Nayaattu - Malayalam movie NETFLIX
நாயாட்டு - தங்கத்தட்டில் –கொஞ்சம் விஷம் தெளிக்கப்பட்ட மிருதுவான இட்டிலி
நம்மூர் விசாரணை
படத்தின் இரண்டாம் பாகம் தான் நயாட்டு திரைக்கதை எப்படி அதிகாரவர்க்கம் தங்களை
காப்பற்றிக்கொள்ள அப்பாவிகளை வேட்டையாடுகிறது என்பதுதன மூலம்
முன்னதில் விசாரணை
கைதிகள் இதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் அவ்வளவே
வித்யாசம்
விசாரணை அளவுக்கு
நயாட்டு சீரியஸ் படம் இல்லை . ஆனாலும் ஒரு விபத்தையும் அதன் முன்பின்
சம்பவங்களையும் இணைத்து படம் பார்ப்பவர்களுக்குள் நெருப்பை பற்றவைத்துவிட்டார்கள்
.
துளி பிசிறில்லாத
லாவகமான திரைக்கதை .அதன் மேல் இயக்குனர் கட்டும் செறிவான நுணுக்கமான கலாபூர்வ
இயக்கம்
ஒரு பெண் காவலர் (
நிமிஷா) தன் அம்மாவுக்கு தொந்த்ரவு செய்வதாக ஏரியா தலித் இளைஞர்கள் மேல்
தன்ஸ்டேஷனில் புகார்கொடுக்க ஸ்டேஷனுக்கு வரும் அந்த இளைஞர்களோடு இன்னும்
இரண்டு போலீசாருக்குள்ளும் லேசான கைகலப்பு வர அதனால் அவர்கள் அனைவரும் கைது
செய்யப்ப்டுகின்ற்னர் . இந்த இரு போலீசில் ஒருவர் இருபது வருஷ
சர்வீஸ் உள்ள சீனியர் ( ஜோஜு
ஜார்ஜ்) இன்னொருவன் புதிதாக போலீஸ் வேலைக்கு சேர்ந்திருக்கும் டிரைவர் . .(குஞ்சாக்கோ
கோபன்) ஆனால் அன்று மாலையே அரசியல்
அழுத்தம் கார்ணமாக தலித் இளைஞர்கள் விடுத்லை செய்யப்படுகின்ற்னர் தொடர்ந்து அந்த பெண்ணும் மற்ற இரு காவலர்களும் ஒரு
கல்யாணத்துக்கு போய் ஜீப்பில்
திரும்புகின்ற்னர் . இரு ஆண் போலீசும் ரெண்டு
ஸ்மால் போட்டிருந்த காரணத்தால் வண்டியை
ஜோஜியின் சொந்தக்காரபையன் வண்டி ஓட்டுகிறான் .
கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஜீப்
சாலையில் வரும் பைக்கில் மோத ஒரு விபத்து தூக்கி வீசப்படட் உடலை மூன்று போலீசாரும் இறங்கி
சென்று பார்க்க அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது காலையில் ஸ்டேஷனில் சண்டை
போட்ட தலித இளைஞர்களுள் ஒருவன் . இதில் ஆரம்பிக்கிறது பிரசனை . எங்கே திட்டமிட்டு
கொலை செய்துவிட்டதாக சொல்லிவிடுவார்களோ என
பயந்து மூவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆக
ஆனால் விடயம் அத்ற்குள் காட்டுத்தீயாய பரவி கலவரம் வெடிக்க உடனே கம்யூனீஸ்ட்
சிஎம் இன்னும் இரண்டு நாளில் தேர்தல்
வருவதால் உடனே அவர்களை கைது செய்ய உத்த்ரவிட
கைது செய்தால் தன் அப்பாவி
சொந்தக்கார இளைஞன் மாட்டிவிடுவான் என பயந்து ஜொஜூ மற்ற இஒருவருடன் ஓடத்துவங்க
போலீச் துரத்த விறுவிறு திரைக்கதை
. ஜோஜுவுக்கு தேர்தல் முடிந்துவிட்டால்
நிதானமாக தப்பிக்க்லாம் என்ற எண்ணம் ஆனால் சி ம்முக்கோ மூவரையும் இரண்டு நாளில்,
அரெஸ்ட் செய்யாவிட்டால் தலித் ஓட்டுக்கள் தங்களுக்கு விழாதோ என பயந்து அவர்களை
எப்படியாவது அரெஸ்ட் செய்ய சொல்ல பெண் டிஜிபி க்கு உத்த்ரவிடுகிறார் வேட்டை
ஆரம்பிக்கிறது ஒரு கட்டத்தில்
மூவரையும் போலீஸ் சுற்றி
வளைத்துவிட அதிக்காரி சிஎம்முக்கு போன்
செய்து இதைச்சொல்ல . அவர்கள் வரா
லேட்டாகும் என்பதால் நாளைய தேர்தலுக்காக ஒரு மூவரையும் போலீஸ் அரெஸ்ட்
செய்துவிட்டதாக முகத்தில் துணியை மூடி
யாரோ மூன்று பேரை காணிபித்து நாடகம் ஆடுகின்ற்னார் . ஆனால் இன்னொருபகக்ம் இன்னும்
அரேஸ்ட் செய்யப்படாத சூழலில் மூவரையும் போலீஸ் தேடி சுற்றி வளைத்து முன்னேறு,ம் போது அங்கு ஜோஜி துக்கு மாட்டி த்ற்கொலை செய்துகொண்டிருப்தைப்பார்த்து டிஜிபியும் காவலர்களும் அதிர்ச்சி
இப்போது
அராசாங்கத்துக்கு நெருக்கடி உயிருடன் சிறையில் இருப்பதாக ஏற்கனபே அறிவித்துவிட்டது
போலீ நாடகம் என தெரிந்தால் ஆட்சிக்கே அசிங்கம் என தெரிந்து அதிகாரவர்க்கம் அடுத்து
மட்டிய இரண்டுகாவலர்களான் குஞ்சககோ மற்றும் நுமிஷாவை வைத்து அடுத்தடுத்து
நகர்த்தும் காய்கள் தான் இறுதிக்காட்சி
இதில் எங்கே பிரசனை
என்றால் கதை பேசும் அரசியல் .
