February 21, 2015

முதல் காதல்


 முதல் காதல்
                                                அஜயன் பாலா
காதலர் தினத்தை யொட்டி சினிமாஎக்ஸ்பிரஸ்  இதழுக்காக எழுத ஆரம்பித்த போது மனம் எனும் ஸ்கேனர் தானாய் நினைவு குளத்தில் கண்டெடுத்தவள்தான் இந்த தேவ மலர்
அவள் தேவதைகளின் மலர்
பிறக்கும்போதே அன்னைதெரஸாவாய் பிறந்துவிட்டவள் எனக்கு தெரிந்து அவள் மட்டுமே
அத்த்னை அனபும் அவளுக்கு இந்த உல்கத்தின் மீது
உண்மையில் அவளுக்கு முன்பாக எனக்குநினைவில் தெரியும் முதல் அந்நிய பெண் நினைவு  மங்காவுடையது
மங்காதான் உணர்வில்  முதல் காதலி
இப்ப யோசித்தாலும் முகம் நினைவிலில்லை ஆனால் அந்த ஸ்பரிசம் இப்போதும்
அக்கா இவனை தூக்கி இடுப்புல வச்சாதான் எனக்கு இந்த நாளே விடிஞ்சாப்பல இருக்கு

என் அம்மாவிடம் சொல்லிய்படி விட்டுக்குள் வரும் மங்கா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொள்வதில் அத்த்னை ப்ரியம்
ஆறுவயது வரை அவள்தான் என் உலகம்
அவள் திருமணத்துக்கு அம்மாவுடன் கைபிடித்து போனது இன்னும் நினைவில்
அடுத்தாக நினைவு வரிசையில் நிற்பவள் தான் நான் முன் சொன்ன தேவ மலர். அவள் முழு பெயர்  டெய்சி தமிழ்ச்செல்வி
நான் எட்டாவது  படிக்கும் போது வகுப்பில் வந்து சேர்ந்தவள்.
துறு துறு கண் , கறுப்பி ஆனாலும் பேச்சிலும் சுபாவத்திலும் அத்தனை  கவர்ச்சி . எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்பவள் .கிறிஸ்தவ பெண்களுக்கே உரிய கீச்கீச்  குரல் .
பின்னாளில் யார் யார் என்னவாகபோகிறீர்கள் என ஒரு நாள் ஆசிரியர் எல்லோரையும் எழுப்பி கேட்க  அவள் தான் ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் போல சமூக சேவை செய்யப்போவதாக  கூறியபோது பால்ராஜ் வாத்தியார் ஆச்ச்ர்யத்துடன் பாராட்டினார் .அனைவரையும் அவளுக்காக கைதட்டச்சொன்னார். நானும் உற்சாகமாக கைதட்டினேன். அன்று  அவள் அப்பழுக்கில்லாத ஒரு தேவ மலராக காட்சியளித்தாள் .அது முதல் டெய்சியை பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு வெட்க புன்னகை தானாய் மலரும் .
ஒரு மழை நாளில் வகுப்பே சோ வென இரைந்து கொண்டிருக்க டீச்சர் அனைவரையும் அமைதிப்படுத்தி டெய்சி யை எழுப்பி ஒரு பாட்டு பாடச்சொல்ல வகுப்பே  அமைதியாகிப்போனது.  ,  ராஜ நாகம் படத்தில் வரும் தேவன் கோவிலில் என்ற பாடலை   அன்று டெய்சி பாட மழையில் சிணுங்கின ஜன்னல் கதவின் கொக்கி அதற்கேற்ற  தாளமாக இசைத்தது.. ஜன்னல் கம்பிக்கப்பால் வெளியே பள்ளியை ஒட்டிய தோட்ட்த்தில் மழை கொட்டிக்கொண்டிருக்க டெய்சியின் குரல்  கருங்கல் தரையில் சர்ப்பம் போல  எனக்குள் நுழைந்து இதயத்துள் சுருண்டது.. அன்று இரவே ஒரு கனவு . யாருமற்ற குளக்கரை படிக்கட்டுகளில் டெய்சி மட்டும் பட்டு சட்டை பாவாடையுடன் பாடிக்கொண்டிருக்க ஈரத்துண்டை இடுப்பில் கட்டியிருக்கும் நான் ஒரு தூண்  மறைவில் ஒதுங்கி நின்று அவளை ரசிக்கிறேன் என்  கையில் சோப்புபெட்டி தேங்காய் நார். ஒரு வேப்பங்குச்சி
மற்றும் முறுக்கி பிழிந்த ஈரத்துணிகள். மறு நாள் காலையிலிருந்தே என்ன வெனத்தெரியாத ஜுரம் .
ஒரு நாள் பகல் வேளையில் வகுப்பில் அமர்ந்திருக்க தலையில் இளம் சூடு.உணர கைவைத்து  தடவி திரும்பி மேலே பார்க்க மேற்கூரையின் ஓடுகளின் வழியாக இரண்டு  வெளிச்ச குழல் வகுப்பில் விழுந்துகொண்டிருந்தது.  ஒன்று என் தலை மேல். விழுந்திருக்க இன்னொன்று அவள் தோளில்.. வகுப்பில் அத்த்னை பேர் அமர்ந்திருக்க எங்கள் இருவர் மீது மட்டும் விழுந்த வெளிச்ச குழல்கள் என்னை பரவசப்படுத்தியது. வெளிச்சகுழலினூடெ கைவிரல்களை குறுக்காக நீட்ட மாசு படலங்கள் என் விரல்களில் விளையாடின . யாரிடமாவது இதை சொல்ல மனசு ஏங்கியது. யாரிடம் சொல்ல . .. அவளிடமே சொன்னால் என்ன ?
அன்று அப்போது கணக்கு பாடம் கிருஷ்ணன் வாத்தியார் பலகையில் ஏதோ மும்ம\ரமாக எழுதிக்கொண்டிருக்க நான் டெய்சியை நோக்கி திரும்பினேன்
