May 31, 2021

- லெர்மண்டோவ் - நம் காலத்து நாயகன் - மூன்றவது கட்டுரை -தஸ்தயெவெஸ்கி 200

 26 வயதில் இறந்து போன  ருஷ்ய இலக்கியத்தின் வால் நட்சத்திரம்  





புஷ்கின் மரணத்தையொட்டி லெர்மண்டோவ் எழுதிய  DEATH OF A POET  கவிதை பற்றியும் அது ஜார் ஆட்சியால் உடனே தடைசெய்யப்பட்டு  விசாணைக்குப்பின் லெர்மண்டொவ்  சிறைபிடிக்கப்பட்டதையும் கடந்த பதிவான புஷ்கின் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்

இந்த தஸ்தாயெவெஸ்கி 200 வரிசையில்  லெர்மண்டோவ்  பற்ரி எழுத எந்த முகாந்திரமும் இல்லை .காரணம் தஸ்தாயெவெஸ்கி நான் வாசித்த்வரையில் LERMENTOV  பற்றி எந்த குறிப்புகளும் எழுதவில்லை . தஸ்தாயேவெஸ்கியை விட லெர்மண்டோவ் ஏழு வயது மூத்தவர்.  . லெர்மண்டோவ்  27 வயதில் இறக்கும் போது தஸ்தாயெவெஸ்கீக்கு வயது 20 மட்டுமே . அதுவரை அவர் எந்த படைப்பையும் எழுதியிருக்கவும் இல்லை .

ஆனாலும் லெர்மண்டோவ் பற்றி எழுதமல் என்னால தாண்டிப்போகவும் முடியவில்லை முதலாவது காரணம்  இருவருமே புனித பீட்டர்ஸ் பர்க் நகரவாசிகள் இன்னொரு காரணம் லெர்மண்டோவின்  உலகப்புகழ்பெற்ற நாவல்  நம் காலத்து நாயகன்

அதுவரை நான் வாசித்த எந்த நாவலும் அப்படி ஒரு அனுபவத்தை தரவில்லை .  வழக்கமாக  ருஷ்ய நாவல்கள்  என்றாலே அது ஆன்மாவை நேரடியாக ஊடுருவி .அதை புனிதப்படுத்தும்   வேலையை செய்ய ஆரம்பித்துவிடும் . நாமும் அபப்டியே நெக்குருகி வாசிப்பில் மூழ்கி கரைந்து போவோம் ,ஆனால்  நம் காலத்து நாயகன் அப்படிச் செய்ய்வில்லை .அது ஒரு ஈவிரக்கமற்ற  ஒரு 26 வயது இளைஞனைப் பற்றிய கதை அவன் பல பெண்களை எப்படியெல்லம் தன்னிடம் காதலில் விழவைத்து  பின் அவர்களை எப்படி அவமானப்படுதி உதறித் தள்ளிவிட்டு  இன்னொரு பெண்ணை நோக்கி செல்கிறான் என்பதும்  தொடர்ந்து இப்படி அறமற்று    எந்த முறைமையும் இலலாமல்  தான் தோன்றியாக ஒருவன் வாழ்கிறான் என்பதும் கதை ..

அதே சமயம் அதன் மொழியும் கதை நகர்த்தும் பாங்கும்  எந்த உலக இலக்கியத்துக்கும் சளைக்காத விதத்தில் எழுதப்பட்டிருந்தது .

உண்மையில் லெர்மண்டோவ் அந்த நாவலில் எழுதியது அக்காலத்து ஜார்மனன்ரின் ஆட்சியில் எந்த  லட்சியங்களற்று திரிந்த கேளிக்கையில் உழலும் ருஷ்ய மக்களைப் பர்றியது ‘

 இலக்கியம் என்பது வெறும் அழகியலும் உன்னதமான ஒரு மன நிலையை  சிருஷ்டிப்பது  மட்டுமல்ல அது நம்மை சுற்றியிருக்கும் எதார்த்த உலகத்தையும் நம் அருவருப்புகளையு,ம் நம் முன் காட்டுவது. என்பதை அந்நாவல் நமக்கு தெளிவாக் உணர்த்துவதே அதன் சிறப்பு

.இதர பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்களைபோல அதன் நாயகன் சுயத்தை ஊதிப்பெருக்குபவன் அல்ல,.  அவன் சுயத்தை அழித்துக்கொள்பவன். அவன் ஏன் அப்படி பலரும் வெறுக்கும் வண்ணம் நடந்துகொள்கிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை . ஒரு வெறுமை அவனை இப்படியெல்லாம் செய்ய வைக்கிரது

