April 21, 2016

விமர்சனம் -கவிப்பித்தனின் ஊர்ப்பிடாரி சிறுகதை தொகுப்புகவிப்பித்தன்

 ஊர்ப்பிடாரி சிறுகதை தொகுப்பு  - 




எழுத்து வாழ்வை சமூகத்தை பிரதிபலிக்கும் அரியதொரு ஊட்கம் .
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் . காலங்கள்  மேகங்களை போல கடந்து கொண்டிருக்கின்றன. எல்லா காலத்துக்கும் சாட்சியாக பூமியை போல நிலைத்திருப்பது  நல்ல எழுத்துக்கள் மட்டுமே . காலம் சில எழுத்துக்களை கல்வெட்டுக்களாக மாற்றிவிடுகிறது. அவையே இலக்கியமாகவும் நிலைபெற்று காலம் காலமாக மனிதர்களுக்கு அம்மொழி சார்ந்த வரலாற்றை கலாச்சாரத்தை பண்பாட்டை கைமாற்றி தரும் காரியத்தை செய்கின்றன. அதே போல மொழியால செய்யப்படும்.  எல்லா படைப்புகளும் இலக்கியமாகிவிடுவதில்லை . வெண்பாக்களானாலும் .. விருத்தங்களானாலும் ஆசிரியப்பாக்களானாலும் காவியமானலும் காப்பியங்களானாலும்  அது தான் எடுத்துக்கொண்ட வடிவத்தின் முழுமை கொள்ளும்  விததால் மட்டுமே இலக்கியம் எனும் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றன. பின் அவை பாடுபொருள் நிமித்தமும்  காலத்தை கையகபடுத்திய வித்த்தாலும் கற்பனை செறிவாலும் தரவேறுபாட்டை கொள்கின்றன. இதைத்தான்  தொல்காப்பியமும் நன்னூல் களும் நமக்கு பயிற்றுவித்து வந்துள்ளன்
இந்த சூத்திரங்கள் மரபிலக்கியத்தோடு முடிந்துவிட்டன.. ஆனால் மேற்கு வரவான புதுக்கவிதை சிறுகதை நாவல் போன்ற புதிய வடிவங்களுக்கு என்ன இலக்கணம் என்று யாரும் வரையறுக்கவில்லை . காலத்தின் சிறந்த சிறுகதைகளும் கவிதைகளும் நாவல்களும் அதற்கான வடிவம்குறித்து நமக்குள் திட்டமான ஒரு பிரக்ஞயை உருவாக்கி தந்திருக்கின்றன.
ஒரு வாசகனாக சிறுகதை மூலம் நான் பெறுவது ஒரு அக தரிசனம் . படைபெனும் சிறுதுளை வழியாக நான் அனுபவத்தின் சாரத்தை உள்வாங்குகிற போது பெரும்  விசாலத்தை அகம் எதிர்கொள்கிறது. புதுமைப்பித்த்னின் கதைகளை வாசிக்கிற போது என் கால்கள் சட்டென உயரமாகி ஆகாயத்திலிருந்து மக்களை அவர்களது காரணமற்ற அபத்த்மான வாழ்வை அவதானிக்க முடிகிறது . கு.பா. ராவிடம் கண்ணுக்கு புலப்படாத பெண்களின் அக உலகத்தை ஜூம் இன் செய்து பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. மவுனியை படிக்கும்போது  உடலுக்கும் வெளிக்குமான சமன்பாட்டை உணரமுடிகிறது இவைகளின் மூலமாக நான் வாழ்வின் பன்முகத்தை புரிந்து இயற்கை என்மீது வித்திருக்கும் விலங்குத்ன்மையை உடைத்து முழுமை பெற்றவனாக மாறுகிறேன்
