April 28, 2011

காந்தி மார்க்கட்டில் கள்ள பூனை : ஜெயமோகன் கடிதம் இரண்டு


அன்பர் இனியர் கோராளி ஜெயமோகன் அவர்களுக்கு

நான் சண்டைகளை தவிர்ப்பதற்கு காரணம் இரண்டு
படைப்பின் வலிமை மூலம் மட்டுமே கவனம் பெறுவதை விரும்புகிறேன்

இரண்டாவது நீங்கள் மாட்டடி மாங்காயடிக்காரர்..
வறட்டுத்தன வாதி. தர்க்கத்தை முன்னெடுத்து செல்ல ஒருபோதும் விரும்பாதவர். அதிகமாக பேசுவதன் மூலம் சுயத்தை பெரிதாக்க விரும்புபவர் ..

இந்த இரண்டு காரணங்களுக்காக உங்களது மன்னிப்பு கடிதத்தில் மீண்டும் பல கருத்து பிழைகள் . அத்துமீறல்கள் ஆகியவை கண்ட போதும் தவிர்த்து வந்தேன்.

மேலும் என்னைவிட பாதையில் சில அடிகள் முன்னால் நடந்திருப்பவர். நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டது எனக்கு மமதை ஏற்றிவிடாதிருக்கவும் நான் இரண்டாவது கடிதம் எழுதுவதை தவிர்த்து வந்தேன்.

ஆனால் 28-4 – 2011 அன்று உங்கள் வலைதளத்தில் ராஜேஷ் என்பவருக்கு பதில் அளிக்கும் சாக்கில் என்னை மீண்டும் திட்டமிட்டு சண்டைக்கு இழுத்துள்ளீர்கள்.

http://www.jeyamohan.in/?p=14644


ஐயா தயாபரர், பிரதாபரர் ஜெய மோகன் அவர்களே

காந்திக்கு எதிராக வாதம் செய்கிறேன் என்ற ஒரே காரணத்துக்காக என்னை குப்பை என்று விளம்பியுள்ளீர்கள் ஐயன்மீர்.மகிழ்ச்சி

நான் கேட்பது எல்லாம் என் புத்தகத்தை படித்தீர்களா
தயவு செய்து நான் ஆதாரமற்று ஏதேனுமெழுதியிருந்தால் சுட்டுங்கள். இப்படி பொத்தாம் பொதுவாக முதலில் கிறித்துவன் அப்புறம் இப்போது குப்பை ..

இதெல்லாம் என்ன சார் ..

எதற்கு உங்களுக்கு என் மேல் இத்தனை பகை வெறுப்பு வன்மம். இப்படியே நான் தொடர்ந்து எழுதினால் அகிம்சையின் பேரால் என்னை கொலை செய்யக்கூட ஆளனுப்புவீர்கள் என்றே அஞ்ச தோன்றுகிறது .

எதற்கு இந்த கொலை வெறி ...

ஆதாரம் சுட்டுங்கள் என வாய்கிழிய கத்துகிறேன். அதற்கு கொஞ்சமும் அசையாமல் உங்களுக்கு பிடிக்காத பெரியாரையும் அம்பேத்காரையும் மார்க்ஸையும் எழுதிய ஒரே காரணத்துக்காக என் மேல் தொடர்ந்து வெறுப்பை உமிழும் உங்கள் தந்திரம்தான் என்ன..

புரிகிறது.... உங்கள் கருத்துக்களுக்கு எதிராக புதியதாக ஒருவன் வளர்ந்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தொடர்ந்து இப்படி.கிறித்துவன் குப்பை என அடித்து எழுதுவதன் மூலம் வளர்ந்து வரும் வேளையிலேயே நசுக்கி ஒழிக்க வேண்டும் என திட்டமிடுகிறீர்கள்


நான் நாயகன் தொடரில் இதுவரை பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் மாண்டேலா போஸ்..சே குவேரா ,மார்டின் லூதர் கிங்..சார்லிசாப்ளின் . வான்கா அன்னை தெரசா உள்ளிட்ட பலரது வாழ்க்கையை எழுதியுள்ளேன் அனைத்து புத்தகங்களும் தொடர்ந்து மறுபதிப்புகள் கண்டு விற்பனையாகி வருகின்றன..ஆனால் இதுவரை எந்த ஒரு தகவல் பிழையோ மறுப்பு கடிதமோ வந்ததில்லை .எத்தனையோ பிராமண நண்பர்கள் கூட இப்போதுதான் பெரியார் மற்றும் அம்பேத்கர் அவர்களை புரிந்து கொண்டோம் என வெளிப்படையாக பாராட்டியுள்ளார்கள். உங்களை போல ஆதாரமில்லாமல் எழுதி எவர் முன்பும் மண்டியிட வேண்டிய அவசியம் எனக்கு நேர்ந்தததுமில்லை .