டெய்சி.. டெய்சி.. குரல் வயிற்ருக்குள்ளேயே
அவள் மும்மரமாய் எழுதிக்கொண்டிருந்தாள்
அவள் எப்போது நிமிர்வாள் என்னை பார்ப்பாள் என காத்திருந்தேன்
அவள்  மீது அதுவரையில் விழுந்த வெளிச்சகுழல் இப்போது மெல்ல அவளை விட்டிறங்கி தரைக்கு விழ துவங்கியது
அவள் நிமிரந்த ஒரு கணத்தில் நான் சைகையால்  கூரையின் வெளிச்சத்தை காண்பிக்க அவளும் நிமிர்ந்து பார்த்தாள் அதே போல் எனக்கருகேயும் வெளிச்சம் வட்டமிட்டிருப்பதை காண்பிப்பதற்குள் அது அருகிலிருந்த கேசவன் தலைக்கு நகர்ந்து விட்டிருந்தது.
அவளிடம் அசடு வழிந்த்தோடு அந்த பகல் இருளை நோக்கி நகர்ந்த்து.
அந்த நாளுக்கு பிறகு கூரையிலிருந்து கசியும் ஒளிக்குழல் எனக்கும் அவளுக்கும் ஒரு சேர விழவே இல்லை
அதன்பிறகு ஒரு நாள் பள்ளி விட்டு வரும் போது வழியிலிருந்த தீர்த்த குளத்தில் மீன் அதிகமிருப்பதாக கூறீய பள்ளி நண்பர்களுடன்  அதை பார்க்க செல்ல யாரோ என்னை முதுகில் கைவைத்து தள்ளிவிட குளத்தில் விழுந்து விட்டேன் . உடல் முழுக்க நனைந்த படி ஈரம் சொட்ட சொட்ட பயத்தில் அழுதபடி கரையில் நான் நிற்க சுற்றியிருந்த நண்பர்கள் கேலி செய்ய அந்த நேரம் பார்த்தா அங்கு டெய்சி வரவேண்டும் ..
டெய்சி என்னருகே வந்து ஏதாவது உதவி செய்யட்டுமா என கூறி வருத்தப்பட  எனக்கு அழுகை அதிகமாகியதே தவிர நிற்கவில்லை
அதன் பிறகு தாழ்வு மனப்பான்மை காரணமாகவோ என்னவோ டெய்சியிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டேன்.
ஆண்டுகள் கடந்தன எட்டாம் வகுப்பிற்கு பின் அந்த பள்ளியை விட்டு அனைவரும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்தோம் பத்தாவதில் அவள் படித்த பெண்கள் பள்ளியில் டெய்சி முதல் மாணவி என்ற செய்தி என்னை பெரிதாக ஆச்சர்யப்படுத்தவில்லை
அவ்வப்போது தியேட்டர் , கடைவீதி மற்றும் பொது இடங்களில் அவள் அப்பாவோடு அல்லது அண்ணனோடு அவளை பார்ப்பது வழக்கம் . பெரிய பெண்ணாக ஆன பிறகும் அவள் யாரோடும் வெடுக்வெடுக்கென பேசுவதை நிறுத்தவில்லை. என்னை பார்க்கும் போதும் அவள் சிரிக்க முயல நான் அவளை ஞாபகமில்லாதவனாக காட்டிக்கொள்ள முயற்சித்து விலகி நடந்தேன்.
பெரிய பெண்ணாக மாறிய பிறகு அவள் முன்னை விட மிகவும் அழகாக மாறிவிட்டிருந்ததும் ..நம்மைவிட பல மடங்கு அழகான ஒருவனை அவள் இந்நேரம் தேர்ந்தெடுத்து விட்டிருக்ககூடும் என்ற தாழ்மையுணர்வும்தான் அதற்கு காரணம் 
ப்ளஸ் டூ படிக்கும்போதே நான் நினைத்தது போலவே  அவளுக்கு காதல் கல்யாணம் என்ற செய்தியும் வந்தது.
அந்த துக்க செய்தியை வகுப்பு தோழன் சொல்லியதிலிருந்து அவள் மேல் ஏனோ ஒருவித கோபமும் வெறுப்பும் தான் அதிகமாய் வந்தது..
படிக்கும்போதே காதல்.. சே என்ன பெண் .. நல்ல வேளை தப்பிச்சோம் என சமாதான்ங்கள் சொல்லி ஆற்றாமையை தீர்க்க முயன்றேன்
ஒரு நாள் மாலைக்காட்சிக்கு தியேட்டருக்கு போனவனுக்கு அதிர்ச்சி
தியேட்டர் வாசலில் டெய்சி பூரிப்புடன் புதுப்பெண்னாய் நின்று கொண்டிருந்தாள்
சே இவளை போய் பார்க்க நேர்ந்துவிட்டதே என உள்ளுக்குள் குமைந்தபடி திரும்பியபோதுதான் அவள் கணவனை பார்த்தேன் .ஒரு கால் ஊனமான நிலையில் கால் தாங்கி கால்தாங்கி நடந்து வந்தான் .
எனக்கோ அதிர்ச்சி . அவள் மீதான் காதல் மீண்டும் துளிர்க்க துவங்கியது
அவள் உண்மையில் ஒரு தேவ மலர்தான் என நெஞ்சு உரக்க கூவியது
என்னுடன் வந்த வகுப்புத்தோழன் டெய்சியின் பக்கத்துவீட்டு வங்கியில் வேலை செய்பவன் .அவன் என்றும் வங்கி வேலை ஊனத்தை மறைத்து காதலை உண்டாக்கி விட்டது என்றும் இகழ்வாக கூறியபடி தியேட்டருக்குள் என்னை அழைத்து சென்றான்.
டெய்சி தமிழ்ச்செல்வி ஒரு கையால் கணவனைத்தாங்கி தியேட்டருக்குள்  அழைத்துசென்றபடி என்னையும் பார்த்து வழக்கம் போல சிரித்தாள்
இம்முறை வெட்கமில்லாமல் மேலும் காதல் பொங்க அவளை பார்த்து பதிலுக்கு சிரித்தேன்.





