May 9, 2021

சாவுத்ரி பாய் பூலே - சமூக நீதி

 


இருக்கும் வரை அனுபவிக்கும் சுய நல வாழ்க்கைதான் இங்கு எல்லோருக்கும்

சக மனிதனின் வாழ்க்கை சற்று உற்றுப் பார்க்க யாருக்கு இருக்கிறது நேரம்

அதிலும் பெண் என்றால் சொல்லவும் தேவையில்லை

24 மணி நேரமும் அவளது மன கடிக்காரத்தின் டிக் டிக் டிக் ஓசை குடும்பம் குடும்பம் குடும்பம் தான்

இந்த விதிகலை அறுத்துத் தன்னை விதையாக்கிக் கொண்ட  இந்தியாவின் முதல் சமூக நீதிப் போராளி தான்  சாவித்ரி பாய் பூலே

இன்று சமூக ,மாற்றம் பல அன்னை தெரசாக்களை நமக்குள் உருவாக்கியிருந்தாலும்

அவர்களுக்கெல்லாம் முன்னோடி சாவித்ரி பாய் புலே

சமூக நீதிக்காகவும் பெண் கல்விக்காகவும்  தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் மட்டுமல்ல தன் உயிரையும் கொடுத்து நூற்றாண்டுகள் கடந்து இன்னும் மணக்கும் காட்டுமல்லியாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என பெயர் பெயர் பெற்றவர் சாவித்ரி பாய் புலே

2017ம் ஆண்டு இவரது 183 வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம்  டூடுள் கொண்டு பெருமைப்படுத்தியது என்றால் இவரது அருமை என்னவென உணர முடியும்

1831 ம் ஆண்டு மராட்டிய மாநிலம்  சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[ சாவித்ரி பாய் .  தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை   1840இல் மணந்தார்.

அப்போது ஜோதிராவ் புலேவுக்கு வயது 13.

ஜோதிராவ் பூலே வின் சமூக செய்ல்பாடுகள் மனைவி சாவித்ரிபாய்க்கும் தொற்றிக்கொண்டதில் ஆசசர்யமில்லை

 கணவருக்கு கைப்பாவையாக் இல்லாமல்   சமூக நீதி போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார் .

கல்வி மூலம் தான் சமூக நீதி என உணர்ந்த ஜோதிராவ் பூலே    தாழ்த்தப் பட்டோருக்கும் பிற்படுத்தப் பட்டோருக்கும்  கல்விக்கூடம் ஒன்றை உருவாக்கினார்.. அப்பள்ளியின் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை பணியேற்ற சாவித்ரிபாய் அவர்கள்  வெகு சீக்கிரத்தில் பெண் விடுதலையின் அவசியம் அறிந்து  1848ம் ஆண்டு பெண்களுகென தனி கல்விக்கூடம் அமைத்து அத்ன் த்லைமை ஆசிரியை பொறுப்பேற்றார். இதுவே இந்தியாவின் முதல் பெண்கல்விக்கூடமும் ஆகும்

சாவித்ரிபாயின் இந்த சேவை பிடிக்காத சனாதனவாதிகள் அவர் பள்ளி செல்லும் வழியில் காத்திருந்து மலம் அள்ளி வீசினர் . ஆனால் நமது போரடடம் அவர்களது அறியாமைக்கு எதிராகத்தான் என்பதில் உறுதியாக இருந்த சாவித்ரிபாய் கணவர் சொல்படி தினமும் மாற்று உடை கையிலெடுத்துச்சென்று  அந்த சதிகாரர்களை துணிந்து எதிர் கொண்டார்.  ஒரு பள்ளிக்கூடம் ஒன்பது பள்ளிக்கூடமாக விரிந்தது போராட்டமும் தொடர்ந்தது

கல்விப் பணியோடு நில்லாமல் சமூகப் பணியும் தொடர்ந்தது. .

