October 10, 2020

குருதத் : கனவில் எரிந்த கலைஞன்

குருதத் : கலையால் எரிந்த  கனவு



 56 வருடங்களுக்கு முன் 1964ல் இதே அக்டோபர் 10ம் நாள் இந்திய ஊடகங்களில் பரபரப்பான அந்த செய்தி வந்தடைந்து அனைவரது இதயத்தையும் தீயால் கருகச்செய்தது.  . குருதத் எனும் மகத்தான கலைஞன் மும்பையில் தன் வாடகை வீட்டில்  தற்கொலை செய்து கொண்ட தகவல்  அது.ர்.

39 வயதேயான குருதத்தின் மனைவி கீதாதத்  மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள்  . அந்த நாளில் அவரைப்பிரிந்து கீதா துயரத்தில் இருந்தனர் .

இன்று உலகமே குருத்த படங்களை கொண்டாடுகிறது . பியாசா தான் இன்றும் இந்தியாவின் சிறந்த தரமான  வணிகப்படமாக கருதப்படுகிறது உன்னதமான .காதல் திரைப்படம் என்றாலே பியாஸாதான் . வெண்ணீற இரவுகள் , ரோமியோ ஜுலியட்  போல இலக்கிய காதல் கதைகள் உண்டாக்கிய தாக்கத்துக்கும் சாப்ளினின் சிட்டி லைட்ஸ் திரைப்படமாக உருவாக்கிய தாக்கத்துக்கும்  சற்றும் குறைவில்லாதது பியாஸா .

முதல் முறையாக் பியாஸா படத்தை  பார்த்துவிட்டு  மனம்  என் கை நழுவிபோவதை அறிந்து பாதியிலேயே  படத்தை நிறுத்திவிட்டேன் . என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை

இப்படிப்பட்ட படம் இயக்கிய  இந்தியாவின் மகத்தான படைப்பாளியான் குருதத் வாழும் போது  எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை .அன்று பியாசா படுதோல்விப்படம்.   .

துவக்கத்தில் குருதத் வாழ்க்கையும் தொடர் வெற்றிகளால் பிரகாசித்தது   பாஸி, ஜால் , சிஐடி ,ஆர் பார் என வரிசையாக வெற்றிப்படங்களாக கொடுத்தார் . ஆனால் அந்த அவரது இயக்கம் பல  வன்ணப்படங்களின் வருகையால்  ஆட்டம் கண்டது. அழுத்தமான கதைகளுக்கும் எதார்த்த சித்தரிப்புகளுக்கும் வரவேற்பு குறைந்து  பொழுது போக்கு அம்சங்கள் அதிகமுள்ள படங்கள் வரவேற்பு பெற்றன. அவரது சம காலாத்தவரும்  சக போட்டியாளருமான  ராஜ் கபூர் இதை அறிந்து தன் படங்களில் நாயகிக்கு ஆடைகளை குறைத்து   இந்திய மனங்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்தார் . அவர் படங்களில் நாயகி அழும் போது   கூட  கவர்ச்சியாக உடை உடுத்தி  அதிகமாக உடல் பாகங்களை வெளிப்படுத்தி அழுவார் . நம் ஊர் குடும்ப பாங்கான பாத்திரத்துக்கு புகழ்பெற்ற பத்மினியையே  அவர்  சித்தரித்த விதம் கண்டு பல தமிழ் ரசிகர்கள் இதயம் பிளவுண்டது ‘

ஆனால் ராஜ் கபூரின்  இந்த சூட்சுமத்தை குருதத்  செய்யத்துணீயவில்லை . அழுத்தமான காதல் கதைகளும் நேர்த்தியான தொழில் நுட்பமும் என்ற அவரது சினிமா ரசனை  வியபார ரீதியாக தோல்வி கண்டது.  பியாஸா வை தொடர்ந்து காகஸ் கீ  பூல்  ஷாகித் பீபி அவுர் குலாம்  போன்ற படங்கள் சுமாரான வெற்றி பெற்ராலும் பியாஸாவால் உண்டான  கடனை அடைக்கும் அளவுக்கு அவரால் பணம் ஈட்ட முடியவில்லை

இதன் நடுவே தான் அவர் வாழ்க்கையில் புயல் ஒன்று நுழைந்தது  

அந்தப்  புயல் வஹீதா ரஹ்மான் . நம் தமிழ்நாட்டில்  செங்கல்பட்டில் பிறந்தவர். ஹேமம்மாலினிக்கு முன்பு இந்தியில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய முதல் நாயகி .   எம் ஜி ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும்  படத்தில் அறிமுகமாகி பின் அப்படியே மும்பைக்கு சென்றார்.  . அப்போது சிஐடி  படத்தை துவக்கியிருந்தார் குருதத் .அப் படத்தில்  நடிக்க வாய்ப்பு கேட்டு குருத்தை சந்திக்க சென்றார் . அந்த பட வாய்ப்பு  வஹீதாவை நடசத்திரமக்கியது  

வஹீதா அப்படி ஒன்றும் அழகில்லை .ஆனாலும் அவரிடம் ஒரு அபரிதமான் கவர்ச்சியும் அழகும் பொங்கி வழிந்தது .  காமிராவுக்கும் வஹீதாவுக்கும் கெமிஸ்ட்ரி அற்புதமாக அமைந்தது .  தொடர்ந்து குருதத்துடன்  சேர்ந்த  படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன  குருதத்தின் இதயம் வஹிதா வசம் முழுமையாக சிறைபட்டது . கணவனின் காதல் போக்கு அறிந்த கீதாவும் வேறு வழியில்லாமல்  குடும்பத்தை காப்பற்ற மீண்டும் திரையுலகில்  பாட முடிவு செய்தார்

 ஆர் டி  பர்மன் அப்போது ஒரு புதிய பாடகியை லதா மங்கேஷருக்கு ஒரு மாற்றாக உருவாக்க நினைத்து கீதாவை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்

ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த  கீதாவின் குரல் அன்று பர்மன் எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியவில்லை .ஆனாலும் ஆர் டி பர்மன விடாமல் முயற்சித்தார் .

