January 30, 2016

டிங்கோ புராணம் – கவிதை தொடர்

டிங்கோ புராணம் கவிதை தொடர்

1.
செருப்பு திருடன் டிங்கோ வின் வீட்டிற்கு
காதலியுடன் மாலையில் சென்றிருந்தேன்.

முந்தின இரவு 
குறி சொல்பவளின் வீட்டில்
அவளது செருப்பு தொலைந்திருந்தது.

வாசலில் இருந்த பாட்டிமார் இருவர்
டிங்கோ ஒரு அப்பாவி
அவன் மேல் வீண் பழி வேணாம்
என புலம்பிக்கொண்டிருந்தனர்

டிங்கோ வின் அம்மா
பல வண்ண காலணிகளை
எங்கள் முன் கடை பரப்பினாள்

பச்சை நீலம் சிவப்பு
மஞ்சள் ஊதா கருப்பு
குதிகால் உயர்ந்தது
பின்பக்கம் வார்வைத்தது
மற்றும்
ஏழை சிறுமிகளின்
தேய்ந்த ரப்பர் செருப்புகள்

அல்லாமல்
முழுதும் செருபுகளால்  நிரம்பிய
அறையொன்றையும்
திறந்து காண்பித்தாள்

டிங்கோவின் தங்கை
மரத்தூணின் மறைவிலிருந்து
எங்களுக்கு குரங்கு காட்டினாள்

பாட்டிகளின் சாபம் பின் தொடர
ஏமாற்றத்துடன் படியிறங்கினோம்

தெருவில் டிங்கோ
ஐஸ் க்ரீம்  வண்டிக்கருகே
நின்றுகொண்டிருந்தான்-அவன்
அருகிலிருந்த குருட்டு
பெண்னின் கால்களில்  -என்
காதலியின் செருப்பு

நானும் காதலியும்  
எதுவும் பேசாமல்
அவர்களை
கடந்து வந்தோம்


2,
இம்முறை
இரண்டு நாட்களுக்கு பின்
டிங்கோவை
கடைவீதியொன்றில்  பார்த்தேன்

கைகளில் ஒரு ஜோடி செருப்பு
மிகவும் பதட்டமாக இருந்தான்
தலையில் சீனர்கள் அணியும்
வட்ட குல்லாய் இருந்தது

வண்டியில் நகர்ந்து கொண்டே
டிங்கோ நீ ஒரு கவிஞன்
என உரக்க கூவினேன்

டிங்கோ அதிர்ச்சியில் உறைந்து நின்றான்
காலம் கடந்து செல்லும்

ஒரு சிலை போல 

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...