May 9, 2021

மோனிக்கா பெலுச்சி - உலகப் பேரழகி


 

நம்மூரில் நாற்பது  வயதை கடந்தாலே பெண்கள் கிருஷ்ணா கோவிந்தா என  காசிக்கு டிக்கட் வாங்க அலைவார்கள் . ஆனால்  இன்று உலகில் பலகோடி ரசிகர்களின் கனவுகன்னியாக திகழும் பேரழகி பெலுச்சிக்கு வயது 56 . மட்டுமல்லாமல் அவர் சமாபதிக்கும் பணம் எவ்வளவு தெரிய்மா  ஒரு  மணி நேரத்துக்கு 1000 டாலர் அதாவது நம்மூர் பணத்துக்கு 73,000 . .உலகம் முழுக்க  பல கோடி ரசிகர்களை கொண்ட பேர்ழகி  மொனிகா பெலுச்சி  இத்தாலி நாட்டின்   சிசிலியில் 1964ம் ஆண்டு  பிறந்தவர்.  .

பதிமூன்ற் வயதில் மாடலிங் தொழிலுக்குள் காலடி எடுத்து வைத்த பெலூச்சி சினிமாவில் அறிமுகம் ஆனபோது வயது 27 . பின் தொடர்ந்து பல  படங்களில் நடித்த பெலூச்சிக்கு அதிக புகழ் பெற்றுதந்த படம் மெலீனா

இரண்டாம் உலகப்போரில்  இத்தாலியில் ஒரு குட்டி ஊர் தான் கதைக்களம் .   ஊருக்குள்  புதிதாக ஒரு பேர்ழகி சிக்கென உடையில் தொடை தெரிய நடந்து வருகிறாள்   அதைபார்த்து  பருவ குமரன்கள் முதல்  பல் விழுந்த  பொக்கை வாய் கிழ்வர்கள் வரை  உச் கொட்ட பார்க்கிறார்கள்  . அவளுக்கு  . கணவன்  .வேறு  போருக்கு போயிருக்கிறான் . அவன் இறந்துவிட்ட்தாக தகவல் வர இவள் மட்டும் தனியே வசிக்கிறாள் . இதனால் அனைவரும் அந்த வீட்டையே கழுகு போல வட்டமிடுகின்ற்னர்.  அவளை ஒரு முறையாவது அடைந்துவிட துடிக்கின்றனர் .

 .  … இந்த  சமயத்தில் ஹிட்லரின் நாஜிப்படை ஊருக்குள் ஊடுருவுகிறது . பேர்ழகி மெலினாவை அவரகள் பார்ர்த்துவிட  அதிகாரிகள் அவளை வசப்படுத்தி  இரவுகளில் அவள் வீட்டுமுன் ராணுவ வண்டியை நிறுத்துகிறார்கள் .. அவளும் வேறு வழியில்லாமல்  உடலை விற்று உயிரை காத்துக்கொள்கிறாள் .  ஊர்  பெரிசுகளால் இதை தாங்க முடியவில்லை . கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே  என்ற வெறுப்பு .  ஒரு வழியாக போர் முடிந்து ஜெர்மன் ராணுவம்  ஊரைவிட்டு கிளமப  இப்போது ஒட்டு மொத்த ஊரின் ஆண்களும் பெண்களும்  கூடி  ஊருக்கு களங்கம்  உண்டாக்கிய மெலினாவை ஊரைவிட்டே துரத்தும் முடிவுக்கு வருகிறார்கள்  அவள் வீட்டுக்குள் புகுந்து அனாதையான மெலினாவின் முடிடை பிடித்து இழுத்து தெருவுக்கு கொண்டு வந்து சரமாரியக வெளுத்து  வாங்குகிறார்கள் .  குறிப்பாக் பெண்களுக்கு அவள் அழ்குமேலிருந்த வெறுப்பு அடி உதைமூலம் வெளிப்படுகிறது . கடைசியில் அவள் அழகான் முடியை வெட்டி சிதைத்து  மொட்டை அடித்து ஊரை விட்டே துரத்துகிறார்கள் . கொஞ்ச நால் கழித்து போரில் கொல்லப்பட்டதாக  நினைத்த கணவன் உயிரோடு மனைவியைத்தேடி வருகிறான் .  பின் அவளோடு ஊரைவிடே செல்கிறான்

சில வருடங்கள் கழித்து பெரும் கோடீஸ்வரியகா அவள் அந்த ஊருக்குள் கணவனுடன் வர ஊரே அவளை வாய்பிளந்து பார்க்கிறது . யார் அவளைஅடித்த்ஹாளோ அந்த பெண்ணே ஆவளுக்கு சேவகம் செய்வதுடன் படம் முடிகிறது .

இதில் மெலினாவாக நடித்தன் மூலமாகத்தன மொனிகாபெலுச்சி உலகின் நம்பர் ஒன் நடிகையாக ஆனார் . பல கோடிகள் சம்பாதித்து  தனியாக  ஒரு தீவையே விலைக்கு வாங்கி அதில் பங்களா கட்டி வசிக்கிறார்  இரண்டாவது கணவர் மற்றும் இரண்டு பெண்களுடன் அதில் வசித்து வருகிறார் . இன்றும்  இணையத்தில் அதிகம் பேர் தேடும் உலக அழ்கி மெலீனாதான் என கூகுள் சொல்கிறது

 

 

 

 

 

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...