சமீபத்தில் வெளிவந்த 'ஜீவா'வும், 'மெட்ராஸ்'சும் தான் தமிழ் சினிமாவிற்கு முழுமையான வெள்ளியினை அளித்தது. 'ஜீவா'வில் இதுவரை இந்திய சினிமாவே கையாண்டிடாத கிரிக்கெட் அரசியலை தைரியமாக சுசீந்திரன் பறைச்சாற்றி இருந்தது படத்தை ஈர்க்கச் செய்தது. அவரது முதல் படமான
வெண்ணிலா கபடிக்குழுகூட சாதியையும் விளையாட்டையும் இணைத்து பேசியது. இன்னும் சொல்லப்போனால்
நேரடியாக சாதிகுறித்து துணிச்சலாக பேசிய தமிழின் முதல் படம் என்றும் கூட சொல்லலாம்
. அதே பாணியில் மீண்டும் கிரிக்கெட்டை
வைத்து சாதி ப்ரசனையை கையிலெடுத்து துணிச்சலாக அடித்து ஆடியிருக்கிறார் ,'அவர் என்ன தட்டி பார்த்தார்ன்னு நெனச்சேன் ஆனா தடவி
பார்த்தார்ன்னு அப்புறம் தான் தெரிஞ்சது' என்று
சாதி அரசியலை நாகரிக வார்த்தைகளால் சவுக்கினால் அடித்த சந்தோஷின் வசனங்கள் ஜீவா படத்தின்
ஜீவனாக இருந்தது.
இதே போல விளைய்யடடையும் சாதியையும்
ஒன்றிணைத்து சமீபமாக வந்திருக்கும் இன்னொருபடம் மெட்றாஸ். 'மெட்ராஸ்' ஒரு சண்டைப்படம், த்ரில்லர் வகை என்பதை
தாண்டி அதற்கென சில சிறப்புகள் உண்டு .
கால்பந்து ஆட்டத்தையும் வட சென்னையும்
ப்ரிக்க முடியாது. வடசென்னை இளைஞர்கள் வாழ்வில் கேரம்போர்டும் கால்பந்து ஆட்டமும்
வாழ்வின் ஒரு பகுதி .
தமிழ் சினிமா இதுவரை கண்டிடாத வாழ்வியல் பதிவேடுகள் பல 'மெட்ராஸ்'ஸில்
அழகாக இழைக்கப்பட்டிருந்தது. வெகு நாட்கள் கழித்து உருப்படியான சினிமாவை பார்த்த
திருப்தியை 'மெட்ராஸ்' அளித்தது.
அட்டக்கத்தி படத்தில் எதார்த்தமாக அமையப்பற்றிருந்த புற சென்னை
வாசிகளின் வாழ்வியல் பதிவேடு ‘மெட்ராஸ்’ மீது ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
இந்த எதிர்ப்பார்ப்பு அனைத்தும் படம் தொடங்கிய முதல்
பத்து நிமிடங்களிலே பூர்த்தி செய்யப்பட்டது. இதற்கு முதல் காரணம் ‘சென்னை வட சென்னை’ பாடல்
தான் இதுவரௌ பார்க்காத புதிய சென்னையை அந்த ஒரு பாடலில் நிகழ்த்தியபோதே
படம் நம்மை ஆட்கொள்ளதுவங்கிவிட்டது.
பொதுவாக ‘மதுரை
என்றாலே வெட்டுகுத்துக்களின் பிறப்பிடம் என்பது போலவும்; நார்த் மெட்ராஸ் என்றால் களவுகளின் பிறப்பிடம், வன்முறையின் பிறப்பிடம் என்பது போன்றும் தமிழ் சினிமா
வழக்கமாக பதிவு செய்திருந்தது. அது முதல் முறையாக உடைக்கப்பட்டது.. .
சரி அப்போ ‘மெட்ராஸ்’ வன்முறையை பதிவு செய்யவில்லையா? சுப்ரமணியபுரம், பட்டியல், புதுப்பேட்டை, பொல்லாதவன்
போன்ற படங்களிலிருந்து மெட்ராஸ் எப்படி விலகி நிற்கிறது என்று கேட்கலாம்? மெட்ராஸ் இப்படங்களிருந்து விலகி நிற்பது இப்படத்தில்
அமைந்துள்ள அரசியல், வாழ்வியலினால் தான்.
