தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காட்பாதர் (பாகம் 1) திரைக்கதை நூலுக்கான
முன்னுரை
- அஜயன்பாலா
நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
போலத்தான் நன்மையும் தீமையும்
தங்களுக்கு சாதகமாக இருப்பற்றை நன்மை என்றும் எதிரானவற்றை தீமை என்றும் அதிகார வர்க்கங்கள்
காலம் காலமாக வகைப்படுத்தி வந்துள்ளன..
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள்
.. தங்களை வாழ்வித்துக்கொள்ள தங்களது
நியாயங்களை மீட்டெடுக்க அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான மாற்று சக்திகளை உருவாக்க
முயல்கிறபோது வன்முறையும் களவும் தவிர்க்கமுடியாத
காரியாங்களாகிப்போகிறது.
பிற்பாடு அவர்கள் கொலைகாரர்களாகவும்
கொள்ளைகாரர்களாகவும் திருடர்களாகவும் இயங்கி கடைசி வரை நிழல் உலக வாழ்க்கையை
வாழ்ந்து மடிந்து போகின்ற்னர். இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் இறுதிவரை
நிம்மதியிழந்து வாழ்வின் ஜீவ சாரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல்
காவல் நிலையம் சிறை நீதிமன்றம் எனற வட்டத்துக்குள் சிக்கி குற்றவுணர்ச்சியை
பரிசாக பெற்று வாழ்வை முடித்துக்கொள்கின்றனர்.
உலகில் இவர்களுக்கான அறத்தை பேசி அதை
தத்துவமாக்கியவர் நீட்ஷே கடவுள் இறந்துவிட்டார் எனும் அவருடைய கூற்று
புகழ்மிக்கதாக இருந்தது. அதிகார வர்க்கம் எப்போதும் கடவுளையும் அதன் வழி புனிதத்தையும்
மையமாக கொண்டே கட்டமைக்கப்படுவதால் நீட்ஷே கடவுளை சாகடிக்க வேண்டிய கட்டாயம்
தேவையாகிப்போனது.
நீட்ஷே வுக்கு பிறகு ஜெனெ
இலக்கியரீதியாக் இந்த கருத்தாக்கத்துக்கு மதிப்புகூட்டினாலும் காட்பாதருக்கு பிறகுதான் கெட்டவர்களுக்கான அறம்
சமூகத்தில் ஒரு மதிப்பீட்டை பெற்றது.
நாயகன் கெட்டவனாக இருக்கும் படங்கள் அங்கீகாரம் பெற்றன .
அமிதாப்பும் ரஜினியும் இவர்களது பிரதிநிதிகளாக
உருவெடுத்தார்கள்.ஏழ்மைதான் இவர்களை இப்படி ஆக்குகிறது என்பதை மக்களும்
இதன்பிறகுதான் புரிந்து கொள்ளத்துவங்கினர் .
காட்பாதர் செய்த மகத்தான சாதனை இது தான்
. தத்துவார்த்த ரீதியாக சமூகத்தில் தீமையின் பிறப்பிடத்தை பற்றிய நியாயத்தை பேசி
அதற்கு கலைக்கான அந்தஸ்தை உலகம் முழுக்க
உருவாக்கியதும் அடையாளப்படுத்தியது
இத்வே காட்பாதர் திரைக்கதையின்
கலாபூர்வ வெற்றிக்கு அடிப்படை .
மரியாபூசோ இதனை முதன் முதலில் நாவலாக
எழுதியபோது சாதாரண த்ரில்லராகத்தான் இருந்தது. ஆனால் அது இலக்கியமானது பிரான்சிஸ்
போர்ட் கொப்பல்லோ வின் திரைக்கதை மூலமாகத்தான்.
இன்றும் உலகின் மிகச்சிறந்த படங்களின்
பட்டியலில் குரசேவா பெலினி கோதார்ட் பெர்க்மன் படங்களைபோல கமர்ஷியல் படமான காட்பாதருக்கும் ஒரு இடம்
கிடைத்துள்ளது என்றால் அதற்கான முழு முதல் காரணம் மேற் சொன்னவைகள்தான்
அத்தகைய திரைக்கதையை தமிழில் நாதன்
பதிப்பகம் மூலமாக் கொண்டுவருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வெகுநாளாக நான்
முயற்சித்து நேரமின்மை காரணமாக முடியாது போன காரியத்தை நண்பர் ராஜ்மோகன் மிக
குறைந்த அவகாசத்தில் திறமையாகவும் முழுமையாகவும் நிறை வேற்றியிருக்கிறார்.
இந்த நூலை வாசிப்பது மக்கத்தான்
இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்பட நூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை
மனித வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நமக்கு வாய்ப்புள்ளது.
திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என
சில வார்த்தைகளின் முழுமையான் அர்த்தம்
இந்நூலை வாசிக்கும்போது நமக்கு விளங்கும்
மேலும் சிலர் இப்படத்தை நூறுமுறை பார்த்திருக்கக்கூடும்
.ஆனால் அப்போதும் புலப்படாத படத்தின் சில முக்கிய அம்சங்கள் இந்நூலை வாசிக்கும்
போது புலப்படக்கூடும்
தமிழ் திரைப்பட சூழலுக்கும், திரைக்கதை
பயில்பவர்களுக்கும் ,உலக சினிமா ரசிகர்களுக்கும் ,இலக்கியவாதிகளுக்கும் நாதன்
பதிப்பகத்தின் மகத்தான் பரிசு
இந்நூல்
ராஜ் மோகன் கடும் உழைப்பாளி, இலக்கிய
ஆர்வமும் திரைப்படத்தின் மீதான் காதலும் கொண்டவர். எதற்குமே மறுப்பு சொல்லாமல்
முடியும் முடித்துவிடலாம் என நம்பிக்கையுடன் பேசுபவர். அதுபோலவே முடிக்கவும் கூடியவர்
.
அவரிடம் இவ்விஷயம் குறித்து நான்
சொன்னதுமே உடனடியாக ஒப்புக்கொண்டு துரிதமாக காரியத்தை செம்மையாக நிறைவேற்றி
தந்துள்ளார்
அவருக்கு இது முதல் நூல். அவருக்கு
இந்நூல் பெருமை சேர்க்கும்
என் அன்பான வாழ்த்துக்கள்
அஜயன் பாலா
எழுத்தாளர் & பதிப்பாசிரியர்
நாதன் பதிப்பகம்
No comments:
Post a Comment