]

 குருதத்  காதலி வஹீதா ரஹ்மான் மனைவி கீதாதத் ஆகியோருடன் 

இதனிடையே  இதை அறிந்த லதா மங்கேஷ்கர் தன் தங்கை ஆஷாபோன்ஸ்லேவை அனுப்பி ஆர் டி பர்மனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வைத்தார்

இந்த வெறுப்புகளால் கீதா கணவனை விட்டு முழுமையாக பிரிந்தார்

ஒருபக்கம் தனக்காக தன் திறமையையே தியகம் செய்து குடும்பத்துக்காக அர்ப்பணித்த  காதல் மனைவி கீதா   மற்றும் குழந்தைகள் இன்னொருபக்கம் சினிமா எனும் கலை வஹீதாவின் மாயச்சிரிப்பு \

 பாழும் கலைஞனுக்கு அதீத இதயத்தையும் உச்சமான ரசனையையும் கொடுக்கும் இயற்கை  இன்னொருபக்கம் அவன் அதை அனுபவிக்காதபடி  நடைமுறை வாழ்வின் அனைத்து விதிகளையும் அவனுக்கும் சமமாக கொடுத்து  கால்களை பூட்டி விடுகிறது .

ஒருபக்கம் மனம் காதலால் இழுக்க இன்னொருபககம் குடும்ப நியமம் அவன் கால்களை இழுக்க அவன் எந்த பக்கமும் போக முடியாமல் இரண்டுக்குமிடையே குருதத் சிக்கித்தவித்தார்  இதிலிருந்து தப்பிக்க அவருக்கு உதவியது மதுபோத்தல்கள்  . தினமும் அதீத குடியும் சிகரட்டும் தூக்க மாத்திரையும் அவரை அலைக்கழித்தன

இப்படியான சூழலில்தான்  அவர் தயாரித்த படங்கள் தொடர் தோல்வி அடைந்து நிலைமை முன்னிலும் மோசமனாது   சொத்துக்கள் பறிமுதல் ஆனது . வீடுகள் இழந்து வாடகை வீட்டுக்கு வந்தனர்.

 இன்னொருபககம் வஹிதா தொடர் வெற்றியால் புகழ் உச்சிக்கு சென்றார் . அவராலும் குருதத்தின் காதலை ஏற்க முடியவில்லை . காரணம் கீதாவும் அவர்களது குழந்தைகளும் அவருக்கும் நெருக்கம் . தன்னால் இன்னொரு பெண்னின் வாழ்க்கை பாழாவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

இதனால்  குருத்தை தவிர்த்தார்  இப்போது குருத்துக்கு யாரும் இல்லை

மனைவியும் குழந்தைகளை பார்க்க அனுப்ப மறுத்துவிட்டார்

ஒரே ஒருவர் அவருக்கு ஆறுதலாக இருந்தவர்

அப்ரார் ஆல்வி . அவரது எல்லா படங்களுக்கும் அவர் தான் கதையாசிரியர்

அவர் மட்டும் அவ்வபோது அவர் குடியிருப்புக்கு வந்து  போவார் . அன்று குருதத் அவரிடம் ராஜ் கபூர்  கால்ஷீட்தந்துள்ளதாகவும் மீண்டும் படம் தயாரித்து கடனை அடைக்கப்போவதாக மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் . பட வேலைகள் மும்முரமாக துவங்கின ஆனால் என்ன காரணத்தாலோ ராஜ் கபூர் பட்ப்பிடிப்புக்கு வரவில்லை அன்று மாலை அப்ரார் ஆல்வி அவர் குடியிருப்புக்கு சென்ற போது இன்னொரு காரணமும் அப்ரார் ஆல்விக்கு தெரிய வந்தது .  தான் குழந்தைகளை பார்க்க விரும்பியபோது மனைவி அனுப்ப மறுத்துவிட்டதை சொல்லி குருதத் மீண்டும் அதிகமாக குடிக்கத்துவங்கியிருக்கிறார்

மறு நாள் கீதா குழந்தைகளுடன் குருத்தை இறந்த நிலையில் தான் பார்க்க முடிந்தது. கடைசி வரை அவர் வாய் கீதா கீதா என்றே சொல்லிக்கொண்டிருந்தாக சாகும் தருவாயில் அருகிலிருந்தவர்கள் பதிவு செய்துள்ளனர் .

குருதத் படத்தின் புகழ் பெற்ற பாடலொன்று  கீதாதத் பாடியிருப்பார் .