கேரள அரசியலில்
தலித்கள் மிகுந்த செல்வாக்கோடிருப்பதாகவும் அவர்கள நினைத்தால் ஆட்சியையே மாற்றும்
வல்லமை கொண்டவர்களாக வும் காட்டப்படுகிறது \
உண்மையில் அப்படி இல்லை
நாயர் மேனன் நம்பூதரி ஈழவ சமூகங்களுக்கு பிறகுதான் அதிகாரத்தில் கேரளாவில் தலித்துகள் இருக்கிறார்கள்
. உண்மை இப்படி இருக்கையில் இப்படத்தில் தலித்துகள் அதிக ப்ரசனை செய்து ஆட்சியை தீர்மனைப்பவர்களாக
இயக்குனர் காண்பிக்க காரணம் கம்யூனீஸ்ட்
வெறுப்பு –
கேரள சினிமாவில் அரசியல் ஒளிவு மறைவு இல்லை. அங்கு கம்யூனிஸ்ட்
காங்கிரஸ் இரண்டுக்கும்
ஓபனாகவே ஆதரித்து எதிர்த்தும் எடுப்பார்கள் . அப்படி எடுக்கும் படங்களில் எதிர்கட்சிக்காரர்களை வில்லனாக சித்தரிப்பது
வழக்கம் . நயாட்டு படமும் அப்படிபட்ட ஒரு கம்யூனிஸ்ட் வெறுப்பு &. காங்கிரஸ் ஆதரவு படம். . கம்யூனிஸ்ட்கள் பொதுவகாவே ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பவர்கள் என்பதால் இதில் த்லித் பிரசனையை உள் நுழைத்து அவர்கள் ஓட்டை அபகரிக்க ஆளும் கம்யூனிஸ்ட்
கட்சி அப்பாவி காவலர் தற்கொலை செய்துகொள்ள
காரணமாக செயல்படுகிறது
என ஜோடித்திருப்பது படைப்பளிகளின் புத்திசாலித்த்னம்
ஒருபககம் இது
தலித்துகளுக்கு எதிரான படம் என்றாலும் இன்னொருபக்கம் தலித் ஆதரவு பார்வையுடனும் இப்படத்தை
பார்க்க முடியும் /. பிரசனைக்குள்ளாகும் மூன்று காலவலர்களில் நிமிஷாபும் ஜோஜியும்
கூட தலித்துகளே .. ஒரு தலித் பிரசனைக்கு தீர்வு காண முயலும் அதிகார வர்க்கத்தல
கடைசியில் பலிகடா ஆவதும் தலித்துகளே என்ற கோணத்திலும் இப்ப்டத்தை பாசிடிவ்வாக்
பார்க்க முடியும் என்றாலும் .. படம் பார்க்கும் பெரும்பாலோருக்கு
சொஇல்ல்ப்படுவதுதான் படத்தின் அரசியல் அவ்வகையில் பார்க்கும் போது இது தலித் மற்றும் கம்யூனிஸ்ட் வெறுப்பை கட்டமைக்கும் படமே என்பதைல் ஐயமில்லை
மற்றபடி திரைக்கதையில்
நகாசுகளும் நுணுக்கங்களும் ஆழமான் வாசிப்புக்குரியவை . குறிப்பாக மூன்று மைஅய
பாத்திரங்களின் அறிமுகம் … மற்றும் ஜிஜோ அரசியல் வாதியின் மகளுக்கு வீடேறி குதித்த
இளைனஜ்ன் மேல் பொய் வ்ழக்கு போட அவனுக்கு தண்ணி படடில் கொடுத்து ரேகை எடுத்து அதே
பாட்டிலில் பெட்ரோலை பிடித்து கைரேகையை சாட்சிக்காக்க பயன்படுத்துவதும் பிற்பாடு
அதே ஜோஜி யே அதிகாரவர்க்கத்துக்கு பலியாவதும் குறிப்பிடத்தக்க அமசம் .. அது போல
மூவருக்கும் ஆதரவு கொடுக்கும் பழங்குடி தமிழரான வினோத் சாகர் தன் வேட்டிகிழிக்கப்ப்ட்டதை
வைத்து நிமிஷா வின் மூன்றுநாள் பிரசனையை ஊகித்து முழு வேட்டியை கொடுப்பதும்
நுணுக்கம்
இப்படி படம் ம்ழுக்க
என்னதான் தொழில்நுட்பமும் புத்திசாலித்த்னமும் மிகுந்திருந்தாலும் படம் பார்க்கும் போது கோதார்த்தின் ஒரு வாசகம் தான் நினைவுக்கு வந்தது
cinema is most beautiful feaud - jean luc godard
2 comments:
ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் அஜயன்
படம்பார்த்ததிருப்தியும் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வமும் ஒருசேரத்தோன்றுகிறது
சிறப்பான பார்வை பதிவு மகிழ்ச்சி பாலா
Post a Comment