December 2, 2021

சாம்பல் தோட்டத்து இயேசு … பிரான்சிஸ் கிருபா

அஜயன்பாலா




பெரும் குற்ற உணர்ச்ச்யை உண்டாக்கிவிட்டுச் சென்று விட்ட நண்பனும் கவிஞனுமான பிரனசிஸ் கிருபாவின் மரணத்தின் நிழல் இன்னமும் விலக வில்லை .

அவன் ஒரு வனம் நடந்து செல்லும் வனம் . எண்ணற்ற பூக்களையும் பறவைகளையும் பூச்சிகளையும்  தனக்குள் உருவககி பூமிக்குள்  கவிதைகளாய் கொட்டிய வனம் 

மற்றவர் கண்ணுக்கு பூத்துக்குலுங்கிய அந்த வனம் இன்னொருபக்க்ம் தன்னைத்தானே எரித்துக்கொள்ளவும் செய்தது.

வெகு காலத்துக்கு முன்பே பிரனசிஸ் என்னோடு பேச வரும் போதெல்லம் அந்த ஓசை எனக்கு கேட்கத் துவங்கிவிட்டது .

எங்கோ ஒரு மூலையில் அதன் சுள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக  எரிந்து பட் படடென் ஓடியும் ஓசை பல வருடங்களுக்கு முன்பே எனக்கு கேட்கத்துவங்கிவிட்டது.

அவனிடம் கவிதை எழுதச் சொல்லி உள்ளுக்குள் எரிந்த கட்டற்ற தீயை அனணைக்க  அவனுக்கு கிடைத்த ஒரே வழி  எதுவோ அ6துதான்   அவனுக்கு இந்த துரோகத்தை செய்து நெருப்பையும்  பற்ற வைத்துவிட்டது

பிரான்சிஸ் இதை அனுமதித்தான் .  நெருப்பு த்ன்னை பற்றி எரியும் போது அதன் அழகை  அந்த நாக்கின் நடனத்தை ரசித்தான் அதையும் கவிதையாக்கினான்

. பலரும் அவன் கவிதைகளை ரசித்த்னர் . நான் நெருப்பை அனைப்பதில்  கவனம் செலுத்தினேன்

பிரான்சிஸ் எனக்கு  23 வருடங்களுக்கு முன்பக அறிமுகம் ஆனவன் . .

எனது நண்பர்களான ராஜன் அரவிந்தன் செம்பூர் ஜெயராஜ் இருவரும் தான் பிரான்சிஸை  97 ல் எனக்கு அறிமுகப்படுத்தினர்.. இருவரும் மும்பையிலிருந்து சென்னை வந்த்வர்கள். பூர்வீகம் நெல்லை. . நெல்லையிலிருந்து மும்பைக்கு போய் அங்கு  போல்ட் இண்டியா பத்ரிக்கையில் சில காலம்  வேலைசெய்து அங்கு இலக்கிய கூட்டங்களில் நண்பர்களாகி  பின் அங்கிருந்து   சினிமாவுக்கு வாயப்பு தேடி சென்னை வந்தவர்கள்.. இங்கு ஒரு கணையாழி கூட்டத்தில் எனக்கும் அவர்கள் நண்பர்களாகினர். அப்போது செம்பூர் ஜெயராஜின் அறை  வேளச்சேரியில் இருந்தது .   அறை க்கு நான் அடிக்கடி செல்லும் போது பிரான்சிஸ் கிருபா என்ற ஒருவர் நல்ல கவிஞர் மும்பையில் இருக்கிறார்.  விரைவில் அவரும் இங்கு வரவிருக்கிறார் எனச் சொல்வார்கள் .  

