April 30, 2011

ஜேம்ஸ் பாண்டுகளின் அட்டகாசமும் அமெரிக்காவின் கம்யூனிச பயமும்


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் -31



ஜேம்ஸ் பாண்டுகளின் அட்டகாசமும் அமெரிக்காவின் கம்யூனிச பயமும்




காதலியாக நடித்த காரிகை காட்டிகொடுத்துவிட்டாள். வெளியில் எதிரிகள் வரும் சத்தம். சடாரென கத்வை திறந்துகொண்டு படிகட்டில் ஏறுகிறான். பின்னால் துப்பாக்கீயுடன் துரத்தும் எதிரிகள் . கதவை திறந்தால் மொட்டை மாடி....சுற்றிலும் பெருநகரம்.. பெரும் காற்று தப்பிக்க வழியே இல்லை . .கண்ணிமைக்கும் நேரத்தில் முதுகு பின்னால் துப்பாக்கியுடன் எதிரிகள் வளைத்துவிட்டனர். கீழே அதளபாதாளம்

கைகளை விரித்த்படி அவர்களைநோக்கி திரும்புகிறார் ஜேம்ஸ் பாண்ட் . சரணடையும் தொனியில்

அடியாட்களை விலக்கிகொண்டு வரும் மைய வில்லன் முகத்தில் அனாயசமான சிரிப்பு

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் ..

நீ இப்போது வசமாக மாட்டிக்கொண்டய் .. உன் இறுதி பிரார்த்தனைக்கு ஒரு நிமிடம் எடுத்துக்கொள்

ஒரு நொடி ஜேம்ஸ்பாண்ட் அந்த வில்லனை பார்ப்பார்

அடுத்து என்ன நடக்க போகிறது என தியேட்டரில் அனைவரும் கண்ணை விரித்துக்கொண்டு சீட்டின் நுனியில் அமர்ந்திருப்பார்கள் .


உலகம் முழுக்க வெற்றிபெற்ற ஹேம்ஸ் பாண்ட் படங்களின் பின்னிருந்த வெற்றி ரகசியம் இதுதான் .

பார்வையாளனை முழுதாய் கட்டிபோடும் த்ரில்லான சம்பவங்கள் விறுவிறுப்பான திரைக்கதை. பிரம்மாண்டமான காட்சிகள்.வியக்கவைக்கும் தொழில் நுட்பம் இவைதான் அவற்றின் சூத்திரம் .இவற்றோடு இன்னொன்றும் அது ஜெம்ஸ் பாண்ட் கதாபாத்திர சித்தரிப்பு .

அவர் துணிச்சலும் புத்திசாலித்தனமும் நிறைந்த்வர். அவர் அசகாய சூரர்.சுலபத்தில் பெண்களிடம் மயங்காதவர். எதையும் செய்வார் எப்படியும் செய்வர்.

ஆனால் உண்மையில் யார் இந்த ஜேம்ஸ் பாண்ட் என ஆராய்ந்தால் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அதற்கு தலைகீழ்

ஆம் கோழைத்த்னம் பயம் இவற்றின் காரணமாக உருவாக்கம்
கொண்டவர்தான் இந்த அசகாய வீரர் ஜேம்ஸ்பாண்ட்.

ஜேம்ஸ் பண்ட் என்பவர் தனி நபர் அல்லர்.அவர் ஒருநாட்டின் சமூகத்தின் பிரஜை .

அமெரிக்காவோடு எந்த நாடு எப்போதெல்லாம் முரண் கொள்கிறதோ ஜேம்ஸ் பாண்டின் அடுத்தவில்லன் அவராகத்தான் இருப்பார்

இப்படியாக துவக்கத்தில் ரஷ்யா அடுத்து கியூபா ஈராக் என தன் வில்லன்களின் பட்டியலை அது தன் எதிரி நாடுகளிடமே இனம் கண்டது


இதைபற்றி இன்னும் விரிவாக தெரிவதற்குமுன் இந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களைபற்றி மேலோட்டமாக தெரிந்துகொள்வோம்


Ian Lancaster Fleming (28 May 1908 – 12 August 1964)