ககஸ் கீ பூல் படத்தில் வரும் Waqt Ne Kiya Kya Haseen Sitam -  

எனும் அப்பாடல்  இருவருக்காகவும் எழுதப்பட்டது போலவே இருக்கும் அதன் வரிகள்

வசீகரமான அநீதியை வாழ்க்கை நம்மீது சுமத்திவிட்டது

என்னில் நான் இல்லை

உன்னிலும் நீ இல்லை       

] ஒரு பாதையில் இருவரும் சந்தித்தோம்

இணைபிரியாத ஜோடிகளாய் வாழ்வை துவக்கினோம்

சில அடிகள் கடக்கும் முன்பே

ஏனோ அந்த பாதை பாதியில் அறுந்துவிட்டது

பாதியில் முடிந்துவிட்டது

பிறகு கணவனை மறக்க கீதாவும் குடியில் வீழ்ந்து 1972ல் வாழ்வை முடித்துக்கொண்டார்

 ajayan bala 

10/10/2020

 

 

 

 

 

 


October 5, 2020

மொகல் ஈ ஆஸம் ; .. திரைக்கு பின்னால் நடந்த மகத்தான காதல் கதை- மதுபாலா & திலீப்குமார்

 


மொகல் ஈ ஆஸம்  ; .. திரைக்கு பின்னால் நடந்த மகத்தான காதல் (  தோல்வி) கதை

 

இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட திரைப்பட  காதல் காட்சிகளில்  அதிகம் பேரால் தலை சிறந்தது என வர்ணிக்கப்பட்டது மொகல் ஈ ஆஸம் எனும் இந்திப் படத்தில்  வரும் காதல் காட்சிதான் இத்தனைக்கும் அந்த நீண்ட காட்சியில் வசனமே இல்லை வெறும் இசை மட்டும்தான் .நாயகி மதுபாலாவின்  முகத்தை கையில் வைத்திருக்கும் சாமரத்தால் தடவிக்கொண்டேயிருப்பார் . அவ்வளவுதான் . இவ்வளவு அழகான நுணுக்கமான ரசனைக்காட்சியை உருவாக்கிய கலைஞன் உண்மையில் ஒரு மகத்தான  காதலன் தான் . ஆம் இப் படத்தின் இயக்குனரான ஆசிப்ஃ அப்படிப்பட்ட ஒரு காலா நேசன் தான் . இல்லாவிட்டால் தன் வாழ்நாள் முழுமைக்கும் ஒரே ஒரு படத்துக்ககாக வாழ்ந்திருக்க முடியுமா ?

 

சில மகத்தான கலைகள் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கின்ற்ன என சொல்வார்கள் . மொகல் ஈ ஆஸாம் படம் இக்கூற்றுக்கு  நூற்றுக்கு நூறு பொருந்தக்கூடியது . இல்லாவிட்டால் இதுவரை இந்தியாவில் எடுத்த படங்களில்  பத்து வருடங்கள்  தயாரிப்பு காலத்தை எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பத்து வருடம் கழித்து வெளியாகி இந்தியாவின் மகத்தான சாதனைபடமாக இன்றும் வசூலில் ஷோலே  உட்பட பல இந்தி திரைப்படங்களைக்காட்டிலும் பண வீழ்ச்சி கணக்குப்படி  முன்னணியில் இருக்கிறதென்றால் அதன் சாதனையை எப்படி வர்ணிக்க முடியும் .

 

ஆசிப் இதற்கு முன்னாலும் பின்னாலும் ஒருதுண்டு துக்கடா படங்கள் எடுத்திருந்தாலும் அவரது பெரும்பாலான வாழ்க்கை இந்த ஒரு படத்துக்காக  மட்டுமே பெரும்பாலும் செலவழிக்கப்பட்டது  48 வயதில் மரணித்துபோன ஆசிப்புக்கு மூன்று மனைவிகள் . அதில் ஒரு வர் திலீப்குமாரின் சகோதரி

 

சரி விஷயத்துக்கு  வருவோம்

இந்த மகத்தான காதல் காவியம் உருவாக ஆசிப் மட்டும் தன் வாழ்க்கையை தொலைக்கவில்லை . ஒரு அற்புதமான காதலும்  இந்த படத்துக்காக தோன்றி மறைந்து போனது

 

அந்த காதலும்  படத்தில் வரும் சலீம் அனார்கலி காதல் போலத்தான் கடைசி வரை சேரவே முடியவில்லை . அந்த அசல்  காதல் கதையின் நாயகன் திலீப் குமார் நாயகி  மதுபாலா

 

மதுபாலாவின் கண்களைப்பற்றி இந்தியில் எழுதாத கவிஞர்களஏ இல்லை எனலாம் . 90 களில் ஒரு சினிமா பத்ரிக்கை எடுத்த வாக்குகளின் படி எல்லா காலத்துக்குமான இந்திய சினிமாவின் அழகு தேவதை யார் என போட்டி வைத்த போது அதில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டவர்  மதுபாலா ,. அப்போது அவர் இறந்து 15 வருடங்களாகி விட்டிருந்தது  

 

