திராவிடர் கழக தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின்
பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ்
அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12 ம் நாள்
சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார்.
பெரியார் திடல்
மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும்
பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ் பிற்பாடு “தமிழக அரசு”
இதழிலும் செய்தியாளராக அரசுப் பணி செய்து
வந்தார்.
சீரிய பண்பும்
சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில அளப்பரிய நேசமும்,
மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட சாக்ரடீஸ் அவர்கள் பெரியார் கொள்கையின்
குணக் குன்றாகவே வாழ்ந்து காட்டியவர் .
2011ம் ஆண்டு
செம்மொழி மாநாட்டையொட்டி 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் முன்னாள் அமைச்சர் திரு. பரிதி இளம் வழுதி, ஆய்வாளர் டாக்டர் திரு,நாச்சி
முத்து எழுத்தாளர் திரு. அஜயன் பாலா ஆகியரோடு இதழாளர் திரு பெரியார் சாக்ரடீஸ்
அவர்களும் இணைந்து செம்மொழி சிற்பிகள் எனும் அரிய நூலை உருவாக்கி தந்து தமிழுக்கு
தன் அரிய சேவையை செய்துள்ளார்.
இந்நூலை
உருவாக்க் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் காட்டிய தீவிரமும் பட்டியலை உருவாக்குவதில்
அவர் காட்டிய முனைப்பும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் தமிழ் அறிவுக்கும் சிறந்த
சான்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மகளுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்து அழகு
பார்த்தவர்.
அவரது எண்ணமும்
உணர்வும் தொடர்ந்து நம்மோடு இயக்கம் கொள்ள வருடா வருடம் சீரிய தொண்டாற்றி வரும்
ஊடகம் மற்றும் இதழியல் பணியாளர்களில் ஒருவருக்கு அவர் பெயரில் ஒரு விருதை வழங்க உத்தேசித்துள்ளோம்
.
அதன் படி அவரது
முதல் நினைவு நாளாக எதிர்வரும் மே 12ம் தேதியன்று டிஸ்கவரி புக் பேலசில் ( முனுசாமி
சாலை, கே கே நகர் சென்னை-78 ) மாலை 5.30
மணிக்கு நடைபெற விருக்கும் விழாவில் மேற்கொண்ட துறைகளில் சீரிய பணியாற்றிய
இளைஞர் ஒருவரை உங்களது பரிந்துரைகளின்
பேரில் பரிசீலித்து விருதுக் குழுவின் மூலம் இறுதி முடிவு செய்ய இருக்கிறோம்.
கடவுள் மறுப்பு
, சாதி ஒழிப்பு , சமூக முன்னேற்றம், பெண்ணியம் , பெரியார் தொண்டு, இந்த கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும்
ஊடகத்துறை ( திரைப்படம் , தொலைக்காட்சி, பத்திரிக்கை , எழுத்து குறும்படம் ஆவணப்படம்) சார்ந்த ஆண் அல்லது பெண் யாரேனும் ஒருவரை இந்த விருதுக்காக பரிந்துரை செய்யலாம்
ஒருவரே எத்தனை
நபரையும் பரிந்துரை செய்யலாம்.
ஆனால் ஒருவரை
ஒருமுறை மட்டுமே பரிந்துரை செய்யலாம்.
விருதுக்குரிய
நபர்களின் தெளிவான புகைப்படம் அவர்களது துறையில் ஆற்றிய தொண்டுகளைக் குறித்த செய்திகள்
அல்லது புகைப்படங்கள் காணொளித் துணுக்குகள் ஆகியற்றின் இணைப்புடன் ஒரு பக்க கடிதம்
மூலம் தெரிவிக்கலாம் .
பரிந்துரைகளை இணைய முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்
தொடர்பு கொள்ள
வேண்டிய முகவரி :
பரிந்துரைக்க வேண்டிய இறுதி நாள் :
10 05 2015 மாலை 6 மணி
இப்படிக்கு
பெரியார் சாக்ரடீஸ் விருதுக் குழு
நாதன் பதிப்பகம், 16/10,பாஸ்கர் தெரு, நேரு நகர் தசரதபுரம்,சென்னை 93,
044-45542637.
No comments:
Post a Comment