எனது அனுமானத்தில் தஸ்தாயெவெஸ்கி டால்ஸ்டாய் இருவருக்குமே இந்த  நாவல் பிடித்திருக்காது . தஸ்தாயெவெஸ்கியவாது ரஸ்கோல்நிகொவ் எனும் எதிர் நாயகனை முன்னிறுத்தி கதைகள் எழுதியிருக்கிறார் .ஆனால் டால்ஸ்டாய் கதபாத்திரங்களோ குற்றம் செய்தமைக்காக தங்களை நெருப்பில்  உருக்க்கிக்கொண்டு உன்னதத்தை தேடும்  பாத்திரஙகள் அவர் கதைகளில் குற்றவாளிகள் கடும் தண்டனை அடைவார்கள் அல்லது அடைய வைத்துவிடுவார்.

இப்படியான ஒரு நாவல் உலக இலக்கியத்தில் அதற்கு முன் வந்ததுண்டா தெரிய வில்லை  பிற்பாடு இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஆல்பர் காம்யூ வால் எழுதப்ப்ட்ட  அன்னியன்  நாவலில் வரும் மெர்சோ போல பிச்சோரின் மதம் கட்டமைக்கும் அனைத்து ஒழுக்க விதிகளிலிருந்து தப்பிக்க நினைப்பவன் .

இப்படியான தனித்தன்மை மிகுந்த இந்த நாவலை  லெர்மண்டோவ் எழுதிய போது அவருக்கு வயது வெறும் 26  என்பது ஆச்சரயம்

1816ல் மாஸ்கோவில் ராணுவ குடும்பத்தில் பிறந்த கையோடு  லெர்மண்டோவின் தாயர் இறநதுவிட  தந்தையிடமிருந்து குழந்தையை பிடுங்கிக்கொண்டு வந்த பணக்கார பாட்டி ஆர்செனயேஸ்  லெர்மண்டொவுக்கு ராஜ வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்தார். தாய் இல்லாத குறை தெரியாமல் இருக்க வீட்டிலேயே நகரின் மிகச்சிறந்த மேதைகளையெல்லாம்  தன் அரண்மனைக்கு வரவழைத்து பிரெஞ்சு ஜெர்மன் உள்ளிட்டமொழிகளையும் ஓவியம் உள்ளிட்ட கலைகளையும் பயிற்றுவிக்க் ஆவண செய்தார் .


தொடர்ந்து 1830 மாஸ்கோ பல்கலைகழகத்தில்; தத்துவம் பயின்றார் .கூடவே ருஷ்ய வரலாறும் இலக்கியமும் அவருக்கு வசப்பட்டது  உடன்  கவிபுனையும் ஆற்றல் தன்னியல்பில் அவருக்குள் வளரத்துவங்கியது. .கட்டுப்பாடற்ற அவரது சுதந்திர மனநிலை  பலருடைய  பகைமைக்கும் வழிசெய்தது   பகடி எனும் பேரில் எவரையும் சொற்களால் கீறிவிட்டு அவர்கள் மனக்குமுறலை பற்றி கவலைகொள்ளாத  அவரது மனோபவமே அதறகு காரணம்  (இறுதியில் அதுவே அவரது உயிரையும் பறிக்க அது வழியும் உண்டாக்கியது)  ,.1832ல் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு பீட்ட்ர்ஸ்பர்க் நகரம் திரும்பினார் .

1834ல் பட்டப்படிப்பு முடித்த கையோடு பாட்டியின் பரிந்துரையில்  ராணுவத்தில் பயிற்சி எடூத்துக்கொள்ள உடன்  உயர் பதவிகளும் தேடி வந்தது . இடைப்பட்ட காலத்தில் 300க்கும்  அதிக்மான கவிதைகளும் சில நாடகங்களும் எழுதினார்.  

.ராணுவத்தில் அவரது அசாத்திய  துணிச்சல் காரணமாக களத்தில் துடிப்பு மிக்க வீரர் என்ற பெயரும் பெற்றார்  உயர் மட்டக்குழுவில் லெர்மண்டோவின் பெயர் அதிகம் அடிபடத்துவங்கியது.  மன்னருக்கு நெருக்கமானவர்கள் கூடும்  விழாக்களில் புதிய நாணயம் போல பிரகாசித்தார். அனைவரது கண்களையும் ஈர்த்தார். . , குறுகிய காலத்தில்  பீட்டர்ஸ்பெர்க் நகரின் புதிய வால் நட்சத்திரமாக வளைய வந்தார் .கூடவே நகரின் உயர்குடிப்பெணகளும் அவர் வலைக்குள் விழுந்தனர்...   கவிதையும் அதிகமாக எழுததுவங்கினார்  அவரது துணிச்சலான அரசியல் கருத்துக்கள் அவருக்குமுக்கியத்துவம் கொடுத்தன. புஷ்கின் அவருக்கு கவிதையில் ஆதர்சமானார் .

