ஒவ்வொரு முறையும் தோற்கிறேன்
ஒவ்வொரு முறையும் காயங்கள்
ஒவ்வொரு முறையும் எழுகிறேன்
ஒவ்வொருமுறையும் காதல்.
ஒவ்வொரு முறையும் துரோகம்
.ஒவ்வொரு முறையும் களிப்பு
ஒவ்வொருமுறையும் அவமானம்
ஒவ்வொரு முறையும் வீழ்ச்சி
ஒவ்வொருமுறையும் சாகசம்
நானொரு பாலட் நடனக்காரன்
வித்தைகள் கற்றவன்
என் வித்தைகள் வெற்றிக்கானவை அல்ல
-
அவை விழுதலுக்கும் எழுதலுக்குமிடையிலான சூத்திரம்
No comments:
Post a Comment