மிகுந்த வேதனையுடன் தன் நண்பருக்கு எழுதிய கடிதமொன்றி.   ஒர் அற்புதமான் எழுத்தாளனை தான் கடைசிவரை  சந்திக்காமலே போனமைக்கு தான் மிகவும் வேதனையுற்று கண்னீர்வடிப்பதாகவும்  இப்போதுதான் அவர் தனக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதை உணர்வதாகவும் என்றவாது ஒருநாள் இருவரும் சந்திக்கப்போவது உறுதி என்றும் ் அவரது the house of the dead நாவல் ஒரு உன்னதபடைப்பு என நிகொலாய் ஸ்ட்ராகோவ் என்பவருக்கு கடிதமாகவும் எழுதியிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன .எழுதியிருக்கிரார் .

 த்ஸ்தாயெவெஸ்கியின்மறைவுக்குப்பின்   அன்னா தஸ்தாவெஸ்கி டாக்ஸ்டாய்  மாஸ்கோ அரண்மனியன யாஸ்னயா போல்யானவுக்கு சென்று டால்ச்டாயின் மனைவியோடு நெருங்கிய உறவு பேணியதகவும் அப்போது  ஒருமுறை டால்ஸ்டாய்  தஸ்தயெவெஸ்கியை சந்திக்காமல் போனமைக்கு வருத்தம் தெரிவித்ததகாவும் பதிவு செய்திருக்கிறார் 

இறுதியாக டாலஸ்டாய் தன் யாஸ்னயா போல்யான்யா அர்ன்மனையைவிட்டு அஸ்த போவா  ரயில் நிலையத்தில் அனாதையாக் இறந்ப்பத்ற்கு முன் அவர் கடைசியாக வாசித்த புத்த்கம் கரமசோவ்  பிரதர்ஸ்

 அஜயன் பாலா \

23-05-2021

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

May 12, 2021

 


Nayaattu - Malayalam movie NETFLIX

 

நாயாட்டு  - தங்கத்தட்டில்  –கொஞ்சம் விஷம் தெளிக்கப்பட்ட மிருதுவான இட்டிலி


நம்மூர் விசாரணை படத்தின் இரண்டாம் பாகம் தான் நயாட்டு திரைக்கதை எப்படி அதிகாரவர்க்கம் தங்களை காப்பற்றிக்கொள்ள அப்பாவிகளை வேட்டையாடுகிறது என்பதுதன மூலம்

 

முன்னதில் விசாரணை கைதிகள் இதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் அவ்வளவே  வித்யாசம்

 

விசாரணை அளவுக்கு நயாட்டு சீரியஸ் படம் இல்லை . ஆனாலும் ஒரு விபத்தையும் அதன் முன்பின் சம்பவங்களையும் இணைத்து படம் பார்ப்பவர்களுக்குள் நெருப்பை பற்றவைத்துவிட்டார்கள் .

 

துளி பிசிறில்லாத லாவகமான திரைக்கதை .அதன் மேல் இயக்குனர் கட்டும் செறிவான நுணுக்கமான கலாபூர்வ இயக்கம்

 

