April 5, 2023
ஜம்ப் கட்டில் ஒரு செல்லுலாய்ட் புரட்சி - ழான் லூக் கொதார்த் -அஜயன்பாலா
அஞ்சலி : உலக சினிமா இயக்குனர் ழான் லூக் கொதார்த்
நேற்று உலக சினிமாவே அதிர்ந்தது . தம் படைப்புகாளால உலகையே அதிரவைத்த பிரெஞ்சு சினிமா மேதையும்.. ஜம்ப் கட் எனும் படத்தொகுப்பு உத்தியை பயன் படுத்தி காட்சி மொழியில் கலகத்தை உண்டு பண்ணியவருமான ழான் லுக் கொத்தார்ததின் மறைவு செய்தி கொடுத்த தாக்கம் தான் அது..
பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்துக்குமிடையில் ஜெனிவா ஏரியின் மீதிருக்கும் ரோலி நகரில் தன் 91ம் வயதில் அமைதியாக இந்த உலக வாழ்வை தானே முறித்துக்கொண்டார் . ஆமாம் அவர் மரணம் அவரே எடுத்துக்கொண்ட முடிவு
உடனே பலரும் இது தற்கொலையா என யோசிக்க்லாம் .. இல்லை அவர் அப்படிப்பட்ட , கோழையும் அல்ல இறக்கும் கடைசி நொடிவரை எந்த நோயும், அவரை நெருங்கவில்லை. . ஆனால் இயற்கை கடைசியில் அவரே மரணத்தை தேர்வு செய்து கொள்ளும் உரிமையை கொடுத்து ஆச்சரயப் படுத்தியுள்ளது. .
. இந்த வாழ்க்கை போதும் என 91 வயதில் முடிவெடுத்த பின் அவர் சுவிஸ் அரசாங்கத்திடம் சொல்லி மருத்துவர் மூலம் தன் மரணத்தை தானே தீர்மானித்துக் க்கொண்டார் இப்படியான் அமைதியான் மரணக்களுக்கு . சுவிஸ் அரசாங்கம் தன் சட்ட தட்டங்களில் வழி வகை செய்திருப்பது ஆச்காரய்மான் ஒன்று . . உண்மையில் அவர் மரணம் கூட அவர் படங்கள் போல ஒரு அதீத புனைவுதான். உலகில் எத்த்னையோ மேதைகள் வாழ்ந்து மறைந்தாலும் இயற்கை வேறு யாருக்கும் கொடுகாத பரிசு இது .
கொதார்த் ?
சினிமாவில் அப்படி என்ன சாதனைகள் செய்தார் என சொல்ல வேண்டுமானால் அவரை மானசீக குருவாக வரித்துக்கொண்ட சில சிஷ்யர்களைச் சொன்னால் ; அவர் பெருமையை நிங்களே பரிந்து கொள்ளலாம்
இன்று உலக சினிமாவின் உன்னத இயக்குனர்களாக போற்றப்படும் குவாண்டின் டோராண்டினோ, மார்டின் ஸ்கார்சிஸ், அலேக்ஜாண்டிரோ இனாரிட்டு மற்றும் நம்ம ஊர் அனுராக் காஷ்யப் ஆகியோர தன் அவரை மானசீக குருவாக வரித்துக்கொண்ட ஏகலைவன்கள் . . சுருக்கமாக சொலலப் போனால் கொதார்த் உலக இயக்குனர்களின் டான் என சொல்ல்லாம்
காட்சி மொழிக்குள் கவிதையும் அரசியலும் ஒன்றிணைத்து சினிமாவை சமுக உற்பத்தியாக மாற்றிய மிகப்பெரிய வித்தகர் தான் கொதார்த் .... அறுபது வருடங்களுக்கு முன் இவர் தன் சினிமாக்களில் ஆரம்பித்த குறியீடு .. நான் லீனியர் போன்ற அம்சங்ள் தான் இன்று நம் கோலிவுட் வரை வந்து சேந்துள்ளன .