இலக்கியத்தின் வேறெந்த வடிவத்தைகாட்டிலும் சிறுகதை படைப்பாளிக்கு சவாலான வடிவமாகத்தானிருக்கிறது . நாவல் மற்றும் கவிதைகளில் ஒரு படைப்பாளி  தவிர்க்கவே முடியாமல் வாழ்வனுபங்களை இறக்கிவைக்க அல்லது புலம்ப நேரிடுகிறபோது ....தான் அல்லாத த்ன்மையை நோக்கி செல்லவைப்ப்பது சிறுகதைகளுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது . அதே சமயத்தில் அது கவர்ச்சி மிகுந்த வடிவமாகவும் எனக்கு படுகிறது . ஒரு வாளை ப்போல கச்சிதமான அத்ன் வடிவம் என்னை சதா ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது . என்னை போல எல்லா சிறுகதை எழுத்தாளர்களுக்கும் இருக்குமா என த்தெரியாது ஆனால் தன் அடவுகளை நேசித்த்படி ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கத்க் கலைஞனைப்போல நான் கதைகள் எழுதும்போது அத்ன் வடிவத்தின் மீது காதல் கொள்ளதுவங்குக்கிறேன் . இந்த காதல் வெளிப்படையானது அல்ல .. கடைசிவரை உணர்த்தாமலே போக்க்கூடிய வெளிக்க்டாத காதல் ஒரு ஆசிரியருக்கு மாணவி மேல் காதல் வரும்போது அதை வெளிப்படுத்துவது எப்படி விதிகளுக்கு புறம்ம்னாதோ அதுமாத்ரியான் காத்லை நான் கதைகளீன் வடிவங்கள் மீது கொள்கிறேன்
சிறுகதைகள் இவ்வாறாகத்தான் என்னை வளர்த்து வந்திருக்கின்றன . மட்டுமல்லாத தமிழிச்சூழலையும் வளர்த்து வந்து சாகா வரம்பெற்ற இலக்கியங்களாகவும் சிறுகதைகளின் இலக்கணங்களாகவும் உருமாற்றமடைந்திருக்கின்றன.
இந்த வரிசையிலிருந்துதான்  நான் கதைகளை மதிப்பீடு செய்கிறேன் கடந்த ஆண்டில் ஒருநாள் வேலூர் தமு எக ச சார்பாக  நட்த்தப்ப்ட்ட கவிப்பித்த்னின் முந்தைய முதல் சிறுகதை தொகுப்பான் இடுக்கி விம்ர்சன கூட்ட்த்தில் பங்கேற்றிருந்தேன்..
அத்ற்காக அவரது கதைகளை  முடித்த போது உண்மையில் இப்படியாக எழுதக்கூடிய ஒருவர் இதுநாள் வரை இலக்கிய உலகத்தால் அறியப்ப்டாது போனது எப்படி என்ற கேள்வியே என்னுள் அதிகம் எழுந்த்து. இதை அக்கூட்ட்த்திலும் வெளிப்படுத்தியிருந்தேன். அழ்கியபெரியவனின் கதைகள் மூலம் அப்பகுதி மக்கள் வாழ்வை நான் ஓரளவு உள்வாங்கியிருந்தாலும் கவிப்பித்த்னின் கதைகள் இன்னும் சற்று கூடுதலாக அம் ம்க்களது வாழ்வை நெருக்கமாக காண்பித்தது.
இக்காரணங்களால் இந்த அவரது இரண்டாவது தொகுப்பிற்கான முன்னுரைக்காக கவிப்பித்தன் தொலைபேசியில் அழைத்த போதும்  உடனடியாக சம்மதித்தேன் . வாசித்த்வுடன் சட்டென மனதில் பட்ட்து இதுதான் முந்தைய தொகுப்பிலிருந்த தீவிரத்த்ன்மை இத்தொகுப்பிலும் குறையாமல் எழுதியிருக்க்கீறார்.
