May 4, 2016

முன்னுரை - பொன் ரவீந்திரனின் தனிமையை பருகும் கோப்பைகள்

முன்னுரை


முன்னுரை

பொன் ரவீந்திரனின் -
தனிமையை பருகும் கோப்பைகள்

இந்த கவிதைகள் ஆபத்பாந்தவனாக எனை அதுவே வந்தடைந்ததாக நான் கருதுகிறேன். எனது முந்தைய இலக்கிய செயல்பாடுகளை அறிந்தவர்கள் இதனை நன்கு உணர முடியும். இக்கவிதைகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தில்
காலத்தின் பக்கங்கள் 2002 நவம்பர் மாதத்தில் புரள்கிறபோது மையிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த என் நூதன புத்த்கவெளியீடு காட்சிகளும்   தொடர்ந்து அந்நிகழ்வில் பங்கேற்ற கவிஞர்களுடன்   பாரீஸ் பேருந்து நிலையத்தை ஒட்டிய மதுவிடுதியில் இதர எளிய பகல்நேர குடியர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்ட  கவிஞர்களின் சந்திப்பும்  மனபிரிண்டரிலிருந்து சடசடவென புகைப்பட பிரதிகளாக  வெளியில்வந்து விழுகின்றன. அன்றைய நாளே கிடத்தட்ட கொண்டாட்டங்களுக்கான நாள். நானும் இதுவரை என் எத்தனையோ இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கிறேன் எத்த்னையோ நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன்.ஆனாலும் அது போல களிப்பு நிறைந்ததொரு நாளை என் வாழ்வில் இதுவரை கண்டடைந்ததில்லை.அது எனக்கு மட்டுமல்ல நிகழ்வில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் அப்படியாகத்தான் இருந்தது. பிற்பாடு இந்நிகழ்வு குறித்து பெரும் சர்ச்சைகள் மூண்டபோது அந்நிகழ்வில் கலந்து கொண்ட யூமா வாசூகி அது குறித்து ஒரு சிற்றிதழில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருந்த போது அவ்விலக்கிய நிகழ்வின் உள்லார்ந்த ஆன்மீக செயல்பாட்டை அழகாக அடிக்கொடிட்டிருந்தார்.

உண்மையில் இன்று நினைத்துபார்க்கிறபோது ஆச்சர்யமாவும் வியப்பகவும் இருக்கிறது அந்நிகழ்வு. அன்று அந்நிகழ்வில் பங்கேற்ற பலகவிஞர்கள்.சிமோகன்.,யூமாவாசூகி, சங்கரர்ராம சுப்ரமணியம், யவனிகா ஸ்ரீராம் என தமிழில் இன்று முன்னணிகவிஞர்கள் அனைவருமே அன்று அந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இப்போது நினைக்கிறபோது மன இறுக்கங்களுக்கு மாற்றாக காலம் மதுவை முன்னிறுத்த வேண்டி அல்லது அதற்கு சமூக மதிப்பீட்டை உருவாக்க வேண்டி அன்று எங்களை பகடையாக பயன்படுத்திக்கொண்டதோ என்றும் எண்னத்தோன்றுகிறது. ஏனென்றால் இரண்டுவிஷ்யங்கள் இது தொடர்பாக எனக்கு முக்கியமானதாக படுகிறது. அந்நிகழ்வு பிற்பாடு பவணிகபத்திரிக்கைகளில் திரிக்கப்பட்ட செய்தியாகி பின் தொடர் மதுவிடுதி இலக்கிய கூட்டங்களுக்கு அடிகோலியதும்
 தொடர்ந்து ஐடி யுக எழுச்சி காரணமாக நகரத்தின் மாறுதல்காரணமாக டாஸ்மாக்குகள் நிரம்பி வழிந்து பின் மது குறித்தான்ன மதிபீடுகள் சமூகத்தில் மாறத்துஅவங்கியதும் இதில் கூர்ந்து கவனிக தக்க அம்சமாக கருதுகிறேன் . காரணம் அன்று எங்களின் குடி நிகழ்வை கடுமையாக எதிர்த்த பல ஒழுக்க எழுத்தாளர்கள் பிற்பாடு குடி கலாச்சரத்தையும்  அதுகுறித்து எழுதுவதையும் தங்களின் பெருமைகளில் ஒன்றாக கருதத்துவங்கினர். நாஞ்சில் நாடன் போன்ற கலாச்சாரம் சார்ந்து அதன் மாண்பை எழுதக்கூடிய எழுத்தாளர்களே  டாஸ்மார்க் பார் கலின் செயல்பாட்டை பற்றி பெரும்பத்திரிக்கையில் எழுத வேண்டிய காலத்தின் நிர்பந்தங்கள் ஏற்பட்டன. இப்படியான செயல்பாடுகளை வைத்து பார்க்கிற போது அன்றைய எங்களின் அந்த புத்தக வெளியீட்டு நிகழ்வை பெரு மழைக்கு முன்பாக பறவைகள் இடம் பெயர்வதையும்  பஞ்சத்துக்கு முன்பாக வீதிகளில் எலிகளின் நடமாட்டத்தையும் போலவே கருதுகிறேன்.