ஒரு பெண் காவலர் ( நிமிஷா) தன் அம்மாவுக்கு தொந்த்ரவு செய்வதாக ஏரியா  தலித் இளைஞர்கள்  மேல்  தன்ஸ்டேஷனில் புகார்கொடுக்க ஸ்டேஷனுக்கு வரும் அந்த இளைஞர்களோடு இன்னும் இரண்டு போலீசாருக்குள்ளும் லேசான கைகலப்பு வர அதனால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்ப்டுகின்ற்னர் . இந்த இரு போலீசில் ஒருவர் இருபது  வருஷ  சர்வீஸ் உள்ள சீனியர்  ( ஜோஜு ஜார்ஜ்) இன்னொருவன் புதிதாக போலீஸ் வேலைக்கு சேர்ந்திருக்கும் டிரைவர் . .(குஞ்சாக்கோ கோபன்)  ஆனால் அன்று மாலையே அரசியல் அழுத்தம் கார்ணமாக தலித் இளைஞர்கள்  விடுத்லை செய்யப்படுகின்ற்னர் தொடர்ந்து  அந்த பெண்ணும் மற்ற இரு காவலர்களும் ஒரு கல்யாணத்துக்கு போய்  ஜீப்பில் திரும்புகின்ற்னர் .  இரு ஆண் போலீசும் ரெண்டு ஸ்மால் போட்டிருந்த காரணத்தால்  வண்டியை ஜோஜியின் சொந்தக்காரபையன் வண்டி ஓட்டுகிறான் .  கண் இமைக்கும் நேரத்தில்  அந்த ஜீப் சாலையில் வரும் பைக்கில் மோத  ஒரு விபத்து  தூக்கி வீசப்படட் உடலை மூன்று போலீசாரும் இறங்கி சென்று பார்க்க அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது காலையில் ஸ்டேஷனில் சண்டை போட்ட தலித இளைஞர்களுள் ஒருவன் . இதில் ஆரம்பிக்கிறது பிரசனை . எங்கே திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாக  சொல்லிவிடுவார்களோ என பயந்து  மூவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆக ஆனால் விடயம் அத்ற்குள் காட்டுத்தீயாய பரவி கலவரம் வெடிக்க உடனே கம்யூனீஸ்ட் சிஎம்  இன்னும் இரண்டு நாளில் தேர்தல் வருவதால் உடனே அவர்களை கைது செய்ய உத்த்ரவிட   கைது செய்தால் தன் அப்பாவி  சொந்தக்கார இளைஞன் மாட்டிவிடுவான் என பயந்து ஜொஜூ மற்ற இஒருவருடன்  ஓடத்துவங்க   போலீச் துரத்த  விறுவிறு திரைக்கதை . ஜோஜுவுக்கு   தேர்தல் முடிந்துவிட்டால் நிதானமாக தப்பிக்க்லாம் என்ற எண்ணம் ஆனால் சி ம்முக்கோ மூவரையும் இரண்டு நாளில், அரெஸ்ட் செய்யாவிட்டால் தலித் ஓட்டுக்கள் தங்களுக்கு விழாதோ என பயந்து அவர்களை எப்படியாவது அரெஸ்ட் செய்ய சொல்ல பெண் டிஜிபி க்கு உத்த்ரவிடுகிறார்   வேட்டை ஆரம்பிக்கிறது ஒரு கட்டத்தில்  மூவரையும்  போலீஸ் சுற்றி வளைத்துவிட  அதிக்காரி சிஎம்முக்கு போன் செய்து இதைச்சொல்ல  . அவர்கள் வரா லேட்டாகும் என்பதால் நாளைய தேர்தலுக்காக ஒரு மூவரையும் போலீஸ் அரெஸ்ட் செய்துவிட்டதாக  முகத்தில் துணியை மூடி யாரோ மூன்று பேரை காணிபித்து நாடகம் ஆடுகின்ற்னார் . ஆனால் இன்னொருபகக்ம் இன்னும் அரேஸ்ட் செய்யப்படாத சூழலில் மூவரையும் போலீஸ் தேடி  சுற்றி வளைத்து முன்னேறு,ம் போது  அங்கு ஜோஜி துக்கு மாட்டி த்ற்கொலை செய்துகொண்டிருப்தைப்பார்த்து  டிஜிபியும் காவலர்களும் அதிர்ச்சி

இப்போது அராசாங்கத்துக்கு நெருக்கடி உயிருடன் சிறையில் இருப்பதாக ஏற்கனபே அறிவித்துவிட்டது போலீ நாடகம் என தெரிந்தால் ஆட்சிக்கே அசிங்கம் என தெரிந்து அதிகாரவர்க்கம் அடுத்து மட்டிய இரண்டுகாவலர்களான் குஞ்சககோ மற்றும் நுமிஷாவை வைத்து அடுத்தடுத்து நகர்த்தும் காய்கள் தான் இறுதிக்காட்சி  

 

இதில் எங்கே பிரசனை என்றால் கதை பேசும் அரசியல் .

கேரள அரசியலில் தலித்கள் மிகுந்த செல்வாக்கோடிருப்பதாகவும் அவர்கள நினைத்தால் ஆட்சியையே மாற்றும் வல்லமை கொண்டவர்களாக வும் காட்டப்படுகிறது \

 

உண்மையில் அப்படி இல்லை நாயர் மேனன் நம்பூதரி ஈழவ சமூகங்களுக்கு பிறகுதான்  அதிகாரத்தில் கேரளாவில் தலித்துகள் இருக்கிறார்கள் . உண்மை இப்படி இருக்கையில் இப்படத்தில் தலித்துகள்  அதிக ப்ரசனை செய்து ஆட்சியை தீர்மனைப்பவர்களாக இயக்குனர் காண்பிக்க காரணம்  கம்யூனீஸ்ட் வெறுப்பு –

