September 11, 2024
தமிழ் ஆவணப் படங்களின் போக்கு
ajayanbala@gmail.com
. இன்று அனைத்து மொழிகளிலும் ஆவணப்படம் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆவணப்படங்களுக்கு கலை சினிமாக்களுக்கு இணையான இடத்தில் வைத்து போற்றப்படுகின்றன.
மேலும் இன்று. ஒடிடி (OTT எனும் ஒற்றை சட்டகம் வழியாக கலாச்சார பரிமாற்றங்கள் துரிதமாக நடைபெறுகின்றன. ஹாட்ஸ்டாரில் ரஷ்யாவில் ஏற்பட்ட செர்னோபில் (CERNOBYL) அணு உலை விபத்து குறித்த ஆவணப்படம் நம்மை நடுங்க வைக்கிறது. . அது போல நெட்பிலிக்ஸில் ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ் (HOUSE OF SECRETS) அமோசானில் ஐயாம் நாட் யுவர் நீக்ரோ (IAM NOT YOUR NEGRO) போன்ற டாக்குமண்டரி எனும் ஆவணப்படங்கள் கதை படங்களைக்காட்டிலும் விறுவிறுப்பாகவும் அதே சமயம் உண்மைகளை போட்டு உடைத்தும் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன.
இப்படி உலகம் முழுக்க ஆவணபடங்களுக்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில் நம் தமிழகத்தில் ஆவணப்படங்களின் போக்கு என்னவாக இருக்கிறது எனும்போது இத்துறையில் நாம் இன்னும் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ஒருபக்கம் வருத்தம் என்றாலும் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த நிலைதான் ஆனந்த் பட்வர்த்தன் போன்ற ஒருசிலர் மட்டுமே இத்துறையில் ஓரளவு ஊடகங்களால் கொண்டாடபடுகின்றவர்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் மக்களிடையே இருக்கும் வணிக சினிமா மோகம் ஒரு முக்கிய காரணம் ஆவணப்படங்கள் என்றாலே வேப்பங்காய் போல ஒரு புறக்கணிப்பு மக்கள் மன நிலையில் இருக்கிறது
பொதுவாக தமிழ் நாட்டில் ஆவணப்படம் என்றாலே பொதுப் புத்தியில் அது திரையரங்குகளில் வணிக சினிமாவுக்கு முன் திரையிடப்படும் அரசாங்கத்தின் செய்திப் படங்கள் என்பதகாவே ஒரு அபிராயம் நம் சூழலில் இருந்து வந்தது .2000க்குப்பின் டிஜிட்டல் கேமராக்கலின் வருகை மற்றும் ஊடக வளர்ச்சிக்கு பின்பு தான் மக்களிடையே ஆவணப்படம் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு வரத்துவங்கியது.
..இச்சூழலில் ஆவணப்படங்கள் இருப்பதில் அதில் போக்கு என தனியாக எதுவும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்குவதே இங்கு பெரிய சாதனையாக கருதப்படுகிரது . இச்சுழலில் தமிழகத்தில் குறிபிட்ட சிலரே இத்துறையில் போதிய அங்கீகாரமோ அல்லது வணிக சந்தையோ இல்லாமல் தொடர்ந்து இத்துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றனர் அவ்வகையில் தமிழ்ஆவணப்படங்களின் வரலாற்றில் சில முக்கியதடம் பதித்த அந்த இயக்குனர்களையும் அவர்களது படங்களையும் சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம்
அ. கருப்பன் எனும். ஏ.கே செட்டியார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்த ஏ.கே செட்டியாரின் முழுப்பெயர் கருப்பன் செட்டியார் சினிமாமீது கொண்ட ஆர்வத்தில் நியூயார்க் சென்று படித்துவிட்டு திரும்பிய போது காந்தி இந்தியாவின் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்தார். அவரது வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கும் எண்ணம் தோன்ற உடனே களமிறங்கினார் அவரது வாழ்க்கையை நூல்கள் மூலம் முழுமையாக உள்வாங்கிக்கொண்ட அவர் அதன்பின் காந்தி குறித்த ஊடகப் பதிவுகள் எத்தனை நாடுகளில் உள்ளதோ அத்தனையும் சேகரிக்க முடிவுசெய்து களமிறங்கினார்.
போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்திலேயே பத்தாயிரம் மைல்கள் மூன்று ஆண்டுகள் பயணம் செய்து பல நாடுகளில் சேகரித்து வைக்கப்படிருந்த காந்தி பற்றிய பிலிம் சுருள்களை உரியவர்களிடம் அனுமதி பெற்று சேகரித்து அதன் மூலம் ஐம்பதாயிரம் அடி நீளத்துக்கு ஆவணப்படத்தை உருவாக்கினார். ஹாலிவுட்டில் சிறந்த படத்தொகுப்பாளர் மூலமாக அதை பன்னிரண்டாயிரம் அடியாக சுருக்கி பின் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து விவரணம் எழுதி ஆங்கில எழுத்துக்களாக படத்தில் சேர்த்துக்கொண்டார்
இவ்ஆவணப்படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் 1948ல் அந்த ஆவணப்படத்தை வெளியிட்டார் .
ஆனால் இந்த பெருமைமிக்க காரியத்துக்குபின் தமிழில் ஆவணப்படங்களே பெரிதாக எடுக்கப்படவில்லை
குட்டி ஜப்பானின் குழந்தைகள்
பல வருடங்கள் இடைவெளிக்குப்பின் 1989ல் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணி செய்யும் குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து குட்டி ஜப்பானின் குழந்தைகள் வெளியாகி பரவலான கவனம் பெற்றது. பல விருதுகளையும் வென்றது என்றாலும் இதை இயக்கியவர் சலம் பொன்னுரக்கர் கேரளாவைச் சேர்ந்தவர்
பின் இந்த படம் உருவாக்கிய தாக்கம் ஆவணப்படம் குறித்த உணர்வை தமிழ் சூழலில் சிறு சலனத்தை உண்டாக்கிவிட்டது என்றாலும் உடனடியாக எதுவும் நடந்துவிடவில்லை .
தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக சில தனியார் நிறுவனங்கள் எடுத்த சில படங்கள் தவிர வேறெந்த முயற்சியும் இல்லை . காரணம் அன்றுசினிமா எடுப்பது என்பது பெரும் முதலீடு சார்ந்த விடயம் அப்படியே எடுத்தாலும் அதற்கு வர்த்தக சூழலும் இல்லை.
இயக்குனர் எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய நாக் அவுட் குறும்படம் தேசுய விருது பெற்றதை ஒட்டி மாற்று சினிமா குறித்த விழிப்புணர்வு தமிழ் ச் சூழலில் உருவாகத்துவங்கியது .
இயக்குனர் சொர்ண வேல் ஈஸ்வரன்
1996ல் சொர்ண வேல் ஈஸ்வரன் தங்கம் என்ற பெயரில் எடுத்த ஆவணப்படம் ஒன்று பரவலான கவனத்தை உண்டாக்கியது . அவரே ஐ என் ஏ : இந்திய தேசிய ராணுவம் (1997) என்ற பெயரில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் குறித்த ஆவணபடத்தையும் எடுத்தார் . தொடர்ந்து வில்லு (1997) கருகத்திருவுளமோ (1999) ,தொடர்ந்து Migrations of Islam (2013 ) nagappattinam (2016) கட்டு மரம் போன்ற படங்களை எடுத்து வருகிறார்
இயக்குனர் அம்ஷன் குமார்
பாரதியைபற்றிய துல்லியமான ஆய்வுகளுடன் அம்ஷன் குமார் எடுத்த சுப்ரமணிய பாரதி எனும் ஆவணப்படம் தான் தொடர்ந்து தமிழில் எடுக்கப்பட்ட பலவாழ்க்கை வரலாற்று படங்களுக்கு முன்னோடி, குறிப்பாக பாரதி , பெரியார் காமராஜர் ஆகியோர்குறித்த வணிக சினிமாக்கள் உருவாக்கம் பெற அம்ஷன் குமாரின் பாரதி படமே முன்னோடியாக அமைந்தது
அம்ஷன்குமார் தொடர்ந்து அசோகமித்திரன் சி.வி.ராமன், உ.வெ. சாமிநாத ஐயர், ஆகிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார். . சதுப்பு நிலக்காடுகள் பற்றி இவர் எடுத்த சுற்றுச்சூழல் குறித்த படமும் கவனிக்கத் தகுந்தது . இதுவரை 25 க்கும் அதிகமான ஆவணப் படங்களை எடுத்து தமிழ் ஆவணப் பட உலகுக்கு பெருமை சேர்த்துள்ளார்
2015ல் இவர் எடுத்த யாழ்பாணம் தட்சினாமூர்த்தி பற்றிய படம் மூலம் முதன்முதலாக தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குனர் என்ற பெருமையும் இவருக்குண்டு
ஆர்.ஆர்.சீனிவாசன்
ஒரு ஆவணப்பட இயக்குனரை தமிழக போலீஸ் வலை வீசி தேடிய சம்பவமும், தமிழ் ஆவணப்பட உலகில் நிகழ்ந்துள்ளது . 1997ல் ஆர் ஆர் சீனிவாசன் எடுத்த நதியின் மரணம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் கூட சொல்லலாம்..
