April 20, 2016

வ.சுப. மாணிக்கனார்

செம்மொழி செம்மல்கள்
வ.சுப. மாணிக்கனார்
.
இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு
அவரது தமிழ் பணிக்கு  என் சிறுவணக்கம் 

திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் ஆகிய இரு நூல்களையும் நுணுகி ஆய்ந்து அவற்றின் சாரத்திலிருந்து தமிழர்களுக்கான அறத்தையும் அவர்களது வாழ்வையும் கண்டெடுத்து  நூல்களாக மாற்றிதந்த சீரிய ஆய்வாளர் வ.சுப மாணிக்கனார்.



புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்த அண்ணாமலை எனும் இயற்பெயர் கொண்ட மாணிக்கனாரின் தந்தை சுப்பையாசெட்டியார்,தாயார் தெய்வயானை. பிறப்பு 09-04-1917..மாணிக்கனாரின் சிறுவயதிலேயே தாயும் தந்தையும்  இயற்கை எய்திவிட துயுருற தனித்து நின்ற தளிராம் மாணிக்கனாரை அவரது பாட்டியார் மீனாட்சி அவர்களின்  அன்புள்ளம் அரவணைத்துக்கொண்டது.


மேலைச்சிவபுரியில் திரு. நடேச அய்யரிடம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்,நல்வழி, நன்னெறி,மற்றும் மூதுரை போன்ற நீதி நூல்களை கற்றார்.பள்ளி படிப்பு முடிந்ததும் வயிற்று படிப்புக்காக பிழைப்பு தேடி பர்மாவுக்கு கப்பல் ஏறினார். .அங்கு வட்டிகடையில் சிறு கணக்கராக சிலவருடங்கள் பணீயாற்றிவந்தார். பணிநிமித்த்மாக  சிறு பொய் சொல்ல நேரிட்டபோது மனம் இசைவு கொள்ள மறுத்து கப்பலேறி  தாய்மண் திரும்பினார்.ஊரில் இச்செய்தி அறிந்தவர்கள் அவரை பொய் சொல்லா மாணிக்கம் என அழைக்க அதுவேதழைக்கவும் துவங்கியது.

 தமிழார்வம்   மீண்டும் மாணிக்கனாரை அழைக்க அண்ணாமலை பல்கலைகழகத்தில் சேர்ந்து பயிலதுவங்கினார்.பயிலும் காலத்தில் இவரது தமிழ் ஆர்வத்தையும் ஆய்வு திறனையும் கண்டு வியந்த பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அண்ணமலைபல்கலைக்கழகத்திலேயே அவருக்கு விரிவுரையாளர் பணியும் வாங்கிதந்தார். தமிழாசிரியப்பணி என்பது மாணாக்கருக்கு கற்றுதருவதோடு நிற்பதல்ல அது ஒரு தொண்டுபணி என எண்ணம் கொண்ட மாணிக்கனார் இரவுபகலாக தன் எழுத்துபணிக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்

தொல்காப்பியம் ,திருக்குறள் ஆகிய இரண்டையும் கண்களாக கொண்டுவாழ்ந்தவர். தொல்காப்பியக்கடல், திருக்குறட் நெறி, சங்க நெறி, வள்ளுவம் ,கம்ப நெறி, காப்பிய பார்வை,தமிழ் காதல் மற்றும் இலக்கியச்ச்சாறு போன்ற ஆய்வு நூல்களை தமிழர் பண்பாட்டு கண்ணோட்டத்தோடு எழுதி வெளியிட்டார். மட்டுமல்லாமல் நாடகங்கள் கவிதை தொகுப்புகள் மொழிபெயர்ப்புகள் ஆங்கில நூல்கள் என இவர் எழுதிய நூல்கள் மட்டும் மொத்தம் இருபத்திரண்டு.

இவரது தமிழ்ப்பணிகாரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழக
துணைவேந்தர் இருக்கை  இவரைத் தேடி பெருமைபடுத்தியது. . இன்றும்
சிறந்த துணைவேந்தருக்கான் முன்மாதிரியாக அவரைகுறிப்பிடுவது ஒன்றே அவர் இலக்கணமாய் வாழ்ந்த வாழ்வுக்கு சான்று.

"தமிழ் வழி கல்வி இயக்கம்" என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் தமிழ் பரப்ப, தமிழ் யாத்திரை மேற்கொண்டார் 

செம்மல், முதுபெரும் புலவர்,மற்றும் பெருந்தமிழ்க்காவாலர் ஆகியவை இவரது தமிழ் சேவைக்கு சூட்டப்ட்ட நற் பட்டங்கள் .

தமிழக அரசு இவருக்கு வள்ளுவர் விருது அறிவித்து அவரது உழைப்பை தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிதது.


மறைவு: 24-4 -1989 

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...