அதுல்லா கான் எனும் பாகிஸ்தான் பத்தான் இஸ்லாமியரின்  ஒன்பதாவது பெண் தான் மதுபாலா .பிழைப்புதேடி மும்பைக்கு வந்த குடுமபத்தில் 11 குழந்தைகளில் சரிபாதி வறுமையில் விபத்தில் இறந்து போக அழகுமிகுந்த மதுபாலவை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்தார் அதுல்லாகான்  .  ஊற்றுபொல உனர்ச்சிகளை பிரவகிக்கும் மதுபாலாவின் முகமும்  வெளிப்படையான சுதந்திரமான்  இயல்பும் அனைவரையும் வசீகிரித்துவிடுவதால் சினிமா வில் அவர் நுழைந்த வுடனே ஜெட் வேக வளர்ச்சிதான். குழந்தை  நட்சத்திரமாக சில படங்களில் நடித்த மதுபாலா 14 வயதில் ராஜ் கபூருடன் நாயகியாக நீல் கமல் படத்தில் நடித்தார்.  தொடர்ந்து பல காதல்கள்.  எல்லா காதலும்  கல்யாணம் வரை போய் மதம் காரணமாக அதுல்லாகான் ஒத்துக்கொள்ளவில்லை

 

இந்நிலையில் 17 வயதில் டாரானா படத்தின் செட்டில் மதுபாலா முதல் முறையாக  திலீப்குமார் எனும் உச்ச நட்சத்திரத்தை பார்த்தார்  கொஞ்ச நாட்களில் இருவருக்குமிடையே காதல் முதல் பார்வையிலேயே பற்றிக்கொண்டது .  ஒரு ரோஜாப்பூவுடன் ஒரு கடிதத்தையும் திலிப்பின் மேக் அப் அறைக்கு கொடுத்தனுப்பி காதலை வெளிப்படுத்தினார் மதுபாலா . இருவருமே பத்தான் முஸ்லீம்கள் என்பதால் துவக்கத்தில் அதுல்லாகான் அவர்கள் காதலுக்கு தடை சொல்ல வில்லை. அதே கான் பிற்பாடு இந்த காதலுக்கு கொலை வெறி வில்லனாக மாறி இருவரையும் கடைசி வரைக்கும் சேர விடாமல் பிரித்து  மதுபாலவின்  மரணம் வரை கொண்டுசென்றார்

 

காரணம் இரண்டெழுத்து \

ஈகோ

மதம் அபின் என்றால் ஈகோ அபினை விட கொடியது

 

அந்த ஈகோ வரக்காரணம்  பின் வரும் கதையை படித்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்

 

இயக்குனர்  ஆசிப் ஒரு கலை வெறியர் . சினிமாவில் பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப் போகாமல் மகத்தான சாதனை செய்ய பெரும் கனவு கண்டார் . அது மொகல் ஈ ஆஸம்  திரைப்படம் .

வரலாற்றுப்பின்னனீயில் ஒரு மகத்தான காதல் கதை  அக்பர் மகன் சலீமுக்கும் அனார்கலிக்கும் நடந்த காதல் கதை

இந்த கதைக்கான  திரைக்கதை எழுதும்போதே இதுவே இந்தியாவின் சிறந்த வணிக படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்  இதுவே தன் வாழ்நாளின் சாத்னை என்றும் முடிவுறுத்துக்கொண்டார் . அது அப்படியே ஆகவும் செய்தது . ஆனால் அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல

 

பெரும் கனவுகளோடு மொகல் ஈ ஆசாம் படத்தை பெரும் பொருட்செலவில் துவக்கியிருந்தார் . ஏற்கனவே அது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி  வேறு நட்சத்திரங்கள் போட்டு படபிடிப்பு ஆரம்பித்து பின் ஏதேதோ தடைகளால் நடத்த முடியமால் போனது கடைசியாக அவர் திரைக்கதை தில்லிப்பின் கைகளுக்கு வந்தது . தொடர்ந்து அது  மதுபாலா கைகளுக்கும் சென்றது . இருவரது இதயமும் அந்த திரைக்கதையின்  அபாரத்தில் விழுந்தது.

 

ஒரு வழியாக ஆசிப்பின் கனவுப்படத்து கை கல் முளைத்தது

படப்பிடிப்பும் துவங்கியது . தொடர்ந்து சில நாட்கள்   வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் போதுதான்   இன்னொரு படமும் இதே ஜோடிக்கு  ஒப்பந்தம் ஆகியது அது தான் நயாதர் .. இந்த படம் தான்  எல்லா பிர்ச்னைக்கும் துவக்கப்புள்ளியானது . ஏற்கனவே இருவரது காதலையும் அறிந்த அதுல்லாகானுக்கு ஒரு பயம் இருந்தது காரணம் வீட்டின் ஒரு வருமானம் மதுபாலாதான் அவள் முந்திய காதல்களுக்கு மதம் கார்ணம் காட்டி தடுத்து விட்டார். .ஆனால் இதில் திலீப்பும் அவர்களைப்போலவே பதான் வகுப்பு முஸ்லீம் . காதலித்தால் தடை சொல்ல முடியாது கூடுமானவரை நெருங்கமால் கண்காணித்தால் சரி என்ற முடிவில் இருந்தார் .படப்பிடிப்பு முழுக்க மும்பைதானே என கேட்க இயக்குனர் பி ஆர் சோப்ராவோ முதலில்  ஆமாம் என சொல்ல முதலில்  ஒத்துக்கொண்டார்  ஆனால் பி ஆர் சோப்ராவுக்கோ மும்பையில் லொக்கேஷன் அமையவில்லை   படப்பிடிப்பை மத்திய பிரதேசம் குவாலியரில் நடத்த திட்டமிட்டுவிட்டார் .

