April 29, 2026

ஆசிரியர்கள் ஏன் உலக சினிமாவை பார்க்க வேண்டும்?

-அஜயன் பாலா எழுத்தாளர் & இயக்குனர் உலக சினிமா என்றால் என்ன ? உலகில் மற்ற நாடுகளில் எடுக்கும் சினிமாக்கள் எல்லாம் உலக சினிமாக்களா? அப்படி இல்லை .. அப்படியானால் எது உலக சினிமா ? இதோ இங்கே உங்களுக்காக சிறிய விளக்கம் சினிமா என்றாலே நம் நாட்டில் பொழுது போக்கு அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது . ஆனால் சினிமா என்ற கலை உருவானதன் நோக்கம் அதுவல்ல இசை, நடனம், ஓவியம், நாடகம் போன்றதும் இவையனைத்தும் சேர்ந்ததுமான கலைவடிவம் தான் சினிமா . எப்படி மேற் சொன்ன கலைகளுக்கெல்லாம் அதை தீர்மானிக்க கூடிய விதிகள் உள்ளனவோ அது போல சினிமா எனும் கலைக்கும் விதிகள் உண்டு. அப்படிப்பட்ட அந்த கலைக்கான அடிப்டைகளை ஆதாராமாக் கொண்டு உருவாக்கப்ட்டதும் அதேசமயம் இது நாள் வரையிலான மனித குலத்தின் நன்மை தீமைகளை பேசுவதாகவும் எதிர் கால மனித சமூகத்தை உன்னத நிலைக்கு அழைத்துச்செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்படும் படங்களே உலக சினிமாக்கள் அது எந்த நாடு எந்தமொழியில் எடுக்கப்ட்டிருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் பார்க்கும் விதமாக உருவாக்கம் கொண்டிருந்தால் உலகசினிமா வாக கருதப்படும் அப்படி எடுக்கப்படும் ஒரு திரைப்படம் நூறு நல்ல நூல்களை படிப்பதற்கு சமம் என லெனின் கூறுகிறார் . அப்படிப்பட்ட சினிமாக்களை ஒருவர் பார்க்கும் போது அவரது ஞானம் விரிவடையும் எண்ணத்தில் புதிய சிந்தனைகள் தலைப்படும் . அதன் வழி அவர்கள் வாழ்க்கையும் வெளிச்சமுறும் . அதுவே ஒரு ஆசிரியர் இந்த சினிமாக்களை பார்க்கும் போது அவர்களோடு எதிர்கால சமூகமே வெளிச்சம் பெறுகிறது எப்படி சிறு மதகு ஊரையே செழிப்பாக்குகிறதோ அது போல ஆசிரியர்கள் வழியே ஒரு நாடே வெளிச்சம் பெறும் அவ் வகையில் திரைப் பட மேதை சார்லி சாப்ளின் இயக்கிய தி கிட், சிட்டி லைட்ஸ் , சர்க்கஸ் போன்ற படங்கள் நூறு வருடங்களை கடந்தும் இன்றும் உலகம் முழுக்க கோடிக்கணக்காண குழந்தைகளுக்கு யாரும் கொடுக்க முடியாத மகிழ்ச்சியையும் நல்ல சிந்தனைகளையும் ஊட்டி வருகிறது 1917 இல் எடுக்கப்பட்ட உலக சினிமாவான பைசைக்கிள் தீவ்ஸ் என்ற இத்தாலிய திரைப்படம் ஆயிரம் இலக்கிய நூல்கள் கூட உருவாக்க முடியாத நல்லுணர்ச்சியை மனித மனங்களில் எழுப்பி இன்னமும் பல சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் பணியை செய்து வருகிறது இன்று ஆசிரியர்களின் மிகப் பெரிய சவாலே கட்டுப்படுத்த முடியாத குழந்தைகள் தான் . குழந்தைகளின் அக உலகம் செயல்படும் விதம் பற்றிய இதற்கு மிக முக்கிய காரணம் . அதே சமயம் ஈரானிய சினிமாக்கள் காட்டும் குழந்தைகளின் அக உலகம் நமக்கு வியப்பூட்டுகிறது. சில்ரன் ஆப் ஹெவன் என்ற ஒரு ஈரானிய திரைப்படம் வந்த பின் தான் உலகமே குழந்தைகளின் அக உலகம் இயங்கும் விதத்தைக் கண்டு கூடுதல் அக்கறையுடன் அவர்களை கவனிக்கத்துவங்கியது இப்படியான உலக சினிமாக்களை காணும் ஒரு ஆசிரியர் நிச்சயம் மாணவர்களின் மனதில் ஒரு நாயகனாக வலம் வருவார் . அது போல சீன திரைப்படமான நாட் ஒன் லெஸ் , மற்றும் ஈரானிய படங்களான , கலர் ஆப் பேரடைஸ் , வேர் ஈஸ் மை பிரன்ட்ஸ் ஹோம் , மற்றும் பிரெஞ்சு திரைப் படமான ரெட் பலூன் , 400 ப்ளோஸ், இத்தாலிய திரைப் படமான லைம். ஈஸ் பியூட்டிபுல் இந்தியாவில் சத்யஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி போன்ற திரைப் படங்கள் குழந்தைகளின் அக உலகம் சார்ந்த சில ஆகச்சிறந்த உலக் சினிமாக்கள் இந்த படங்களை ஆசிரியர்களும் குழந்தைகளும் சேர்ந்து பார்க்க சிறந்த திரைப்படங்களாகும் . வெறுமனே குழந்தைகளின் உலகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வரலாறு அவற்றின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் மானுடவியல் போன்ற பல அம்சங்களை உலக சினிமாக்கள்: நமக்கு கற்றுத்தருகின்றன இரண்டாம் உலகப்போர் உலகில் உண்டாக்கிய அழிவை இலக்கியங்களை விட உலக சினிமாக்களே அதிகம் பதிவு செய்துள்ளன . டேவிட் லீன் இயக்கிய லாரன்ஸ் ஆப் அரேபியா, பிரிட்ஞ் ஆன் தி ர்வர் க்வாய் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல் பெட்க் இயக்கிய ஷின்லர்ஸ் லிஸ்ட் சேவிங் பிரைவேட் ரயான் மற்றும் ருஷய் படமான் தி கிரேன்ஸ் ஆர் ப்ளையின் மற்றும் கம் அண்ட் சீ போன்ற படங்கள் போரினால் உண்டான அவலத்தோடு இரண்டாம் உலகபோர் நடந்த காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச்சென்று விடுகின்றன இப்படி வரலாறு மட்டுமல்லாமல் ஒரு நாட்டின் பண்பாடு கலாச்சாரம் அவர்கள் உணவு உடை போன்றவற்றையும் உலகசினிமாக்கள் நமக்கு கற்றுத்தருகின்றன உதாரணத்துக்கு சீனா பற்றியோ ஜப்பன்பற்றியோ வகுப்பில் பாடம் எடுக்கும் போது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கூடுதலான தகவல்களுடன் அவர்களுக்கு புரியும் வகையில் பாட எடுக்க முடியும் ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனர் அகிராகுரசேவாவின் திரைப்படங்கள் அழுத்தமான மனதின் உணர்வை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தாலும் இன்னொரு புறம் அவை ஜப்பானின் கலாச்சராத்தையும் பண்பாட்டையும் உலகம் முழுக்க கொண்டு சென்றன. அது போல ஆஸ்கார் விருது வென்ற லாஸ்ட் எம்பரர் எனும் திரைப்படம் சீன நாட்டின் நூறு வருட வரலாற்றை மூன்று மணி நேரத்தில் நமக்கு சொல்லிவிடுகிறது அது போல அமெரிக்க இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய காந்தி திரைப்படம் மகாத்மா காந்தி அவர்களது வாழ்க்கையோடு சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மூன்று மணி நேரத்தில் நமக்கு உணர்த்திவிடுகிறது என்னதான் பாடம் நடத்தி மனப்பாடம் செய்தலெல்லாம் மறந்து போகும் இத்தகைய வரலாறுகள் ஒரு மாணவன் காலம் முழுக்க அழியாமல் மனதில் பதிந்து அவனை நல்வழிப்படுத்த உதவும் சமீபத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் , இண்டர் ஸ்டெல்லர் மற்றும் ஜூராசிக் பார்க் அவதார் போன்ற படங்கள் அறிவியல் உலகம் இதுவரை கண்டிராத பல புதிய விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னது 12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ் மற்றும் கலர் பர்பிள் போன்ற திரைப் படங்கள் நிற வேற்றுமைக்கு எதிரான மிகச்சிறந்த ஆக்கங்கள் . இது போன்ற படங்களை பார்க்கும் ஆசிரியர்கள் அவர்கள் மாணவர்களுக்கும் இத்தனை சிறு வயதிலேயே கொண்டு செல்லும் போது அவை வருங்காலத்தின் பல நல்ல விதைகளை இந்த சமூகத்துக்கு உருவாக்கி அவர்கள் எதிர்காலம் சிறக்க செய்யும் என்பதில் ஐயமில்லை

No comments:

பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி

பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி தமிழ் ஒரு அழகான இளம் பெண்ணாக பூமியில் தோன்றி, அவர் முன் வரிசையாக தமிழ் கவிஞர்களை எல்லாம் நிறுத்தி...