July 12, 2025
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷியாம்பெனகல். துல்லியமான காட்சிமொழி, அழுத்தமான திரைக்கதை, எதார்த்த காட்சியமைப்புகள் ஆகியவை ஷியாம்பெனகலின் பலம். ஆந்திரமாநிலம் ,செகந்திராபாத்தில் பிறந்தபெனகல், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துவிட்டு சினிமா மீதான ஆர்வத்துடன் ஹைதராபாத் பிலிம்சொசைட்டி ஒன்றை நண்பர்களுடன் துவக்கினார்.இவரது சினிமா ஆர்வத்தைத் தூண்டிவிட்டதில் முக்கியகாரணமாக இருந்தவர், அவரது தூரத்து உறவினர் ஒருவர்.அவர்,புகழ்பெற்ற இயக்குனர்.பியாசா எனும் காவியத்தைத் தந்தகுருதத்தான். குருதத்தின் பாட்டியும் ஷியாம்பெனகலின் பாட்டியும் அக்காதங்கை ஆவர்.
பட்டப்படிப்புமுடித்தகையோடு,புனாபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்குனர் பிரிவில் மாணவராகச் சேர்ந்தவர், துவக்கத்தில் ஆவணப்படங்கள் இயக்குவதில் ஆர்வமாக இருந்தார். 1974இல் ,இவர் இயக்கிய முதல் முழுநீளப்படம் ,ஆங்கூர். ஷப்னாஆஸ்மி-ஆனந்த் நாக் இருவரையும் அறிமுகப்படுத்திய இந்த முதல்படமே, தேசிய விருதைப்பெற்றதோடு இந்தியா சார்பாக ஆஸ்கார் விருதுக்காக அந்த வருடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. 1975இல் வெளியான மூன்றாவது படம்Nishant.இது, அந்தஆண்டுக்கான கான் விருது போட்டிப்பிரிவில்தேர்வுசெய்யப்பட்டிருந்தது.
அடுத்த படமான மாந்தன், குஜராத்தின் வெள்ளைப் புரட்சி என்றழைக்கப்படும் கிராமகூட்டுறவுபால் பண்ணைகள் பற்றியது.
ஹன்ஸாவடேகர் எனும் மராத்தி நடிகையின் வாழ்க்கையை அடி யொற்றி,ஸ்மிதாபாட்டீல் நடிக்க ,இவர் இயக்கிய பூமிகா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1985இல்,இவர் இயக்கிய சத்யஜித்ரே குறித்த ஆவணப்படம் இவரது முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. இதுவரை இவர் எடுத்துள்ள 25 முழுநீளப்படங்களில் மண்டி, மம்மோ, சர்தாரீபேகம்ஜுபைதா போன்ற படங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
1981இல்,இவர் இயக்கத்தில் வெளியான கலியுக்,மாஸ்கோதிரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான தங்கம் வென்றது. இவரின் பத்துக்குக்கும் மேற்பட்ட படங்கள்,இந்தியாவின் சிறந்த படங்களுக்கான தேசிய விருதைப்பெற்றுள்ளது.வாழ்நாள் சாதனைக்காக ,இந்தியசினிமாவின் உயர்ந்த விருதான தாதாசாகிப்பால்கே விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
தென்னிந்தியாவின் முதல் நாயகி மற்றும் முதல் பெண் இயக்குனர் திருவையாற...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...
No comments:
Post a Comment