 

இதனிடையே மொத்த குழுவும்  படப்பிடிப்புக்குப்போய்விட்டது .மறுநாள் வரவேண்டிய மதுபாலா மட்டும் வரவில்லை. பி ஆர் சோப்ரா வுக்கு கடும் கோபம்  . விசாரித்த போது இன்னொரு படப்பிடிப்புக்கு போய்விட்டதகா தெரியவர படத்திலிருந்து மதுபலாவை உடனே நீக்கிவிட்டு வைஜயந்தி மாலாவை ஒப்பந்தம் செய்து உடனெ ஸ்பாட்டுக்கு வரவழைத்து  விட்டார் ..

 

இது அதுல்லாகனின் ஈகோஒவை உசுப்பிவிட பி ஆர் சோப்ராமீது வழக்கு போடுவேன் என பேட்டிகொடுக்க சோப்ரா உண்மையிலேயே மதுபாலா மீதும் அவர் தந்தை மீதும் வழக்கை போட்டுவிட்டார் வழக்கு கொர்ட்டுக்கு வந்தது . இப்போது அதுல்லாகானுக்கோ  திலீப் மகளின் காதலர் அதனால் தனக்கு சாதகமாக பேசுவார் என எதிர்பார்த்திருப்பார் போலிருகிறது . ஆனால்நேர்மையும் பிடிவாத குணமும் கொண்ட திலீப் கோர்ட்டில் பேசும்போது சொன்ன வார்த்தைகள் தான் இலக்கியம்

 

நான் மதுபாலாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் அது எவ்வளவு உண்மையோ அது போல இதில் அதுல்லாகான் படபிடிப்புக்கு ஒத்துக்கொண்டு பணம் வாங்கியதும் வராததும் குற்றம்  என பகிரங்கமாக சொல்லிவிட  அதுல்லாகனுக்கு அதிர்ச்சி

பிற்பாடு இந்த வழக்கல மதுபலாவுக்கு பிரச்னை வரும் என தெரிந்தவுடன் திலீப் வேண்டுகோளின் பேரில் அந்த வழக்கை பி ஆர் சோப்ரா வாபஸ் வாங்கிக்கொண்டார்

ஆனாலும் இது அதுல்லாகானுக்கு பயங்கரமான அதிர்ச்சியையும் அவமானத்தையும் கொடுத்துவிட்டது .

பத்தான் முஸ்லீம்களுக்கே உரிய ஈகொ வும் பிடிவாதமும் அதுல்லாகானை உசுப்பி விட்டது . திலிப்பை பழி வாங்க முடிவெடுத்தார்

 

தன்னிடமிருந்த  ஒரே ஆயுதம் மகள் மதுபலா.

 

அவருக்கு தெரியும் மதுபாலாவும் திலீப்பும் மீண்டும் சந்தித்துக்கொண்டால் அவர்கள் திரும்பவும் காதலித்துவிடுவார்கள் மகளைத்தான்  பிரியவேண்டியதிலிருக்கும் அதனால் இனி மகளை திலீபின் கண்களுக்கே காட்டக்கூடாது என முடிவெடுத்தார்

 

இந்த இருவர் பிரச்னையில் சிக்கியவர் ஆசிப் தான் முகல் ஈ ஆசாம் அவருடைய  மிகப்பெரிய கனவு . அதை மட்டும் உருவாக்கிவிட்டு இறந்தும் கூட போகலாம் என்பது அவருடைய எண்ணம் அப்படித்தான் நடக்கவும் செய்தது . அந்த ஒரு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் அவர் பதினெட்டு வருடம் உயிர் வாழ்ந்து இன்னொரு படம் எடுக்கமாலேயே உயிரிழந்தார்

 

அதனால் கனவை நிறைவேற்றவேண்டி மதுபலாவின் தந்தையிடம் நடையாக நடந்தார் அதுல்லாகான்  பிடிவாதமாக மறுத்துவிட்டார் . இனி என் மகள் திலீப்குமாருடன் நடிக்கமாட்டார் நீங்கள் வேறு நாயகியை வைத்து படமெடுங்கள் என முகத்திலடித்தார் போல கூறிவிட்டார் . ஆனால் ஆசிப்புக்கொ பெரிய ப்ரசனை மீண்டும் அப்படி ஒரு செட் போட்டு திரும்ப எடுக்க முடியாது . இன்னும் குறைவான நாட்கள் தான் அதனால் எவ்வளவோ கெஞ்சினார் ஆண்டுகள் ஓடின மதுபலா பல படங்கலீல் நடித்தார் ஆனல் மொகல் ஈ ஆசமுக்கு மட்டும்  கால் ஷீட் கொடுக்கவில்லை

 

ஆறேழு வருடங்கள் இயக்குனர் ஆசீப் நடையாக நடந்தார். இறுதியில்  அதுல்லாகான் மனம் மாறினார். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டார் . இருவரும் நேருக்கு.நேர்.பார்க்கவே கூடாது என சத்தியம்  கேட்ட்டார் . ஆனால் படத்தில் பல காட்சிகள் அப்படி இருந்தன ஆனாலும் வேறு வழியில்லாமல் சத்தியம் செய்து ஒத்துக்கொண்டார்.

