நம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என அவ்வப்போது புலம்புவதுண்டு . , உலகம் முழுக்கவே அப்படித்தான் . குறிப்பாக புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளார்களான டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி ஆண்டன் செகாவ் ,துர்கனேவ் . மாக்சிம் கார்க்கி இவர்கள் அனைவருக்குமே படைப்பு ரீதியான முரண்களும் உட்பகையும் ஈகோவும் அதிகம் இருந்திருக்கின்றன
குறிப்பாக இவர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் தஸ்தாயெவெஸ்கியை உதாசீனப்படுத்தியும் அவரை ஏற்காமல் விமர்சனம் செய்தும் நிராகரித்தும் வந்திருக்கின்றனர். வாழும் போதும் இறந்தபின்பும் ருஷ்யாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட எழுத்தாளர் என்ற பெருமை தஸ்தாயெவெஸ்கிக்கு மட்டுமே உண்டு இவற்றையெல்லாம கடந்துதான் அவர் 200ம் ஆண்டில் உலகமே கொண்டாடும் மகத்தான படைப்பாளியாக தொடர்ந்து பேசப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகிறார்.
மேற்சொன்ன ருஷ்ய எழுத்தாளர்கள் தஸ்தாயெவெஸ்கியை விமர்சிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை கண்டெடுத்தனர். மாக்சிம் கார்க்கி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களுக்காவது அவர் எழுத்துக்கள் மீது குற்றம் சொல்ல ததுவார்த்த காரணம் இருந்தது. ஆனால் ஆண்டன் செகாவ், துர்கனேவ் நபக்கோவ் போன்றோர் . விமரசனம் என்ர பெயரில் வெளிப்படுத்தியது எல்லாம் வசைகள் அவமானங்கள் உதாசீனங்கள் .
இவர்களில் கடுமை குறைவாக விமரசனமாக இல்லாமல் அபிப்ராயமாக கருத்துக்கள் சொன்னவர் டால்ஸ்டாய் மட்டுமே . அதேசமயம் சமகாலத்தில் புகழ்பெற்ற இன்னொரு சக எழுத்தாளன் என தெரிந்தும் டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கியை பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை
இன்று வரை உலகின் மகத்தான இரண்டு நாவலாசிரியர்களாக கருதப்படும் டால்ஸ்டாயும் தஸ்தாயேவெஸ்கியும் சம காலத்தில் புகழ்பெற்று விளங்கின ருஷ்யாவின் இரண்டு நடசத்திரங்களாக இருந்தும் பேசிக்கொள்ளவே இல்லை ,
குறிப்பாக புத்துயிர்ப்பு அன்னா கரீனா போரும் அமைதியும் போன்ற காவியங்களை படைத்து நம்மூர் காந்திக்கே அன்பையும் அஹிமசையையும் போதித்த டால்ஸ் டாய் த்ஸ்தாவெஸ்கியிடம் மட்டும் பிடிவாதத்துடன் இருந்தார் என்பதும் தான் ஆச்சர்யம்., இத்தனைக்கும் அவரது சமகாலத்தவ்ர்களான துரகனேவ் ஆண்டன் செகாவ் மற்றும் மாக்ஸிம் கார்க்கி ஆகியோருக்கு திறந்த அந்த யாஸ்னயா போல்னாவா எனும் அரண்மனையின் கதவுகள் தஸ்தாயேவெஸ்கிக்கு மட்டும் திறக்கவேயில்லை . ( துரகனேவும் பிரான்சில் பேடன் பேடன் நகரில் வசிக்கும் போது ஒருமுறை தஸ்தாயேவெஸ்கி சூதாடி தோற்று கையில் நயாபைசா இல்லாமல் அவர் வீட்டு அரண்மனை வாசலில் நின்றபோது உள்ளே விடமால் அப்படியே திருப்பி அனுப்பிய கதையும் உணடு )
இப்படியாக அக்காலத்தின் ருஷய் இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர்களான இருவரும் கடைசி வரை பேசிக்கொள்ளாமலேயே இறந்து போனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நிலவியல் இடைவெளி.