விதவைகளுக்கு மொட்டை அடிக்கும்  வழக்கத்திற்கு எதிராக  நாவிதர்களை திரட்டி  போராட்டம்  நடத்தி  மூடப்ப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

மட்டுமல்லாமல் அவர்களது குழ்ந்தைகள் , பாலியல்  தொழிலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் குழ்ந்தைகள்  மற்றும்  அங்கீகரிக்கப் படாத உறவின் மூலம் பிறந்த் அனாதைக் குழநதைகள்  படிக்க  ஒன்பது உண்டு உறைவிட பள்ளிகள் கணவர் ஜோதிராவ் பூலே வுடன் இணைந்து இணைந்து  தோற்றுவித்னர் .

 1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசால் இவர்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள்  என்ற பாராட்டும்பரிசும்  பெற்றனர்

தாழ்த்தப்ப்ட்டோருக்கு த\ண்னீர் கொடுக்க மறுத்த  சூழலில் அனைவரையும் தன்வீட்டுக்கு அழைத்து தண்னீர் கொடுத்தார்.

அவரது  இந்த புரட்சி புனிதத்துக்கு புது விளக்கம் எழுதியது

பெண் கல்வி , சமூக நீதி  சமூக மாற்றம் என தொடர்ந்து அவரது அர்ப்பணிப்பின் பயணம் மருத்துவத் துறைக்குள்ளும் நுழைந்தது. உலகம் முழுக்க போர் மற்றும்  வெள்ளத்துக்கு பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக  செத்துப் போனது இந்த பிளேக் நோயின் காரணமாகத்தான்.

இந்தியாவுக்குள்ளும் நுழைந்த பிளேக் கடைசியில் சாவித்ரிபாய் புலேவின் சொந்த கிராம்த்துக்குள்ளும் வர அந்த கோடூர நோயை எதிர்த்து போராட தன் மகன் யஷ் வந்த்துடன் சேர்ந்த்து மருத்துவமனை ஒன்றை கட்டினார் 1897 இல் தென் ஆப்ரிக்காவில் மருத்துவம் படித்து வந்த மகன் யஷ்வந்த் சொந்த கிராமத்துக்கு அப்போதுதான்  திரும்,பியிருந்த சமயம்            

 புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது.

சாவித்திரி பாய் தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து, தனது  அறுபத்தி ஆறு வயதில், மனித  நேயம் காக்க மனித உயிர்கள்  காக்கப்போராடினார். மருத்துவ மனை  இறுதியில் அவர் ஒருவரைத்தூக்கி வரும், போது  மருத்த்குவமனை வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டார். . ஆனாலும் அவர் தூக்கி வந்த கங்காராம் எனும் பெண் பிழைத்துவிட்டார் .

இந்த கங்காரம்  யார் தெரியுமா ? பெண் கல்விக்காக  சாவித்ரி பாய் புலே பள்ளிக்கூடம் துவக்கிய போது  கலவரம் செய்தார்கள் அல்லவா அவர்களுல் ஒருவர் தான் இந்த . கங்காராம்

இறுதியில் கங்காரம் காப்பற்றப் பட்டு கன்விழித்த போது அவருக்கு தகவல் சொல்லப்ப்பட  சாவித்ரிபாயை பார்க்க அலறியடித்து ஓடினார்

அங்கே சாவித்ரி பாய்  பெள்ளைத்துணி போர்த்த்ப்ப்ட்டு பிணமாக கிடந்தார்.

இப்படியாக தன்னுடைய வாழ்க்கை முழுக்க பென் கல்வி தாழ்த்ப்பட்டோர் சமூக விடுதலை  மருத்துவ சேவை என பல நிலைகளில் போராடிய சாவித்ரி பாய் புலே தன் 66 வயதில்  சேவைப்பணியிலேயே இறந்தும் போனார்

மத்திய அரசு, சாவித்திப்பாய்; புலேவுக்கு பெருமை செய்யும் விதமாக,1998,ம் ஆண்டு, அவரின் படம் போட்ட அஞ்சல் தலை வெளியிட்டது. மராட்டிய அரசு  ஜனவரி 3ம் நாளை பெண்கள் தினமாக  அனுசரிக்கிறது. அவரின் பெயரில் ஓர் பல்கலைக் கழகமும் இருக்கிறது.

 

 

 

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...