குறிப்பாக ஊர்ப்பிடாரி கதை நவீன கதைத்ன்மைக்கான கூறுகளுடன் சிறப்பாக வடிவம் பெற்றிருக்கிறது . ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக எனும் சொலவடை பரவலாக வட மாவட்ட கிராமங்களில் பெண்கள் புறம்பு  பேசும்போது  பயன்படுத்துவார்கள் . இதர கதைகள் அனைத்தும் அனுபவத்திலிருந்து வெளிப்படுகிறபோது இக்கதை அவரது அதீத கற்பனையில் உருபெற்றிருப்பதால் சட்டென ஒரு ஈர்ப்பையும் சுவாரசியத்தையும் தன்னுள் தக்கவைத்துக்கொள்கிறது.
இக்கதை கற்பனையின் உச்சம் என்றால் அனுபவத்தின் உச்சமாக உருவாக்கம் கொண்டிருக்கும் கதை சிப்பாய் கணேசன். கிராமத்து பேச்சு மொழியின் கெச்சைத்த்ன்மையொடு அவர்களது மனோபாவத்துடன் மிக நெருக்கமாக அவர்கள் உலகத்தில் மண் திண்ணையில் அமரவைத்து நம் முன் காட்சிபடுத்தி மனதை பாரமாக்கிவிடுகிறார்..இக்கதையில் சிறுவனின் அக உல்க சித்திரிப்பு சிதையாமல் அதேசம்யம்  பெரியமனிதர்களின் அசிங்கங்களையும் வாசகர்கள் உணரும் விதமாக  கவிப்பித்தன் கோடிட்டு காட்டும் இடங்களில் நல்ல சிறுகதையாளராக அங்கீகாரம் பெறுகிறார்.
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் அவனது அப்பா கணேசன்... தான் வாங்கிவந்த பிராந்திபாட்டலில் கொஞ்சம் எடுத்து  சிறுவனின் அம்மாவுக்கு  கொடுக்க ஆரம்பத்தில் வேணாம் வேணாம் என மறுத்துக்கொண்டே அவசரமாய் வாங்கிகுடித்துவிட்டு கணவனை அவள் இறுக்கி முத்தமிடும் காட்சியில் நம் மனம் பாத்திரங்களின் உலகத்தோடு ஒன்றி சங்கமித்துவிடுகிறது.
எனக்கும் மிகவும் பிடித்த தொகுப்பின் மூன்றாவது கதை சிலுவைச்சுழி
இக்கதையின் நாயகன் ஒரு சிறுவன் . கிறித்துவ கோயிலின் திருவிழா முடிந்த மறுநாள்  காலையில்  அங்கு சென்று எங்காவது காசுகிடைக்குமா என தேடும் அவனது  பாதையில் விரியும் இக்கதை ஒரு வகையில் நீதி போத்னைக்கதையாக தெரிந்தாலும் இறுதிக்காட்சியில் அது நம்மை நெகிழவைத்து பெரும் அனுபவத்துக்குள் அமிழ்த்திவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை
மேற்சொன்ன மூன்று கதைகள் மூலம் இத்தொகுப்பு  ஒரு சிறந்த சிறுகதைதொகுப்புக்கான் மதிப்பை பெறுகிறது .
மற்றும் திருட்டு இலுப்பை ,பாப்பராப்பூச்சி . ஐஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம் முட்களில் பூக்கும் மலர்கள்: போன்ற கதைகளும், இத்தொகுப்பில் குறிப்பிட்த்த்குந்த கதைகளாக இடம்பெற்றிருக்கின்றன . இக்கதைகள் எளீமையான மனிதர்களையும் அவர்களது  அறியப்ப்டாத துயரங்களையும்  வெக்கை மிகுந்த அவர்களது வாழ்க்கைகையையும் நமக்கு காட்டுவதில் முழு வெற்றியை பெறுகின்றன  . ஆனாலும் அதேசமயத்தில் இவையனைத்தும்  இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக இருக்கிற போது இன்றைய நடைமுறை கிராம ,வாழ்க்கையின் அவலங்களிலிருந்து கவிப்பித்தன் தப்பித்து ஒரு வசதியான இட்த்திலிருந்து கிராம வாழ்க்கையை அவதானிக்கிறாரோ என்றும் ஐயம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை . நூறுநாள் வேலைத்திட்டம் இலவச தொலைக்காட்சி கிரைண்டர் மிக்சிக்கள் மூலம் கிராமக்கள் வருங்காலத்தில் சந்திக்க போகும் பெரும் ஆபத்துக்கள் குறித்த சிந்த்னையை இன்றைய கிராமத்து கதைகள கோரி நிற்கின்றன .மேற்சொன்னவை அனைத்தும் கிட்ட்த்ட்ட ஒரு மயக்க ஊசிபோல  கிராமத்து மக்களை போலி உற்சாகத்துக்கு அழைத்து செல்வதாக இருக்கின்றன .. நகரமக்களின் திடீர் வசதி பெருக்கத்திற்கு விலையாகவும்  விளைநிலங்களை பிடுங்கி வருவதற்கு மாற்றாகவும்தான் இந்த சலுகைகள் என்பதை நாம் உணர்த்த வேண்டிய கட்டாயம் இன்று எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கிறது.
