May 18, 2011

செம்மொழி சிற்பிகள் : ஞானியரடிகள்

திருப்பதிரிப்புலியூர் மடத்தலைவர் .தமிழ் பற்றாளர்.மறைமலையடிகளுக்கும், குன்றக்குடிஅடிகளுக்கும் தமிழ்பற்றில் முன்னோடி. .மடாதிபதிகள் அனைவரும் வடமொழிக்கு வால் பிடித்து அலைந்துகொண்டிருந்த காலத்தில் செந்தமிழில் பேசி தன் உணர்வை வெளிப்படுத்தியவர்.1942ல் பெரியார் அவர்களின் குடிஅரசு முதன்முதலாக ஈரோட்டில் வெளியிட்டவர் ’

ஞானியாரடிகள்
பிறப்பு: 17-05-1873

திகும்பகோணத்தில் திருநாகேசுவரத்தில் பிறந்தவர்.தந்தை அண்னாமலை ஐயா,தாயர் பார்வதி அம்மையார்.ஞானியார் பிறந்தவுடன் அவர் பெற்றோர் அவருக்கிட்ட பெயர் பழனியாண்டி. திருகோவலூர் மடத்தின் நான்காவது பட்டம் ஆறுமுக சிவாச்சாரியாரின் வேண்டுகளுக்கிணங்க, பிறந்த நான்கு மாதத்திற்குள் குடும்பம் திருப்பதிரிபுலியூருக்கு குடிபெயரே அதுமுதல் அதுவே அவரது இருப்பிடமானது. சிறுவயதுமுதலே துறவுமேற்கொண்டு அனைத்தையும் துறந்தாலும் தமிழ் பற்றை மட்டும் இவரால் துறக்கவே முடியவில்லை. .திருப்பதிரி புலியூர் தூய வளனார் பள்ளியில் கல்விகற்றார். தமிழ் தவிர சென்ன கேசவ நாயுடு என்பவர் மூலம் தெலுங்கும், இராமநாத சாத்திரி மூலம் வடமொழியும் கற்று தேர்ந்தார்..

திருப்பாதிரிபுலியூருக்கு சொந்தமான திருக்கோவிலூர் மடத்தின் தலைவர் ஆனதும் தினந்தோறும் தமிழ் அறிஞர்களை மடத்திற்கு வரவழைத்து சொற்பொழிவை நிகழ்த்தினார். உடன் அவ்வப்போது இவரும் சொற்பொழிவுகள் செய்தார். சென்னையிலிருந்து திரும்பும்போது ஒருமுறை திருப்பதிரிபுலியூர் மடத்துக்கு வந்த வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் ஞானியாரடிகளின் பேச்சை கேட்டபிற்பாடுதான் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் எனும் ஒன்றை தோற்றுவித்தார்.

1900ல் ம்டத்திற்குள் வாணிவிலாச சபை எனும் ஒன்றை ஞானியாரடிகள் துவக்க அத்னை வள்ளல் பாண்டித்துரைத்தேவரே வந்து துவக்கிவைத்தார்..பின் தமிழை கற்பிக்க மடத்துக்குள்ளேயே செந்தமிழ்கல்லூரி எனும் தமிழ் கல்லூரி ஒன்றையும் துவக்கினார்.இக்கல்லூரியில் படித்தபலர் பின்னாளில் பெரும் பண்டிதர்களாக உருவெடுத்த்னர். புதுவை சுந்தர சண்முகனார்,அண்ணாமலை பலகலைகழகதலைவர் மு.இராசக்கண்ணனார்,மற்றும் பச்சையப்பன் பள்ளி தலைமை ஆசிரியர் வச்சிரவேலு முதலியார் ஆகியோர் இவரது மாணாக்கர்களே.
இதர மடத்தலைவர்களை ஒருமடத்தலைவர் சந்திக்காதசூழலில் ஞானியார் தமிழ் வளர்க்க அவரே நேரில் சென்று இதரமடத்தலைவர்களை சந்தித்துஅங்கு தமிழ் கல்லூரிகள் தொடங்க ஆலோசனை சொல்லி அதனபடி அவர்களை துவக்க வைத்தார்.

தென்னாற்காடு வழக்காடுமன்ற தலைவர் நல்லசாமி பிள்ளை என்பவருடன் இணைந்து சைவ சித்தாந்த மகாசாமசம் எனும் அமைப்பை துவக்கி அதன் மூலம் சித்தாந்த தீபிகை எனும் இதழையும் துவக்கினார். பின் அதே அமைப்பின் மூலம் திருப்பதிரிபுலியூரில் 02-09-1918 அன்று மறைமலையடிகள் தலைமையில் நடத்தப்பட்ட சைவ மாநட்டில்தான் முதன்முதலாக தமிழை உயர்தனி செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. .ஞானியாரின் தமிழ் பற்றை வடமொழியை ஆதரிக்கும் கும்ப்கோணம் மடத்தினர் கடுமையாக எதிர்த்த்னர். ஆனால் ஞானியார் அவர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தமிழ் பணியை தொடர்ந்தார்.

திலகவதிஅம்மை துதி,ஞானதேசிக மாலை,திருப்பதிரிப்புலியூர் தோத்திர கொத்து,போன்ற நூல்களை எழுதியும் யும்,திருப்பதிரிபுலியூர் புராணம்,மற்றும் அவிநாசி நாதர் தொத்திர கொத்து போன்ற நூல்களையும் பதிப்பித்துள்ளார்.



இறப்பு: 31-01-1942

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமையாகப் பதிந்து உள்ளீர்கள், நன்றிகள்

இராஜராஜேஸ்வரி said...

ஞானியரடிகள் பகிர்வுக்கு நன்றி.

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...