 

 மதுபாலாவுடன் படப்பிடிப்புக்கு வந்தார்.  அவருக்கும் திலீப்பை பார்க்கும் ஆவல். அப்பாவின் த்டைக்கு கட்டுப்ப்ட்டாலும் அவரிடம் அந்த காதல் அப்படியே இருந்தது .   பல நாட்கள் கழித்து பார்க்கப்போகும் எதிர்பார்ப்பு அது போல திலீப்புக்கும்  உள் மனதில் பல வித ஏக்கங்கள்

படபிடிப்பின் வெவ்வேறு இடங்களில் இருவரும் தனித்தனியாக அறையில் காத்திருந்த்னர் . அதுவரை மற்ற காட்சிகள் எல்லாம் இருவரையும் தனித்தனியாக எடுத்துவிட்ட ஆசாஇப் ஒரு காட்சியை மட்டும் அவரால் அப்படி எடுக்க முடியவில்லை. அது மதுபாலாவை திலீப் குமார் அறையும் காட்சி.  அதுல்லாகானிடம் எப்படியோ  அனுமதியும் வாங்கிவிட்டார் ஆசீப் .

 

இருவரும் வரவழைக்கப்பட்டனர் உண்மையில் அவர்கள் அந்த கணத்தை எதிர்பார்த்து என்னன்னவோ கனவுகள் கண்டிருக்ககூடும்  மனதுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்ககூடும் . ஆனால் படப்பிடிப்பில் பலர் மத்தியில் தாங்கள் அப்படியில்லை என காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயம்  நெருக்கடி. திலீப் எப்போதுமே உணர்ச்சியை கட்டுக்குள் வைத்திருப்ப்வர் . அவர் நடிப்பே அவர் குணம் .ஒரு மில்லிமீட்டர் கூட அளவுமாறாமல்கட்டுக்கோப்பாக உடலில் நடிப்பை வெளிப்படுத்தும் பண்பட்ட நடிகர் . ஆனால் அன்று அந்த காட்சியில் அவர்முற்றாக நிலையிழந்தார் . மதுபாலா அவரை பொருட்படுத்தாத தோற்றம் பாவனை அவரை கோபபப்டுத்தியிருக்க வேண்டும் . அடிக்கும் டேக் இருவரும் எதிரெதிர் நிறுத்தப்பட காமிரா ஆனானது அடுத்த  நொடி மதுபாலா தரையில் விழுந்தார் அறை அவ்வளவு  உக்கிரமாக மதுபாலாவின் கன்னத்தில் விழுந்ததுதான் காரணம்

 

தகவல் கேள்விப்பட்டு அதுல்லாகான் ஆசிப்பை கடிந்துகொண்டாலும் ஒருபக்கம் மகிழ்ச்சி மகள் இனி திலீப்பை நிரந்தரமாக  வெறிக்கப்போகிறாள் என நினைத்தார்

 

இந்த இடைப்பட்ட நாட்களில் மதுபாலாவுக்கு காச நோய் பீடித்தது. 1948ல் துவங்கியபடப்பிடிப்பு 1960ல் தான் முடிந்து ரிலீஸ் ஆகியது.  இந்தியாவில் அதிக வருடங்கள்  தயாரான ஒரே படம் இதுதான்.  ஆசிபின் உழைப்பு வீண் போகவில்லை இந்தியாவின் முதல் பிரம்மாண்ட வெற்றிப்படம் என பேர்வாங்கியது. இதன் சாதனை 15 வருடம் கழித்து ஷோலே தான் முறியடித்தது. இன்றுவரையும்.இந்தியவிண் மிகச்சிறந்த காதல் படம் இது தான் அது போல இந்தியில் இதுவரை வந்த படங்களில் அனைவராலும் சிறந்தபடம் என ஏகமனதாக போற்றப்படும் படமும் இது மட்டும் தான் படம்  ரிலீசான.சில நாளில் மதுபாலாவின் அப்பா இறந்தார் . என்ன காரணமோ மதுபாலா பிற்பாடு பாடகர் கிஷோர்குமாரின் நான் காவது மனைவியாக திருமணம் செய்து சில வருடங்களில் இறந்தும்.போனார். அது வரை கல்யாணம் செய்யாத பேச்சிலராகவே 45வயது வரை வாழ்ந்த  திலீப் சாய்ராபானுவை  திருமணம் செய்துகொண்டார் 97 வயதிலும் இன்றும் காதலனாக வாழ்ந்து வருகிறார்.

 

July 10, 2017

சாதி, விளையாட்டு மற்றும் தமிழ் சினிமா (அ) மெட்றாஸ் திரைப்பட விமர்சனம்

(படம் வெளியானபோதே எழுதிவிய விமர்சனம் இது.. இப்போதுதான் கண்ணில் பட்டு பதிவாகிறது)





