தி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. ஈரான்
சொர்க்கத்தின் குழந்தைகள் -
அஜயன் பாலா
ஈரானில் ஒரு
ஏழைகுடும்பம் அந்த வீட்டுல ஒரு குட்டி பையன் . அவன் பெயர் அலி. ஒருநாள் உருளைகிழங்கு வாங்க
மார்க்கட்டுக்கு போகுறான். அப்ப கையோட ரிப்பேர்செய்ய தங்கை சாரா வோட ஷூவையும் கையில எடுத்து
போறான். வழியில ஒரு கடையில இவன் தங்கச்சி ஷூவை ஒரு குப்பை பொறுக்கிறவர் எடுத்துக்கிட்டு போயிடறார்.
ஆனா இவனுக்கு தெரியாது வெளிய வந்து பாத்தா தங்கச்சி ஷூ
காணோம் அப்புறம் அங்க தேடி
தேடி பார்க்கிறான் ஷூஇல்லை. அலி பயத்துடன் வீடுதிரும்புறான் இனி இன்னொரு புது ஷூவை வாங்க முடியாது.காரணம்
அவங்க குடுக்ம்பம் அவ்வளவு ஏழை. ஆறுமாசம் வீட்டு வாடகைபணமே பாக்கி. அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லை.தோட்ட
வேலைக்கு போற அப்பாவுக்கு சரியாக
வேலையும் கிடைக்கலை. இந்த நேரத்தில் ஷூவை தொலைத்த கதை வீட்டுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். அதனால் வீட்டுக்குவந்ததும் ரகசியமாக தங்கை
சாராவுக்கு மட்டும் விஷயத்தை சொல்கிறான்.
1.
1.
சாரா ஒரு குட்டிபெண். ஆனாலும் அறிவு அதிகம். அண்ணன் தன்னோட ஷூ
வை தொலைச்சிட்டது அவளுக்கு அதிர்ச்சி.
அழுகையாக வருகிறது அண்ணனை கோபமாக பார்க்கிறாள். அலி தங்கையிடம் கெஞ்சுவதைபோல
பார்க்கிறான். அழறான் .அப்பாவிடம் சொல்லாதே என சைகைசெய்கிறான். சாராவால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை . ஆனாலும் இதை
இப்போது வீட்டில் சொன்னால் அண்ணனுக்கு அடிவிழும்... அதனால் அண்ணனிடம் நான் இனி
எப்படி ஸ்கூலுக்கு போவேன் என நோட்டிலேயே எழுதி கேட்கிறாள். அவன் நான் சீக்கிரம்
கண்டுபிடித்து விடுகிறேன் அதுவரை நீ என் ஷூவை போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல். நீ பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும்
போது வழியில் நான் உன்னிடம்
வாங்கிக்கொள்கிறேன். என பதிலுக்கு நோட்டில்
எழுதி காண்பிக்கிறான். சாராவும் அதற்கு ஒத்துக்கொள்கிறாள் .
ஈரானில் பெண்குழந்தைகளுக்கு காலையிலும் ஆண்குழந்தைகளுக்கு
மாலையிலும் வகுப்புகள் நடக்கும் .அதனால காலையில் சாரா அண்ணன் ஷூவை போட்டுக்கொண்டு
ஓடுகிறாள். மதியம் அவள் திரும்பும் வழியில் ஒரு கழிவு நீர்சந்தில் புத்தக பையுடன்
அலி காத்திருக்கிறான். பள்ளிவிட்டதும் சாரா ஓடிவர அவள் கால்களிடமிருந்து அவசரமாக
தன் காலுக்கு ஷூவை மாற்றிக்கொண்டு அலி ஓடுகிறான்.
4.
ஒவ்வொருநாளும் அலி
லேட்டாக பள்ளிக்கு அவசரமாக ஓடிவருவதை பார்த்துவிடும் தலைமை ஆசிரியர் .அவனை
எச்சரிக்கிறார். இப்போது அலிக்கு ப்ரசனை ..தங்கையிடம் பள்ளிவிட்டதும் சீக்கிரம்
ஓடிவருமாறு கூறுகிறான். மறுநாள் சாரா
அண்ணனுக்காக சீக்கிரமாக ஓடிவரும்போது ஷூ
தவறி சாலையின் நடுவில் ஓடும் கால்வாய்
நீரில் விழுந்துவிடுகிறது. பதட்டத்துடன்
சாரா நீரை துரத்தியபடி ஷூவை எடுக்க
ஓடுகிறாள்.
