ஆர்.கே.சண்முகம் செட்டியார்
செம்மொழி சிற்பிகள்
பிறப்பு: 17-10-1892
தமிழிசை வளர்த்த
செம்மல் என அறிஞர்களால் பாரட்டப்படுபவர். தமிழிசைக்காக முதன் முதலில் சங்கம்
தோற்றுவித்தவரும் இவரே.அரசாங்கம் தமிழில் நடக்கவேண்டும் , சட்டசபையில் நாம் தமிழில் பேசவேண்டும்,பொருளாதாரத்தை
தமிழில் ஆராயவேண்டும், விஞ்ஞானத்தை தமிழில் கற்கவேண்டும் என வாழ்நாள்
இறுதிவரை தமிழுக்காக குரல் கொடுத்தவர்.
இராமசாமி கந்தசாமி
சண்முகம் செட்டியார்.
கோயம்பத்தூரில்
பிறந்தவர். தந்தை கந்தசாமிசெட்டியார். தாயார் ரெங்கம்மாள் . கோவை லண்டன் மிஷன்
உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்விகற்ற சண்முகம் அவர்கள் பின் சென்னை
கிருத்துவக்கல்லூரியில் பட்டபடிப்புடன்
சட்டமும் பயின்றார். வழக்கறிஞராக சிலகாலம் பயிற்சி எடுத்துக்கொண்ட சண்முகம்
அவர்கல் பின் கோவைக்கு வந்து துணி வியாபாரத்தில் கவனம் செலுத்த துவங்கினார்.
கோவை நகராண்மைக் கழக
உறுப்பினராக பதவிவகித்த சண்முகம் அவர்கள் பின் நகராண்மை துணைத்தலைவராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்
சட்டசபையிலும் போட்டியிட்டு உறுப்பினராக வென்றார்.
1923ல் இந்திய சட்டசபையின் உறுப்பினாராக உயர்நிலை எய்திய சண்முகம் அவர்களின் பொருளாதார அறிவைக்கண்டு
வியந்து இந்திய அரசு இவரை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது.. கொச்சி
திவானாக சிலகாலம் இவர் பணியமர்த்தப்பட்டபோது இவரது பணியைகண்டு அங்குள்ள ஒரு சாலைக்கு
இவரது பெயரையே அம் மக்கள் சூட்டிமகிழ்ந்தனர். பின் ஜவகர்லால் நேரு பிரதமராக
பதவியேற்ற போது சண்முகம் அவர்களை நிதிஅமைச்சராக நேரு பதவியேற்க வைத்தார். பிற்பாடு
அண்ணாமலை
பல்கலைகழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றி அப்பபதவிக்கு பெருமை உண்டாக்கினார்.
இவ்வளவு உயர்
பதவிகளை அடைந்த சண்முகத்திற்கு தமிழுணர்வை தூண்டியது யார் தெரியுமா? .. ஒரு அந்நியர். ஜி,யூ
.போப் அவர்கள்.
ஒருபயணத்தின்போது போப் அவர்கள் எழுதிய திருவாசக
உரையைக்கண்டு வியந்து கண்ணீருகிய சண்முகம் அவர்கள்
அதன் பின்னே தமிழின் பால் ஆர்வம் உந்தப்பெற்று ஒரு ஆசிரியர் துணையுடன் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முழுமையாக கற்கத் துவங்கினார். சிக நாட்களிலேயே தமிழில் புலமையும் பெற்று
சிலப்பதிகாரம் மற்றும் குறிஞ்சிப்பாட்டுஆகியவற்றுக்கு உரை எழுதி பதிப்பித்தார்.
தொடர்ந்து தமிழிசை
மேல் ஆர்வம் மேலிட தமிழிசைக்காக சங்கம் ஒன்றையும்
துவக்கினார். தமிழின் பண் குறித்து ஆய்வை மேற்கொண்டு அதற்காக தனிப்பட்ட குழு ஒன்றையும்
உருவாக்கினார்.
மறைவு: 5-5-1953
No comments:
Post a Comment