சமீபத்தில் வெளிவந்த 'ஜீவா'வும், 'மெட்ராஸ்'சும் தான் தமிழ் சினிமாவிற்கு முழுமையான வெள்ளியினை அளித்தது. 'ஜீவா'வில் இதுவரை இந்திய சினிமாவே கையாண்டிடாத கிரிக்கெட் அரசியலை தைரியமாக சுசீந்திரன் பறைச்சாற்றி இருந்தது படத்தை ஈர்க்கச் செய்தது. அவரது முதல் படமான
வெண்ணிலா கபடிக்குழுகூட  சாதியையும் விளையாட்டையும்  இணைத்து பேசியது. இன்னும் சொல்லப்போனால் நேரடியாக சாதிகுறித்து துணிச்சலாக பேசிய தமிழின் முதல் படம் என்றும் கூட சொல்லலாம் . அதே பாணியில் மீண்டும்  கிரிக்கெட்டை வைத்து  சாதி ப்ரசனையை கையிலெடுத்து துணிச்சலாக  அடித்து ஆடியிருக்கிறார் ,'அவர் என்ன தட்டி பார்த்தார்ன்னு நெனச்சேன் ஆனா தடவி பார்த்தார்ன்னு அப்புறம் தான் தெரிஞ்சது' என்று சாதி அரசியலை நாகரிக வார்த்தைகளால் சவுக்கினால் அடித்த சந்தோஷின் வசனங்கள் ஜீவா படத்தின் ஜீவனாக இருந்தது.
இதே போல விளைய்யடடையும் சாதியையும் ஒன்றிணைத்து சமீபமாக வந்திருக்கும் இன்னொருபடம் மெட்றாஸ். 'மெட்ராஸ்'  ஒரு சண்டைப்படம், த்ரில்லர் வகை என்பதை தாண்டி அதற்கென சில சிறப்புகள் உண்டு .
கால்பந்து ஆட்டத்தையும் வட சென்னையும் ப்ரிக்க முடியாது. வடசென்னை இளைஞர்கள் வாழ்வில் கேரம்போர்டும் கால்பந்து ஆட்டமும் வாழ்வின் ஒரு பகுதி .
தமிழ் சினிமா இதுவரை கண்டிடாத வாழ்வியல் பதிவேடுகள் பல 'மெட்ராஸ்'ஸில் அழகாக இழைக்கப்பட்டிருந்தது. வெகு நாட்கள் கழித்து உருப்படியான சினிமாவை பார்த்த திருப்தியை 'மெட்ராஸ்' அளித்தது.
அட்டக்கத்தி படத்தில் எதார்த்தமாக அமையப்பற்றிருந்த புற சென்னை வாசிகளின் வாழ்வியல் பதிவேடு ‘மெட்ராஸ்’ மீது ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
இந்த எதிர்ப்பார்ப்பு அனைத்தும் படம் தொடங்கிய முதல் பத்து நிமிடங்களிலே பூர்த்தி செய்யப்பட்டது. இதற்கு முதல் காரணம் ‘சென்னை வட சென்னை’ பாடல் தான் இதுவரௌ பார்க்காத புதிய சென்னையை அந்த ஒரு பாடலில் நிகழ்த்தியபோதே படம் நம்மை ஆட்கொள்ளதுவங்கிவிட்டது.
பொதுவாக ‘மதுரை என்றாலே வெட்டுகுத்துக்களின் பிறப்பிடம் என்பது போலவும்; நார்த் மெட்ராஸ் என்றால் களவுகளின் பிறப்பிடம், வன்முறையின் பிறப்பிடம் என்பது போன்றும் தமிழ் சினிமா வழக்கமாக பதிவு செய்திருந்தது. அது முதல் முறையாக உடைக்கப்பட்டது.. .
சரி அப்போ ‘மெட்ராஸ்’ வன்முறையை பதிவு செய்யவில்லையா? சுப்ரமணியபுரம், பட்டியல், புதுப்பேட்டை, பொல்லாதவன் போன்ற படங்களிலிருந்து மெட்ராஸ் எப்படி விலகி நிற்கிறது என்று கேட்கலாம்? மெட்ராஸ் இப்படங்களிருந்து விலகி நிற்பது இப்படத்தில் அமைந்துள்ள அரசியல், வாழ்வியலினால் தான்.
புதுபேட்டையில் செல்வராகவன் துவக்கி விட்டது நார்த் மெட்ராஸ் என்றாலே கெட்டக்கெட்ட வார்த்தைகளை திரையில் திணிப்பது, பெண்களை இழிவாக ஏசுவது, வன்முறையின் வக்கிரத்தை தொடுவது இப்படித் தான் நார்த் மெட்ராஸ் என்பது போல் அப்படம் வடிவமைத்தது. புதுபேட்டையால் இன்ஸ்பயர் ஆகிய குறும்பட இயக்குனர்களின் படைப்புகளில் திணறடிக்கும் அளவிற்கு கெட்டவார்த்தைகள் திணிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். மேலும் நார்த் மெட்ராஸ் மக்களுக்கு கத்தி, குத்தினை விட்டால் பிழைப்பதற்கு வேறு புழப்பு கிடையாது என்பது போலத் தான் அப்படைப்புகள் பதிவு செய்திருந்தன.
இந்த போலியான பிம்பத்தை தகர்த்தெறிந்த படம் ‘மெட்ராஸ்’ என்று அடித்துக் கூறலாம். முதற் காட்சியிலே ‘நீ என்னவாகப் போகுற என்று கேட்பவரிடம் நான் கலெக்டர் ஆகப் போறேன்’ என்று குழந்தை கூற ‘கலெக்டராகி?’ என்று கேட்க ‘சமுதாயத்துக்கு நல்லது செய்வேன்’ என்று மழலை மாறாது பேசும் அக்குழந்தையின் பேச்சிலே டெம்ப்ளேட் தகர்த்தெறியப்படுகிறது.

