April 6, 2016

அஞ்சலி : பிலிம் நியூஸ் ஆனந்தன் (1928- 2016)

 
பத்து வருடங்களுக்கு முன்  பி சி ஸ்ரீராம் அவர்கள் இயக்கிய வானம் வசப்படும் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இதற்கு  முன் சொல்ல மறந்த கதை படத்தில் ஒரு காட்சியில்  தலை காட்டி வசனம் பேசியிருந்தாலும். முழு கதாபாத்திரம் என்ற அளவில் எனக்கு இதுவே முதல் படம். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில்  அது குறித்து தினத்தந்தி வெள்ளித்திரையில் ஒரு செய்தி வெளியானது.அதில் நடிகர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது.   

அன்று மாலையே ஒரு அழைப்பு

தம்பி  நான் பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசறேன்

எனக்கு சட்டென ஒரு வரலாறு என்னோடு  கலப்பது போல் ஒரு பெருமை  எத்தனை முறை அவரைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம்

சொல்லுங்க சார் !

தம்பி நீங்க வானம் வசப்படும்  படத்துல நடிச்சிருக்கிங்கறத பேப்பர்ல படிச்சேன் புது பேரா இருக்கு  உங்களை பத்தி விவரம் சொல்ல முடியுமா, உங்க ஊர் வயசு இதுக்கு முன்னாடி எதாவது படத்துல நடிச்சிருக்கீங்கன்ற விவரம்லாம் எனக்கு சொன்னீங்கன்னா சௌகரியமா இருக்கும்
அன்று மாலையே அவரை  வீட்டில்  சந்தித்து புகைப்படத்துடன் தகவல்களை கொடுத்தேன் .

என்னை போல ஒவ்வொரு வாரமும்  பல புதுமுகங்கள் வந்து கொண்டே யிருப்பார்கள் இப்படி அவர்கள் ஒவ்வொருவரிடமும் தொடர்பு கொண்டு பேசி தகவல்கள் சேகரித்து அதை சரி  பார்த்து ஒழுங்கு செய்து பாதுகாப்பது என்பது அத்தனை  சாதாரண வேலையல்ல . பேனுக்கு பேன் பார்க்கும்  சிக்கு பிடித்த காரியம்.  இதற்கு ஒரு ஜென் பவுத்தனுக்கான நிதானமும் சமூகத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு குறித்த  மிகப்பெரிய அக்கறையும் அவசியம்

அச்சமயம் அவருக்கு எப்படியும் 80 வயது இருக்கும். அறுபது வயதிலெயே ஆடி அடங்கியாகிவிட்டது என வீட்டில் உட்கார்ந்து விட்டத்தை பார்க்கும் இந்த காலத்தில் இந்த வயதில் தொடர்ந்து அவர் தகவல்களை திரட்டுவதும் விடாமல் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கலந்து கொள்வதும் ஆச்சர்யபடத்தக்க விஷயம் .

ஆங்கில படங்கள் பற்றிய விவரங்களைக்கொண்ட புகழ் பெற்ற வலைத்தளம் IMDP. இதில் தினசரி தகவல்களை சேகரிக்கவும் பகுக்கவும் தொகுக்கவும்  அச்சக்கோர்க்கவும் உலகம் முழுக்க பல  நூறு ஊழியர்கள் நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயுமாக  24×7 பணி புரிந்து வருகின்றனர். 

ஆனால் இப்படிபட்ட பிரம்மண்டமான நிறுவன்ம் செய்யும் காரியத்தை ஒரே ஒரு ஆள் அதுவும் கம்யூட்டர் உபயோகத்திற்கு முந்தைய காலத்திலிருந்து தன் வாழ்நாளையே அர்ப்பணித்து தமிழ் சினிமாவுக்காக செய்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட  காரியம்  அவரை இந்த சமுகம் தலையில் வைத்தல்லவா கொண்டாடியிருக்க வேண்டும்

ஆவணப்படுத்துவதும் தகவலை சேகரிப்பதும் சமூகத்துக்கு அத்தனை அவசியமா என பலரும் கேட்கலாம் . வரலாறு ஆவணப்டுத்துதலிலிருந்துதான்  உருவாக்கப்படுகிறது.