வடிவேலு போல மன்னிப்புக்கு மண்டியிடுவதும் அடுத்த நிமிடமே மார்தட்டுவதையும் தொடர்ந்து உங்களிடம் பார்த்து வருகிறேன். உண்மையில் ஒரு எழுத்தாளனாக உங்கள் நடவடிக்கைகள் கவலையளிக்கிறது.

தயவு செய்து இந்த வெறுப்பை விலக்குங்கள் .ஒருவேளை அதிக சூடுகாரணாமாக இந்த வெறுப்புணர்ச்சி கூடியிருக்கலாம் கன்னியாகுமரியில் வெய்யில் அதிகம் என்பதற்காக நான் என்ன செய்ய முடியும். .தயவு செய்து அருகிலிருக்கும் பெட்டி கடையில் சென்று ஒரு சோடா குடியுங்கள் பிரச்சனை தீரும் ..அதை விட்டு கம்யூட்டர் இருக்கு கை இருக்கு இருக்கவே இருக்கான் அஜயன்பாலா அப்புறம் காந்தி என நினைத்து இஷ்டத்துக்கு கிறுக்கினால் நிச்சயம் நட்டம் எனக்கில்லை

உண்மையில் காந்தியை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது

காந்தியின் புகழ்பெற்ற தத்துவமே அகிம்சைதான். அகிம்சை பரந்த அன்பின் நீட்சி.

ஆனால் உங்கள் கடந்த காலத்தை சற்று திரும்பி பாருங்கள் ..அதில் எங்காவது அஹிம்சைக்கு இடம் உள்ளதா .. அங்கிருப்பதெல்லம் வெறும் வெறுப்பு மட்டும்தானே..
ஒரு கவி நண்பரது ஊனத்தை குற்றபடுத்தி மாற்று திறனாளிகள் கூட்டாக சேர்ந்து வழக்கு போடுமளவுக்கு அவரை பற்றி கதையிலும் கட்டுரையிலும் நீங்கள் எழுதிய வரிகளில் இருப்பதெல்லம் அன்பா இல்லை வெறுப்பா.
சக எழுத்தாளர்களை பற்றி மிக கேவலமாக வலைத்தளத்தில் எழுதி வெறுப்பையும் வன்மத்தையும் வளர்த்தீர்கள்

குப்பை யார் நீங்களா நானா

தமிழ் சூழலுக்கு உங்களால் எந்த நற்பயனும் கிட்டவில்லை.. தமிழ் கலாச்சாரத்தின் மீதும் படைப்புகள் மீதும் உங்களுக்கு வெறுப்புகள்தான் சங்க இலக்கியபடைப்புகளில் குடியும் ஒழுக்க மீறலும் தவிர ஒன்றுமில்லை என கூறியதை காலம் இன்னும் மறக்கவில்லை . தமிழ் கலாச்சார அடையாளங்களை
அழிப்பதில் எப்போதும் முனைப்பாக செயல்பட்டு வருகிறீர்கள் அதற்கு என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை. தான் எழுதும் மொழியின் மீது அதன் அடையாளங்கள் மீது ஒரு எழுத்தாளனுக்கு வெறுப்பு எப்படி வரும் என்றுதான் எனக்கு தெரியவில்லை..

உங்களது அரசியல் மேதாவித்தனங்களுக்காக எங்கோ உண்ணவிரதம் இருந்த அன்னா ஹாசாரேவுக்கு ஆதரவாகவும் ஐரோம் ஷர்மிளாவையும் அவரது போர்ட்டத்தையும் கொச்சை படுத்தும் நீங்கள் நம் அருகில் கண் முன் கர்ண கொடூர ஈழ படுகொலைகள் நிகழ்ந்த போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்.

வெறும் காந்தி வேடத்தில் வந்து ஏமாற்றும் மனிதாபிமானமற்ற சுய மோகம் கொண்ட உங்களை தமிழகம் தாங்குவது அதன் பெருந்தன்மையினால் தான் என்பதை உணர்ந்து கொண்டு தமிழ் மண்ணிடமும் ஒரு எக்ஸ்ட்ரா மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள் .. அது நாடகமாக இருந்தாலும் தமிழ் உங்களை மன்னிக்கும்


அதே சமயம் இதுநாள் வரை நீங்கள் எதிர்த்து வந்த அ.மார்க்ஸையும் சுந்தரராமசாமியையும் எனக்கு எழுதிய மன்னிப்பு மடலில் துணைக்கழைத்திருக்கிறீர்கள் ..