இயான் பிளமிங் லண்டனை சேர்ந்தவர்.
இவர்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் கதைகளை முதலில் நாவலாக உருவாக்கியவர்.
அப்பா வாலண்டைன் பிளமிங் இங்கிலாந்து மாநிலங்களவை உறுப்பினர்.தாயார் எவ்லின் . துவக்கத்தில் பத்திரிக்கையாளராக பணியற்றிய ப்ளமிங் இரண்டாம் உலகப்போரின் போது
ராணுவ வீரராகவும் பின் லெப்டினட் கமாண்டராகவும் அதன் பின் கமான்டராகவும் பதவி உயர்வு பெற்று களத்தில் பேர் கண்டவர்.. ஹிட்லரது நாஜிபடைகளின் கப்பல் படைகளை கண்டறிந்து அவற்றை நிர்மூலமாக்குவதர்ற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திக்கட்டியவர் . குறிப்பாக உளவு வேலைகளில் அவர் காட்டிய புத்திசாலித்தனம்தான் அவரது அடுத்தடுத்த உயர்வுகளுக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியது போருக்குபிறகு இந்த அனுபவங்களை வைத்து நவலாக எழுத முடிவு செய்த ப்ளமிங் அதற்காக அமர்ந்து எழுத நிம்மதியான ஒரு இடம் தேடினார் . அப்ப்பொது அவரது நண்பரும் பறவைகள் கவனிப்பாளரும் எழுத்தாளருமான பாண்ட் என்பவர் ஜமைக்காவில் இருந்த தன் தோட்டத்தில் இடம் தந்தார். ஆனால் அந்த இடத்தைகாட்டிலும் அவரது மகனின் பெயர் பிளமிங்கை வசீகரித்தது. ஜேம்ஸ்பாண்ட் .அடிக்கடி முணூமுணுத்து பார்த்தார். பிடித்துபோக அப்போது உருவான பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட். காஸினோ ராயல் எனும் அவரது அந்த முதல் நாவலில்தான் 007 என்ற எண்ணோடு சேர்த்து ஜேம்ஸ்பாண்டை பிளமிங் அரிமுகம் செய்வித்தார்.அந்த புத்த்கம் வெற்றிபெற வெற்றிபெற அடுத்த பத்து வருடத்தில் பன்னிரண்டு ஜேம்ஸ் பாண்ட் நாவல்களை எழுதிமுடித்து வீடுபேறையும் பெற்ருக்கொண்டார்

உண்மையில் இன்று பாண்ட் படங்களுக்குபின்பாக பேசப்படும் அமெரிக்க அரசியலுக்கும் பிளமிங்கும் நேரடி தொடர்பில்லை . ஆனால் அவரது இரண்டாவது நாவல் ரஷ்யாவை களனாக கொண்டு எழுதப்பட அதை வாசித்த அப்போதைய ஜனாதிபதியான ஜான் எப் கென்னடிக்கு அது மிகவும் பிடித்து போனது .காரணம் அன்று அமெரிக்கா முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் பயம். குறிப்பாக ஸ்டாலின் கலத்திய ரஷ்யாவின் அபரிதமான வளர்ச்சி காரணமாக அமெரிக்காவுக்கு ஒரு பயம் இருந்தது. மேலும் இரண்டாம் உலக்போருக்குபின் முதலாளித்துவ நாடுகள் கம்யூனிஸ நாடுகள் என்ற இரண்டுபிரிவாகத்தான் உல்கமே அணிதிரண்டது .

இவற்றில் அணிசேராநாடுகள் மூன்றாம் உலகநாடுகள் என்றும் அணிசேரா நாடுகள் என்றும் தன்னை அறிவித்துக்கொண்டன.இந்தபின்னணி காரணமாக த்ன்னுடைய முதாளித்துவ கொள்கைக்கு எங்கே ஆபத்து நேருமோ என பயந்த அமெரிக்க அரசு நாட்டில் கம்யூனிச ஆதர்வாளர்களை ஒற்று உளவறிந்து தீவிர வேட்டையடிவந்தது. இச்சூழலில் மக்களுக்கு த்ங்களின் தேசத்திடம் இருந்த அபிமானத்தை அதிகரிக்கவும் உலக நாடுகளிடம் குறிப்பாக கம்யுனிச நாடுகளிடம் ஒரு போலியான பிம்பத்தை தோற்றுவிக்கவும் விரும்பியது அமெரிக்க அரசாங்கம் அதற்கான
தக்க சமயத்தில் வந்து சேர்ந்தவர்தான் இந்த ஜேம்ஸ்பாண்ட் . அச்சமயம் அமெரிக்காவின் ஜனதிபதியாக இருந்த கென்னடிக்கு ஜேம்ஸ்பாண்ட் நாவல்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. குறிப்பாக ரஷ்ய எதிர்ப்பு நாவலான ரஷ்யா இன் லவ் எனும் நாவலைபடித்த கென்னடி த்னக்கு பிடித்த நாவல் என வெளிப்படையாக கூற அப்போதுதான் அமெரிக்க மக்கள் ஜேம்ஸ்பாண்ட் நாவலை தேடிபிடிக்க துவங்கினர்.