தன் ஆதர்ச கவிஞன் புஷ்கினைக் கண்டு தான் எழுதிய கவிதைகளை வாசித்து காண்பிக்க எதிர் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்தான்  அந்த செய்தி இடிபோல் அவரத்தக்கியது

புஷகின் டூயலில் இறந்த செய்தியும் அதுவும் ஒரு பிரெஞ்சு அதிகாரியின் துப்பாக்கியால் சுடப்ப்ட்டு இறந்த  தகவலையும்  கேள்விப்பட்டு அவரது சடலம் கொண்டுவரபட்ட தேவாலயம் நோக்கி ஓடினார்.  சவ்ப்பெட்டியில் சடலமாக கிடந்த புஷ்கிணைக் கண்டதும் மனம் குமுறி குலைந்தார் .  அந்த மரணத்தில்  ஜார் நிக்கோலஸ் மன்னரின் நிழல் படிந்திருப்பதை உணர்ந்தார் பிரெஞ்சு வீரனால் சாகடிக்கப்ப்ட்ட ருஷ்யக்கவியின் மரணம் எதிர்கால ருஷ்யாவுக்கான சவால் என்பதை உணர்ந்தார் . சட்டென வார்த்தைகள் கரைபுரள   கண்ணில் நீர் தளும்ப கையோடு கிடைத்த தாளில்  டெத் ஆப் எ பொயட் எனும் கவிதையை  எழுதி நண்பர்களுக்கு கொடுக்க அது சடுதியில் பிரதி எடுக்கப்பட்டு  பீட்டர்ஸ் பர்க் நகரத்தில் பலர் கைக்குகை மாறத்துவங்கியது ( கீழே கவிதை மொழிபெயர்ப்பு இணைக்கப்ப்ட்டுள்ளது )

 புஷ்கின் மரணம்  உண்டாக்கிய  தாக்குதல் ஒரு பக்கமும் லெர்மண்டோவின்  புரட்சிக் கவிதை உண்டாககிய எழுச்சி இன்னொரு பக்குமுமாக  பீட்டர்ஸ் பெர்க் நகரமே கொந்தளித்தது

தகவல் ஜார் மன்னர் நிக்கோலசுக்கு தெரிய வந்தது . லெர்மண்டோவ் எழுதிய கவிதையின் கடைசி 16 வரிகள்  புஷ்கின் கொலைக்கு கார்னம் அவர்களது ஆட்சியே  என்பதாக் எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு கடும் கோபத்தை வர வழைக்க் உடனே  அரசு அந்த கவிதையை  தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது. மீறி அக் கவிதையை வைத்திருப்பவர்கள் சிறை பிடிக்க்ப்படுவார்கள் என அறிவித்த தோடு  மட்டுமலலமல் உடனே லெர்மண்ட்டோவை சிறை பிடித்து காக்கசஸ்  மலைப்பகுதிக்கு நாடுகடத்தி தண்ட்னை கொடுத்தனர்

அந்த ஒரே கவிதை லெர்மண்டோவை  புஷ்கின் வாரிசாக அனைவரையும் பேச வைத்தது

காக்கஸஸ் மலைப்பகுதியில் சுற்றிதிரிந்த த்ண்டனைக் காலத்தில் பல கவிதைகள் எழுதவும் வாசிக்கவும் பயன்படுத்திக்கொண்டார் . பாட்டி அர்சென்யேஸ் கொடுத்த அழுத்தம் காரண்மாக தண்டனையிலிருந்து  விடுவிக்கப்ப்ட்டு  மீண்டும் பீட்டர்ஸ் பெர்க் நகரம் வந்தார் . வந்த கையோடு நம் காலத்து நாயகன் நாவலை முழுமையாக  எழுதி முடித்தார்

இதனிடையே  நகரின் பிரதான உயர்குல அழகிகள் இருவரது விருந்துகளில் அடிக்கடி கலந்த்கொண்டார் . அங்கு வரும் இதர ஆண்களோடு அடிக்கடி பகை  உரசியது. .குறிப்பாக அங்கு வரும் பிரெஞ்ச் தூதரக ஆதிகாரிகளிடம் அடிக்கடி மோதல் உருவாகி டூயலுக்கு அழைப்பதும் அரசின் கோவத்துக்கு ஆளாகி ,மீண்டும் தணடனை .பெறுவதும் தொடர்ந்தது