உங்களால் குருவாக அழைக்கப்பட்ட சுந்தர ரமசாமி அவர்கள் இறந்தவுடன் நீங்கள் இரண்டவது முறையாக எழுத்தின்மூலம் அவருக்கு சமாதிகட்டியது ஊரறிந்த சேதி .

இப்போது நீங்களே அழைத்தாலும் அவர் எப்படி திரும்ப வருவார்.

இறுதியாக உங்களுக்கு நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

நேரடியான சவால்.. முடிந்தால் பொது மேடையில் என் புத்தகங்களோடு வாருங்கள் நான் ஆதரமற்று எழுதியதாக சொல்வதை நிரூபியுங்கள்

அதே சமயம் உங்களது நாவல்களையும் சில புத்தகங்களையும் மலையாள திரைப்பட சிடிக்களையும் கையில் கொண்டுவருகிறேன்

யார் குப்பை என்பதை பொதுவில் தீர்மானிப்போம்

நான் தோற்றால் உங்களிடம் அல்லது மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்

நீங்கள் தோற்றால் யாரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டாம்

சிவாஜி எம்ஜிஆர் இருவரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டால் அதுவே போதும்.


பல்லாயிரம் பக்கம் எழுதலாம் ஒரு பொய் அனைத்தையும் எரித்துவிடும்.

அன்புடன்
அஜயன்பாலா

*(உண்மைக்காக போரடுபவன் போராளி பொய்க்காக போரடுபவன் கோராளி)

3 comments:

விநாயக முருகன் said...

பாலா அவரை விட்டுவிடுங்கள் பாவம். ஏற்கனவே பெரியார் பற்றிய கட்டுரைகளுக்கு எதிர்வினையாக தமிழச்சி கேட்ட கேள்விகளுக்கு பதிலை காணோம். இப்போது நீங்கள் வேறு கேள்விகளாக கேட்டால்?

Anonymous said...

நெடு நாட்களாக அவர் மேல்,அவர் எழுத்து மேல் எனக்கு ஏகக் கடுப்பு.தமிழ் மொழிக்கு சற்றும் லாயக்கில்லாத கபட வேடதாரி.நன்றாக எழுதி உள்ளீர்கள்.
அருமை.நன்றி

geethappriyan said...

அன்பின் அஜயன் பாலா,
ருத்திராட்சப்பூனைக்கு மணி கட்டும் உங்கள் மேலான சேவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்,சென்ற முறை கேட்ட மன்னிப்புமே நீங்கள் சினிமாகாரர் என்பதால் மட்டுமே சாத்தியமாயிருக்கும்,அவர் ஒரு லைட் மேனைக்கூட நேரில் பகைத்துக் கொள்ளமாட்டார்.

//நீங்கள் நம் அருகில் கண் முன் கர்ண கொடூர ஈழ படுகொலைகள் நிகழ்ந்த போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள். //
நானும் இதையே தான் கேட்கிறேன்.

என்றுமே இல்லாத இந்த ஈழ அபிமானம் இவருக்கு இவரின் பிறந்த நாளின் போது வந்துவிட்டதாம்,பிறந்த நாள் என்ன போதிமரமா?சாட்சி இக்கட்டுரை.
http://www.jeyamohan.in/?p=14610
இவர் சென்ற வருடம் ஈழப்படுகொலைகள் உக்கிரமாக நடந்த பொழுது என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால் காகிதக்கூழுக்கு கூட லாயக்கில்லாத கட்டுரைகளை ஓயாமல் தயாரித்துள்ளார்.ஒரு துரும்பியும் கிள்ளிப்போடாத இவரெல்லாம் ஈழத்ததமிழரின் துயரின் மீதான பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாமென முடிவெடுத்தாராம்,எழுதிவைத்துக்கொள்ளுங்கள்,இன்னும் கொஞ்ச நாளில் ஈழத்தமிழரை பகடி செய்து ஒரு மேடு என்னும் நாவலை படைப்பார்,அதில் நெட்டப்பன் என்னும் பாத்த்திரம் ஈழத்தமிழரை எள்ளி நகையாடும்,இது நடக்கும்,இவரின் சாதி மத வெறி கொண்ட பகடிகள் ஓயவே ஓயாது.

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...