 

 

கேரள சினிமாவில் அரசியல் ஒளிவு மறைவு இல்லை. அங்கு கம்யூனிஸ்ட் காங்கிரஸ் இரண்டுக்கும் ஓபனாகவே ஆதரித்து எதிர்த்தும் எடுப்பார்கள் . அப்படி எடுக்கும் படங்களில் எதிர்கட்சிக்காரர்களை வில்லனாக சித்தரிப்பது வழக்கம் . நயாட்டு படமும் அப்படிபட்ட ஒரு கம்யூனிஸ்ட் வெறுப்பு  &. காங்கிரஸ்  ஆதரவு படம். . கம்யூனிஸ்ட்கள் பொதுவகாவே ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பவர்கள் என்பதால் இதில் த்லித் பிரசனையை உள் நுழைத்து அவர்கள் ஓட்டை அபகரிக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அப்பாவி காவலர் தற்கொலை செய்துகொள்ள காரணமாக செயல்படுகிறது  என ஜோடித்திருப்பது படைப்பளிகளின் புத்திசாலித்த்னம்

 

ஒருபககம் இது தலித்துகளுக்கு எதிரான படம் என்றாலும் இன்னொருபக்கம் தலித் ஆதரவு பார்வையுடனும் இப்படத்தை பார்க்க முடியும் /. பிரசனைக்குள்ளாகும் மூன்று காலவலர்களில் நிமிஷாபும் ஜோஜியும் கூட தலித்துகளே .. ஒரு தலித் பிரசனைக்கு தீர்வு காண முயலும் அதிகார வர்க்கத்தல கடைசியில் பலிகடா ஆவதும் தலித்துகளே என்ற கோணத்திலும் இப்ப்டத்தை பாசிடிவ்வாக் பார்க்க முடியும் என்றாலும் .. படம் பார்க்கும் பெரும்பாலோருக்கு சொஇல்ல்ப்படுவதுதான் படத்தின் அரசியல்  அவ்வகையில் பார்க்கும் போது இது தலித் மற்றும் கம்யூனிஸ்ட்  வெறுப்பை கட்டமைக்கும் படமே என்பதைல் ஐயமில்லை

 

மற்றபடி திரைக்கதையில் நகாசுகளும் நுணுக்கங்களும் ஆழமான் வாசிப்புக்குரியவை . குறிப்பாக மூன்று மைஅய பாத்திரங்களின் அறிமுகம் … மற்றும் ஜிஜோ அரசியல் வாதியின் மகளுக்கு வீடேறி குதித்த இளைனஜ்ன் மேல் பொய் வ்ழக்கு போட அவனுக்கு தண்ணி படடில் கொடுத்து ரேகை எடுத்து அதே பாட்டிலில் பெட்ரோலை பிடித்து கைரேகையை சாட்சிக்காக்க பயன்படுத்துவதும் பிற்பாடு அதே ஜோஜி யே அதிகாரவர்க்கத்துக்கு பலியாவதும் குறிப்பிடத்தக்க அமசம் .. அது போல மூவருக்கும் ஆதரவு கொடுக்கும் பழங்குடி தமிழரான வினோத் சாகர் தன் வேட்டிகிழிக்கப்ப்ட்டதை வைத்து நிமிஷா வின் மூன்றுநாள் பிரசனையை ஊகித்து முழு வேட்டியை கொடுப்பதும் நுணுக்கம்

 

இப்படி படம் ம்ழுக்க என்னதான் தொழில்நுட்பமும் புத்திசாலித்த்னமும் மிகுந்திருந்தாலும்  படம் பார்க்கும் போது கோதார்த்தின் ஒரு வாசகம் தான் நினைவுக்கு வந்தது

 

cinema is most beautiful feaud - jean luc godard

 

May 9, 2021

சாவுத்ரி பாய் பூலே - சமூக நீதி

 


இருக்கும் வரை அனுபவிக்கும் சுய நல வாழ்க்கைதான் இங்கு எல்லோருக்கும்

சக மனிதனின் வாழ்க்கை சற்று உற்றுப் பார்க்க யாருக்கு இருக்கிறது நேரம்

அதிலும் பெண் என்றால் சொல்லவும் தேவையில்லை

24 மணி நேரமும் அவளது மன கடிக்காரத்தின் டிக் டிக் டிக் ஓசை குடும்பம் குடும்பம் குடும்பம் தான்