1841 ஜூலை 25 ல் அவருடைய  26ம் வயதில் நண்பர் மாட்ரியானோவின் உடை குறித்து   பலர் முன்னிலையில் கேலி பேச அவர் உடனே டூயலுக்கு அழைக்க உடனே லெர்மண்டோவும் அதை ஏற்றுக் கொண்டார் ,’இரண்டு நாள் கழித்து மாஷூக் மலைப்பகுதியில் இருவரும்  குறிப்பிட்ட நேரத்தில் துப்பககிகளுடன்  எதிரெதிர் நின்றனர் லெர்மணடோவின் குறி தப்பி காற்றில் குண்டு பறக்க மாத்ரியோனோவின் குண்டு லெர்மண்டீவின் நெஞ்சில் துளைத்து 26 வயதுல் அவரை சாகாவரம் பெற்ற


எழுத்தா:ளனாக்கி உயிரை பறித்துக்கொண்டது

புஷ்கின் மறைவுக்கு லெரமண்டொவ் எழுதிய  டெத் ஆப் எ பொயட் கவிதை நண்பர்  எழுத்தாளர் அசதா மொழிபெயர்ப்பில் கீழே இணைக்கப்பட்டுள்ளது . ஒருவகையில் இந்த கவிதை அவருக்கும் கூட பொருந்தக்கூடியதகவே இருக்கிறது  

அஜயன் பாலா ‘

31-05-2021

 

 

 

கவிஞனின் மரணம்

லெர்மன்தேவ்

தமிழில் – அசதா

 

கவிஞன் மரணித்துவிட்டான்.

-நற்புகழுக்கு அடிமையவன்-

அவன் வீழ்ந்தான், அவதூறுகளால்.

பழிவாங்கும் வேட்கையில்

நெஞ்சு நிமிர்த்திச் சென்றான்,

பெருமையில் நிமிர்ந்த தனது தலை கவிழ அவன் வீழ்ந்தான்.

சிறிய அவமதிப்புகளையும் தாங்குவதில்லை

கவிஞனின் நெஞ்சு.

எப்போதும்போல் மூடர்கள் கூட்டத்துக்கு எதிராய்

அவன் எழுந்தான், கொலையுண்டான்.

அவன் கொல்லப்பட்டான்,

இப்போது அழுவதால்,

எதற்கும் உதவா வெற்றான கூட்டுப் புகழஞ்சலிகளால்,

முணுமுணுக்கப்படும் உணர்ச்சிமிகு சமாதானங்களால் என்ன பயன்?

 

விதி தனது தீர்ப்பை எழுதிவிட்டது.

அவனது சுதந்திரமான நெஞ்சுரமிக்கப் பரிசை

வெறுத்து ஒதுக்கியது நீங்கள்தானே?

உங்களது கேளிக்கைக்காக

அணையவிருந்த நெருப்பை

ஊதிப் பெருக்கியதும் நீங்கள்தானே?

 

நன்று, இப்போது மகிழுங்கள்…

அந்தக் கடைசிச் சித்திரவதையை அவனால் தாங்கமுடியவில்லை:

அவனது மேதமையின் அற்புத ஒளி அணைந்தது,

அவனது வெற்றியின் மலர்க்கிரீடம் வாடிவதங்கியது.

 

ஈவிரக்கமின்றி அந்தக் கொலைகாரன்

அவன் உயிரைப் பறித்தான்.

சண்டையிடும் வாய்ப்பே அவனுக்கு வழங்கப்படவில்லை.

அவனது வெற்று இதயம் சீராகத் துடித்தது.

சிறு நடுக்கமும் இல்லாது கையில் இறுகப் பற்றிய துப்பாக்கி.

ஆச்சரியம் ஒன்றுமில்லை,

நல்வாய்ப்பையும் வசதியையும் தேடி

அவனது சக நாடோடிகளைப் போலவே

வெகு தொலைவேயிருந்து விதி அவனை

நம்மிடம் அனுப்பி வைத்திருந்தது.

 

கர்வத்துடன் அவன் கேலி செய்தான், ஏளனம் புரிந்தான்,

அவனது நிலத்தின் மொழியில் அதன் சங்கேதச் சொற்களில்.

எங்களது கௌரவத்தையும் அவன் விட்டுவைக்கவில்லை.