இப்படியாக தந்திரமாக மக்களிடம் அதன் மீதான மோகத்தை அதிகரித்த கென்னடி பிற்பாடு 1960ல் மரியன் ஓட்ஸ் என்பவர் மூலம் பிளமிங்கை லண்டனிலிருந்து வரவழைத்து பொதுவிருந்தில் சந்தித்தார். அன்று இரவே பிளமிங்கின் நாவல்கள் படமாக்கும் இரகசிய ஒப்பந்தங்களும் முடிவானது.அமெரிக்க அரசாங்கத்தின் எதிரி நாடுகளை பிரதான எதிரியாக சித்தரித்து மேலும் நாவல்கள் எழுதவேண்டும் என்பதும் அதில் எழுதப்படாத ஒப்பந்தம்
அதன்படி பிளமிங்கின் நாவல்களின் படமாக்கும் உரிமைகள் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலருக்கு வழங்கப்பட்டன .ஹாலிவுட்டுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இப்படிப்பட்ட ரகசிய உறவுகள் காலம்காலமாக இருந்து வருவது பலரும் அறியாதது.

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தயாரிக்க முடிவுசெய்தபின் அந்த படத்தை இயக்க பலரது பெயர் ஆலோசிக்க பட்டது அதில் ஹிட்ச்காக்கும் ஒருவர்.
ஆனால் முதல் படமான டாக்டர் நோ வை இயக்கிவர் டெரண்ஸ் யங்.
அதே போல் அப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட்வேடத்தில் நடிக்க பலரது பெயர்கள் பரீசீலிக்கபட்டன.
அதில் சூப்பர்மேனக நடித்து புகழ்பெற்ற கிறீஸ்டோபர் லீயும் ஒருவர்.. இயான் பிளமிங் தன்னுடைய உறவினராக இருந்த காரணத்தால் லீயை பரிந்துரைத்தார் ஆனால் அது நிராகரிக்கபட்டது.பிற்பாடு அதே பாண்ட் வேடத்தில் நடித்த ரோஜர் மூர் பெயரும் முதலில் பரிசீலிக்கப்ப்ட்டது ஆனால் வாய்ப்பு கிட்டியது என்னவோ நடிகர் சீன கானரிக்குத்தான். முதல் படம் உட்பட மொத்தம் ஏழு படங்களில் சீன்கானரி ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்தார்.
சீன்கானரியை காட்டிலும் அதிக படங்களில் பாண்ட்வேடத்தில் வந்தவர் ரோஜர் மூர்தான் . முதல் பாண்ட் வேடம் இவர் ஏற்ற போது இவருக்கு வயது 45 .. யார் சிறந்த பாண்ட் சீன்கானரியா ரோஜர் மூரா என பலரும் பட்டிமன்றமே நடத்தும் அள்விற்கு இருவருக்கும் ஆதரவு இருந்தது. இதன் பிறகு ஜார்ஜ் லெஸன்பி –ஒரு படத்திலும் ,திம்மோதி டால்டன் –இரண்டு படத்திலும்,,பியற்ஸ் பிராஸ்னன் ,-நான்கு படத்திலும்,தற்போது டேனியல் கிரேக் _இரண்டு படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்துள்ளனர்.

சினிமா எனும் கவர்ச்சியான் ஊடகத்தை தன் அரசியலுக்கு லாவகமாக பயன்படுத்திய அமெரிக்க அராசங்கத்தின் இந்த தந்திரங்கள் காலத்தில் செல்லுபடியாகாமல் சரிந்து விழத்தொடங்கிவிட்டன .இந்த அசகாய சூரர்களின் நாயகத்ன்மைகள் எத்தனை போலியானவை என்பதை அமெரிக்க மக்களே இப்போது உணரதுவங்கிவிட்டனர் .

இப்போது சமீபமாக வில்லன்களுக்கான பஞ்சம் காரணமாக நாட்டையும் மக்களையும் விட்டு இயற்கைக்கும் கற்பனை மிருகங்களுக்கும் திருப்பிக்கொண்ட ஹாலிவுட்படங்கள் சமீபத்திய சுனாமிக்கு பிறகாவது எதார்த்துக்கு திரும்புமா என்பது கேள்விக்குறி

3 comments:

Anonymous said...

ஜேம்ஸ் பாண்டுகளுக்கு பின் இப்படி ஒருகதையா.. அடப்பாவிகளா இண்ட்ரஸ்டிங் சார்

Karthikeyan Ganesan said...

Great info bala sir

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஷ்யமான தகவல்கள்.

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...