October 10, 2020

குருதத் : கனவில் எரிந்த கலைஞன்

குருதத் : கலையால் எரிந்த  கனவு



 56 வருடங்களுக்கு முன் 1964ல் இதே அக்டோபர் 10ம் நாள் இந்திய ஊடகங்களில் பரபரப்பான அந்த செய்தி வந்தடைந்து அனைவரது இதயத்தையும் தீயால் கருகச்செய்தது.  . குருதத் எனும் மகத்தான கலைஞன் மும்பையில் தன் வாடகை வீட்டில்  தற்கொலை செய்து கொண்ட தகவல்  அது.ர்.

39 வயதேயான குருதத்தின் மனைவி கீதாதத்  மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள்  . அந்த நாளில் அவரைப்பிரிந்து கீதா துயரத்தில் இருந்தனர் .

இன்று உலகமே குருத்த படங்களை கொண்டாடுகிறது . பியாசா தான் இன்றும் இந்தியாவின் சிறந்த தரமான  வணிகப்படமாக கருதப்படுகிறது உன்னதமான .காதல் திரைப்படம் என்றாலே பியாஸாதான் . வெண்ணீற இரவுகள் , ரோமியோ ஜுலியட்  போல இலக்கிய காதல் கதைகள் உண்டாக்கிய தாக்கத்துக்கும் சாப்ளினின் சிட்டி லைட்ஸ் திரைப்படமாக உருவாக்கிய தாக்கத்துக்கும்  சற்றும் குறைவில்லாதது பியாஸா .

முதல் முறையாக் பியாஸா படத்தை  பார்த்துவிட்டு  மனம்  என் கை நழுவிபோவதை அறிந்து பாதியிலேயே  படத்தை நிறுத்திவிட்டேன் . என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை

இப்படிப்பட்ட படம் இயக்கிய  இந்தியாவின் மகத்தான படைப்பாளியான் குருதத் வாழும் போது  எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை .அன்று பியாசா படுதோல்விப்படம்.   .

துவக்கத்தில் குருதத் வாழ்க்கையும் தொடர் வெற்றிகளால் பிரகாசித்தது   பாஸி, ஜால் , சிஐடி ,ஆர் பார் என வரிசையாக வெற்றிப்படங்களாக கொடுத்தார் . ஆனால் அந்த அவரது இயக்கம் பல  வன்ணப்படங்களின் வருகையால்  ஆட்டம் கண்டது. அழுத்தமான கதைகளுக்கும் எதார்த்த சித்தரிப்புகளுக்கும் வரவேற்பு குறைந்து  பொழுது போக்கு அம்சங்கள் அதிகமுள்ள படங்கள் வரவேற்பு பெற்றன. அவரது சம காலாத்தவரும்  சக போட்டியாளருமான  ராஜ் கபூர் இதை அறிந்து தன் படங்களில் நாயகிக்கு ஆடைகளை குறைத்து   இந்திய மனங்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்தார் . அவர் படங்களில் நாயகி அழும் போது   கூட  கவர்ச்சியாக உடை உடுத்தி  அதிகமாக உடல் பாகங்களை வெளிப்படுத்தி அழுவார் . நம் ஊர் குடும்ப பாங்கான பாத்திரத்துக்கு புகழ்பெற்ற பத்மினியையே  அவர்  சித்தரித்த விதம் கண்டு பல தமிழ் ரசிகர்கள் இதயம் பிளவுண்டது ‘

ஆனால் ராஜ் கபூரின்  இந்த சூட்சுமத்தை குருதத்  செய்யத்துணீயவில்லை . அழுத்தமான காதல் கதைகளும் நேர்த்தியான தொழில் நுட்பமும் என்ற அவரது சினிமா ரசனை  வியபார ரீதியாக தோல்வி கண்டது.  பியாஸா வை தொடர்ந்து காகஸ் கீ  பூல்  ஷாகித் பீபி அவுர் குலாம்  போன்ற படங்கள் சுமாரான வெற்றி பெற்ராலும் பியாஸாவால் உண்டான  கடனை அடைக்கும் அளவுக்கு அவரால் பணம் ஈட்ட முடியவில்லை

