காதலர்
தினத்தை யொட்டி ஒரு வார இதழுக்காக எழுத
ஆரம்பித்த போது மனம் எனும் ஸ்கேனர் தானாய் நினைவு குளத்தில் கண்டெடுத்தவள் அந்த
தேவ மலர்
தேவதைகளின்
மலர்
பிறக்கும்போதே
அன்னைதெரஸாவாய் பிறந்துவிட்டவள்
அவள் முழு பெயர் டெய்சி தமிழ்ச்செல்வி
நான் எட்டாவது படிக்கும் போது வகுப்பில் வந்து சேர்ந்தவள்.
துறு துறு கண் , கறுப்பி ஆனாலும் பேச்சிலும் சுபாவத்திலும் அத்தனை கவர்ச்சி . எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்பவள் .கிறிஸ்தவ பெண்களுக்கே
உரிய கீச்கீச் குரல் .
பின்னாளில் யார் யார்
என்னவாகபோகிறீர்கள் என ஒரு நாள் ஆசிரியர் எல்லோரையும் எழுப்பி கேட்க அவள் தான் ப்ளாரன்ஸ்
நைட்டிங்கேல் போல சமூக சேவை செய்யப்போவதாக கூறியபோது பால்ராஜ் வாத்தியார் ஆச்ச்ர்யத்துடன் பாராட்டினார்
.அனைவரையும் அவளுக்காக கைதட்டச்சொன்னார். நானும்
உற்சாகமாக கைதட்டினேன். அன்று அவள் அப்பழுக்கில்லாத ஒரு தேவ மலராக
காட்சியளித்தாள் .அது முதல் டெய்சியை பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள்
ஒரு வெட்க புன்னகை தானாய் மலரும் .
ஒரு மழை நாளில் வகுப்பே
சோ வென இரைந்து கொண்டிருக்க டீச்சர் அனைவரையும் அமைதிப்படுத்தி டெய்சி யை எழுப்பி ஒரு
பாட்டு பாடச்சொல்ல வகுப்பே அமைதியாகிப்போனது. , ராஜ நாகம் படத்தில் வரும் தேவன் கோவிலில்
என்ற பாடலை அன்று டெய்சி பாட மழையில் சிணுங்கின
ஜன்னல் கதவின் கொக்கி அதற்கேற்ற தாளமாக இசைத்தது.. ஜன்னல் கம்பிக்கப்பால் வெளியே பள்ளியை
ஒட்டிய தோட்ட்த்தில் மழை கொட்டிக்கொண்டிருக்க டெய்சியின் குரல் கருங்கல் தரையில் சர்ப்பம் போல எனக்குள் நுழைந்து இதயத்துள் சுருண்டது..
அன்று இரவே ஒரு கனவு . யாருமற்ற குளக்கரை படிக்கட்டுகளில்
டெய்சி மட்டும் பட்டு சட்டை பாவாடையுடன் பாடிக்கொண்டிருக்க ஈரத்துண்டை இடுப்பில் கட்டியிருக்கும்
நான் ஒரு தூண் மறைவில் ஒதுங்கி நின்று அவளை
ரசிக்கிறேன் என் கையில்
சோப்புபெட்டி தேங்காய் நார். ஒரு வேப்பங்குச்சி
மற்றும் முறுக்கி
பிழிந்த ஈரத்துணிகள். மறு நாள் காலையிலிருந்தே என்ன
வெனத்தெரியாத ஜுரம் .
ஒரு நாள் பகல் வேளையில்
வகுப்பில் அமர்ந்திருக்க தலையில் இளம் சூடு.உணர கைவைத்து
தடவி திரும்பி மேலே பார்க்க மேற்கூரையின் ஓடுகளின்
வழியாக இரண்டு வெளிச்ச குழல் வகுப்பில் விழுந்துகொண்டிருந்தது.
ஒன்று என் தலை மேல்.
விழுந்திருக்க இன்னொன்று அவள் தோளில்.. வகுப்பில்
அத்த்னை பேர் அமர்ந்திருக்க எங்கள் இருவர் மீது மட்டும் விழுந்த வெளிச்ச குழல்கள் என்னை
பரவசப்படுத்தியது. வெளிச்சகுழலினூடெ கைவிரல்களை குறுக்காக நீட்ட
மாசு படலங்கள் என் விரல்களில் விளையாடின . யாரிடமாவது இதை சொல்ல
மனசு ஏங்கியது. யாரிடம் சொல்ல . .. அவளிடமே
சொன்னால் என்ன ?
அன்று அப்போது கணக்கு
பாடம் கிருஷ்ணன் வாத்தியார் பலகையில் ஏதோ மும்ம\ரமாக
எழுதிக்கொண்டிருக்க நான் டெய்சியை நோக்கி திரும்பினேன்
டெய்சி.. டெய்சி.. குரல் வயிற்ருக்குள்ளேயே
அவள் மும்மரமாய் எழுதிக்கொண்டிருந்தாள்
அவள் எப்போது நிமிர்வாள்
என்னை பார்ப்பாள் என காத்திருந்தேன்
அவள் மீது அதுவரையில் விழுந்த
வெளிச்சகுழல் இப்போது மெல்ல அவளை விட்டிறங்கி தரைக்கு விழ துவங்கியது
அவள் நிமிரந்த ஒரு
கணத்தில் நான் சைகையால் கூரையின் வெளிச்சத்தை காண்பிக்க அவளும் நிமிர்ந்து பார்த்தாள் அதே போல் எனக்கருகேயும்
வெளிச்சம் வட்டமிட்டிருப்பதை காண்பிப்பதற்குள் அது அருகிலிருந்த கேசவன் தலைக்கு நகர்ந்து
விட்டிருந்தது.
