மணிக்தா எனும் மாமனிதர் : சத்யஜித்ரே 100
கடந்த மே மாதம் 2ம்
தேதி சத்யஜித் ரேவின் 100 வது பிறந்த நாளையொட்டி
பாராளுமன்றத்தில் மத்திய அரசின் தகவல் ஒளி பரப்புத்துறை அமைச்சகம் அவரது நூற்றாண்டை
கொண்டாடப்போவதாக அறிவித்தலிருந்து உலகம் முழுக்க பல்வேறு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் சத்யஜித்ரேவின் படைப்பளுமை குறித்து
பலவிதமான கட்டுரைகளை எழுதிகுவித்து வருகின்றனர்
ரே இறந்து முப்பதாண்டுகள் ஓடிவிட்டன.
உலக சினிமாவின் முகம் இன்று நிறைய மாறிவிட்டது
. இந்த முப்பதாண்டில் குவாண்டி டொராண்டினோக்களும் கிம் கி டுக்குகளும் அலக்சாண்ட்ரியோ இன்னாரிட்டோக்களும் தங்களின் புதிய சொல் முறையால் உலக சினிமாவை தலைகீழாக
மாற்றிவிட்டனர்.\
அன்பு சகிப்புத்தன்மை
தியாக உணர்ச்சி இதெல்லாம் பழசாகி
கொலை கொள்ளை வன்முறை .என புதிய கதையாடல்கள்
உலக சினிமாவில் முன்வரிசையில் இடம் பெற்றுவிட்டன
நல்லவர்களுக்கான நியாயத்தை மட்டுமே பிரதிபலித்த கதைக்கருக்கள் போய் கெட்டவர்களுக்கான
அறத்தையும் இந்த திரைப்படங்கள் பேசுகின்றன
,1 2 3 4 5 எனும் ஒழுங்கு வரிசையில் கதை சொல்ல முறை போய் 3 5 ,1,4,2 கலைத்து போட்டு பார்வையாளனோடு கண்ணாமூச்சி ஆடும் திரைக்கதைகள் வந்துவிட்டன
இப்படியான முரட்டு மோஸ்தரில் உலக சினிமா போக்கு ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் சத்யஜித் ரே வின் படங்கள்
அவர் குறித்து எழுதப்படும் நூற்றாண்டு கட்டுரைகள் அவர் படைப்புகளுக்கு காலத்தால் அழியாத
மணிமகுடத்தை சூட்டி அதி உயந்த கலைஞனாக பறைசாற்றுகின்றன
சினிமா வரலாற்றில் சாப்ளின்
,அகிராகுரசேவா வரிசையில் சத்யஜித்ரே இன்று உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்
இது ரேவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெருமை
உலக நாடுகளை பொறுத்தவரை காந்திக்கு தாகூருக்கு பிறகு ரே தான் இந்திய கலாச்சராத்தின் அடையாளம்
பதேர் பாஞ்சலி வெளியாகி
அது உலகசினிமாவில் மிகப்பெரிய அதிர்வை உண்டாகி ஐம்பதுகளிலேயே அது நிகழ்ந்துவிட்டது
.உலக இயக்குனர்கள் பலரும் தங்கள் பிதாமகனாக கருதும் ஜப்பானிய
இயக்குனர் அகிராகுரசேவ சத்யஜித்ரே பற்றி இப்படி குறிப்பிடுகிறார்
சத்யஜித்ரேவின் படங்களை இதுவரை ஒருவர் பார்க்காவிட்டால் அவர் சூரியனையும் நிலவையும் பார்க்காமல் இந்த பூமியில்
வாழ்வதற்கு ஒப்பானதாகும் என கூறியிருந்தார்
இன்னும் சொல்லப்போனால்
ரேவை ஹொமர், மார்க்ஸ் , சாப்ளின் ,
ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு இணையான ஞானி என புகழ்கிறார் அவர் வாழ்க்கை வரலாறை எழுதிய ஆண்ட்ரூ ராபின்சன்
கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் ரேவை நிழல் போல தொடர்ந்து ஆய்வு செய்து
அவர் வாழ்க்கை வரலாற்றை 1984ல் இன்னர் ஐ என்ற
நூலின் மூலம் எழுதி வெளியிட்டு உலகில் பல நாடுகளின்
கவனத்தை ஈர்த்த எழுத்தாளர் அவர்
அவர் பட்டியலிட்ட மேதைகள்
அனைவரும் உலக வரலாற்றில் அவர்கள் வாழும் காலத்தில் தங்கள் படைப்புகள் மூலம் பெரும்
தாக்கத்தை உண்டக்கியவர்கள் அவ்வகையில் ரேவின் படங்கள் இருபதாம் நூற்றாண்டில் மானுட வாழ்வியலின் சாட்சியங்கள் ..என குறிப்பிடுகிரார்
ரே சினிமாவை வெறும் கலைபடைப்பாக மட்டும் பார்க்கவில்லை அவர்
கேமிரா வழியே யாருமே பார்க்க முடியாத மனித அவலங்களை வாழ்வியலின் சிதைவுகளை காட்சி படுத்துகிரார் .அவை ஒரு தொல்லியல் ஆய்வாலன் பூமிக்கடியில் மண்ணில் சிக்கிக்கிடக்கும் புதை படிவங்களை சேகரிக்க
எடுத்துக்கொள்ளும் கவனம் போல கேமிரா வழியே
கவனத்துடன் அனுகுகிறார் .