அப்படியே  பிரன்சிஸ் சென்னைக்கு வந்த முதல் நாளில் அவரை எனக்கு இருவரும் அறிமுகப்படுத்தினார்கள். அப்போது நண்பர் .அ. பாலகிருஷ்ணன் கிங் மேக்கர் எனும் பெயரில் காமராஜர் பற்றி தொலைக்காட்சி தொடர் எடுத்துக்கொண்டிருந்தார் . அவரும் மும்பையிலிருந்து சினிமாவில் தயாரிப்பாளராக வந்த்வர். கோடம்பாக்கம் பாலத்துக்கும் வள்ளுவர் கோட்டத்துக்கும் இடையில் சட்டி பானை விற்கும் பேருந்து நிலையத்தின் பின்புறம் இருந்த  அவரது  அலுவலகத்தில் தான் பிரான்சிஸோடு  முதல் சந்திப்பு நடந்தது  இலக்கியமும் சினிமாவும் எங்கள் நட்பை இரவு பகலாக வளர்த்த.  . பிரான்சிஸை தொடரந்து நீயா நானா ஆண்டனியும் மும்பையிலிருந்து வந்தார் . . மற்ற அனைவரைக் க்காட்டிலும் பிரான்சிஸ் கொஞ்சம் துடிப்புடன் இருந்தார் .அவரிடம் என்னிடம் இருப்பது போலவே கனவும் நம்பிக்கையும் அதிகம் இருந்த்து .. அந்த அலுவலக  மாடியில் வீட்டு ஓனர் பெண் ஒரு நாள் நாங்கள் இருவர் மட்டும் இருக்கும் போது சாவி கொடுக்கவோ  வாங்கிச்செல்ல்வோ வந்து போனார் . அவர் வந்து போனபின்  அறைக்குள் ,மவ்னம் .வளர்ந்த்து . செடி போல வளர்ந்த அந்த மவ்னத்துக்குபின்  இருவருக்குள்ளும் புன்னகை / என் வெட்த்தை கண்டுபிடித்துவிட்டர பிரான்சிஸ் . . அந்த பெண்ணுக்கு ஒரு பதினாறு வயதிருக்க்லாம் சற்று நேரத்தில்  நான் தான் முதலில் ஒரு கவிதை எழுதினேன் . அவரும் என்னை தொடர்ந்து ஒரு கவிதை எழுதினார் . பிரான்சிஸ் என் கவிதையை நன்றாக இருப்பதகச் சொன்னார் . அவருடைய கவிதையும் சிறப்பாகவே இருந்ததை சொல்லத்தேவையில்லை

 . தொடர்ந்து நான் சினிமா வேலையில் தீவிரமாக இறங்க தொடர் சந்திப்புகள் குறைந்து போனது. பிற்பாடு நான் தங்கயிருந்த பால்சுகந்தி மேன்ஷனுக்கு அவரும் வந்து சேர்ந்தார் . அப்போது என்னை சந்திக்க வரும் இலக்கிய நண்பர்கள் அனைவரும் அவருக்கும் நண்பர்களாயினர் . . நான் ஓடிக்கொண்டேயிருந்த காலம் அது . எனது நண்பர்கள் வழியில் தென்படுபவர்கள் மட்டுமாக மாற்றிக்கொண்ட காலம்  இடையே பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் பரவலாக பேசப்பட்டன . ஒருநாள் நண்பர் மூலம் பிரான்சிஸ் கிருபாபற்றி தெரிய வந்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது . .ஊரில் மனப்பிறழ்வு ஏற்பட்டு சங்கிலியால் பிணைக்கப்ப்ட்டு கொடூரமாக நடத்ப்படுவதாக  ஊருக்குசென்று நேரில் பார்த்த ராஜன் அரவிந்தன் விவரித்தார். . இனி திரும்ப மாட்டார் என நினைத்த பிரான்சிஸ் சி; வருடங்களுக்கு பின்  சென்னைக்கு முழு ஆரோக்கியத்துடன் திரும்பினார்  அவர் திஒரும்ப வந்த போது  ராஜன்  அரவிந்தன் எங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்தது பெரும் சோகம். . சென்னையில் சினிமாவை ஃநம்பி பெரும் கனவுகளுடன் நாள் தோறும் இறங்கும் ஆயிரக்கண்க்கான கிராமத்து  இளைஞர்களில்  சிலர் மட்டுமே  சாதூர்யமாக் கால் மாற்றி மாற்றி வைத்து வழி அடைகின்ற்னர். ஆனல பலருக்கு  கால்ம் வழிகாட்டும் பாதை காராக்கிரகம் தான். . இப்படியாக ஒன்றக ஓடத்துவங்கிய எங்களது பயணத்தில் ராஜன் அரவிந்த்னை இழ்க்க நேர்ந்தது பெரும் கொடுமை. பிற்பாடு அவருடைய கதைகளை தொகுத்து சாயங்கலாம் எனும் தலைப்பில் நூலகக மட்டுமே எனனால்  முடிந்தது.

ராஜனின் இழப்பு எனக்குள் மிகப்பெரிய குற்ற உணர்ச்சியை உருவககியது . இனி ராஜனைப்போல யாரையும் இழந்து விடக்கூடாது என்ற பதட்டத்தையும் அது உருவககியது

தொடர்ந்து நான் சினிமாவில் பணிபுரிந்து வந்த காரணத்தல பிரான்சிஸை தொடர்புகொள்ள  முடியவில்லை  அப்போது பிரான்சிஸ்  செம்பூர் ஜெயராஜ இருவரும் காமராஜர திரைப்பட பணிகளில்  அ. பால கிருஷ்ணன் அலுவலகத்தில் தீவிரமகா இருந்த்னர். . இதனிடையே எனது மார்லன் பிராண்டோ  சுயசரிதம் 350 பக்கத்தில் பெரிய புத்த்கமக கனவுப்பட்றை வெளியிட்டது . புத்தகக்கண்காட்சியில் அதைப் பார்த்த பிரனசிஸ் யூமாவிடம் மகிழ்ச்சியாக  பாலா ரொம்ப பெரிய வேலை பண்ணிட்டாரு  என சொல்லியதோடு அடுத்து வருடம் இதைவிட பெரிசா ஒரு புக் இறக்குவோம் யூம அஎன சிரித்துக்கொண்டே  சொன்னார்