அன்று அனைத்து நாளேடுகளிலும் ஆர் ஆர். சீனிவாசன் புகைப்படமும் குறிப்பிட்ட ஆவணப்படத்தின் பெயரும் பரபரப்பாக பத்திரிக்கைகளில் அச்சாகின. ஒரு வகையில் பார்த்தால் சாதாராண பாமர மக்கள் கூட தினத்தந்தியில் வந்த இந்த செய்தி மூலம் ஆவணப்படம் என்ற ஒன்று இருப்பதை அரிந்துகொண்டனர் . கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஊர்வலம் சென்ற போது காவல் துரை அவர்களை ஆற்றில் ஓட ஓட விரட்டி அடித்ததை அப்படியே நேரடியாக பதிவு செய்யபட்ட காட்சிகளுடன் இத்திரைப்படம் உருவாக்கப் பட்டது. சென்னையில் பொது அரங்கம் ஒன்றில் இப்படம் திரையிடப்பட்டதால் தமிழகஅரசு இதற்கு தடையானை பிறப்பித்தது . பின் இப்படத்தை இயக்கிய சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததும் இனி ஆவணப்படங்களும் சென்சார் செய்த பின்பே பொது இடங்கலில் திரையிடப்படவேண்டும் எனும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் இப்படம் உருவாக்கிய மிகபெரிய சாதனை
ஆர்,ஆர் .சீனிவாசன் தொடர்ந்து என் பெயர் பாலாறு போன்ற சுற்றுசூழல் குறித்த முக்கிய ஆவணப்படங்களும், எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை பற்றிய பவா என்றொரு கதை சொல்லி மற்றும் புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய ஆவணப்படங்களும் இயக்கி இத்துறையில் தொடர்ந்து இயங்கி வருபவர்
இயக்குனர் ஆர்.வி ரமணி .
இந்த வரிசையில் இத்துறைக்காக தன்வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இயக்குனர் ஆர்.வி ரமணி . முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இத்துறையில் இயங்கிவரும் ரமணி இவரது படங்கள் இந்திய அளவில் பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறப்பு செய்திருப்பவர். இவர் இயக்கத்தில் மறைந்து வரும் அரிய கலையான தோல்பாவைக் கூத்து ( 2003 )கலைஞர்கள் பற்றிய 150 நிமிட ஆவணப்படம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு அரிய முயற்சி. தமிழ் நாடு முழுக்க பல்வேறுபட்ட கலைஞர்களை நேரடியாக கள ஆய்வு செய்த இப்படம் தமிழ் ஆவணப்பட உலகின் இன்னுமொரு மைல் கல் எனலாம் பிற்பாடு
1999ல் ஓவியர் ஆதிமூலம் பற்றி லைன்ஸ் ஆப் காந்தி, மற்றும் 2005ல் எழுத்தாளர் சுந்தரராமசாமி பற்றிய நீ யார், போன்ற படங்கள் இவர் இயக்கத்தில் வெளியான குறிப்பிடத்தக்க படங்கள் ரமணியின் படங்கள் தனிமனிதமும் அக விசாரணையும் கவித்துவமும் கூடி வேறு திசையில் பயணித்து புதிய அனுபவங்களுக்குள் இழுத்துச் செல்பவை . இந்த பாணியின் உச்சமாக 2019 ல் இவர் இயக்கிய ஓ தட்ஸ் பானு எனும் ஆவணப்படம் அந்த ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஆவணப்படத்துக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடதக்கது.