என் மகன் ரொனால்டோ மாதிரி ஒரு புட்பால் பிளேயர் ஆவான்டி என்று கூறும் அப்பன், தெருவெங்கிலும் வெஸ்டேர்ன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், கம்யூனிச புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கும் நாயகன், அப்பாவுடன் இணைந்து உரிமைக்காக போராடும் மகள் இப்படி  பல உயிருள்ள பாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக நம்மை  வசீகரிகின்ற்ண .
அதிலும் இரண்டு காட்சி மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இரண்டுமே இரண்டு ஹவுசிங் போர்டு வீட்டினுள் ந்டப்பது.  ஒன்று கார்த்தியின் வீடு மகனுக்கு பெண் பார்க்க போவதுபற்றி அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்ளும் காட்சி அந்த குட்டி சதுர் அறைக்குள் உறவுகலீன் உயிரோட்டமான் வாழ்க்கை இதற்குமுன் எந்த படங்களிலும் பார்த்திராதது. அதற்கு முக்கிய காரணம்  காட்சியில் அறையின் இயல்பான தோற்றம் மற்றும்  நடிகர்கள் தன்னியல்பான உடல் பாவ வெளிப்பாடு .இவையிரண்டுக்கும்பக்க பல்மான உரையாடல் மற்றும் இயல்பான ஒளிப்பதிவு

இன்னொரு காட்சி கலையரசன் ரித்விகா வீட்டினுள் .அவர்களது இருவரது உறவும் ஊடலும் அவ்ற்றினூடே கார்த்தி வந்து செல்லும் நிமிடங்களும் . இத்த்னை உயிரோட்ட்மான காட்சியமைப்பை பார்த்து வெகுநாட்களாகிவிட்டன
இந்த இரண்டு காட்சிகளுமே போதும்  ப்டத்தில் இயக்குனரின் திறமையை அளவீடு செய்ய .
கார்த்தி, காத்ரீன் தெராசவின் பார்வையில் கிறங்கி காதல் வயப்பட்டு நடக்கின்ற காட்சியின் பின் புறத்தே குடத்தை தூக்கிப் போட்டு காட்ச் பிடிக்கும் காட்சியை வைத்தததிலும், சேகுவேராவின் படம் போட்ட சட்டையை அடிக்கடி அணியும் கார்த்தி, நண்பன் கலையரசனிடம் அந்த ‘சவுத்த இடிச்சா பிரச்சனை தீர்ந்திடுமா? இல்லை மச்சி உன்கிட்ட நல்ல நோக்கம் இருக்கு ஆனா தெளிவான அரசியல் சிந்தனை இல்லை’ என்று பேசும் இடத்திலும் ரஞ்சித் சாதுர்யமாக அரசியலை நுழைத்திருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்கு அதிகாரம் வளைந்து போவதையும், கண்டுகொள்ளப்படாது ஒடுக்கப்படும் எதார்த்த மக்களின் வாழ்வையும் பதிவு செய்கிறார்.
ஜானி நல்லா பார்த்துக்கோ அடுத்தது இவன் தான் ‘அரசியலில் அடிமைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அடிமைகள் அழிவது முக்கியமல்ல அரசியல் தான் முக்கியம் பாலிடிக்ஸ்’ என்று ஜானி பேசும் சுருக்சுருக் வசனங்களில் எல்லாம் ரஞ்சித் சிக்ஸர் அடித்திருப்பார்.
தன் காதலன் பழிதீர்த்திட துடிக்கும் போது பயந்திடும் காதலி அதே காதலன் முதலாளித்துவத்தை எதிர்க்ககையில் மக்களோடு மக்களாக சேர்ந்து கைதட்டி, நான் எதுக்கு பயப்படனும் நீ என்ன தப்பு செஞ்ச? என்று பேசும் போது அச்சமூகத்தினர் பெற்றுள்ள அச்சமற்ற தெளிவான அரசியல் சிந்தனைகளை பதிவு செய்துள்ள விதத்திலும் ‘மெட்ராஸ்’  நல்ல சினிமாவிற்கான அங்கீகாரம் பெறுகின்றது. 
வன்முறையின்றி சாதிப் பிரிவினை, முதலாளித்துவத்தை வேறோடு அறுப்பதற்கு குழந்தைகளுக்கு கல்வியோடு வாழ்வியல் அரசியலும்
கற்றுத்தரப்பட வேண்டும் என்று அம்பேத்கர் படத்தின் கீழ் நின்று கார்த்தி பேசும் வசனம் படத்திற்கு தெளிவுற முடிவினை அளிக்கின்றது.

இத்தனை தெளிவாக நினைத்தவற்றை திரையில் திணிக்காமல் திரைக்கதையில் அழகாக குறியீடுகளாலும், நேரடியாகவும் தன் பார்வையையும் தெளிவாக உரைத்திருந்த பா.ரஞ்சித் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக முக்கிய இயக்குனர். 
இன்னும் பல காரணங்கள் கூறலாம் ஏன் மெட்ராஸ் ஒரு உன்னத சினிமா என்பதற்கு.

பாப்லோ நெருடா வாழ்வும் கவிதைகளும்

காதல் இயற்கை புரட்சி மற்றும் வெங்காயம்                                               - அஜயன் பாலா பாப்லோ நெரூடா ( Pablo Neruda, 1904–1...