இதன் நடுவே தான் அவர் வாழ்க்கையில் புயல் ஒன்று நுழைந்தது  

அந்தப்  புயல் வஹீதா ரஹ்மான் . நம் தமிழ்நாட்டில்  செங்கல்பட்டில் பிறந்தவர். ஹேமம்மாலினிக்கு முன்பு இந்தியில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய முதல் நாயகி .   எம் ஜி ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும்  படத்தில் அறிமுகமாகி பின் அப்படியே மும்பைக்கு சென்றார்.  . அப்போது சிஐடி  படத்தை துவக்கியிருந்தார் குருதத் .அப் படத்தில்  நடிக்க வாய்ப்பு கேட்டு குருத்தை சந்திக்க சென்றார் . அந்த பட வாய்ப்பு  வஹீதாவை நடசத்திரமக்கியது  

வஹீதா அப்படி ஒன்றும் அழகில்லை .ஆனாலும் அவரிடம் ஒரு அபரிதமான் கவர்ச்சியும் அழகும் பொங்கி வழிந்தது .  காமிராவுக்கும் வஹீதாவுக்கும் கெமிஸ்ட்ரி அற்புதமாக அமைந்தது .  தொடர்ந்து குருதத்துடன்  சேர்ந்த  படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன  குருதத்தின் இதயம் வஹிதா வசம் முழுமையாக சிறைபட்டது . கணவனின் காதல் போக்கு அறிந்த கீதாவும் வேறு வழியில்லாமல்  குடும்பத்தை காப்பற்ற மீண்டும் திரையுலகில்  பாட முடிவு செய்தார்

 ஆர் டி  பர்மன் அப்போது ஒரு புதிய பாடகியை லதா மங்கேஷருக்கு ஒரு மாற்றாக உருவாக்க நினைத்து கீதாவை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்

ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த  கீதாவின் குரல் அன்று பர்மன் எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியவில்லை .ஆனாலும் ஆர் டி பர்மன விடாமல் முயற்சித்தார் .

]

 குருதத்  காதலி வஹீதா ரஹ்மான் மனைவி கீதாதத் ஆகியோருடன் 

இதனிடையே  இதை அறிந்த லதா மங்கேஷ்கர் தன் தங்கை ஆஷாபோன்ஸ்லேவை அனுப்பி ஆர் டி பர்மனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வைத்தார்

இந்த வெறுப்புகளால் கீதா கணவனை விட்டு முழுமையாக பிரிந்தார்

ஒருபக்கம் தனக்காக தன் திறமையையே தியகம் செய்து குடும்பத்துக்காக அர்ப்பணித்த  காதல் மனைவி கீதா   மற்றும் குழந்தைகள் இன்னொருபக்கம் சினிமா எனும் கலை வஹீதாவின் மாயச்சிரிப்பு \

 பாழும் கலைஞனுக்கு அதீத இதயத்தையும் உச்சமான ரசனையையும் கொடுக்கும் இயற்கை  இன்னொருபக்கம் அவன் அதை அனுபவிக்காதபடி  நடைமுறை வாழ்வின் அனைத்து விதிகளையும் அவனுக்கும் சமமாக கொடுத்து  கால்களை பூட்டி விடுகிறது .