இனிவரும் கதைகளில் கவிப்பித்தன் இதனையும் கணக்கிலெடுக்க வேண்டும் என விரும்புகிறேன் மற்றபடி  ராஜேந்திரசோழன் ,  ஜி. முருகன்  அழ்கிய பெரியவன் , க்ண்மணி குணசேகரன் , காலபைரவன் போன்ற வடமாவட்ட எழுத்தாளர்களின் கிராமத்து கால்களின் தட்த்தையொட்டி கவிப்பித்த்ன தன் கதைகள் மூலம் இலக்கிய உலகில் தன் த்ட்த்தையும் இத்தொகுப்பின் மூலம் அழுந்த  பதியவைக்கிறார் என்பதில் எள்ள்ளவும் ஐயமில்லை
தொடர்ந்து அவர்  த்னது கதைகளை முன்னெடுத்து செல்லும்பாதையில் வரும் காலத்தில் ஆகச்சிறந்த கதைசொல்லியாக வளரவும என் வாழ்த்துக்களை கூறுகிறேன்

கவிப்பித்தன் எழுதியிருக்கும் ஊர்ப்பிடாரி தொகுப்பின் அனைத்து கதைகளையும் ஒரு சேர வாசித்து முடிக்கிறபோது  சக படைப்பாளியாக அவருக்கு நான் சொல்ல விரும்புவதாக பட்ட்து இந்த வடிவம்குறித்த சிறு மெனக்கெடல்தான். உண்மையில் நான் வாசித்த முந்தைய தொகுப்பிலும் சரி இந்த தொகுப்பிலும் அவரது கதைகள் மீது வாழ்வனுபவங்கள்மீது ஒரு கள்ளத்த்னமான பொறாமையே உண்டாகும் அள்வீற்கு ஈர்ப்பை வசீகரத்தை உண்டாக்கி விடுகிறார். வட மாவட்டம் சார்ந்த சிறுகதைகள் எனும்போது ராஜேந்திர சோழன் அழகிய பெரியவன் ஜி முருகன்  காலபைரவன் கண்மணி குண சேகரன் சு. தமிழ்ச்செல்வி ஆகிய படைப்பாளிகள் கண்முன் வரிசைகட்டி நிற்கினறனர். அவர்கள் வரிசையில் தன் அழுத்த்மான கதைகள் முன் கவிப்பித்தன் இந்த பத்தாண்டுகளின் துவக்க படைப்பாளியாக வந்து நிற்கிறார்.

மேற் சொன்ன படைப்பாளிகளின் வரிசையை அவர்கள் அழுத்தமாக உண்டாக்கி விட்டுப்போன த்ட்த்தை கவிப்பித்தன் கடக்க வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சிப்பாய் கணேசன் ஊர்ப்பிடாரி மற்றும் முந்தைய தொகுப்பில் உள்ள  சில சிறுகதைகளை வைத்து பார்க்கும் போது அவருக்கு அதற்கான முழு தகுத்கியும் உள்ளதை என்னால் உணரமுடிகிறது 
அஜயன் பாலா

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...