புதுபேட்டையில் செல்வராகவன் துவக்கி விட்டது நார்த்
மெட்ராஸ் என்றாலே கெட்டக்கெட்ட வார்த்தைகளை திரையில் திணிப்பது, பெண்களை இழிவாக ஏசுவது, வன்முறையின்
வக்கிரத்தை தொடுவது இப்படித் தான் நார்த் மெட்ராஸ் என்பது போல் அப்படம்
வடிவமைத்தது. புதுபேட்டையால் இன்ஸ்பயர் ஆகிய குறும்பட இயக்குனர்களின் படைப்புகளில்
திணறடிக்கும் அளவிற்கு கெட்டவார்த்தைகள் திணிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
மேலும் நார்த் மெட்ராஸ் மக்களுக்கு கத்தி, குத்தினை
விட்டால் பிழைப்பதற்கு வேறு புழப்பு கிடையாது என்பது போலத் தான் அப்படைப்புகள்
பதிவு செய்திருந்தன.
இந்த போலியான பிம்பத்தை தகர்த்தெறிந்த படம் ‘மெட்ராஸ்’ என்று அடித்துக் கூறலாம். முதற் காட்சியிலே ‘நீ என்னவாகப் போகுற என்று கேட்பவரிடம் நான் கலெக்டர் ஆகப் போறேன்’ என்று குழந்தை கூற ‘கலெக்டராகி?’ என்று கேட்க ‘சமுதாயத்துக்கு நல்லது செய்வேன்’ என்று மழலை மாறாது பேசும் அக்குழந்தையின் பேச்சிலே டெம்ப்ளேட் தகர்த்தெறியப்படுகிறது.
இந்த போலியான பிம்பத்தை தகர்த்தெறிந்த படம் ‘மெட்ராஸ்’ என்று அடித்துக் கூறலாம். முதற் காட்சியிலே ‘நீ என்னவாகப் போகுற என்று கேட்பவரிடம் நான் கலெக்டர் ஆகப் போறேன்’ என்று குழந்தை கூற ‘கலெக்டராகி?’ என்று கேட்க ‘சமுதாயத்துக்கு நல்லது செய்வேன்’ என்று மழலை மாறாது பேசும் அக்குழந்தையின் பேச்சிலே டெம்ப்ளேட் தகர்த்தெறியப்படுகிறது.
என் மகன் ரொனால்டோ மாதிரி ஒரு புட்பால் பிளேயர் ஆவான்டி
என்று கூறும் அப்பன், தெருவெங்கிலும்
வெஸ்டேர்ன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், கம்யூனிச புத்தகங்களை
படித்துக் கொண்டிருக்கும் நாயகன்,
அப்பாவுடன்
இணைந்து உரிமைக்காக போராடும் மகள் இப்படி
பல உயிருள்ள பாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக நம்மை வசீகரிகின்ற்ண .
அதிலும் இரண்டு காட்சி மிகவும்
குறிப்பிடத்தகுந்தது. இரண்டுமே இரண்டு ஹவுசிங் போர்டு வீட்டினுள் ந்டப்பது. ஒன்று கார்த்தியின் வீடு மகனுக்கு பெண் பார்க்க
போவதுபற்றி அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்ளும் காட்சி அந்த குட்டி சதுர்
அறைக்குள் உறவுகலீன் உயிரோட்டமான் வாழ்க்கை இதற்குமுன் எந்த படங்களிலும்
பார்த்திராதது. அதற்கு முக்கிய காரணம்
காட்சியில் அறையின் இயல்பான தோற்றம் மற்றும் நடிகர்கள் தன்னியல்பான உடல் பாவ வெளிப்பாடு
.இவையிரண்டுக்கும்பக்க பல்மான உரையாடல் மற்றும் இயல்பான ஒளிப்பதிவு
இன்னொரு காட்சி கலையரசன்
ரித்விகா வீட்டினுள் .அவர்களது இருவரது உறவும் ஊடலும் அவ்ற்றினூடே கார்த்தி வந்து
செல்லும் நிமிடங்களும் . இத்த்னை உயிரோட்ட்மான காட்சியமைப்பை பார்த்து
வெகுநாட்களாகிவிட்டன
இந்த இரண்டு காட்சிகளுமே
போதும் ப்டத்தில் இயக்குனரின் திறமையை அளவீடு
செய்ய .