January 5, 2015

நீர்க்குமிழி வாழ்க்கையில் ஒரு எதிர் நீச்சல்


அஞ்சலி  : இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்



ஒரு முறை ஒரு இணைய இதழ் தமிழ் சினிமாவின் சிறந்த நூறு படங்களை தொகுக்கச் சொன்னபோதுதான் அதுவரை பார்க்காத பாலச்சந்தரின் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்க்க நேர்ந்தது.
சில கறுப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது அவரது படங்கள் நாடக சினிமா என்ற பிம்பம் எனக்குள் உடையத் துவங்கியது அதன்பிறகு அந்த தொடர் நிறுத்தப்பட்டாலும் அந்த வாய்ப்பு இல்லாவிட்டால் நான் பாலச்சந்தரை கடைசி வரை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போயிருக்க வாய்ப்புண்டு.
குறிப்பாக மூன்று முடிச்சுவின் முதல் பகுதியில் வரும் இருபது நிமிட காட்சிகள். ரஜினி கமல் ஸ்ரீதேவி ஆகிய மூவரது அறிமுகம் மற்றும் உறவு நிலை வளரும் காட்சிகளில் கதை சொல்லும் முறையில் பிரெஞ்சு நியூ வேவ் தாக்கத்தை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.
பல காட்சிகளில் வசனம் இரண்டாம் நிலையில் நின்று காமிரா கோணங்களும் அசைவும் முதல் நிலையில் நின்று மிஸான்சேன் பாணியில் கதை நகர்த்தப்பட்டிருந்தன. . ரோமன் பொலான்ஸ்கியின் நைப் அண்டர் தி வாட்டர் கதையை தழுவி வேறு மாதிரியாக எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்த போதும், மூன்று பாத்திரங்களுக்கு இவர் தமிழ் பாணியில் மாற்றிக்கொடுத்த விவரணைகள் படத்திற்கு ஒரு தன்னியல்பான தன்மையை உருவாக்கியிருந்தன.
பி எஸ் லோக்நாத்தின் ஒளிப்பதிவில் சென்னை வீடொன்றின் மொட்டை மாடி அறையும் பகல் வெளிச்சம் நிறைந்த காட்சிகளும் நல்ல சினிமாவின் சாத்தியங்களை அதிகமாகவே கொண்டிருந்தன. பிற்பாடு இரண்டாம் பகுதியில் காட்சிகள்  நாடகத்தன்மைக்குள் விழுந்ததால் கதை நகர்த்துதல் இயல்பாக வசனத்தின் கைக்கு மாறிப்போனது

தொடர்ந்து அவள் ஒரு தொடர்கதை ,அவர்கள் அபூர்வ ராகங்கள் என அவரது சிறந்த கறுப்பு வெள்ளை படங்களை  பார்க்க  அவர் மீதான மதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆனால் நான் சினிமா பார்க்க துவங்கிய காலத்தில் அவர்  மேல் அதுவரை எனக்கு பெரிதாக ஈர்ப்பு இல்லை.
ரஜினியை அறிமுகப்படுத்தியவர் என்ற அடையாளம் மட்டுமே என்னுடைய தலைமுறையில் பெரிதாக இருந்த்து. என்னதான் தண்ணீர் தண்ணீர் ….வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களை அவர் எடுத்துக்கொண்டிருந்தாலும்.. பாரதிராஜா பாலுமகேந்திரா மகேந்திரன் ஆகியோர்  உண்டாக்கிய தாக்கங்களை அந்த இடைப்பட்ட காலங்களில் அவரால்  உருவாக்கவில்லை. அப்போது உண்டான புதிய அலை படங்களோடு அவரால் போட்டியிட முடியவில்லை.  பிற்பாடு சிந்துபைரவி படம் வெளியான போதுதான் அவர் மீண்டும் வெற்றிக்கு பாதைக்கு திரும்ப பயணித்தார். இடைப்பட்ட காலத்தில்தான் அவர் மரோ சரித்ரா ஏக் துஜே கேலியே போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் உயரங்களை தொட்டுக்கொண்டிருந்தார்.
மூன்று முடிச்சை தொடர்ந்து, வரிசையாக அவருடைய அவள் ஒரு தொடர்கதை பார்த்த போது அவர் மீதான மரியாதை பல மடங்கு உயர்ந்தது.
அதற்கு முன்வரை எனக்குள் சினிமா பற்றி சில வரையறைகள் இருந்தன. முக்கியமாக அவை காட்சி பூர்வமாக செயற்கையான நாடகத்தன்மை இல்லாமல் இது போன்ற சில வரையறைகள் உருவாகியிருந்தன.
ஆனால் அவள் ஒரு தொடர்கதையின் பாத்திரங்கள் என்னை உலுக்கி எடுத்தன.
அதற்கு முன் நான் அப்படத்தின் மூலப்படமான  ரித்விக் கட்டக்கின் மேக தக்க தாரா படத்தை இரண்டு முறை பார்த்தவன் என்றாலும் அவள் ஒரு தொடர் கதையில் அவர் காண்பித்த மனிதர்கள் அந்த கறுப்பு வெள்ளை சென்னை அதன்பிறகு பார்த்த தமிழ் சினிமாக்களை விடவும் நூறு மடங்கு வீரியமாகவும் ஆழமாகவும் ஊடுருவி உலுக்கி எடுக்க துவங்கியிருந்தன.
தமிழ் சினிமாவின் பெண் பாத்திரங்களில் சிறந்த படைப்பு எது எனக் கேட்டால் மகேந்திரனின் முள்ளும் மலரும். ஷோபாவுக்கு இணையாக நான் அவள் ஒரு தொடர் கதை கவிதாவைத்தான் சொல்வேன்.
அன்றைய கால கட்டத்தில் சென்னை நகரத்தை உரித்து சினிமாவில் வார்த்த காட்சிகளில் தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு வேலைக்கு போகும் சரசாரி பெண்ணாக சுஜாதா தோன்றிய விதம் அத்தனை உயிர்ப்பு.
கடற்கரையில் பிச்சை எடுக்கும் குருட்டுத்தம்பியை வீட்டில் கண்டிக்கும் காட்சியிலாகட்டும், குடிகார அண்ணன் திருந்திவிட்டதை எண்ணி மகிழும் தருணத்திலாகட்டும், தான் காதலித்த ஒருவனை தன் விதவைத் தங்கை திருமணம் செய்ததை கேள்விப்படும் போதாகட்டும் கவிதா பாத்திரத்தின் மேல் நம்மை மீறிய ஒரு ஈர்ப்பு தவிர்க்க முடியாமல் உருவாகிறது.
 அதையும் தாண்டி பெண் என்பவளின் துயரத்தின் இருண்ட பக்கங்களையெல்லாம் வெளிச்சமிட்டு காட்டி அவளுக்கு என்னன்ன மதிரியான எண்ணங்கள் உணர்ச்சிகள் இருக்கும் என்பதை அந்த படம் வெளியாகி முப்பது வருடம் கழித்து சிடியில் பார்க்கும் என்வரை கற்று கொடுக்கும் பணியை இச்சமூகத்துக்கு உருவாக்கி கொடுத்திருப்பதுதான் அந்த படத்தின் தனிச்சிறப்பு.
படத்தில் கவிதாவின் காதலனாக வரும் விஜயக்குமார் இரண்டாவது முறையாக விட்டு போன கண்ணாடியை எடுக்க வரும்போது அவருக்கும் கவிதாவின் விதவைத் தங்கையாக வரும் ஸ்ரீ ப்ரியாவுக்கும் இடையிலான உரையாடலை காட்சி படுத்திய விதம் அவரது இயக்குனர் பாணியின்  உச்சம்
விஜயக்குமார் கேள்விகளுக்கு மறைந்து நின்று கையில் வைத்திருக்கும் கத்திரியின் சத்த்த்தில் பதில் சொல்லும் ஸ்ரீப்ரியா பிற்பாடு தான் விதவை என்பதை சொல்லாமல் சொல்லும் காட்சியில்  அடையாளமில்லாதவளாக அவள் தன்னை உணருவதை நிழலாக காண்பித்து விஜயக்குமார் நிழலோடு உரையாடுவதாக காண்பித்திருப்பார்.
திரைக்கதையில் வெறும் வசனமாக இருக்கும் காட்சி இயக்குனரின் சொல் முறையின் காரணமாக நம்முள் கூடுதல் வீரியத்துடன் இடம்.பிடித்து விடுகிறது.
இந்தவகையிலான அவரது பாணி காட்சியமைப்பு அவ்வப்போது சில படங்களில் இடம்பிடித்தாலும் முழு படமும் அவரால் இப்படி செய்ய முடியாது போனது வருத்தமே