காலச்சாரத்தில் கவிஞனின் செயல்பாடுகள் பல இடங்களில் அப்படியாகத்தான் நிகழ்ந்து வருகிறது.பெரும்பாலும் மொழியின் மூலமாக அவன் எழுதும் கவிதைகளின் வாயிலாக சில சொற்களை மாற்றி போட்டு அவன்  நிகழ்த்தும் மாயங்கள் பிற்காலங்களில் சமூகத்தின் பெரும் மாறுதல்களுக்கான அடிப்படை காரணிகளாக மாறிவிடுகின்றன.அவன் அக்கலத்தில் சொற்களின் மூலமாக உண்டாக்கும் கலகம் பலருக்கு அதிர்ச்சிகளையும் ஏற்கவியலாததன்மைகளையுமே  தோற்றுவிக்கும்.முள்ளை முள்ளால் எடுப்பது போல மனித மனதுள் சொற்களால் கட்டமைக்கப்பட்ட உலகை மாற்றியமைக்க அல்லது புணருத்தாரணம் செய்ய அல்லது  தலைகீழாக புரட்டி போட  சொற்களாலாயே செய்ய வேண்டியிருக்கிறது.

இத்தகைய சூழலில்தான் பொன் ரவீந்திரனின் தனிமையை பருகும் கோப்பைகள் எனும் இந்த கவிதை தொகுதியை நான் கவனத்தில் எடுக்கிறேன்.இதில் உள்ள கவிதைகளில் பூடகம் இல்லை.பெரும் கவித்துவ ஆளுமையோ மொழி பிரவாகமோ இல்லை.ஆனால் எளிமை இருக்கிறது.மட்டுமல்லாமல் இச்சமூகம் வெறுத்து ஒதுக்கும் அல்லது ஏற்க தயங்கும் ஒரு இருள் உலகம் இருக்கிறது. இப்படியான இருள் உலகங்கள் கவிதைகளாக உருப்பெறுவதன் மூலம் உண்டாகும் அரசியல் மாற்றங்கள் மறைமுகமானவை. முதல் பார்வைக்கு இவை வெறுமனே குடியை பற்றி அந்த உலகை பற்றி பேசுபவையாக இருந்தாலும்  இவை சமூகத்தின் நிராகரிக்கப்பட்ட விஷ்யங்களை பொதுத்தளத்துக்கு கொண்டு வந்து அவற்றிற்கு ஒரு பொது மதிப்பீட்டை உருவாக்கிதருகின்றன. மேலும் இந்த நவீன உலகம் நம்மை சுற்றி உருவாக்கிவரும் அபாயத்திற்கு நகர்சார்ந்த அறமதிப்பிடுகளும் நடுத்தர குடும்பங்களும் முழுதாக இசைந்து கொடுத்து  அழிவுக்கு கட்டியம் கூறுகிறபோது அந்த மதிப்பீடுகளை களைத்து போட்டு எதிர் ஆட்டம் ஆடுவதற்கு இது போன்ற கலக கவிதைகள் அவசியம் தேவைப்படுகின்றன.

-          அஜயன்பாலா

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...