இந்த விதிகலை அறுத்துத் தன்னை விதையாக்கிக் கொண்ட  இந்தியாவின் முதல் சமூக நீதிப் போராளி தான்  சாவித்ரி பாய் பூலே

இன்று சமூக ,மாற்றம் பல அன்னை தெரசாக்களை நமக்குள் உருவாக்கியிருந்தாலும்

அவர்களுக்கெல்லாம் முன்னோடி சாவித்ரி பாய் புலே

சமூக நீதிக்காகவும் பெண் கல்விக்காகவும்  தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் மட்டுமல்ல தன் உயிரையும் கொடுத்து நூற்றாண்டுகள் கடந்து இன்னும் மணக்கும் காட்டுமல்லியாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என பெயர் பெயர் பெற்றவர் சாவித்ரி பாய் புலே

2017ம் ஆண்டு இவரது 183 வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம்  டூடுள் கொண்டு பெருமைப்படுத்தியது என்றால் இவரது அருமை என்னவென உணர முடியும்

1831 ம் ஆண்டு மராட்டிய மாநிலம்  சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[ சாவித்ரி பாய் .  தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை   1840இல் மணந்தார்.

அப்போது ஜோதிராவ் புலேவுக்கு வயது 13.

ஜோதிராவ் பூலே வின் சமூக செய்ல்பாடுகள் மனைவி சாவித்ரிபாய்க்கும் தொற்றிக்கொண்டதில் ஆசசர்யமில்லை

 கணவருக்கு கைப்பாவையாக் இல்லாமல்   சமூக நீதி போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார் .

கல்வி மூலம் தான் சமூக நீதி என உணர்ந்த ஜோதிராவ் பூலே    தாழ்த்தப் பட்டோருக்கும் பிற்படுத்தப் பட்டோருக்கும்  கல்விக்கூடம் ஒன்றை உருவாக்கினார்.. அப்பள்ளியின் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை பணியேற்ற சாவித்ரிபாய் அவர்கள்  வெகு சீக்கிரத்தில் பெண் விடுதலையின் அவசியம் அறிந்து  1848ம் ஆண்டு பெண்களுகென தனி கல்விக்கூடம் அமைத்து அத்ன் த்லைமை ஆசிரியை பொறுப்பேற்றார். இதுவே இந்தியாவின் முதல் பெண்கல்விக்கூடமும் ஆகும்

சாவித்ரிபாயின் இந்த சேவை பிடிக்காத சனாதனவாதிகள் அவர் பள்ளி செல்லும் வழியில் காத்திருந்து மலம் அள்ளி வீசினர் . ஆனால் நமது போரடடம் அவர்களது அறியாமைக்கு எதிராகத்தான் என்பதில் உறுதியாக இருந்த சாவித்ரிபாய் கணவர் சொல்படி தினமும் மாற்று உடை கையிலெடுத்துச்சென்று  அந்த சதிகாரர்களை துணிந்து எதிர் கொண்டார்.  ஒரு பள்ளிக்கூடம் ஒன்பது பள்ளிக்கூடமாக விரிந்தது போராட்டமும் தொடர்ந்தது

கல்விப் பணியோடு நில்லாமல் சமூகப் பணியும் தொடர்ந்தது. .

விதவைகளுக்கு மொட்டை அடிக்கும்  வழக்கத்திற்கு எதிராக  நாவிதர்களை திரட்டி  போராட்டம்  நடத்தி  மூடப்ப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

மட்டுமல்லாமல் அவர்களது குழ்ந்தைகள் , பாலியல்  தொழிலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் குழ்ந்தைகள்  மற்றும்  அங்கீகரிக்கப் படாத உறவின் மூலம் பிறந்த் அனாதைக் குழநதைகள்  படிக்க  ஒன்பது உண்டு உறைவிட பள்ளிகள் கணவர் ஜோதிராவ் பூலே வுடன் இணைந்து இணைந்து  தோற்றுவித்னர் .

 1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசால் இவர்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள்  என்ற பாராட்டும்பரிசும்  பெற்றனர்

தாழ்த்தப்ப்ட்டோருக்கு த\ண்னீர் கொடுக்க மறுத்த  சூழலில் அனைவரையும் தன்வீட்டுக்கு அழைத்து தண்னீர் கொடுத்தார்.