யுடிவி தனஞ்செயன் மூலமாக பாலச்சந்தர் அவர்களை அவரது வீட்டில் நேரில் சந்தித்து சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு நான்கு வருடங்களுக்கு முன் வாய்த்தபோது அவரிடம் அவள் ஒரு தொடர்கதை பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டியது. நான் சொல்வதை அவர் ஆச்சர்யத்துடன் கேட்டார். அதற்கு முன்பாக விகடனில் என்னுடைய கட்டுரைகள் வாசித்திருப்பதை கூறிய அவர் உங்களுக்கு அந்த படம் பிடிச்சிருந்ததா என நமப முடியாமல் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு ஆச்சர்யப்பட்டார். எழுபதுக்களின் துவக்கத்தில் சென்னை உள்ளும் புறமுமாக எப்படியிருந்தது என்பதன் ஒரே பதிவு என்றேன்.
உண்மையும் அதுதான். தொழில் சார்ந்த நகர வாழ்க்கை பெருக துவங்க கூட்டுகுடும்பங்கள் அதிகரித்து வந்த அக்காலத்தில் மனித உறவுகளின் அவலம் அந்த திரைப்படத்தில்தான் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. சினிமா தாண்டி சமூக ஆவணமாகவும், தமிழ் சினிமாவுக்கு அப்படம் ஒரு சொத்து என கூறினேன்.
அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அக்னி சாட்சி இந்த அ வரிசை படங்கள்தான் என்னை பொறுத்தவரை சமூகத்தை அதிகமாக பாதித்த படங்களாக இருக்க முடியும் என்பது என் அனுமானம். கூட்டி கழித்து பார்க்கும் போது பாலச்சந்தர் திரைப்படங்கள் உறவுகளின் அபத்தங்களையும், பெண்களின் உணர்வுகளையும் மையப்படுத்தியவை என சொல்ல முடியுமென்றால் அதை சிறப்பாக வெளிக்கொணர்ந்த படங்களாக மேலே உள்ள படங்களை குறிப்பிட முடியும். இந்த அ வரிசை தவிர்த்து சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், போன்ற வெற்றி படங்களும், எங்க ஊர் கண்ணகி, போன்ற தோல்வி படங்களும் அவருடைய பாணியை ,தனித்தன்மையை அழுத்தம் திருத்தமாக வெளிக்கொணர்ந்த திரைப்படங்கள். புது புது அர்த்தங்கள் படத்தில் அதே  வெடுக் துடுக் பாத்திரம் வில்லியாகவும் அவரால் உருவாக்க முடிந்தது  ஆச்சர்யமான முரண்.
கல்கி  அந்த வரிசையில் அவருடைய கடைசிப்படம். ஆனால் கால மாற்றம் காரணமாக அந்த திரைப்படம்  மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
அரங்கேற்றம் துவங்கி ஆண் வர்க்கத்தையும் சமூகத்தையும் தன் சாட்டையடி வசனங்களால் அடித்து நொறுக்கித்தள்ளிய பாலச்சந்தரின்  பெண் பாத்திரம் கல்கி யோடு தன் சோர்வை கண்டடைந்தது
பாலச்சந்தரின் அடையாளம் என்பது இந்த வகைப்படங்கள்தான்
இதுபோன்ற படங்களை இவருக்கு முன்பும் பின்பும் தமிழ் சூழலில் யாரும் எடுக்கவே இல்லை.
இந்த  பாணியைத்தவிர, வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற சமூகத்தின் அன்றைக்கு உயிர்ப்பான பிரச்னைகளை பேசிய திரைப்படங்கள் அவரது இன்னொரு பாணி.
நீர்க்குமிழி, எதிர் நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள் போன்ற அவரது ஆரம்ப கால கறுப்பவெள்ளை நாடக பாணி படங்கள் இன்னொரு வகை.
நினைத்தாலே இனிக்கும், புன்னகை மன்னன் டூயட் போன்ற இசை நடனத்துக்கு முக்கியத்துவம் தந்த பாணி என அவர் திரைப்படங்களை பல்வேறு பாணிகளாக வகைப்படுத்தினாலும் அவரது எந்த பாணியிலும் சேராத மரோ சரித்ரா திரைப்படம் தான் அவரது திரைப்படங்களில் பெரும் சாதனை நிகழ்த்திய திரைப்படம்.