கார்த்தி, காத்ரீன்
தெராசவின் பார்வையில் கிறங்கி காதல் வயப்பட்டு நடக்கின்ற காட்சியின் பின் புறத்தே
குடத்தை தூக்கிப் போட்டு காட்ச் பிடிக்கும் காட்சியை வைத்தததிலும், சேகுவேராவின் படம் போட்ட சட்டையை அடிக்கடி அணியும்
கார்த்தி, நண்பன் கலையரசனிடம் அந்த
‘சவுத்த இடிச்சா
பிரச்சனை தீர்ந்திடுமா? இல்லை மச்சி உன்கிட்ட
நல்ல நோக்கம் இருக்கு ஆனா தெளிவான அரசியல் சிந்தனை இல்லை’ என்று பேசும் இடத்திலும் ரஞ்சித் சாதுர்யமாக அரசியலை
நுழைத்திருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்கு அதிகாரம் வளைந்து போவதையும், கண்டுகொள்ளப்படாது ஒடுக்கப்படும் எதார்த்த மக்களின்
வாழ்வையும் பதிவு செய்கிறார்.
ஜானி நல்லா பார்த்துக்கோ அடுத்தது இவன் தான் ‘அரசியலில் அடிமைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
அடிமைகள் அழிவது முக்கியமல்ல அரசியல் தான் முக்கியம் பாலிடிக்ஸ்’ என்று ஜானி பேசும் சுருக்சுருக் வசனங்களில் எல்லாம்
ரஞ்சித் சிக்ஸர் அடித்திருப்பார்.
தன் காதலன் பழிதீர்த்திட துடிக்கும் போது பயந்திடும்
காதலி அதே காதலன் முதலாளித்துவத்தை எதிர்க்ககையில் மக்களோடு மக்களாக சேர்ந்து
கைதட்டி, நான் எதுக்கு
பயப்படனும் நீ என்ன தப்பு செஞ்ச?
என்று
பேசும் போது அச்சமூகத்தினர் பெற்றுள்ள அச்சமற்ற தெளிவான அரசியல் சிந்தனைகளை பதிவு
செய்துள்ள விதத்திலும் ‘மெட்ராஸ்’ நல்ல சினிமாவிற்கான
அங்கீகாரம் பெறுகின்றது.
வன்முறையின்றி சாதிப் பிரிவினை, முதலாளித்துவத்தை வேறோடு அறுப்பதற்கு குழந்தைகளுக்கு
கல்வியோடு வாழ்வியல் அரசியலும்
கற்றுத்தரப்பட வேண்டும் என்று அம்பேத்கர் படத்தின் கீழ் நின்று கார்த்தி பேசும் வசனம் படத்திற்கு தெளிவுற முடிவினை அளிக்கின்றது.
கற்றுத்தரப்பட வேண்டும் என்று அம்பேத்கர் படத்தின் கீழ் நின்று கார்த்தி பேசும் வசனம் படத்திற்கு தெளிவுற முடிவினை அளிக்கின்றது.
இத்தனை தெளிவாக நினைத்தவற்றை திரையில் திணிக்காமல்
திரைக்கதையில் அழகாக குறியீடுகளாலும், நேரடியாகவும்
தன் பார்வையையும் தெளிவாக உரைத்திருந்த பா.ரஞ்சித் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக
முக்கிய இயக்குனர்.
இன்னும் பல காரணங்கள் கூறலாம் ஏன் மெட்ராஸ் ஒரு உன்னத சினிமா என்பதற்கு.
இன்னும் பல காரணங்கள் கூறலாம் ஏன் மெட்ராஸ் ஒரு உன்னத சினிமா என்பதற்கு.