அவர் சினிமாக்களில் கொண்டு வந்த உத்திகள் பார்வையாளனி அதிர வைத்த அதீகாமயம் அவனை ஆர்வத்துடன் பார்க்கவும் சிந்திக்கவும் வைத்தன. படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே சட்டென தி என்த என்ற கார்ட் அடிக்கடி வந்து போய் அதிர்ச்சியஊட்டும். அது மட்டும் அல்லாமல் காடென கொதர்த்தி சினிமாவில் தோன்றி அடுத்த் காட்சி எப்படி எடுக்கலாம் என யோசிப்பது வரும். அல்லது எடிட்டிந்ஹ டேபிளில் எடிட்டருற்றன் அவர் சண்டை ப போடும் காட்சி வரும். படம் பார்ப்பவனை விழுப்பு நிலையில் வைத்திருக்க அவர் இந்த உத்திகளை பயன் படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்
கொதார்த்த என்பர் தனி நபர் அல்ல . அவர்கள் ஒரு இயக்கும் அந்த இயக்கத்தின் பெயர் நியுவேவ் . அந்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் அவரைத்த்விர நான்கு பேர். அவர்கள். பிரான்சுவா த்ரூபோ, . எரிக் ரோமர் கிளாத் ஷப்ரோல் ழாக் ரெவெட் ஆகியோர் அனைவருமே அரை குறை படிப்புடன் குட்டிச சு வரில் அமர்ந்து சைட் அடிக்கும் பருவத்தினர் . அவர்கள் வயதில் அன்று பலரும் பிரான்சில் அப்படித்தான் வாழ்க்கையை கழித்து வந்தனர் . ஆனால் எழுத்தாளராகும் இயக்குனராகும் கனவுகளுடன் இவர்களோ கலைப் பைத்தியங்களாக திரைப்பட சங்கங்கள் உலக சினிமாக்கள் . இலக்கியங்கள் என திரிந்தனர் . விளைவு .....
நியூ வேவ் எனும் சினிமா புரட்சி . கொதார்த் இந்த நண்பர்களுடன் உலக சினிமாவில் செய்த புரட்சி தான் இன்றும் அவர் புகழுக்கு கார்ணம்
அப்படி அவர்கள் செய்த புரட்சிஉயின் கதையை சுருக்கமக பர்ப்பொம்
ஓவியங்களின் வரலாறு படித்த்ரக்ளுக்கு டாடயிஸ்டுகள் என்ற கலகக் கும்பல் பற்றித தெரியும் . இந்த டாடயிஸ்ட் கும்பல் பிரான்சில் நடக்கும் ஓவிய காட்சிகளுக்கு நுழைந்து காட்சிக்கு வைக்கப்பட்ட ஒவியங்க்களை அடித்து உடைத்து கலர் பெயிண்டுகள் ஊற்றி கலவரம் செய்தார்கள் .. காரணம் அந்த ஓவியங்கள் சரியில்லை அதில் கலை இல்லை . அவைகளில் அரசியல் இல்லை என விமரசனம் செய்தனர் . அதன்பிறகுதான் ஐரொப்பாவில் நவீன ஒவ்யங்கள் கவனம் பெறத்துவங்கின .
அது போல சினிமாவில் கலகம் செய்து அந்த கலையில் களையெடுக்க இந்த ஐவரும் விரும்பினர். .
அதன் மூலம் உலக சினிமாவின் போக்கைத திசை திருப்ப முடிவெடுத்த்னர். . . ஆந்த்ரே பச்ன் என்பவர் குருவாக இருந்து இவர்களை ஊக்கப்படுத்தினார் . தான் நடத்திய கையேது சினிமா எனும் பத்ரிக்கையில் இவர்களை விமரக்கன் கட்டுரைகள் எழுத வைத்தார் அவர்கள் அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களையும் அவரகளது கலை படங்களையும், குப்பை என விமர்சித்து எழுதினர்.