2007 வாக்கில் பள்ளிக்கூடம் பட்பபிடிப்பு நடக்கும் போது சென்னையில் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்தது . 25 வருடத்தில் நான் தவறவிட்ட ஒரே புத்தக்க் கண்காட்சி அது. சென்னையிலிருந்து அந்த புத்தக் கண்காட்சிக்கு சென்று வந்த நண்பர் ஒருவர் உங்க ப்ரண்டு பிரான்சிஸ் க்ருபாவுக்கு மிகப்பெர்ய கட் அவுட் வச்சிருக்காங்க என ஆச்சர்யப்பட்டு பேசினார். . தமிழினி வெளியீடாக அவரது கன்னி நாவல்  வெளியான போது அதற்கான  பதகை அது . ஒரு கவிஞனுக்கு இப்படியனா கவுரவம் தமிழ்ல் அதுவரை இல்லை .

தொடர்ந்து அவரைப்பற்றி அதிகம் உலகம் பேசத்துவங்கியது. மல்லிகை கிழமைகள் எனற பெயரில் ஆனந்த விகடனில் கவ்தைத்தொடர் அவரை தமிழ் கவிஞனாக முழுமையாக சிம்மாசனமிட்டு அமர வைத்த்து .  அப்போது என்னை கடந்து பிரான்சிஸ் சென்றுவிட்ட சிறு ஆதங்கம் ஒன்றும் மின்னல் போல எனக்குள் வந்து போனது.   ஆனாலும் நட்புக்குள்  பங்கம் இல்லை . எப்போதும் போல பார்க்கும் இடங்களில் அனபைபொழிவார் . பிற்பாடு அடுத்த வருடம் அதே  விகடனில் நானும் தொடர் எழுதும் வாய்ப்புகிட்டியது .  தொடர்ந்து நான் அடுத்தடுத்த பாய்ச்சலுக்கு  தயராகிக்கொண்டிருந்த  கால்ம் அது. அப்போது   மொபைல்புழக்கம் அதிகம் வந்துவிட்ட படியால்  பின்னிரவுகளில் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு அடிக்கடி வரும் . . என் நண்பன்னு உங்களை சொல்லிக்கொள்ள பெருமையாக் இருக்கிறது  என்பார் .  தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு  அழகர்சாமி குதிரை போன்ற படங்களில் பாட்டு எழுதினார் .. கிங் மேக்கர் காமராஜ்  படத்தில் செம்பூர் ஜெயராஜுடன் சேர்ந்து வசனம் எழுதியிருந்தார் . இனி பிரான்சிஸ் ஒரு இட்த்தை அடைந்துவிடுவார் என எதிர்பார்த்தேன் . ஆனால்  சினிமாவில் பாட்டு எழுதும் போட்டி நிறைந்த ஆட்ட்த்தில் சோபிக்க  முடியவில்லை. ஆனாலும் முன்னைவிட அவரிடமிருந்து கவிதைகள் கொழுந்துவிட்டெரியும் ஆவேசத்துடன் வெளிவரத்துவங்கின

பிரனசிஸின் கவிதிகளை தமிழில் தேவ தேவனோடுடன் ஒப்பிடகூடியவை

தேவ தேவனிடம் இயற்கையின் சர்னாகதியுடன் கூடுய சுய ஒழுகல் ஆன்மிக தீண்டல்கள் இருக்கும் . ஆனால் பிரான்சிஸ் கவிதைக்குள் நேரடியாக் உருவகத்துடன் கூடிய இயேசுவின் கால் தடங்கள் தெரியும் .  த்ன்னை துன்புறுத்தும் கணவனின் காலடியில் தொழும் ஒரு  பிடிவாதக்காரி மனைவி போல அவர் கவிதைகளில் சதா உருவகப்படுத்த்ப்ப்ட்ட  இயேசுவுடன் சணடை போட்டுக்கொண்டே இருப்பார் .. இப்படி அக உலகில்  அவருக்குள் மிகப்பெரிய மனப்போரடடம  இருந்த கார்ணத்தால்  தவிர்க்க வே முடியமால் அவர் முன்பிருந்த நிஜ உலகத்தின் விளக்குகள் அனைத்தும் இருண்டுவிட்டன .மனைதர்கள்  சொற்ப்பமாகவே மங்கலக அவர் கண்ணுக்கு தட்டுப்பட்டனர்.