அவரது  இந்த புரட்சி புனிதத்துக்கு புது விளக்கம் எழுதியது

பெண் கல்வி , சமூக நீதி  சமூக மாற்றம் என தொடர்ந்து அவரது அர்ப்பணிப்பின் பயணம் மருத்துவத் துறைக்குள்ளும் நுழைந்தது. உலகம் முழுக்க போர் மற்றும்  வெள்ளத்துக்கு பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக  செத்துப் போனது இந்த பிளேக் நோயின் காரணமாகத்தான்.

இந்தியாவுக்குள்ளும் நுழைந்த பிளேக் கடைசியில் சாவித்ரிபாய் புலேவின் சொந்த கிராம்த்துக்குள்ளும் வர அந்த கோடூர நோயை எதிர்த்து போராட தன் மகன் யஷ் வந்த்துடன் சேர்ந்த்து மருத்துவமனை ஒன்றை கட்டினார் 1897 இல் தென் ஆப்ரிக்காவில் மருத்துவம் படித்து வந்த மகன் யஷ்வந்த் சொந்த கிராமத்துக்கு அப்போதுதான்  திரும்,பியிருந்த சமயம்            

 புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது.

சாவித்திரி பாய் தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து, தனது  அறுபத்தி ஆறு வயதில், மனித  நேயம் காக்க மனித உயிர்கள்  காக்கப்போராடினார். மருத்துவ மனை  இறுதியில் அவர் ஒருவரைத்தூக்கி வரும், போது  மருத்த்குவமனை வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டார். . ஆனாலும் அவர் தூக்கி வந்த கங்காராம் எனும் பெண் பிழைத்துவிட்டார் .

இந்த கங்காரம்  யார் தெரியுமா ? பெண் கல்விக்காக  சாவித்ரி பாய் புலே பள்ளிக்கூடம் துவக்கிய போது  கலவரம் செய்தார்கள் அல்லவா அவர்களுல் ஒருவர் தான் இந்த . கங்காராம்

இறுதியில் கங்காரம் காப்பற்றப் பட்டு கன்விழித்த போது அவருக்கு தகவல் சொல்லப்ப்பட  சாவித்ரிபாயை பார்க்க அலறியடித்து ஓடினார்

அங்கே சாவித்ரி பாய்  பெள்ளைத்துணி போர்த்த்ப்ப்ட்டு பிணமாக கிடந்தார்.

இப்படியாக தன்னுடைய வாழ்க்கை முழுக்க பென் கல்வி தாழ்த்ப்பட்டோர் சமூக விடுதலை  மருத்துவ சேவை என பல நிலைகளில் போராடிய சாவித்ரி பாய் புலே தன் 66 வயதில்  சேவைப்பணியிலேயே இறந்தும் போனார்

மத்திய அரசு, சாவித்திப்பாய்; புலேவுக்கு பெருமை செய்யும் விதமாக,1998,ம் ஆண்டு, அவரின் படம் போட்ட அஞ்சல் தலை வெளியிட்டது. மராட்டிய அரசு  ஜனவரி 3ம் நாளை பெண்கள் தினமாக  அனுசரிக்கிறது. அவரின் பெயரில் ஓர் பல்கலைக் கழகமும் இருக்கிறது.

 

 

 

மோனிக்கா பெலுச்சி - உலகப் பேரழகி


 

நம்மூரில் நாற்பது  வயதை கடந்தாலே பெண்கள் கிருஷ்ணா கோவிந்தா என  காசிக்கு டிக்கட் வாங்க அலைவார்கள் . ஆனால்  இன்று உலகில் பலகோடி ரசிகர்களின் கனவுகன்னியாக திகழும் பேரழகி பெலுச்சிக்கு வயது 56 . மட்டுமல்லாமல் அவர் சமாபதிக்கும் பணம் எவ்வளவு தெரிய்மா  ஒரு  மணி நேரத்துக்கு 1000 டாலர் அதாவது நம்மூர் பணத்துக்கு 73,000 . .உலகம் முழுக்க  பல கோடி ரசிகர்களை கொண்ட பேர்ழகி  மொனிகா பெலுச்சி  இத்தாலி நாட்டின்   சிசிலியில் 1964ம் ஆண்டு  பிறந்தவர்.  .