ஆனால்  பாலச்சந்தர் பற்றி நினைவு கூறும் பலரும் அந்த திரைப்படம் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில் அவர் மற்ற படங்களில் அல்லாத ஒரு நீரோட்டமான காட்சி மொழி அந்த படத்திலும் அதன் இந்தி பதிப்பான ஏக் துஜே கேலியே விலும் தான் உணர முடிந்தது.
இயக்குனர் பாலச்சந்தரின் பெருமைகளூள் எம்.ஜி.ஆர் , சிவாஜி காலத்தில் நாகேஷை நாயகனாக நடிக்க வைத்து அவர் ஈட்டிய வெற்றியைத்தான் அனைவரும் குறிப்பிடுவார்கள் . ஆனால் என்னை பொறுத்தவரை  முதன்  கறுப்பான ஆண்களையும் பெண்களையும் கதாநாயகர்களாக திரையில் அறிமுகப்படுத்தியதுதான் அவரது சாத்னைகளின் உச்சம்
சிவப்பானவர்கள் மட்டுமே அழகானவர்கள் ,சினிமாவிலும் அவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற போலிபிம்பம் கெட்டியாய் இறுகிக்கிடந்த சமூகத்தின் படிமத்தை உடைத்தது அவருடைய சாதனை. ரஜினி, சரிதா இருவரையும் அவர் அறிமுகப்படுத்தாவிட்டால் வேறு எப்படியும் அவர்கள் அன்றைக்கிருந்த தமிழ் சூழலில் அறிமுகமாக வாய்ப்பே இல்லை.
தப்புத்தாளங்களில் திருடன் ரஜினி, பாலியல் தொழிலாளி சரிதா போன்ற விளிம்பு நிலை பாத்திரங்களை திரையில் நாயகன் நாயகியாக அறிமுகம் செய்ததும் அவருடைய சாதனைகளில் ஒன்று.
பாத்திரங்கள் எதையாவது திரும்ப திரும்ப பேசுவது அவரது பாணி
அரங்கேற்றத்தில் உன் அப்பா எனக்கு மாமனார் எனும் ஒரு குழப்பமான விடுகதை
அவள் ஒரு தொடர்கதையில்  படாபட் ஜெயலட்சுமியின் படாபட்
மற்றும்
மூன்று முடிச்சுவில் ரஜினி சிகரட்டை தூக்கி போடுவது ,கைகளை வைத்து மேனரிசம் செய்வது என துருத்தலாக பாத்திரங்கள் எதையாவது செய்வதன் மூலம் பார்வையாளனிடம் பாத்திரங்களை அழுந்த பதியவைப்பது அனைவருடைய பாணி
மோட்டர் பைக்குகளை திரையில் அறிமுகப்படுத்துவதை சமூக மாற்றங்களின் குறியீடாக அவள் ஒரு தொடர்கதையில் புல்லட்டையும் , அவர்கள் படத்தில் காற்றுகென்ன வேலி பாடலில் ராஜ் தூத் பைக்கையும்  , புன்னகை மன்னனில் இந்த் சுசூகி பைக்கையும் முதன் முதலாக திரையில் காண்பித்து இளைஞர்களை பரவசப்படுத்தினார்
பாலச்சந்தர் இறந்த செய்தி குறுந்தகவலாக எனக்கு வந்த போது அவர் மருத்துவமனையில் உயிருடன் போராடிக்கொண்டிருந்தார். பிற்பாடுதான் அது பொய்யான செய்தி என தெரிய வந்தது என்றாலும் அந்த ஐந்துநிமிட இடை வெளியில் நான் மிகவும் துயருற்று அமைதியாக ஒரு நிமிடம் காலத்தோடு உறைந்து நின்றேன்.
என் அம்மா எனை கைப்பிடித்து கடைதெருவுக்கு சிறுவயதில் சென்ற போது  ஒரு சினிமா போஸ்ட்ரை காண்பித்து டேய் இது பாலசந்தர் படம்டா ரொம்ப பெரிய டைரக்டர் அவர் படமெல்லாம் அருமையா இருக்கும் என சொன்னது இப்போதும் எனக்குள் பசுமையாக நினைவில் உள்ளது.
இப்படியாகத்தான் டைரக்டர் என்ற பதம் என் வாழ்க்கைக்குள் நுழைந்து முக்கியம் பெற துவங்கியது.
உண்மையில் இக்கட்டுரை எழுதவும் காரணமாக இருந்தது என் அம்மா. எனக்கு கை நீட்டி போஸ்ட்ரை காண்பித்த அந்த  நிகழ்வுதான்.