அந்தக் கேடுமிக்க கணத்தில்

“யாருக்கெதிராய் நாம் கை நீட்டியிருக்கிறோம்” என்பதையும்

அவன் உணரவில்லை.

 

அவன் கொல்லப்பட்டான்,

பெயர் தெரியாத ஆனால் மகிழ்வுமிக்க,

கடும் பொறாமைக்குப் பலியான

அந்தக் கவிஞனைப்போல

அவனும் கல்லறைக்குள் அடக்கப்பட்டான்.

அவனை இவன் அவ்வளவு அற்புதமாகப் பாடினான்,

அவனைப்போலவே வலுவான கரத்தால் அடித்து வீழ்த்தப்பட்டான்.

 

சுதந்திர மனதையும் தீவிர மனவெழுச்சியையும்

பொறாமைகொண்டு ஒடுக்கும்

இந்தக் கூட்டத்துக்குள் வர

அந்த அற்புத நட்பின் அமைதியிலிருந்து

ஏன் அவன் விலகினான்?

ஒன்றுக்கும் உதவாத அவதூறாளர்களுக்கு

ஏன் அவன் ஒத்தாசைபுரிந்தான்?

சகமனிதரை எப்போதும் சரியாக எடைபோடும் அவன்

அவர்களது வெற்று வார்த்தைகளையும்

போலி அன்பையும் எப்படி நம்பினான்?

 

அவனது மலர்க்கிரீடத்தை அகற்றிய அவர்கள்

இலைகளால் மறைக்கப்பட்ட முள்முடி ஒன்றை

தலையில் வைத்தனர்.

மறைந்திருந்த முட்கள் குரூரமானவை

அவை அவனது அழகிய புருவங்களில் இறங்கின.

கேலிப் பேச்சுகளாலும் எள்ளி நகையாடல்களாலும்

அவனது இறுதிக் கணங்கள் விஷமூட்டப்பட்டன.

பழியுணர்வு நாவை வறட்ட,

ஈடேறாத நம்பிக்கைகளால் ரகசியமாய் மனம் வெறுத்து

அவன் மரித்தான்.

 

அற்புதப் பாடல்கள் ஓய்ந்தன,

மீண்டும் அவை ஒலிக்கப்போவதில்லை.

அவன் தஞ்சமடைந்த இடம் சிறியது, துயரார்ந்தது,

அவனது உதடுகள் என்றென்றைக்குமாய் மூடப்பட்டன.

 

_______

 

நீங்கள் குரோதமெனும் தந்தைக்குப்

பிறந்த  ஆணவக்காரப் பிள்ளைகள்.

செல்வ விளையாட்டில் வீழ்ந்த வம்சங்களின்

சிதிலங்களை அடிமைப்படுத்துதல் எனும் கால்களால் நசுக்குபவர்கள்.  

நீங்கள் சிம்மாசனங்களை மொய்க்கும் பேராசைக்காரர்கள்,

சுதந்திரம், மேதமை, நற்பெயர் ஆகியவற்றைக் கொன்றொழிப்பவர்கள்.

சட்டத்தின் நிழலில் நீங்கள் மறைந்துகொள்கிறீர்கள்.

உண்மையும் நீதியும் உங்கள் முன் மௌனமாகிவிடுகின்றன.

 

ஊழலின் நண்பர்களே, நீதி கடவுளிடமிருந்தும் வரும்.

நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பயங்கரமான நீதிபதி அவர்.

தங்கக் காசுகளின் ஒலிக்கு அவர் மயங்குவதில்லை.

நீங்கள் நினைக்கப்போவதென்ன, செய்யப்போவதென்ன

என்பதை அவர் அறிவார்.

அப்போது நீங்கள் பொய்களிடம் சரணடைவீர்கள்:

அவையும் உங்களைக் காப்பாற்றாது.

ஈய்ந்த உங்களது ரத்தம்

கவிஞனின் புனித ரத்தத்தைக் கழுவிச் சுத்தமாக்காது.

 

 

1837

 

 

 

  .

 

3 comments:

Narmadhakuppuswamy said...

அற்புதமான கட்டுரை, எழுத்துப்பிழைகள் அதிகமாக உள்ளன. கவனியுங்கள்.நன்றி

காலபைரவன் said...

நல்ல பதிவு அஜயன்

Uthangal Pa.Govindaraju said...

இதற்கு முந்தையக் கட்டுரையைப் படித்ததின் தாக்கம் மனதை ஏதோ செய்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில் அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரை பிறநாட்டு இலக்கியங்களை கற்கவேண்டுமென்கிற உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. மிகச் சிறந்தக் கட்டுரை. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...