பதிமூன்ற் வயதில் மாடலிங் தொழிலுக்குள் காலடி எடுத்து வைத்த பெலூச்சி சினிமாவில் அறிமுகம் ஆனபோது வயது 27 . பின் தொடர்ந்து பல  படங்களில் நடித்த பெலூச்சிக்கு அதிக புகழ் பெற்றுதந்த படம் மெலீனா

இரண்டாம் உலகப்போரில்  இத்தாலியில் ஒரு குட்டி ஊர் தான் கதைக்களம் .   ஊருக்குள்  புதிதாக ஒரு பேர்ழகி சிக்கென உடையில் தொடை தெரிய நடந்து வருகிறாள்   அதைபார்த்து  பருவ குமரன்கள் முதல்  பல் விழுந்த  பொக்கை வாய் கிழ்வர்கள் வரை  உச் கொட்ட பார்க்கிறார்கள்  . அவளுக்கு  . கணவன்  .வேறு  போருக்கு போயிருக்கிறான் . அவன் இறந்துவிட்ட்தாக தகவல் வர இவள் மட்டும் தனியே வசிக்கிறாள் . இதனால் அனைவரும் அந்த வீட்டையே கழுகு போல வட்டமிடுகின்ற்னர்.  அவளை ஒரு முறையாவது அடைந்துவிட துடிக்கின்றனர் .

 .  … இந்த  சமயத்தில் ஹிட்லரின் நாஜிப்படை ஊருக்குள் ஊடுருவுகிறது . பேர்ழகி மெலினாவை அவரகள் பார்ர்த்துவிட  அதிகாரிகள் அவளை வசப்படுத்தி  இரவுகளில் அவள் வீட்டுமுன் ராணுவ வண்டியை நிறுத்துகிறார்கள் .. அவளும் வேறு வழியில்லாமல்  உடலை விற்று உயிரை காத்துக்கொள்கிறாள் .  ஊர்  பெரிசுகளால் இதை தாங்க முடியவில்லை . கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே  என்ற வெறுப்பு .  ஒரு வழியாக போர் முடிந்து ஜெர்மன் ராணுவம்  ஊரைவிட்டு கிளமப  இப்போது ஒட்டு மொத்த ஊரின் ஆண்களும் பெண்களும்  கூடி  ஊருக்கு களங்கம்  உண்டாக்கிய மெலினாவை ஊரைவிட்டே துரத்தும் முடிவுக்கு வருகிறார்கள்  அவள் வீட்டுக்குள் புகுந்து அனாதையான மெலினாவின் முடிடை பிடித்து இழுத்து தெருவுக்கு கொண்டு வந்து சரமாரியக வெளுத்து  வாங்குகிறார்கள் .  குறிப்பாக் பெண்களுக்கு அவள் அழ்குமேலிருந்த வெறுப்பு அடி உதைமூலம் வெளிப்படுகிறது . கடைசியில் அவள் அழகான் முடியை வெட்டி சிதைத்து  மொட்டை அடித்து ஊரை விட்டே துரத்துகிறார்கள் . கொஞ்ச நால் கழித்து போரில் கொல்லப்பட்டதாக  நினைத்த கணவன் உயிரோடு மனைவியைத்தேடி வருகிறான் .  பின் அவளோடு ஊரைவிடே செல்கிறான்

சில வருடங்கள் கழித்து பெரும் கோடீஸ்வரியகா அவள் அந்த ஊருக்குள் கணவனுடன் வர ஊரே அவளை வாய்பிளந்து பார்க்கிறது . யார் அவளைஅடித்த்ஹாளோ அந்த பெண்ணே ஆவளுக்கு சேவகம் செய்வதுடன் படம் முடிகிறது .

இதில் மெலினாவாக நடித்தன் மூலமாகத்தன மொனிகாபெலுச்சி உலகின் நம்பர் ஒன் நடிகையாக ஆனார் . பல கோடிகள் சம்பாதித்து  தனியாக  ஒரு தீவையே விலைக்கு வாங்கி அதில் பங்களா கட்டி வசிக்கிறார்  இரண்டாவது கணவர் மற்றும் இரண்டு பெண்களுடன் அதில் வசித்து வருகிறார் . இன்றும்  இணையத்தில் அதிகம் பேர் தேடும் உலக அழ்கி மெலீனாதான் என கூகுள் சொல்கிறது

 

 

 

 

 

இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ - உலக இலக்கியச் சாளரம்

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...