இருவரும் வேறு வேறு நகரத்தின் பிரதிநிதிகள். டால்ஸ் டாய் மாஸ்கோ நகரம் என்றால் தஸ்தாயெவெஸ்கி பீட்ட்ர்ஸ்பர்க் நகரம். இரண்டுமே பாரம்பர்யமான ருஷ்ய நகரங்கள் என்றாலும் மாஸ்கோ பிரபுக்களும் அதிகார வர்க்கத்தினரும் அதிகம் வசிக்கும் நகரம் . மாஸ்கோவிலிருந்து 200கிமீ தொலைவிலிருக்கும் அவரது யாஸ்னயா போனா எனப்படும் அரண்மனையை சுற்றி மொத்தம் 12 கிமீ நிலப்பரப்பு எஸ்டேட் அவருக்கு சொந்தமாக இருந்தது .
தஸ்தாயேவெஸ்கியோ ராணுவ வீரர்களுக்கு மருத்துவம் செய்யும் தம்பதிகளுக்கு மகனாக்பிறந்தவர் . பரம்பரையாக மத ஊழியம் செய்துப் பிழைத்த குடும்பம் .அவர் பிறந்ததும் என்னமோ மாஸ்கோ நகரில் என்றாலும் பத்து வயதிலேயே பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அவரது த்ந்தையால் அனுப்பி வைக்கப்பட்டு பின் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத்துவங்கியவர் குடியனாவர்கள் ஏழைகள் அதிகமாக வசிக்கும் பீட்டர்ஸ்பர்க் . நகரின் வீதிகளைபற்றி த்ஸ்தாயேவெஸ்கி அவரது நாவல்களில் தொடர்ந்து எழுதி வந்திருப்பதை காணலாம் இந்த இரண்டு நகரங்களுக்கும் கிட்டத்தட்ட 700 கிமீ இடைவெளி என்பது வேறு இருவரும் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் இப்படி இருவரும் இருவிதமான முரண்பட்ட தன்மை கொண்ட நகரங்களின் பினபுலமே அவர்களது சுபாவமாககவும் இருந்திருக்கிறது . இந்த நகரங்களின் சுபாவம் இருவரது கதைகளிலும் வெளிப்படுவதை காணமுடியும் .
டால்ஸ்டாயின் நாயகர்கள் பெரும்பாலும் பெரும் பிரபுக்கள் அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர்கள் . தஸ்தயெவெஸ்கியின் நாயகர்கள் சாதாரண மனிதர்கள் சிறிய வசதி படைத்த்வர்கள் மேலும் பெரும்பலான கதை மாந்தர்கள் குடியனாவ்ர்கள் விபச்சாரிகள் குற்றமன நிலையில் பீடிக்கப்பட்டவர்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஊடாடுபவர்கள்
இருவருக்குமிடையில் ஏழு வருடங்கள் மட்டுமே வித்தியாசம் . தஸ்தாயெவெஸ்கி 1821 லும் டால்ஸ்டாய் 1828லும் பிறந்தவர்கள் இருவருமே முதல் கதைகளை தன் 24ம் வயதில் எழுத துவங்குகின்றனர்.
தஸ்தாயேவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் டால்ஸ்டாயின் . போரும் அமைதியும் இரண்டும் ஒரே காலத்தில் 1866 & 67 ஒரு வருட இடைவெளியில் வெளியாகின ..
இந்த இரண்டு நாவல்களுமே இன்று வரை உலக இலக்கியத்தின் இரண்டு சிகரங்களாக கொண்டாடப்படுகின்றன என்பது கவனிக்கவேண்டிய விஷய்ம் போரும் அமைதியும் எனும் அவரது வார் அண்ட் பீஸ் நாவல் வெளி வந்தவுடன் அதை தஸ்தாயெவெஸ்கி படித்துவிட்டு டால்ஸ்டாயை பார்க்க ஆவலுடன் இருந்தார் , அதற்கு ஒ9ரு வாய்ப்பும் வந்தது
. புஷகின் மறைவை யொட்டி அவருக்கு ஒரு சிலை திறப்பு விழா மாஸ்கோவில் நடத்ததிட்டமிட்டபோது தஸ்தாயெவெஸ்கி அழைக்கப்பட்டார் .
இம்முறை விழாவுக்கு ஒரு நாள் முன்பு எப்படியும் டால்ஸ்டாயை சந்திப்பது என முடிவெடுத்து அவரது இல்லத்துக்கு செல்ல அனுமதிகேட்டபோது டால்ஸ்டாய் மறுத்துவிட்டார் . தான் இப்போது தனிமையில் இருக்க விரும்புவதாக ஏற்பாடு செய்த நண்பர்கள் மூலமாக பதில் தஸ்தாவெஸ்கி க்கு பதில் சொல்லி அனுப்பினார் .