.பிற்பாடு சாலிக்கிரமத்துபகக்ம் நான் குடிவந்த பின் மீண்டும் பிரனசிஸை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகிட்டியது . முடிந்த அளவு பொருளாதர உதவிகள் மட்டுமே என்னல் செய்ய முடிந்தது . தங்குவதற்கு அறையில்லை என ஒருமுறை என்னிடம் கேட்டார் . நண்பர் மூஅல்மாக சொல்லி ஏற்பாடு செய்தேன் இருவரும் 2017 வககில் பட்டுக்கோட்டையில்  ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒன்றாக பயணித்தோம் . பல வரௌடங்களுக்குபின் வெகு நேரம் பல விடயங்கள் ஒன்றக பேசிப்பகிர கிட்டுஇஅய் வாய்ப்பு .

இரண்டு நாள் பயணம் ம்ழுக்க பிரனசிஸ் அமைதியாகவே இருந்தான்  ஆச்சரயம் . ஒருவேளை என் மனைவி  உடன் வராமல் இருந்தால் மதுவில் மூழ்கியிருக்க்லாம் .  மட்டுமல்லாமல் ஒரு நண்பனாக என் வார்த்தைக்கு மிகவும் கட்டுப்ப்ட்டவனும் கூட பிரான்சிஸ்

 

பிற்பாடு அநன் அவரை அடிக்கடி டிஸ்கவரி புக் பேலஸ் வசாலில் சந்திக்கும் போதெல்லாம் அவர் நடுக்கடலில் இருப்பார் . நான் நிலத்தில் இருப்பேன் .

கூட்டம் முடிந்து நான் யாருடனாவது பேசிவிட்டு வரும்வரை  அமைதியாக ஓரமாக கைகட்டி நிற்பார் . ஆனல் அக உலகிலோ  அவர் ,கடவுளையும் அடியாளாக வைத்திருக்கூடிய சர்வ வல்லமை உடையராகவும் இருப்பதை நான் அறிந்திருந்தேன்

இறுதிக்காலங்களில் அவரிடம் கொஞ்சம் மூர்க்கமாக நடந்துகொண்டேன்

உலகுக்கு வேண்டுமானல அவர் உன்னத கவிஞனக இருக்க்லாம்

ஆனால் அவரோ எனக்கு நண்பன் . ராஜன் அரவிந்தன் போல தக்கை பாப்பு போல அவரும் முடிவை தன்க்கு தானே  எழுதிக்கொள்ளும் கவிதையாக மாறுவதை நான் விரும்பவில்லை

ஆனால் இடைப்ப்ட்ட காலத்தில் அவர் நிலைமை கநழுவும் நடச்த்திரமாக உயர ஆர்ம்பித்துவிட்டது

கோயம்பேடு சம்பவத்தில் அவரை  த்வறகா கருதி போலிசார் கைது செய்யப்போக கடைசியில் அவர் இயேசு என உலகம் அறியும் வகையில் த்ற்செயல்கள் நிகழ்ந்து அவருக்குள் அவர் வைத்திருந்த பிம்பமே அவராகிப்போன சம்பவமாகிப்போனது

அவர் இது வரி எழுதிய அனைத்து கவிதைகளையும் விட கவித்துவம் மிளிரும் செயல் அது.

அந்த கவிதையை மறுநாள் ஊடகம் வழி தமிழ் நாடே செய்தி வடிவில் வாசித்துக்கொண்டது /

அவருக்குள் அப்போது அந்த வனம் பெரும்பகுதி எரியத்துவங்கி பெரும் தீச்சுவலையுடன் வன நோக்கி உயரத்துவங்கியது இதொ கடந்த செப்டம்பரில் அது முழுமையக எரிந்த போது அத்ன் தீபிழம்பில் பிரனசிஸின் முகம் என்னை பார்த்து சிரிப்பதைக்கண்டேன் .

 

ரத்தநாளங்களில் சுத்தமாக
குருதியின் விறுவிறுப்பு குறைந்து
இமைக்கும் துடிப்போய்ந்த
இதயக்கண் வெறிப்பில்
உயிருக்கு நேர் எதிரே
நகர்த்தி வைக்கப்படுகிறது
தலைவாசல் திறந்திருக்கும்
மரணத்தின் மௌனம்

அவிழ்த்தெடுக்கப்பட்ட திசைகள்
குவிந்து கிடந்த மூலையிலிருந்து
விரியும் கம்பளச் சுருள்
முடிவடைகிறது காலடியில்

அள்ளியணைக்கும் ஆர்வம்
பேரன்பாய் பெருகுகிறது
நிழலின் சிரிப்பில்.

n  மெசியாவின் காயங்கள் – பிரான்சிஸ் கிருபா

 

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...