ஒருபக்கம் மனம் காதலால் இழுக்க இன்னொருபககம் குடும்ப நியமம் அவன் கால்களை இழுக்க அவன் எந்த பக்கமும் போக முடியாமல் இரண்டுக்குமிடையே குருதத் சிக்கித்தவித்தார்  இதிலிருந்து தப்பிக்க அவருக்கு உதவியது மதுபோத்தல்கள்  . தினமும் அதீத குடியும் சிகரட்டும் தூக்க மாத்திரையும் அவரை அலைக்கழித்தன

இப்படியான சூழலில்தான்  அவர் தயாரித்த படங்கள் தொடர் தோல்வி அடைந்து நிலைமை முன்னிலும் மோசமனாது   சொத்துக்கள் பறிமுதல் ஆனது . வீடுகள் இழந்து வாடகை வீட்டுக்கு வந்தனர்.

 இன்னொருபககம் வஹிதா தொடர் வெற்றியால் புகழ் உச்சிக்கு சென்றார் . அவராலும் குருதத்தின் காதலை ஏற்க முடியவில்லை . காரணம் கீதாவும் அவர்களது குழந்தைகளும் அவருக்கும் நெருக்கம் . தன்னால் இன்னொரு பெண்னின் வாழ்க்கை பாழாவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

இதனால்  குருத்தை தவிர்த்தார்  இப்போது குருத்துக்கு யாரும் இல்லை

மனைவியும் குழந்தைகளை பார்க்க அனுப்ப மறுத்துவிட்டார்

ஒரே ஒருவர் அவருக்கு ஆறுதலாக இருந்தவர்

அப்ரார் ஆல்வி . அவரது எல்லா படங்களுக்கும் அவர் தான் கதையாசிரியர்

அவர் மட்டும் அவ்வபோது அவர் குடியிருப்புக்கு வந்து  போவார் . அன்று குருதத் அவரிடம் ராஜ் கபூர்  கால்ஷீட்தந்துள்ளதாகவும் மீண்டும் படம் தயாரித்து கடனை அடைக்கப்போவதாக மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் . பட வேலைகள் மும்முரமாக துவங்கின ஆனால் என்ன காரணத்தாலோ ராஜ் கபூர் பட்ப்பிடிப்புக்கு வரவில்லை அன்று மாலை அப்ரார் ஆல்வி அவர் குடியிருப்புக்கு சென்ற போது இன்னொரு காரணமும் அப்ரார் ஆல்விக்கு தெரிய வந்தது .  தான் குழந்தைகளை பார்க்க விரும்பியபோது மனைவி அனுப்ப மறுத்துவிட்டதை சொல்லி குருதத் மீண்டும் அதிகமாக குடிக்கத்துவங்கியிருக்கிறார்

மறு நாள் கீதா குழந்தைகளுடன் குருத்தை இறந்த நிலையில் தான் பார்க்க முடிந்தது. கடைசி வரை அவர் வாய் கீதா கீதா என்றே சொல்லிக்கொண்டிருந்தாக சாகும் தருவாயில் அருகிலிருந்தவர்கள் பதிவு செய்துள்ளனர் .

குருதத் படத்தின் புகழ் பெற்ற பாடலொன்று  கீதாதத் பாடியிருப்பார் .

ககஸ் கீ பூல் படத்தில் வரும் Waqt Ne Kiya Kya Haseen Sitam -  

எனும் அப்பாடல்  இருவருக்காகவும் எழுதப்பட்டது போலவே இருக்கும் அதன் வரிகள்

வசீகரமான அநீதியை வாழ்க்கை நம்மீது சுமத்திவிட்டது

என்னில் நான் இல்லை

உன்னிலும் நீ இல்லை       

] ஒரு பாதையில் இருவரும் சந்தித்தோம்

இணைபிரியாத ஜோடிகளாய் வாழ்வை துவக்கினோம்

சில அடிகள் கடக்கும் முன்பே

ஏனோ அந்த பாதை பாதியில் அறுந்துவிட்டது

பாதியில் முடிந்துவிட்டது

பிறகு கணவனை மறக்க கீதாவும் குடியில் வீழ்ந்து 1972ல் வாழ்வை முடித்துக்கொண்டார்

 ajayan bala 

10/10/2020

 

 

 

 

 

 


No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...