சினிமா என்பது அதுவரை ஒரு நாவலை வரிசை மாறாமல அப்படியே படம் பிடித்து கதை சொல்லும் ஊடகமாக பயன்படுத்தப் பட்டு வந்தது . இது பார்வையாளனை அவன் உணர்ச்சிகளை ஏமாற்றும் பொலி வித்தை .இது . தியேட்டரில் இருட்டறையில் நல்ல சினிமா என்ற பெயரில் பார்வையாலனுக்கு நடத்தப்படும் மூளைச் சலவை ..மாறாக சினிமா என்பது காட்சி அனுபவம் .அதன் வழியாக பார்வையாளனை சிந்திக்க வைப்பதுதான் உண்மையான் கலை என கூறினர். செட்டுகள் ஆடமபர அலங்காரங்கள் எதுவும் சினிமாவுக்கு தேவையில்லை நடிகர்களின் முகங்களை வடவும் சினிமாவுக்கு காமிரா கோணங்களும் படத்தொகுப்புமெ முக்கியம் .. வெறுமனே ஒரு இளம்பெண்ணையும் துப்பாக்கியையுமே வைத்துக்கொண்டு நல்ல சினிமா அனுப்வத்தை தங்களால் உருவாக்க முடியும் என சவால் விடுத்தனர்.
இவர்களின் விமர்சனத்தால் கடுப்பாகிப் போன அனறைய இயக்குனர்கள் உனகெல்லாம் பேசத்தான் தெரியும் முடிந்தல படம் எடுத்துக் காண்பி ..அபோது தெரியும் உன் யோக்கியதை என இவர்களை நோக்கி சவால் விட்ட்னர்.
கொதார்த்தும் அவர்களது புதிய அலை நண்பர்களும் இந்த சவாலை ஏற்றனர். கையோடு அவர்கள் தங்களுக்கன திரைக்கதையும் எழுதினர். ஆனாலும் அவ்ர்ளுக்கு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டுமே அதுதன் பிரச்னை . ஆளுக்கொருபக்கம் பணத்தை திரட்டவும் தயாரிப்பாளரை தேடியும் அலைந்தனர் . கொதார்த் ஒரு அணைக்கட்டில் வேலைக்குப் போனார் . த்ரூபோ தன் பணக்கார காதலியை மணம் முடித்து மாமனாரை தயாரிப்பாளர் ஆக்க திட்டம் வகுத்தார். இப்படித்தான் த்ரூபோவின் முதல் படம் 400 உதைகள் இந்த இயக்க்த்தின் முதல் படமாக 1959ல் கான் திரைப்ப்ட விழாவில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்து பழமை வாதிகள் வாயடைத்துப் போயிருக்க அடுத்த வருடமே இரண்டவது படமாக கொதார்த்தின் பிரெத்லெஸ் 1060ல் வெளியானபோது புதிய அலை உருவாகி விட்ட்து என அனைவரும் வியந்து பாரட்டினர் . மிகப்பெரிய தக்கத்தை உண்டு பண்ணிய அந்த சினிம ஆதுரை யிலான் 66 வருட சினிமா வரலாற்றை புரட்டி போட்டது. .கொதார்த்த சொன்னது போலவே அவரது படம் சொல் புதிது சுவையும் புதியதாக இருந்த்து . வழக்கமான் மரபான் காட்சி கோணக்களை அவர் உடைத்தார் . இஷ்டப்போக்கில் காமிராவை தோளில் போட்டுக்கொண்டு பாத்திரங்களின் உடல் மொழி களை அவர் பின் தொடர்ந்து காட்சிப் படுத்தினார் . அதை கவித்துவமாக எடிட்செய்து கூடுத்ல மெருகேற்றினார் . அப்படி அவர் உருவக்கீய படத்தொகுப்பு முறையை அனைவரும் ஜம்ப் கட் என வியந்து போற்றினர. ஒரு ஊரில் ஒரு ராஜா என வரிசையாக கதை சொல்லும் சினிமாமரபை அவர் உடைத்தார் . காடக் மொழிகளில் ஒரு கலகத்தை உண்டு பண்ணி வரிசைகளை மாற்றினார் . நடுவிலிருந்து கதையை துவக்கி கதையின் துவக்கத்தையும் முடிவையும் பார்வையாலனே தீர்மானிக்க விட்டுக்கொடுத்தார்.
