டிங்கோவின்
முதல் கவிதை பிரசுரமானபோது – அவன்
மெதுவாக செருப்பு திருடுவதை
கை விட்டிருந்தான்.
ஒரு தச்சுக்கூடத்தில் அவனை
பணியாளனாக சேர்த்திருந்தேன்
மதிய இடைவேளையில்
அவனது பிரசுரமான
கவிதையை காண்பித்தேன்
கண்களில் நெகிழ்ச்சி
சற்று தொலைவில்
ஒரு பாம்பு எங்களை கடந்து சென்றது.
4.
டிங்கோவின் பாத்ரூமில் ஒரு வாசகம்
தீமைகள் கவிஞனிடம் அச்சம் கொள்கின்றன
டிங்கோ வின் வரவேற்பரையில்
தீமை ஒரு மரத்தின் பின்னிருந்து
கவிஞனை ஏளனம் செய்கிறது
டிங்கோவின் கவிதையில் ஒரு வரி
நான் தீமைகளின் அரசன்..
No comments:
Post a Comment