இயக்குனர் ஆர்.பி.அமுதன்
ஒரு ஆவணப்பட இயக்குனரின் உச்ச பட்ச பொறுப்புகளை தமிழ் சூழலில் உணர்த்திய கலைஞன் ராமலிங்கம் புஷ்பலிங்கம் அமுதன் எனும் ஆர்.பி அமுதன்... மதுரையைச் சேர்ந்தவர். மதுரையில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் லீலாவதி மற்றும் தீவிரவாதிகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் 1999ல் தன் பயணத்தைத்துவக்கிய அமுதன், மதுரையில் ஒரு குறிப்பிட்ட தெருவில் மலக்கழிவுகளை சுத்தம் செய்யும் மாரியம்மாள் எனும் தலித் துப்புரவு தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கையைச் சோலும் பீ (2003 )எனும் இவரது ஆவணப்படம் தமிழில் மனித உரிமைகள் சார்ந்து மிகபெரிய விழிப்புணர்வை உண்டாக்கியது . தமிழ்நட்டில் நிலவும் சாதிய ஒடுக்குதல்கலின் அவலத்தை இப்படத்தில் வெட்ட வெளிச்சமாக்கினார் . தொடர்ந்து இத்துறைகாக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்துவரும் அமுதனின் இயக்கத்தில் உருவான செருப்பு தைக்கும் தொழிலை செய்துவருபவர்கள் பற்றிய செருப்பு (2006) (மற்றும் அணு உலைக்கு எதிரான ரேடியேஷன் ஸ்டோரீஸ் (2008) ஆகியவையும்பரவலான கவனத்தை பெற்றவை . தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கலை இயக்கியுள்ள இவரது படங்கள் இந்திய முழுக்க பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன
மட்டுமல்லாமல் மறுபக்கம் என்ற பெயரில் தொடந்து மதுரையிலும் சென்னையிலும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஒரு ஆவணப்படத்துகென திரைப்பட விழாவை நடத்தி வருகிறார்.
இயக்குனர். லீனா மணிமேகலை
அடிப்படையில் எழுத்தாளரும் கவிஞருமான லீனா மணிமேகலை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆவணபட இயக்கத்தில் ஈடுபட்டு வருபவர் சமூகத்தில் பெண் ஒடுக்குதல் குறித்த பார்வையை முன்வைக்கும் படங்களை அதிகம் இயக்கிய லீனா 2002ல் மாத்தம்மா தமிழின் முதல் இன வரைவியல் சார்ந்த ஆவணப்படம் எனலாம் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான மூன்று மூன்று அடித்தட்டு உழைக்கும் பெண்கள் பற்றிய ஆவணப்படம் தேவதைகள் தமிழில் விளிம்புநிலை பெண்களின் வாழ்வையும் அவர்கள் மனத்திடத்தையும் சமூக நெருக்கடிகளையும் தோலுரித்துக் காட்டியது பெண்னாடி ,பலி பீடம் பறை white van stories போன்ற குறிப்பிடத் தகுந்த படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது முழு நீள கதைப்படங்களை இயக்கி வருகிறார் அவ்வகையில் இவர் இயக்கிய மாடத்தி உலக முழுக்க பல திரைப்பட விழாக்களில்,பங்கேற்று விருதுகளை பெற்று வருகிறது
இயக்குனர். ரவி சுப்ரமணியன்
கவிஞர் எழுத்தாளர் பாடகர் என பன்முகங்கொண்ட கலைஞரான ரவி சுப்பிரமணியம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி தயாரிப்பாக நூற்றுக்கும்மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த இவரது ஆவணப்படம் அம்ஷன் குமாரின் பாரதிக்கு பிறகு அதிகம் பாரட்டைபெற்ற குறிப்பிடத்தக்க ஆவணப்படமாக கருதப்படுகிறது. தொடர்ந்து இத்துறையில் இயங்கி வரும் இவர் இந்திராபார்த்தசாரதி ,மா,.அரங்கநாதன் திருலோக சீதாராம் போன்ற அரிய இலக்கிய ஆளுமைகள் குறித்தும் இயக்குனர் பாலச்சந்தர் குறித்தும் தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்து வருகிறார்
இயக்குனர். சோமிதரன்