இந்த புதுமையான் முறையால் சினிமாவிலிருந்து கதை பின்னுக்கு போய் காட்சி அனுபவம் காட்சி மொழி தொழில் நுட்பம் ஆகியவை முன்னுக்கு கொண்டுவரப்பட்டது
அவர் துவக்கி வைத்த இந்த வான் லீனியர் சனிமா தான இன்று உலகம் முழுக்க வணிக சினிமாவாக வும் கொண்டாடபடுகிறது
அன்று தொடங்கிய அவர்து சினிமா பயணம் ஐமபதுக்கும மேற்பட்ட கலை படைபுகளாக கடந்த அறுபது ஆண்டுகளில் உற்பத்தி செய்து வந்தந. . த்றுபூ உட்பட அவரது நண்பர்கள் அனைவரும் துவக்கத்தில் காட்டிய பரிசஈத்னை முயற்சிகளிலிருந்து விலகி பின் கமர்ஷியல் படங்கள் எடுக்க பூய்வட்ட்னர். ஆனால் கொதார்த் மட்டும் துவத்தில் காட்டிய புதுமை காட்சி மொசியை கடைசி போதம் வரையிலும் சமரசம் இல்லமால் இயக்கி வந்தார் .
அவர் உருவக்கிய ஒவ்வொரு பதாமும் சினிமா ரச்கர்களால் கொண்டாட்ப்பட்டன . அவர்றின் அரச்யல் தன்மை, காட்சி மொழ்யில் அவர் உருவாக்கிய தொழில் நுட்ப புதுமை ஆகியவை இப்போதும் சினிமா கற்கும் மாணவர்களுக்கு பாடங்களாக இருக்கின்றன
தீவிர இட்து சாரி ஆதர்வாளரான அவர் . இந்த கருத்தாக்கத்த்லிருந்து கடைசி வரை பின் வாங்கவில்லை . வாழ்நாள் முழுக்க ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிரக படங்களை இயக்கி வந்த கொதார்த்துக்கு அமெரிக்காவின் ஆஸ்கார் விருது கமிட்டி சிறப்பு வாழ்நாள் சாத்னையாளர் விருது 2010ல் கொடுக்க முன் வனத போது அவர்களின் அழைப்பை அவர் நிராகரித்தார். . அப்படிப் பட்ட சமரசமற்ற படைப்பாளியாக படைப்புக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லமால் வாழ்ந்த காரணத்தால் தான் இன்று அவர் மரணம் கூட உலகம் வியக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது
வாழ்க்கையும் சினிமாவும் வேறு வேறல்ல என அடிக்கடி சொல்லும் அவர் சிலசமயங்களில் ஒரு சினிமாவுக்குள் தன் வாழ்க்கை சிக்கிக்கொண்டதாக கூறுவார் . அப்படித்தன் அவரது மர்ணம் எனும் க்ளைமாக்ஸ் காட்சியும் அசரே எழுதிய காட்சியாக அவர் பாணியில் வியப்புட்டும் படி அமைந்துவிட்ட்து .சினிமா எனும் மாயப்புதிருக்குள் அவர் மரைந்தே போனார் என்றும் இதை சொல்ல்லாம்
- அஜயன்பாலா
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
No comments:
Post a Comment