என் அம்மாவை போல பல பெண்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்ததுதான் அவரது மிகபெரிய சாதனை.

December 12, 2013

சுமார் எழுத்தாளனும், சூப்பர் ஸ்டாரும்

    

இந்தியாவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் சண்டை வந்தால் நிச்ச்யம் இந்தியாதான் ஜெயிக்கும்

எப்படி?

ஏன் தெரியுமா செவ்வாய் கிரகத்தில் ரஜினி இல்லை

இப்படியான் ரஜினி டைப் ஜோக்குகள் தான் பாலிவுட்டில் இப்பொது ஹாட் டாபிக்

அங்கு இரண்டுபேர் புதியதாக சந்தித்துக்கொண்டால் முதலில் பரிமாறிக்கொள்வது ரஜினி பற்றிய இப்படியான எஸ் எம் எஸ் ஜோக்குகளைத்தான்

இதுக்கு ஒருவகையில் காரணம் அவர்களுக்கு ரஜினி என்ற பெயர்  வயிற்றில் உண்டாக்கும் எரிச்சலூட்டும் அமிலம் தான் 

ரஜினி பற்றிய வாத பிரதி வாத்ங்களை கடந்து அவரது எந்திரன் எனும் பொறுப்புணர்வற்ற படங்களையும் ..அரசியல் போதாமைகளையும் ரசிகர்களை மந்தைகளாக பயன்படுத்திய குற்றசாட்டுகளை கடந்து ரஜினி தமிழர்களுக்கு அருட் கொடை


முன் மாதிரிகள் அருகிப்போன தமிழகத்தில் ரஜினி என்ற சொல் உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் ஓர் அழுத்தம் திருத்த்மான இலச்சினை .

எளிய மனைதர்கள்கூட சட்டென அடையாளப்படுத்திக்கொண்டு த்ங்களை முன்னெடுத்து செல்லக்கூடிய  முன் மாதிரி அவர்.

திருக்கழுக்குன்றம் என்ற சிறிய ஊரில் பாலாஜி என்ற பெயருடன் அவமானத்தால் சுருங்கிடந்த  என்னை அஜயன்பாலாவாக விரிவுகொள்ள வைத்ததில் அவருக்கும் முக்கிய பங்கிருப்பதால் இத்னை இங்கு தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் .

நான் மட்டுமல்ல இம்மண்ணீண் நிறமான கறுப்பூ நிறத்தில் பிறந்த எவரும் அவரை மறுக்க முடியாது


கறுப்பான ஒருவன் இந்த உல்கத்தில் வாழவெ தகுதியவற்றவனாக கருதப்ப்ட்ட வெட்ககேடான காலம் ஒன்றும் தமிழ்கத்தில் இருந்தது.

என் குடும்பத்தில் என் அம்மா அப்பா அண்ணன் த்ங்கை எல்லோரும் சிவப்பாக இருக்க நான் மட்டும் என் அம்மாவின் அப்பாவை போல கரிய நிறத்தில் பிறந்துவிட்டேன்

அத்ற்காக நான் சிறுவயதில் எதிர்கொண்ட அவமானங்கள் இருக்கிறதே தாங்க முடியாதவை

என் அப்பாவுக்கு பூர்Vகம் கேரளாவேறு. அம்மா திருநெல்வேலி
வீட்டுக்கு  அப்பாவின் உறவினர்கள் வந்தாலே எனக்கு பயம் வரும். அவர்களுக்கும் எனக்கும் ஒத்துவராது . என்னிடம் பேச கூட மாட்டார்கள் . என் அண்ணன் த்ங்கை ஆகியோரிடம் மட்டும் பாச மழை பொழியும் . அத்ன் காரணமாகவே நான் அவர்கள் இருகும் சமயங்களில் தாமதமாக வீட்டுகு வருவேன் . என்னை ஒரு அன்னியனாக அவர்கல் பார்பார்கள் அவர்கள் மட்டுமல்ல .. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் கூட 


உங்க வீட்ல எல்லாரும் சிவப்பா இருக்காங்க
நீ மட்டும் ஏண்டா இப்படி அட்டை கரியா இருக்கே

இந்த கேள்வியை  பலமுறை எதிர்கொண்டிருக்க்கிறேன்.
அவமானத்தால் பதில் பெசாமல் வந்துவிடுவேன்

என்ன கொடுமை என்றால் கேட்பவர்களும் கறுப்பாகத்தான் இருப்பார்கள்

ஆனாலும் கறுப்பா இருப்பது ஏதோ பிறவிக்குற்றம் என்பது சமுகத்தில் பொது புத்தி

மாப்பிள்லை கறுப்பு
பொண்ணு கறுப்பா இருக்கு அத்னாலதான்
நீ மட்டும் கொஞ்சம் சிவப்பா இருந்தேன்னு வச்சிக்கோ ராஜா மாதிரி ஒருத்தன் வந்து கொத்திகிட்டு போவான்
எம் ஜி ஆரை பாரு என்னமா கலரு

அவன் சிவப்பா இருக்கான் அதனால நல்லவ்ன் என வடிவேல் ஒருப்டத்தில் அடிப்பது காமடிமட்டுமல்ல 77 க்க்கு முன்பாக சமுகத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக உறைந்திருந்த கருத்து இது.

இந்த பொதுபுத்திக்கு மக்கல் தில்கம் எம் ஜி ஆரும்  ஒரு மூலகாரணம் .எம் ஜீ ஆரின் இயல்பான தயாள குணம் சிவப்பு கலருடன் முடுச்சு போடப்பட்டது

என்னமா கலரு.. கொடுத்து சிவந்த கரம் இப்படியான சொற்றொடர்கள் தமிழர்கள் மத்தியில் சிவப்பாக இருப்பவன் நல்லவன் என்பது மாதிரியான பொலி மயக்கத்தை உருவாக்கிவிட்டதும் ஒரு கொடுமை

அவரும் தன் பங்குக்கு கெட்டகாரியங்கள் செய்யும் குண்டுமணி போன்ற லுங்கி கட்டிய வில்லன்களை கறுப்பாக காட்டினார்.  நிறத்தில் வெள்ளையாக இருந்த நம்பியார் போன்றவர்களையும் கறுப்பு வண்ணம் பூசி கறுப்பு என்றாலே தீமை எனும் பொது புத்திக்கு வலுவேற்றினார்

தமிழகமாவது பரவாயில்லை வட இந்தியாவில் இன்றும் கறுப்பாக இருக்கும் ஒருவன் எந்த துறையிலும் முன்னேறிவிட முடியாது. அத்னால்தான் மராட்டியத்தை சேர்ந்த பெங்களூரில் வளர்ந்த ரஜினி தமிழக்த்தில் ஜெயிக்க முடிந்தது. அல்லாமல் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கறுப்பாக இருக்கும் ஒருவன் அன்று நடிகனாக  அறிமுகமாயிருக்க முடியாது .