உலக சினிமா வரலாற்றை எழுதும் போது அதன் ஒவ்வொரு மாற்றங்களையும் நுணுகி ஆய்ந்தறிந்து எழுதிய காலத்தில் எனக்கு தேவைப்பட்ட ஆதாரபூர்வமான தகவல்களுக்கு ஆங்கிலத்தில் பல நூல்கள் கிடைத்தன . 

 அதே தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத ஆசைப்பட்ட போது எனக்கு போதிய தரவுகளுக்கான நூல்களே கிடைக்கவில்லை  . அறந்தை நாராயணன் எழுதிய தமிழ் சினிமாவின் கதை தாண்டி வேறு நூல்களே இல்லை . 

1917  நடராஜ முதலியாரின் கீசக வதம் முதல் படம் என அனைவருக்கும் தெரியுமே தவிர அக்காலத்தில் வந்த இத்ர தமிழ் மவுனப்படங்களின் வரலாறு இன்று வரை யாருக்கும் தெரியாது என்பது மிகவும் துர்ப்பாகிய அவல நிலை
பி கே ஞானசாகரம் என்பவர் தன் மகன் மணி எனும் ஆறுவயது சிறுவனை பள்ளீயில் சேர்க்க அழைத்து சென்றிருக்கிறார். 

தலைமை ஆசிரியருக்கு மணி என்ற பெயர் பிடிக்கவில்லை அன்ந்த கிருஷ்ணன் என புது பெயரை சூட்டினார் . அனந்தகிருஷணன் ஆன்ந்தன் ஆனார்.

 பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது, கதை வசனம் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார் ஆனந்தன். உடன் சிறுவயது முதல் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். 

 பின் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் சேர்ந்து பட்ட படிப்பை தொடர்ந்தாலும் அங்கு உடன் படித்த ஒய் .ஜி பார்த்த சாரதியுடன் இணைந்து  நாட்கங்கள் போடத் துவங்கினார் ஆனாலும் காமிராவின் மீதான மோகம்தான் அவரை அதிகம் அலைக்கழித்த்து. பாக்ஸ் கேமிராவில் தனது யுக்தியால் இரட்டைவேடப்படம் எடுத்தார். இதைக்கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை அவருக்கு முறைப்படி இன்னும் நேர்த்தியாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

 அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தார். 1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றி செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டார். திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தார். அவரது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் அவர் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் வெறும் ஆனந்தனாக இருந்தவர் பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினார். பின் ஒருநாள் நாடோடி மன்ன்ன் அலுவலகத்தில் ஆர் எம் வியை சந்திக்க போக அன்று முதல் மக்கள் தொடர்பு பணியும் அவருக்கு வந்து சேர்ந்த்து


 வெறும் பத்ரிக்கையாளனாக இல்லாமல் போலீஸ்காரன் மகள் (1962) பொம்மை (1964) ஊமை விழிகள் (1986) சுகமான சுமைகள் (1992) ஆசை (1995) இந்தியன் (1996)  ஆகிய படங்களில் சிறியதும் பெரியதாகவும் நடிக்கவும் செய்தார். இதில் கடைசி இரு படங்கள்  கத்தரியில் காணாமல் போனாலும் டைட்டில்களில் நன்றி என அவர் பெய்ரை தாங்கியே வெளியாகின

தொடர்ந்து 70 ஆண்டுகள் அவர் இடைவிடாமல் அனைத்து படங்கள் குறித்தும் சேர்த்து வைத்த தகவல்கள் சாதனை செய்த தமிழ் சினிமா எனும் பெயரில் நூலாக வெளிவந்து பொக்கிஷமாக நமக்கு பயன்படுகிறது. அரசாங்கம் இத்ற்காக பத்துலட்ச ரூபாய் செலவு செய்து தன் குற்றவுணர்ச்சிக்கு மருந்து தேடிக்கொண்டிருக்கிறது.

இந்த அவரது பணிக்காக கண்டிப்பாக ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவபடுத்தலாம் . 

அப்போது தான் வருங்காலத்தில் ஆவணபடுத்துதல் பணியின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியவரும் 

நன்றி : புத்தகம் பேசுது, ஏப்ரல் 2016

1 comment:

tamilbooks said...

thanks

pl visit http://puthagampesuthu.com/

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...