அவளிடம் அசடு வழிந்த்தோடு
அந்த பகல் இருளை நோக்கி நகர்ந்த்து.
அந்த நாளுக்கு பிறகு
கூரையிலிருந்து கசியும் ஒளிக்குழல் எனக்கும் அவளுக்கும் ஒரு சேர விழவே இல்லை
அதன்பிறகு ஒரு நாள்
பள்ளி விட்டு வரும் போது வழியிலிருந்த தீர்த்த குளத்தில் மீன் அதிகமிருப்பதாக கூறீய
பள்ளி நண்பர்களுடன் அதை பார்க்க செல்ல யாரோ என்னை முதுகில் கைவைத்து தள்ளிவிட குளத்தில் விழுந்து
விட்டேன் . உடல் முழுக்க நனைந்த படி ஈரம் சொட்ட சொட்ட பயத்தில்
அழுதபடி கரையில் நான் நிற்க சுற்றியிருந்த நண்பர்கள் கேலி செய்ய அந்த நேரம் பார்த்தா
அங்கு டெய்சி வரவேண்டும் ..
டெய்சி என்னருகே வந்து
ஏதாவது உதவி செய்யட்டுமா என கூறி வருத்தப்பட எனக்கு அழுகை அதிகமாகியதே தவிர நிற்கவில்லை
அதன் பிறகு தாழ்வு
மனப்பான்மை காரணமாகவோ என்னவோ டெய்சியிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டேன்.
ஆண்டுகள் கடந்தன எட்டாம்
வகுப்பிற்கு பின் அந்த பள்ளியை விட்டு அனைவரும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்தோம்
பத்தாவதில் அவள் படித்த பெண்கள் பள்ளியில் டெய்சி முதல் மாணவி என்ற செய்தி என்னை பெரிதாக
ஆச்சர்யப்படுத்தவில்லை
அவ்வப்போது தியேட்டர் , கடைவீதி மற்றும் பொது இடங்களில் அவள் அப்பாவோடு அல்லது அண்ணனோடு
அவளை பார்ப்பது வழக்கம் . பெரிய பெண்ணாக ஆன பிறகும் அவள் யாரோடும்
வெடுக்வெடுக்கென பேசுவதை நிறுத்தவில்லை. என்னை பார்க்கும் போதும்
அவள் சிரிக்க முயல நான் அவளை ஞாபகமில்லாதவனாக காட்டிக்கொள்ள முயற்சித்து விலகி நடந்தேன்.
பெரிய பெண்ணாக மாறிய
பிறகு அவள் முன்னை விட மிகவும் அழகாக மாறிவிட்டிருந்ததும் ..நம்மைவிட பல மடங்கு அழகான ஒருவனை அவள் இந்நேரம் தேர்ந்தெடுத்து
விட்டிருக்ககூடும் என்ற தாழ்மையுணர்வும்தான் அதற்கு காரணம்
ப்ளஸ் டூ படிக்கும்போதே
நான் நினைத்தது போலவே அவளுக்கு காதல் கல்யாணம் என்ற செய்தியும் வந்தது.
அந்த துக்க செய்தியை
வகுப்பு தோழன் சொல்லியதிலிருந்து அவள் மேல் ஏனோ ஒருவித கோபமும் வெறுப்பும் தான் அதிகமாய்
வந்தது..
படிக்கும்போதே காதல்.. சே என்ன பெண் .. நல்ல வேளை தப்பிச்சோம்
என சமாதான்ங்கள் சொல்லி ஆற்றாமையை தீர்க்க முயன்றேன்
ஒரு நாள் மாலைக்காட்சிக்கு
தியேட்டருக்கு போனவனுக்கு அதிர்ச்சி
தியேட்டர் வாசலில்
டெய்சி பூரிப்புடன் புதுப்பெண்னாய் நின்று கொண்டிருந்தாள்
சே இவளை போய் பார்க்க
நேர்ந்துவிட்டதே என உள்ளுக்குள் குமைந்தபடி திரும்பியபோதுதான் அவள் கணவனை பார்த்தேன் .ஒரு கால் ஊனமான நிலையில் கால் தாங்கி கால்தாங்கி நடந்து வந்தான்
.
எனக்கோ அதிர்ச்சி . அவள் மீதான் காதல் மீண்டும் துளிர்க்க துவங்கியது
அவள் உண்மையில் ஒரு
தேவ மலர்தான் என நெஞ்சு உரக்க கூவியது
என்னுடன் வந்த வகுப்புத்தோழன்
டெய்சியின் பக்கத்துவீட்டு வங்கியில் வேலை செய்பவன் .அவன்
என்றும் வங்கி வேலை ஊனத்தை மறைத்து காதலை உண்டாக்கி விட்டது என்றும் இகழ்வாக கூறியபடி
தியேட்டருக்குள் என்னை அழைத்து சென்றான்.
டெய்சி தமிழ்ச்செல்வி
ஒரு கையால் கணவனைத்தாங்கி தியேட்டருக்குள் அழைத்துசென்றபடி என்னையும் பார்த்து வழக்கம் போல
சிரித்தாள்
இம்முறை வெட்கமில்லாமல்
மேலும் காதல் பொங்க அவளை பார்த்து பதிலுக்கு சிரித்தேன்.
1 comment:
அருமையான கதை!
Post a Comment