இத்த்கைய சூழலில் ரஜினியின் வருகையும் வெற்றியும் நிறம் சார்ந்த பொதுபுத்திகளை அடித்து நொறுக்கியது. அழகு என்பது உருவத்திலிருந்து சுபாவத்துக்கு மாறியது.


அதுவரை நிறத்தால் அவமானபட்ட பலருக்கு ரஜினி புதிய கத்வை திறந்தார் .குனிந்த த்லைகள் நிமிர தொடங்கின
கறுப்பானவர்கள் பரட்டை தலையுடன் சட்டை பட்டனை கழட்டி விட்டுகொண்டு ஹீரோவாக உணரதுவங்கினர்

இப்படியாகத்தான்  நிறத்தால் தினமும் அவமானத்துக்குட்பட்டு வாழ்ந்த எனக்கு போஸ்டர்களில் தெரிந்த ரஜினி எனும் பிம்பம் பரவசத்தை உண்டாக்கியது. அந்த  சமயம் பலரும் அந்த நடிகனை தவறாக சித்தரித்தார்கள். ரஜினியை ரசிப்பவர்கள் கேலிசெய்ய்ப்பட்டார்கள் .கிடத்ட்ட அப்போது அறிமுகமான இளையராஜாவுக்கும் இதேபோல கேலிபேச்சுகள் இருந்த்ன .
தகர டப்பா ம்யூசிக் என செவ்வியல் மெல்லிசை ரசனையாளர்கள் பகடி பேசினர் .அப்போது ரஜினியை போல இளையராஜாவும் என்னை பெரிதும் ஈர்த்தார். இயல்பில் அதிக உணர்ச்சி வசப்படும் சிறுவனான நான் அவர்கள் இருவரையும் கடவுள்களாகவே கருதினேன் .உடன் அப்போது ப்ரூஸ்லி கொஞ்சகாலத்துக்கு இருந்தார் . பின் அது மைக்கேல் ஜாக்ஸனாகவும் மாறிக்கொண்டிருந்தது .


அக்காலத்தில்  திரைக்கு முன்னால் ஒரு மேடை இருக்கும் பெரும்பாலும் ரஜினியின் ப்டங்களை மேடையில் படுத்துக்கொண்டே பார்த்தேன். ரஜினி படத்தின் விள்ம்ப்ரத்தை முத்ன்முத்லாக தினத்தந்தியின் கடைசி பக்கத்தில் பார்ப்பதுமுதல் , படம் பார்க்க சனிக்கிழ்மை மதியம் தியேட்டருக்கு ஓடுவது என எல்லாமே தனி அனுபவம்தான் . சில படங்களில் சிவப்பாக இருக்கும் கமலஹாசனிடம் அவர் அடிவாங்கியபோது நான் மிகவும் குமைந்தேன் .


நான் வாழவைப்பேன் பட்த்தில் சிலமணித்துளிகள்சாகும் தருவாயில் துப்பாக்கியுடன்

ஒரு போதாத காலத்தில் அவர் மனநலம் த்வறியவராக அனைவரும் கேலி பேசியபோது இவர் விரைவில் குணமடையவேண்டும் என உள்ளூர பிரார்த்தித்தேன் .

பள்ளிசெல்லும் வழியில் ஓட்டப்பட்டிருக்கும் ரஜினி காந்தின்  புதுப்பட போஸ்டர்களை நின்று நீதானித்து உற்று பார்ப்பேன் . நோட்டு புத்த்கத்தின் கடைசி ப்க்கங்களில் ரஜினியை வரைவது முக்கிய பொழுது போக்காக மாறியது . ஒருநாள் நண்பன் செய்த ஒற்று வேலை காரணமாக எல்லா நோட்டின் கடைசி பக்கத்திலும் நான் ரஜினி படமாக வரைந்திருந்ததை பார்த்த சாரதா  டீச்சர் ஸ்கேலால் எனை வெளுத்து வாங்கினார் ராகவேந்திரர் பக்தி என்னையும் அவ்வயதில் தொற்றியது. வியாழக்கிழ்மைகளில் விரதம் இருந்தேன் .
.நான் கொஞ்சம் ரசனையில்  வளர்ந்தபோது ரஜினியும் வளர்ந்தார். மூன்றுமுகம் படத்தில் அலெக்ஸ் பாண்டியன் செந்தாமரை நாற்காலியை காலால் எத்திஉதைக்கும் போதும்
இந்த் அலெக்ஸ் பாண்டியன் பேரை சொன்னா அந்த குழந்தை அவங்க அம்மா வையையும் சேத்து மூடும் என வசனம் பேசிய போது உணர்ச்சி தாங்காமால் கைவலிக்க தட்டினேன்
அந்த் ஆற்ற்லை மனதில் வாங்கி உடலுள் செலுத்தியபடி வீட்டில் வலம் வந்தேன்

புதுக்கவிதை ப்டத்தில் காதலின் தீபமொன்று பாடலில் பாக்கெட்டில் கைவிட்டபடி ரஜினி நடந்து வரும் அழகை பார்த்து மயங்கியவர்களில் நானும் ஒருவன்

அந்தா கானூன் படம் முலம்  இந்தியிலும் அவர் பெரு வெற்றி பெற்றதை கமல் ரசிக நண்பர்களிடம் அவர்கள் வெறுப்பை சம்பாதிகும் வகையில் பெருமை பட கூறியிருக்கிறேன்
ரஜினி ரசிகன் புத்தகத்தில் ராஜாதிராஜா ஆளுயர புகைப்ப்டங்களை பார்த்து பரவசத்தில் துளிர்த்தேன் . அன்று என்னை போல ரஜினியை தமிழ்கமே நேசித்தது.
அப்படத்தில்  மலையாளக்கரையோரம் முதல் பாடல்காட்சியில் வெள்ளை பேகி பேண்டும் வெள்ளை சர்ட்டுமாக பாக்கெட்டில் கைவிட்டபடி நடந்துவரும் காட்சியில் உணர்வுகளின் உச்ச நிலையை அடைந்தேன் . அந்த உணர்வுகளின் நிலை என்னை போல பலரையும் அக்காலத்தில் ஈர்தது. அண்ணா மலை பாட்ஷா படங்களீன் காலத்தில் நான் முழுவதுமாக மாறியிருந்தேன் . ஓரளவு இலக்கிய வாசிப்பும் அறிவார்ந்த விடயங்களும் என்னை தீண்டியிருந்தாலும் முதல் நாளில் முதல் ஷோ ரஜினி படம் பார்ப்பதை மட்டும் த்வறவிடுபவனில்லை 