இலங்கைத் தமிழரான சோமிதரன் 2004 முதல் சென்னையில் இயங்கி வரும் ஆவணப்பட இயக்குனர் . 2005ல் போபால் பேரழிவு குறித்து தன்முதல் ஆவணப் படத்தை இயக்கி அறிமுகமானார். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய எரியும் நினைவுகள் (2008 ) மிகச் சிறந்த போர் எதிர்ப்பு ஆவணமாகவும் தமிழர் பண்பாட்டு பதிவாகவும் கருதப்படுகிறது . தொடந்து இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை குறித்த முல்லைத்தீவுசாகா எனும் படமும் போரினால் தமிழர்கள் படும் துன்பங்களையும் அவலங்களையும் பதிவு செய்த குறிபிடதக்க ஆவணமாக கருதப்படுகிறது , தற்போது சென்னையில் முழுநீளகதை படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
இயக்குனர் .திவ்ய பாரதி
மதுரையைச் சேர்ந்த வழக்கரைஞர் திவ்ய பாரதி 2017ல் வெளியான இவரது கக்கூஸ் ஆவணப்படம் மூலம் முழுமையான ஆவணப்பட இயக்குனராக தன்னை வரித்துக்கொண்டவர். கக்கூஸ் ஆவணப்படம் வெளியான மறுநாளே போலீசாரல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் . மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துவதாக பலத்த எதிர்ப்புகள் வர போலிசார் இவர்மீதுவழக்கு பதிவு செய்து தேடத்துவங்கினர் அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீனவர் பிரச்சனை குறித்து எடுத்த ஒருத்தரும் வரலே என்ற படத்தின்மீதும் பட வெளிவருவற்கு முன்பே போலீசார் தேடும் அளவுக்கு இவரது ஆவணபட செயல்பாடுகள் காத்திரமானவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழு நீள படம் எடுக்கும் முயற்சியில் இருந்து வருகிறார்
மேற்சொன்ன அனைவரும் தொடர்ந்து இத்துறைக்காக தங்கள் வாழ்வை முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ அர்ப்பனித்து செயல்படுபவர் . இவர்களின் செயல்பாடுகளால் மட்டுமே தொடர்ந்து தமிழ் ஆவணபடத்துறை இன்று தமிழில் ஓரளவு தடம் பதித்து வளர்ந்துள்ளது
இவர்களைத்தவிர தங்களது அரிய முயற்சிகளின் மூலம் சிலர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப்படங்கள் இத்துறைக்கு தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் கொடுத்துள்ளன
அவர்களுள் பால கைலாசம் இயக்கிய வாஸ்து மரபு, கோம்பை அன்வர் இயக்கிய யாதும் ஊரே .கீதா இளங்கோவனின் மாதவிடாய் , அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கீழ்வெண்மனி பற்றிய ராமய்யாவின் குடிசை, செந்தமிழன் இயக்கிய பேசாமொழி ,கோவி லெனின் இயக்கத்தில் அண்ணா ,ப்ரேமா ரேவதியின் உங்களில் ஒருத்தி, பாலமுருகன் இயக்கிய நொய்யல், இரா.முருகவேள் மற்றும் ஒடியன் லட்சுமணன் இயக்கிய நாளி, தவமுதல்வன் இயக்கத்தில் உருவான பச்சை ரத்தம் போன்றவை தம்மளவில் சிறப்பான் ஆக்கமும் வெளியான போது சூழலில் பலரது கவனத்தை ஈர்த்து தமிழ் ஆவணப்பட உலகுக்கு பெருமையும் மதிப்பும் கூட்டிய ஆவணப் படங்கள்
வணிக சினிமாக்களுக்கு கிடைக்கும் கவனத்தில் ஒரு துளியளவு கவனத்தை ஊடகங்களும் அரசாங்கமும் கொடுத்தால் இத்துறயில் இன்னும் கூடுதலாக பலர் இயங்கி சமூகத்துக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடும்
பாலு மகேந்திரா நூலகம் சார்பாக இத்துறைக்கு ஒரு இணைய தளம் உருவாக்கி தமிழ் ஆவணப்படங்கள் குறித்தஆவணகப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு இதன்மூலம் வழி வகை செய்யவிருக்கிறது என்பதை இக்கட்டுரை மூலம் தெரிவித்துக்கொள்வதில் உவகைகொள்கிறேன்
-அஜயன்பாலா
பாலுமகேந்திரா நூலகம்
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
No comments:
Post a Comment