இதுக்கு நடுவில தங்கைக்காக காத்திருக்கும் அலி நேரமாவதால் தங்கையின் மேல் கோபத்தில் இருக்கிறான்.
கடைசியில் சாரா போராடி அதனை எடுத்துக்கொண்டு அண்ணனை நோக்கி அவசரமாக ஓடிவருகிறாள்.
அவளை திட்டியபடி அவசரமாக ஷூவை மாற்றிக்கொண்டு அலி பள்ளிக்கு ஓடுகிறான்.ஆனால்
இன்றும் அலி லேட்டாக வருவதை பார்த்துவிடும் தலைமை ஆசிரியர் இனி உன் அப்பாவை
அழைத்துவா அப்போதுதான் மீண்டும் சேர்ப்பேன் என கூறிவிடுகிறார்.ஆனால் அலியின்
ஆசிரியர் அவன் நன்றாக படிக்கும் மாணவன் என எடுத்துக்கூறி அவனை காப்பாற்றுகிறார்.
5
என்னதான் லேட்டாக
வந்தாலும் அலி தேர்வில் முதன் மதிப்பெண் வாங்குகிறான்.இதனால் அவனுக்கு பேனா பரிசாக
கிடைக்க அத்னை தங்கைக்கு பரிசளிக்கிறான். ஒருநாள் சார வகுப்பில் இன்னொரு
பெண்காலில் தன் ஷூ இருப்பதை பார்த்துவிடுகிறாள்.பள்ளிவிட்டதும் அண்ணனும்
தங்கையும் அந்த குட்டி பெண்ணை பின்
தொடர்து செல்கின்றனர். அப்போது அந்த குட்டிபெண் குடும்பம் தங்களைவிட மிகவும் ஏழை
என்பதை அறிகின்றனர். இதனால் அவளிடம் ஷூவை திருப்பிக்கேட்கும் திட்டத்தை
கைவிடுகின்றனர்.
6
இதனைடையே ஒருநாள் அலிதந்தையுடன் நகரத்துக்குசெல்கிறான்.
தோட்டாவெலைகேட்டு அப்பா ஒவ்வொரு வீடாக படியேறுவதை பார்க்கிறான்.பணத்துக்காக அவர்
படும் சிரமங்களை உணர்கிறான்.ஷூ ப்ரசனைதீர இனி என்னதான் வழி என அவன்
யோசிக்கிறபோதுதான் பள்ளியில் அந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வருகிறது .
7
அது அனைத்து பள்ளிகளுக்கான ஓட்டபந்தய போட்டி..அவனது மகிழ்ச்சிக்கு காரணம் அதில்
மூன்றாவது பரிசு ஆம் மூன்றாவதுபரிசாக ஷூ
அறிவிக்கப்பட்டிருக்கிறது அலி மகிழ்ச்சியுடன் போட்டியில் கலந்துகொண்டு அந்த
மூன்றாவது பரிசான ஷூவை பெற்று தங்கைக்கு கொடுக்கவேண்டும் என நினைக்கிறான்..
போட்டிகான நாளும் வந்தது.
ஆயிரக்கண்க்கில் மாணவர்கள் அந்த மராத்தான் ஓட்ட பந்தயத்தில்
கலந்துகொள்கின்றனர்.போட்டி துவங்குகிறது. எப்படியாவது மூன்றாவது பரிசு
வாங்கிவிடவேண்டும் என ஓடிய அலி யாரும் எதிர்பாராவிதமாக முதல்மாணவனாக ஓடிவந்து
முதல்பரிசை பெறுகிறான். கைதட்டல் ஆராவாரம். கேமாரக்கள் அவனை மொய்க்கின்றன.
8
அனைவரும் அலியை பாராட்டுறாங்க .. நடுவர்கள் அவனை சுற்றி
கைகுலுக்க கூடுறாங்க .ஆனால் அலியொ தனக்கு மூணாம பரிசு கிடைக்காமல் போய்விட்டதே ன்னு
கவலைப்படுறான் முதல் பரிசு கோப்பை
அவனுக்கு கொடுக்குறாங்க .அவனை புகைப்படம்
எடுக்க பத்திரிக்கையாளர் தலைநிமிரசொல்கிறார்
ஆனால் ஷூகிடைகாத சோகத்தில் அலியின் கண்கள் கலங்கி அழறான் .
மறுநாள் அவன் அப்பா இருவருக்கும் புது ஷூ வாங்கி வருகிறார். அலியும்.. சாராவும் மீண்டும் மகிழ்ச்சியுடன்
பள்ளிக்குசெல்கின்றனர்.
நன்றி தினமணிக்கதிர்
No comments:
Post a Comment