இப்படியாக ஒவ்வொரு காலத்திலும் ரஜினியை இன்ஸ்பிரெஷ்னாக கொண்டு நாமும் அவரை போல சினிமாவில் சாதிக்க முடியும் என கண்ணாடியில் எனக்கு பதில் அவரை பார்த்தேன்

தூர்தர்ஷனில் இரண்டு வாரங்கள் வந்த அவரது முதல் தொலைக்காட்சி பேட்டி என் வாழ்வின் திருப்புமுனை என்று கூட கூறலாம்

அதில் அவரிடம் வெளிப்ப்ட்ட விஷய் ஞானம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.அவரது பதிலில் வெளிப்ப்ட்ட நிதான்ம் எனக்கும் கைவர வேண்டினேன்

அதில் ஒரு கேள்வியின் போது த்ன் வெற்றிக்கு காரண்மாக தியானத்தை பதிலாக கூறினார்.

மறுநாள் முதல் தினமும் பத்து நிமிடம் கண்களை மூடி தியானிக்க துவங்கினேன் . முதன்முதலாக ஜே .கிருஷ்ணமூர்த்தியையும், ஆட்டோபயோகிராபி ஆப் யோகி நூலையும் வாசிப்பதற்கு அவரது பேட்டிகள் ஒரு உந்துதல். அன்று தொடங்கி இன்று இமயமலைக்கு நான் பயணிப்பது வரை ரஜினி எனக்கு முன் மாதிரி

பாட்ஷா பட வெற்றி விழாவில் அவரது துணிச்சலான பேச்சில் அரசியல் த்ன்னுணர்வை கண்டு வியந்தேன்

இவையனைத்தையும் விட அவரிடம் நான் கண்டு வியந்த பெருங்குணம் த்ன்னை எதிர்ப்ப்வ்ர்களை  மன்னித்து அரவணைக்கும் பேருள்ளம் .

அதை  என் வாழ்க்கையிலும் கடைபிடித்து அத்ன் பலனை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்

இவ்வளவுதூரம் அவரால் உந்தப்ட்டும் ஒரு முழு முதல் ரசிகனாக இருந்த நான் முத்ன் முறையாக அவர்மேல் அதிருப்தி கொண்டது அவரது 25 வது ஆண்டின் வெற்றி விழாவையொட்டி ரசிகர்களிடம் அந்த விழாகுழு நடந்து கொண்ட விதம் 


இமயம் அள்வுகு உயர்ந்த ரஜினியா இப்படி
அவருக்காக உயிரையும் த்ர துணிந்த பல லட்சம் பேரின் அன்பை வியாபாரமாக்கிய அந்த தந்திர மூளை நிச்ச்யம் அவருடையதாக இருக்காது என நம்பினேன்

எனக்கு அவர் மிதான  இரண்டாவது அதிர்ச்சி பாபா பட பாடல் கேசட் விநியோகத்தின் போது

இதுவரை த்மிழ் சினிமா வரலாற்றில் எந்த படத்துக்குமில்லாத எதிர்பார்ப்பு இருந்த போது.. அதனை மேலும் பணமாக்கும் வித்மாக கடையில் வாங்கவேண்டிய கேசட்டை ஒரு சிறு வியாபரியின் குறைந்த வருமானத்தையும் பிடுங்கும்விதமாக  ரசிகர்களை சினிமா கவுண்டரில் வரிசையில் முண்டியிடவைத்து அதிகபடச விலைக்கு விற்று அவர் பெய்ரை வைத்து பலர் பணம் சம்பாதிக்க  அனுமதித்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை .

இப்படியாக தீவிர ரஜினிரசிகனாக அவரால் மன எழுச்சிக்கு ஆட்பட்டு சுயவாழ்க்கையில் பெரும் உயரங்களை கண்டடைய அவாவுடனிருந்த  என்னை மேற்சொன்ன சம்பவங்கள் அவர் மீதான் ஈர்ப்பில் இடைவெளியை உண்டாக்கின

காவிரி மற்றும் இலங்கை ப்ரச்னைகளில் அவர் என் கருத்தோடு ஒத்துவராதவராக இருந்தாலும் பலர் அவரை முன் வைத்து அரசியல் காய் நகர்த்துவதையும் அறிந்திருந்தேன் . அத்னால அவர் சமநிலை தவற நேர்ந்ததையும் எண்ணி வருத்த முற்றேன்
எந்திரன் படத்தில் அவர் நடித்தது குறித்து மிகவும் வருத்த முற்றேன். குழந்தைகள் முதல் பெருஇயவர் வரை ரசிக்கும் மனிதர் தீமையை வலியுறுத்தும் பாத்திரத்தை தூக்கி பிடித்தது எனக்கு மிகுந்த மன வருத்தத்தையே தந்தது. உண்மையில் ரஜினிக்கு எந்திரன் கடைசி படமல்ல . அவர் இன்னும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ப்டத்தை தரவேண்டும் வயதுகேற்ற பாத்திரத்தில் அவர் முன்னிலும் சூப்பர் ஸ்டாராக அவர் ஜொலிக்க முடியும். உள்ளத்தாலும் எண்ணத்தாலும்  உயர்ந்த நிலைகொண்ட  ரஜினி என்னை போல பல இளைஞர்கள்  உருவாக காரணமாக இருந்தவர் .இளைஞர்களுக்கு அவர் கொடுத்தநம்பிக்கையும் உத்வேகமும் ஒரு சமூகம் எளிதில் பெற முடியாதது .



பாப்லோ நெருடா வாழ்வும் கவிதைகளும்

காதல் இயற்கை புரட்சி மற்றும் வெங்காயம்                                               - அஜயன் பாலா பாப்லோ நெரூடா ( Pablo Neruda, 1904–1...