அவரது படங்களில் நாம் எதிர்கொள்ளும் நிதானமும் பொறுமையும் அதன்
பொருட்டாக உருவாவதான். அவரது இந்த அணுகுமுறையும் அதில் உண்டக்க முயலும் கவித்துவமும்
தான் இன்று அவரது படங்களை உலகசினிமாவின் பொக்கிஷங்களாகவும்
அடையாளம் பெறுகின்றன.
அபுவின் உலகம் சார்ந்து அவர் எடுத்த பதேர் பாஞ்சாலி, அபு சன்சார்
, அபராஜிதோ எனும் மூன்று படங்களுமே உலகம் முழுக்க
சினிமா மாணவர்களுக்கு பைபிளாக பரிந்துரைக்கப்படுகிறது இந்த மூன்றுபடங்களுமே பார்வையாளல் மனதில் உண்டாக்கும் கவித்துவ சலனம் கலையின் உன்னதம்
அரசியல் வரலாறு பொருளாதரா மாற்றங்கள் காரணமாக தலைமுறைகள் தோறும்
ரசனைகள் மாறினாலும் மனித மனம் மட்டும் மாறிவிடவில்லை அவை அன்றும் இன்றும் அப்படியேதான்
இருக்கின்றன என்பதை உலகிற்கு உணர்த்துவதால்
தான் இன்றும் ரேவும் பதேர் பாஞ்சாலியும் உலகம் முழுக்க கொண்டாடப்படுகின்றன.
. உலகமே கொரானவால் மிகவும் பாதிக்க பட்டு மனிதனின் மதிப்பிடுகள் விழுமியங்கள் மறு பரீலனைக்கு
உள்ளயிருக்கும் இந்த சூழலில் பதேர் பாஞ்சாலியின்
துர்காவின் மரணத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரையும் அது உலுக்கி எடுத்துவிடுவது தவிர்க்கமுடியாதது
கடந்த ஐந்து ஆண்டுகளாக புதிதாக சினிமா கற்க வரும் மாணவர்களுக்கும்
உதவி இயக்குனர்களுக்கும் உலக சினிமாக்களை திரையிட்டு உரையாடி வருகிறேன் .
துவக்கத்தில் உச்சு
கொட்டுபவர்கள் உட்கார முடியமால் நெளிபவர்கள் டெட் ஸ்லோ என அருகில் அமர்ந்திருப்பவன் காதில் கிசுகிசுப்பவார்கள் பின் கொஞ்சம் கொஞ்சமாக படத்தில் வரும் துர்கா மற்றும் அபு வின் உலகத்தில் ஆழ்ந்து போகிறார்கள்..
குறிப்பாக மழையை முன்னதாக அறிவிக்கும் குளத்தில் நகரும் தத்துப்பூச்சியின் க்ளோசப்
, ,இரவில் வரும் மிட்டாய் வண்டி பின்னால் ஓடும்
சிறுவர்கள் அக்காவைத்தேடி அலையும் அபுவின் கண்கள் ,காஷ் பூக்கள் மலர்ந்த ஆளுயர பில்வெளியினூடே புகை வண்டியை பார்க்க ஓடும் துர்காவையும் அபுவையும்
துரத்தும் காமிரா அந்த கூன் பாட்டியின் மரணம்
, துர்காவின் மரணம் போன்ற காட்சிகள் அவர்களை
இன்னமும் ஆச்சர்யபடுத்திக்கொண்டேதான்
இருக்கிறது
கடைசி காட்சியில் துர்காவின் அம்மா விட்டை விட்டு கலைசெய்துகொண்டு
போகும் பொது சிறுவன் அபு காணமல் போனதாக கருதப்பட்ட நெக்லைசை கண்டுபிடிப்பதும் அதை யாரும்
அறியாமல் குளத்தில் வீசிவிட்டு அதையே பார்ப்பதும்
இன்று வரை உலகசினிமாவில் உன்னத தருனங்கள்
சத்யஜித்ரேவை இந்த கடைசி காட்சி பற்றி காந்திரையிடலின் போது அந்த நகையை குளத்தில் வீசும்
காட்சியின் போது அந்த சிறுவனின் க்ளோசப் காட்சியில் அவன் என்ன நினைக்கிறான்
எனகேட்க தெரியவில்லை அவன் என்ன நினைப்பான் என நான் யோசித்து
அதை எடுக்கவில்லை . தங்கைதான் திருடினால் என யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதார்காக