. அந்த புஷகின் நினைவஞ்சலி கூட்டத்தில் தஸ்தாயெவெஸ்கி ஆற்றிய உரை தான் இன்று வரை இலக்கிய உலகின் தலைசிறந்த அஞ்சலி உரையாக கருதப்படுகிறது . இன்னும் சொல்லப்போனால் த்ஸ்தாயெவெஸ்கி யார் என ருஷ்யாவுக்கு அடையா:ளம் காட்டிய உரை என்றும் சொல்லலாம் . ருஷய் தேசிய வாத்ம் பற்றி அவர் ஆழ்த்திய உரை பிற்பாடு வந்த அரசியல் எழுச்சிகளுகெல்லாம் விதை என குறிப்பிடும் அளவுக்கு ருஷ்ய மொழியையும் இலக்கியங்களையும் புதிய திசைக்கு அந்த உரையில் நெறிப்படுத்தியிருந்தார் என பலரும் கருதுகின்ற்னர்.
பிறகு 1878 ல் ருஷ்யாவின்புகழ்பெற்ற தத்துவ ஆசிரியாரான விளாதிமீர் சோல்யோதேவின் உரை நிகழ்ந்தபோது இருவரும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருந்த போதிலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்லாமலெயே பிரிந்திருக்கின்றனர்
அதன் பிறகும் பலர் டால்ஸ்டாயிடம் தஸ்தாவெஸ்கியின் எழுத்து பற்றிகேட்ட போது அது தன்னை பெரிதாக கவரவில்லை . என்றும் பலரும் பாராட்டும் கரமசோவ் பிரதர்ஸ்என்னால் படிக்கவே முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார் .மேலும் த்ஸ்தாயெவெஸ்கிக்கு கதாபத்திரங்களை வடிவமைப்பதில் போதாமை உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்
இதனிடையே தஸ்தாவெஸ்கி 1881ல் இறந்த சேதி அறிந்த உடன் டால்ஸ்டாய் மிகுந்த வேதனையுடன் தன் நண்பருக்கு எழுதிய கடிதமொன்றி. ஒர் அற்புதமான் எழுத்தாளனை தான் கடைசிவரை சந்திக்காமலே போனமைக்கு தான் மிகவும் வேதனையுற்று கண்னீர்வடிப்பதாகவும் இப்போதுதான் அவர் தனக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதை உணர்வதாகவும் என்றவாது ஒருநாள் இருவரும் சந்திக்கப்போவது உறுதி என்றும் ் அவரது the house of the dead நாவல் ஒரு உன்னதபடைப்பு என நிகொலாய் ஸ்ட்ராகோவ் என்பவருக்கு கடிதமாகவும் எழுதியிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன .எழுதியிருக்கிரார் .
த்ஸ்தாயெவெஸ்கியின்மறைவுக்குப்பின் ் அன்னா தஸ்தாவெஸ்கி டாக்ஸ்டாய் மாஸ்கோ அரண்மனியன யாஸ்னயா போல்யானவுக்கு சென்று டால்ச்டாயின் மனைவியோடு நெருங்கிய உறவு பேணியதகவும் அப்போது ஒருமுறை டால்ஸ்டாய் தஸ்தயெவெஸ்கியை சந்திக்காமல் போனமைக்கு வருத்தம் தெரிவித்ததகாவும் பதிவு செய்திருக்கிறார்
இறுதியாக டாலஸ்டாய் தன் யாஸ்னயா போல்யான்யா அர்ன்மனையைவிட்டு அஸ்த போவா ரயில் நிலையத்தில் அனாதையாக் இறந்ப்பத்ற்கு முன் அவர் கடைசியாக வாசித்த புத்த்கம் கரமசோவ் பிரதர்ஸ்
அஜயன் பாலா \
23-05-2021
3 comments:
Arumai Ajayan
இருபெரும் எழுத்துலக மேதைகள் பற்றிய செய்தி வியப்பூட்டுகிறது. பகிர்வுக்கு நன்றி!!
தஸ்தாயேவெஸ்கி ❤️❤️❤️
அருமையாக இருந்தது அண்ணா 🎉🎉🎉
Post a Comment