அவன் யாரும் அறியமால் குளத்தில் எரிவதற்காக காட்சியை விளக்கினேன் பிறகு அந்த சிறுவன் அவனாக என்ன நினைத்தானோ
தெரியவில்லை
என வெளிப்படியாக கூறினார்
அது போல பதேர் பாஞ்சாலியின் உன்னத கலைத்தன்மைக்கு உதவிய இன்னொரு பாத்திரம் கூன் விழுந்த பாட்டியாக
நடித்த சுனிபலா தேவி
இப்படி ஒரு பாத்திரம் என முடிவெடுத்தபின் அந்த வயதான பாத்திரத்தில்
நடிக்க வைக்க நடிப்பு அனுபவம் உள்ள பாட்டி
நடிகையை எவ்வளவோ தேடியும் யாரும் கிடைகாத
சூழலில் கடைசியில் ஒரு பழைய விடுதியில் அப்படி
ஒரு பாட்டி இருப்பதாக படத்தில் பக்கத்துவீட்டு பணக்கார பெண் பாத்திரத்தில் நடித்த நடிகை
சொல்ல ரேவும் தன் உதவியாளர்களை அனுப்பி சுனிபாலாதேவியை
வரவழைத்திருக்கிரார்
அப்போது அவருக்கு எண்பது வயது சிறுவயதில் மாவுனப்படங்களில் நடித்து
பிஜ்ன் வாழ்க்கையின் இடிபாடுகள் காரணமாக பாலியல்
தொழிலுக்குள் சிக்கி பின் அங்கேயே தன் இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருந்த சுனிபாலாவுக்கு
இப்படி ஒரு அதிர்ஷடம் அவரே எதிர்பார்க்கவில்லை
பின் நாளொன்றுக்கு இருபது ரூபாய் என்ற அடிப்படையில் வரி ஒப்பந்தம் பேசப்பட்டது
படப்பிடிப்புஇன் போது ரே எதிர்பார்த்தைக்காட்டிலும் அவர் ஒத்துழைப்பு
அபாரமாக இருந்தது.
குறிப்பாக அவர் இறக்கும் காட்சியின் போது அதை அவரிடம் சொல்லி
விளக்க பலரும் சங்கடபட்ட சூழலில் அவரோ நடிப்புதானே என சிரித்தபடி அனாயசமாக நடித்துக்கொடுத்தாரம்
அப்படி அனாயசமாக தன் இறுதிக்காலத்தில் நடித்த பாட்டியை உலகமே
வியந்து பாராட்டிகொண்டுயிருந்த போது அவர் உயிருடன்
இல்லை
படம் வெளிவருவதற்க்கு முன்பே 82ம் வயதில் காலமாகிவிட்டிருந்தார்
மணிலாவில் நடந்த திரைப்பட விழாவின் போது சிறந்த நடிகையாக அவர்
தேர்வு செய்யப்பட்டதை ரசிகர்கள் கைதட்டி அங்கீகரிக்கும் போது அதை பார்த்து மகிழ
அந்த பாட்டிக்கு வாய்க்கவில்லை
இதில் ஆச்சரயமான ஒற்றுமை என்னவென்ரால் ரே பதேர் பாஞ்சாலி எடுக்க
காரணமாக இருந்த படம் பைசைக்கிள் தீவ்ஸ் அந்த படத்திலும் சிறுவன் ரிசியின் தந்தை சைக்கிலை
தொலைப்பான் கடைசியில் இன்னொரு சைக்கிலை திருடி மாட்டிக்கொள்பவனாக நடித்த நடிகர் முன் பின் அனுபவமில்லாத ஒரு வழிப்போகர் . ஷூட்டிங்கை
வேடிகை பார்க்க வந்த ஒருவரை சட்டென அந்த படத்தில்
டிசிகா நடிக்கூப்பிட்டு நாயகன் ஆக்கினார்
அவரும்படம் வெளியாகி உலகமே அவர் நடிப்பைக்கொண்டாடிய சூழலில்
அவர் உயிருடன் இல்லை
இப்படி மனிதகுலத்தின் மகத்தான ஆவணமான இரட்டை படங்களாக கருதப்படும்
இந்த இரண்டு படங்களுக்குள்லும் ஒர் ஆச்சர்யமான ஒற்றுமை
சாதாரண மனிதனின் பிரதிநிதியாக அவர்கள் புகழடையும் போது மரணிப்பது
வாழ்வின் புரியபடாத வினோதங்களில் ஒன்று
No comments:
Post a Comment